Friday, January 22, 2010

உறவறியும் மெக்சிகன்


குப்பைகளை வைத்தடைக்கும்
வாகனப் பின்பகுதியில்
அடுக்கி வைக்கப்பட்ட நிலையில்
மனித மூட்டைகள்!
பாதாளச் சாக்கடை பயணிப்பு
பாதங்களை கொப்பளிக்க
பாலைவனச் சுடு மணல்
வனவிலங்குகளை சுடுவதாக
போகும் போக்கில் சுருளச்செய்யும்
தொப்பி வைத்த மனிதர்
இப்படியாக பயணம் நீண்டு, வளைந்து
பண்ணிய புண்ணிய பணத்தில்
தன்தொடக்கப்
புள்ளியில் கொழித்து தள்ளாடும்
தன் உறவறிந்திருக்கவில்லை!



P.S: Photo Courtesy - NY Times.

5 comments:

கமலேஷ் said...

ரொம்ப பிடிட்சிருக்குங்க...

Radhakrishnan said...

வித்தியாசமான சிந்தனை.

குட்டிப்பையா|Kutipaiya said...

நல்லா இருக்கு தெக்கிகாட்டான் :)

மீன்துள்ளியான் said...

அண்ணே அருமை அண்ணே..

Thekkikattan|தெகா said...

வாசித்துவிட்டு தடயங்களை விட்டுச் சென்ற கமலேஷ், வெ. இரா, குட்டி'பையா மற்றும் மீனுக்கு எனது நன்றிகள்.

Related Posts with Thumbnails