Tuesday, December 10, 2013

பிள்ளையிம் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு: An Irony of Life!

அண்மையில் ஒரு படம் பார்த்தேன் மாட் டொய்மன் நடித்து வெளி வந்த “எலிசியம்.” அதில கதை என்னான்னா பூமியில எத்தனை முடியுமோ அத்தனை கொண்டாட்ட வாழ்க்கை முறையையிம் வாழ்ந்து முடிச்சிட்டு பெருகிப் போன மக்கட் தொகை, சுவாசிக்க நல்ல காத்து, குடிக்கத் தண்ணீர் கிடைக்காத சூழலுக்குப் போயி பூமி ஒரு குப்பை காட ஆகிடுது. பணம் படைத்தவர்களாக சேர்ந்து ஒரு வான் வெளி நகரம் அமைத்து (எலிசியம்) அங்கே வாழத் தலைப்படுகிறார்கள்.

பிறகு என்ன இப்போ எல்லாரும் அமெரிக்காவிற்குள் நுழைய எத்தனிப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் அதனையொட்டிய கெடுபிடிகளையும் வைத்து பார்த்துக் கொள்வதைப் போல எலிசியம் நகரத்திற்குள் இல்லீகள் பூமி இமிக்கிரண்ட்ஸ்களை வர விடாமல் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் பூமியில் வாழும் ஹீரோவிற்கு ஓர் அநீதி நடந்து விடுகிறது. அதனை எதிர்த்து போரட உந்தி எழ இரண்டு உலகத்திற்கும் சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதாக படம் திரையில் விரிகிறது.

போலவே, இப்போ என்னோட முக்கியமான விசயத்திற்கு பார்வையை திருப்புவோம். ஒரு கட்டுரையை இந்தத் தலைப்பில் The Gates Foundation’s hypocritical investments வாசிக்க நேர்ந்தது. வாசிச்சிட்டு கடந்து போவோம்னுதான் நானும் நகர்ந்து பார்த்தேன். ஆனா, கெரகம் விடலை. இந்த உலகத்தில இயங்கும் எந்த ஒரு சோ கால்ட் நல்ல விசயமும் சரி கெட்ட விசயமும் சரி ஒன்றொடொன்று பின்னி பிணைந்தே கிடக்கிறது. எதில இருந்து எதை பிரிச்சு எடுக்கிறதின்னு சிக்கலை உட்கார்ந்து அவிழ்க்க ஆரம்பிச்சு இனம் காண்பதற்கு முன்னமே சுடுகாட்டு பக்கத்தில ஒரு சாதா மனுசன் வாழ்க்கை நகர்ந்து வந்து நின்னுருது.

இப்படியாத்தான் நம்ம பெரிய கடை அண்ணாச்சி பில் கேட்ஸ் இம்பூட்டுத்தான் சம்பாரிக்கணும்னு வழித்தொகை தெரியாம கன்னாபின்னான்னு அவரு கொம்பெனி சம்பாரிக்கப் போக அவருக்கு இப்போ டாலர் பில் எல்லாம் அது துடைக்கக் கூட லாயக்கில்லைன்னு உணரரும் இடத்திற்கு நகர்த்தி வைச்சிருச்சு இந்த வாழ்க்கை. சரி, இரண்டு பூமி கிரகத்தையே வாங்கிப் போடும் அளவிற்கு பணம் குவிஞ்சிருச்சே என்ன செய்றதுன்னு தெரியாம இந்த உலகத்து ஏழை மக்களுக்கு சுகதாரமான உணவு, ஆரோக்கியமான காற்று, உழைக்கும் உழைப்பாளி வர்க்கத்திற்கு முறையான வழியில் சென்றடையும் விசயங்களை ஆதரிப்பது,  வன்முறையற்ற சமூகம் உருவாக வித்திடுவதற்கென அமைந்த நிறுவனத் திட்டங்களை ஆதரித்து முதலீடுவது என தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அந்தப் பணம் தனக்கு வேலை செய்யத் திட்டமிட்டார்.

அப்படி திட்டமிட்டபடியே அந்த கையிருப்பு பணத்தை பெருக்க எங்கெல்லாம் தனது நிறுவனம் முதலீடு செய்தால் அவரின் கனவை நிறைவேற்றி வைக்க முடியும்னு பாடுபட்டு யோசிச்சு அங்கெல்லாம் பணத்தை முதலீட வைத்திருக்கிறார்கள்.அதாவது ஒரு பக்கம் வியாதிக்கு, சுகாதரமற்ற ஓர் வாழ்வை வாழத் தேவையான அடிப்படை விசயங்களை வளர்த்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அதன் மூலமாக ஈட்டிய பணத்தில் வைத்தியம் செய்கிறார். என்ன ஓர் beautiful mind! முதலீடு செய்யப்பட்ட ஒரு சில நிறுவனங்களை நீங்களே காணுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஆரோக்கியமான உணவும், பானங்களும் இந்த உலக மக்களை சென்றடைய பாடுபடுகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்து கொண்டு எனக்கும் அறியத் தாருங்கள்.உலக சூடேட்றத்திற்கு எதிராக போராடும் கம்பெனிகளுக்கு ஆதரவாக இங்கும் முதலீடு...
நமக்கு கிடைத்திருக்கும் ஓர் நவீன எலிசியம் படத்தின் நாயகன், எலிசிய நகரத்திலிருந்தே போராடுகிறான் :) .பி.கு: மேலும் வாசிக்க இங்கே செல்லுங்க... 

http://grist.org/climate-energy/the-gates-foundations-hypocritical-investments/?utm_source=facebook&utm_medium=update&utm_campaign=socialflow

3 comments:

Maatamil said...

தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

http://maatamil.com

நன்றி

Anonymous said...

இது போலவே தான் சவுதாரண்ய சிலபங்களில் சிக்கி தவித்த ஷர்புதீனத்து இளவரசன் அல் மாதீஸ்லிக்கும்ம் செல்வ சாகர்யத்தின் உச்சவடாகமன நிலைவந்தது. அவனும் உத்தராயனத்தில் மேருவொத்த கருமேக கூட்டம் மழைதருமென் வைந்தீக சூட்சமக் கணவு கண்டுகொண்டு வறுமையில் வாடிய ஏழை மக்கட்கு தன் மட்டற்ற சொங்கூரை செல்வமனைத்தும் கொடுத்து நற்கதியடைந்தான்.

சையது உசேன்.

Anonymous said...

arumai

Related Posts with Thumbnails