Tuesday, February 02, 2010

சாய்நோக்கு



கறுகறுவென்ற புடைத்து வீங்கிய
மழை மேகங்கள்
தன் அடிமடியை திறந்து தன்பாரம்
இறக்கிகொண்ட சாயங்காலத்தின்
பின்பகுதியில்
கதிரவன் பொன்நிறத்தை
அப்பியபடி
சேறுகள் நிரம்பிய சந்தைக்கடையின்
உரங்களேதும் ஏற்றப்படாத
சாலை ஆப்பிள்களை
அழகற்றதாக படைத்துக்காட்ட
விலகியபடியே நடந்து
நியான்விளக்கு சுண்டியிழுக்க
விட்டில் பூச்சிகளாக
நிறமேற்றப்பட்ட ஆப்பிள்களை
விரும்பிக்கொய்யும்
ஆழ்மனம் படிக்கத்
தெரியா மனிதம்!

15 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

வணிகமயமாகிவிட்ட உலகம் :)

Santhosh said...

ஏன் இப்புடீ நல்லா தானே போயிட்டு இருந்திச்சி..

மீன்துள்ளியான் said...

அண்ணே கவிதை சூப்பர் . என்ன பண்றது எப்போவுமே பகட்டுகுத்தான் மரியாதை

Dr.Rudhran said...

neat

Thekkikattan|தெகா said...

//kutipaiya said...

வணிகமயமாகிவிட்ட உலகம் :)//

சொல்ல வந்த கருத்தின் மையத்தை தொட்டுச் செல்கிறது. நன்றி - குட்டிபையா!

//சந்தோஷ் = Santhosh said...

ஏன் இப்புடீ நல்லா தானே போயிட்டு இருந்திச்சி...//

அப்பப்போ இப்படி நீ இடை இடையிலே வந்து கேக்கிறது, I enjoy and seems to be funny... :))

//மீன்ஸ் - என்ன பண்றது எப்போவுமே பகட்டுகுத்தான் மரியாதை//

இதுவும் நல்லாருக்கு...

செல்வநாயகி said...

good one.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிமே ரோட்டுக்கடையிலேயே மெழுகு பூசாத அழுக்கு ஆப்பிள் வாங்கிக்கறோம்ங்க.. :)

அதோட கண்ணைப்பறிக்கிற பப்பளபளபள எஙக்ல்லாம் இருக்கோ அதைப்பார்க்க அறிஞ்சுக்க ஞானக்கண் மூணாவதா வேணும்ன்னு கவிதையும் கூடவே படம் வேற சொல்லுதே.. :))

Radhakrishnan said...

:) வெளிப்பூச்சில் உட் பூச்சி தெரியாமல் தான் போய்விடும். அழகிய நல்லதொரு கவிதை.

காட்டாறு said...

முடிச்சி நல்லா இருக்கு. இன்னும் நெறையா இது போல முடிக்க வாழ்த்துகிறேன்.

மீன்துள்ளியான் said...

காட்டாறு இந்த பேரை பாத்ததும் தோன்றியது

" காட்டாறு நீங்க ஒரு மோட்டாறு "

Thekkikattan|தெகா said...

//Dr.Rudhran said...

neat//

ஒற்றை சொல்லுக்கு இருக்கும் சக்தி இன்னொரு கவிதையாவே வந்திருச்சு. I am honored, doc! Thanks!

பழமைபேசி said...

நல்லா வந்திருக்கு

Thekkikattan|தெகா said...

//செல்வநாயகி said...

good one//

ஐ! நாயகி, இப்படி அடிக்கடி வந்து குட்டியோ/தட்டியோ கொடுத்திட்டுப் போனா நல்லாத்தான் இருக்கும்... :)
**************

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதோட கண்ணைப்பறிக்கிற பப்பளபளபள எஙக்ல்லாம் இருக்கோ அதைப்பார்க்க அறிஞ்சுக்க ஞானக்கண் மூணாவதா வேணும்ன்னு கவிதையும் கூடவே படம் வேற சொல்லுதே.. :))//

அதெப்படிங்க விட்டுப் போன பகுதியையும் சேர்த்து மிகச் சரியா ஃபில்லிங் பண்ணுறீங்க, அதுக்கும் சேர்த்து ஒரு டாங்க்ஸ்...
******************

//V.Radhakrishnan said...

:) வெளிப்பூச்சில் உட் பூச்சி தெரியாமல் தான் போய்விடும். அழகிய நல்லதொரு கவிதை.//

பின்னே எதுக்கு நம்ம இருக்கோம் உடைச்சி காமிச்சிட வேண்டாம், நன்றி வெ. இரா. :-)

கோமதி அரசு said...

வெளிஅழகைக் கண்டு மயங்கும் உலகம்!

கவிதை நல்லாயிருக்கு.

மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் கவிதை வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

வாங்க பழம - நன்றி!
*****************

//கோமதி அரசு said...

வெளிஅழகைக் கண்டு மயங்கும் உலகம்!//

நன்றி அம்மா.
************************

//மீன்துள்ளியான் said...

காட்டாறு இந்த பேரை பாத்ததும் தோன்றியது

" காட்டாறு நீங்க ஒரு மோட்டாறு "//

மீன், இது என்ன எதுகை மோனையா? ஒரு விதத்தில மோட்டாறுதான், வந்து போன வேகத்தை வைச்சு சொல்லுதியோ :)

Related Posts with Thumbnails