Saturday, January 15, 2011

சூரியக் குளியலுக்கான தமிழ்மண விருது: நன்றி!

இன்னிக்கு நண்பர் ஜோதிஜி மூலமா பொங்கல் நாளும் அதுவுமா ஒரு இனிப்பான செய்தி கிடைச்சிச்சு. தமிழ்மண திரட்டி நடத்திய 2010க்கான விருதுகளுக்கான போட்டியில் என்னுடைய புகைப்பட பதிவு முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பதே அந்தச் செய்தி.



இதுவே முதல் முறை எனக்கு இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம். எப்படி இருக்கு இதனையையொட்டிய உணர்வுன்னு கிட்ட வந்து கேட்டீங்கன்னா - ’கூல்’ அப்படின்னு சொல்லத் தோணுது.

இதுக்காக பல பேர் பாடுபட்டிருக்காங்கன்னு மட்டும் தெரியுது. முன்னய மாதிரி இல்லாம இப்பொழுது நிறைய புதிய பதிவர்கள் திரட்டிகளில் இணைந்து பங்களிப்பு செய்து வருகிறார்கள். மிகப் பெரிய முன்னேற்றமிது! அதுவும் போன வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பதிவுகள் அப்படின்னு படிக்கும் பொழுதே கண்ணக் கட்டுது. எப்படி இதிலிருந்து வடிகட்டி கண்களுக்குள் சிக்கும் எண்களாக குறைத்து, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்கள் என்பதனையெல்லாம் அறிந்து கொள்ளும் பொழுது, இதற்கு பின்னான உழைப்பு மலைக்க வைக்கிறது.

இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட எனது புகைப்பட பதிவிற்கென இப்பொழுதும் நான் அரக்க பறக்க கோடியக்கரைக்கு ஓடிய அந்த நாளும், கிரக்கமூட்டும் அந்த சூரியக் குளியலும் என் மனதில் வந்து அவ்வப்பொழுது நனைத்து போவதனை மென்மேலும் ஞாபகமூட்டும் வகையில் இந்த ‘விருதும்’ ஒரு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும்; எப்பொழுதெல்லாம் இந்த விருது என் கண்களில் படுகிறதோ அப்பொழுதெல்லாம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விருதினை ஈட்டிக் கொடுத்த சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள்! வாழ்க! வளர்க!!

-அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்-

இது கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவதற்கென - அந்த புகைப்பட தொகுப்பிலிருந்து ஒன்று - From Flickers...



Sunset in Point Calimere

Sunset in Point Calimere

Air drenched with day
Slowly closes its eyes
Obedient to the radiant sun
Breeding love through
Shimmering water
Reflects with silent tremors
Enamored with brilliant color
Painted Stork crossing
The twilight in its silhouette...


- Poem Courtesy goes to Kaattaaru

14 comments:

ஜோதிஜி said...

விட்டுப் போனதை வாசித்தேன்
வீட்டில் பொங்கல் பொங்கியதை ரசித்தேன்
குழந்தைகளின் பஞ்சாயத்தை தீர்த்தேன்.
தொடர்ந்து தூங்காத கண்களுக்கு தூக்கத்தையும் கொடுத்தேன்.
எழுந்தேன். காலை சூரிய உதயத்தை ரசித்தேன். படிக்கும் பார்க்கும் இந்த நேரத்தில் பங்காளியின் வெற்றியைப் போல அத்தனையும் அழகுடா நீ என் நண்பேண்டா.

Ravichandran Somu said...

வாழ்த்துகள் தெக்கிகாட்டாரே!!!

http://rajavani.blogspot.com/ said...

வாழ்த்துகள் தெகா.மகிழ்ச்சி யாய் இருக்கிறது அன்பின் ஜோதிஜி யும் அசத்திவிட்டார்.

உமர் | Umar said...

வடுவூர் பறவைகள் சரணாலயம் தொடங்கி கோடியக்கரை வரை சிறப்பான பயணம்.

உங்கள் புகைப்படங்களைப் பார்த்தபின்பு புகைப்படக் கலையை முறையாகக் கற்க வேண்டும் என்னும் ஆவல் அப்படியே பொங்கி வழியுது.

வாழ்த்துகள் தலைவரே!

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள் தெகா.

முகுந்த்; Amma said...

வாழ்த்துகள் தெகா..மகிழ்ச்சி

Anna said...

வாழ்த்துக்கள் தெகா! That's awesome.

கோவி.கண்ணன் said...

பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. மிக அழகான படம் ..

கோமதி அரசு said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் தெகா.

சூரியக் குளியல் அருமை.

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி - அழகினை அள்ளிப் பருகிவிட்டு வாழ்த்தியதும் அழகு ;-) !!

வெட்டிக்காட்டாரே - நன்றி!

தவறு - நன்றி!

கும்மி - நிச்சயமாக கற்றுக் கொள்ளுங்கள், நல்லதொரு ஹாபி! நன்றி!!

Thekkikattan|தெகா said...

தமிழ் உதயம் - முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி! :)

முகுந்த் அம்மா - நன்றி!

அன்னா - நன்றி!

Unknown said...

Congratulation.

Thekkikattan|தெகா said...

கோவியாரே - நன்றி!

முத்து - நன்றியோ நன்றி!

கோமதியம்மா - எப்படி இருக்கீங்க :) ? நன்றி!!

சேது - நன்றி!

Related Posts with Thumbnails