Friday, February 07, 2014

நமக்கும் சிம்பன்சிக்கும் இடைப்பட்ட மனித இனங்கள் எங்கே??

யு.கே டெலிகிராஃப்ல மனித பரிணாமம் சார்ந்த ஒரு கட்டுரை வாசிச்சேன். படிக்கும் பொழுது எனக்குள் தோன்றிய சில எண்ணங்களை இதுக்கு முன்பே இங்கே பேசி கேள்விகளாக முன் வைத்து கேள்விகளுக்கு பல இடங்களில் பதில்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த படத்துடன் கூடிய டெலிகிராஃப் கட்டுரை சில கூர்ந்த அவதானத்தை பக்கம் பக்கமாக வைத்து எளிதாக பலருக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என்பதால் இதோ மீண்டும் பரிணாம அக்கப்போர் :).  அந்த கட்டுரைக்கான சுட்டி- The evolution of man. http://www.telegraph.co.uk/science/10623993/The-evolution-of-man.html

************

மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நமக்கு இடைப்பட்ட மனித பிற இனங்களை இணைக்கும் குரங்குகளை அல்லது மனிதர்களை ஒத்த இனங்கள் காணப் பெறவில்லை என்பது. அதாவது குரங்கு, சிம்பன்சி (வாலில்லா மனித குரங்கு) வகைகளில் இன்று காணப்படுவதனைப் போன்றுங்கிறது கேள்வியா இருக்கும். அதுக்கு எத்தனை விதமா பதில் கொடுத்தாலும் விசயம் சென்று சேருவதில்லை.

கீழே உள்ள தொகுக்கப்பட்ட படக்கட்டுரையில் வரும் ஆண்டுகளை கொண்டு நன்றாக கவனித்தால் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளலாம். அதாவது மனித இனத்திற்கு மிக நெருக்கமாக வரும் எதுவும் இன்று சைட் பை சைடாக இல்லை. உதாரணமாக நியாண்டர்தால் கடைசியாக ஐரோப்பாவில் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை வாழ்ந்தது. ஆனால், அவைகள் நம்மை விட மூளை அளவிலும், உடல் பருமனிலும் பலசாலிகளாக இருந்தாலும் நாம் அவைகளை வெற்றி கொண்டோம்.

அதற்கான காரணங்களாக நமது சமூக அமைப்பு, உணவு பழக்கம், கூடிப் பேசி வேட்டையாடும் திறன், உடல் பருமனை மட்டும் நம்பி இருக்காமல் மூளையை செயல்படுத்தும் திறன், சீதோஷ்ண நிலையை நேர் கொண்ட திறன் அப்படி இப்படின்னு பல காரணங்கள் ஏன் நாம முன்னேறி கடைசியா தப்பி பிழைத்து நின்னு இருக்கோங்கிறது இருக்கு.

ஆனால் இந்த போட்டியில் தோல்வி உற்றவைகள் ஏதோ ஒரு வகையில் நம்மை விட திறன் குறைந்ததாகவே இருந்ததால் இந்த தப்பிப் பிழைத்துக் கிடக்கும் ஆட்டத்தில் தோற்று மண்ணுக்கு உரமாகி இருக்கிறது, சில எலும்புகளை மட்டும் விட்டுச் சென்றபடி.

ஏன் நமக்கு மிக அருகாமையில் வரும் சிம்பன்சி வகை மட்டும் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே நம்முடைய பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து சென்றிந்தாலும் இன்றும் கூடவே இருக்கிறதுன்னு கேக்குறீங்களா. நமக்கு அவைக்குமான உணவு பழக்க வழக்கம், வாழ்வமைப்பு, அதன் கம்யூனிகேஷன் திறன், மூளை வளர்ச்சி பெருமளவில் பின் தங்கி இருப்பதே காரணமாக இருக்கிறது (மரபணு மேட்சில நமக்கும் அதுக்கும் 98.5% தொடர்பிருப்பினும்).

அப்போ ஏன் இன்னும் வளராமயே இருக்கிறதின்னு இன்னொரு கேள்வியை போட்டிங்கன்னா- அதற்கான சரியான சூழ்நிலை இன்னமும் தேவைப்படாததும், அவைகளுக்கு தேவையான வாழ்வுச் சூழல் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நாமே அவைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்த பூமியை நமது ஆளுமைக்குள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நம்முடைய சுற்றுப் புறச் சூழல் அழிவுற வைக்கும் திறனுக்கு முன்பு இந்த பரிணாம சுழற்சியின் பெரிய சக்கரம் சுழற்ற போதுமற்றதாகவே பிற உயிரினங்கள் அழிந்து வருவதும் ஒரு காரணமாக இருக்குமென்று எண்ணச் செய்கிறேன்.

We don't give them enough time and space to evolve on its own pace! We alter every single strand of DNA of every living single organisms on this globe!!

5 comments:

Prema said...

Attagaasama eluthirkeega!!!Answered my long term questions....super...

Yugasarathi said...

வாலில்லாக் குரங்குகளுக்கும் மனிதருக்கும் இடைப்பட்ட ஹோமோ இரக்டஸ் என்னும் நிமிர்ந்து நிற்கும் இயல்புடைய விலங்குகள் வாழ்ந்திருக்கக்கூடுமென்னும் விஞஞான முடிபு கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றது. ஆனால் அதற்கான சுவட்டியல் சான்றுகள் இன்றுவரை கிடைக்கவில்லை. கிடைப்பதெல்லாம் பழைய கால மாந்தரின் எலும்புக்கூடுகளாகவே இருக்கின்றன. நியாண்டதால் மனிதனும் அவற்றுள் ஒன்று.

பழைய இராமாயண மகாபாரத இதிகாசங்கள் இத்தகைய வானரர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை இலக்கியரீPதியில் முன்வைக்கின்றன. நெருப்பில்லாமல் புகையாது என்பதைப் போன்று ஏதோவோர் சான்றின் அடிப்படையிலேயே இத்தகைய கற்பனை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும்.

தற்போது மனித இனத்தின் அடுத்த பரிணாமம் ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். புத்திகூர்மை, விஞ்ஞான முன்னேற்றம் போன்ற விடயங்களில் சமவாய்ப்பு இருந்தாலும், அரசியல் ஆளுமை எனப்படும் மிகமுக்கிய பரிணாம இயல்பில் பலதேசிய இனங்கள் பின்தங்கியுள்ளதால் அவை காலவோட்டத்தில் அழி;ந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள தமிழரினம் அத்தகைய அரசியற் பரிணாமமில்லாததால் அதாவது தனக்கெனவோர் நாடு இல்லததால் தன் தனித்துவங்களை இழந்து அழிந்து ஏனைய ஆளுமினங்களுடன் கலந்துவிடக்கூடிய போக்கே காணப்படுகின்றது.

அதைவிட, உருவத்தோற்றத்திலும், அறிவுவளர்ச்சியிலும் முன்னோக்கிச் செல்லும் மனித இனங்கள் உலகில் ஏற்கனவே தோன்றியிருக்கவும் கூடும். ஆனால் ஒரு குறுகியகால வாழ்க்கையையுடைய மனித இனத்தினால் அத்தகைய மாற்றங்களை கண்டுபிடிப்பது முடியாத காரியம். காலப்போக்கில் இந்த இனங்கள் விருத்தியடைந்து மனித இனத்தின் கூர்ப்பித்த தனி இனங்களாக அதாவது சுப்பர் ஹியூமன்களாக மாற வாய்ப்புண்டு.

அரசியல் ரீதியில் தம் ஆளுகையை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு ஏனைய தேசிய இனங்களை நாசூக்காக அடக்கியொடுக்கும் இலங்கையின் ஆளும்வர்க்கம், இந்தியாவின் காங்கிரஸ் ஆதரவாளர்களும் அவர்களது சந்ததியினரும், குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டி அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான குழுக்கள் உட்பட உலகின் பல ஏகாதிபத்திய வல்லரசுநாடுகளின் ஆளும் சக்திகள் இந்தப் பரிணாமப் போட்டியில் வெற்றியடையவும், ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் பல உலக இனங்கள் இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவி அழிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. தற்போதுள்ள உலக மயமாக்கல் சூழலால் ஏற்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான சமவாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி, அரசியல் ஆதிக்கத்தை வென்றெடுப்பதன் மூலமே அழியும் விளிம்பிலுள்ள பல தேசிய இனங்கள் தமது பரிணாமத்தை முன்னோக்கி நகர்த்த முடியும்.

(எனது இச்சிறு கட்டுரை சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். கூர்ப்பைத் தனியே உடற்றொழில் உடலமைப்பியல்களுடன் மட்டும் தொடர்பு படுத்தாமல் பல திசைகளிலும் தொடர்புபடுத்தி நோக்கு வோருக்கு இது சற்றுப் புரியும்படியாக அமையாலாமென எண்ணுகிறேன்.)

Anonymous said...

//அரசியல் ரீதியில் தம் ஆளுகையை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு ஏனைய தேசிய இனங்களை நாசூக்காக அடக்கியொடுக்கும் இலங்கையின் ஆளும்வர்க்கம், இந்தியாவின் காங்கிரஸ் ஆதரவாளர்களும் அவர்களது சந்ததியினரும், குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டி அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான குழுக்கள் உட்பட உலகின் பல ஏகாதிபத்திய வல்லரசுநாடுகளின் //ஆளும் சக்திகள் இந்தப் பரிணாமப் போட்டியில் வெற்றியடையவும், ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் பல உலக இனங்கள் இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவி அழிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. தற்போதுள்ள உலக மயமாக்கல் சூழலால் ஏற்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான சமவாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி, அரசியல் ஆதிக்கத்தை வென்றெடுப்பதன் மூலமே அழியும் விளிம்பிலுள்ள பல தேசிய இனங்கள் தமது பரிணாமத்தை முன்னோக்கி நகர்த்த முடியும்.//

அப்படியென்று வைத்துக்கொண்டு தர்க்கம் செய்தால் எங்கட மக்களை உங்கட பொடியனகள் பங்களித்து பதையமொர் பொழுதில் வேட்டையாடியது உங்கட நினைவில் ஆட்டம் கானாலையா ? இதற்கு பதிலுரைக்க மாட்டீர்கள் இல்லியோ, உங்கட பாட்டுக்கு நித்திரை எண்டு இருப்பியள் தானே...

சையது உசேன்

Yugasarathi said...
This comment has been removed by the author.
Yugasarathi said...

திரு உசேன் அவர்களே

இது பரிணாமம் பற்றிய அறிவியல் நோக்கு. அடக்கி ஒடுக்கப்படும் பல்தேசிய இனங்கள் எல்லாமே தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலுமென்ற கோட்பாட்டுக்குள் வைத்து ஆராயப்பட வேண்டியவை என்பதாலும், பரிணமித்த உலகில் எங்கெல்லாம் வலிந்தது வாழுமென்ற சர்வைவல் ஓஃப் த பிஃற்றஸ்ற் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அறிவியலின் பார்வை செல்ல வேண்டுமென்பதாலும் குறிப்பாகச் சில விடயங்களைக் கூறினேன்.

இம்மாபெரிய உலகில் மனிதப் பரிணாமம் தொடர்ந்து கொண்டேயிருக்pறது. மனிதமூளை சரிவரச் செயற்பட்டு அப்பரிணாமத்தை நெறிப்படுத்தித் தம்வசம் வைத்துக்கொண்டாலன்றி எதிர்காலத்தில் உருவாகப் போகும் அல்லது ஏற்கனவே உருவாகிவிட்ட சுப்பர் ஹியூமன்களை வெற்றி கொள்வது முடியாத காரியமாகிவிடுமென்பதற்காக, ஓர் எச்சரிக்கையாக நான் அந்தச் சுப்பர் ஹியூமன்கள் இருக்கும் திசையையும் அவை வளர்ச்சியடையும் திசையையும்; சுட்டிக்காட்டினேன். அவ்வளவே.

தயவு செய்து இந்த அறிவியல் ஆய்வை வேறு திசைக்குத் திருப்ப முனையாதீர்கள். அது பலனற்ற விவாதத்திற்கே நம்மைக் கொண்டு சேர்க்கும்.

ஆனாலும் உங்களுக்கேற்பட்ட சந்தேகத்தை என்னாற் சரியாக இனங்கண்டுகொள்ள முடியவில்லை. நீங்கள் 'உங்கள் மக்கள் பெடியன்கள்' என்றெல்லாம் குறிப்பிட்டது கல்முனை, சம்மாந்துறை, வீரச்சோலை, அட்டப்பள்ளம், திராய்க்கேணி, மல்வத்தை, காரைதீவு, அக்கரைப்பற்றின் சில பகுதிகள், மூதூரின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் ஆயிரக்கணக்கில் புனித யுத்தத்தின் பேரால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவித் தமிழப்; பொதுமக்களையும் இளைஞர் கூட்டங்களையும் பற்றியா? அப்படியாயின் அந்தத் தமிழ்த் தேசிய இனத்தினரும் இந்த அறிவியல் ஆய்வில் அழிந்து போன இனங்கள் என்ற பட்டியல்களுக்குள் வரவேண்டியவர்களே. அதனை உங்கள் மூன்று விரல்களாலும் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

(இந்த அறிவியல் பார்வை கண்ணாடி வீட்டுக்குள் இருந்து உலகைப் பார்ப்பது போன்றது. எறியும் கற்களை முடிந்தவரை நாம் திரும்பிவராதவையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லாவிடில் தேவையற்ற சிதிலங்களே மிஞ்சும். ஆதலால் அறிவியலுக்கு வெளியே செல்லும் எந்த அணுகுமுறைக்கும் மேற்கொண்டு பதிலளிக்க முடியாதென்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன்)

Related Posts with Thumbnails