கடைசியாக சொல்லிக்கிற மாதிரி வெள்ளை மழை பெய்தது அட்லாண்டாவில் 2001ல் தான். அப்பொழுது கிட்டத்தட்ட ஒரு அடிக்கும் அதிகமாக பொழிந்தது. அதுக்குப் பிறகு இப்போதாங்க ஓர் ஒண்ணரை நாள் கிடப்பது போல 6 இஞ்சிற்கும் மேலாக வெள்ளி மதியம் தொடங்கி நள்ளிரவு வரையிலும் பெய்தது.
சனிக்கிழமை காலையில எழுந்தவுடன் முதல் வேலை எனக்கு வேணுங்கிற மட்டும் புகைப்படங்கள் தட்டிக்கிறதுதான். அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கும். கோடை காலம் வரப் போகுது பாருங்க, கொஞ்சம் குளு குளுன்னு இருக்கட்டுமேன்னுதான் ;-).
சனிக்கிழமை காலையில எழுந்தவுடன் முதல் வேலை எனக்கு வேணுங்கிற மட்டும் புகைப்படங்கள் தட்டிக்கிறதுதான். அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கும். கோடை காலம் வரப் போகுது பாருங்க, கொஞ்சம் குளு குளுன்னு இருக்கட்டுமேன்னுதான் ;-).
கிடைச்ச இரவு ஒளியை பயன்படுத்தி...
என் கூடு இருக்கும் வீதி - நிறத்தை வைத்து தெக்கி வீட்டை கண்டுபிடிச்சிக்கோங்க :) : ஒளியின் விளையாட்டை கவனிக்க ஆரம்பிங்க...
உடையணிந்து அழகு பார்க்கும் நேரத்தில் பிழம்பு கொண்டு உருக்கிப் பார்க்க ஆசைப்படும் சூரியன்...
நீல நிற வானத்திற்கு வெள்ளை வண்ணம் அப்பிப்பார்க்க எத்தனிக்கும் மரத்தூரிகை...
ஒளியின் விளையாட்டு...
மேலும் ஒளியின் வர்ணஜாலம்...
மோதிரம் அணிந்து கொண்ட நிலையில்...
எங்களுக்கும் கை உறை பூட்டிப்பார்க்க ஆசை அதான்...
பி.கு: வெள்ளை மழை பொழிகிறது என்று கூறியவுடன் எனக்கு நிறைய புகைப்படங்கள் வேணும்னு கேட்டு என்னய உற்சாக கோதாவில இறக்கி விட்ட என் தம்பீ மீன்துள்ளியானுக்கு ஜில்லுன்னு இந்தப் புகைப்படங்களை கொடுக்கிறேன்... :)
18 comments:
சூப்பர்.
அருமையா இருக்குதுண்ணே...
படங்கள் ரொம்ப ரொம்ப அழகு!
மழையும் அழகு .. புகைப்படங்களும் அழகு . வர்ணனையும் அழகு..
அருமை !!!!
சில்லுன்னு இருக்கு தெக்கி - அழகு அழகு :)
Ada enga oorila kooda snow vanthathu last weekend. But photo edukkala. Nice photos.
என்னுடன் பார்த்து ரசித்த விழியன், சென்ஷி, சுந்தரா, முத்து, பதி, குட்டிபையா மற்றும் முகுந்தம்மா அனைவருக்கும், நன்றி! :)
படங்கள் அருமை,
நீங்களும் நம்ம ஊர்க்காரராமே!!1 சுரேகா பதிவுல படிச்சு வந்தேன். வாழ்த்துக்கள்
கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சி.துறை சார்ந்த புகைப்படக் கலை நேர்த்தி.
அழகோ அழகு.ஆமா இந்த ஊர் எந்த ஊர்?
வாங்க புதுகைத் தென்றல்,
//நீங்களும் நம்ம ஊர்க்காரராமே!!1 சுரேகா பதிவுல படிச்சு வந்தேன். வாழ்த்துக்கள்// <=== ஆமாங்க, நாமே ஏற்கெனவே அறிமுகம் ஆயிருக்கோம், மறந்துரிப்பீங்க :). படங்களை ரசித்தற்கு நன்றி!
************************
ராஜ நட,
//கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சி.//
அதுக்குத்தான் இங்கன கொண்டாந்தேன் ;-)
//துறை சார்ந்த புகைப்படக் கலை நேர்த்தி//
அது என்ன துறை சார்ந்த :D ....
**********************
//க.நா.சாந்தி லெட்சுமணன். said...
அழகோ அழகு.ஆமா இந்த ஊர் எந்த ஊர்//
வாங்கங்க வாங்க, இந்த ஊரு அட்லாண்டாங்க (யு.எஸ்). நன்றி!
நாமே ஏற்கெனவே அறிமுகம் ஆயிருக்கோம், //
இருக்கலாம். ஆனா நம்ம ஊர்னு இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்
அண்ணே இந்த தம்பிக்காக நீங்க எடுத்த படங்கள் படங்களா மட்டும் தெரியலை . உங்க பாசமும் கூடவே தெரியுது அண்ணே.. புல்லரிச்சு போச்சு பதிவ பாத்து . கண்ணுல தண்ணீ முட்டிகிட்டு நிக்கு
//இருக்கலாம். ஆனா நம்ம ஊர்னு இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்//
அப்படிங்களா புதுகைத் தென்றால் அப்போ நான் அப்படி ஞாபகம் வைச்சிக்கிட்டு இருக்கேன் :).
மீனுத் தம்பி,
//புல்லரிச்சு போச்சு பதிவ பாத்து . கண்ணுல தண்ணீ முட்டிகிட்டு நிக்கு//
ஏன்யா, ஏன்யா இப்படி பாசக்கார பயலா இருக்கிய, அடக்குங்கய்யா கொஞ்சம், உடம்பிற்கு நல்லதில்லே :D
(- உள்ளுக்குள் நினைச்சிக்கிட்டே-) நானும் நனைகிறேன் தம்பீஈஈ... நன்றி!
:) இது பற்றி ஒரு தொடர் எழுதி வைத்திருக்கிறேன். தலைப்பு கூட பனிப் பிரதேசம். மிகவும் அருமையான படங்கள். ரசித்தேன்.
:) இது பற்றி ஒரு தொடர் எழுதி வைத்திருக்கிறேன். தலைப்பு கூட பனிப் பிரதேசம். //
அந்தத் தொடரை சீக்கிரமா வலை ஏத்துங்க, வெ.இரா.
Post a Comment