Sunday, July 10, 2011

மாலை நேர ஒளிக் கோலங்கள்:Twilight Photography

அன்னார்ந்து பார்க்கும் திராணியற்ற ஒரு செக்குமாட்டு ஓட்டத்தில் பார்த்தே ஆகவேண்டுமென அதட்டலாக தினமும் ஒரு கோலமாக மாலை வேளைகளில் வானம் போட்டுக் காண்பித்த ஆயில் பெயிண்டிங்களை எனது கேமராக் கண்களின் வழியாக பார்த்து, உங்களின் பார்வைக்கும் சிலவற்றை வைத்துச் செல்கிறேன் ...

பக்கத்தில ஒரு சர்வதேச குதிரைகள் விளையாட்டு மைதானம் (International Horse Park) ஒண்ணு இருக்கு, அங்கே வருடந்தோறும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குதிரைகளுடன் வந்து மக்கள் போட்டியில் கலந்துக்குவாங்க. சரி, அந்தப் பக்கம் பொயிட்டு வரலாமின்னு ஒரு மாலை வேளை பயணிப்பு செய்த பொழுது இப்படியாக சூரியனார் கவிழ்ந்து சாலையின் மறு பக்கம் ஓடி ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது...



சில தினங்களுக்குப் பிறகு இப்படியாக மழை மேகம் திரண்டு ‘இடியுடன் கூடிய, மழை பெய்தது...’ இது எனது வீட்டின் ஒரு பாகக் கூரையை உள்ளடக்கியவாரு...



மேகக் கூட்டத்தின மறுகோடியை பார்க்க எத்தனித்த பொழுது - கூடுதல் ட்ராமாவிற்கு கேமராவின் ’மோடை’ கொஞ்சம் மாற்றி...



கீழே சுருட்டின புகைப்படங்கள் நேற்று மாலை கிடைத்தது. வானத்தை பார்த்தவாறு நானும், எனது மூன்று வயது பெண்ணும் குறுக்கும் நெடுக்குமாக பறந்து திரியும் பறவைகளை எண்ணிக்கொண்டு படுத்துக் கிடந்த பொழுது எழுந்து ஓட வைக்கும் வாக்கில் வானம் திடீரென்று இப்படியாக பவுடரை அடித்துக் கொண்டு வந்து நின்றது.

#1



#2



#3



#4



#5



இந்த இரண்டு மாலை நேரத்து சூரிய ஒளியல் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு அருமையான மாலை நேர மொபட் பயணத்தின் போது காணக் கிடைத்தது... சீதாம்பாள்புரம் என்ற ஊருக்கு பக்கத்திலே...

#1

Seethambaalpuram_Sunset

#2



இன்னொரு மொபட் பயணத்தின் பொழுது கோவை ஈஷா மையத்திற்கு செல்லும் வழியில் இப்படியாக சூரியன் படுத்திக் கொண்டிருந்தது...



இதனை தனிமையின் ஏகாந்தம் என்று அழகியலோடு தொடர்பு படுத்தி பார்ப்பதா... அல்லது அவரின் கண்களில் காணப்படும் பசியினை உற்று நோக்கி தரையில் கால் ஊன்றி நிதர்சனத்தை பார்க்க கற்றுக்கொள்வதா?

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வானம் எனக்கொரு போதிமரம் ?
:)
நல்லா இருக்கு படங்கள்.

http://rajavani.blogspot.com/ said...

ஆகா...தெகா..அசத்திட்டீங்க...

கையேடு said...

//இதனை தனிமையின் ஏகாந்தம் என்று அழகியலோடு தொடர்பு படுத்தி பார்ப்பதா... அல்லது அவரின் கண்களில் காணப்படும் பசியினை உற்று நோக்கி தரையில் கால் ஊன்றி நிதர்சனத்தை பார்க்க கற்றுக்கொள்வதா//

.. :)

i think that depends on how full the viewer's stomach is.. :)

btw nice clicks..

ராஜ நடராஜன் said...

இயற்கை மாதிரி ஒரு வர்ணப்பூச்சாளன் யாருமே கிடையாது.

இயற்கை நேசி பேருக்கு ஏற்றமாதிரிதான் படங்களும் பகிர்கிறீர்கள்.நன்றி.

மங்கை said...

enakku second thaan romba pidichu irukku..:)

ராமலக்ஷ்மி said...

வானின் வர்ண ஜாலங்கள். அத்தனை படங்களும் அருமை. சூரியனார் பந்தாக அசத்தியிருக்கிறார்:)!

Thekkikattan|தெகா said...

thanks all... :)

_________________________

kaiyedu:

//i think that depends on how full the viewer's stomach is.. :)//

how true that statement is... it is depending on ones' stomach filled state :( - through our eyes we see the world which is directly proportional to our physical well being of our own!

ஜோதிஜி said...

என்னோட சொந்த ஊருக்கு போயிட்டு வந்த மாதிரியே இருக்குது,

வாழ்க் வளர்க் இயற்கையின் காதலன்.

Thekkikattan|தெகா said...

Nice!!! I think, they look better than real :)/

hi CorText, how are you? I've not done anything with the photographs :)))

Related Posts with Thumbnails