இரு வேறு உலகங்களின் பிரதிபலிப்பு...





என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...
Wednesday, August 01, 2007
Posted by Thekkikattan|தெகா at 10:19 AM 17 comments
Labels: சமூகம்
Friday, July 27, 2007
நம்மளும் இந்த கொசு கடியில இருந்து தப்பிக்க என்னவெல்லாமோத்தான் செய்து பார்க்கிறோம். ஆனால், அவைகள் விட்ட பாடு இல்லையே. கும்மிருட்டாக இருந்தாக் கூட கூடி வந்து சிம்பொனி போட்டு ரசிச்சு கடிக்கிதுக.
எப்படி இந்த கொசுக்கள் மிகச் சரியாக நம்மள இருட்டுக்குள் கண்டுபிடிச்சு கடிக்குதுங்க அப்படின்னா, இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் ரெண்டு வரிகளில் சொல்லிப் புடுவோம். நம்ம உடம்புச் சூட்டை வைத்தும், சுரக்கும் லாக்டிக் அமிலத்தைக் கொண்டும், கரியமிலாவாயுவைக் கொண்டும் இந்த குட்டி ஹெலிகாப்டர்கள் மிகச் சரியாக நம்மீது குறி வைத்து தரையிறங்குகிறதாம்.
பொதுவாக நம்மிடத்தெ ஒரு ஆசை இருக்கலாம், ஏதாவது வாசத்தை வைத்து இவைகளை விரட்டியடிக்க முடியாதா அப்படின்னு. இந்த முறை எனது ஊருக்கு போயிருந்த பொழுது ஒரு முறை கரண்ட் போயிவிட்டது, இரவு நேரம் தூங்க முடியாத அளவிற்கு புழுக்கம், கொசுக்களின் தொல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன். எனக்கு கிடைத்தது, பாண்ட்ஸ் ட்ரிம் ஃப்ளவர் டால்கம் பவுடர்தான். உடம்பு முழுக்க விபூதிச் சாமீயார் மாதிரி அள்ளி அப்பிக் கொண்டு தூங்க முயற்சித்தேன். ஆனால், எனது ஆராய்ச்சி தோல்வியில் முடிவடைந்தது. எல்லோரையும் சிரிக்க வைத்ததுதான் மிச்சம் :-).
ஆனால், இன்னும் கொஞ்சம் விபரமறிந்தவர்கள் பூண்டு(Garlic) நிறைய சாப்பிட்டா கொசுக்கள் கிட்ட நெருங்காதுன்னு நம்பியிருக்காங்க. அப்படி யாராவது நம்பின மக்கள் இங்க இருக்கீங்களா? இருந்தா, உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.
சரி இது எந்தளவிற்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கணுமில்லையா, அதற்காக கனெடிகட் பல்கலை கழகத்தில உள்ள உடல் சுகாதார மையத்தில ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்காங்க. நம்ம கூட செஞ்சுப் பார்த்திருக்கலாம். அவ்வளவு ஈசியான செய்முறை.
ஒரு குரூப் மக்களுக்கு நிறைய பூண்டுகளை சாப்பிடக் கொடுத்திருக்காங்க, இன்னொரு குரூப்க்கு அது மாதிரியே இருக்கிற பூண்டு இல்லாத(placebo) விசயத்தை சாப்பிட வைச்சுட்டு, அவங்க ரெண்டு பேரையும் கொசு கடி வாங்க விட்டு ஒப்பீட்டு பார்த்தப்ப ஒரு வித்தியாசமுமில்லையாம். இதில இருந்து பூண்டுக்கும் கொசு கடிக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சு.
ஆனா, பாருங்க தண்ணி அடிச்சிருந்தோமின்ன அன்னிக்கு நம்ம சுத்தியும் சிம்பொனி அதிக மிருக்குதாம் :( அதே போன்ற இரண்டு குரூப் மக்களை வைச்சு ஆராய்ச்சிப் பண்ணப் பட்ட போது இது தெரிய வந்திருக்கு. அப்ப நம்மூர்ல சொல்லவே வேண்டியதில்லை. கொசு கடியை மறந்து நிம்மதியா தூங்க, கொஞ்சம் நாக்கில தடவிக் கிட்டு படுத்தா, அவருதான் நல்லா சாப்பாடு நிறைய பேருக்கு அன்னிக்கு இரவு போடப் போறார்னு வச்சிக்க வேண்டியதுதான்.
Posted by Thekkikattan|தெகா at 8:00 PM 13 comments
Labels: அறிவியலும் நானும்
Posted by Thekkikattan|தெகா at 12:49 PM 1 comments
Labels: சினிமா
Monday, July 23, 2007

கொஞ்சம் சர்ச்சைக்குறியது. எகிப்தின் மம்மிகளைப் போன்று தோண்டி எடுக்க எடுக்க கதையாக வரலாற்றை எழுதுவதற்கும் (மேலும் மம்மிகளை தொடர்ந்து பல சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள படக் குறியீடுகளை கொண்டும்), இந்த தென் அமெரிக்காவில் இருந்து வந்த மாயா இன நாகரீகத்துக்கு அடையளமாக சில எஞ்சி நிற்கும் கட்டடங்கள், இன்னமும் அகழ்வாரயச்சியில் தோண்டி அதுவும் வனப்பகுதிகளில் எடுத்த சில விசயங்களைக் கொண்டும் இப்படி ஒரு படம் எடுத்திருப்பது இன்னும் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதனைப் பொருத்து ஆச்சர்யப் படுவதற்கு ஒன்று மில்லைதான்.Posted by Thekkikattan|தெகா at 2:51 PM 54 comments
Labels: சினிமா
Thursday, July 19, 2007
இன்றைய தினத்தில் நம் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் இந்த கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கமும் ஒரு பெரிய பேசப் பட வேண்டிய விசயமே. இதனை தவிர்க்கும் பொருட்டு கொஞ்சம் பொறுப்பானவர்கள், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெற்றுக் கொள்ளும் சில பெற்றோர்கள், அதீதமாக தாம் குழுந்தைகளின் மேல் கவனம் எடுத்து வளர்க்கிறேன் பேர்வழி என்று பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள் (மற்றுமொரு குழந்தை back upக்கு இல்லையே என்று, அந்த காலம் மாதிரி).
இச் சூழலில் அன்மைய மருத்துவ ஆராய்சிகள் சொல்கிறது, இயற்கையிலேயே அதுவும் தாயிக்கு முதல் குழந்தை எனும் பட்சத்தில் இந்த நோய் எதிர்ப்பு (immune system) சக்தி குறைவாகவே காணப்படுகிறதாம் அக் குழந்தைகளுக்கு. அதாவது, முதல் குழந்தைக்கும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அவைகளின் தொப்புள் கொடியில் உள்ள immunoglobulin E (IgE) அளவை கொண்டு ஆஸ்த்மா மற்றும் இதர ஒவ்வாமை தொடர்பான வியாதிகளால் பீடிக்கும் வாய்ப்பை ஒப்பீடு செய்து பார்க்கும் பொழுது முதலாவதாக பிறக்கும் குழந்தைக்கு இந்த immunoglobulin E (IgE) அளவு அதீதமாக இருப்பதால் அவைக்களுக்கு இந்த ஒவ்வாமை சார்ந்த வியாதிகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாம்.
ஆனா பாருங்க இந்த மாதிரி முதல் குழந்தைகள் மற்ற (தனது சகோதர, சாகோதரி, இதர) குழந்தைகளுடன் ஓடியாடி கலக்கும் பொழுது இயற்கையாகவே மற்ற கிருமிகளிடத்தே அறிமுகம் கிட்டி மெதுவாக இந்த குழந்தைகளும் சுயமாக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ளுதுகளாம்.
இப்ப வாரேன் பாருங்க விசயத்துக்கு. இது இப்படி இருக்கும் பொழுது இந்த அதீத கவனம் எடுத்துக் கொள்ளும் அப்பா, அம்மாக்கள் பள்ளிகளுக்கு தனது குழந்தைகளை அனுப்பி வைப்பதோடு முடிந்ததாக நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தால், வெளியே அனுப்பி சிறிது உடற் பயிற்சி கிட்டும் வண்ணம் விளையாடக் கூட அனுப்ப முடியாமல் இன்னும் நிறைய வேலைகளை குழந்தைகளின் மீது சுமர்த்தி, கோடை விடுமுறையின் போது கூட தனது உறவினர்களின் (உ.தா: தாத்தா, பாட்டி) அண்டைய ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள தண்ணீர், மற்றும் இதர உணவு வகைகளை உண்டு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கா வண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள் இந்த காலத்தில்.
அக் குழந்தைகளுக்கு சதா மாத்திரை மருந்துகளை ஊட்டி சிறு, சிறு ஜலதோஷம், சிறு காய்ச்சல் போன்றவைகளுக்கும் கூட வீட்டு அணுகு முறையை தவிர்த்து மாத்திரைகளை சோறு போல ஊட்டுவதால் பிரிதொரு காலத்தில் எது போன்ற சக்தி உள்ள மாத்திரைகளை கொடுத்தாலும் கூட அதிக சக்தி உள்ள மருந்துகளை கொடுப்பது மாதிரியும், அந்த மருந்து மாத்திரைகளே இருக்கும் கொஞ்ச நஞ்ச நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து வாழ் நாள் முழுதும் மருந்து மாத்திரைகளை நம்பியே (medicine dependent life) ஓட்டும் நிலைக்குத் ஆளாகிப் போகிறார்கள்.
பெரியோர்களுக்கு இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்திக்க தினமும் கொஞ்ச நேரம் உடற் பயிற்சி செய்தாலே நிறைய கிடைப்பதாக அறியப்படுகிறது. பெண்களின் மார்பக புற்று நோயிலிருந்து, இதயக் கோளாருகள் வரை இதன் பொருட்டு தவிர்க்கப் படுவதாக தெரிகிறது. யோகவும் இந்த வகையில் ஒரு கூடுதலான பரிசு நமக்கு.
எனவே பொற்றொர்களே, பெரியோர்களே குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள. 'ஹும்' என்றால் உடனே பார்மாவுக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொடுப்பதில் மட்டுமல்ல உங்கள் அன்பு வெளிப்பாடு அதனையும் தாண்டி என்ன இருக்கிறது என்று தேடிப் பார்த்து நிலையானதொரு தீர்வை கொடுங்கள் உங்க அன்புச் செல்வங்களுக்கு.
Posted by Thekkikattan|தெகா at 9:15 PM 32 comments
Labels: அறிவியலும் நானும்
Tuesday, July 17, 2007
சுன்னத்(circumcision) செய்வது என்பது மதச் சடங்காகவும், மருத்துவர்களின் சில வித நோய்களை தீர்க்கும் தீர்வாகவும் நடை பெற்று வருவது யாவரும் அறிந்ததே. ஆனால், தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும், பரவலாக சில தென் அமெரிக்கா மற்றும் ஆஃப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளிலும் அவ்வளவாக அமுலில் இல்லை.
இப்பொழுது வளரும் நாடுகளில் இது போன்ற சுன்னத் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைய ஆரம்பித்திருப்பதாக செய்திக் குறிப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்திற்கு, 1960களில் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் மட்டும் 90 சதவீத குழந்தைகள் சுன்னத் முறையை தழுவ நேர்ந்ததாம். ஆனால் அது அண்மைய காலங்களில், அதாவது 2000ங்களில் அதுவே 50 சதவீதமாக குறைந்து போனதாம்.
என்ன காரணமாக இருக்கும் என்றால், இந்த சுகாதார ரீதியாக நம்பப் பட்ட அதாவது சுன்னத் செய்து கொள்வதின் மூலமாக தவிர்கப்படும் புற்று நோய், சிறுநீரக தொற்று வியாதிகள், எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான மற்ற நோய் தாக்கத்தினை குறைத்துக் கொள்ள வழி வகை செய்வதாக நம்பப்பட்டது. இன்னமும் சில மருத்துவர்கள் இதனை முன் மொழிகிறார்களாம்.
இது இப்படி இருக்க, இப்பொழுது அன்மைய மருத்துவ ஆய்வுகள் இது போன்ற மருத்துவ காரணங்கள் சரியான படி முழுதுமாக ஏற்றுக் கொள்ள தக்க வகையில் இல்லை எனவும், அது போன்ற மேற் சென்ன சுகாதார விசயங்கள் சுன்னத் செய்யப் பட்டவர்களுக்கும், பண்ணப் படாதவர்களுக்கும் எந்த பாகுபாடுமில்லாமலேயே வியாதியால் பீடிக்கப் படுகிறார்கள் என்று அந்த ஆய்வாரிக்கை இந்த சுன்னத் முறையின் நம்பகத் தன்மையை கேள்வியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதன் பொருட்டு இப்பொழுதைய பொற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு பிறந்தவுடனேயே இப்படி ஒரு வலியூனுடே அங்க இழப்பு செய்ய நிர்பந்திப்பது இயற்கைக்கு முரணானது என்று தவிர்த்து வருவதாகவும் அவ்வறிக்கை சுட்டுகிறது.
எனக்கு என்ன தோனுதுன்னா இதில வேற ஏதாவது ஏடா கூடமா வெவரம் தெரிஞ்சவுங்க இந்த சுன்னத் முறையை மதங்களின் ஊடாக வைச்சு தைச்சு அமுல் படுத்தியிருப்பாங்களோ முன்னமேன்னு. ஆனால், சில ஹாஸ்பிடல்களில் இங்க அமெரிக்காவில் தாய்பாலுக்குப் பதிலாக புட்டிப் பால் கொடுப்பதை மருத்துவர்களே அங்கீகரிக்கும் வண்ணம் ஊக்குவிப்பதும் ஒரு வித வியபாரத் தந்திரமே (i.e., promoting the sales of formulas).
அது போல அன்மைய காலங்களில் இந்த குழந்தைகளை துன் புறுத்தும் சுன்னத் முறை இதுக்கு மேலும் கடைபிடிப்பது ஹாஸ்பிடலுக்கு வேண்டுமானல் ஒரு துண்டு பில் போட உதவலாம் போல. அதுவும் இந்த ஆய்வறிக்கையின் ஊடாக காணும் பொழுது. அப்படியா?
Posted by Thekkikattan|தெகா at 5:30 PM 54 comments
Labels: அறிவியலும் நானும்
Thursday, July 12, 2007

Posted by Thekkikattan|தெகா at 10:09 AM 29 comments
Labels: கவிஜா