Thursday, March 12, 2009

கிளம்புங்க போகலாம் ஓட்டுப் போட...

ஓட்டுப் போடும் வயதை அடைந்த அனைவரும் வாக்களிக்க முன் வர வேண்டுமென்பது ஒரு ஆரோக்கியமானதொரு விசயம். நல்லதொரு ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்கு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், நம்மில் பலபேருக்கு தன் கையில் உள்ள அந்த ஒத்தை துருப்புச் சீட்டின் வலிமை விளங்காமல் பலவாராக வீணடித்துவிடுகிறோம். நன்றாக படித்துணர்ந்த மேதைகள் அந்த ஒரு தேர்தல் நாளை தேவையற்ற ஒரு சடங்காக கருதி வீட்டிற்குள் முடங்கிவிடுவதுமுண்டு.

இளைஞ/ஞிகளுக்கோ அதனைப் பற்றிய விழிப்புணர்வில்லாமல் ஒன்று தன் பெயரை ஓட்டளிக்க இணைத்துக் கொள்வதில்லை அல்லது அப்படியே இணைத்துக் கொண்டாலும் சரியானதொரு வேட்பாளர் தெளிவு இல்லாமல் யாருக்கோ தனது உரிமையை ஓட்டின் மூலமாக விட்டுக் கொடுத்துவிடுகிறோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் மொத்த வாக்களிப்பே 45லிருந்து 60 சதவீதம்தான் நடைபெறுகிறதாம். அதனில் 35 சதவீதம் கிராமபுர மக்கள் தங்களின் பலம் தான் அறியாமல் எதுக்காகவாவது விலை போய்விடும் நிலையிருக்கிறார்கள்.

அண்மையில் நண்பர் சந்தோஷ் ஓட்டுப் போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி தொடர் பதிவிட சில நண்பர்களுடன் என்னையும் அழைத்துருந்தார். அவரிடம் மின்னரைட்டையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நான் கூறினேன் இந்த நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்குப் போடுவது அவ் ஓட்டு, நன்றாகவே சிந்தித்து அளிக்கப்பட்டாலும் சரியான பயனளிக்கும் முறையில் உள்ள ஒருவருக்கு போய்ச் சேருகிறதா போன்ற கேள்விகளை அவர் முன்னால் வைத்தேன்.

இக் கேள்விகள் எனக்கு தன்னிச்சையாவே எழுந்தது இந்த அரசியல் தகிடுதத்தங்களான மாறும் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் கோமாளித்தனங்கள், கூட்டணித் தாவல்கள், குடும்பம், மதம் சார்ந்த மற்றும் கடைசிப் பெயரைக் கொண்டதால் கிடைத்த சந்தர்ப்பவாத அரசியல் என ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருக்கும் எந்த ஒரு நல்ல மனிதனயையும் அசைத்துப் பார்க்கும் கயவோளித் தனங்களை கண்ணுரும் யாரும், எப்படி இந்த தடியெடுத்தவர்களின் கூடாரத்தில் நல்ல கொள்கை பிடிப்புள்ள, பொதுநலம் மிக்க மனிதர்களை கண்டறிந்து வாக்களிப்பதென மனம் தொய்வுருவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன இந் நிலையில் நானே குழம்பிப் போய் உள்ளேன், சந்தோஷ் என்று அவரிடம் கூறினேன். மேலும் சரியான ஒரு மாற்று அணி வேறு தோன்றாத இக்கால கட்டத்தில் இளைஞர்களை உசிப்பிவிட்டு எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அழைப்போம் நாம்?

அமெரிக்காவில் இம்முறை ஓபாமாவிற்கு இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் புதிதாக எப்பொழுதும் இல்லாத அளவில் இத் தேர்தலில் ஓட்டளிக்க முன் வரப் போகத்தான் அந் நாட்டில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்று சுட்டிக்காட்டியிருந்தார் சந்தோஷ். அது உண்மைதான். இருந்தாலும், ஓபாமாவின் அரசியல் நிலைப்பாடுகள், தனது ஆட்சி அமைந்தால் எந்த திசையில் நாட்டை எடுத்துச் செல்வேன் போன்ற வலிமையான, தெளிவான கருத்துக்களை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக நம் அரசியல் வாதிகளைப் போன்று பெரிய அளவில் லஞ்ச, லாவண்யங்களில் திளைத்து வளராதா ஒரு இளைஞர் அவர்.

ஆனால், நம் நாட்டின் அரசியல் நிலையோ மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. புது காற்று உட் புகுவதற்கு ஏற்ற சூழ்நிலை இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந் நிலையில் புது ஓட்டுக்களை சோகரிப்பதின் மூலம் எந்த ஒரு மாற்றத்தை நாம் பெரிய அளவில் ஏற்படுத்தி விட முடியும் அல்லது எதிர்பார்க்க முடியும்? தமிழகத்தில் மூன்றாவது அணி எந்த அரசியல் கட்சிகளையும் சாராத ஒன்று நிகழ்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்த பொழுதினும் அப்படி ஒரு மாற்றம் நிகழாமல் போனது ஒரு பெரிய இழப்புதான் நமது மாநில ஜனநாயகத்திற்கு.

நிலைமை அப்படியாக இருக்கையில் திருடர்களில் எந்த திருடர்கள் நியாயமாக திருடுகிறார்களோ அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்போமென்ற ஒற்றையடிப்பாதையில் தேர்தல் தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மக்களை கொணர்ந்து இங்கு வைத்திருக்கிறோம். இச் சூழ்நிலையில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை நான் எவ்வாறாக வலியுறுத்துவது, மாற்றம் என்பது எப்பொழுது முழுமையடையமெனில் அவ் மாற்றத்திற்கான தொடக்கச் சுழி இட்ட பாதைக்கு வலிமை சேர்ப்பதில்தானே சாத்தியப் படும், அப்படியெனில் இங்கே அந்த தொடக்கச் சுழி எங்கே? தேர்தெலுக்கென மக்களின் வரிப்பணத்தை வாரியெரைத்து, நாடு தழுவிய தேர்தல் ஏற்பாடுகள் மெனக்கெட்டு செய்யப்படும்பொழுது "தேர்தல் புறக்கணிப்புகள்" தனக்குத் தானே மக்கள் சூடு வைத்துக் கொள்வதற்கு சமம் எனும் பொழுது மக்களும் தாங்களாகவே முன் வந்து வாக்களித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிகோலிடுவது அவசியமாகிறது.

உங்களுக்கும் இது மாதிரியே தோனியிருக்கும்தான் இருந்தாலும் நாம கண்டிப்பா ஓட்டுப் போடணுங்க.

ஆனால் இங்கே தொக்கிநிற்கும் ஒரு கேள்வி, யாருக்கு அவ் ஓட்டு? நல்ல சுயேச்சை வேட்பாளர்களை இனம் காண்பது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தீர்வோ!




பி.கு: இது தொடர் பதிவில்லையா, அதுனாலே விருப்பமுள்ளவங்க நீங்களும் கலந்துக்கிட்டு இது தொடர்பா பதிவுகளை போட்டுத்தாக்குங்கப்பா, படிப்போம்.

24 comments:

தருமி said...

நாமளும் இதப் பத்தி எழுதிரலாமாவென நினச்சேன். அதுக்குப் பிறகுதான் சந்தோஷின் பதிவின் தலைப்பு நினைவுக்கு வந்தது. ஓ! இது நமக்கெல்லாம் இல்லை என்று தெளிந்து கொண்டேன்!

:)

ஆ.ஞானசேகரன் said...

யாருக்குதான் ஒட்டு போடலாம்... தெரியவில்லை ஞானி சொல்வது போல் 49-O போட முடியுமா?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Anonymous said...

existing system has failed on all grounds... so we need a new system apart from the parliment path..

SO
BOYCOTT THE POLLING. JOIN TO NEW DEMOCRATIC REVOLUTION

கவிதா | Kavitha said...

//இங்கே தொக்கிநிற்கும் ஒரு கேள்வி, யாருக்கு அவ் ஓட்டு? நல்ல சுயேச்சை வேட்பாளர்களை இனம் காண்பது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தீர்வோ!//

அப்படித்தான் யோசிக்க வேண்டியுள்ளது.. :( ஆனால்.. அதுவும் தேர்வது ரொம்ப கஷ்டம்..

ஆனால் நம் ஓட்டையும் வீணாக்காமல், நம் கோபத்தையும், யாரும் ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க தகுதியானவர்கள் இல்லை என்பதை காட்ட 49-O வை பயன்படுத்தலாம்.

Thekkikattan|தெகா said...

நாமளும் இதப் பத்தி எழுதிரலாமாவென நினச்சேன். அதுக்குப் பிறகுதான் சந்தோஷின் பதிவின் தலைப்பு நினைவுக்கு வந்தது. ஓ! இது நமக்கெல்லாம் இல்லை என்று தெளிந்து கொண்டேன்!//

தருமி, உங்களுக்கு ஏதுங்க வயசு? அதெல்லாம் தெளிந்து அறிந்து கொண்டதெல்லாம் இருக்கட்டும் இந்த சீரிஸ்ல நீங்க ஒரு பதிவு போடுறீங்க, அம்புட்டுத்தேன் சொல்லிப்புட்டோம்.

Santhosh said...

பிரபா,
முதலில் மக்களுக்கு ஓட்டு போடும் பழக்கத்தை உண்டாக்குவோம் அப்புறம்.. நல்ல வேட்பாளர்களை பத்தி யோசிப்போம்... முதலில் நம்ம திருந்திட்டு அப்புறம் அவங்களை திருந்த பார்ப்போம்...

ஒரு தொகுதியில் எல்லாரும் திருடர்களாக இருக்க மாட்டாங்க அப்படியே இருந்தாலும் ஒரு நல்ல திருடனா பாத்து ஓட்டு போட பழகுவோம் அப்புறாம் தானா நல்லாங்களும் தேர்தலில் நிப்பாங்க..

Santhosh said...

//நாமளும் இதப் பத்தி எழுதிரலாமாவென நினச்சேன். அதுக்குப் பிறகுதான் சந்தோஷின் பதிவின் தலைப்பு நினைவுக்கு வந்தது. ஓ! இது நமக்கெல்லாம் இல்லை என்று தெளிந்து கொண்டேன்!

:)//
தருமி சார்,
நீங்க எல்லாம் இப்படி சொல்லப்படாது.. நீங்களும் யூத் தான்...

என்னோட அழைப்பு இளைஞர்களுக்கு தான் ஏன்னா இப்ப அவங்களிடம் தான் ஓட்டு போடும் பழக்கம் ரொம்ப கம்மி.. :(.. நீங்க எல்லாம் கண்டிப்பா ஓட்டு போடுவீங்கன்னு தெரியும் :)...

நீங்க ஏன் இந்த தொடரை தொடர கூடாது..

Thekkikattan|தெகா said...

யாருக்குதான் ஒட்டு போடலாம்... தெரியவில்லை ஞானி சொல்வது போல் 49-O போட முடியுமா?//

வாங்க ஞானசேகர்,

மாற்றம் மிக மெதுவாகத்தான் நடந்தேறும் நிலையில் இன்று நாம் இருப்பதாக படுகிறது. அதற்காக இவ்வளவு பெரிய பொருளாதார செலவைச் செய்து அதன் இழப்பினூடாக(49-0) உடனடி மாற்றத்தை நிகழ்த்துவது கடினம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் தன்னலமற்ற பணத்திற்கு விலை போகாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்து புதுக் காற்றை உட் செலுத்தினாலே உண்டு விடிவுகாலம்.

Thekkikattan|தெகா said...

existing system has failed on all grounds... so we need a new system apart from the parliment path..

SO
BOYCOTT THE POLLING. JOIN TO NEW DEMOCRATIC REVOLUTION
//

Anony, the first statement somewhat is agreeable; but the second one "apart from the parliament path.." - how is that possible, man? Can you explain me more about it, plz?

And by the way, what is and where is happening the "new democratic revolution?"

காட்டாறு said...

தயவு செய்து இந்த 49-0 முழு விபரமும் தெரியாது தழுவாதீங்க. எனக்கென்னம்மோ அது விபரீதத்தில் கொண்டு விடுமின்னு தோணுது. தொலைநோக்கு பார்வை இல்லாம இந்த ஆயுதத்தை கையிலெடுப்பது எனக்கு சரியா தெரியலைங்க. இது பற்றி விவரமா யாராவது பதிவிடலாமே.

Thekkikattan|தெகா said...

அப்படித்தான் யோசிக்க வேண்டியுள்ளது.. :( ஆனால்.. அதுவும் தேர்வது ரொம்ப கஷ்டம்..//

இப்படி நாமே விட்டு பேசலாமா, சொல்லுங்க? நினைச்சா நீங்க கூட தேர்தல்ல நிக்கலாம்தான் :-), ஆனா 'டின்' வாங்கத்தான் ஆள் தேடி வைச்சிக்கணும்...

//ஆனால் நம் ஓட்டையும் வீணாக்காமல், நம் கோபத்தையும், யாரும் ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க தகுதியானவர்கள் இல்லை என்பதை காட்ட 49-O வை பயன்படுத்தலாம்.//

சரி, அப்படிக் காமிச்சிட்டு யார் கையில ஆட்சியைக் கொடுக்க, அடுத்த தீர்வு என்னா? எவ்வளவு விரைவில் புது அரசியல் ஆளுங்களை கண்டுபிடிக்க முடியும்? ஏதாவது மாற்று யோசனை இருந்தா ஒரு பதிவா போட்டுச் சொல்லுங்க கவிதா படிச்சு தெரிஞ்சுக்குவோம்...

கவிதா | Kavitha said...

//முதலில் மக்களுக்கு ஓட்டு போடும் பழக்கத்தை உண்டாக்குவோம் அப்புறம்.. நல்ல வேட்பாளர்களை பத்தி யோசிப்போம்... முதலில் நம்ம திருந்திட்டு அப்புறம் அவங்களை திருந்த பார்ப்போம்...//

:) நம்ம கூட இருக்கவங்க தப்பு செய்தாவே நம்மாள திருத்த முடியல.. இதுல.. அரசியல் வாதிகளை திருத்த பாக்கனுமா? வேற வேலை எதுவும் உங்களுக்கு இல்லை போல.. .அதான் இந்த வேலையில இறங்கிட்டீங்க...

அப்படி எல்லாம் தீடிரென்று ஒரு அரசியல்வாதியை அதுவும் நம்ம அரசியல் வாதிகளை திருத்தவே முடியாது. திருந்தர ஜென்மங்களாக இருந்தால் அவர்களின் ஊழல்கள் குறைவாகவே இருக்கும்.

//ஒரு தொகுதியில் எல்லாரும் திருடர்களாக இருக்க மாட்டாங்க அப்படியே இருந்தாலும் ஒரு நல்ல திருடனா ///

நல்ல திருடனா? எப்படி???? நீங்க நிஜமா காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?!! :)) ஒன்னு செய்யலாம் யாரு எவ்வளவு திருடி இருக்காங்கன்னு ஒரு லிஸ்டு எல்லா வேட்பாளர்களையும் கொடுக்க சொல்லலாம்..அதுல கொஞ்சமாக திருடியவனுக்கு நீங்க ஓட்டு போடுங்க... ஆனா யாரு உண்மையாக நான் இவ்வளவு திருடி இருக்கிறேன் னு சொல்லுவாங்க..?!!


நாம் அடிப்படை யில் இருந்து மாறனும் !!

1. தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கு வேண்டிய அடிப்படை தகுதிகளை முற்றிலுமாக மாற்றனும்
2. கல்வி- இந்த தகுதி கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் கல்வி தகுதியாவது இருக்கவேண்டும். அந்த குறைந்த பட்ச தகுதியையும் மக்களிடமும், அரசியல் வல்லுனர்களிடமும் கேட்டு முடிவு செய்ய வேண்டும்.
3. சாதி, சமூகம், மண்ணாங்கட்டி சார்ந்த வேட்பாளர்கள் ஒதுக்கப்படனும்
4.மீடியாவில் இருந்து வருபவகளுக்கு "ஹீரோ ஒர்ஷிப்" தவிர வேறு என்ன தகுதி வேண்டும் என்பதை முடிவுசெய்யனும்.

சும்மா..சினிமா என்ற மாயையை வைத்துக்கொண்டு அவரவரும் அரசியிலில் மிக எளிதாக நுழைவதை தடுக்கனும்..!!

இப்படி சொல்லிக்கொண்டு போக நிறைய இருக்கு....

கவிதா | Kavitha said...

//இன்னும் தன்னலமற்ற பணத்திற்கு விலை போகாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்து புதுக் காற்றை உட் செலுத்தினாலே உண்டு விடிவுகாலம்.//

Excellent !! This is what I mean to say..!! தன்னலமற்ற' ன்னு சொன்னீங்க பாருங்க.. சூப்பர்..

ஆனா அப்படி நம்ம ஆளுங்க எங்க வருவாங்க...

நம்ம இளைஞர்'களுக்கு ஒரு நல்ல ஐடி கம்பெனி பார்த்து வேலைத்தேடிக்கவும், அவங்க குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதாக சொல்லிக்கொண்டு, சம்பாதிக்கும் பணத்தை எப்படி எல்லாம் செலவிடமுடியுமோ அப்படி செலவிடவும் தான் கற்றுவைத்து உள்ளார்கள். கேட்கப்போனால், "xxxx மட்டை" என்று பதிவிட்டு என்னை திட்டுவார்கள்.. இல்லயேல்.. வேலைய பாரு. .எங்க பர்சனல் விஷயத்தில் தலையிட நீ யாரு" ன்னு கேட்பாங்க..

என்னக்க்கு நம் இளைஞர்களை பார்த்து தொக்கி நிற்பது இந்த :) சிரிப்பு மட்டுமே.... :)

கவிதா | Kavitha said...

//இப்படி நாமே விட்டு பேசலாமா, சொல்லுங்க? நினைச்சா நீங்க கூட தேர்தல்ல நிக்கலாம்தான் :-), ஆனா 'டின்' வாங்கத்தான் ஆள் தேடி வைச்சிக்கணும்...

//

உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி..!! ம்ம் ?!!

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

//முதலில் மக்களுக்கு ஓட்டு போடும் பழக்கத்தை உண்டாக்குவோம் அப்புறம்.. நல்ல வேட்பாளர்களை பத்தி யோசிப்போம்... முதலில் நம்ம திருந்திட்டு அப்புறம் அவங்களை திருந்த பார்ப்போம்...//

இதுவும் சரியான வாதம்தான் ஒத்துக்கொள்கிறேன். மக்களில் பல பேருக்கு இன்று ஒரு விதமான நோய் பீடித்திருக்கிறது, அது அண்டைய வீட்டுக்காரன் எப்படி வாழ்கிறான், எப்படியாகினும் பொருளீட்டுவதில் ஈடுபட்டு என்று பார்த்து தானும் எப்படியாகினும் பணத்தை ஈட்ட வேண்டமென்ற மன நோயால். அதனாலே ஒட்டு மொத்த கூட்டமே விட்டேத்தியாக அவனை திருந்தச் சொல்லு, பின்னே நான் திருந்திரேங்கிற கொள்கைக்கு போயாச்சு.

இது போன்ற எண்ணவோட்டத்தின் அடிப்படையில்தான் இன்னமும் இந்த அரிசி, ட்டிவி, முட்டை, செருப்புன்னு கொடுத்து மக்களின் சுய மரியாதையை மழுங்கடித்து, பிறகு பெரிய தவறுகளுக்கு வழிகோணி கொடுப்பது, அதுவும் நாட்டை ஆளும் கனவான்களே அதற்கு வித்திடுவது.

இதற்கெல்லாம் முற்றுப் புள்ளியாக மக்களே, தான் எவ்வழியில் வழி நடத்தி செல்லப் பட்டுக் கொண்டிக்கிறோமென்பதனை உணர்ந்து திருந்தி பிறகு ஆட்சியாளர்களிடம் ஓட்டாக அளித்து ஒரு நாட்டை கட்டியமைத்தால்தான் உண்டு... இது எப்போங்க, பணத்தாசை ஒழிஞ்சு பொதுநலம் மேலோங்கிறது... இதுவும் ஒரு சுழற்சிதான் திரும்பவும் மாறும்...

//ஒரு தொகுதியில் எல்லாரும் திருடர்களாக இருக்க மாட்டாங்க அப்படியே இருந்தாலும் ஒரு நல்ல திருடனா பாத்து ஓட்டு போட பழகுவோம் அப்புறாம் தானா நல்லாங்களும் தேர்தலில் நிப்பாங்க...//

இதுக்கு கவிதா சில விசயங்களை மேற்கோள் காட்டியிருப்பாங்க பாருங்க அது இன்றைய கால கட்டத்தின் அப்பட்டமான இந்தியா. அப்படியாக இருப்பதால்தான் நாம் இன்னமும் ஆஃப்ரிகாவின் பல நாடுகளைப் போல நமக்கு நாமே உலக மேடையில் குழி வெட்டிக் கொண்டிருக்கிறோம்!

Thekkikattan|தெகா said...

//தயவு செய்து இந்த 49-0 முழு விபரமும் தெரியாது தழுவாதீங்க. எனக்கென்னம்மோ அது விபரீதத்தில் கொண்டு விடுமின்னு தோணுது. தொலைநோக்கு பார்வை இல்லாம இந்த ஆயுதத்தை கையிலெடுப்பது எனக்கு சரியா தெரியலைங்க. இது பற்றி விவரமா யாராவது பதிவிடலாமே.//

வாங்க காட்டாறு! என்ன திடீர்னு இந்தப் பக்கம் பாய்ச்சல்(ஆறு) :-) . உங்கள மாதிரியேதான் எனக்கும் இந்த 49-0 ஒரு மண்ணும் புரியல! அறிஞ்சவிங்க, புறிஞ்சவிங்க இதன் சாதக-பாதகத்தைப் பத்தி இன்னும் விளக்கமா எழுதலாம். நாம ரொம்ப பயந்துக்க வேணாம், மக்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு ரோசம் வந்துட்ட மாதிரி தெரியல :-)).

கவிதா | Kavitha said...

இன்னும் ஒரு சில விஷயத்தை சொல்லனும்..

1. ஓவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் போதே.. short term, long term நல த்திட்டங்களை சப்மிட் செய்யனும்.. அதுவும் முழுமையாக ஒரு பிராஜக்ட் ரிப்போர்ட் போல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நலத்திட்டமும்,
எவ்வளவு காலத்தில்,
எவ்வளவு செலவில்,
அதனை நடைமுறை படுத்த தேவையானவை
Includes contractors details,
அதற்கு அரசாங்கத்தின் உதவி எந்த விதத்தில் தேவை,
அவராக அவரின் நலத்திட்டங்களுக்கு எப்படி எந்த விதத்தில் உதவுவார்..என்பதை அவர் தேர்ந்தெடுத்தல் கண்டிப்பாக அதனை அவர் செயற்படுத்துவார் என்ற எழுத்து மூலம் எழுதிக்கொடுத்த பின்னரே அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ள படவேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் தான் நிற்கும் தொகுதிக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கையில் எடுத்து நலத்திட்டத்தை அறிவித்து, தேர்தெடுக்கப்பட்டவுடன் அதை நிறைவேற்றினால்.....

நினைத்துப்ப்பார்க்கவே நன்றாக இருக்கிறது..

2. பதவு ஓய்வு..மற்ற வேலைகளுக்கு இருப்பது போல்..அரசியல்வாதிகளுக்கும் கட்டாய பதவி ஓய்வு குறிப்பிட்ட வயதில் கொடுத்து அனுப்பவேண்டும். வேண்டுமானால் அட்வைசாராக இருந்துக்கொள்ளட்டடும். அப்போது தான் விரைவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 45-50 வயது வரை ஒருவர் அரசியலில் இருக்கலாம்..

கவிதா | Kavitha said...

//SO
BOYCOTT THE POLLING. JOIN TO NEW DEMOCRATIC REVOLUTION
//

Mr.Anony, plz do explain in detail what it is? if you could come in your real name..would be greatful.. first try to show ur face out. .nothing wrong u r gng to say right !! ?? :)

A Simple Man said...

//1. தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கு வேண்டிய அடிப்படை தகுதிகளை முற்றிலுமாக மாற்றனும்
2. கல்வி- இந்த தகுதி கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் கல்வி தகுதியாவது இருக்கவேண்டும். அந்த குறைந்த பட்ச தகுதியையும் மக்களிடமும், அரசியல் வல்லுனர்களிடமும் கேட்டு முடிவு செய்ய வேண்டும்.
3. சாதி, சமூகம், மண்ணாங்கட்டி சார்ந்த வேட்பாளர்கள் ஒதுக்கப்படனும்
4.மீடியாவில் இருந்து வருபவகளுக்கு "ஹீரோ ஒர்ஷிப்" தவிர வேறு என்ன தகுதி வேண்டும் என்பதை முடிவுசெய்யனும்.
///

வேட்பாளர்கள் கட்சி வாரியாக இல்லாமல் அந்தந்த தொகுதியை சேர்ந்த தகுதி வாய்ந்த சிலரைக் கண்டறிந்து அதிலிருந்து 2 பேரைத் தேர்ந்தெடுத்து ஒருவர் ஆட்சியிலும் மற்றவரை எதிரணியாகவும் செயல்படச் செய்யலாம்

தேவன் மாயம் said...

/இங்கே தொக்கிநிற்கும் ஒரு கேள்வி, யாருக்கு அவ் ஓட்டு? நல்ல சுயேச்சை வேட்பாளர்களை இனம் காண்பது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தீர்வோ!//
சுயேச்சைகளும் விலைபோகும் மாடுகள்தானே!

ராஜ நடராஜன் said...

கட்சிகளின் முழு பட்டியல் மற்றும் எதிர்பட்டியல் சேர்ந்தவுடன் நாமே ஒரு குட்டி தேர்தலை நடத்தி விடலாம்.இருக்கிற சொத்தையில இது கொஞ்சம் பழுதில்லங்கிற மாதிரி சிலரை சிபாரிசு செய்யலாம்.

Unknown said...

//நம்ம இளைஞர்'களுக்கு ஒரு நல்ல ஐடி கம்பெனி பார்த்து வேலைத்தேடிக்கவும், அவங்க குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதாக சொல்லிக்கொண்டு, சம்பாதிக்கும் பணத்தை எப்படி எல்லாம் செலவிடமுடியுமோ அப்படி செலவிடவும் தான் கற்றுவைத்து உள்ளார்கள்.//

இதெல்லாம் பேச நல்லா இருக்கும், இல்லைன்னா ஆய்த எழுத்து மாதிரி படம் எடுக்க நல்லா இருக்கும். இப்போ நானே என் வேலையை விட்டுட்டு எம்.பி எலெக்ஷன்ல நிக்கிறேன்னு வச்சிக்கோங்க, எத்தனை பேர் ஓட்டுப் போடுவாங்க. எம்.பி தேர்தல் வேண்டாம் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலாகவே கூட இருக்கட்டும், ஊருக்கு நல்லது செய்து நானும் பஞ்சாயத்து தேர்தலில் நின்னு ஜெயித்து இன்னும் என் கிராம மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சா மற்ற அரசியல்வாதிகள் விடுவார்களா? அரசியல்வாதிகளை விடுங்க, ஒரு பைசா செலவு செய்யாம (அல்லது தேர்தல் கமிஷன் குறிப்பிட்ட வரையறைக்கு மட்டும் செலவு செய்து) தேர்தல்ல நின்றால் நம்ம மக்களில் எத்தனை பேர் எனக்கு ஓட்டுப் போடுவாங்க? காசை வாங்கிக்கிட்டு ஓட்டைக் குத்துற ஆட்டுமந்தை குணமும், தேர்தல்ன்னா அன்னைக்கு ஒரு நாள் லீவ் கிடைச்சுதுன்னு வீட்டுக்குள்ளே உட்கார்ந்துகொண்டு தொலைகாட்சியில் எதாவது ஒரு மெகா அறுவை ப்ரோகிராமை ரசிக்கும் மத்தியதர மனப்பாண்மையும் மாறும் வரையில் நம்ம நாடு இப்படி தான் இருக்கும்.

Thekkikattan|தெகா said...

வேட்பாளர்கள் கட்சி வாரியாக இல்லாமல் அந்தந்த தொகுதியை சேர்ந்த தகுதி வாய்ந்த சிலரைக் கண்டறிந்து அதிலிருந்து 2 பேரைத் தேர்ந்தெடுத்து ஒருவர் ஆட்சியிலும் மற்றவரை எதிரணியாகவும் செயல்படச் செய்யலாம்//

அபுல்,

இதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனா, ரொம்ப தூரம் விலகி வந்துட்டோமோ...

/சுயேச்சைகளும் விலைபோகும் மாடுகள்தானே!//

தேவன்,

அதே! யாருக்கும் வெக்கமில்லை அரசியல் என்று வந்துவிட்டால் என்ற நிலைதான் இன்றைய நிலை...

விலை போகாட்டின்னா உசிரு போயிடும் போலவே!!

Related Posts with Thumbnails