Tuesday, November 19, 2013

தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)

என்னோட நண்பன் ஒருத்தனை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஒளிஞ்சு கண்டுபிடிச்சு விளையாண்டுகிட்டே இருந்துட்டு நேற்று முகநூலில் வைச்சு கன்னம் மாத்தி, கன்னம் அறைஞ்சுகிட்டு  இன்று நேரா சந்திசிக்கலாம்னு முடிவாகி அவன் தஞ்சாவூர் வந்திருந்தான்.

அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.

என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.

நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.

அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.

இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!

நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!

அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.

இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.

அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.


1) நுழைவு முற்றம்...


2) தமிழகம் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தீக்குளித்தவர்களுக்கான மதில் பதிப்பு...

3) ஈழம் மண்ணில் அவர்கள் படும் வதையை விவரணம் செய்யும் மதில் பதிப்பு...

4)

5)
6)

7)
8)


9)
10)

14 comments:

வவ்வால் said...

தெ.கா,

இப்போலாம் "களப்பணியில்"இறங்கிடுறிங்களே ,நல்ல விடயம்.

அரசியல் தவிர்த்து இம்முற்றம் ஒரு நல்ல ஆவணப்படுத்துதல்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

முடிஞ்சளவிற்கு முட்டி கழடுவதற்கு முன்னமே இதெல்லாம் செஞ்சு முடிஞ்சிடணும்னு ஓர் ஆசை.

ஆமா, ரொம்ப நல்ல ஒரு விசயம். இன்னும் அந்த கட்டிடத்திற்குள் சென்று பார்க்கவில்லை. நாங்க போகும் பொழுது அது சாத்தப்பட்டு இருந்தது. அடுத்த முறை செல்லும் பொழுது புகைப்படம் எடுக்க அனுமதித்தால் எடுத்து பகிர்ந்து கொள்ளலாம்.

ஜோதிஜி said...

முட்டி கழடுவதற்கு முன்னமே இதெல்லாம் செஞ்சு முடிஞ்சிடணும்னு ஓர் ஆசை.


இஃதும் அஃதே

தருமி said...

முட்டி என்னங்க முட்டி ..மனசு மட்டும் கழறாமல் இருந்தா போதுங்க!

Anonymous said...

முட்டிய கழட்றது ஜட்டிய கழட்றது ,மனசு மட்டும் கழட்றாம இருக்கிறது எல்லாம் அப்புறம் மகராசங்களே,கட்டுரைய எழுதின மகராசனு சரி,விமர்சனம் பண்ணுன மகராசனுங்களு சரி,அம்மாவையோ,இல்ல அவங்கள பத்திதியோ ஓன்ணும் சொல்லாம >>>>>>>...............>>>>>>>>>>>>>>

m_yesa@yahoo.com

ராஜ நடராஜன் said...

தும்பை விட்டு விட்டு வரலாற்றை மட்டும் பதிவு செய்வதில் தமிழர்கள் சமர்த்தர்களே!

தலைமுறைகள் மாறும்போது தமிழனின் துயரங்களையும் இந்த நினைவுமுற்றம் பதிவு செய்யும்.

ஓய்!வவ்வால்!அதென்ன அரசியல் தவிர்த்து?அரசியல் காரணமாகவே இந்த துயர முற்றம்.

Thekkikattan|தெகா said...

//சரி,அம்மாவையோ,இல்ல அவங்கள பத்திதியோ ஓன்ணும் சொல்லாம //

அந்த மாதிரியான அரிய உண்மைகளை journalistic investigation செய்யும், எழுதும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

என்னமோ எங்க ஊர்க்காட்டுப் பக்கம் சொல்லிக்குவாய்ங்க... மேயுற மாட்டை நக்... கெடுக்குமான்னு அது மாதிரி இருக்கு அனாமத்தேயங்களின் அவதாரங்கள்.

Thekkikattan|தெகா said...

தருமி,

//முட்டி என்னங்க முட்டி ..மனசு மட்டும் கழறாமல் இருந்தா போதுங்க!//

பெரியவா சொன்னா சரியாத்தான் இருக்கும். அடியொத்தி வந்துகிட்டே இருக்கோமில்ல. உங்க மாதிரி ஒரு அறுபது சதவீதம் அடியொத்தினாக் கூட சிறப்புத்தேய்ன்...

ஆமா, மருதைக்கு வரணுமே நான் சீக்கிரம். எப்போ?

வவ்வால் said...

ராச நட,

தொழிலதிபரா ஆனப்பின்னும்,அடங்க மாட்டேங்குறீரே அவ்வ்!

//வரலாற்றை மட்டும் பதிவு செய்வதில் தமிழர்கள் சமர்த்தர்களே!//

தமிழர்களுக்கு வரலாறே இல்லைனு கார்ட்டூன் "வரலாற்று அறிஞர்" மதன் சொல்லிக்கீறார்,நீர் என்ன அவர விட பெரிய கையா?

# //ஓய்!வவ்வால்!அதென்ன அரசியல் தவிர்த்து?அரசியல் காரணமாகவே இந்த துயர முற்றம்.//

அரசியலின் அறம் சார்ந்து அடியேனுக்கு மாற்றுக்கருத்து உள்ளதால் தான் "அரசியல் தவிர்த்து" என குறியீடாக சொல்லிச்சென்றேன், இவ்வரசியலை, இலை வேறு ,மரம் வேறு, வேர் வேறு,தூர் வேறு எனப்பிரித்து மேய முடியும்,ஆனால் தெ.கா தாங்க மாட்டாரேனு தான் கமுக்கமா போயிட்டேன் ,சும்மா சொறிஞ்சுவிட்டு நீர்ப்பாட்டுக்கு போயிடுவீர் அப்பாலிக்கா யாரு சொக்காய கிளிச்சுக்கிட்டு அலையிறது ?
----------------------
யோவ் அனானி,

நீர் என்ன ஜட்டித்திருடனா ?ஜட்டி,கிட்டினு பேசிட்டு, நான் லங்கோடு தான் எனவே கவலையேயில்லை அவ்வ்!

Thekkikattan|தெகா said...

//இலை வேறு ,மரம் வேறு, வேர் வேறு,தூர் வேறு எனப்பிரித்து மேய முடியும்,ஆனால் தெ.கா தாங்க மாட்டாரேனு தான் கமுக்கமா போயிட்டேன் //

இந்த அரசியல் சார்ந்த தகிடுதத்தங்களை குறுக்கு/நெடுக்கு வெட்டுத் தோற்றங்களில் வைத்து பேசி என்ன பலன் கிடைத்திவிடப் போகிறது? சுற்று வட்ட கிராமங்களிலிருந்து வந்து போகும் மக்களுக்கு செய்தி சென்றடைந்தால் போதும் இதுதான் அடிப்படை விசயம். இந்த முற்றம் எழுந்து நிற்பது மொத்த அரசியல் பூத உலகங்களின் பிரவேசிப்பிற்கு ஒரு கதவு மட்டுமே!

முத்துவேல் said...

நான் இந்த படங்களை என் facebook பயன்படுத்தலாமா ?

முத்துவேல் said...

நான் இந்த படங்களை என் facebook பயன்படுத்தலாமா ?

Thekkikattan|தெகா said...

Muththuvel,

of course, feel free to use it. but don't forget to give credit. thanks for asking!

Anonymous said...

கோவுடும் ததும்ப நிரைந்ததுவோர் பாதுக சரித்திரம் செவ்வியதோர் சாங்கிலியமிக்க சித்துவார்போதுமை கொண்ட எளிய மக்கள் மற்றும் தேம்பிழி மதுக்களி சிறுவர் அலைக்கழிக்கப்பட்டதற்க்கு அந்த அந்நிய அரசு மட்டுமா காரணம் ????
கெளடமென்பது கருவிய பத்தொடுங் கூடாதியலும் கொள்கையன்றோ ? விரவத் தடுப்பது சமநிலையன்றோ ?
நிறைய படித்த அயல் நாட்டில் அரிதுயில பட்டணமாக வேலையில் இருக்கும் தங்களுக்கு புரியாதா என்ன ? எம் மக்கட்களை தமிழர்களும் சேர்ந்தே கொன்றார்கள் இல்லையா ?

இது ஒன்றும் ஒப்புமை கூட்ட மெய்படு விரோதமல்ல.பலவயிர் போலி யொருவயிற்போலி கூடா உவமை பொதுநீங்குதலே

Related Posts with Thumbnails