Wednesday, February 17, 2010

அன்னியமுணர்ந்த ஒரு பொழுதினில்...





மகளின் உச்சி முகர்ந்து
வழிந்தோடிய கண்ணீர் மறந்து
முடிக் கற்றைகளினூடாக
கன்னத் திட்டுக்களில்
உதடு பதிக்க
முயன்ற பொழுதினில்...
கண்ணீரின் உப்புச்சுவை நாவறிய
மகளென்றும் பாரா துதறி
அனிச்சையாக எனை மறந்த
ஒரு பொழுதினில்
நானும் புத்தனானேன்
மனைவி மக்கள் துறவாமல்...

நொடிநேர சுயகொப்பளிப்புகள்
உறவின் முண்டுகளில்
வலிமுட்களேற்றும் ரணங்களறிவதில்லை!

27 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

புத்தன் தெக்கி அவர்களே - அருமை - முக்கியமாக அந்த கடைசி வரிகள்..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என்ன ஒரு Co-incidence பாருங்க.
நானும் மகளப்பத்தி,
நீங்களும் மகளப்பத்தி
எழுதியிருக்கோம்.

மீன்துள்ளியான் said...

அண்ணே கவிதை நல்ல இருக்கு .. காவியத்தை பற்றி ஒரு கவிதையா :)

மதுரை சரவணன் said...

nanraaka ullathu. kavithai kannaththil muththamittathu.vaalththukkal

Thekkikattan|தெகா said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என்ன ஒரு Co-incidence பாருங்க.
நானும் மகளப்பத்தி,
நீங்களும் மகளப்பத்தி
எழுதியிருக்கோம்//

எங்கங்க போட்டிருக்கீங்க... தேடிப்பார்க்கிறேன் தட்டுபடலையே!!

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

க ரா said...

நல்ல கவிதை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

http://gandhiyagramangal.blogspot.com/
இதில் பாருங்கள்

சுரேகா.. said...

annaa...you are in peak..!

super and touchy!

excellent feel!

THEKKI SARANAM! :))

தருமி said...

என்னங்க .. இப்படியெல்லாம் எழுதுறீங்க... நல்லா இருங்க.............

Thekkikattan|தெகா said...

குட்டிபையா,

//புத்தன் தெக்கி அவர்களே - அருமை - முக்கியமாக அந்த கடைசி வரிகள்//

அதென்னா புத்தன் தெக்கி ஆக்கிப்புட்டீங்க. நல்ல நல்ல கவிதையெல்லாம் கொடுக்கிற ஆளு இன்னும் கொஞ்சம் ஆழமா இந்தக் கவிஜாவைப் பத்தி சொல்லியிருக்கலாமோ! :)

************************************

//மீன்துள்ளியான் said...

அண்ணே கவிதை நல்ல இருக்கு .. காவியத்தை பற்றி ஒரு கவிதையா :)//

மீன், அதே! அதே!!

**************************************

//Madurai Saravanan said...

nanraaka ullathu. kavithai kannaththil muththamittathu. vaalththukkal//

உணர்ச்சிப் பூர்வமான மறுமொழிக்கு... நன்றி சரவணன்!

Thekkikattan|தெகா said...

கமலேஷ் - தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க!
****************

க. இராமசாமி - நன்றி! மற்றதுகளையும் சுவைச்சுப் பாருங்க.
*********************

சுரேகாஆஆஆஆஆ, எங்க ரொம்ப நாளா நம்ம வீட்டாண்டையே ஆளக் காணல ;-), ஆஆஆ...ஆ ஏதாவது :D

பழமைபேசி said...

ஆகா... கவிதை!

குட்டிப்பையா|Kutipaiya said...

thekki
unga kavidhaigallla apdiye karaindhu poidrathu dhan karanam - analysis lam pana mudiyla :)

Radhakrishnan said...

அற்புதமான கவிதை, நிதானமாக வரிகளை உணர்ந்துப் படிக்கும்போது கவிதையின் நயம் மிகவும் சுகமாக இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

//என்னங்க .. இப்படியெல்லாம் எழுதுறீங்க... நல்லா இருங்க.........//

தருமி என்ன சொல்ல வாரீங்க :)).

எங்கங்க ஆளேயே காணல! நானும் வலை போட்டுத்தேடுறேன்.
******************************
வாங்க பழம,

//ஆகா... கவிதை!//

ஓ! இப்படித்தான் இருக்குமா கவிதை ;-)

*****************
//thekki
unga kavidhaigallla apdiye karaindhu poidrathu dhan karanam - analysis lam pana mudiyla :)//

ஓஹ்! அதுவும் அப்படியா :) ?

*****************************

//V.Radhakrishnan said...

அற்புதமான கவிதை, நிதானமாக வரிகளை உணர்ந்துப் படிக்கும்போது கவிதையின் நயம் மிகவும் சுகமாக இருக்கிறது.//

நன்றி! திரு. வெ.இரா.

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

நல்ல சிந்தனை - இயற்கையாக நம்மை அறியாமல் வெளிப்படும் நமது செயல்கள் - தேவையற்ற தருணத்தில் வெளிப்படும் செயல்கள் - மற்றவர்களைப் புண்படுத்தும் - உண்மை.

புத்தன் ஓரிரவில் - திடீரென மனைவி மக்கள் சுற்றம் அனைத்தும் துறந்தான் - அது போல மகளெனக் கூட பார்க்காமல் உதறிய - அனிச்சையாக உதறியது - புத்தனை கவிஞருக்கு நினைவூட்டி இருக்கலாம். புத்தனைப் போலல்லாமல் யாரையும் துறவாமல் புத்தன் ஆனது நன்று பிரபா

நல்வாழ்த்துகள் பிரபா

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனிச்சையாக எனை மறந்த
ஒரு பொழுதினில்
நானும் புத்தனானேன்//

கவிதை நன்றி தெ.கா...

ஆனால் புத்தரின் துறவறம் அனிச்சை செயலல்லவே...ஆழ்ந்த யோசனைக்கு பின்பே அப்படி ஒரு துணிவு வர முடியும்..

நொடி நேர விலகல் எளிது...

ஆயுசுக்குமான விலகல் நரகமென தெரிந்தும் அதை வெற்றிகொள்வது?..

Thekkikattan|தெகா said...

ஆழ்ந்த யோசனைக்கு பின்பே அப்படி ஒரு துணிவு வர முடியும்...//

அட, எனக்கும் தான் இப்போ வருது அது மாதிரி ஒரு துணிவு... இருந்தாலும் பொறுப்புங்கிற ஒரு விசயம் இழுத்து பிடிச்சு நிறுத்துது... என்ன செய்யலாம்... :)

Thekkikattan|தெகா said...

ஆனால் புத்தரின் துறவறம் அனிச்சை செயலல்லவே...//

அப்படியே புத்தாவின் மனைவி/குழந்தைகளின் பார்வையிலிருந்து பார்த்தால் எப்படியாக புத்தாவின் ‘விட்டு விலகல்’ இருந்திருக்கும் என்பதே இந்த கவிதையின் கடைசி மூன்று வரிகளின் பஞ்ச் :) - make sense?

எண்ணங்கள் 13189034291840215795 said...

அட, எனக்கும் தான் இப்போ வருது அது மாதிரி ஒரு துணிவு... இருந்தாலும் பொறுப்புங்கிற ஒரு விசயம் இழுத்து பிடிச்சு நிறுத்துது... என்ன செய்யலாம்... :)//


:)

பொறுப்பு மட்டுமா ?.. இல்லை ஆசையுமா?..

பொறுப்பு மட்டும் என்றால் பொறுப்புகளை வேறொருவரிடம் தாராளமாக விட்டு செல்லலாம்..

ஆசை விடவே விடாது...

தனி மனிதன் முதலில் தன் ஆத்மாவை திருப்தி செய்திட வேண்டும்..

போலியாக மனைவி மக்கள் என உலகுக்காக உறவு கொள்வதை விட , தவறென்றாலும் , அத்தவறை தொடராமல் துறவறம் மேல் என்பது அவர் எடுத்த முடிவு..

ஒருவேளை நமக்கும் அந்நிலை வந்தால் மட்டுமே அவர் நியாயம் புரியலாம் ..

விவாகரத்து செய்பவர்கள் அனேகர் துணை சரியில்லை என்ற ஒரே காரணத்தைத்தான் பார்ப்பார்களே தவிர குழந்தைகள் நலம் பற்றி எத்தனை பேர் எண்ணிடுவர்.?..

குழந்தைகளுக்காக துணையை சகித்துக்கொண்டு இல்லறத்தில் இணைந்திருப்பதுமே ஒரு துறவறம்..

அவரவர்க்கு அது அது.:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

அப்படியே புத்தாவின் மனைவி/குழந்தைகளின் பார்வையிலிருந்து பார்த்தால் எப்படியாக புத்தாவின் ‘விட்டு விலகல்’ இருந்திருக்கும் என்பதே இந்த கவிதையின் கடைசி மூன்று வரிகளின் பஞ்ச் :) - make sense?//


நொடிநேர சுயகொப்பளிப்புகள்
உறவின் முண்டுகளில்
வலிமுட்களேற்றும் ரணங்களறிவதில்லை!

உங்கள் பார்வை கவிதையில் உங்கள் அனுபவம் புகுத்தப்பட்டது தவறேயில்லை...


நான் சொல்ல வருவது ஒப்பீடு மட்டுமே தெ.கா..

புத்தரின் முடிவு சுயகொப்பளிப்பாக இருக்க இயலாது + வலி உணராமல் இருந்திருக்க மாட்டார் என்பதே..

விமர்சனம் காயப்படுத்தியிருப்பின் வருத்தங்கள்..

Thekkikattan|தெகா said...

போலியாக மனைவி மக்கள் என உலகுக்காக உறவு கொள்வதை விட , தவறென்றாலும் , அத்தவறை தொடராமல் துறவறம் மேல்//

இதுதானேங்க மெஜாரிடி நிலமை இன்னிக்கு இன்றைய நவீன உலகில்...

புத்தாவிற்கு அது ஒரு லக்சுரியாக அமைந்தது...

//பார்ப்பார்களே தவிர குழந்தைகள் நலம் பற்றி எத்தனை பேர் எண்ணிடுவர்.?..//

புத்தா யோசிச்சி பார்த்தாரா?? :)

//குழந்தைகளுக்காக துணையை சகித்துக்கொண்டு இல்லறத்தில் இணைந்திருப்பதுமே ஒரு துறவறம்..//

அப்படியாவது, தன் பசங்களின் ஆசைக்காவது புத்தா வீட்டோட இருந்து பசங்களின் ஆசைக்காக விளையாண்டுகிட்டு இருந்திருக்காலமில்ல :)) அதே பெரிய தியாகமும், துறவறமும்தானே... :))

Thekkikattan|தெகா said...

விமர்சனம் காயப்படுத்தியிருப்பின் வருத்தங்கள்..//

நீங்க வேற... இதுக்கெல்லாம் போயி காயப்படுவாங்களா. நானெல்லாம் புத்தா ரேஞ்ச்ங்க... :)))

எண்ணங்கள் 13189034291840215795 said...

அப்படியாவது, தன் பசங்களின் ஆசைக்காவது புத்தா வீட்டோட இருந்து பசங்களின் ஆசைக்காக விளையாண்டுகிட்டு இருந்திருக்காலமில்ல //

மனுசர் செஞ்சிருக்கலாம்..

அத வுட்டுபோட்டு கடவுளாயி , பல மனுசங்க வாழ்க்கையில் புத்த நெறிகளை புகுத்தி நல்வழி கொடுத்துபுட்டாரே...னு நொந்துகிறேன்.. !

:)

Thekkikattan|தெகா said...

பல மனுசங்க வாழ்க்கையில் புத்த நெறிகளை புகுத்தி நல்வழி கொடுத்துபுட்டாரே.//

அப்படியா பார்க்கிறீங்க... அதெல்லாம் உடனடியா கிடைச்ச சீடர்களுக்கு, அவர்களுடைய உடனடி சீடர்களுக்கும் போய்ச் சேர்ந்ததோட நின்னு போயிருக்கும். இப்போ, ஸ்ரீலங்காவில் உள்ள புத்த மகான்களா உருமாறி போயிருப்பாய்ங்க... ரத்தம் குடிக்கிகளா! சோ, இன்னொரு மதம். புத்தா அதுக்கு கடவுள்!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அப்படியா பார்க்கிறீங்க... அதெல்லாம் உடனடியா கிடைச்ச சீடர்களுக்கு, அவர்களுடைய உடனடி சீடர்களுக்கும் போய்ச் சேர்ந்ததோட நின்னு போயிருக்கும். இப்போ, ஸ்ரீலங்காவில் உள்ள புத்த மகான்களா உருமாறி போயிருப்பாய்ங்க... ரத்தம் குடிக்கிகளா! சோ, இன்னொரு மதம். புத்தா அதுக்கு கடவுள்!!//

இல்லை இன்னும் தாய்லாந்தில் புத்தமத நெறிகளை கடைப்பிடிக்கின்றனர் அன்றாடம் மக்கள்...

மிக மென்மையான மனிதர்கள்.. இந்த 15 வருடத்தில் கோபப்பட்ட ஒருவரை நான் நேரில் பார்த்ததில்லை.. எப்போதும் இன்முகம் ( உள்ளே சோகம் இருப்பினும் )..

எத்தனை மணி நேர டிராஃபிக்கிலும் பொறுமை.. எரிச்சலடையாமை.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

இலங்கை பிரச்னையே வேறு...

Everything is fair in war & love மாதிரி ஆகவேண்டிய சூழல்.....

கிறுஸ்தவ மதத்திலேயும் போருக்கென தனி சலுகை உண்டே..

எந்த மதத்தில் இல்லை வீரத்துக்கான இடம்..?

Related Posts with Thumbnails