Saturday, September 22, 2012

கூடங்குளம் - ஒரு சிலந்தியின் செய்தி: With Photos!

நம்மைச் சுற்றியும் எப்பொழுதும் எங்கேயும் விந்தையான விசயங்கள் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் யாவும் பெரிய இயக்கங்களாக நம் முன்னால் விரிந்து காட்சி தர வேண்டுமென்று எதிர்பார்ப்பது நுட்பங்களை அவதானிக்க தவறிய சிறு மூளை செயல்பாட்டில் மரத்தன்மை ஊறிப் போனதே காரணம் என்பதனை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

அது ஒரு சிறு நடை. வீட்டின் முன் புறமாக நடந்து இடது பக்கமுள்ள சுவற்றினையொட்டி நின்று மரத்தின் வேர்களை பார்த்து கொண்டிருப்பதெனக்கு பிடிக்கும். அப்படியான ஒரு பயணத்தில் என் கண் முன்னால் கையொப்பம் சிலந்தி (Signature Spider) ஒன்று நெடுக்காக ஓடிய கேபிளுக்கும் அருகாமையே இருந்த புதருக்குமாக ஒரு வலையை தனக்கேயுரிய சிறப்பானதொரு வடிவமைப்பில் பின்னிப் பரப்பி இருந்தது.



கவனிக்காது அதனைப் பிளந்து கொண்டு நடக்க இருந்தவன் சற்றே தமாதித்து கண்களின் குவியத்தை நெருக்கி கொண்டுவர மரத்துப் போன புலன் விலகி, அதன் பிரமாண்டம் கண்ணில் சிக்கிக்கொண்டது. அங்கயே நின்று கவனித்து கொண்டிருக்கையில் அதனைப் பற்றிய விரிவான கட்டுரையொன்று என் மன 70mmல் விரிய ஆரம்பித்தது. திரும்ப நகர்ந்தவன், அதிர்ந்து கையொப்ப சிலந்தின் தவத்தை எனது மனச் சிந்தனை சப்தம் கலைத்து விடாமலிருக்க மிக மெதுவாக எனது எண்ணத்தை உள்ளே வைத்து வெடித்துக் கொண்டுடே நகர்ந்து மீண்டும் புகைப்படக் கருவியுடன் சிலந்தி வீட்டின் முன் வந்து நின்று கொண்டேன்.

இப்பொழுது காற்றின் விசை எங்கள் இருவரின் நோக்கத்தையுமே கேள்விக்குறியாக்கியிருந்தது. கையொப்பச் சிலந்தி ஊஞ்சலில் இறுகப்பற்றிக் கொண்டு அலறி அனுபவித்துக் கொண்டே முன்னும் பின்னுமாக சென்று வரும் ஒரு சிறுமியைப் போல, தன் வலையின் வலிமையை கவனித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தது. நானோ எனது புகைப்படக் கருவியின் அத்தனை குப்பிகளையும் திருகி கிடைக்கும் வெளிச்சத்திற்கேற்ப சிலந்தியி்ன் தெளிவான படத்தை கொண்டு வந்திருக்கும் பொழுது முன்னும் பின்னுமாக நகர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தது, காற்று.



அதற்கும் சற்றே சளைத்தவன் நானில்லை என்று மேகமும் அவ்வப்பொழுது சூரியானரை மறைத்தும், வெளிக்காட்டியுமென அடுத்த ரோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது. எனக்கும் அந்த சிலந்திக்குமான இடைவெளி ஒன்றரை அடிதான் இருந்திருக்க முடியும். இடையில் கொசுக்கள் வேறு என்னிடம் அளவற்ற சாப்பாடு கேட்டுக் கொண்டிருந்தது. பகிர்ந்து கொள்வது கருணை மிக்கது என்று கேள்விப்பட்டிந்ததால் சரி சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அரை டவுசர் போட்டு விட்டுவிட்டேன்.

இத்தனைக்குமிடையே அந்த சிலந்தி ஒரு அற்புதமான விளையாட்டை நிகழ்த்தி காண்பித்தது. இத்தனை போராட்டத்தையும் ”நீ சந்திப்பது ஒன்றுமல்ல” என்று கட்டியம் கூறி நின்றதாக அமைந்ததால்தான் இந்த கட்டுரையே உங்களுக்கு.

அப்படியாக காற்று வீசியதால் ஒரு இலையொன்று அதன் வலையின் மீது சிக்கி தொங்க ஆரம்பித்தது. அதனைக் கவனித்த சிலந்தி உடனே இரண்டே ஸ்விங்கில் அதனிடம் சென்று ஒவ்வொரு இழையாக அறுக்க ஆரம்பித்தது; மேலும் கீழுமாக நகர்ந்து. தொடர்ந்து நானும் எனது புகைப்பட செட்டப்பை மாற்றி மாற்றி முடிந்தளவிற்கு பதிந்து கொண்டேன். முற்றுமாக அதனை எடுத்து பொடீர் என்று கீழே போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்தது.


அதன் உடனடி நடவடிக்கையை கவனித்தவன் மனதில் ஓடியது வீட்டில் சிறு சிறு ஓட்டை உடைசல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அலட்சியம் காட்டி மொத்தமாக செலவு செய்து சரி செய்து கொள்ளும் மனப் போக்கில் இருக்கும் எனக்கு இந்த சிலந்தியின் உடனடி இயக்கம் எதனையோ சொல்லிக் கொண்டிருப்பதாகப்பட்டது. உடனே மனம் திருந்திய மணவாடு ஆகிவிட்டேன் என்று புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எனக்கொள்க!





இலையை தனது தேவையான இழைகளை அகற்றி அதன் கனம் மொத்தமும் தனது வீட்டை சிதைத்து விடாமலிருக்க நடத்திய அதிரடி நடவடிக்கையில் வெற்றியடைந்த சிலந்தி - புகைப்படத்தின் வாயிலாக...







இந்த அவதானிப்பின் நீதி- வரும் முன் காப்போம். கூடங்குளம் மக்களுக்கு வந்திருக்கிற இந்த விழிப்புணர்வு ஃபுக்கிஷிமா அணு உலை விபத்திற்கு பின்புதானே என்றும், ஒப்பந்தம் போட்டு அடிக்கல்லும் நட்டு இந்தனை கோடிகளை அரசியல் சாணக்கியர்கள் பிரித்துக் கொண்டது போக மிச்சத்தை அங்கே கட்டடம் எழுப்பி 24/7 கரண்ட் வாங்க, நாளை அந்த உணு உலைக்கு ஏதோ நிகழ்ந்தாலோ அல்லது எப்படி அந்த அணு உலை பயன்பாடு நாற்பது வருடங்களுக்குள் முடிந்து அதற்கு பின்னான அணுக் கழிவுகளை 10 ஆயிரம் வருடங்கள் வைத்து பாதுக்காப்பதைப் பற்றியோ கவலை இல்லை என்று கூறுபவர்களுக்கும், ஒப்பந்தம் போட்டு பணம் செலவு செய்தாகிவிட்டது வரும் காலத்தில் மூன்று மாவட்டங்களை பலி கொடுத்தாலும் தகும் என்று சகித்துக் கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் இந்த சிலந்தி ஏதோ சொல்ல வருகிறது என்றே தோன்றவும் செய்கிறது.

மேலும் அணு உலை சார்ந்த பழைய கஞ்சி குடிக்க-


1) ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

2) கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

9 comments:

வவ்வால் said...

ராபர்ட் புருசு காலத்தில கேமரா இல்லாம போச்சுன்னு நீங்க கிளம்பிட்டிகளா :-))

கூடங்குளம் ஒரு கேள்விக்குறி?

Thekkikattan|தெகா said...

வவ்வாலு நல்லா இருக்கியளா... புவனா ஒரு கேள்விக்குறி மாதிரி இதையும் கேள்விக்’குறி ஆக்கிட்டாய்ங்களா... ஏன் சின்னச் சின்னதா வித்துட்டு இருக்காய்ங்க மொத்தமா வித்தா சுத்தமாகிடும்ல ;)

வவ்வால் said...

தெ.கா,

நலம்,நலமா?

மொத்தமா விக்க கம்பெனி சட்டத்தில் இடம் இல்லையாம் :-))

----------

எங்க மாநிலத்துக்கு அணு உலை கொண்டு வாங்கன்னு லெட்டெர் போட்டதே இங்க இருக்கும் கழகம் தான், ரெண்டு கழகமும் மாறி மாறி லெட்டர் போட்டு சீக்கிறம் கட்டுங்கன்னு சொன்னதும் ஆவணமா இருக்கும் போது ,வேண்டாம்னு நிருத்த சொல்வாங்களா? இந்த அரசியல்வாதிங்களை நம்பினா ஆப்பு தான்.

போராட்டம் செய்றவங்க நோக்கமும் தெளிவா இல்லை,எனவே எனக்குள் கேள்விக்குறி தான் நிக்குது.

Thekkikattan|தெகா said...

நிறைய புதிய தகவல்களை அள்ளி வழங்கியிருக்கிறீர்கள். அப்படியே இப்பொழுது இந்தியாவில் மொத்தம் எத்தனை அணு உலைகள் உள்ளது அதன் மூலமாக எத்தனை சதவீதம் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், எதிர்பார்த்த உற்பத்தி திறனுக்கு அருகாமையிலாவது இத்தனை வருடங்களில் எட்ட முடிந்ததா என்பதனையும் புதிய “பரிணாமப்” பார்வையில் சொல்லி விடுங்க.

சராசரியாக ஒரு அணு அதன் கதிர் வீச்சின் வீரியத்தை இழக்க எத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது? இதிலிருந்து கிடைக்கப் பெறும் கழிவினை எங்கே வைத்து எப்படி அதன் வீரியம் இழக்கும் வரையிலும் காப்பாத்துவீர்கள். அது ஃப்ரான்சோ, ஜப்பானோ அனைவரும் செய்து கொண்டிருப்பது குறுகிய சாகுபடிதான். நீண்ட கால தீர்வு இந்த அணுக்கழிவிற்கு இது வரையில் எவனும் கண்டுபிடிக்க வில்லை.

ஆபத்து காலங்களில் காற்றின் மூலமாகவே விரவிச் செல்லும் அணு எக்ஸ்போசஸ்லிருந்து பிலுபிலுத்து அடைத்துக் கொண்டிருக்கும் மக்களை எந்த காற்று புகா வீடுகளில் அடைந்திருக்க சொல்லுவீர்கள்?

ஷாஜஹான் said...

புகைப்படப் பதிவுக்குப் பாராட்டுகள். நேரமும் வாய்ப்பும் வாய்த்தது மட்டுமல்ல, சின்னஞ்சிறு சிலந்தியே வரக்கூடிய சிக்கலை உணர்ந்து உடனடியாக இலையை அகற்றியதை கூடங்குளத்துடன் ஒப்பிட்ட சிந்தனைக்கு பாராட்டுகள்.
கல்நெஞ்சருக்கு ஒரு தகவல் - ஜப்பான் 2030க்குள் தன் உலைகள் அனைத்தையும் மூடிவிட முடிவு செய்த செய்தி வந்து ஒருவாரம் ஆகிறது.

Anonymous said...

//கல்நெஞ்சம் said...
ஜப்பான் தனது அணு உலைகளை திரும்ப இயக்கத் தெடங்கிவிட்டது.//

அணுவுலை ஆதரவாளர்களே..

இதையும் சேர்த்துக்கொள்ளுங்க ...

ஜப்பான் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள அ​னைத்து அணுஉ​லைக​ளையும் மூடிவிட​வேண்டும் என புகுசிமாவில் நடந்த ​கோரவிபத்திற்கு பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ​கொள்​கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று ​வெளியிடப்பட்ட ​கொள்​கை ஆவணத்தில் “நடந்த ​மோசமான விபத்தின் எதார்த்தத்திலிருந்தும், அவ்விபத்திலிருந்து கற்றுக் ​கொண்ட பாடத்தின் அடிப்ப​டையிலும் ​தேசத்தின் ஆற்றல் மூ​லோபாயத்​தை அதன் ஆரம்பத்திலிருந்து மறுபரிசீல​னை ​செய்ய ​வேண்டியிருக்கிறது”. “இப்புதிய ​மூ​லோபாயத்தின் ஒரு முக்கியமான கருத்து என்பது அணுசக்தி​யை சாராத சமூகத்​தை அ​டைவ​தே” இந்த முடிவு கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள மக்களிடம் நடத்திய கலந்தா​​லோச​னைகள் மற்றும் வரலாறு காணாத அணுஉ​லைக்​கெதிரான ​போராட்டங்களுக்கு பிற​கே உருவாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களின் ​செய்திப்படி அ​மைச்சர​வை ஏற்கன​வே இந்த பரிந்து​ரைக​ளை ஏற்றுக் ​கொண்டுவிட்டது, மு​றைப்படியான அறிவிப்புகள் ​வெகுவி​ரைவில் ​வெளியிடப்படும்.

Unknown said...

நல்ல பதிவு!

வவ்வால் said...

கூடங்குளம் அணு உலை அரசியல் பற்றி ஒரு மாற்றுப்பார்வை.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: KKNP-கூடங்குளம் அணு உலை அரசியல்.

ஜோதிஜி said...

டீச்சருக்கு குழந்தைக்கு உனக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள் ராசா.

Related Posts with Thumbnails