Friday, April 15, 2011

பரிணாம விதி நம் கையில்: Bio-engineering

தெக்கியில் வெளியான துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகளுக்கு நம்ம அனலிஸ்ட் ஒரு காணொளி இணைப்பை கொடுத்து ‘பயங்கரம்’ அப்படின்னு சொல்லியிருந்தார். சரின்னு நானும் உடனே பார்க்க ஆரம்பித்தேன். சில விசயங்கள் நம்ப முடியாத அளவிற்கு முன்னேறி எதனையும் எப்படியும் செய்து கொள்ளலாம் அது நம் கண்களுக்கும், வயிற்றிற்கும் மேலோட்டமான கொண்டாட்டத்தை தருவித்து தருகிறது என்றால் என்ற கொள்கையுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பதாக பட்டது எனக்கு.

என்னுடைய பழைய பதிவொன்றில் இப்படியாக இந்த உயிரிய-தொழில் நுட்பத்தின் கட்டுபாடற்ற மனித கற்பனை எங்கே கொண்டு போயி நிறுத்தலாம் நம்மை என்று விளையாட்டாக கூறி வைத்தேன். ஆனால், அதனை இந்த காணொளி ஆமாம் ரொம்ப பக்கத்திலே வந்திட்டோம்னு சொல்ல வருது.

...Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக...


31 comments:

வானம்பாடிகள் said...

Scary in a way:(

Mangai said...

mix and match?..:(

மங்கை said...

ட்ரெயின் ல ஒருதடவை ஒரு பேராசிரியார் சொன்னது நியாபகம் வருது Why take risks when Nature has already done a better job?

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

The Analyst said...

எம்மால் செய்ய முடியும் என்பதற்காக ஒரு கட்டுப்பாடுகளுமின்றி எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. இச்செயல்களால் வரக் கூடிய விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலே இவற்றைச் செய்து கொண்டிருக்கின்றனர். செய்ய முன்பே சிந்திப்பதன் அவசியத்தை உணரத்தவறுகின்றனர். இந்த வாரம் உலக ஆய்வுகூட விலங்குகளின் உரிமைகள் வாரமாம். எமது பல்கலைக்கழகத்தில் வழமையை விட அதிகளவு security. Just in case யாராவது protesters இன் targets ஆக இருந்தாலும் என்று. Europe, America அளவு இங்கு பெரிய பிரச்சனை அநேகமாக வந்ததில்லை.

I am not justifying the acts of these protesters, but இந்தக்காணொளியில் குறிப்பிட்ட மாதிரி விலங்குகளை ஒரு ethics உம் தேவையுமின்றி misuse பண்ணின் நானும் கூட பரிசோதனைகளுக்கு விலங்குகளைப் பயன் படுத்துவதை எதிர்க்கவே செய்வேன்.

Thekkikattan|தெகா said...

எம்மால் செய்ய முடியும் என்பதற்காக ஒரு கட்டுப்பாடுகளுமின்றி எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. //

ஆமாம், அனலிஸ்ட். நீங்கள் கூறியவுடன் இங்கு உங்களோடு ஓர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. நான் வனங்களில் நேரடியாக குரங்குகள்/காட்டெருமை/யானை போன்றவைகளின் தினப்படி செய்கைகளை கவணித்து டேட்டா எடுத்ததுண்டு. அப்பொழுது அவைகளுடன் செலவழிக்கும் நேரம் வெகு அலாதியானது. அந்த பின்னணியில் வந்த என்னை திடீரெண்டு இங்குள்ள ஒரு ஆய்வுக் கூடத்தில் போனோபோஸ்களுடன் வேலை செய்யும் சூழலில் மாட்டினேன்.

சுமாருக்கு இரண்டு வயதிலிருந்து 35 வயதுடைய போனோபோஸ்கள் அங்கிருந்தன. முதலில் நான் அங்கு நுழைந்தவுடன் என்னை வருத்தியது, அவைகளின் கண்களில் தேக்கி வைத்திருந்த சோகமும், விரக்தியும்தான்.

அப்படியே மனிதனின் உணர்வுகளை பிரதிபலிக்கும். காலையில் நுழைந்தவுடன் நம்மை பார்த்து ‘ஏண்டா, ஏண்டா...’ என்று வினவுவது போன்ற தோற்றத்தையும் உருவாக்கும். அவைகள் சிறு குழந்தைகளாக இருந்ததிலிருந்து அங்கயே வளர்வதால், அவைகளுடன் நீண்ட நாட்களாக பழகுபவர்களின் ஆளுமைக்குள்ளும் இருந்ததால் பல விதமான விபத்துக்கள் நடந்துள்ளன. எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தது.

அந்த ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் I didn't last. ஏதோ ஒரு சித்ரவதை கூடத்தில் காலம் தள்ளிய நினைவு - மனதிற்கு பிடிக்காதா ஒரு ஜெயிலரைப் போல...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் சும்மா ஒரு குட்டி பிக்ஷன் எழுத ஆரம்பித்தேன் இதை வைத்து... half done.. நேரமிருந்தால் முடிச்சுப் போடுறேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அப்படியே மனிதனின் உணர்வுகளை பிரதிபலிக்கும். காலையில் நுழைந்தவுடன் நம்மை பார்த்து ‘ஏண்டா, ஏண்டா...’ என்று வினவுவது போன்ற தோற்றத்தையும் உருவாக்கும். அவைகள் சிறு குழந்தைகளாக இருந்ததிலிருந்து அங்கயே வளர்வதால், அவைகளுடன் நீண்ட நாட்களாக பழகுபவர்களின் ஆளுமைக்குள்ளும் இருந்ததால் பல விதமான விபத்துக்கள் நடந்துள்ளன. எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தது.//

mm.. i get to remember the guy in Erich Segal's novel who would release the guinea pigs or rabits from his lab in the night..

Thekkikattan|தெகா said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் சும்மா ஒரு குட்டி பிக்ஷன் எழுத ஆரம்பித்தேன் இதை வைத்து... half done.. நேரமிருந்தால் முடிச்சுப் போடுறேன்..//

ஓ! மண்டை அந்தளவிற்கு ஆகிப் போச்சா... நடத்துங்க, நடத்துங்க! சீக்கிரம் ஆகட்டும் :)

ஜோதிஜி said...

இந்த பேச்சை முழுமையாக கேட்க வேண்டும். மீண்டும் வருகிறேன்.

Rathi said...

இயற்கையை மீறி எதையாவது செய்து, அது கடைசியில் எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ!!

CorTexT said...

"In the future... a new generation of artists will be writing genomes as fluently as Blake and Byron wrote verses" -- என்று Freeman Dyson கவிதை போல் சொன்னதை பலர் பயத்தோடு பார்க்கின்றனர். புதியதை பார்த்து பயப்படுவது மனித/விலங்கு இயல்பு. பயம் என்ற உணர்ச்சி முக்கியமானதென்றாலும், அதை கொண்டு அறிபூர்வமான முடிவுக்கு வரமுடியாது. ஆதிவாசி நெருப்பை உருவாக்க கற்றுகொண்ட போது கூட இப்படிதான் பயந்திருப்பான்; இயற்கையை நாம் நம் கையில் எடுத்து கொள்வதா? இயற்கையை மீறி நாமாக நெருப்பை உருவாக்குவதா?! புகைவண்டியை முதலில் உருவாக்கிய போது, ஐரோப்பாவிலுள்ள கிருத்துவ பாதரிமார்கள், மனிதன் இவ்வளவு வேகமாக செல்லக்கூடிய வாகனத்தை உருவாக்குவான் என கடவுள் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று அதை எதிர்த்தது ஞாபகத்திற்கு வருகின்றது.

//Why take risks when Nature has already done a better job?//
இயற்கையிலுள்ள அழிவுகளை...கொடுமைகளை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் சொல்வது இது. அதில் அவர்கள் பழகி போய்விட்டார்கள். பூமியில் தோன்றிய 99.9% உயிரனங்கள் இன்று இல்லை. அதில் தப்பிய ஒரு சிலவற்றை நாம் பரிணாமம் என்கின்றோம். மரபு-பிழைகளுடன் பிறக்கும் குழந்தைகளை பார்த்தால் நீங்கள் இப்படி சொல்லமாட்டீர்கள் (Google it). போலியோ, காலரா, என கோடிக்கணக்கான கொள்ளை நோய்களை உணர்ந்தால் நீங்கள் இப்படி சொல்லமாட்டீர்கள். பூமியில் நிகழ்ந்துள்ள, நிகழும் உயிரன-பேரழிவுகளை (Mass extinctions) பற்றி தெரிந்தால் நீங்கள் இப்படி சொல்லமாட்டீர்கள்.

// இயற்கையை மீறி எதையாவது செய்து, அது கடைசியில் எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ!!//
இயற்கையை மீறி நாம் ஒன்றும் செய்ய முடியாது. இயற்கை அறிந்து கொண்டு, அதை பயன்படுத்தி, இயற்கையில் நிகழக்கூடிய, ஆனால் நிகழாத சிலவற்றை செய்கின்றோம். இயற்கையிலே உருவாகாத வேதிமூலக்கூறுகளை உருவாக்குவது போல். ஆனால் அவை இயற்கையில் உள்ளவைகளை கொண்டுதான்; இயற்கை விதிகளுக்கு உட்பட்டுத்தான்.

இதிலுள்ள பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்லவில்லை. அதிலுள்ள கோடிக்கணக்கான முன்னேற்றங்களையும், நன்மைகளையும் சீர்தூக்கி பார்க்க விழைகின்றேன். வறுமையில் வாழும் உயிர்கள், மனித உயிருக்கு மதிப்பின்மை, இயற்கை சீரழிவுகள், காடுகள் அழிதல், பிற உயிர்கள் அழிதல் – இவற்றுகெல்லாம் முக்கியமான காரணம், இதற்கு முந்தைய பதிவில் ஒரு டாக்டர் சொன்னது தான் – மக்கள் தொகை.

எப்படியோ, ஒருபக்கம் இதையெல்லாம் தாண்டி Trans-humanism & Singularity பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மறுபக்கம், நாம் இன்னும் திருப்பதி ஏழுமலையானின் ஆசிர்வாதத்தையும் நிறுத்தவில்லை, இப்படியே பெத்து போடுவதையும் நிறுத்தவில்லை.
http://en.wikipedia.org/wiki/Transhumanism
http://en.wikipedia.org/wiki/Technological_singularity
http://singinst.org/overview/whatisthesingularity/
http://www.time.com/time/health/article/0,8599,2048138,00.html
http://edition.cnn.com/2008/TECH/07/15/bio.tech/index.html

No matter how alarming [truth] turns out be we should never turn away from what nature has to shows us,... we should never pretend we don't see it -- Janna Levin

saarvaakan said...

நல்ல பதிவு,
பரிணாமம் பற்றி கற்றுக் கொண்டு இருப்பதால் ,சில விஷயம் தெரிந்து கொண்டேன் என்று மட்டும் கூற முடியும்.கணிதம்,கணிணி என்று உயிரியல் மறந்து பல நட்களான படியால் இப்படி.
//இயற்கையில் நிகழக்கூடிய, ஆனால் நிகழாத சிலவற்றை செய்கின்றோம். //
நிகழ வேண்டிய,நன்மை பயக்க கூடியதாக இருந்தால் நல்லதுதான்.

Thekkikattan|தெகா said...

கார்டெக்ஸ்ட் நண்பா,

உங்களின் மறுமொழிகள் மேலும் மேலும் உயிர்ன பரிணாமச் சுழற்சியைப் பற்றி பேச நிறைய இடமளிக்கிறது. அதற்கு ஒரு சிறப்பு நன்றி. இது போன்ற மாற்று பார்வைகளை பெறுவதற்கெனும் இது போன்ற பதிவுகள் உதவுகின்றன என்ற வகையில் ‘கூல்’லாக எடுத்து கொள்வோம் :).

//பூமியில் நிகழ்ந்துள்ள, நிகழும் உயிரன-பேரழிவுகளை (Mass extinctions) பற்றி தெரிந்தால் நீங்கள் இப்படி சொல்லமாட்டீர்கள். //

அந்த பத்தியில் நீங்கள் அட்டவணை படுத்திய அனைத்திற்கும் என்னால் கொடுக்க முடிந்த ஒற்றை வரி விளக்கம்... இயற்கையின் நியதிப் படி ஏற்றுக் கொள்ளக் கூடிய பரிணாமச் சுழற்சிகளே அவை. நம்மை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வாக்கில் அமைந்த - தடுப்பூசிகளின் வரவோ, ஓரளவிற்கான மரபணு படியெடுப்பின் போது நிகழக் கூடிய பிழைகளை திருத்தி பிறந்த குழந்தைகள் நலமுடன் வாழ வழி வகுத்துக் கொள்ளும் வகையில் அமைந்த ஆராய்ச்சிகளயோ நாம் குறை கூற வில்லை.

அதற்கு மாறாக விலங்கியல் பண்புகளுடன் இறு வேறு தனிப்பட்ட விலங்கினங்களாக பரிணமித்து அதன் அதன் வழியில் சூழலமைவில் (ecological niche) இயங்கி வரும் விலங்குகளை செயற்கையாக சிருஷ்டித்து அதனை அறிமுகப் படுத்துவதில் என்ன முன்னேற்றம் பரிணாம உயிரியலில் சாதித்து காட்டி விடுவோமென்பதுதான் என்னுடைய கேள்வி (உ.தா- புலியையும் ஒரு சிங்கத்தையும் இணைத்து லிகர் உருவாக்குவதில் பார்ப்பதற்கு கூலாக இருந்தாலும், அவைகளை வனத்தினுள் அறிமுகப் படுத்துவதால் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் நீண்ட நெடிய பாதையில் என்று அறிவோமா?).

இந்த பூமியின் இயல்பு இயங்குதலின் அடிப்படையில் பல்லாயிரக்கனக்கான மில்லியன் வருடங்களை எடுத்துக் கொண்டு தானே நம்மை செதுக்கி கொண்டது? ஏன் அது போன்றதொரு இடைவெளியை நாம் பரிணாமச் சூழலுக்கு கொடுக்காமல் நம்மையே சிருஷ்டிப்பவராக ஆக்கிக் கொள்ள விழைகிறோம்?

இதனில் நம் அறிவுசார் எல்லையை பிரகடனப்படுத்துவதிலிருந்து வேறு ஏதாவது கிடைத்து விடுகிறதா? இது போன்ற ஆராய்சிகளினின்று விலகி interstellar travel செய்வதை சாத்தியமாக்குவதில் எனது கவனத்தை செலுத்துவேன் :) ...

CorTexT said...

//saarvaakan said...
நிகழ வேண்டிய,நன்மை பயக்க கூடியதாக இருந்தால் நல்லதுதான்.//

நிகழ வேண்டிய - அது தெரியவில்லை. நன்மை பயக்க - கண்டிப்பாக. பொதுவாக அதை நோக்கித்தான் முன்னேற்றம் செல்கின்றது. தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவோர் இல்லாமல் இல்லை. அதற்கு தான் கட்டுபாடுகளை விதிக்கின்றோம். சில நேரங்களில், நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தவறாக போவதும் உண்டு (விபத்து போல்). அவற்றை தொடர்ந்து கவனித்து தேவையான மாறுதல் செய்ய வேண்டும்.

மனிதன் நெருப்பை உருவாக்க கற்று கொண்டது ஒரு நல்ல உதாரணம். அதனால் அழிந்த குடும்பங்கள், ஊர்கள், நாடுகள் (அரச காலத்தில்), கலாச்சாரங்கள் பல. ஆனாலும் நெருப்பு இன்று நம் வாழ்வில் ஊறி போன ஒன்று. அதை எப்படி கட்டுபடுத்த வேண்டும், அதற்கு தகுந்த வீடுகள், தீ அனைப்பு நிலையங்கள் என மனிதன் அவற்றை கற்று கொள்ள வேண்டும்.

பலவித புதிய விசயங்கள், நாளை எப்படி பட்ட சூழலை உருவாக்கும் என சொல்ல முடியாது. அண்ணா சாலையில் போக்குவரத்துத் தடை என்றோ, நீயூயார்கில் நிறுத்த இடமில்லை என்றோ காரை முதன்முதலில் உருவாக்கியவன் யோசிக்க முடியுமா? ஒரு சமூகமாக நாம் தான் அதற்கு ஏற்ற வழிமுறைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

CorTexT said...

/Thekkikattan|தெகா
கார்டெக்ஸ்ட் நண்பா,
அதற்கு ஒரு சிறப்பு நன்றி.//
உங்கள் நட்புக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவே பெரிய விசயம். ஆனால், உங்கள் மூலம் மேலும் பலரது நட்பு! மிக்க நன்றி!

//இறு வேறு தனிப்பட்ட விலங்கினங்களாக பரிணமித்து அதன் அதன் வழியில் சூழலமைவில் (ecological niche) இயங்கி வரும் விலங்குகளை செயற்கையாக சிருஷ்டித்து அதனை அறிமுகப் படுத்துவதில்//
இதெல்லாம் ஆராய்ச்சிக்காக உருவான சில. அவ்வளவு தான். நாட்டிலுள்ள தாவர (விவசாயம்), விலங்கு வகைகள் மனிதன் தேவைக்கு ஏற்றவாறு மாற்ற படலாம். ஆனாலும் மாமிசத்தை நேரடியாக உருவாக்கும் (எதற்கு விலங்குகளை தொல்லை படுத்தி கொண்டு; மேலும் பல்வேறு நோய்களை கட்டுபடுத்த முடியும்) முறைகள் இப்பொழுதே உருவாகி கொண்டுள்ளன. ஒருவேளை நாளை மனிதன் சில வித்தியாசமான வளர்ப்பு விலங்குகளை, மீன்களை, தாவரங்களை வைத்திருக்கலாம் (இன்றே அவை ஓரளவு உண்டு). எப்படியாகிலும், யாரும் காட்டிலுள்ள விலங்குகளை, காடுகளை மாற்றி அமைப்பதற்காக இதை செய்யவில்லை. அதில் யாருக்கு என்ன லாபம்? (மக்கள் தொகையை நாம் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இயற்கை வளமும் காக்கப்படும்; மனித வளமும் காக்கப்படும்)

//இந்த பூமியின் இயல்பு இயங்குதலின் அடிப்படையில் பல்லாயிரக்கனக்கான மில்லியன் வருடங்களை எடுத்துக் கொண்டு தானே நம்மை செதுக்கி கொண்டது? ஏன் அது போன்றதொரு இடைவெளியை நாம் பரிணாமச் சூழலுக்கு கொடுக்காமல் நம்மையே சிருஷ்டிப்பவராக ஆக்கிக் கொள்ள விழைகிறோம்?//
மனிதன் எப்பொழுது கருவிகளை உருவாக்கினானோ அப்பொழுதே அவன் சிருஷ்டிக்க ஆரம்பித்துவிட்டான். இயற்கையாக 99.9% உயிர்களை நாசபடுத்தி 0.1% வளர்ச்சியை மில்லியன் வருடங்களாக நிகழ்வதை, நாம் இயற்கை கொடுத்த அறிவை கொண்டு அதைவிட சற்றே நன்றாக செய்வதில் என்ன தவறு. பல்வேறு மரபு நோய்கள் மற்றும் குறைகளை கழைந்தெரிவதில் என்ன தவறு? பல்வேறு திறன்களை மேன்படுத்துவதில் என்ன தவறு? கொடுரமான சைக்கோ, கொடுமையான மனச்சோர்வு மரபணுக்களை கழைந்தெரிவதில் என்ன தவறு? Chronic depression and pain உள்ளவர்கள் படும் அவலங்கள் மிகக் கொடுமையானது (நம்மூரில் நாளை சாப்பாட்டே பிரச்சனை என்பதால் இவர்களை நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை)

நம்முடைய இன்றைய சூழல், நம்முடைய மரபணுக்களோடு ஒத்து இல்லை (உடல் அளவில், மன அளவில்). ஏனெனில் இயற்கையை விட வேகமாக நாம் நம் சூழலை மாற்றிவிட்டோம். உதாரணமாக, இவ்வளவு அதிகமான சக்கரை உள்ள சூழலில் நம் உடல் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. இயற்கையாக அது சரியாக பல்லாயிரம் வருடமாகும். அதற்கு பதில் இன்றே தேவையான மரபணு மாற்றம் செய்வதில் என்ன தவறு? விலங்குகள் திடீரென கண்டம் விட்டு கண்டம் சென்று வாழ்வதில்லை. ஒரு இடத்தில் வளர்ச்சியடைந்த மனிதன் இன்று பல்வேறு இடங்களுக்கு செல்கின்றான்; வாழ்கின்றான். இதற்கெல்லாம், இயற்கையாக நிகழும் தீர்வு அவ்வளவு எளிதாக நமக்கு கிடைக்க போவதில்லை.

எப்பொழுதாவது தோன்றும் ஒரு சில (பறவை flu) வைரஸ்கள் மனித குலத்தையே அழித்து விட முடியும். அதற்காக WHO செய்யும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாலும், மேலும் பலவகையான முன்னேற்றங்கள் தேவை. Asteroid எனப்படும் பெரிய விண்கற்கள் தோராயமாக 500,000 வருடத்திற்கு ஒருமுறை (சூரியன் பால்வழி மண்டலத்தில் மேல்-கீழாக செல்லும் சுழற்றி காலம்) பூமியை தாக்கி பேரழிவை உண்டாக்குகின்றன. அப்பொழுது மற்ற விலங்குகளுடன் மனித அழிவும் நிச்சயம் (நாம் இப்படியே இருந்தால்). உண்மையில் இந்த உலகம் (பூமி உட்பட) உயிர்களுக்கு மிகக் கொடுமையான இடம். நாம் சற்றே அமைதியான ஒரு சின்ன கால இடைவெளியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம். இயற்கையை மீறி நாம் பெரிதாக செய்வதற்கில்லை. ஆனாலும், அவ்வளவு எளிதாக நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ - என்று மனிதன் சொல்ல வேண்டாமா? :-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

just a funny imagination.. abt genetic designing.. anyone is welcome to point out its logical mistakes :) as it goes, if it can decrease the natural errors of creation, it is a very good thing..

http://karuthoor.blogspot.com/

i have not listened to the video yet.. let me do that soon..

The Analyst said...

Genetic engineering ஜ நான் முற்றாக எதிர்க்கவில்லை. ஆனால் முக்கியமான ethical questions ஜக் கேட்பதை நிறுத்தக்கூடாது என்பேன். அதையும் விட ஒன்று செய்வதற்கு முதல் இக்கேள்விகள் கேட்கப்படவேண்டும், செய்ய‌த் தொட‌ங்கிய‌ பின் அல்ல‌.

The same is true for using animals for research. விலங்குகளைப் பயன்படுத்துவது துரதிஸ்டவசமாக அத்தியாவசியமானது. But it has to be strictly regulated (it normally is in academic research).

You need to engage the ethical question all along the way.

விவ‌சாய‌த்தில் genetic engineering உம் ப‌ல‌ வ‌ழிக‌ளில் ஒரு வ‌ழியாக‌ப் பார்க்க‌ப்ப‌ட்டு த‌னிய‌ இலாப‌த்தை இல‌ட்சிய‌மாக‌க் கொண்டிருக்காத‌ நிறுவ‌ன‌ங்க‌ளால் ஆய்வுக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வேண்டும்.

How I fell in love with a fish.

Can organic farming feed the world?

Saving seeds to protect our food supplies

One seed at a time, protecting the future of food

really sorry for TED overload. :)

The Analyst said...
This comment has been removed by the author.
The Analyst said...

"அந்த ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் I didn't last. ஏதோ ஒரு சித்ரவதை கூடத்தில் காலம் தள்ளிய நினைவு - மனதிற்கு பிடிக்காதா ஒரு ஜெயிலரைப் போல..."

I can imagine how it must have been, especially when the animals you dealt with were almost humans.

இதற்கு முதல் கூறிய எனது கருத்தில் சொன்னது போல் விலங்குகளில் ஆராய்ச்சி செய்வதன் முக்கியத்துவம் நன்றாக அறிவேன்.
இதுவரைக்கும் எனது ஆராய்ச்சிகளுக்கு நேரடியாக விலங்குகளைப் பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கவில்லை. எதிர்காலத்தில் தேவை வந்து நானே செய்ய வேண்டுமெனில் எப்படி உணருவேனென இப்போ தெரியவில்லை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஓ.. ஆராய்ச்சிகள் எல்லாம் இன்டெர் ஸ்பீசிஸ் தாண்டி இன்டெர் ஜீனஸ் அளவுல வந்தாச்சு போல இருக்கே.. :))

தெகா, நீங்க டிபிக்கல் கன்சர்வேட்டிவ் பயாலஜிஸ்ட்.. சமீபத்துல, ரெண்டு வகையான கரடிகள் இடையே இயற்கையாக நடந்த கலப்பு குறித்தே சில இகாலஜிஸ்ட்ஸ் கவலை தெரிவித்து இருந்தாங்க.. அவங்க சொல்ல வந்தது, இப்படி நடப்பதன் மூலம், இதுவரை இயற்கையாக செலெக்ட் ஆகி வந்த சில சிறப்புத்தன்மைகள் மற்றும் தனித்தன்மைகள் இதன் மூலம் குறைந்துவிடும், உதாரணத்துக்கு ஒரு கரடி நல்ல வேகமாக ஓடக் கூடிய இனமென்றால், அது இன்னொரு குறைந்த வேகக் கரடியுடன் கலப்பதால் உருவாகும் புதிய ஹைப்ரிட் கரடி யின் வேகம் குறைவாகவே இருக்கும்.. உங்கள் கவலை புரிகிறது..

இன்னொருபுறம், இப்படியான ஆராய்ச்சிகளால், கார்ஸ் சொன்னது போல இந்த congenital disorders and diseases எல்லாம் குறையலாம் என்றால் வரவேற்கிறேன், அதை விடுத்துவிட்டு உபயோகமற்ற முறையில் பரீட்சித்துப் பார்ப்பது என்றால் எதிர்கிறேன்.. எது நன்மை தரும் எது தீமை தரும்? காலமே சொல்லும்.. எக்ஸ் ரே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுதில் மக்கள் கண்டமேனிக்கு அதை உபயோகித்தார்கள், உதாரணத்துக்கு, ஷூ கடையில் சரியான அளவு ஷூ தேர்ந்தெடுக்க பாதத்துக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்.. பின்னர் இதனால் தோல் நோய்களும் புத்து நோய்களும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது என்பதை அறிந்ததும் (புத்து நோயெல்லாம் உடனடி விளைவல்ல, வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும்) இன்று மோர் ஜுடிஷியஸ் ஆக உபயோகிக்கப் படுத்தப்படுகிறது.. அது போல இதுவும் முறைப்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்..

இந்த பூச்சிகளின் electrodes பாத்ததும் இன்னொன்றும் நினைவுக்கு வந்தது, இப்பொழுது சில நரம்பியல் கோளாறுகளுக்காக மனித மூளையில் எலக்ற்றோட்ஸ் வைப்பதும் நடக்கிறது..

ஆனால் இதற்கான முதற்கட்ட ஆராய்சிகள் எல்லாமே மனிதனைத் தவிர்த்த பிற உயிரிகளை வைத்து நடத்தப்படுவதால் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.. எதிக்ஸ் பத்தி பேசுகிறோம், அம் மிருகங்களின் அனுமதியின்றி அவற்றின் மீது நடத்தப்படுபவை எல்லாமே unethical தான், ஆனால் நம்மால் முடிந்தளவுக்கு எத்திகளாக இருக்க வேண்டியது தான் :((


இது போக இன்னொரு கேள்வியும் எழாமல் இல்லை, what if these things go out of man's control? பல சயன்ஸ் பிக்ஷன் படங்களில் பாத்தது போல ஏதாவது தப்பித்து வந்துவிட்டால்? சமீபத்தில் மிஸ்ட் என்று ஒரு படம், பல சாதாரண பூச்சிகள் அன்றாட வாழ்வில் பார்ப்பவை, எல்லாம் பெருசு பெருசாக.. predator களாக.. நல்லாவே பயமுறுத்தியது :)

இன்று நம் உணவுக்காக மிருகங்களை வளர்ப்பது போன்று அடுத்து மருந்துக்காக உறுப்புகளுக்காக பாகங்களுக்காக மிருகங்களை மனிதர்களை வளர்க்கப் போகிறோம்.. வாழ்க வளமுடன் :))

தவறு said...

பக்கவிளைவுகளை அறிந்தாலே நிறையவிசயங்களை புறம்தள்ளிவிடலாம்.அறிந்துமே நிறையவிசயங்களை உள்அனுமதித்துவிட்டோமே தெகா...

CorTexT said...

குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு கேள்வி. (1) குழந்தைகளை அடித்து முழு கட்டுபாட்டுடன் வளர்ப்பது நல்லதா? அல்லது (2) அவர்களுக்கு தேவையானவற்றை பாசத்துடன் கொடுத்துவிட்டு மற்றதை அவர்கள் விருப்பதற்கு விட்டுவிடுவது நல்லதா? இரண்டு முறைகளிலும் நன்மை தீமைகள் இருந்தாலும், முதல் முறை கேவலமான முடிவுகளை தரும். உண்மையான வளர்ச்சி என்பது கட்டுபாட்டில் வருவதில்லை, சுதந்திரத்தில் வருகின்றது (அதில் சில ரிஸ்க் இருந்தாலும்). மேலும் கட்டுபாட்டு குழந்தைகளின் மனதை பாதித்து விடுகின்றது. மொத்தத்தில் இரண்டாவது முறையோடு, சூழ்நிலைக்கேற்ப சில அவசியமான கட்டுபாடுகளுடன் வளர்த்தல் பொதுவாக நல்ல விளைவுகளை தரலாம் - இதை சீர்படுத்திய இரண்டாவது முறை அல்லது (~2) என வைப்போம். (~2)முறை எந்தவிதத்திலும் முற்றிலும் நேர்த்தியான முறை அல்ல. ஆனால், வாழ்கை என்ற சிக்கலான சமரசத்தில் அது ஒரு நல்ல நடைமுறை தீர்வு. அதிலுள்ள சில குறைகளை மட்டுமே பார்த்து, பலர் அய்யோ, அய்யோ என்று (1)முறைக்கு செல்கின்றனர் - நாளடைவில் அது தரும் கொடுமையான முடிவுகளை உணராமல்.

இதையே பொருளாதாரத்தில் பார்த்தால், கிட்டதட்ட, (1)=Socialism; (2)=Capitalism. கேட்பதற்கு (1) நல்ல முறை போல் தோன்றினாலும், (~2)முறையே நடைமுறையில் வளர்ச்சியை தருகின்றது. நல்லமுறையாக ஒரு தொழிலை ஆரம்பிக்க, நம் நாட்டில் வழியில்லை, ஒழுங்கான கட்டுபாடுகளை உருவாக்குவதில்லை, ஆனால் நிறுவனங்களை மட்டும் திட்ட தவறுவதில்லை. பிறகு எப்படி ஒரு நல்ல பொருளாதார வளர்ச்சி உருவாகும் சூழல் உருவாகும். நாம் நம் ஆற்றலை தவறான இலக்கில் செலுத்திக் கொண்டுள்ளோம்.

(1), (2), (~2) - இவை ஆராய்ச்சிகளுக்கும் பொருந்தும்; பொருளாதார வளர்ச்சியில் அது ஒரு பகுதி தானே. ஃபாரடே காந்தங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியை (குழந்தைகள் விளையாடு போல்) பார்த்து, நன்றாக உள்ளது, ஆனால் இதன் பயன் என்ன, என மக்கள் கிண்டலடித்தனர். நாளை அது நவீன உலகத்தின் ஒளிவிளக்காக இருக்கும் என்று அவருக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது. இன்று நடக்கும் பல ஆராய்ச்சிகளும் அப்படியே. இன்று வெட்டியாக தோன்றுபவை நாளை நம் ஒளிவிளக்காக இருக்கலாம். எல்லா அறிவும் ஆற்றலே.

Ethics மிகவும் உணர்ச்சி மிகுந்த தற்சார்புடைய ஒரு விசயம். அதை அப்படியே அறிவுபூர்வமாகவோ, வெளிப்படையாகவோ பேசினால் அது சிக்கலில் தான் விழுகின்றது. எந்த உணர்ச்சியும் அற்ற ஒரு செல்லுக்காக (Stem cell), கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ வாய்ப்புள்ள சில ஆராய்ச்சிகளை பலர் தடுத்து கொண்டுள்ளனர்; சரியா, தவறா? இளம்பிள்ளை வாதத்தில் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளை காக்க சில குரங்குகளை கொன்றது நியாயமா? நம் நாட்டில் தினந்தோரும் குழந்தைகள் சாப்பாட்டுக்காக சாகின்றனர்; பிச்சை எடுக்கின்றனர்; வேலையில், விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். எண்ணிக்கையிலோ, அவலங்களிலோ, ஒரு சதவிகிதம் கூட சோதனை கூடங்களில் உள்ள மற்ற உயிர்கள் தள்ளப்படுவதில்லை. நம் நாட்டில் ஊறி, நாறி, மக்கி போன மலை போன்ற பிரச்சனைகளை (மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும்) எல்லாம் விட்டுவிட்டு, இதிலுள்ள சில பிரச்சனைகளை பெரிதாக பார்த்து கொண்டுள்ளோம். அதுதான், மனிதனின் பரிணாம வளர்ச்சி பெற்ற Ethics உணர்ச்சி. நாளை நாம் சுயநினையுள்ள கனிணி-நிரல்களை உருவாக்கலாம்; அதை கொல்வது, ஒரு எலியை கொல்வதை விட கொடுமையானது. ஆனால், மனிதனின் உணர்ச்சி, அவனுக்கு அதை அப்படி உணர்த்த போவதில்லை. ஆனால், அதே கனிணி-நிரலுக்கு கண்ணும் மூக்கும் வைத்து பாருங்கள் - ஒருவேளை உங்கள் உணர்ச்சி வேறுமாதிரியாக இருக்கலாம். அப்படியே அதனுடன் பழகி பாருங்கள், உங்கள் உணர்ச்சி இன்னும் வேறுமாதிரியாக இருக்கலாம். உணர்ச்சி தேவைதான், ஆனால் ஒரு தேர்ந்த சமரச முடிவுக்கு வர, உணர்ச்சி வசப்படாமல் அணுகுவதும் முக்கியம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//எந்த உணர்ச்சியும் அற்ற ஒரு செல்லுக்காக (Stem cell), கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ வாய்ப்புள்ள சில ஆராய்ச்சிகளை பலர் தடுத்து கொண்டுள்ளனர்; சரியா, தவறா?//

இது குறித்து இப்போது தேடிப் பார்த்தேன். நான் படித்தவரைக்கும், இறுதியாக, எம்ப்ரியோனிக் ஸ்டெம் செல் ரிசர்ச்க்கு, nih, தனது funding ஃபெர்டிலிட்டி கிளினிக் களில் மிச்சம் இருக்கும் எம்ப்ரியோக்களை வைத்துச் செய்யப்படுவைக்கு என்று guidelines உருவாக்கி இருக்கிறது. மேலும் clump of cells நிலையில் இருக்கும் அந்தக் கருவில் வாழ்க்கை இன்னும் ஆரம்பித்திருக்காது என்று சிலர் வாதிடுகின்றனர். எனக்கும் அது சரி என்று தான் தோன்றுகிறது.

ஆனால் பிரச்சனையின் மையம் வேறாக இருக்கிறது - அடல்ட் மற்றும் எம்ப்ரியோனிக் ஸ்டெம் செல் ரிசர்ச் - இவை இரண்டுக்கும் இடையே NIH funding பகிர்வு குறித்து என்று.

CorTexT said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்..
இது குறித்து இப்போது தேடிப் பார்த்தேன்.//

தகவலுக்கு நன்றி LB!

CorTexT said...

இது போன்ற கேள்விகளை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுக்குள்ளே முதலில் பதில் அளித்திவிட்டு அடுத்த கேள்விக்கு செல்லவும்.

10 பேர் ஒரு ரயில் தண்டவாள பாலத்தில் சிக்கி உள்ளனர். ரயில் அவர்களை நோக்கி வேகமாக செல்கின்றது. நீங்கள் அருகில் உள்ள ஒரு பட்டனை தட்டினால், ரயில் வேறு தடத்தில் சென்று விடும். ஆனால் அந்த தடத்தில் இருக்கும் ஒரு குண்டு நபர் செத்து விடுவார். நீங்கள் பட்டனை தட்டவில்லை என்றால் 10 பேர் செத்து விடுவார்கள். இந்த இரண்டு வழிகளை தவிர வேறு எதுவும் இல்லாத பட்சத்தில், நீங்கள் என்ன செய்வீர்கள்? [கேள்வி-1]

மேலுள்ள அதே நிலைமை, ஆனால் 10 பேரை காப்பாற்ற, பட்டனை தட்டுவதற்கு பதில் அந்த குண்டு நபரை நீங்கள் மேலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். தள்ளிவிட்டால் அவர் செத்துவிடுவார். இல்லை என்றால் 10 பேர் செத்து விடுவார்கள். இந்த இரண்டு வழிகளை தவிர வேறு எதுவும் இல்லாத பட்சத்தில், நீங்கள் என்ன செய்வீர்கள்? [கேள்வி-2]

[கேள்வி-1] மற்றும் [கேள்வி-2], இரண்டிலும் அதே முடிவு தான். நீங்கள் செயல்படுத்தும் முறை மட்டுமே வேறு. இதுவே 10 பேருக்கு பதில் 2 அல்லது 5 பேர் என்றால் என்ன செய்வீர்கள்? [கேள்வி-3]. அதுவே 100 அல்லது 1000 அல்லது 10,000 பேர் என்றால் என்ன செய்வீர்கள்? [கேள்வி-4] இதுவே அந்த குண்டு நபர் நாட்டு அவசியமான/முக்கியமான ஒருவர் என்றால் என்ன செய்வீர்கள்? [கேள்வி-5] இதுவே அந்த குண்டு நபர் நீங்கள் பெற்ற பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? [கேள்வி-6]

நிதானமாக, நிஜமான நிகழ்வாக யோசித்து பாருங்கள்...எங்கு உங்கள் செய்களையில் மாற்றம் வருகின்றது என்று. உங்கள் எண்ணங்களை பரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

Thekkikattan|தெகா said...

இதுவே அந்த குண்டு நபர் நீங்கள் பெற்ற பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? [கேள்வி-6]//

adap paavi manusha Cortext, ippadi maatti vittuteengaley :D

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹி ஹி.. புள்ளயக் கூட்டிட்டு சைலண்டா அந்த இடத்துல இருந்து ஓடிப் போயிடுங்க தெகா.. கொஞ்ச நாளு குற்ற உணர்ச்சி, அப்புறம் சுயசமாதானம், அப்புறம் சரியாயிடலாம்.. :))

CorTexT said...

எல் போர்ட், அவர் பண்ண போவதை தெகா தலையில கட்டிவிட பார்க்கிறாருன்னு நினைக்கிறேன் :)

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Related Posts with Thumbnails