Sunday, April 03, 2011

திருப்பதி ஏழுமலையானே ராஜபக்சேவிற்கு ஆசீர்வாதம்?!

இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து இனம் புரியாத எரிச்சலும், மானுட நம்பிக்கை இழக்க வைக்கும் எண்ணங்களுமாக என்னுள் எழுந்து போகிறது. நம்முடைய அரசு யாரை எரிச்சல் படுத்தி பார்க்க மேலும், மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி பார்க்கிறது? இந்த புகைப்படத்தினை பார்த்த மாத்திரத்தில் இருந்து என்னுள் எழுந்த கேள்விகளில் சில:

அ) ஆயிரக் கணக்கில் மனித உயிர்களை உயிரோடும், குத்துயிரும், கொலை உயிருமாக இருக்கும் போதே புல்டோசர் கொண்டு நிரவியும், குழியுனுள் போட்டு மூடியும் கொன்ற ஒருவருக்கு எப்படி இன்னமும் மனித மாண்புகள் இருக்கக் கூடுமென்று எந்த கடவுளும் ஆசிர்வதிக்கும்? அதற்கு சாமீ பூஜாரிகளும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் போலவே அங்கீகரித்து ஆசீர்வதிப்பார்கள்? அவருக்கு மென்மேலும் எதனை நிகழ்த்த ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது?

ஆ) ஒருவரை ஏதோ ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது அறியாமலோ கொன்று விட்டால் கூட ஒரு காலத்தில் மனசாட்சி கேக்காமல் தன்னையே ஒப்படைத்து கொள்ளும் மனித மனத்திற்கிடையே, எப்படி ஒருவர் பல்லாரயிக்கணக்கான உயிர்களை கதறக் கதற அழித்தொழித்துவிட்டு இப்படி மண்டைக்குள் எந்த குடைச்சலுமே இல்லாமல் புன்னகைத்து அலைந்து திரிய முடியும்? சரி, சில மனிதர்கள் நம்புவது போலவே ஆவி, பேய், பிசாசு சமாச்சாரங்கள் உண்மையாக இருந்தால் இவர்களை ஏன் போய் பிராண்டப்படாது? அப்போ அதுவும் உண்மையில்லையா??

இது போன்ற பல கேள்விகள். அதனையொட்டியும் சில பின்னூட்டங்களையும், உண்மைத் தமிழன் பதிவினையும் படித்ததிற்கு பின்னாலும் வந்த சிந்தனையையும் சற்றே விரிவாக கீழே வைத்திருக்கிறேன். பொறுமை உள்ளவர்களும், தன்னைத் தானே தரம் பிரித்து பார்த்துக் கொள்ள விரும்புவர்களும், please go on read...

மற்ற விலங்குகளிடமிருந்து நம்மை பிரித்துணர நமக்கு கிடைத்த சிறப்பு பண்புகளிலேயே ஆறாம் அறிவாக கிடைத்த சிந்திக்கும் பண்பே சிறந்தது என்று இங்கே பலர் அறிவோம். இந்த சிந்திக்கும் திறனாலேயே நாம் இன்றைய பரிணாம ஏணியின் உச்சத்தில் ஒரு மானுட இனமாக ஏனைய ஜீவராசிகளை அடக்கி ஒடுக்கி உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கிடைத்த குச்சி ஐசை சுவைத்துக் கொண்டுமிருக்கிறோம்.

இந்த சிந்திக்கும் திறனுக்கு மிகவும் துணையாக இருப்பது நமது ஞாபக சக்தி. இந்த ஞாபக சக்தி தனிமனித வளர்ச்சியினைக் கொண்டு பல குண நலன்களாக தேவையான பொழுது இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வினூடாக பழைய விசயத்தினை வைத்து தைத்து எடுக்கும் முடிவிற்கு முக்கிய காரணியாக செயல்பட்டு நம் முன்னால் நிற்கும் அந்த மனிதன் எது போன்ற எண்ணச் செயல்பாடுகளை கொண்டவன் என்பதனை அறியத் தருவதாக இருக்கிறது.

அந்த தனிமனிதன் தனிப்பட்ட முறையில் குண நலன்களாக பொது நலனை கருத்தில் கொண்டு அடுத்தவர்களுக்கு நிகழும் தன் முயற்சியற்ற அநீதிகளை தனக்கானதாக கருதி எந்த தருணத்திலும் சமரசம் அடைந்து கொள்ளாமல் தக்க தருணத்தில் நீதி பெற்றுத் தரும் ஒரு ’மைட்டோகாண்ட்ரியா’வாக ஒரு சமூகத்தில் இருக்கலாம். மாறாக, சுயநலத்துடனும், வசதியாகவும் தனக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் உண்மை விசயங்களை புறந்தள்ளி இயல்பாகவே அது போன்ற விசயங்களிலிருந்து தன்னை விடுவித்து கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக பார்வையுரும் சுயநல நபராகவே தன்னை, தன் சிந்திக்கும் திறனை பழக்கப்படுத்திக் கொள்பவராக அமைந்து விடுவர்.

இது போன்று ஞாபக சக்தியில் நிறுத்தும் பழைய, கடந்து போன சம்பவங்களில் கசப்பான, உடலுக்கும்/மனதிற்கும் தீய்மை தரும் விடயங்களை மறந்து கடப்பது நமக்கு மிக்க நன்மை பயக்கும். அதே சமயத்தில் உலக ப்ரபஞ்ச ரீதியில் ஒட்டு மொத்தமாக மனித நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து போனதினையொட்டி இன்னொரு இனத்தின் ஊடாக பிறந்தவர் தவறான எண்ணங்களை தனது இனத்திற்கு ஊட்டி வலிமையற்ற ஓரினத்தை தனது சுய லாபங்களுக்காக துடைத் தெரியும் துர்ச் சம்பவத்தை கண்ணுருகிறோம் என்றால் எப்படி அந்த மனிதனை இன்னமும் நம் கூடவே வைத்துக் கொண்டு ஒன்றுமே நிகழாத மனநிலையில் நம்மால் மறந்து வாழ்ந்து விட முடியும்?

மனிதர்களாக அப்படி கடந்து விடுவதும், அது போன்ற மனிதர்களை நம் கூடாக வாழ விடுவதும் நாளை நடந்து முடித்திருப்பதனைக் காட்டிலும் பெரியளவில் எடுத்து நிகழ்த்த முயல மாட்டான் என்று எந்த நிச்சயத்தில் நாம் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியும்? இதற்காக நீ செய்வதனை நிறுத்திக் கொண்டாயா என்ற அதி புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டு மடக்க நேரத்தை இழக்க வேண்டாம்...

சில வருடங்களுக்கு முன்பு மும்பை தாஜ் மற்றும் புகைவண்டி நிலையத்திலும் கண் மூடித்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு இருப்பதாக அதனைத் தொடர்ந்த வருடங்களில் பாகிஸ்தானும் அந்த துப்பாக்கிச் சூட்டிற்கான விசாரணையில் ஒத்துழைக்க செய்யவில்லையென ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ கூட சேர்த்துக் கொள்ளாமல் உலக மேடையில் நம் தேசம் அவர்களை அவமானப் படுத்தி பார்த்தது.

இங்கு சில பேர் சொல்வது போல அதாவது விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானை புறக்கணித்து உலகத்தின் பார்வையை அந்த நாட்டை நோக்கி பார்க்க வைக்கும் நோக்கில் செய்து காமித்தோம். என்னை பொருத்த மட்டில் அதுவும் ஒரு நல்ல அரசியல் நகர்வு என்பேன். ஆனால், இன்று எந்தளவிற்கு அந்த நாடு இந்தியாவின் பாதுகாப்பு கருதி பாதி வழி வந்து நம் நாட்டின் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது வட்டியும் முதலுமாக இந்த வாரம் நடந்து முடிந்த ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ முதல் மரியாதை கொடுத்து பாகியின் பழைய கோபத்தை தனிந்து போகச் செய்திருக்கிறது.

இதன் பின்னணியிலேயேதான் உலக அரங்கில் அந்த குட்டியூண்டு இலங்கை தீவில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிப்பு அந்த நாட்டின் அதிபருக்கு இருக்கிறது. ஆனால், அதனின்று தப்பித்து தப்பித்து எந்த அடையாளங்களை அப்புறப்படுத்தவோ என்னவோ இன்றைய அளவிலும் எந்த ஒரு வெளி நாட்டு மனித உரிமை கழகத்தினையோ, பத்திரிக்கைகளையோ உள்ளே விடாமல் அடைத்து வைத்துக் கொண்டு எதனையோ அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கிறார்.


அண்டைய தேசமான மிகப் பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு அதன் கை சுத்தமாக இருந்தால், காந்தி பிறந்த மண் அஹிம்சையை போதிக்கும், சிறப்பாக எடுத்தியம்பும் ஒரு நாடு இலங்கையில் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனும் பட்சத்தில் அந்த அதிபரை உலக சபையின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டித் தருவது என்பது அதன் பங்கும், கடமையுமில்லையா?

ஒரு முரடனை தனிமைப் படுத்தி, அவன் உண்மையான முகம் வெளிக் கொண்டு வர அதற்கான வழிகளுக்கான சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் சுறுக்கை இறுக்குவதின் மூலமாக மட்டுமே அல்லவா அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். அதனை விட்டுவிட்டு ஒரு இனப்படுகொலையாளனை எப்படி தோழனாக கொள்ள முடியும்? அப்போ பாகிஸ்க்கு ஒரு நீதி, இந்த குட்டித் தீவு அதிபருக்கு ஒரு நீதியா?!

இது வரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலையை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?

விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது? விளையாட்டு வீரர்களுக்கும் சமூக கடமை இருக்கிறதா இல்லையா? அவர்கள் என்ன ரோபாட்டா? இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் பிறர் யார் யோசிக்க வைப்பார்கள்?


Photo Credit: Net

62 comments:

Anonymous said...

hottana pathivu.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படத்தைப் பார்த்து எல்லாருக்கும் கடுப்புத்தான்.. :( நீங்க பொங்கிட்டீங்க..

Anonymous said...

right thinking and writing but how many Indians will understand this?

கல்வெட்டு said...

.

நீங்கள் யாரைப் பார்த்து கோபப்ப‌டுகிறீர்கள் தெகா?
எந்த பிரச்சனைக்கும் சமூகக்கோபம் கொள்ளாத சனியன்களைப் பார்த்தா?
எதற்குமே கோபம் கொள்ளாத பொழுதுபோக்கு கலைஞர்களைப் பார்த்தா அல்லது அதை இரசித்து போகாத தனது பொழுதுகளைப் போக்கிக்கொள்ளும் மனித ஜடங்களைப் பார்த்தா? தனது பக்கத்து வீட்டில் அல்லது தெருவில் நடக்கும் விசயங்களுக்குகூட அலட்டிக் கொள்ளாத பிறவிகளைப் பார்த்தா?

இணயத்திலேயே இன்னும் பல சொரணையற்ற மனிதர்கள் கிரிக்கெட்பற்றிப் பேசுகிறார்கள் பார்த்தீர்களா? இவர்கள் எதற்கும் சமூகக்கோபம் கொள்ளாத மனிதர்கள்.

கோபம் கொண்டு குறைந்த பட்சம் கிரிக்கெட்டைப் புறக்கணித்திருக்கலாம் ஒரு அடையாளமாக.

கடவுள்? காசு கொடுத்தால் அச்வர்யாராயில் இருந்து ராசபக்சே வரை ஆசிர்வாதம் கொடுக்கும் ஒரு கட்டமைப்பு. அங்கே போய் என்ன விடிவு கிடைக்கும்?
.

Anonymous said...

இந்த கொலைவெறியன் அச்சமின்றி ஆடிப்பாடி நடமாட இந்திய அரசியல் வியாதிகளும் ஒரு காரணம். சிங்கள இனம் ஒரு அரக்க இனம். பிஞ்சுகளை தார்ப்பீப்பாய்க்குள்ளும் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள்ளும் போட்டு கொன்று விட்டு சிரித்துக் கும்மாளமிட்டு வெடிகொளுத்தி பால்சோறு உண்டு மகிழும் இனம். ராஜபக்சே போன்ற கொடிய கொலைவெறியரை இந்திய மண்ணில் காலடி வைக்க விட்டது இந்திய மக்களுக்கு ஒரு அவமானம்.

Vasu Balaji said...

அந்நிய மதக் காரர்களுக்கு கர்ப்பக்கிரகத்தில் பிரவேசிக்க அனுமதி கிடையாதுன்னு ஒரு போர்ட் எழுதி வச்சிருப்பான். கோவிலோட சாந்நித்தியம் போயிடுமாம். கொடிமரத்துக்கு அங்கால கொலைகாரனுக்கு கோவில் மரியாதை எந்த சாந்நித்தியம் அனுமதி கொடுத்தது? கர்ப்பஸ்த்ரீயை கொன்னவனை ப்ரும்மஹத்தி தோஷம் பிடிக்கும்னு சொல்லி அது ராஜாவா இருந்தாலும் ஊருக்குள்ள வைக்கக் கூடாதுன்னு சாஸ்திரம். அதற்கு அடுத்த படியாக சிசு ஹத்தி, பசு ஹத்தி (குழந்தைகளைக் கொல்வது, வாயில்லா ஜீவன்களைக் கொல்வது) எல்லாம் பெரிய பாவமா சொல்கிற, அதை நம்புகிற ஒரு மதம் இந்த மரியாதையை அனுமதிக்குமா? இதையெல்லாம் சொல்லி என்ன பண்ண? அவனவனுக்கும் குடும்பமிருக்கு, கோவில் சம்பளம் போக எத்தனை வருமானம் போகும். எந்த கழுதை வந்தா என்ன? அதிகாரி சொன்னா செஞ்சிட்டு போகலாம்.

விளையாட்டா அதிலும் அரசியல்தான். கொலையெல்லாம் மெல்ல உலகம் மறக்கத் தொடங்கியாச்சு. ஸ்விஸ்ல இலங்கையில அமைதி திரும்பிடுச்சின்னு ஒரு முடிவெடுத்திருக்கிறதா படிச்சேன். பிரிட்டன் தன் முதலீடுகளை அதிகரிக்கப் போகுதாம். அமெரிக்காவும் இவனோடு தோளில் கைபோட்டு என்னமோ புடுங்கப் போறானாம்.

இதே லிபியாவில் எதிர்ப்புக் குழுவுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா யோசனை செய்கிறதாம். தோல் வெள்ளையா இருந்தா அதுங்கதையே வேற போல. கருப்புத் தோலுக்கு எதுக்கு சுதந்திரம்னு நினைக்குறானுவ

Thekkikattan|தெகா said...

@ வாசு சார் :(( இதற்கெல்லாம் எந்த பாவத்தை நாம் வாங்கி கட்டிக்குவோம்... சொல்லுங்க. கடவுள் எப்போ நின்ன்னூஊஊ கொல்லுவார் சொல்லுங்க.

Vasu Balaji said...

அதான் கோவில் கோவிலா இடிச்சிக்கிட்டு அவரே ஸ்யூசைட் பண்ணிக்கிறார் போலெ:(

மனுசப் பெய தெரியாம தப்பு செஞ்சி தொலைச்சிடுவான். அதுக்கு ஒரு மன்னிப்பு வேணாமான்னு பெரிய மனசோட பரிகாரம்னு வச்சாங்க. பரிகாரம் இருக்குன்னே பாவம் செய்வான்னு கண்டாங்களா?

Thekkikattan|தெகா said...

பரிகாரம் இருக்குன்னே பாவம் செய்வான்னு கண்டாங்களா?// இது மனிதப் பரிணாமத்தின் அடுத்த வளர்ச்சியா அந்த கடவுளையே தனக்கு சாதகமாக விலை கொடுத்து வாங்கிக்கிறது. அது செய்ய முடியும்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போனா என்னாகும்... கொள்ளை அடிக்கிறதில 40/60 ஆ, டீல் ஆகிடாதா? சரி, சரி அதான் அல்ரெடி நடக்கிதே... வேண்டுதலே எல்லாம் டீல் தானே.. என்ன வித்தியாசம் சிறுசு - பெரிசு- அவங்வங்க வசதிக்கு தகுந்த மாதிரி.

Vasu Balaji said...

இதுல ஒரு விசயம் உண்டும். திருப்பதி பெருமாளுக்கு வேண்டுதல் விடுறது சுலபமில்ல. அதுக்கு ஒரு சாங்கியமிருக்கு. முதல்ல அலர்மேல் மங்காபுரம் போய் அந்தம்மாக்கிட்ட சொல்லிக்கணும். அய்யாவ பார்க்கப் போறேன் அப்படின்னு அனுமதி வாங்கணும். அப்புறம் எப்பவும் போல தங்கக்கதவுக்கு எதிரிலிருக்கிற கண்ணாடியால அய்யாவ பார்க்க முன்ன கருடாழ்வார்கிட்ட அனுமதி வாங்கணும். அப்புறம் வேண்டிக்கிட்டே போய் அந்த ஜருகண்டி நிமிசத்துல அப்பீல வைக்கணும். அப்படியே வெளிய வந்தா பழைய மடத்துப்பள்ளியுள்ள அம்மனிருக்கும். அங்க சொல்லிக்கணும். இப்படி ஒரு வேண்டுதலிருக்கு. சாமி தூங்கமுன்ன கவனப் படுத்து தாயின்னு. ஒரு நாளைக்கு பதினாயிரக்கணக்குல ஜனங்க வந்தாலும் ரொம்பக் கொஞ்சபேருதான் இப்படி பண்ணுவாங்க. அப்படி சொன்ன வேண்டுகோள்தான் சாமி கன்ஸிடர் பண்ணுவாருன்னு ஐதீகம். அதனால சாமியக் கேட்டா இதெல்லாம் என் கவனத்துலயே இல்ல. இவன் இப்படிப் பண்ணலன்னு சொல்லிடுவாரு. மனுசப்பய செய்யறதுக்கு நான் என்ன செய்யன்னு கட்டி புடிச்சி அழுதாலும் ஆச்சரியமில்ல:(

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

//கோபம் கொண்டு குறைந்த பட்சம் கிரிக்கெட்டைப் புறக்கணித்திருக்கலாம் ஒரு அடையாளமாக.

கடவுள்? காசு கொடுத்தால் அச்வர்யாராயில் இருந்து ராசபக்சே வரை ஆசிர்வாதம் கொடுக்கும் ஒரு கட்டமைப்பு.//


நல்ல கேள்வி. நான் யாரைப் பார்த்து கேள்வி கேக்குறேன். ஆன்மீகத்தின் வாலை பிடித்து தொங்கும் கருணைக் கடல் ரசினி, ராஜபக்கியுடன் ஒரே இடத்தில் அமர்ந்து மேட்ச் பார்க்கப் போன அவலத்தை பார்த்தா? அல்லது அவரது சீடர்களை பார்த்தா? அல்லது கடவுளர்களாக மேலும் கொலை செய், தடயத்தை அழி என்று ஆசீர்வதிக்கும் அந்த குடுமி கடவுளர்களைப் பார்த்தா?

அரைகுறை புரிதலோடு உலக மறந்து துடித்து, வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பத் துடிக்கும் விடலைகளைக் பார்த்தா? இல்லை இன்னிக்கு செத்தா நாளக்கி பால், அதுக்காக நாம் உண்ணாமல், உறங்காமல், இனபெருக்கி கொள்ளாமலா இருக்கிறோமென்று அறிவுக் கேள்வி கேட்டு நகர்ந்து விடும் தத்துவார்த்த ஞானிகளைக் கண்டா? எதனைப் பார்த்து நான் குரைக்கிறேன். குறைந்த பட்சம் என் மனத்தினுள் எழும் கேள்விகள் எனக்குள்ளரயே வீங்கி கனம் அதிகமாகிப் போவதால் இங்கு இறக்கி வைக்கிறேன்.

மற்றபடி பணம் மட்டுமே பிரதானமாக கொண்டு இன்றைய உலக அரசியலில் மூக்கொழுகிக் கொண்டிருக்கும் மனிதர்கள் தேவையற்ற வெர்மின் விலங்கினங்களாகவும், பூச்சிகளாகவும் ஆகிப் போனது நம் முன்னயே நடக்கிறதே அதெப்படி என்ற மனசாட்சி எழுப்பும் ஓலமும் இந்த பதிவிற்கு பின்னான பின்னணி.

தருமி said...

நீங்கள் யாரைப் பார்த்து கோபப்ப‌டுகிறீர்கள் தெக்ஸ்?

நம் மத்திய அரசு தமிழர்களோடு “விளையாடுவது” போல் தெரிகிறது. ஐநாவில் எந்தெந்த நாடுகளோ இதைப் பற்றிப் பேசும்போது நம் நாட்டு அரசு அதனை எதிர்த்து நின்றது.
C.W.G. விளையாட்டுக்குத் தலைமை தாங்க இதே மனுஷனைக் கூப்பிட்டாங்க.

அவங்க ’விளையாட்டை’ நாமும் நமது மாநில அரசும் சேர்ந்து கொண்டாடியாச்சி ...

தருமி said...

தொடர்புக்காக.....

ராஜ நடராஜன் said...

நிறைய சொல்லும் எனக்கு சொல்லத்தெரியவில்லை...

Thekkikattan|தெகா said...

ராஜ நடராஜன் said...

நிறைய சொல்லும் எனக்கு சொல்லத்தெரியவில்லை.//

ராஜ நட, எப்படிச் சொல்ல வந்தாலும் அதே மொழியோட சொல்லுங்க. ஆனா, சொல்லித்தான் ஆகணும், ஏன்னா, உங்க பின்னூட்டத்தையும் நான் உ. தமிழன் தளத்தில படிச்சேன். இந்த விளையாட்டை புறக்கணிக்காம இருந்ததின் பொருட்டு... சோ, நீங்கதான் சொல்லணும் இப்போ. அது பொருத்தமாகும் இந்த கட்டுரைக்கு :)...

come on go ahead...

ராஜ நடராஜன் said...

பம்பாய் கலவரங்களையும் ரத்த வெள்ளத்தையும் பின் தள்ளி விட்டு பாகிஸ்தான் சார்பாக கிலானியே வரும் போது இந்தியாவின் முதுகெலும்பு வளைந்து விட்டது என்பதும் அப்பொழுதே ராஜபக்சேவுக்கான அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது.

பாகிஸ்தானுடன் விளையாட்டு மூலம் ராஜதந்திர நகர்வு என்பதும் இலங்கைக்கு கம்பள விரிப்பு மட்டுமே எனபதும் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

நமக்கோ நாற்காலிப் பிரச்சினை:(

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, எப்படிச் சொல்ல வந்தாலும் அதே மொழியோட சொல்லுங்க. ஆனா, சொல்லித்தான் ஆகணும், ஏன்னா, உங்க பின்னூட்டத்தையும் நான் உ. தமிழன் தளத்தில படிச்சேன். இந்த விளையாட்டை புறக்கணிக்காம இருந்ததின் பொருட்டு... சோ, நீங்கதான் சொல்லணும் இப்போ. அது பொருத்தமாகும் இந்த கட்டுரைக்கு :)...

come on go ahead...//

உடனே மறுமொழி போட்டுட்டீங்களா?
கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அது மொத்த இந்தியாவின் உணர்வு.இதில் ஈழத்தை உட்புகுத்தும் நிலையில் நாம் இல்லை.உட்புகுத்தும் நிலையிருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.ஒருவேளை இலங்கை கோப்பையை வென்றிருந்தால் எனக்கு இன்னும் வருத்தம் என்பதோடு அவர்களில் ஒரு பகுதி மக்களுக்கு ஈழ வெற்றியோடு கிரிக்கெட்டும் ஒரு வெற்றியே என்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.

கிரிக்கெட்டின் ஊடே அரசியல் புரிந்துணர்வு என்கிற காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு மாறாக அரசியல் வேறு விளையாட்டு வேறு என்ற பி.ஜே.பியின் நிலையே தமிழகத்துக்கு வலு சேர்க்குமென நினைக்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

என்பதும் இலங்கைக்கு கம்பள விரிப்பு மட்டுமே எனபதும் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

நமக்கோ நாற்காலிப் பிரச்சினை:(//

இது போன்றதொரு புரிதலான கருத்தையே நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன். ஆனால் உ. த பதிவில் உங்களின் மென்மையான டச் இந்த கிரிக்கெட் விளையாட்டின் பொருட்டு இந்த ராஜ தந்திர நகர்வு பொருட்டு இருந்ததாக பட்டது.

அது என்ன எழவு ராஜ தரித்திர நகர்வோ, புரியவில்லை. எத்தனை காலம்தான் இப்படி அடிப்பவன் கையை பிடித்து என்னய மெல்லமா யாருக்கும் தெரியாம அடிட்டான்னு அந்தாளு கையை உருவ, உருவ இழுத்து பிடிச்சு தன் நாடியை நாம உணர வைப்போமோ!

மற்றபடி நீங்கள் சொல்வதுதான், இரண்டு நாட்டிற்கும் மாத்தி மாத்தி கமபள விரிப்புதான்... நல்ல வேள சைனீஸ் இந்த கிரிக்கெட் விளையாடுவதில்லை இல்லன்னா அவிங்களும் இந்த கேலிக் கூத்தில் கலந்து கொள்வது மாதிரியான தர்மசங்கடம் உருவாகியிருக்கும்.

ராஜ நடராஜன் said...

ஈழத்தில் படர்வது புதிய மேகங்களா?

இடுகை படித்தீர்களா?

நம்மகிட்ட உணர்வுகள் ஆங்காங்கே குட்டித்தீவுகள் மாதிரி இருக்கின்றன.இதனை இணைக்கும் நெட்வொர்க் சூத்திரம் மட்டும் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

1.போரில் துயரப்பட்ட மக்களுக்கான உதவியும், வட,கிழக்கு இலங்கையில் வசிக்கும் மக்களின் குரலும் அதனோடு இணைந்த தமிழ் தேசிய அமைப்பின் வலுவான அரசியலும்
2.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒட்டு மொத்த ஒருமித்த குரலும்
3.உலகம் தழுவிய தமிழர்களின் நாடுகளுக்கு உட்பட்ட ஆதரவும்
4.மனித உரிமை அமைப்புக்கள்,மற்றும் மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள் சார்ந்த பார்வையும்
5.இவற்றையெல்லாம் ஒன்று படுத்தவும் முன் நகர்த்தவும் தேவையான பொருளாதார வசதியும்

இவைகளை இணைக்கும் பாலமாக யாரும் இல்லாத காரணத்தால் மட்டுமே மத்திய அரசையும்,ராஜபக்சேவையும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்.

ராஜ நடராஜன் said...

உண்மைத் தமிழனின் பதிவில் அவர் முன் வைக்கப்பட்ட கருத்து தமிழகத்தைப் பொறுத்த வரை சரியாக இருக்கலாம்.ஆனால் தமிழகமே பாராளுமன்ற தேர்தலில் நம்மை குழி தோண்டி விட்டது.

ஈழம் என்ற புரிதலே இல்லாத மொத்த இந்தியாவுக்கும் அது சரிப்பட்டு வராது.கிரிக்கெட் மைதானத்தின் அந்த கணத்தில் அது ஏதோவொரு உணர்வின் உச்சம்.

எப்பொழுதும் எதிர் மாறாக கருத்து சொல்லும் பால் தாக்கரே மட்டும் கிலானியைக் கூப்பிட்டு ராஜதந்திரம் செய்த இந்தியா ராஜபக்சேவிடம் ஏன் அந்த ராஜதந்திரத்தைக் கையாளவில்லை என்று தனது கருத்தை வெளியுட்டுள்ளார்.

Thekkikattan|தெகா said...

காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு மாறாக அரசியல் வேறு விளையாட்டு வேறு என்ற பி.ஜே.பியின் நிலையே தமிழகத்துக்கு வலு சேர்க்குமென நினைக்கின்றேன்.//

நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு புரியுது இருந்தாலும், இன்றைய நிலையில் காங்கிரஸ் பயன்படுத்துவது அப்படியே நேர் மாறாக அல்லவா இருக்கிறது. இங்கே தோளில் கை போட, போட உலக அரங்கில் கையில் இருக்கும் இரத்தத்திற்கு வெள்ளை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலக அரங்கில் ஒரு நாட்டிற்கான அங்கீகாரம் அத்துடன் அண்டைய நாடுகள் வைத்து கொள்ளும் உறவினைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. பிறகு எதற்கு பொருளாதார தடை, சில அத்தியவாசியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைன்னு சில நாடுகளுக்கு போட்டு தனிமை படுத்தி காட்டுறாங்க அதில இந்த விளையாட்டின் மூலமா நல்லுறவை பேணும் விசயமும் அடங்காதா?

ராஜ நடராஜன் said...

கிரிக்கெட்டின் மூலமாகவே எதனையும் பார்ப்பவர்களுக்கும் இங்கே ஒரு பாடம் இருக்கிறது.அதாவது சேவாக்கின் 0,சச்சினின் 18 ஓட்டத்தின் துவக்க ஆட்டமே இந்தியா தோற்றுவிடுமென்ற தோல்வியின் நிழலை மனதில் கொண்டு வந்தது.ஆனாலும் நிலையான கம்பீர் விளையாட்டை மாற்றியது மாதிரி ஒற்றுமையும் முன்பு குறிப்பிட்ட நெட்வொர்க் மட்டும் தமிழனுக்கு இருந்தால் ஈழத் தோல்வியையும் கூட வெற்றிகரமாக மாற்றி விட இயலும்.

பைத்தியக்காரத்தனமான ஒப்பீடாகத் தோன்றினாலும் Cricket Euphoria வில் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

Thekkikattan|தெகா said...

ராஜ நட, உங்க எல்லா போஸ்ட்டும் படிச்சிட்டேன். சிலதுக்கு கருத்து சொல்ல வில்லை, என்ன பெரும்பாலும் நீங்க சொல்லுறது நான் நினைக்கிற மாதிரியே இருக்கும் ;)...

உண்மைதான் காலம் கூடி வரும், நம்பிக்கைதானே வாழ்க்கை.

அப்படியே இதையும் படிங்க.

http://articles.timesofindia.indiatimes.com/2011-04-02/edit-page/29370964_1_labour-home-minister-poor-wages

ராஜ நடராஜன் said...

//உலக அரங்கில் ஒரு நாட்டிற்கான அங்கீகாரம் அத்துடன் அண்டைய நாடுகள் வைத்து கொள்ளும் உறவினைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.//

நிச்சயமாக இந்தியா இலங்கைக்கு ஒரு பக்கபலமான சூழலைத்தான் உருவாக்குகிறது.ஆனால் இலங்கையின் காய் நகர்த்தல் இந்தியாவுக்கே சாதகமாக எப்பொழுதும் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

காரணம் இங்கே பூகோள ரீதியாக இந்தியாவுடன் உறவு கொண்டாடும் வேலையில் சீனாவுக்கான பொருளாதார பங்கீடும்,பாகிஸ்தானுடன் ராணுவ ரீதியான நடவடிக்கையும் இலங்கை எடுப்பது நமக்கே புரியும் போது ”ரா” வுக்குப் புரியாமலா இருக்கும்?

Thekkikattan|தெகா said...

அதாவது சேவாக்கின் 0,சச்சினின் 18 ஓட்டத்தின் துவக்க ஆட்டமே இந்தியா தோற்றுவிடுமென்ற தோல்வியின் நிழலை மனதில் கொண்டு வந்தது.//

என்னது நான் பார்க்காத குறையை இங்கே தீர்த்து வைப்பது மாதிரியும் என்னயும் பிடித்து இழுத்து அந்த குட்டையில ஊற வைக்கிற மாதிரிக்கா இருக்கூஊஊஊ உதாரணத்தை மாத்திப் போடுங்க ராசா ...

Thekkikattan|தெகா said...

காரணம் இங்கே பூகோள ரீதியாக இந்தியாவுடன் உறவு கொண்டாடும் வேலையில் சீனாவுக்கான பொருளாதார பங்கீடும்,பாகிஸ்தானுடன் ராணுவ ரீதியான நடவடிக்கையும் இலங்கை எடுப்பது நமக்கே புரியும் போது ”ரா” வுக்குப் புரியாமலா இருக்கும்?//

அது புரிஞ்சிருக்கிறதுனாலேதான், ஒரு குடும்பத்தில ஒருத்தனை கொன்னு அந்த குடும்பம் பொழச்சிக்கெடந்தாலும் சரிதாங்கிற நிலைப்பாடா? ஓவர் சோப் போட்டாலும் மடங்கிருவான்னு என்ன உத்ரவாதம்... இல்லை அப்படியே அந்த அண்ணங்கை ரெண்டு பேரும் சின்னத்தம்பி(லங்கை) மயங்கி நம்ம மடியிலதான் விழ விட்டுறுவாய்ங்களா... என்ன ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம் - கொல்லிக்கட்டை - மண்டை சொறிதல்தான் என் கண்ணுக்கு தெரியுது.

ராஜ நடராஜன் said...

ராஜபக்சேவுக்கும் அப்பால் முக்கியமான ஒன்றைக்குறிப்பிட வேண்டும்.

ஜனநாயக ரீதியான அமைப்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே அமெரிக்கா முதல் அனைத்து நாடுகளும் மாற்று அரசியலுக்கான முயற்சியில் ஈடுபடும்...நம்ம ஊர் லோக்கல் பாலிடிக்ஸ் உட்பட.

ஈழ மக்களுக்கான ஒரு அரசியல் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசு அந்த இடத்தை நிரப்புமென மிகவும் எதிர்பார்த்தேன்.தேர்தல் முறைகளும் கூட ஜனநாயக ரீதியாக சிறப்பாகவே செய்தார்கள்.எங்கே கோட்டை விட்டார்களென்று தெரியவில்லை.அதன் செயல்பாடுகளில் குழறுபடிகள்,மெதுவான நடை,தயக்கம் போன்றவற்றோடு ஒரு பக்கம் இலங்கை அரசை சார்ந்த நிலை என்றும் இன்னொரு பக்கம் அதற்கு எதிர்வினையாகவும் செயலாற்றுகிறார்கள்.நம் கருத்தை பகிர்ந்து கொள்ளவும் சரியான தேடலாக யாரும் அமையாமல் இருக்கிறது.

முன்பே சொன்னபடி இணைப்பு பாலம் நம்மிடம் இல்லை.

ராஜ நடராஜன் said...

//கொல்லிக்கட்டை - மண்டை சொறிதல்தான் என் கண்ணுக்கு தெரியுது.//

அதே!அதே!அதில் சந்தேகமில்லை.

ஆனால் குறுக்கு புத்தியில் ஒரு விதத்தில் யோசித்தால் சீனா,பாகிஸ்தானின் இலங்கை பொருளாதார,ராணுவ ஆக்கிரமிப்புக்கு இலங்கைக்கு எதிராக தமிழக மக்களைப் பகடைக்காயாக உபயோகிக்கிறதா என்றும் கூட சந்தேகம் வருகிறது. அதாவது தமிழர்களின் இலங்கை மீதான வெறுப்பு ஏற ஏற இந்தியாவுக்கு சுயலாபமும் தெற்கு பாதுகாப்புமிங்கிற மாதிரி Thesis ஏதாவது வச்சிருக்காங்களோ என்னவோ?

தெகா!சந்தேகத்துக்கு மருந்து கொடுங்க!

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் மறுபார்வையில் தருமி சொன்னது முந்தைய பின்னூட்டத்துக்கு சரிப்பட்டு வருதா?

//நம் மத்திய அரசு தமிழர்களோடு “விளையாடுவது” போல் தெரிகிறது. ஐநாவில் எந்தெந்த நாடுகளோ இதைப் பற்றிப் பேசும்போது நம் நாட்டு அரசு அதனை எதிர்த்து நின்றது.
C.W.G. விளையாட்டுக்குத் தலைமை தாங்க இதே மனுஷனைக் கூப்பிட்டாங்க.//

Rathi said...

ராஜனடராஜன், உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் நிச்சயம் வரவேற்கப்படும். என் நீங்கள் இந்த முகவரிக்கு நாடுகடந்த தமிழீழ அரசை தொடர்புகொண்டு உங்கள் கருத்தை சொல்லக்கூடாது!

To Contact the Transnational Government of Tamil Eelam – USA:

By Email send your comments or message to info@TGTE-US.org.

If you would like to talk to any delegate or any member call at (212) 290-2925.

You are also welcome to write to us. Please send your mail to:

Transnational Government of Tamil Eelam -USA
875 Avenues of Americas, Suite 1001
New York, NY 10001

http://www.tgte-us.org/contact.html

Rathi said...

தெகா, அப்புறமா உங்கள் பதிவின் விமர்சனம் எழுதுகிறேன்.

ராஜ நடராஜன் said...

நீங்கள் கொடுத்த டைம்ஸ் ஆஃப் இண்டியா சுட்டி படித்தேன்.

சிதமப்ர ரகசியத்தை எந்த விதத்தில் சொல்வது?இந்தியாவின் பிரதமராகும் ஆளுமை இருந்தும் ஈழம் குறித்து கவலைப்படாமல் போனது பற்றியா?அல்லது நமக்கெல்லாம் தெரியாமலே இன்னும் முடிச்சுக்களைப் போட்டுக்கொண்டிருக்க்றாரா?தலைமையில் வழியில் வாரிசு அரசியலையா?

வடக்கு தெற்கு patch up சிதம்பரம் செய்தார் என்பதை விட அது கருணாநிதிக்கு வேண்டுமென்றால் பொருந்தும்.

முன்னாடி வடக்கு வாழ்கிறது.தெற்கு தேய்கிற்து.இப்ப கட்டுரை எதிர்மாறாக சொல்கிறதே!

Rathi said...

ராஜநடராஜன், இதை முயற்சி செய்து பாருங்கள்.

உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
http://www.tgte-us.org/contact.html

To Contact the Transnational Government of Tamil Eelam – USA:

By Email send your comments or message to info@TGTE-US.org.

If you would like to talk to any delegate or any member call at (212) 290-2925.

You are also welcome to write to us. Please send your mail to:

Transnational Government of Tamil Eelam -USA
875 Avenues of Americas, Suite 1001
New York, NY 10001

Thekkikattan|தெகா said...

அதாவது தமிழர்களின் இலங்கை மீதான வெறுப்பு ஏற ஏற இந்தியாவுக்கு சுயலாபமும் தெற்கு பாதுகாப்புமிங்கிற மாதிரி Thesis ஏதாவது வச்சிருக்காங்களோ என்னவோ?//

யோவ் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. இந்தளவிற்கா நமது கிழ போல்ட்ஸ் யோசித்து காய் நகர்த்துதுங்கிறீங்க. அட ஏன் ராஜ நட, இதெல்லாம் உள் வீட்டுக்குள்ளர நடக்கிற petty politicsங்க. இப்போ விசயம் என்னான்னா, சைனீஸ் நமக்கு இந்திய பெருங்கடலை சுத்தியும் வளைச்சு மாலை போட்டுக்கிட்டு இருக்கான், அதில முக்கியமான மாலை கோர்ப்பு தெற்கில லங்கைத் தீவு. அங்கயும் ஆட்டி அசைச்சு கால ஸ்திரமா ஊணியாச்சு.

காலப்போக்கில துருப்பிடிச்ச ஆணி உள்ளரயே இருந்து குடையுற மாதிரி குடைய ஆரம்பிக்கும் போதுதான், எந்த மண்மோகன் தன் நாடியை உணர வைக்க தீவின் அதிபரின் கையை விடாப் பிடியாக இறுகப் பற்றிக் கொள்வாரோ. ஏன் தைவானை, சைனீஸ் தனது இரும்பு பிடிக்குள் கொண்டு வந்த மாதிரி லங்கையை தனது பிடிக்குள் கொண்டு வரமுடியவில்லை. எந்த தந்திரம் நல்ல ராஜ தந்திரம் இதில்...?

கொல்லை புரத்தில் கொண்டு வந்து எதிரிகளுக்கு சோப்பு போடுவதா, பேரம் பேசுவதா அல்லது கிட்டயே எவனையும் அண்டவிடாமல் தைவான் தனது 99 வருட லீஸை பிரிட்டனுடன் முடித்துக் கொண்டவுடன் அண்டைய பெரிய நாடான சைனா, அந்தத் தீவின் குரல்வலையை மிதித்து கட்டுப்பாட்டுக்குள் அந்த தீவின் அரசியல் நிலைப்பாடுகளை தனது இறக்கைக்குள் கொண்டு வந்ததா?

இப்போ நீங்க சொல்லுங்கவோய்...

ராஜ நடராஜன் said...

நான் சொல்றது ரா வின் காய்நகர்த்தல்.
பிரதமர் விசயம்தான் எனக்கு ஒன்னுமே தெரியாது நிலையாச்சே...

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!அவுனுகளே ரயில் தண்டவாளத்தைப் பேர்த்து விட்டு ஒரு மொட்டைக்கடிதாசும் போட்டாச்சு.கொஞ்சம் நாள் போகட்டும்ன்னு ராஜபக்சே குடும்பத்த சாமி கும்பிட கூப்பிடறது.அப்புறம் CWG ல உட்கார வைக்கிறது.திரைப்பட விழா ஏற்பாடு,பெங்களூர் விமானம் பார்வையிட வான்னு கூப்பிடறது...கிரிக்கெட்...இதையெல்லாம் விட ஒரு கொடுமை பண்ணினானுங்களே பாவிக...பார்வதி அம்மாளை வரவழைச்சு திருப்பி அனுப்புனது:(

ராஜ நடராஜன் said...

//ராஜநடராஜன், இதை முயற்சி செய்து பாருங்கள்.//

ரதி!விலாசங்கள் நான் அறிந்தவைதான்.நான் சொல்ல வருவது நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் பற்றி புலம்பெயர் மக்களுக்குள்ளேயே உட்பூசல்கள்.இந்த கால கட்டத்தில் இது தேவைதானா?தமிழீழ அரசு மட்டுமே அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் படியான சூழலை அமைப்பு உலகம் முழுவதும் தோற்றுவித்துள்ளதா?

உருத்திரகுமாரனின் கடந்த இரு வாரங்களுக்கு முன்பான அறிக்கையும்,சிலரை வெளியேற்றும்படியான நடவடிக்கையும்.

Can we offord the inner battle at this crucial time?

Thekkikattan|தெகா said...

நீங்க யோசிச்சு வைச்சிருக்கிறது இன்னமும் உங்ககிட்ட இருக்கிற நல்ல மனச வைச்சு எவ்வ்வ்வ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல எண்ணமா பார்க்க முயற்சிக்கிறீங்கன்னு வெளிப்படுத்துது. சரி, என்ன தெற்கில் வைச்சு பாதுக்காப்பை அதிக படுத்த அதுக்கு நாமும் புரிஞ்சிட்டு ராணுவ தளவாடங்களையும், ஏனைய முக்கிய நாட்டின் பாதுகாப்பு கருதி உள்ளர வட மேற்கு பகுதியில் நிலவுவது மாதிரி நிலவ நம்ம மனசை பட்டை தீட்டணும் இன்னுமின்னு நீங்க சொல்லுற தீசிஸை எழுதுறாங்க.

ஏற்கெனவே தெரிஞ்ச விசயம்தானேங்க, இதெல்லாம் நடக்கிது. நல்லதுக்கில்லைன்னு. இதுக்கு மேலும் மேலும் கார்னர் பண்ணுவது யாரின் மனசில வெறுப்பை உமிழ! இல்ல நீங்க சொல்லுவதை நான் சரியா புரிஞ்சிக்கிடலையா?

நம்ம பகுதியில் இருப்பவர்கள் எப்போ நம்ம அரசாங்கம் நம்மை புரிந்து கொண்டு பரிந்து பேசும் என்ற நிலைதானே! தீவிலிருந்து நாளை வரவிருக்கும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு...

Rathi said...

ராஜபக்க்ஷே வேறெந்த நாட்டுக்கும் போக முடியாதபடி கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும், இந்தியா, இஸ்ரேல் என்றால் கொஞ்சமும் பிரச்சனை இல்லாமல் வரமுடிகிறது என்று தான் இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது நினைத்துக்கொண்டேன். வேறென்ன சொல்ல!

உங்களதும், ராஜ நடவினதும் கருத்துகளை தொடர.......

ராஜ நடராஜன் said...

//ஏற்கெனவே தெரிஞ்ச விசயம்தானேங்க, இதெல்லாம் நடக்கிது. நல்லதுக்கில்லைன்னு. இதுக்கு மேலும் மேலும் கார்னர் பண்ணுவது யாரின் மனசில வெறுப்பை உமிழ! இல்ல நீங்க சொல்லுவதை நான் சரியா புரிஞ்சிக்கிடலையா?//

நீங்க புரிஞ்சிகிட்டீங்கன்னு புரியுது.நான் என்ன சொல்ல வாரேன்னா அரசியலில் இரட்டை நிலை பாட பாடம் என்றாலும் விக்கிலீக் வந்த பின் அதனை நல்லாவே முடிவு செய்ய வச்சுடுச்சு.

அதாவது இலங்கை அரசை ஒன்றா வச்சிருக்கேன் பாருன்னு அவனுக்கு அல்வா கொடுப்பது.அதே நேரத்தில் தமிழ்நாட்டுல ராஜபக்சே குழு மீது வெறுப்பை உமிழ வைப்பது.நாளைக்கு அவன் சீனாக்காரன்கூடவோ,பாகி கூடவே சேர்ந்துகிட்டாலும் தமிழ் நாட்டுல குவியற வெறுப்பை பயன்படுத்திக்கிறது என்ற இரட்டை நிலை.

ரொம்பத்தான் யோசிக்கிறோமோ!இன்னொரு விக்கிலீக் வெளியாகும் வரை எதுவும் உறுதியில்லை:)

ராஜ நடராஜன் said...

//ராஜபக்க்ஷே வேறெந்த நாட்டுக்கும் போக முடியாதபடி கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும், இந்தியா, இஸ்ரேல் என்றால் கொஞ்சமும் பிரச்சனை இல்லாமல் வரமுடிகிறது என்று தான் இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது நினைத்துக்கொண்டேன். வேறென்ன சொல்ல! //

ரதி!இஸ்ரேல் எப்படி காய் நகர்த்துகிறதென்பதை இன்னும் நீண்ட வட்டத்தில் யோசிக்க வேண்டிய விசயம்.புரிந்தும் புரியாத மாதிரியான குழப்ப நிலை இந்தியாவின் செயல்பாடுகள் மட்டுமே.

Rathi said...

//Can we offord the inner battle at this crucial time?//

கேள்விக்கு பதில் சொல்ல ஆவல் தான், முடியவில்லை.

எல்லாமே சரியான தலைமை இல்லாத குறை. இருப்பவர்களுக்குள்ளும் ஏகப்பட்ட போட்டி. எல்லோரும் ஒரே அணியில் திரளும் வரை இது தொடரத்தான் போகிறது என்பது தான் கசப்பான உண்மை. தவிர, ராஜபக்க்ஷே கூட்டணி எல்லாவிதத்திலும் யாரையோ விலைபேசத்தான் பார்ப்பார்கள்.

ராஜ நடராஜன் said...

//கேள்விக்கு பதில் சொல்ல ஆவல் தான், முடியவில்லை.

எல்லாமே சரியான தலைமை இல்லாத குறை. இருப்பவர்களுக்குள்ளும் ஏகப்பட்ட போட்டி. எல்லோரும் ஒரே அணியில் திரளும் வரை இது தொடரத்தான் போகிறது என்பது தான் கசப்பான உண்மை. தவிர, ராஜபக்க்ஷே கூட்டணி எல்லாவிதத்திலும் யாரையோ விலைபேசத்தான் பார்ப்பார்கள்.//

நான் சொலவதையே திரும்பவும் சொல்றீங்க.லண்டனில் கொஞ்சம் ஆக்க பூர்வமாக செயல்படுகிறார்கள்.ஆனால் அங்கேயும் உட்பூசல்கள் என GTV ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக வலுப்படுத்த வேண்டியது தமிழகத்தின் உறவும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்பும்.மலேசியாவில் திரு.ராமசாமியும் அவரைச் சார்ந்தோர்களும் இருக்கிறார்கள்.தமிழீழ தேர்தல் நேரத்தில் இவரது பெயர் கேட்டது.அதற்குப் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

Thekkikattan|தெகா said...

ரதி, ராஜ நட,

//Can we offord the inner battle//

//இருப்பவர்களுக்குள்ளும் ஏகப்பட்ட போட்டி. எல்லோரும் ஒரே அணியில் திரளும் வரை//

இதெல்லாம் இன்னமும் காலம் நகருவாக்கில்தான் அதன் உண்மையான அவசியம் புரிந்து ஒரு கட்டுக்குள் வரும் என்று எண்ணுகிறேன். இப்பொழுது வேறு சுத்தமாக எல்லா நிலையிலும் ஈழ அரச தந்திரங்களை உடைத்து, ஒன்றுமற்ற நிலையை உருவாக்குவதே பெரிய பண பலத்தை கொண்ட அரசாங்கத்தின் ஏஜெண்டாவாக இருக்கும் தருணத்தில் இதெல்லாம் எதிர்பார்க்கும் நிலையையிலேயே இருக்க வேண்டும்.

இவைகளையும் கடந்து மேலழெம்புவதே இன்றைய புரிதலாக இருக்க வேண்டும்...

CorTexT said...

நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்... என்ற அந்த பாரதியின் கோபம் இந்த பதிவில் தெரிகின்றது. என்ன செய்வது, அவன் நிலை கெட்டது அவனுக்கு தெரியவில்லை. ஒருவேளை இது ஏப்ரல் மாத கொண்டாட்டங்களாக இருக்கலாம். என்ன... நாம் எவ்வளவு பெரிய ஏமாளி என்று நமக்கு தெரியவில்லை :-) "சிலதை சிரித்து தான் ஆத்திக்கனும்".

CorTexT said...
This comment has been removed by the author.
The Analyst said...

"விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது? விளையாட்டு வீரர்களுக்கும் சமூக கடமை இருக்கிறதா இல்லையா? அவர்கள் என்ன ரோபாட்டா? இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் பிறர் யார் யோசிக்க வைப்பார்கள்?"

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் said...

இராஜபக்சே மீது எரிச்சல் வருவதைவிட. மலையாளி, தெலுங்கன், கன்னடிகா...இவனுங்க தமிழனின் வீழ்ச்சியை இராஜபக்சேவுக்கு மாலை போட்டு வரவேற்கிறார்கள் என்று நினைக்க எரிச்சல் ஆகிறது. இந்தியர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை இராஜபக்சே தெரிந்து வைத்து தான் இது போன்று போஸ் கொடுத்து கடுப்பேற்றுகிறான்

Thekkikattan|தெகா said...

இந்தியர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை இராஜபக்சே தெரிந்து வைத்து தான் இது போன்று போஸ் கொடுத்து கடுப்பேற்றுகிறான்.//

ரொம்ப உண்மை! அந்த கேளிக் கூத்தில் உயர் மட்ட அரசாங்க பொறுப்பில் இருக்கும் ஆட்களும் அடக்கம்தானே... ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுய குடும்ப விருப்பு, வெறுப்புகளை உலகச் சபையில் வைத்து தனக்குத் தானே ...உலகத்திற்கே தெரிஞ்சதுதானே!

Thekkikattan|தெகா said...

கார்டெக்ஸ்ட், மேலே உள்ள பின்னூட்டத்திற்கும் நீங்க சொன்ன கடைசி வரிகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதனைப் போல தெரியவில்லை.

//என்ன... நாம் எவ்வளவு பெரிய ஏமாளி என்று நமக்கு தெரியவில்லை :-) "சிலதை சிரித்து தான் ஆத்திக்கனும்".//

Anonymous said...

Very good article. Thanks for Time Of India article. In addition note, if you read latest Indian Population Sense report, Southern States population is reduced lowest in the nation, but Northern States increased 50% more. Especially TamilNadu and Kerala state have now 2 child per family ratio. Nothern India population goes 4 child per family ratio. Just want to share this.

தவறு said...

தெகா நம்மூர்லேயே..ரெட்ட கொலை செஞ்சவதான் கோயில் கும்பத்துக்கு தண்ணி ஊத்தும் அதிகாரம் படைத்தவன் ஆகிறான்.

இன்றைக்கும் பெரும்பாலான ஊர்களில் கோவில் தர்மகத்தா எவன் என்றால் கொலை கொள்ளை அடித்தவர்கள் தான்.
இதுதான் உண்மை.

இதில் ராஜபக்சே மட்டும் விதிவிலக்கா..

அதிகபட்சம் நம்மால் செய்யமுடிந்தவை இந்தமாதிரி எழுத்துகளால் எதிர்ப்பை காட்டமுடிந்தது தான் தெகா. நடப்பவை அதன்போக்கில் நடந்து கொண்டே இருக்கிறது.

காரணம் ஒன்றே சுயநலம்..சுயநலம்.

ராஜ நடராஜன் கருத்துகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் தெகா..

CorTexT said...

மக்கள் எப்படி ஏமாளிகளாக (April Fool) இருக்கின்றார்கள் என்பதை கேளிக்கை சொல்ல முயன்றேன் :)

(அதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று, முற்றிலும் சம்பந்தம் அற்ற பின்னூட்டத்தை அகற்றி விட்டேன். தேவையற்ற திசைதிருப்பல் வேண்டாமென்று)

சீனு said...

இவனுக்கெல்லாம் கடவுள் ஆசிர்வதித்தால்...F**k that GOD...

eye brows said...

தமிழனாய் இருப்பதில் இன்னமும் பெருமை படுகிறேன் ..உங்களை மாதிரி சில பேராவது அவனை எதிர்க்க எழுத்தின் மூலமாவது போராடுறீங்களே ... இனி யாவது ஒரு விதி செய்வோம் ...இணையத்தில் ஒன்று படுவோம் ..நம் உள்ளீடு அரசியலையும் எதிர்த்து........

Thekkikattan|தெகா said...

//நீங்கள் யாரைப் பார்த்து கோபப்ப‌டுகிறீர்கள் தெக்ஸ்?//

தருமி, நீங்களும் கல்வெட்டு கேட்ட அதே கேள்வியத்தான் கேட்டு இருக்கீங்க. அவருக்கு சொன்ன அதே பதில்தான், நான் யாரை பார்த்து குரைச்சிருக்கேன்... :(

//நம் மத்திய அரசு தமிழர்களோடு “விளையாடுவது” போல் தெரிகிறது. ஐநாவில் எந்தெந்த நாடுகளோ இதைப் பற்றிப் பேசும்போது நம் நாட்டு அரசு அதனை எதிர்த்து நின்றது.

C.W.G. விளையாட்டுக்குத் தலைமை தாங்க இதே மனுஷனைக் கூப்பிட்டாங்க.//

விளையாண்டு? அதுக்கு பின்னாடியான நீண்ட கால அஜெண்டா ஏதாவது இருக்கா? என்ன செய்றாங்க? எதுக்கு செய்றாங்க ஒண்ணுமே புரியலயே... வல்லரசா ஆகணும்னா இப்படி பல இடத்தில கொல்லிக்கட்டாயிலே தன் தலையையே சொறிஞ்சிக்கணுமா, அப்போ?!

கையேடு said...

விரிவா நிறைய பேசலாம்தான்.. இப்போதைக்கு சுருக்கமாக.

தமிழரில் பெரும்பான்மை இன்னும் அரசியலை உள்வாங்கிக்கொள்ளவே இல்லை, குறிப்பாக ஜனநாயகத்தன்மையை.

தமிழ், தமிழரின் நெடிய தொன்மும் அது குறித்த சமூகக் குழப்பங்களுமே தற்போதைய அரசியல் தேவைக்கான பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

பெரும்பான்மைச் சமூகம் அதில் சிக்குண்டு கிடக்கிறது.

கல்வெட்டு said...

.

கையேடு சொன்னதை வழிமொழிகிறேன்

//தமிழரில் பெரும்பான்மை இன்னும் அரசியலை உள்வாங்கிக்கொள்ளவே இல்லை, குறிப்பாக ஜனநாயகத்தன்மையை.//

மேலும் இதில்....

//தமிழ், தமிழரின் நெடிய தொன்மும் அது குறித்த சமூகக் குழப்பங்களுமே தற்போதைய அரசியல் தேவைக்கான பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.//

யாருக்கும் வரலாறு குறித்த புரிதலும் அதற்கான (அதைப் புரிந்துகொள்ளத்தேவையான ..புரிந்த என்னத்த செய்ய) தேவையும் இல்லாமல் போய்விட்டது.

பெரும்பான்மைச் சமூகத்திற்கு கொண்டாட்டக் களங்கள் ஏதும் இல்லை.

1.சினிமா
2.பேசு அரசியல்( வெட்டியாய்ப் பேசுவது மட்டும்)
3.கிரிக்கெட்

போன்றவையே கொண்டாட்டக் களமாக உள்ளது. மக்களுக்கு அதைத்தாண்டி சிந்திக்கத் தேவையே இல்லாமல் போய்விட்டது.

அடிப்படைக் கல்வி முதல் கல்லூரிவரை பிழைத்திருக்க மட்டுமே சொல்லித்தருகிறதே தவிர வாழ அல்ல.

வாழ்வது வேறு பிழைத்து இருப்பது வேறு.


இணையத்தில் பலர் கிரிக்கெட்பற்றி சிலாகித்து எழுதும்போது அவர்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. மந்திரித்து விடப்பட்ட கோழிகள்.

ஒருவன் வாழ முயற்சிக்கும் போதுதான் எப்படி வாழ்வது என்று சிந்திப்பான்.

பிழைத்திருக்க நினைப்பவனுக்கு எப்படியாவது பிழத்தாலே வெற்றிதான். அதுதான் இங்கு நடப்பது.

.

காதல் முதல் விளையாட்டுவரை அடுத்தவன் செய்வதை பார்த்தே மகிழ்ந்துவாழும் நோய்க்கூறு சமுதாயம்.

காதல்: நிச வாழ்வில் மனைவியைக்கூட பொது இடத்தில் தொட்டு அணைக்க வெட்கப்படும் இந்த சமுதாயம்தான் சினிமாவில் வரும் டூயட்களை கைதட்டி இரசிக்கிறது.

கிரிக்கெட்: 10 கோடி தமிழ் மக்கள் என்று கொள்வோம். இதில் 10 இலட்சம் பேர்கூட கூட கிரிக்கெட் விளைட்டுவீரர்கள் இல்லை. சும்மா ஸ்கோர் கேட்பதும் அதைப்பற்றி பேசுவதும் மட்டுமே போதும் என்ற அளவிலேயே விளையாட்டை வாங்கிக்கொண்டவர்கள். Just information databases.

.

கல்வெட்டு said...

.

.

தமிழ் இணையச் சாம்பிராணிகளில் எத்தனைபேர் அரசியலை உள்வாங்கிக் கொண்டவர்கள்? இன்றுவரை கிரிக்கெட்பற்றி சிலாகித்துதான் எழுதுகிறார்கள். பல கருத்துகள் பேசப்படும் இதுபோன்ற தளங்களிலேயே என்ன நடக்கிறது என்று சிந்திக்காத ஜடங்கள் இருக்கும்போது , சாதரண பொதுஜனத்தை ஒன்றும் சொல்லமுடியாது. "சாமி எல்லாத்துக்கும் பொதுதானே , சிலோன்காரன் செத்தால் இவர் என்ன பண்ணுவார்?" என்ற ரீதியில் மட்டுமே சிந்திப்பார்கள்.

இராமேஸ்வரம், நாகை மீன‌ர்கள் ஒருவேளை கிரிக்கெட் அணியை வாங்கி இவர்களுக்கு கூத்துகாட்டினால் "அட இவர்களும் இந்தியர்கள்தான் போலிருக்கு" என்று அதையும் ஸ்கோர் கேட்டு கம்பேர் பண்ணி சில பதிவுகளை எழுதக்கூடும்.

.

கல்வெட்டு said...

.

சரியோ தவறோ இது போன்ற பதிவுகளில் வந்து பேசுபவர்கள் எத்தனைபேர்? ஒரு சின்ன கூட்டம் மட்டுமே மறுபடியும் மறுபடியும் வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டு இருக்கும்.

பெரும்பாலனவர்களுக்கு அன்றாட திரைப்பட விமர்சனம், கதைப்புத்தக விமர்சனம், கிரிக்கெட் போன்ற அயிட்டங்கள் அல்லது சும்மா "பஸ்ஸில் போனேன் பால் வாங்கி வந்தேன். பக்கத்துவீட்டு மாமா , ஏம்மா என்றார்" என்ற அன்றாடங்காய்சிக் குறிப்புகளிலேயே வாழ்நாள் பேரின்பம் வந்து மப்பாகி மட்டையாகி விடுகிறார்கள். என்ன செய்வது ? :-(((

.

ஜோதிஜி said...

நண்பர் சஞ்சய் காந்தி சொன்னது எந்த காலத்திலும் மறக்க முடியாத ஒன்று. ஷட் டவுன் செய்து விட்டால் இணைய புரட்சி கருத்துக்கள் நம்மை விட்டு போய்விடும் என்றார்.

ஒரு வகையில் உண்மை தான். ஆனால் இதில் வந்துள்ள விமர்சனத்தை உங்கள் தர்மீக கோபத்தை பார்க்கும் போது இந்த பொதுவெளி இணைய சுதந்திரம் எத்தனை பேர்களால் கெட்டு கல்வெட்டு சொன்னது போல இன்னும் நான் கக்கூஸ் போயிட்டு வந்துடுறேன். அது வரை காத்திருங்க என்று மட்டும் தான் எழுதவில்லை.

மற்ற எல்லாமே எழுதி விட்டார்கள். அதில் குபீர் புரட்சியாளர்கள் என்று வேறு எக்காலிப்பு வேற.

படித்தவன் சூதுவாது செய்தால் அய்யோ என்று போவானாம். பொறுமையாக இப்போது தான் படித்து முடித்தேன். என்ன எழுதுவது இனி?

Anonymous said...

UNGAL KOBAM PURA DESATHIL OLINTHIRUKKUM ILANGAI DESA TAMILARGALIDAM IRUNTHAL NALAM. AVARGALIN YUTHAM ILANGAYIL IRUKKUM POOTHU VEERU DESATHIL OLIVATHU EEN? ENNUM INTHA ULAGATHAI ETHANAI KAALAM EMATRUVARGAL. UNGALAI POONDRA MULAI INDRI INDIA DESATHAI PALIPAVARGALAI ENNA SOLVATHU. ULAGA NAADUGAL ANAITHUM ILANGAI DESATHAVARGALAI ILANGAIKKU NAADU KADATHINAL ANDRE INTHA PROBLEM THEERNTHU VIDUM

கோமதி அரசு said...

படத்தைப் பார்த்து எல்லோருக்கும் கோபம் வரும் உண்மைதான்.
ஆனால் நம் பண்பாடு பகைவருக்கு அருள்வாய் என்பது அல்லவா!

எவரிடத்திலும் (வலியரோ, மெலியரோ)சினம் கொள்ளமல் அதை மறந்து விட வேண்டும் உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் வழி வந்தவர்கள் அல்லவா.!

இலங்கையில் எங்குப் பர்த்தாலும் புத்தர் சிலைகள். அன்பே உருவானவர் எல்லாஉயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்றார். ஆனால் அங்கு சாந்தியும் இல்லை சமாதானமும் இல்லை.

திருப்பதி பெருமாள் அவருக்கு நல்ல புத்தி சொல்லியிருப்பார் என நம்புவோம்.

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்கிறார்கள் அவருக்குள் திருத்தம் வந்தால் சரி.

Related Posts with Thumbnails