Friday, January 30, 2009

முத்துக்குமார் காறி உமிழ்ந்த உமிழ்நீர்!




காறி உமிழ்ந்து போனான் முத்துக்குமார்
அழுத்தி துடைக்கப் போய்
காசு பணமாக எங்களது மாமிசம்

உதிர்ந்தன..... சேர்த்தே
எங்களது இடுப்பு வேஷ்டியும் தான்!!!




பி. கு: இதற்கு மேலும் அரிதாரம் பூசிக் கொண்டு இந்த அஹிம்சா நாட்டில் வாழ வழியில்லையென்று வெட்கி இறந்து போன அந்த சகோதரன் முத்துக்குமார்க்கு ஒரு கையாலாகாதவனின் ஒரு சொட்டு கண்ணீராக இதனை சமர்பிக்கின்றேன் :-(( .

12 comments:

நாமக்கல் சிபி said...

//உதிர்ந்தன..... சேர்த்தே
எங்களது இடுப்பு வேஷ்டியும் தான்!!!
//

இன்று அம்மணமாகத்தான் உணர்கிறோம் நாம்!

மாயன் said...

தெகா

இதை வீரச்செயலாகவோ, தியாகச்செயலாகவோ உருவகப் படுத்தக் கூடாது... அப்படி செய்தால் இது தொடர்கதையாக கூடும்... அரசியலும், சமூகவியலும் புரியாத அப்பாவிகள் பலரும் பலியாக நாம் காரணமாக வேண்டாம்... போராடும் காரணம் சரியே.. அவர் தேர்ந்தெடுத்த இந்த முறை தான் தவறு... இதனால் யாருக்கும் பயனில்லை.. மனித உயிரின் விலை என்ன என்று தமிழர்களுக்கு தான் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்..

இது என் தனிப்பட்ட கருத்து...

மங்கை said...

the crime of suicide lies rather in its disregard for the feelings of those whom we leave behind.

தெகா....என்னால நம்பிக்கையுடன் வளர்த்த ஒரு தாயின் ஏமாற்றம் தான் தெரிய்து... அவருக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு.. எதை சாதிக்கபோகிறார்... மனசுக்கு கஷ்டமா இருக்கு

Thekkikattan|தெகா said...

இன்று அம்மணமாகத்தான் உணர்கிறோம் நாம்!//

அம்மணமாகிப் போய் எங்கே ஓடி ஒளியறதுன்னு தெரியலயே நிறைய தகிரிய சாலிகளுக்கு, சிபி...

ARV Loshan said...

ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்


நாளை தமிழன் விடிவுக்காக
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..

பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..

* நானும் பதிவிட்டுள்ளேன்.. எம்மால் முடிந்த ஒரு சிறு அஞ்சலி;நன்றி;மரியாதை;காணிக்கை.

Thekkikattan|தெகா said...

மாயா மற்றும் மங்கை தங்களின் பார்வைகள் ஒருமித்து இருப்பதால் இருவருக்கும் சேர்த்தே எனது எண்ணங்கள்...

//இதை வீரச்செயலாகவோ, தியாகச்செயலாகவோ உருவகப் படுத்தக் கூடாது... அப்படி செய்தால் இது தொடர்கதையாக கூடும்... அரசியலும், சமூகவியலும் புரியாத அப்பாவிகள் பலரும் பலியாக நாம் காரணமாக வேண்டாம்... //

எனக்கும் இது போன்ற முடிவுகளில் இணக்கம் இல்லைதான் இருந்தாலும், மூன்றாம் தர நாடுகளில் பல்கிப் பெருகி போய் கிடக்கும் ஊழல்களும், மனித நேயமே அற்ற மனிதர்களுக்கிடையேயும் மண்டிக் கிடக்கும் சுயநலமான போக்கு சற்றே சமூகத்தை ஊன்றி பார்பவர்களுக்கு மனச் சோர்வு அளிப்பது தவிர்க்க முடியாத ஒன்று அல்லவா?

அப்படியாக இருக்கையில் எத்தனையோ நேர் வழியில் சமூக அவலங்களை நாள் தோரும் எடுத்து வெளிக் காமிப்பவர்கள் காட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள் ஆனால் விளைவோ என்னவோ மிகவும் குறைச்சல்தானே பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வதற்கு கிடைப்பது.

முத்துக்குமாரின் கடித்தத்தை வாசிப்பவர்கள் எவரும், அவரின் உலகறிவையும், உள்ளூர் அறிவையும் குறைத்து மதிப்பிட்டிட முடியாதென்றே நான் கருதுகிறேன். அப்படியாக இருக்கையில், இன்று நமது அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு ஒட்டு மொத்த நாட்டையுமே அதன் போக்கில் எடுத்துச் செல்லும் பாங்கில் அமையப் பெற்றாகிவிட்டது.

இச் சூழலில் முத்துக்குமாரால் நம்மைப் போன்று அட்ஜஸ்ட்(?!) செய்து, அல்லது அந்த "உணர்வையே" காசாக்கி பிழைக்கும் மன நிலையிலற்று, நம்பிய வழிகாட்டித் தலைவர்களும் தன்னலமே முக்கியம் என்று வெளிச்சம் போட்டு காட்டிய பிறகும், இந்த சந்திப்பில் எல்லாமும் அறிந்து பிழைக்கத் தெரியாதவனாக ஒரு விழிப்புணர்வேற்று நட்சத்திரமாக வந்தும் சென்றே விட்டான்.

குறைந்தப் பட்சம், அவ்வாறாக வேஷம் போட்டவர்கள் தனிமையில் ஒரு சில நிமிடங்களேயாகினும் தன் பாசாங்கு நிலையறிந்து வெட்கி மன முடைந்திருந்தாலே போதுமென்ற நினைப்பில் - போய் சேர்ந்துவிட்டான் அதிரடியாக.

ஆனால், ஹிந்தி எதிர்ப்புக்காக தான் தண்டாவாளத்தில் தலை வைத்தேன் என்று தமிழுணர்வுடன் தனது அரசியல் வாழ்க்கையை அரம்பித்தவரோ இன்று வரலாறு கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அவசிய சந்திப்பில் எப்படி தன் உண்மையான உணர்வை வெளிக் கொணர்வது என்றறியாமலயே நோய் வாய் பட்டு படுத்து விட்டார்.

இத் துர்சம்பவத்தின் மூலம் எல்லா அரசியல் வாதிகளின் முகமூடியும் கிழிக்கப் பட்டிருக்கிறது என்பதே உண்மை.

இருந்தாலும், நான் இது போன்ற மரணங்களுக்கு கொடி பிடிக்கவில்லை. யோசித்து பார்க்கையில், காந்தியும் அடிக்கடி உண்ணா நோன்பு என்ற ஆயுதத்தைதான் கையிலெடுத்தார், அதன் வழியும் இறுதியில் இதுதானே... ???

மங்கை உங்கள் ஆதங்கம் புரிகிறது...இருந்தாலும், what we learn out of this unfortunate end is this; this is an ultimate emotional outburst for the cause to unveil some of our societal ugliness and also to bring that collective awareness among youths.

Thekkikattan|தெகா said...

//ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது....//

உண்மை. திருந்துவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையட்டும்.

//முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்//

அப்படியே ஆகட்டும்!

கவிதா | Kavitha said...

//உதிர்ந்தன..... சேர்த்தே
எங்களது இடுப்பு வேஷ்டியும் தான்!!!//

நம் மானம் போனதை விட மங்கை சொன்னதை போன்று ஒரு தாய் தன் மகனை இழந்தது தான் பெரியதாக தெரிகிறது.. .அவருக்கு நல்ல நண்பர்களும் இல்லை என்றே தோன்றுகிறது.. மனதில் உள்ள அழுத்தத்தை இறக்கி வைக்க ஒரு நல் இதயம் அவருக்கு பக்கத்தில் இல்லை என்று தோன்றுகிறது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதா சொன்னமாதிரியே அவருக்கு நல்ல நண்பர்கள் இல்லையென்றே நினைக்கிறேன்.. இல்லையென்றால் அவரின் தீவிரமான பேச்சுக்களை ஏற்றிவிட்ட நண்பர்களாக இருந்திருக்கவேண்டும்..

vaanmathy said...

முத்துக்குமார் என்ற விலை மதிக்க முடியாத முத்து தெரிந்தே ஆழியில் அமிழ்ந்து போனது..தனக்கடுத்த கடமைகளை மறந்து, தன் குடும்பத்தாரை மீளா சோகத்திலிலாழ்தி..ஏனோ திருந்தாத அரசியலமைப்பாளர்களுக்கு எச்சரிக்கைவிடுத்து மாயமானது...வருமா விடிவு? இல்லை இன்னும் பல முத்துக்கள் தீக்குளிக்க வேண்டுமோ?

முத்துக்குமார் செய்கை நலமே..அவர் தீக்குளிப்பு தவறே..

சுரேகா.. said...

நான்கே வரிகளில்..ஒரு நாட்டுக்கே சாட்டை
வீசியிருக்கிறீர்கள்!
சூப்பர் அண்ணாத்த!

உங்கள் விபரமான பின்னூட்டமும் சரியாகவே படுகிறது!

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Related Posts with Thumbnails