ஒரு வாரமாக நிலாவின் மீது ஒரு கிறக்கம் வந்து விட்டது. நிலாவின் முழுமைக்கும் 'அது போன்ற' மனிதர்களுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறதாமே, அது எதுவும் காரணமாக இருக்குமோ :)...
சரின்னு முயற்சி பண்ணிப் பண்ணி கீழே உள்ள மாதிரி கடைசியா அமைஞ்சிடுச்சு உங்களோடும் என்னோட மகிழ்ச்சியை பகிர்ந்துகலாமேன்னு இங்கன.
முதல் முயற்சி இப்படி ஆட்டோ மோட்ல போட்டு எடுத்தப்போ...
ஒரு வழியாக படிச்சி கிடிச்சி மானுவல் மோட்ல போயி விளையாண்டு நிலாவின் ஒளிச் சிதறலை குறைச்சு இப்படியாக எடுக்க கத்துக்கிட்டேன்...
அப்படியே இந்தப் பாட்டையும் கேளுங்க குழந்தைகளோட இருக்கிறவங்க ...நிலா, நிலா ஓடி வா!!
பி.கு: நிலா புகைப்படும் எடுக்கும் பொழுது கவனத்தில நிறுத்த வேண்டிய விசயமா சொல்லுறது என்னான்னா: பொளர்ணமி அன்னைக்கு நிலா புகைப்படத்திற்கு சரியா வராதாம், அதுனாலே வளர்பிறை/தேய்பிறை சமயங்களில் முயற்சி பண்ணச் சொல்லுறாங்கோ. இன்னும் கூட நல்ல வர வைக்க முடியும் போல, இப்போதைக்கு இது போதும் :)
10 comments:
கலக்கல் படம் ...
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
நல்ல முயற்சி ..படம் நல்லா இருக்கு தெகா.. :)
எந்த கேமரான்னு சொல்லுங்க என்ன லென்ஸ் சொல்லுங்க
சூப்பரா இருக்கு தல!
என்ன கேமரா!?
Very Nice Click,
Can u tell me which camera is this?
How to avoid moon lighting
மீன்துள்ளியான் said...
கலக்கல் படம் ...
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்//
நன்றி மீன், எல்லாம் நம்ம பேசிக்கிட்டதிற்கு பிறகுதான் இந்த முயற்சியே!!
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்ல முயற்சி ..படம் நல்லா இருக்கு தெகா.. :)//
நீங்களும் முயற்சிப் பண்ணி இங்க கொண்டு வாங்கோ...
biskothupayal, வால்பையன் மற்றும் sathis ... வாங்க! வாங்க!
எல்லாருக்கும் முதல்ல நன்றி.
எல்லாருமே சொல்லி வைச்ச மாதிரி ஒரே கேள்விய கேட்டு வைச்சிருக்கீங்க. உங்களுகில்லாத பதிலா :)
Panasonic Lumix FZ35. Compact camera. என்னய பொருத்த மட்டில் பெரும்பாலான கேமராக்கள் நிறைய featuresகளை உள்ளடக்கியே வருகிறது, அத எப்படி நாம பயன்படுத்துறோங்கிறதில தான் திறமையே இருக்கின்னு. எல்லாரும் முயற்சிப் பண்ணி பாருங்க. காசா பணமா??
இன்னும் விளக்கமா எப்படி எடுத்தேன் அப்படின்னு கேட்டா, வேணுமின்னா ஒரு பெரும் போஸ்டா போட்டாத்தான் உண்டு... :)
//வேணுமின்னா ஒரு பெரும் போஸ்டா போட்டாத்தான் உண்டு... :)//
போட்ருங்க .. தெரிஞ்சிக்கிறோம்.
அற்புதம். EXIF சொல்லுங்களேன் நாங்களும் ட்ரை பண்றோம்.
Sathis, Truth, தருமி மற்ற நண்பர்கள் கேட்ட மற்ற விபரமடங்கிய பதிவு இங்கே... நிலா புகைப்பட விபரம் : EXIF of my Moon Shot
Truth உங்க சைட்ல செமயா நிறைய புகைப்படங்கள் எடுத்து, ஏத்தி வைச்சிருக்கீங்க, அருமை.
Post a Comment