Monday, March 02, 2009

நேற்றையவைகளின் கூட்டுத் தொகையே இன்றைய நான்!

தினசரி வாழ்க்கையின் எச்சமாக நமக்குக் கிட்டும் அனுபவ பொதிகளைக் கொண்டு நம் வளர்ச்சியை, வாய்ப்புகளை எப்படியாக ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதனைச் சார்ந்து ஒரு எண்ண ஓட்டம். அதன் விளைவே இந்தக் கட்டுரை!

எல்லாவிதமான வாழ்வு நிகழ்வுகளின் போதும் நம் மனம் வலியைக் காட்டிலும் சந்தோஷம் கொடுக்கும் முடிவுகளையே விரும்கிறது, இல்லையா? இருப்பினும், இயற்கையின் படைப்பில் இவ்விரு (வலி/சந்தோஷம்; தோல்வி/வெற்றி) விஷயங்களும் மாறி மாறி நிகழும் ஒரு காரணி. இயற்கையாகவே சந்தோஷ நிகழ்வுகளில் கிடைக்கும் நிர்ணயிக்கப்பட்ட கொண்டாடும் தன்மையில் திளைத்து இருப்பது மட்டுமே எஞ்சியிருப்பதால், பரவலாக மனம் அதனையே பெற்றுக் கொள்ள விரும்புகிறது. இருந்தாலும், அதன் மறு முகமான 'வலியில்' கிடைக்கும் கற்றுக்(வளர்வதற்கான) கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி யாரும் எண்ணியும் பார்ப்பதில்லை அதனை ஏற்றுக் கொள்வதற்கான மன வலிமையும் சொல்லிக் கொடுப்பதில்லை.

ஆனால், உண்மை என்னவெனில் இந்த இரண்டாவது காரணியில்(வலி/தோல்வி) கிடைக்கும் பாடங்களே நம்மை வளர்ச்சியின் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஓவ்வொரு தோல்வியிலும் நமக்கு கிடைத்த பாடங்களை சற்றே உற்று நோக்கி அதனில் இன்னமும் கவனைத்தை முன்னிறுத்தும் பொருட்டு நமக்கு கிடைக்கக் கூடிய விசயங்கள் வெற்றியடைந்து கடந்தவருக்கு கிடைத்த சந்தோஷ கால நிர்ணயத்தைக் காட்டிலும், வலியுனூடாக பெற்றவருக்கு மேலும் பல விசயங்களை விளக்கியிருக்கக் கூடும்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு தான் காதலித்த ஒரு காதலி/காதலன் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அது நடந்து முடிந்திருந்த பட்சத்தில் சுய அலசலில் இரு பாலரும் தன் பக்கமிருக்கும் தவறுகளை களைய முற்படுகையில் எச்சமாக நமக்கு கிட்டுவது என்னவாக இருக்க முடியும் - மேலும் பண்மையடைந்த, இன்னொரு பார்ட்னரை மிகவும் அன்பாக நடத்தக் கூடிய மனிதன் கிடைக்கப் பெறலாம். வளர்ச்சி என்பது அப்படியாகத்தானே அமைய முடியும், அல்லது அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்?

இதே உதாரணத்தை வாழ்வின் எந்த ஒரு நிகழ்விலும் நமக்கு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கடந்து சென்ற சேலஞ்ச் நமக்கு எது போன்ற தாக்கங்களை, வளர்ச்சியை கொணர்ந்திருக்கிறது? அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானாதா? மீண்டும் அதே நிலையில் இருப்பதில் தனக்கு ஒப்புமையா? இல்லை இந்த கடந்து போன சேலஞ்சால் பல படிகள் என்னை வளர்ச்சியின் நிலையில் உயர்த்திக் கொள்ள முடிந்தது என்ற நிலையிலிந்தால், நாம் எந்த ஒரு சேலஞ்சையும் தனக்கு தன் வளர்ச்சிப் பாதையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதற்கு வைத்திருக்கும் ஏணிப்படியாக கருதி மென்மேலும் வாய்ப்புகளை தருவித்துக் கொள்ள முடியும்தானே?

4 comments:

Suresh said...

வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

நாமக்கல் சிபி said...

//நாம் எந்த ஒரு சேலஞ்சையும் தனக்கு தன் வளர்ச்சிப் பாதையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதற்கு வைத்திருக்கும் ஏணிப்படியாக கருதி மென்மேலும் வாய்ப்புகளை தருவித்துக் கொள்ள முடியும்தானே?//

உண்மைதான்!

வாழ்க்கையில் நாம் சந்திக்க நேரிடும் தோல்விகள் நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கின்றன! கற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் எதையும் எதிர் கொள்ளலாம்!

மங்கை said...

ஆனா...நம்ம மனசு புது எண்ணங்கள் தோன்றுவதற்கான கருவறையா இருக்கனுமே தவிர...பழைய எண்ணங்களை போட்டு புதைத்து வைக்கும் கல்லறையா இருக்க கூடாது..

ஏதாவது விளங்கிச்சா...நானும் எழுதறனுங்கோவ்..

Raji said...

I liked this post...nalla irukku. romba naalaikku appuram I have started reading. Expecting, you, mangai and many others to write a lot.

Related Posts with Thumbnails