Sunday, January 30, 2011

Alternate Perspective #tnfisherman ஒரு பதில்...

மக்கள் வேக வேகமாக ட்விட்டுகளின் வழியாக தங்களின் ஆதங்கத்தை பதிந்து கொண்டிருக்கிறார்கள். நானும் ட்விட்டி கொண்டிருக்கும் பொழுது நம்ம மக்கள் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்னும் அமைப்பின் கீழ் இயங்கும் தளத்தில் ஒரு கட்டுரையை யாரோ எழுதி அங்கு வெளியிட்டுருந்தார்கள்.


அந்த கட்டுரை மிக்க கரிசனத்துடன் ஆரம்பிப்பது போல ஆரம்பித்து எல்லாமே நம்ம தப்பு. இலங்கை கப்பற்படையின் மீது எந்த தப்புமே இல்லங்கிற மாதிரி முழு பூசணிக்காயையும் மறைத்து அவ்வளவு அழகாக எழுதியிருக்கார். படிச்சா, நீங்களும் நம்பி விட வாய்ப்பு இருக்கு. அந்த கட்டுரையில் சொல்லி இருக்கு விடுதலை புலிகளை மீனவர்கள் ஒரு காலத்தில் ஆதரித்ததால், இலங்கை இவர்களை வெறுப்பதற்கு எல்லா முகாந்திரமும் இருப்பதாக சப்பையும் கட்டி இருக்கிறார். ஒரு இடத்தில கூட கச்சை தீவை நாம ‘தாரை’ வார்த்துக் கொடுத்திருக்க கூடாதுன்னு ஃபீல் பண்ணவே இல்லை. இன்னும் என்னன்னவோ உளறி கொட்டப்பட்டிருக்கிறது நீங்களே படிச்சிக்கோங்க இங்க...

Alternate Perspective on Tamil Nadu Fishermen issues .

படிச்சவுடன் எனக்கு நியாயமாக தோன்றிய பதிலையும், கேள்வியையும் அங்கயே பதிஞ்சிருக்கேன். என்னுடன் தருமியும் கூடவே இருந்ததால் அவரிடமும் அந்த இணைப்பை கொடுத்து படிக்க வைத்ததின் பெயரில் அவரும் பதில் கொடுத்திருக்கார். இப்போ இருவரின் பதிலையும் இங்கு கொடுக்கிறோம், நீங்க அந்த கட்டுரையை படிச்சிட்டு வாசிச்ச மேட்டர் புரியும். நன்றி!

இது என்னோட பின்னூட்டம் அங்கே இட்டது:

A well written essay with lots of 'bullet' points darted against Indian fisherman interest. So, unregulated, over exploitation of harvest is happening in Indian waters by Tamil fisherman in particular. Therefore, in order to regulate give it to open market so that small scale fisherman can completely be wiped out one day in the future from their only known profession which is fishing for their livelyhood.

Anyway, here is my question - in the first place way before GOI handed down "the Kacchatheevu" to Sri Lanka, did they study the pros and cons of Indian fisherman loss due to signing off the island? Did they conduct any general consensus and dialogues with Indian east coast fisherman?

Why is that only our side of population should reduce their needs, lose their lands and yet get blamed with surmounting needs of our own population. I do not understand your foreign policy, with such a huge bulging population of ours we go ahead give away the very little land(the island) we have, however it is also geopolitically strategical hot spot!! Still you are trying to justify; ignoring the facts where and how we strategically failed. I believe we pay a big price geopolitically one day by losing that piece of land! Shame on us!!

இது தருமியோட பின்னூட்டம் அங்கே இட்டது:

I very much consider this post a badly timed one. It tries to side track people from the ISSUE that is being discussed now – it is all about the life and safety of OUR fishermen and NOT on the economic cobwebs between the nations.

The economic and trade affairs talked about in the essay – a very inconvenient place to discuss it here. Actual problem is entirely different. The author very CONVENIENTLY forgets the naked and vulgar truth before us now.

//SL considers them as enemies//

Yes .. It is very natural with the relationships between Tamils and Singhalese. The natural enmity is there for long. Everyone knows it. Present problem is hatched only by this enmity.

//if our fishermen are going to SL borders to catch then its definitely wrong,/

GOOD LOGIC. But how many Singhalese fishermen were arrested/ tortured/ Killed/ maimed by indian coast guard so far? How come on one side you have so much brutality? Are the fishermen of Sri Lanka are saints not entering indian border? And above all, on whose side are you? Are you talking for the 500 plus killed Tamil fishermen or their killers, I wonder?

//“rettai madi valai”?//

No baby on earth would imagine that all these are all due to the “rettai madi valai”

//we also helped LTTE which is legitimate to us but terrorists to SL//

GREAT. You have hit the bull’s eye at last!

//mistake is very much on our side too.//

YES… we have an inefficient govt at the centre and state and many fickle minded people like you among us.

//we can never resolve this problem by a Defense mechanism.//

should we follow our great gandhian dharma??!! Shall we start some SATYAGRAHA?! And our kind-hearted rajapakshae will settle all the problems smoothly!!

இந்தக் கட்டுரையை எழுதியவர் நீரோவிற்கு உறவினரா? வீடு இங்கே தீப்பிடித்து எரிகிறது. இவர் பொருளாதாரம் பேசுகிறார்!


பி.கு: தருமியின் பதிவு இங்கே...470. Alternate Perspective #tnfisherman ... ஒரு பதில்..

Thursday, January 27, 2011

நான் டிவிட்டின கதை: #tnfisherman

இன்னிக்கு மதியம் ஆல் இன் ஆல் கடையில ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில ட்விட்டர்ல ஒரு பெரிய இயக்கமா தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து ட்விட்டுவதாக சொல்லியிருந்தாங்க. அதன் மூலமாக இந்திய முழுதுக்கும் (ஏன் உலகத்திற்குமே) இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியுமென்று கூறி நம்மையும் கலந்துக்கும் படி இங்கே வைச்சு அழைப்பு விட்டிருந்தார்.


ட்விட் பக்கமே தலை வைச்சு படுக்க வேண்டாம்னு நினைச்சிட்டு இருந்தேன். என்னமோ அப்படி தோணுச்சு! ஆனா, இந்த விசயத்தை கேள்விப் பட்டவுடன் உடனே ஒரு கணக்கை தொடங்கினேன். ரொம்ப ஈசியா ஒரு மின்னஞ்சல் முகவரி, பயனர் பேர் அவ்வளவுதான் உள்ளர விட்டிருச்சு. அங்கே தேடுதல் பகுதியில #tnfisherman அப்படின்னு அடிச்சா ஓடிக் கொண்டிருக்கும் அத்தனை ட்விட்களும் காமிக்கிது.

மேலே நம்ம பெயர் காமிக்கும் இடத்திற்கு பக்கதில new twit அப்படின்னு ஒரு பென்சில் சிம்பலோட இருக்கிறதை சொடுக்கினா, நம்மோட ட்விட் விட்டுறலாம். இப்போதைக்கு இந்தியா முழுமைக்கும் இதுவே முதன்மை செய்தியா இருக்கிற மாதிரி காமிக்கிது. மக்கள் கடுமையா இந்த செய்தியை உலகச் செய்தியாக்க போராடிட்டு இருக்காங்க. போங்க நீங்களும் போயி ஒரு கை கொடுங்க!

ம்ம்ம் இன்னொன்னு உங்களுக்கு ஏதும் சொல்லத் தோணலையா. விடுங்க, யாராவது சொன்னது பிடிச்சிருந்தா ஜஸ்ட் RT அப்படின்னு வெட்டி ஒட்டுற செய்திக்கும் முன்னாடி போட்டு அப்படியே ஒட்டிருங்க. உங்க வேல முடிஞ்சிச்சு.

என்னோட ட்விட்களில் சில...

* சிங்கள இனவெறி கடல் கடக்கிறதா??#tnfisherman

* Habitual killing becomes ones CHARACTER... so is the reason behind the killing of 500+

* Serial killers can never overcome their temptation of killing, so the SL racist

* இப்பொழுது புரிகிறது தீவிரவாதம் ஏன் ஒரு சில குழுவினரை உலகெங்கிலும் கட்டித் தழுவிக் கொள்கிறதென

* Does SL racism over spills onto T.nadu shores??#tnfisherman


இதுவும் மீனவர்களின் செய்தியை கொண்டு சேர்பதற்கென உருவாக்கப்பட்ட தளம் தான் - தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள்.

ட்விட்டர் இணைய தளம்... twitter.com

ஏன் ட்விட்றாங்கன்னு தெரியலையா இந்த காணொளியை பார்த்தா புரியும்.

Saturday, January 15, 2011

சூரியக் குளியலுக்கான தமிழ்மண விருது: நன்றி!

இன்னிக்கு நண்பர் ஜோதிஜி மூலமா பொங்கல் நாளும் அதுவுமா ஒரு இனிப்பான செய்தி கிடைச்சிச்சு. தமிழ்மண திரட்டி நடத்திய 2010க்கான விருதுகளுக்கான போட்டியில் என்னுடைய புகைப்பட பதிவு முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பதே அந்தச் செய்தி.



இதுவே முதல் முறை எனக்கு இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம். எப்படி இருக்கு இதனையையொட்டிய உணர்வுன்னு கிட்ட வந்து கேட்டீங்கன்னா - ’கூல்’ அப்படின்னு சொல்லத் தோணுது.

இதுக்காக பல பேர் பாடுபட்டிருக்காங்கன்னு மட்டும் தெரியுது. முன்னய மாதிரி இல்லாம இப்பொழுது நிறைய புதிய பதிவர்கள் திரட்டிகளில் இணைந்து பங்களிப்பு செய்து வருகிறார்கள். மிகப் பெரிய முன்னேற்றமிது! அதுவும் போன வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பதிவுகள் அப்படின்னு படிக்கும் பொழுதே கண்ணக் கட்டுது. எப்படி இதிலிருந்து வடிகட்டி கண்களுக்குள் சிக்கும் எண்களாக குறைத்து, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்கள் என்பதனையெல்லாம் அறிந்து கொள்ளும் பொழுது, இதற்கு பின்னான உழைப்பு மலைக்க வைக்கிறது.

இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட எனது புகைப்பட பதிவிற்கென இப்பொழுதும் நான் அரக்க பறக்க கோடியக்கரைக்கு ஓடிய அந்த நாளும், கிரக்கமூட்டும் அந்த சூரியக் குளியலும் என் மனதில் வந்து அவ்வப்பொழுது நனைத்து போவதனை மென்மேலும் ஞாபகமூட்டும் வகையில் இந்த ‘விருதும்’ ஒரு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும்; எப்பொழுதெல்லாம் இந்த விருது என் கண்களில் படுகிறதோ அப்பொழுதெல்லாம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விருதினை ஈட்டிக் கொடுத்த சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள்! வாழ்க! வளர்க!!

-அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்-

இது கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவதற்கென - அந்த புகைப்பட தொகுப்பிலிருந்து ஒன்று - From Flickers...



Sunset in Point Calimere

Sunset in Point Calimere

Air drenched with day
Slowly closes its eyes
Obedient to the radiant sun
Breeding love through
Shimmering water
Reflects with silent tremors
Enamored with brilliant color
Painted Stork crossing
The twilight in its silhouette...


- Poem Courtesy goes to Kaattaaru

Wednesday, January 12, 2011

சீமான் என்ன செய்யவேண்டும்?

சமீப காலமாக நான் கவனித்து வருபவர்களில் முக்கியமான இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இந்த சீமான். இவரை ஓர் அரசியல் கட்சி தலைவர் என்று பார்ப்பதனைக் காட்டிலும் இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் மனக் குமுறல்களின் ’பேசுவாய்’ என்றே கொள்ளத் தோன்றுகிறது. தமிழகத்திலுள்ள இரு பெரும் அரசியல் கட்சிகளின் புளித்துப் போன நடவடிக்கைகளையும், சுழற்சி அடிப்படையில் கோணிப் பைகளுடன் வந்து அள்ளிக் கொண்டு போக காத்திருக்கும் கூட்டங்களாகவே இருக்கிறது.

சமீபகாலமாக இளைய சமூகத்தின் மூளையின் முழுப் பகுதியையும் டாஸ்மார்க் அரித்து விடாத மக்கள் ஓரளவுக்கேனும் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் வெளிப்படுத்த வழியில்லாமல் அரசியல்வியாதிகளை நாட்டிய நாடகங்களை தினந்தோறும் பார்த்துக் கொண்டுருக்கிறார்கள்.

இந்த சந்திப்பில் சரியான திசையில் மீண்டும் வழி நடத்தி செல்லவும் ‘பணத்தை’ மட்டுமே குறியாக கொண்ட தலைகளைத் தாண்டி ஏதோ ஒரு வகையில் மாநிலத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு (தண்ணீர்) விடையறியும் ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது மாநில அரசியல். ஒரு அரசியல் தலைமையின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது என்பதை இந்த தேர்தல் நிச்சயம் முழுமையாக உணர்த்தாவிட்டாலும் கூட விபரம் புரிந்தவர்களுக்கு கோடிட்டி காட்டிவிடும்.

பரந்த பார்வையாற்ற, பணத்தை தாண்டி யோசிக்க தெரியாத தரித்திர குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் சதா காலமும் இன்றைய சூழ்நிலையில் தமிழினத்தை காக்க வந்த தேவர்களாக காட்சி அளித்துக் கொண்டுருப்பது ஒரு மகத்தான் ஆச்சரியமே? தங்களுக்கான தேவைகளை அதீதமான ஒரு ‘மேனியாக்’ தனமாகவே பாவித்து அதன் பின்னாலே சமரசங்களுடன் ஓடித்திரிந்து கொண்டுருக்கிறார்கள். எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று ஒவ்வொரு முறையும் ஏமாறுவது திருவாளர் பொதுஜனம் மட்டுமே? இத்தகைய அவலத்தினை தாண்டி உண்மையாக யோசித்து மக்களுக்கு நிறந்தரமான ஒரு தீர்வை பெற்றுத் தரும் ஒரு தலையை ஒவ்வொரு காலகட்டத்திலும் காலம் கொண்டுவந்தும் சேர்த்துவிடுகிறது. நாங்கள் பொற்காலத்தை தமிழர்களுக்கு கொடுத்தவர்கள் என்பவர்களுக்கும் இல்லையில்லை எங்களால் மட்டுமே தமிழர்கள் விரும்பும் மறுமலர்ச்சியை அளிக்க முடியும் என்று சொல்லிக் கொண்டுருப்பவர்களுக்கும் இந்த தேர்தல் ஒரு குருஷேத்திர யுத்தம் போலத்தான் காட்சியளிக்கப் போகின்றது. பணம் தான் இன்று பாராளுமன்றத்தை தீர்மானிக்கிறது என்பதைப் போலவே இந்த பணமே இந்த தேர்தலில் பாதாளம் வரைக்கும் பாயப் போகின்றது..

இதற்கான தலைமையை நாம் காலம் தோரும் சினிமாவை பின்புலமாக கொண்டவர்களிடமிருந்தே எதிர்ப்பார்த்து பெற்றுக் கொள்கிறோம். அது நமது சாபங்களில் ஒன்று! அதன் பின்னணியிலிருந்து நமக்கு யாரோ ஒருவர் கிடைக்கப்பெற்றாலும், பேசும் விசயங்கள் சார்ந்து இருக்கும் ஆழ அறிவினைக் கொண்டு ஒரு நம்பிக்கை கீற்றை நமக்கு அவர்கள் வழங்கலாம்.

தெளிவற்ற, கொள்கையடிப்படையற்ற, குழப்ப மனநிலையிலிருக்கும் ஒரு சினிமா பிரபலத்தை விட, பிரச்சினையின் ஆழமறிந்த உடனடித் தேவைகளை கண்டறிந்த இளைஞனே இன்றைய தேவை. சீமானுக்கு இது அமைந்திருக்கிறது; திரைப்படம் என்றொரு பின்புலத்தை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால். அவருக்கு உடனடியான, தடாலடியாக இந்திய பிரதம மந்திரியாகும் ஆசையெல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

துணிச்சலாக பிரச்சினைகளின் ஆழத்தைப் பற்றி பேசுகிறார். அரசியலாகிப் போன காவேரி, கொஹோனக்கல், முல்லை பெரியார் நீர் பகிர்தலைப் பற்றி ஆதாரப்பூர்வமாக பேசிகிறார். ஈழத்தின் துரோகத்தினைப் பற்றி ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் பேசுகிறார். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வைத்து பகடையாடப்படும் தனத்தையும், அண்டைய நாடுகளுக்குள் எல்லைகளை வைத்து தேவையான பொழுது சில திசை திருப்பல்களுக்காக அரசியல் செய்து கொள்வதனைப் போன்று இன்றைய நிலையில் அண்டைய மாநிலங்களுக்குள்ளும் இது போன்ற உயிர்வாதார தண்ணீரை வைத்தும் விளையாட தலைப்பட்டுள்ள ஒரு நிலையில் சரியான கேள்விகளை முன் வைத்து தன் இருப்பை காட்டியுள்ளார் இந்த சீமான்.

என்னய பொருத்த மட்டிலும் இன்றைய கால கட்டத்தில் ஒரு அரசியல் கட்சியாக பரிணமிப்பதும் அதை இந்தியா உருவாக்கியிருக்கும் போலியான ஜனநாயக தார்மீக நெறிகளுக்குள் உருவாக்குவதும் சாதாரண காரியம் அல்ல. நமது ஊழல்/அராஜகம் மலிந்த, மக்களை இலவச நோய் பீடித்த, தார்மீக கோப முனை மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தில் அவ்வளவு சுலபமில்லை என்றே தோணச் செய்கிறது. இன்றை நிலை தேர்தல் வந்தால் யார் குடம் கொடுப்பார்கள், ஓட்டிற்கு அய்ந்தாயிரம் வரையிலும் கொடுத்தால் வாங்க மலினப்பட்டுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தில் நெறி சார்ந்தெல்லாம் கட்டியிழுப்பது என்பது சாத்தியமே இல்லை.

புரட்சி பேச்சுக்களை பேசி ஓர் இரவின் உட்சத்தில் மக்களை தெருவிற்கு இழுப்பது என்பதெல்லாம் சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமானால் சாத்தியப்படும்.

ஆனால், உண்மை சற்றே நேர்மாறானது. ஒரு நாடு என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும் பொழுது அதன் ஓட்டத்தில் சென்று விசயங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனம். அதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்வதே மேற்கொண்ட சிறைப்படுத்தல்களையும், தீவிரவாதி என்ற படைபலங்களின் முத்திரைக் குத்த காத்திருத்தல்களிலிருந்து தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.

மாறாக, சீமான் புரட்சிகரமாக பேசுகிறார் என்பதற்காக சில இளைஞர்கள் அவரை அப்படியே பேசிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு ஒரு நிலையில் கையில் கம்பெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தளவில் நன்மை பயக்கும்.??

சீமான் வெறுமனே ஈழம் சார்ந்த பிரச்சினையை மட்டுமே பேசி தமிழகத்தில் பெரும் அரசியல் கட்சியாக சாதிப்பதின் சாத்தியக் கூறும் மிகவும் குறைவு.. எனவே, தமிழகத்திற்குள் நிலவும் பிரச்சினைகளையும் எடுத்து முன் வைத்தே சமச்சீறாக நின்று தன்னை வார்த்து எடுத்துக் கொண்டாலே பெரியளவில் நாளை ஈழத்திற்காக மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எந்த தமிழர்களுக்கும் நினைத்தபடி குரல் எழுப்ப முடியும்.

அனைத்து வித பின்னணிகளை கொண்டு வைத்து பார்க்கும் பொழுது தன்னிச்சையாக நின்று பெரியளவில் எதனையும் சாதித்து காட்டிவிட முடியாது வரப் போகும் தேர்தலில் என்பதால் தமிழகத்தின் இரு பெரும் சக்திகளில் எதிர் முனையில் இருப்பவருடன் கை கோர்த்து, இன்றைய நிர்வாகத்தில் இருப்பவர்களை வீட்டிற்கு யோசிக்க அனுப்பவது ஒன்றே சமயோசிதமாக இருக்க முடியும். இதுவே நாற்பது ஆயிரம் மக்கள் எதற்காக நாம் சாகின்றோம் என்று தெரியாமல் இறந்து போனவர்களுக்கும் இரண்டு லட்ச ஈழ மக்கள் தங்கள் உறவுகளை மறந்து உயிர்ப்பிச்சைக்காக கூடார வாசிகளாக மாறிப் போனதற்கும் காரணமாக இருந்தவர்களுக்கும் கிடைத்த ஒரு சிறிய தண்டனையாக இருக்க முடியும்.

இதற்கு முன்னால் நாம் எத்தனையோ இன்றைய அரசியல் கட்சிகளின் ‘பல்டிகளை’ பல தேர்தல் களங்களில் பார்த்திருக்கிறோம். அதே சமூகப் பின்னணியில் சீமான் நிகழ்த்தியிருப்பதும் ஒரு பல்டியெனவே வைத்துக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவர் கொண்ட கொள்கையில் சிறிதேனும் நேர்மையாக இருப்பார் என்று நம்பி பெரிய படத்தை பார்க்க ஆயத்தமாவோம்.

Monday, January 03, 2011

செத்தே விழும் பறவைகள்: Falling Birds in Arkansas!

இன்னிக்கு ஒரு செய்தி சி. என். என்ல பார்த்தேன். ரொம்ப வருத்தத்திற்குறியது. வருடப்பிறப்பின் வார இறுதியில் கிட்டத்தட்ட 5000 பறவைகளுக்கும் மேல் பறந்துகிட்டு இருக்கும் போதே பொத், பொத்தென்று செத்து ஒரு சதுர மைல் அளவில் உள்ள ஏரியா முழுதும் விழுந்ததாக அந்த செய்தி தெரிவித்தது. இது நடந்தது அமெரிக்காவில் உள்ள அர்க்கான்சஸ் என்ற மகாணத்தில். அதே நாளில் சில ஆயிரம் மீன்களும் செத்து மிதந்து கரை ஒதுங்கி இருக்கு.

காரணம் இதுதான் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லையாம். எல்லாம் கருதுகோலின் படி அவங்க அவங்க தியரியை அந்த பறவை, மீன்களின் இந்த மர்மமான துர் மரணத்தையொட்டி சொல்லி வைக்கிறாங்க. ஒரு விலங்குகள் மருத்துவர் பல பறவைகளின் நெஞ்சைக் கீறி மேஜை முழுதும் பரப்பி வைச்சிக்கிட்டு சொல்லுறார் ஏதோ உள்ளரயே இரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்திருக்கு அப்படின்னு. இது தெற்று வியாதியால் ஏற்பட்ட மாதிரியும் தெரியலன்னு சொல்லுறார். இன்னொன்னும் சொன்னார், அது வந்து மோதின அதிர்வில கூட அப்படி நடந்திருக்கலாம்னு, அப்போ ஏன் கீழே வந்து விழுந்துச்சின்னு சொல்லணும்ல; சொல்லலை.

பல தியரிகளில் ஒன்றாக சொல்றாங்க மின்னல் தாக்கி இருக்கலாம், அல்லது ஆலங்கட்டி மழை (hail storm) தாக்கி இறந்திருக்கலாம், அல்லது புது வருடப் பிறப்பினையொட்டி வான வேடிக்கை கேளிக்கையினை தொடர்ந்து இப்படி ஆகியிருக்கலாம், அல்லது விஷமேறிய உணவை உண்டிருக்கலாம் என்று பல கோணங்கள் முன்வைக்கப்படுது.

ஆனால் இந்த மின்னல், பனி மழை தியரிகளை மட்டும் எடுத்து பார்த்தோம்னா, என்னய்யா சொல்லுறாய்ங்க அந்த ஏரியாவில எப்படி வெதர் கண்டிஷன் அன்னிக்கு இருந்திச்சுன்னு பார்த்திட்டா தெரிஞ்சுட்டு போகுது. இந்தப் பறவைகள் அப்படி உயரத்தில பறக்கும் பறவைகளாவும் தெரியலேயே!

அடுத்து வான வேடிக்கை அதிர்வினால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதனையும் நம்பும்படியாகவும் இல்லை. விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்பதனை ஒரு சாதாரண ஆட்டோப்சியிலேயே கண்டுபிடிச்சிருக்கலாமே! அப்படியே இந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கினத்திற்கும் கருதுகோல்களின் அடிப்படையிலேயே பதில் சொல்லிட்டு இருக்காங்க. இந்த மர்மச் சாவுகளுக்கு உண்மையான காரணம் என்னவா இருக்குமின்னு முறையான துப்புத்துலக்குவதின் மூலமா கண்டுபிடிக்க முடியாதா? என்ன கதை சொல்லிட்டு இருக்காங்க... புதிசா ஏதாவது கண்டுபிடிச்சு பரிசோதனை செஞ்சிப் பார்த்ததின் பக்க விளைவா இப்படி ஆயிருக்கலாமோன்னு தோணுது.

இன்னும் முறையான செய்திகள் இந்த பறவை, மீன்களின் மர்மச் சாவினையொட்டி வெளி வந்ததாக தெரியவில்லை. யாருக்காவது தெரிஞ்சா இங்கே பகிர்ந்துக்கோங்க இல்லன்னா எனக்கு தெரிய வந்தா மேலும் இங்கயே தெரியப்படுத்துறேன்.

இந்த விடியோவையும் பார்த்து வைங்க...

Related Posts with Thumbnails