இந்த சதுப்பு நிலக் காட்டில் காணப்படும் மர வகைகள் தில்லை (Exoecaria agallocha) நரிக்கந்தல் (Aegicerous corniculatum) , நீர்முள்ளி, அலையாத்தி (Avicennia marina) மற்றும் தண்டல். இவைகளில் அலையாத்தி மற்றும் தில்லை மர வகைகளே மிகவும் அதிகமாக காண முடிந்தது. இருப்பினும் இந்தக் காட்டிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் சேர்த்து 61 வகையான தாவர வகைகள் அறியப்பட்டுள்ளதாம். (இங்க எப்படி வந்துச் சேர்ந்தோமென்று புரியாம, முழிச்சிங்கன்னா முதல்ல இதப் படிச்சிட்டு வாங்க ... முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசயம்: Muthupettai Lagoon)
இருப்பினும் பிச்சாவரத்தில் அதிக அளவில் காணக்கிடைக்கும் ரைசோஃபோரா இன வகை சதுப்பு நிலத் தாவரம் இங்கே அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே குறைந்த எண்ணிக்கையில் ஒரு சில இடங்களிலேயே காணக்கிடைக்கிறது.
அங்கு வாழும் தாவரங்களின் வேர் அமைப்பு, நாம் சாதாரணமான நிலப் பரப்பில்
அங்கு வாழும் தாவரங்களின் வேர் அமைப்பு, நாம் சாதாரணமான நிலப் பரப்பில்
காணும் தாவரங்களின் வேர் அமைப்பைக் காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்ட முறையில் அமைந்திருப்பதனைக் காணலாம். நீரும், சேறுமாக எப்பொழுதும் வேர்ப் பகுதி மூழ்கிய நிலையில் இருப்பதால் உபரியாக அந்த தாவரங்கள் வேர்களை வெளிச் செலுத்தி (stilt roots) சுவாசிப்பதற்கெனவும், தேவையான போஷாக்குகளை பெறுவதற்கெனவும் அமைத்துக் கொள்கிறது. இது போன்ற வேர்கள் அந்த வனங்களின் தரைப் பரப்பு முழுவதிலும் வெளிக் கிளம்பி இருப்பதே கண்ணுக்கு விருந்தாகவும், மனதிற்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை
வழங்குவதாகவும் அமையக் கூடும்.
ரைசோஃபோரா வகைத் தாவரத்தின் வேர்கள் ஒரு படி மேலே போய் ஒரு மீட்டருக்கும் நீளமாக வேர்களை அதன் முதன்மைத் தண்டிலிருந்து கிளப்பி தரைகளில் வேரூன்றி இருப்பதனைப் போல அமைத்துக் கொள்கிறது. அதனைக் காணும் பொழுது ஏதோ நாமே அந்த மரத்தைச் சுற்றி ரொம்பவும் கவனமாக செதுக்கப்பட்ட மரங்களை எடுத்துச் சென்று அடுக்கி வைத்தனைப் போன்றதொரு பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனக்கு என்னவோ ரைசோஃபோரா மரங்கள் புகைப்படத்திற்கெனவே அமைந்து போனதினைப் போன்ற பிரமையை தோற்றுவித்ததாலும், லகூனில் மிகவும் அரிதாகவே அவைகள் காணக்கிடைத்ததாலும், கிடைத்த மரங்களை நிறைய புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொண்டேன்.
இங்கு 73 வகையான மீன் வகைகளும், பல வகை நண்டினங்கள், மெல்லூடலிகள் மேலும் இங்கயே தங்கி வாழும் மற்றும் வலசையாக வந்து போகும் 160 இனப் பறவைகளுமென முத்துப் பேட்டை சதுப்பு நிலக் காடு வண்ண மய மூட்டுகிறதாம்.
அவைகள் மட்டுமின்றி (13 வகையான) பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் (நரி), காட்டு முயல், கீரிப் பிள்ளை இங்கு அடிக்கடி காணப் படும் விலங்குகள்.
அவைகள் மட்டுமின்றி (13 வகையான) பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் (நரி), காட்டு முயல், கீரிப் பிள்ளை இங்கு அடிக்கடி காணப் படும் விலங்குகள்.
'தலைமை முனை' என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த ஓய்வு மேடைக்குப்
பக்கத்தில் ஒரு திறந்த வெளி இருப்பதனைக் கண்டு, சற்று நேரம் அதனைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டுச் செல்வோம் என்று கூறி அமைத்திருந்த பெஞ்சில் நான் கட்டையை சாய்த்து விட்டேன். எனக்குள்ளர ஒரு சின்ன ஆசை; அதிர்ஷடமிருந்து ஏதாவது நரி வெளியே வந்தா இந்த திறந்த வெளியில வைச்சுப் பார்க்கலாமேன்னு.
அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.
அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.
திடீரென்று வாட்சர், "சார் நரி... சார் நரி" வந்து
எட்டிப் பார்த்துச்சு அங்கே... அங்கேன்னு ஹஸ் பண்ணினார். வாரிச் சுருட்டி கேமராவை ட்ரைபாட்டில் பொருத்தி விட்டு, எல்லார் வாயய்க்கும் என் வாயாலேயே ஒரு அமைதி பிளாஸ்திரி ஒன்னு போட்டுட்டு அந்தத் திசையை நோக்கி ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருந்தோம். நரித் தலைவரு, மெதுவா பொறுமையா இருந்து, இருந்து பார்த்திட்டு இவிங்க இப்போதைக்கு தொலைய மாட்டாய்ங்கப்பான்னுட்டு மெதுவா எட்டிப் பார்த்துச்சு. பிறகென்ன, கேமராக் கண்களைக் கொண்டு பொடெர், பொடெர்னு அவரோட ஒவ்வொரு இயக்கத்தையும் சுட்டு எடுத்துட்டேன்ல.
தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!
தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!
"சார், எத்தனையோ முறை வந்திருக்கோம், ஆனா, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதில்ல உங்களுக்கு செம லக் சார்" அப்படின்னு வேறச் செல்லி உசுப்பு ஏத்தினாங்க இரண்டு பேருமா சேர்ந்து. இருந்தாலும், கேமராவிற்குள் எனக்கு செம வசுல். மற்றதை புகைப்படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
பதிவை முடிக்கிறதுக்கு முன்னாடி சில ஃபாக்ட்ஸ். இந்த சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் அமைப்பில (eco system) ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் வாழ்விடமும் அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்குமென பல வகையில் உபயோகமாக இருக்கிறது. அண்மையில் நடந்தேறிய சுனாமியின் பாதிப்பு கூட எங்கெல்லாம் இந்தக் காடுகளின் அடர்த்தி அதிகமாக இருக்கிறதோ அங்கே சற்றே சுனாமி அலைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருப்பதாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகளுக்கு உள்ள முக்கியமான உடனடி பாதிப்பு கட்டற்ற முறையில் அவிழ்த்து விடப் படும் கால்நடைகள் இளம் செடிகளின் குருத்தை அடியிலேயே மேய்ந்து நாசம் செய்து விடுவதால் இந்த மரங்களின் இனப் பரவல் தடுக்கப் படுகிறது என்று ஒரு புறம் இருந்தால், மற்றொரு புறம் சாராயம் காய்ச்சும் கூட்டம் மரங்களையே வெட்டி விறகுக்கென பயன்படுத்துவதும், லோகல் மக்களும் பொறுப்பற்று சில நேரங்களில் அதே வேலையில் ஈடுபடுவதும் இந்தக் காடுகள் சந்தித்து வரும் தலையாய அபாயங்களாக அந்தக் காட்டின் வனச் சரகர் கூறி வருத்தப் பட்டார்.
கண்டிப்பாக மக்களாகவே இந்த வனங்களின் முக்கியத்துவம் அறிந்து, அவைகளைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.
நான் லகூனில் மிதக்கச் சென்ற நாளன்று என் கண்ணில் சிக்கிய பறவைகளின் பட்டியல்:
1. Common Hoopoe (Upupa epops)
2. Koel (Eudynamys scolopacea)
3. Indian Roller (Coracias benghalensis)
4. Small Blue Kingfisher (Alcedo atthis)
5. White-breasted Kingfisher (Halcyon smyrnensis)
6. Small Bee-eater (Merops orientalis)
7. Rose-ringed Parakeet (Psittacula krameri)
8. Asian Palm Swift (Cypsiurus balasiensis)
9. Spotted Dove (Streptopelia chinensis)
10. Red-wattled Lapwing (Vanellus indicus)
11. Brahminy Kite (Haliastur indus)
12. Large Egret (Casmerodius albus
13. Cattle Egret (Bubulcus ibis)
14. Indian Pond Heron (Ardeola grayii)
15. House Crow (Corvus splendens)
16. Black Drongo (Dicrurus macrocercus)
17. Common Myna (Acridotheres tristis)
18. Red-vented Bulbul (Pycnonotus cafer)
19. White-headed Babbler (Turdoides affinis)
20. House Sparrow (Passer domesticus)
21. Large Pied Wagtail (Motacilla maderaspatensis)
22. Indian Cormorant (Phalacrocorax fuscicollis)
23. Little Cormorant (Phalacrocorax niger)
P.S: Further reading:
21 comments:
//"சார், எத்தனையோ முறை வந்திருக்கோம், ஆனா, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதில்ல உங்களுக்கு செம லக் சார்" //
நரியைப் பார்பதே அரிது, கண்ணுலேயே சிக்காது, அதுலும் கலக்கலாக நிழல்படம் எடுத்து இருக்கிங்க.
காடுகளில் மரங்கள், பறவைகள், மீன் வகைகள் தகவல் அருமை.
இயற்கை நேசிங்கிறப் பேரை வச்சிக்கிட்டு சும்மாவாங்கிறிங்களா ?
:)
நரிமுகத்துல முழிச்சீங்களா ? குட் குட்..
நல்லாவே போஸ் குடுத்திருக்கார்..
அப்பறம் அந்த பறவைகள் பெயரை தமிழில் என்னன்னும் குறிப்பிடுங்களேன்..
கோவியாரே,
//நரியைப் பார்பதே அரிது, கண்ணுலேயே சிக்காது, அதுலும் கலக்கலாக நிழல்படம் எடுத்து இருக்கிங்க.//
நானும் இதுவரை இயற்கையின் பின்னணியில் வைச்சு நரியைக் கண்டதேயில்லை இதுவே முதல் முறை, very exciting!
ஊக்கங்களுக்கு நன்றி, சார் :) !
அருமை அருமை.
பட்டுக்கோட்டையில்தான் வளர்ந்தேன் எனினும் இன்னும் லகூன் போனதில்லை.அடுத்த முறை போயே தீர வேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
அண்ணே நீங்க பயண கட்டுரை எழுதுறதால கலக்குறீங்க ...
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
நரிமுகத்துல முழிச்சீங்களா ? //
நரி முகத்துல முழிச்சா என்னாகும்?
//அப்பறம் அந்த பறவைகள் பெயரை தமிழில் என்னன்னும் குறிப்பிடுங்களேன்..//
அது எனக்குத் தெரிஞ்சிருந்தாத்தான் இங்க தமிழ்லேயே பட்டியல் போட்டிருப்பேனே, நிறைய பறவைகளுக்கு இனிமே தமிழ் படுத்தினாத்தான் உண்டு...
அருமை படங்கள்
-----------
சில வற்றை நேரில் பார்த்து இருக்கேன்
நான் முத்துப்பேட்டைக்கு அருகே உள்ள அதிராம்பட்டினம் தான்
தாங்கள் ?
சமிபத்தில் நானும் அங்கு சென்றேன் அருமையான இடம். எங்க ஊர் பக்கத்துல இருக்கிற பிச்சாவரத்த விட பல மடங்கு பெரியது.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் இதை நம்ம தமிழ்நாடு அரசு ஒரு நல்ல சுற்றுலாதலமாக மாற்ற ஒரு முயற்ச்சி எடுத்த இன்னும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் கவரனும்.
சமிபத்தில் நானும் அங்கு சென்றேன் அருமையான இடம். எங்க ஊர் பக்கத்துல இருக்கிற பிச்சாவரத்த விட பல மடங்கு பெரியது.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் இதை நம்ம தமிழ்நாடு அரசு ஒரு நல்ல சுற்றுலாதலமாக மாற்ற ஒரு முயற்ச்சி எடுத்த இன்னும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் கவரனும்.
அருமையான பயணக் கட்டுரை..
தொடர்ந்து எழுதுங்கள் தெகா...
//நாடோடி இலக்கியன் said...
அருமை அருமை.
பட்டுக்கோட்டையில்தான் வளர்ந்தேன் எனினும் இன்னும் லகூன் போனதில்லை.அடுத்த முறை போயே தீர வேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.//
வாங்க இலக்கியன், எல்லாம் சுத்தி முத்தி பக்கத்து ஊர் ஆளுங்களாகிப் போயாச்சு. நானும் பாக்காமத்தானே (கேள்விப்படாமலேயே) இருந்திருக்கிறேன் இத்தனை வருஷமா. சரி, விடுங்க கண்டிப்பா செய்யுங்க ஒரு ட்ரிப்.
//மீன்துள்ளியான் said...
அண்ணே நீங்க பயண கட்டுரை எழுதுறதால கலக்குறீங்க ...//
அப்படியா நினைக்கிற, இன்னொருத்தரும் அப்படிச் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். நன்றி!
அருமை அருமை,,,
வாங்க ஜமால்,
ரொம்ப நாளாச்சு ஆளேயேப் பார்த்து. ஏப்படி இருக்கீங்க.
//நான் முத்துப்பேட்டைக்கு அருகே உள்ள அதிராம்பட்டினம் தான்//
எல்லாம் பக்கம்தான், ஜமால். கரம்பக்குடி, கேள்விப் பட்டிருப்பீர்கள். அடிக்கடி வாங்க இன்னும் நிறைய புகைப்படப் பதிவுகள் இருக்கின்றன.
//சரவணன், ச said...
எங்க ஊர் பக்கத்துல இருக்கிற பிச்சாவரத்த விட பல மடங்கு பெரியது.//
உண்மைதான் சரவணன், கிட்டத்தட மூன்று மடங்கு பெரிதாக இருக்குமென்று நினைக்கிறேன்.
//எனக்கு ஒரே ஒரு வருத்தம் இதை நம்ம தமிழ்நாடு அரசு ஒரு நல்ல சுற்றுலாதலமாக மாற்ற ஒரு முயற்ச்சி எடுத்த இன்னும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் கவரனும்.//
செய்யலாம்தான். முறைப்படி வனப் பாதுகாப்பு போன்ற விசயங்களை எல்லாம் அமுல் படுத்திவிட்டு, அதற்குப் பிறகு இதனை சுற்றுலாதலமாக மாற்றுவதனைப் பற்றி சிந்திக்கலாம். யாவருமறிந்த சுற்றுலாத் தளமாக ஆக்குவதில் உள்ள ஒரே பிரச்சினை, வரும் மக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து பயன் படுத்திய பிளாஸ்டிக் போன்ற கழிவு பொருட்களை இங்கு கொட்டி நாசமடிக்காமல் சுற்றுப் புறச் சூழலை பாதுக்காக உதவ வேண்டும் என்பதே.
1. Common Hoopoe (Upupa epops) - கொண்டலாத்தி
2. Koel (Eudynamys scolopacea) - கோகிலம்
3. Indian Roller (Coracias benghalensis)- பனங்காடை
4. Small Blue Kingfisher (Alcedo atthis) - சிறகல் மீன்கொத்தி
5. White-breasted Kingfisher (Halcyon smyrnensis)- வெண்மார்பு மீன்கொத்தி
6. Small Bee-eater (Merops orientalis)- பச்சை பஞ்சுருட்டான்
7. Rose-ringed Parakeet (Psittacula krameri) - செந்தார் பைங்கிளி
8. Asian Palm Swift (Cypsiurus balasiensis) - பனை உழவரன்
9. Spotted Dove (Streptopelia chinensis) - புள்ளி புறா
10. Red-wattled Lapwing (Vanellus indicus) - சிவப்பு மூக்கு ஆள்கட்டி
11. Brahminy Kite (Haliastur indus) - கள்ள பருந்து
12. Large Egret (Casmerodius albus)( - பெரிய கொக்கு(நாரை)
13. Cattle Egret (Bubulcus ibis) உண்ணி கொக்கு
14. Indian Pond Heron (Ardeola grayii) - குருட்டு கொக்கு(நாரை)
15. House Crow (Corvus splendens) - காக்கை
16. Black Drongo (Dicrurus macrocercus) - கருஞ்கு கரிச்சான்
17. Common Myna (Acridotheres tristis) - நாகனவாய்
18. Red-vented Bulbul (Pycnonotus cafer) - செம்முதுகு கீச்சன்
19. White-headed Babbler (Turdoides affinis)
20. House Sparrow (Passer domesticus) - சிட்டு
21. Large Pied Wagtail (Motacilla maderaspatensis) - கருப்பு வெள்ளை வாலாட்டி
22. Indian Cormorant (Phalacrocorax fuscicollis) - கொண்டை நீர்காகம்
23. Little Cormorant (Phalacrocorax niger) - சின்ன நீர்காகம்
http://www.zoosprint.org/ZooPrintJournal/2007/December/2944-2948.pdf
இது தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது. நீங்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதலாமே.
super thekaa.
பதி மற்றும் அப்பன்,
மிக்க நன்றி :) .
குறும்பன் - மிக்க நன்றி. விக்கி பக்கம் சீக்கிரம் வருகிறேன். அழைப்பிற்கு நன்றி.
*********
குடுகுடுப்பை,
படிக்கிறீங்களா? நன்றி :)
எல்லாம் பக்கம்தான், ஜமால். கரம்பக்குடி, கேள்விப் பட்டிருப்பீர்கள். அடிக்கடி வாங்க இன்னும் நிறைய புகைப்படப் பதிவுகள் இருக்கின்றன.
]]
கரம்பக்குடி தெரியாமலா
அவசியம் வருகிறேன்
உங்கள் புகைப்பட பதிவுகளுக்காக வெயிட்டிங்ஸ் ...
அருமையான படங்கள் தெகா... மரங்கள் அழகோ அழகு....இந்த ஏரியால சுனாமி அப்போ இந்த மேங்குரூவ் ஃபாரஸ்ட் தானே கை கொடுத்ததாம்..?
சூப்பரய்யா சூப்பரு. யூ டியூப் பிரமாதம். நானும் இங்கே போனேன். 12 ஆம் வகுப்பில். நமக்கு அப்ப இம்புட்டு விபரம் பத்தாது. 27 வருடங்கள் கழித்து படகில் போவதை பார்த்த போது அதே படபடப்பு. மறுபடியும் குழந்தைகளுடன் இங்கே போக வேண்டும்.
Post a Comment