என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Thursday, March 06, 2014
எழுத்தாளர் இமையமும் பெண்ணிய சர்ச்சையும்
Posted by Thekkikattan|தெகா at 11:19 AM 0 comments
Labels: அனுபவம், இந்தியா, எழுத்தாளர்கள், சமூகம், நிகழ்வுகள், வாசிப்பாளன், விமர்சனம்
Friday, February 07, 2014
நமக்கும் சிம்பன்சிக்கும் இடைப்பட்ட மனித இனங்கள் எங்கே??
************
மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நமக்கு இடைப்பட்ட மனித பிற இனங்களை இணைக்கும் குரங்குகளை அல்லது மனிதர்களை ஒத்த இனங்கள் காணப் பெறவில்லை என்பது. அதாவது குரங்கு, சிம்பன்சி (வாலில்லா மனித குரங்கு) வகைகளில் இன்று காணப்படுவதனைப் போன்றுங்கிறது கேள்வியா இருக்கும். அதுக்கு எத்தனை விதமா பதில் கொடுத்தாலும் விசயம் சென்று சேருவதில்லை.கீழே உள்ள தொகுக்கப்பட்ட படக்கட்டுரையில் வரும் ஆண்டுகளை கொண்டு நன்றாக கவனித்தால் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளலாம். அதாவது மனித இனத்திற்கு மிக நெருக்கமாக வரும் எதுவும் இன்று சைட் பை சைடாக இல்லை. உதாரணமாக நியாண்டர்தால் கடைசியாக ஐரோப்பாவில் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை வாழ்ந்தது. ஆனால், அவைகள் நம்மை விட மூளை அளவிலும், உடல் பருமனிலும் பலசாலிகளாக இருந்தாலும் நாம் அவைகளை வெற்றி கொண்டோம்.
அதற்கான காரணங்களாக நமது சமூக அமைப்பு, உணவு பழக்கம், கூடிப் பேசி வேட்டையாடும் திறன், உடல் பருமனை மட்டும் நம்பி இருக்காமல் மூளையை செயல்படுத்தும் திறன், சீதோஷ்ண நிலையை நேர் கொண்ட திறன் அப்படி இப்படின்னு பல காரணங்கள் ஏன் நாம முன்னேறி கடைசியா தப்பி பிழைத்து நின்னு இருக்கோங்கிறது இருக்கு.
ஆனால் இந்த போட்டியில் தோல்வி உற்றவைகள் ஏதோ ஒரு வகையில் நம்மை விட திறன் குறைந்ததாகவே இருந்ததால் இந்த தப்பிப் பிழைத்துக் கிடக்கும் ஆட்டத்தில் தோற்று மண்ணுக்கு உரமாகி இருக்கிறது, சில எலும்புகளை மட்டும் விட்டுச் சென்றபடி.
ஏன் நமக்கு மிக அருகாமையில் வரும் சிம்பன்சி வகை மட்டும் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே நம்முடைய பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து சென்றிந்தாலும் இன்றும் கூடவே இருக்கிறதுன்னு கேக்குறீங்களா. நமக்கு அவைக்குமான உணவு பழக்க வழக்கம், வாழ்வமைப்பு, அதன் கம்யூனிகேஷன் திறன், மூளை வளர்ச்சி பெருமளவில் பின் தங்கி இருப்பதே காரணமாக இருக்கிறது (மரபணு மேட்சில நமக்கும் அதுக்கும் 98.5% தொடர்பிருப்பினும்).
அப்போ ஏன் இன்னும் வளராமயே இருக்கிறதின்னு இன்னொரு கேள்வியை போட்டிங்கன்னா- அதற்கான சரியான சூழ்நிலை இன்னமும் தேவைப்படாததும், அவைகளுக்கு தேவையான வாழ்வுச் சூழல் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நாமே அவைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்த பூமியை நமது ஆளுமைக்குள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நம்முடைய சுற்றுப் புறச் சூழல் அழிவுற வைக்கும் திறனுக்கு முன்பு இந்த பரிணாம சுழற்சியின் பெரிய சக்கரம் சுழற்ற போதுமற்றதாகவே பிற உயிரினங்கள் அழிந்து வருவதும் ஒரு காரணமாக இருக்குமென்று எண்ணச் செய்கிறேன்.
We don't give them enough time and space to evolve on its own pace! We alter every single strand of DNA of every living single organisms on this globe!!
Posted by Thekkikattan|தெகா at 10:23 AM 5 comments
Labels: அறிவியலும் நானும், இயற்கை, தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், வாசிப்பாளன்
Friday, January 03, 2014
புதுக்கோட்டையில் ஓர் ஞானாலயம்: Gnalaya P. Krishnamurthy
ஒரு நாள் முழுதும் தங்கி ஐயா ஞானாலயா கிருஷணமூர்த்தி மற்றும் அவருடைய துணைவியாருடன் உரையாடினோம். அவர்கள் அளித்த மதிய உணவை முழுதும் உண்ணும் வரையிலும் அருகிலேயே அமர்ந்திருந்து என்னுடைய கொரித்து சாப்பிடும் பழக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க செய்தார் அம்மா.
மனிதனின் நினைவாற்றல் என்பது ஒருவர் தனது துறை சார்ந்து எது போன்ற இலக்கை சென்றடைய வேண்டுமோ அதற்கென பயன்படுத்தி தன்னை சந்தைப் படுத்தி கொள்வது நடைமுறையில் நாம் காண்பது.
இவர் தான் வாசித்து சுவாசித்த அத்தனை புத்தக, நிஜ மனிதர்களின் நினைவுகளோடும் அவர்களின் கனவுகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவரும், பெரியவர்களென தன்னைத் தானே தூக்கி வைத்துக் கொண்டாடும் சிறியவர்களுக்கு முன்னால் ஒரு சொப்பன மனிதர்.
இரண்டு மாடிகளில் உள்ள எந்த புத்தகத்தை தொட்டாலும் அதனைப் பற்றிய சிறப்புகளை எடுத்து வைக்கும் பாங்கு நம்மை கொக்கிப் போட்டு உடனே அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென்ற வேட்கையை வளர்த்தெடுக்கிறது.
எத்தனையோ பெரிய கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு உரையாடி இருக்கக் கூடும். ஆனால் திருப்பூர் ஜோதிஜியுடன் சென்ற போது, எங்களிருவருக்காக இத்தனை ஆர்வத்துடன் தன்னுடை அத்தனை வாழ்பனுவத்தை வருடியும், தேவையான இடத்தில் எங்களின் குறுக்கீடுகளை மன்னித்தும், கலந்து கொள்ளுமாறு எங்களையும் அணைத்து கருத்துகளையும் உள் வைத்து எடுத்துச் சென்றது முதல் ஆச்சரியம் என்றால் அவரின் உரையாடலின் அனுபவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டே சென்றது என் கண்களை அகல விரிய வைத்தது.
அவர் ஓர் அறிவுச் சுரங்கம். 1800களின் இந்தியாவிலிருந்த வாழ்க்கை முதல் சமகால அரசியல் நிலையென்று அத்தனை விசயங்களையும் இதுவரையிலும் நாம் வெகுஜன ஊடகம் வழியே அறியாத முக்கியமான தகவல்களாக சொல்லிக் கொண்டே செல்ல எனக்கு கனவா நினைவா? என்று யோசிக்கத் தோன்றியது. அக்காலத்திய மனிதர்களின் வார்த்தைகளிலிருந்து அவர்களின் கனவுகள் எப்படியாக இன்றைய இந்தியாவில் வெறும் நினைவுகளாகி இருக்கின்றன என்று கூறி அவர் விடுக்கும் ஒரு வெறுப்பு கலந்த வரட்டுப் புன்னகை அவ்வப்பொழுது என் மனதை என்னவோ செய்தது.
அவரின் பார்வையில் காந்தியின் செயல்பாடுகளும் அவரின் தொலை நோக்கு பார்வையும் ஓவ்வொரு வார்த்தைகளின் ஊடாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டுமென்று அழுத்தமாக சில சான்றுகளை காந்தியின் வார்த்தைகளிலிருந்தே மேற்கோள் காட்டி சொல்லும் பொழுது “அட, ஆமால்ல” என்றுதான் வாய்பிளக்கச் செய்தது.
ஒரிடத்தில் நம்மை எல்லாம் காந்தியின் சுயசரிதை வாசிப்பிலிருந்து மீண்டு அவரைப் பற்றிய, காந்தியே எழுதிய பிற புத்தகங்களையும் ஆழ்ந்து வாசிக்க அழைக்கிறார். மற்றொரு இடத்தில் மிக அதிகமாக புத்தகங்களின் விற்பனையும், வாசிப்பாளர்களையும் பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கியதின் பின்னணியை விளக்கும் பொழுது, எப்படி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழுக்கென செய்த பெரும் தொண்டுகளை பெயர், வருடம் வாரியாக அட்டவணை இடுகிறார்.
முன்பொரு காலத்தில் தமிழகத்தில் மொத்த பிரசுரங்களே 13 தானாம். அதனில் பத்து பிரசுரங்கள் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார செட்டியார்களால் நடத்தப் பெற்றவைதானாம். எனவே, இயல்பாகவே அதிகப்படியான புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பாளர்களையும் உள்ளடக்கிய மாவட்டமாக அமைந்து போனதாக உபரித் தகவலாக போகிற போக்கில் பெரிய தகவல்களைச் அள்ளித் தெளிக்கிறார்.
பேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.
ஞானாலயா நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் முதற் பதிப்பு கண்டு அத்துடனே அத்தனை மூலத்தையும் உள்ளடக்கி அதற்கென உரிய புனிதத் தன்மையுடன் நம்மை சற்றே பணிவுடன் வணங்கச் செய்கிறது.
பெரியாரின் 1920களின் விடுதலை செய்தித் தாளை தொடும் பொழுது பயம்மா/மிரட்சியா/அதன் அதிர்வா அல்லது அந்தத் தாளின் இப்பொழுதோ அப்பொழுதோ விரலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடுவேங்கிற புனிதம் தோய்ந்த பழமையா ஏதோ ஒன்று அந்த பைண்டிங் தொகுப்பை திறக்கும் பொழுது காலுக்கு கீழ் பூமி நகர்வதாக உணரச் செய்தது.
இத்தனை புத்தங்களையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்க வேண்டி தனது வளர்ச்சியை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அளவிலே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். தான் ஆசிரியர் பணியில் இருந்த அனுபவம், புதுக்கோட்டை தவிர வேறு எந்த பகுதிக்கும் செல்ல விரும்பாத காரணத்தால் வந்த பதவி உயர்வை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரியராகவே வாழ்ந்த அனுபவம், கடைசியில் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த போது பள்ளியில் உருவாக்கிய சீர்சிருத்தம் என்ற அவர் நிஜவாழ்க்கை சாதனை என்பது தமிழிலில் வந்த சாட்டை படம் போலவே இருந்தது.
ஆனால் எதையும் எவரிடமும் சொல்வதும் இல்லை. எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து செய்யும் பழக்கமும் இல்லாத அவரைப் பார்த்த போது சகமனிதர்களின் குறிப்பாக பணமே சரணம் என்று காட்டு ஓட்டமாக ஓடும் இன்றைய நவீன இந்தியர்களின் மீதாக நான் வைத்திருந்த பார்வையை சற்றே மறு பரிசீலனை செய்யச் சொல்லி இருக்கிறது. சென்ற பள்ளிகளில் எல்லாம் தனது நிர்வாக திறமையால் பல மாற்றங்களையும் செய்திருக்கிறார்.
குறிப்பாக கந்தர்வகோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ரஜினி ரசிகர்கள் ஒரு முறை பென்சில் நோட் புத்தகம் வழங்க வந்த பொழுதில் அவர்களை பள்ளியின் சுற்றுச் சுவற்றை வெள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்ட லாவகம் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டிய ஆளுமைத் திறன்.
இன்றைய அரசியல் போகும் போக்கிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பணத்திற்கு ஓட்டு என்கிற பரிணாம சுழற்சியில் இது போன்ற மனிதர்களும் இவைகளை சகித்துக் கொண்டு எப்படியாக தங்களை இன்னமும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது சமூக அறிவியல் - உளவியலுக்கே உரித்தான கேள்வியது.
நம்முடைய வயதை ஒத்தவர்களுக்கு இதுவே வாழ்க்கையென ஓடும் ஓட்டத்தோடு கலந்து கரையேறுவது எளிமையாக இருக்கலாம். ஆனால், நாட்டின் அடிப்படை உரிமைகளை காக்கவும், அதன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் காக்கவென போராடியே வாழ்ந்தவர்களின் வாழ்க்கையின் ஊடாக வாழப் பெற்ற இது போன்ற அறிவார்ந்தவர்களின் அங்காலய்ப்புதான் எதனை ஒத்ததாக அமையக் கூடும்.
இப்பொழுது உள் நாட்டிலும் சரி, உலக அரங்கிலும் சரி எந்த ஒரு முடிவும் தன் நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்காகவும் சார்ந்து இல்லாமல் வியாபாரிகளின் நலனுக்காகவே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் மண்ணை/பாறை முகடுகளைக் கூட கூறு போட்டு விற்கும் நிலைக்கு நகர்ந்து வந்துள்ளோம்.
இத்தனைக்கு நடுவிலும் இத்தனை ஆயிரம் புத்தகங்ளையும் அதனூடாக வசிக்கும் மனிதர்களையும் வாசித்து அவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் ஒன்று ஒன்றாக பறக்க விடுவதனையும் கவனத்தில் நிறுத்தி இன்னமும் மனதை விட்டு விடாமல் நேர்மறை எண்ணத்தில் அவருக்கே ஆன வாழ்வை அவரது தத்துவார்த்த நோக்கில் வாழ்வது simply notable and impressive!
அந்த குடிலை விட்டு வெளிக் கிழம்பி வரும் பொழுது நான் விளையாட்டாக சொன்னது எனது நண்பரிடத்தில் “ஏதாவது செய்யணும் பாஸ்.” அங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் இண்டஸ்ட்ரியல் இயக்கமாக இயங்கி ஸ்கான் செய்து கணினியில் ஏற்ற வேண்டியது அனைத்து கணினி பயனீட்டர்களான நமது ஒவ்வொருவரின் கடமை.
Posted by Thekkikattan|தெகா at 1:25 AM 3 comments
Monday, December 16, 2013
வடுவூரில் எதிர்கால நீச்சல் வீரர்கள்: Potential National Swimmers at Vaduvoor
அருகாமையில் உள்ள நீர் நிலையில் இந்தியாவின் potential divers தங்களின் தேசியத் திறன் அறியாது “அண்ணா, அண்ணா எங்களை படம் பிடியுங்கள்” என்று கூறியவாறே அத்தனை நேர்த்தியையும் காட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் சுழன்றபடி நீருக்குள் தங்களவு ஆன்மாவை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது படத்தில் உள்ள சிறுவனின் நீர் புகும் நேர்த்தியைக் காணுங்கள்! இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடப் பயிற்சியில் செய்யும் ஒரு நீச்சல் வீரர் செய்யும் சாகசமென்று ஆ, ஓன்று கூச்சலிடும் (what an entering) ஒரு திறமை. இங்கே தானே பழகியதில் செய்து காட்டுகிறான்.
இப்படியாகத்தான் நமது கிராமப்புறங்களிலிருந்து பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்தியா ஒன்று, இரண்டாவதை பின் தள்ளியவாரே தன்னை மண்ணுக்குள் புதைத்து விட்டு அரை ஜட்டி போட்டு 20/20 மட்டுமே விளையாட்டு என்று ச்சீயர் லீடிங் செய்து வருகிறது. எல்லாமே பணம், வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தூக்கிப் பிடிக்கும் குணம்.
The real talents yet to be found in the heart of India!
1)
3)
4)
5)
6)
7)
8)
Posted by Thekkikattan|தெகா at 9:23 AM 3 comments
Labels: photography, அனுபவம், இந்தியா, நிகழ்வுகள், பயணம், புகைப்படங்கள், விளையாட்டு
Tuesday, December 10, 2013
பிள்ளையிம் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு: An Irony of Life!
பிறகு என்ன இப்போ எல்லாரும் அமெரிக்காவிற்குள் நுழைய எத்தனிப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் அதனையொட்டிய கெடுபிடிகளையும் வைத்து பார்த்துக் கொள்வதைப் போல எலிசியம் நகரத்திற்குள் இல்லீகள் பூமி இமிக்கிரண்ட்ஸ்களை வர விடாமல் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் பூமியில் வாழும் ஹீரோவிற்கு ஓர் அநீதி நடந்து விடுகிறது. அதனை எதிர்த்து போரட உந்தி எழ இரண்டு உலகத்திற்கும் சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதாக படம் திரையில் விரிகிறது.
போலவே, இப்போ என்னோட முக்கியமான விசயத்திற்கு பார்வையை திருப்புவோம். ஒரு கட்டுரையை இந்தத் தலைப்பில் The Gates Foundation’s hypocritical investments வாசிக்க நேர்ந்தது. வாசிச்சிட்டு கடந்து போவோம்னுதான் நானும் நகர்ந்து பார்த்தேன். ஆனா, கெரகம் விடலை. இந்த உலகத்தில இயங்கும் எந்த ஒரு சோ கால்ட் நல்ல விசயமும் சரி கெட்ட விசயமும் சரி ஒன்றொடொன்று பின்னி பிணைந்தே கிடக்கிறது. எதில இருந்து எதை பிரிச்சு எடுக்கிறதின்னு சிக்கலை உட்கார்ந்து அவிழ்க்க ஆரம்பிச்சு இனம் காண்பதற்கு முன்னமே சுடுகாட்டு பக்கத்தில ஒரு சாதா மனுசன் வாழ்க்கை நகர்ந்து வந்து நின்னுருது.
இப்படியாத்தான் நம்ம பெரிய கடை அண்ணாச்சி பில் கேட்ஸ் இம்பூட்டுத்தான் சம்பாரிக்கணும்னு வழித்தொகை தெரியாம கன்னாபின்னான்னு அவரு கொம்பெனி சம்பாரிக்கப் போக அவருக்கு இப்போ டாலர் பில் எல்லாம் அது துடைக்கக் கூட லாயக்கில்லைன்னு உணரரும் இடத்திற்கு நகர்த்தி வைச்சிருச்சு இந்த வாழ்க்கை. சரி, இரண்டு பூமி கிரகத்தையே வாங்கிப் போடும் அளவிற்கு பணம் குவிஞ்சிருச்சே என்ன செய்றதுன்னு தெரியாம இந்த உலகத்து ஏழை மக்களுக்கு சுகதாரமான உணவு, ஆரோக்கியமான காற்று, உழைக்கும் உழைப்பாளி வர்க்கத்திற்கு முறையான வழியில் சென்றடையும் விசயங்களை ஆதரிப்பது, வன்முறையற்ற சமூகம் உருவாக வித்திடுவதற்கென அமைந்த நிறுவனத் திட்டங்களை ஆதரித்து முதலீடுவது என தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அந்தப் பணம் தனக்கு வேலை செய்யத் திட்டமிட்டார்.
அப்படி திட்டமிட்டபடியே அந்த கையிருப்பு பணத்தை பெருக்க எங்கெல்லாம் தனது நிறுவனம் முதலீடு செய்தால் அவரின் கனவை நிறைவேற்றி வைக்க முடியும்னு பாடுபட்டு யோசிச்சு அங்கெல்லாம் பணத்தை முதலீட வைத்திருக்கிறார்கள்.
அதாவது ஒரு பக்கம் வியாதிக்கு, சுகாதரமற்ற ஓர் வாழ்வை வாழத் தேவையான அடிப்படை விசயங்களை வளர்த்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அதன் மூலமாக ஈட்டிய பணத்தில் வைத்தியம் செய்கிறார். என்ன ஓர் beautiful mind! முதலீடு செய்யப்பட்ட ஒரு சில நிறுவனங்களை நீங்களே காணுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஆரோக்கியமான உணவும், பானங்களும் இந்த உலக மக்களை சென்றடைய பாடுபடுகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்து கொண்டு எனக்கும் அறியத் தாருங்கள்.
உலக சூடேட்றத்திற்கு எதிராக போராடும் கம்பெனிகளுக்கு ஆதரவாக இங்கும் முதலீடு...
நமக்கு கிடைத்திருக்கும் ஓர் நவீன எலிசியம் படத்தின் நாயகன், எலிசிய நகரத்திலிருந்தே போராடுகிறான் :) .
பி.கு: மேலும் வாசிக்க இங்கே செல்லுங்க...
http://grist.org/climate-energy/the-gates-foundations-hypocritical-investments/?utm_source=facebook&utm_medium=update&utm_campaign=socialflow
Tuesday, November 19, 2013
தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)
அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.
என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.
நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.
அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.
இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!
நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!
அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.
இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.
அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.
4)
5)
6)
7)
8)
9)
10)
Posted by Thekkikattan|தெகா at 3:45 AM 14 comments
Labels: ஈழம், உலகம், சமூகம், தஞ்சாவூர், நிகழ்வுகள், பயணம், புகைப்படங்கள்
Sunday, October 27, 2013
திசைகளறு பயணம் I - கன்யாகுமரி (Photos)
புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அந்த நேரத்தில் ஒரு தனியார் பேருந்து ஒன்று கிடைத்தது. போகும் வழியெங்கும் அப்பொழுதே பெய்திருந்த மழை , மரங்களின் இலைகளில் சார்ந்திருந்த ஈரப்பதத்தை காற்றில் பரப்பி, நெஞ்சின் அடியாழம் வரைக்கும் நுரையீரலின் வழியாக உயிரைத் தொட்டுக் வருடிக் கொண்டிருந்தது. கூடவே இளையராஜவின் என்பதுகளின் பாடல் தொகுப்பை மிதமான சப்தத்துடன் ஓட்டுநர் வேறு தவழ விட்டிருந்தார்.
எனது தலைக்கு நேர் மேலாக பெட்டிகளை வைக்கும் தட்டில் சுற்றியிருந்த ஒரு வெளிப்புற பிளாஸ்டிக் சிறிதே கிழிந்து காற்றில் ஆடியாடி அசைந்தது. அது என்னுடைய கேசமே காற்றில் சிலும்பிப் பறக்கிறதென ஒரு மயக்கத்தை உண்டு பண்ணி என்னுடைய கல்லூரிக்காலத்துப் பயணத்தை மீண்டும் ஞாபகமூட்டியபடியே தனை மறந்து கேசத்தை சிலுப்பிக் கொள்ளும் அவாவை வழங்கிக் கொண்டிருந்தது.
அது இளையராஜாவின் மந்திர விரல்களின் ஊடே கசிந்தொழுகும் பாடல்களுக்கு மட்டுமேயான சாத்தியம் போல! இல்லாத முடியை, பயணத்திற்கான இலக்கை, வாழ்க்கைக்கான பொருளை, இறந்து போன ஆன்மாவை இன்னும் உயிர்ப்புடனே ஏதோ ஒரு மூலையில் உன் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஞாபகமூட்டுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது வழங்கி, வாடிய மனதை மேகத்திற்கு மேலாக எடுத்துயர்த்தி வைத்து விடும் ஒரு வெண்புரவி போல.
மிதக்க மிதக்க அப்பொழுதே ஒரு நோட்டுப் புத்தகத்தில் இளையாராஜவிற்கு செலுத்த வேண்டிய எனது காணிக்கையை எழுத்தின் மூலமாக எழுத வேண்டிய தருணமிது என்று எண்ணும் அளவிற்கு அது என்னை கடந்த காலத்திய ஆயிரக்கணக்கான மைல்களின் பயணிப்புகளின் ஊடே தோன்றிய அனுபவங்களை சார்ந்து இப்பொழுதே மொத்தமாக இறக்கி வைக்கும் தருணமாக அழுத்திக் கொண்டிருந்தது.
ஆனால், இப்பொழுது நான் சொல்ல வந்த விசயம் வேறு. பிரிதொரு சமயம் இளையராஜாவிற்கென ஓர் அமர்வு செய்யலாம்.
எப்பொழுதுமே எனக்கு இந்தியா என்றாலே நெருக்கமான விசயமாக எனக்குள் பற்றிப் படர்வது பேருந்து மற்றும் புகை வண்டிப் பயணங்கள். இது போன்ற தனிப்பட்ட முறையில் இலக்கே அற்று கால் போன போக்கில் கிடைக்கும் ஊர்தியில் ஜன்னலோரமாக அமர்ந்து பிரயாணிப்பதுதான்.
அவ்வாறு பயணிக்கும் பொழுது, பேருந்தின் வேகம் அதிகரிப்பதனை விட்டு அதனை விட என்னுடைய மனம் வேகம் பிடித்து பிரபஞ்சத்தின் விளிம்பை எட்டிப்பிடித்து விட்டு அதற்கு மேல் அது வளைந்து செல்கிறதே என்ற ஆதங்கத்துடன் பூமிக்கே இறக்கிக் கொண்டு கடந்து செல்லும், ஊர்களையும், மரங்களையும், தண்ணீரற்ற குளம் குட்டைகளையும், மாடு மேய்க்கும் தாத்தாபாட்டிகளையும், சிறார்களையும், மனிதர்களையும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே அவர்களை பின் தள்ளி முன் நகர்வது ஏதோ வாழ்வின் எதார்த்தத்தை எனக்கு ஞாபகமூட்டியபடியே கடந்து செல்வதாக மனமொரு லயிப்பை எட்ட வைக்கும்.பெரும்பகுதி இது போன்ற ஊர்திகளின் முன் நகர்வு என்னுடனேயே என்னுள் மையம் கொண்டிருக்க பெரிதும் உதவுகிறது. ஏறி இறங்கும் மனிதர்களின் முகங்களும் அவர்களுடனேயே பயணிக்கும் அனைத்து விதமான வாழ்வு வழங்கிய ரேகைகளும், வீடுகளும் சட் சட்டென திரையிழுத்து காட்சிகளை மாற்றுவதனைப் போல மாறிக் கொண்டே இருக்கும். அது நமது வாழ்வின் நிலையாமைக்கான ஒரு குறியீடாக அமைந்து என்னுள் மென்மேலும் உறங்கிப் போக வடிகாலாக அமைய உதவுவதும் இது போன்ற இலக்கற்ற பயணங்கள் ஒரு கிளர்வுற்ற ஈர்ப்பு நிலையில் நடந்தேற உந்தித் தள்ளுகிறதோ என்று ஒரு முடிவிற்கு வர வேண்டி இருக்கிறது.
இதற்கு முன்பு இது போலவே பல பயணங்களை எனக்கு நானே வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று வட அமெரிக்காவில் நான் நிகழ்த்திய 2980 மைல் அளவிளான மகிழுந்து பயணம் வாயிலாக ஆறு மாநிலங்களை கடந்து சென்றது. வாழ்வின் மறக்க முடியா பயணங்களில் அதுவும் ஒன்று. அதற்கும் பெரிதாக எந்த ஒரு திட்டமிடலுமில்லை. அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால், ஏதோ ஒரு வானத்தின் நிலா பின் தொடர்ந்த படியே!
பயணங்கள் எப்பொழுதும் எனக்கு அலுப்பை கொடுத்ததே இல்லை. மனம் வெம்பி சூம்பிக் கிடக்கும் பொழுது இப்படியான பயணங்கள் உள்முகமாக சிந்தனையைத் திருப்பி விடவும், வழியில் தான் சந்திக்கும் புதிய மனிதர்களுடானான உரையாடல் தனக்குள் இருக்கும் உண்மையான இயல்பினை வெளிக்கொணர்ந்து மீண்டும் விரைவாக துளிர்த்தெழும் சாத்தியத்தையும் வழங்குகிறது.
அதனினும் பயணங்களின் பொழுது வாசிக்கும் பழக்கம் இருக்குமாயின் அது மேலும் கூர்மையடைய வாய்ப்பளிக்கிறது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளரான பாலோவின் த ஸகீர் புத்தகம் வீட்டில் படுத்தவாரே வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த புதினத்தின் ஓட்டம் புத்தகத்தின் எல்லையைத் தொடத் தொட இது இந்த நிலையில் வாசிக்கும் புத்தகமல்ல என்று அவமானமாக உணர்ந்தேன். அதன் விளைவாக அமைந்தது ஒரு நான்கு மணி நேர பேருந்து பயணம். அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு முன்பாகவே புத்தகத்துனூடான பயணமும் முடிவடைந்தது. பயணத்தின் பிற்பகுதி ஒரு ரம்மியமான மாலை நேரம். காவிரிக் கரையோரமாக பச்சை பசேல் நிறம் பூசிய வயல் காடுகள் அனைத்தும் கலக்கஸ்தான் புல் மேடுகளாக மாறிப்போயிருந்தன.
மீண்டும் கன்யாகுமரி பயணத்திற்கு வருவோம். மதுரையிலிருந்து குமரிக்கு செல்லும் நேரடி அரசு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அரசு பேருந்துகளே இப்பொழுதெல்லாம் தொலை தூர பயணத்திற்கு செல்வதற்கென இயக்கப்படுவதாக கருதுகிறேன். அரசு பேருந்துகளின் பயணச் சீட்டின் விலையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமான பயணச் சீட்டின் விலை அரசு பேருந்திற்கும் தனியாருக்கும் ஒன்பது ரூபாய் வித்தியாசங்களை கொண்டதாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் தனியார் பேருந்துகளிலேயே விலை அதிகமிருக்கும். இப்பொழுது அது தலைகீழாக இருக்கிறது. பேருந்துகளின் நிலையும் ஒன்றும் பெரிதாக மெச்சிக் கொள்ளும் படியாகவுமில்லை.
ஓடும் பேருந்திற்குள் முதல் முறையாக கொசுக்கள் முத்தமிட முத்தமிட பயணித்து மகிழ்ந்தது இதுவே முதல் முறை. ஓட்டுநர் எத்தனை மிதித்தும் பேருந்து மணிக்கு 50கி.மீ வேகத்திற்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை.
பேருந்தின் ஜன்னல்களின் கண்ணாடிகள் சிரித்து அதிர்ந்து சிரித்து என கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்த தூக்கத்தையும் கொசுக்களுடன் சேர்ந்து கொண்டு காவல் காத்தது.
இந்தனை சந்தோஷத்திலும் விருட்டென்று அமைந்த பயணத்தினால், கையில் இருந்த கேமராவில் பாட்டரி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அச்சப்பட்ட படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காலை மணி மூன்றரையைப் போல எடுத்துப் பார்க்கும் பொழுது சுத்தமாக இறந்து கிடந்தது. கொஞ்சமே என்னை திட்டிக்கொண்டு மேலும் அதனை நினைத்துப் பயணத்தின் இனிமையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மன அறைக்கு ஒரு பூட்டைப் போட்டு சாத்தி விட்டேன்.
பின்னே என்ன இறங்கி கையில் இருந்த சம்சங் s4 வழியாக கிடைத்ததை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் காலை நாலரை மணிக்கு சென்றடைந்து விடும் என்ற பேருந்து சரியாக ஆறரை மணிக்கே சென்றடைந்தது. அதற்குள்ளாக சூரியனார் கொஞ்சம் காத்திரமாகி லென்ஸை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்னும் குமரியில் ஐந்து இட்லிகள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! அந்த பெண்கள் மீன் விற்பனை செய்யும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும். சுற்றி நின்று உணவருந்தியவர்களின் தோல் காய்ச்சலைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.
அவர்கள் கடலுக்கும் சற்றே அருகே நின்று இந்த வியபாரம் செய்து வருவது அறியாமல் முகம் அலம்பி பல் விளக்கவென மனதில் நிறுத்தி ஒரு வெண் பொங்கலும், காஃபியும் அருந்த 95 ரூபாய் கொடுத்து முதல் போனி செய்து வைத்தேன். கொஞ்சமே வருத்தம். அடுத்த முறை ஐந்து இட்லிகள் பத்து ரூபாய் :) .
நான் பருகித் திளைத்ததிலிருந்து ஒரு சில துளிகள் உங்களின் பார்வைக்காகவும்...
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
Posted by Thekkikattan|தெகா at 12:48 AM 10 comments
Labels: photography, அனுபவம், இந்தியா, இயற்கை, சமூகம், நிகழ்வுகள், பயணம்















