Friday, November 30, 2007

இரவு நேர வேலையால் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்!

இன்றைய சூழ்நிலையில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கொடுத்த பகல் பொழுது போதாமல் இரவையும் பகலாக்கி உற்பத்தியைப் பெருக்கி பெரியத் திரை ட்டி.வி பெட்டி வாங்க வேண்டுமென அயராமல் நாடுகள் தோரும் உழைத்து வருகிறோம். இதில் என்ன வேதனையான மற்றுமொரு விசயமென்றால் இது போன்ற ஷிஃப்ட்களில் வேலையிலிருப்பவர்கள் மிக சொற்பமாகவே தன் வீட்டாருடன் ஊடாடி மகிழும் சூழ்நிலை என்று நினைத்த நேரம் போய், இப்பொழுது தலையில் ஒரு இடியை இறக்கி இருக்கிறது அண்மைய ஆராய்ச்சிகள்.

அது என்னவெனில் இது போன்ற இரவு நேர ஷிஃப்ட்களில் (Graveyard Shift) வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக, ஆண்களுக்கு ப்ராஸ்டேட் (Prostate) புற்று நோய் வருவதற்கான அனேகத்தன்மை அதிகமாக இருக்கிறது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கான காரணமாக மெலடோனின்(Melatonin) என்ற நிறமியின் குறைவுத் தன்மை பெண்களில் ஓவரியன் ஈஸ்ரோஜனை அதிகரிக்கச் செய்கிறதாம். ஆனால், இந்த மெலடோனின் வந்து உடம்பில் கட்டிகளை வளர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டதாம், ஆனால் இரவு நேரங்களில் கூட அதிக வெளிச்சத்தில் இருந்து வேலை செய்ய நேர்வதால் இதன் உற்பத்தி பாதிக்கப் பட்டு உடலில் முன் சொன்னது போல சில ஹார்மோன்களின் உற்பத்தியை சமச்சீரற்ற நிலைக்கு தள்ளுவதால் இது போன்ற வியாதிக்கு காரணமென்று அறியப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 75,000 இரவு நேர பணி புரியும் செவிலியர்களிடம் நேர்காணல் கண்டு அவர்களின் புற்று நோய் பின்புலம் சார்ந்த கேள்விகளை அறிந்து 10 வருடங்கள் மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டதில், இவர்களுக்கு இரவு நேர பணியிலேயே இல்லாத பெண்களை விட (60%) அதிக அளவில் புற்று நோய் தாக்கியதாக கண்டறிந்தார்களாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு, இயற்கைக்கு புறம்பாக உயிரிய(உடம்பு) சங்கீதத் (Biological Clock) தன்மையை உடைத்து நாற்பட்டு தொடர்ந்து இது போன்று உடம்பை தவறுதலாக உட் படுத்தினால், லாஜிக்கலாக யோசித்தாலே நிறைய பின்விளைவுகளை சந்திக்கக் கூடுமென்பது தெளிவாகிறது, இல்லையா?


நன்றி: இது சார்ந்த செய்திகளை மேலும் படிக்க இங்கே, இங்கே மாற்றுக் கருத்தாய்வுக்கு இங்கே போங்க...

4 comments:

சுரேகா.. said...

அய்யா..

ராத்திரி ஆந்தை மாதிரி ஒக்காந்து பொட்டி தட்ற எனக்கு என்ன்ங்க வரும்? ஏற்கனவே ரங்கமணி திட்றாங்க..இப்போ இது வேறயா..சொக்கா...இல்ல தெக்கா..

Thekkikattan|தெகா said...

சுரேகா,

ராத்திரி ஆந்தை மாதிரி ஒக்காந்து பொட்டி தட்ற எனக்கு என்ன்ங்க வரும்? //

உன்னைய விட இங்க மெடாக்கண்டன் எல்லாம் இருக்கோமிங்க கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டு அவங்களுக்குத்தான் பொருந்தும் உங்களுக்கில்லீங்கோவ்...

ரெண்டாவது விதி... நம்ம டாக்டர் சொன்ன காம்போ ;-))

சீனு said...

"இத கேட்டு நான் அப்படியே ஷாக்காகிட்டேன்..."

- இரவு 1 மணிக்கு(ம்) பொட்டி தட்டும் சீனு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான இடுகைங்க தெகா. இதைப் பற்றி விழிப்புணர்வு வந்ததாகவே தெரியவில்லையே!!

Related Posts with Thumbnails