Monday, November 05, 2007

மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு ஆண்களின் பிரசவ பங்களிப்பு!!

அன்றைய இரவும் மற்றைய இரவைப் போலத்தான் எங்களை நாடி வந்தது. ஆனால், அன்றைய இரவுக்கு முற்பகலில் தீபாவளிக்கென துணிகள் எடுப்போமென நிறைமாத கார்ப்பினியை விடாப் பிடியாக பக்கத்தில் இருக்கும் மாலுக்கு(mall) அழைத்துச் சென்றேன். கடைகள் மூட ஒரு இரண்டு மணி நேரங்களே இருக்கும் பட்சத்தில் மூன்று பேருக்கு துணி எடுக்கும் நிலையில் சென்றிருந்தோம். ஒருவருக்கே எடுத்து முடித்த நிலையில் மீதம் ஒரு பதினைந்து நிமிடங்களே கைவசமிருந்தது.

அரக்க பரக்க இன்னொருவருக்கும் எடுத்து முடித்துவிட்டுப் பார்த்தால் கடையின் முகப்பே மூடப்பட்டு இதர கடைகளையும் மூடி விட்டிருந்தார்கள். காரை கிழக்கு முகமாக நிறுத்தி வைத்து விட்டு நுழைந்திருந்த நாங்கள் மேற்கு பக்கமாக திரிந்திருக்கின்றோம். இப்பொழுது ஒரு பக்க வாசலே திறந்திருக்கும் பட்சத்தில் அதன் வழியாக வெளியேறி காரைச் சென்றடைய குறைந்தப் பட்சம் ஒரு 20 நிமிடங்கள் நடக்க வேண்டிருந்தது.

சரியாப் போச்சு என்று நினைத்துக் கொண்டே என்னவளையும் தரத் தரவென்று மெதுவாத்தான் நடக்க வைத்துக் கூட்டிக் கொண்டு வரும் பொழுதே... கூறிவிட்டாள் "என்னாங்க ஏதோ இறங்கின மாதிரி இருக்குன்னு..." எனக்கு கபக்கென்று உள்ளே கிலி பிடித்துக் கொண்டாலும்... சின்னதாக ஒரு ஆசை சுய ப்ரசவித்திற்கு இது அவசியமென்று நினைத்துக் கொண்டேன் :-).

ஒரு வழியாக வெளியே நின்ற செக்யூரிட்டி எங்களின் நிலை பார்த்து பார்க்கிங் லாட்டிலிருந்த அவரின் காரில் எங்கள் வாசல் செல்ல அவராகவே முன்வந்து கூட்டிச் சென்று இறக்கி விட்டார். பின்பு என்னவள் என்னிடத்தே இவர்தான் கடவுள் இப்பொழுதென்று தத்துவம் பேசிச் சிரித்தால். அன்பே சிவமாம்!

இப்படியாக இருந்த எங்களிரவு அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரிய வாழ்க்கை கல்வியாக மாறிப் போனது. நான் எதிர் பார்த்திருந்த நாளாகவும் அமைந்துப் போனது! சரியாக ஒரு பதினொரு மணி வாக்கில் கொஞ்சம் இரத்தம் கசிவதாக கூறினாள், அதனைத் தொடர்ந்து நானும் மருத்துவரை தொடர்பு கொள்ளலாமென அவர் கொடுத்த இரவு எண்ணை தொடர்பு கொண்டேன், இரண்டாவது முறை அழைத்தே மருத்துவ மனையிலிருந்து சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலுரைத்த பின் எங்களை அவர் மருத்துவ மனைக்கே வந்துவிடும் படி அறிவுருத்தினார்.

பதராமல் பக்குவமாக மருத்துவ மனையின் முன் பக்கத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்தே உள்ளே சென்று என்னவளின் கையாலேயே பேப்பர் வொர்க் செய்ய வைத்து விட்டு ஒரு அறையில் சென்று அடைந்து கொண்டோம்.

பதினொன்னரை மணி. பரிசோதித்துப் பார்த்துவிட்டு இது ப்ரசவ வலியின் அறிகுறிதான் என்று நிச்சயிக்கப் பட்டது.

இருங்க, என்னாடா தெகா குழந்தைப் பொறக்கப் போறத இப்படி நீட்டி முழக்கிச் சொல்லிக்கிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்க இல்லையா. விசயமில்லாம நான் உங்க நேரத்தை திருடிக்கிட்டு இருப்பேனா, சொல்லுங்க. சொல்றேன்.

நம்மூரு பெண்களும் சரி, அப்பாவாகப் போகும் ஆண்களும் சரி ப்ரசவமென்பது பெண்களுக்கே எழுதிவைக்கப்பட்ட வலியென்று யாரோ எழுதி வைத்து விட்டதாக நம்பிக்கொண்டு இன்னமும் மாப்பிள்ளையாக தன்னை நினைத்துக் கொண்டு, பல அப்பாக்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் இருப்பார் அந்த முக்கியமான நாளில்; பெண்ணும் பக்கவாக அம்மா வீட்டில் அடி ஆட்களுடன் எதிர் வரும் போரை சந்திக்க "மக்கள் படையுடன்" காத்திருப்பார். இது நம்மூர் சிட்டுவேஷன், இல்லையா?

ஆனால் இங்கே அந்த மக்கள் பூராவும் ஆப்செண்ட் (அது உன் தலையெழுத்துடான்னு சொல்லப்பிடாது, இதனை முழுமையா அனுபவிக்கணுமின்னுதான் என்னோட திட்டமே ;). எப்படி நாம் தனிமையில் ஒரு உயிரை உருவாக்க எத்தனித்து இரண்டு பேர் மட்டுமே போரிட்டமோ அதே நிலையில் நானும் அவளும் தான் இன்று (உதவிக்கு ஒரு மருத்துவருடன்). என்னவளுக்கு கொஞ்சம்அதே எதிர் பார்ப்பு அந்த "மக்கள் படை" இருந்தால் இன்னமும் கொஞ்சம் ஆராட்டி இருக்கலாமே என்று. ஆனால், இப்பொழுது வரும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் முப்பது செகண்டுகள் நிற்கும் வலியை ரொம்பவும் கவனத்துடன் எதிர் கொண்டு வாயால் ஊதியே தனித்துக் கொள்ளும் நிலமை தன்னந் தனியாக.

ஆனால், நம்மூர் மருத்துவ மனைகளில் ஏன் அத்துனை சத்தமும், கையை பிசைந்து கொண்டு வெளியே நடந்து திரியும் பெண்ணின் அப்பாவும், ஊராக வந்து நிற்கும் அத்துனை பெண்களும் உள்ளே வருகிறார்கள். உள்ளே என்ன நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏற்கெனவே பிள்ளை பெற்ற பெண்டீரும் அப்படி படை கலக்குகிறார்கள்? அதனால் தானோ என்னவோ இப்பொழுது முக்கால் வாசி பேருக்கும் மேல் அறுவை சிகிச்சையின் பேரில் ப்ரசவிக்கிறார்கள் போலும். சரி விசயத்துக்கு வருவோம்.

முதல் நாள் இரவு சேர்ந்து, மறுநாள் மாலை வரையிலும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இடுப்பு வலி வரட்டுமென காத்திருந்தோம். என்னவளுக்கு வலியை எப்படி மூக்கில் ஏற்றி வாயின் வழியாக நாகரீகமாக ஊத வேண்டுமென்ற நுட்பம் தெரியாததால் கொஞ்சம் படை கலக்கி வைத்து விட்டால், பயந்து போன இந்த ஊர் செவிலியர்கள், ஷி ஸ் ஹர்டிங்க், ஷி ஸ் ஹர்டிங்க் என்று கூறி கொஞ்சம் மயக்க மருந்தும் கொடுத்து, இடுப்பு வலியையும் துரிதித்தார்கள் என்று நினைக்கிறேன்.

பின்பு வந்தது எபிடூரல் (epidural) என்ற வலியை மறக்கடிக்கும் ஊசி. போட்டதுதான் தெரியும் வலி பறந்து போனது போல. ஆனால், அழுத்தம் தொடர்ந்தது. இப்பொழுது டாக்டரும் உள்ளே வந்தாகிவிட்டது. எனக்கு கொஞ்சம் கலக்கமிருந்தது. எப்படி என்னவள் இதனை முடித்துக் கொடுக்கப் போகிறாள் என்று. டாக்டர், அரை வலி மயக்கத்தில் இருந்தவளிடம் "உன் கணவன் பொறுப்பில்லாமல் ஸ்கீரினுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கிறார், அவருக்கு வேலை கொடுப்போமா" என்று நகைத்து அவளை சிரிக்க வைத்து என்னை வேலையில் அமர்த்திக் கொண்டார்.

இப்பொழுது ஒரு செவிலியின் வேலையை நான் பார்க்கப் போகிறேன். எனது வேலை வலது காலை பிடித்து ஒவ்வொரு முறை இடுப்பு வலி உச்சத்திற்கு போகும் பொழுதும் அழுத்தி பிடித்து வெளியே குழந்தையை தள்ளுவதற்கு உதவி புரிய வேண்டும். ஹும்... கொஞ்சம் மனத்துக்குள் பட படப்பு ஒட்டிக் கொண்டாலும், என்ன அவள் அனுபவிப்பதில் நமக்கு கால்வாசியாவது ஒட்டிக் கொள்ளட்டுமே என்று ஒவ்வொரு முறையும் முக்கி, முனகும் பொழுதும் அவள் காதருகே சென்று இதோ உனது தேவதையின் முடி தெரிகிறது... இதோ வெளியே வந்து விட்டால் இன்னும் மூன்று முறை அவ்வளவேதான் என்று சுய ப்ரசவிக்க உதவி, குழந்தையையும் வெளியே எடுத்து விட்டு, பிறகு பனிக்குடம் எடுத்து, தைக்கும் வரையிலும் அருகமையே நின்றது, வாழ்விற்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

வாழ்க்கைக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தையே போதுமான அனுபவமாக இருக்க வேண்டுமே, எப்படி இந்தப் பெண்கள் அத்தனை வலியையும் சகித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தனது கணவனுக்கு எந்த மகப் பேறு வலியையும் வழங்காமல் தானே முன் வந்து ஏற்றுக் கொண்டு இதில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று எண்ணத் தோன்றியது.

இந்த அனுபவத்தைத் தொடர்ந்து பல கேள்விகள் என்னுள் எழுந்துள்ளது. அது கலாச்சாரம் சார்ந்தது. குழந்தை பெற்றுக் கொள்ளும் சமயத்தில் நமது நாட்டு மக்கள் எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து, வேறு வேலை வெட்டி இல்லாமல் பத்து பதினைந்து பேர் எப்பொழுதும் அந்த பெண்ணையே சுற்றிச் சுற்றி வருவது, கணவனும் வேலைக் களவானியாக எனக்கு ஒண்ணுமே தெரியாதுப்பா என்கிற மாதிரி நடந்து கொள்வது.

ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டும் கூட அதில் உள்ள காம்ளக்ஸிட்டிகளை ஆண்கள் தெரிந்து கொள்ளாமல் உதாசீனப் படுத்துவது ஏன்? என்னமோ பிள்ளையே நான் போட்ட பிச்சைங்கிற மாதிரி, சில ஆண்கள் குழந்தையை தன் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைச்சிக்கிறது... பெண்களும் அதுக்கு தகுந்தபடி ஓவர் பில்டப் கொடுத்துப் பார்த்தாலும் நம் ஆண் மக்களிடையே செல்லு படி ஆகாமல் இருப்பது... இப்படி பல விசயங்கள் வந்து போனது.

இன்னும் இது தொடர்பா பின்னால் எழுதணும். இதுக் கிடையில் ஓவ்வொரு அப்பாவும் தன் பிள்ளை ஒண்னொண்ணும் எப்படி தன் துணைவி வெளியே கொணர்ரான்னு பக்கத்தில இருந்து கண்கூடா காணணும், அப்பத்தான் இந்தியாவில் "குழந்தை தயாரிப்பு" ஒரு தொழிற்சாலை தொழிலா நடைபெறாம இருக்குமின்னு நினைக்கிறேன்.

எது எப்படியோ அப்பாவாகப் போகும் அப்பாக்களா எந்ததெந்த சுகத்தையெல்லாம் சேர்ந்து அனுபவிக்க நினைக்கிற நாம, தெய்வீகக் காதல், வெண்டைக்கா காதல் அப்படின்னும் சொல்லிக்கிட்டு திரியற நாம இந்த முக்கியமான விசயத்தில முன்னம நின்னு நம்ம துணைக்கு உதவி பண்ணுறது அவசியமோ அவசியமின்னு நான் நினைக்கிறேன். அதனை நாம மிஸ் பண்ணோமின்னா, பாதி இழப்பு நமக்குத்தான்.

46 comments:

துளசி கோபால் said...

எல்லாம் நல்லபடி நடந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

ஆம்மா......

//நாம் தனிமையில் ஒரு உயிரை உருவாக்க எத்தனித்து இரண்டு பேர் மட்டுமே போரிட்டமோ //

இது ஏன் இப்படி?

உருவாகும் குழந்தைகள் ஒவ்வொண்ணும் ஆக்ஸிடெண்டுன்னு இல்லையா?

:-))))

Thekkikattan|தெகா said...

நன்றி... நன்றி... நன்றி!! தங்களின் ஏகோபித்த ஆராவாரங்களுக்கிடையே ஒரு மாபெரும் போரில் வெற்றி கொண்டோம்.

//உருவாகும் குழந்தைகள் ஒவ்வொண்ணும் ஆக்ஸிடெண்டுன்னு இல்லையா? //

எனக்கில்லைப்பா... :-)))

மங்கை said...

வாழ்த்துக்கள் தெகா...

அழகான அனுபவம்..கணவன் பிரசவத்தை பற்றி அனுபவச்சி எழுதறது மேலும் அழகு சேர்க்குது... காவ்யாக்கு அழகான அம்மாவும் அப்பாவும்...

நம்மூர்ல பெரியவங்க தான் ஆண்கள் இதுக்கெல்லாம் அவசியம் இல்ல்லைன்னு முடிவு பண்ணி வச்சிருக்காங்க..அது அப்படியே நாமளும் ஏத்துக்கறோம்... மாதாந்திர ஆலோசனைக்கு வர்ரது கூட பெரிய விஷ்யமா நினைப்பாங்க.. இதுல பெண்ணை பெற்ற அம்மா தான் தான் கூட போகனும்னு அடம் வேற.

நல்ல அனுபவம்...மீண்டும் வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் தெக்கி!!

நவன் said...

வாழ்த்துக்கள். ஒரு இலட்சிய புருஷனாக
உங்களை அடையாளம் காண்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

delphine said...

தெகா... அருமையான பதிவு..கருத்துக்கள்...ம்ம்ம்..

பெண்ணும் பக்கவாக அம்மா வீட்டில் அடி ஆட்களுடன் எதிர் வரும் போரை சந்திக்க "மக்கள் படையுடன்" காத்திருப்பார். இது நம்மூர் சிட்டுவேஷன், இல்லையா?/////
இதுதான் நம்மூர் situation....
நம் ஊரில் பெண்கள் பிரசவ வலியில் அழும்போது பெண்ணின் பாட்டியை உள்ளே விடாவிட்டால் ஆஸ்பத்திரியை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள்.
என்னவளுக்கு வலியை எப்படி மூக்கில் ஏற்றி வாயின் வழியாக நாகரீகமாக ஊத வேண்டுமென்ற நுட்பம் தெரியாததால் கொஞ்சம் படை கலக்கி வைத்து விட்டால்,////
This technique should be taught during Antenatal period...
எப்படி நாம் தனிமையில் ஒரு உயிரை உருவாக்க எத்தனித்து இரண்டு பேர் மட்டுமே போரிட்டமோ ///
போரிட்டு உருவாக்கி வெளி கொணார்ந்து விட்டீர்கள்.
காவ்யாவிற்கு வாழ்த்துக்கள்..

தருமி said...

என்னடா தெக்ஸ் சத்தமே காணோமேன்னு நினச்சேன். விஷயம் இதுதானா?
உங்களிருவருக்கும் வாழ்த்துக்களும், பேத்திக்கு ஆசிகளும்.

//உருவாகும் குழந்தைகள் ஒவ்வொண்ணும் ஆக்ஸிடெண்டுன்னு இல்லையா? //
துளசி.
mostly these are all biological accidentsதான். இல்ல?

முத்துலெட்சுமி said...

ம்.. நல்லா எழுதி இருக்கீங்க உங்க அனுபவத்தை.. கூடவே செக்கப் போய் அவங்க கஷ்ட நஷ்டங்களைப்புரிந்து கொண்டால் பெண் மேல் ஒரு கனிவு ஆணுக்கு வரும் என்பது நிஜம் தான்..அதேபோல அக்கறையான கணவன் என்று மனைவிக்கும் ஒரு ஆறுதலும் அன்பும் தோன்றூம்.

கூடவராமல் அதிகம் பிரசவத்தை பற்றி அவனுக்கு தெரியாது என்று மேம்போக்காய் இருப்பதாலேயே பெண்களும் கொஞம் அதீதமாய் அலட்டவேண்டியதாகவும் ஆகிறது..
அப்படி இல்லாமல் இருவரும் எல்லா நிமிடங்களும குழந்தை உண்டான நாளிலிருந்து பிரச்வம் வரை சேர்ந்தே அனுபவித்தால் ஒருவர் மேல் ஒருவருக்கு பாசம் அதிகமாகும்..

Hariharan # 03985177737685368452 said...

வாழ்த்துக்கள் தெகா.

மகேந்திரன்.பெ said...

//இதுக் கிடையில் ஓவ்வொரு அப்பாவும் தன் பிள்ளை ஒண்னொண்ணும் எப்படி தன் துணைவி வெளியே கொணர்ரான்னு பக்கத்தில இருந்து கண்கூடா காணணும், அப்பத்தான் இந்தியாவில் "குழந்தை தயாரிப்பு" ஒரு தொழிற்சாலை தொழிலா நடைபெறாம இருக்குமின்னு நினைக்கிறேன்.//

பின்ன இல்லியா தெகா அதனாலதான் நான் ஒன்றே நன்றுன்னு முடிவு பன்னிட்டேன் :P

Thekkikattan|தெகா said...

//நம்மூர்ல பெரியவங்க தான் ஆண்கள் இதுக்கெல்லாம் அவசியம் இல்ல்லைன்னு முடிவு பண்ணி வச்சிருக்காங்க..அது அப்படியே நாமளும் ஏத்துக்கறோம்... மாதாந்திர ஆலோசனைக்கு வர்ரது கூட பெரிய விஷ்யமா நினைப்பாங்க.. இதுல பெண்ணை பெற்ற அம்மா தான் தான் கூட போகனும்னு அடம் வேற.//

வாங்க மங்கை! நன்றி!!

அந்த "பெரிய"வங்களாலலேதான் எப்பொழுதும் போல ஒரு சோம்பேறிக் கூட்டம் எனக்கென்ன வந்துச்சுன்னு வளர்ந்து வருதுங்க. முழுப் பொறுப்பையும் அவர்கள் கையில் விட்டுப் பார்த்தால் அல்லவா தெரியும் அதில் உள்ள நல்லதும், கெட்டதும். அதற்கெல்லாம் மேலே அது போன்ற ஆட்கள், தான் சாவதற்கு முன்னமேயாவது, ஒரு அடல்டாக முழுமையடைந்து, ஒரே ஒரு நாளாவது வாழ்ந்துட்டு போக ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்... நாமதான் விடுவதே கிடையாதே...

வவ்வால் said...

கஷ்டமான நிலை என்று சொல்ல மாட்டேன், சவாலான நிலையையும் கடந்து விட்டீர்கள், வாழ்த்துகள்!

நம்ம ஊரில் எல்லாமே ஒரு புனித தத்துவத்தின் பெயரில் அணுகுவார்கள், எனவே தான் அப்படி, அறிவியல் ரீதியாகப்பார்த்தால் அப்படி இருக்க முடியாது, காலம் மாற வேண்டும்,அயல்நாட்டில் எல்லாம் கனவனை பிரசவ அறையில் அனுமதிப்பார்கள், இங்கே கணவனாக இருந்தாலும் , ஆண்களை அங்கே விட மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கைனகாலஜி படிக்கவே ஆண்களுக்கு இந்திய மருத்துவக்கல்லூரிகளில் அனுமதி இல்லை.

Deiva said...

congratulations thekki

Thekkikattan|தெகா said...

இ. கொ மற்றும் நவன்,

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!

சந்தோஷ் said...

காவ்யாவின் வருகைக்கு வாழ்த்துக்கள் தெ.கா.

நீங்க சொல்லி இருப்பது ரொம்ப சரி. நிறைய வீடுகளில் ஆண்களின் மனப்பான்மை இது தான். மேலும் நீங்க சொல்லி இருக்குற மாதிரி பெண்களும் கொஞ்சம் அதிகமாகத்தான் பில்டப்பு குடுத்து வெச்சி இருக்காங்க.

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்,

எல்லாம் உங்க ஆசியோட நன்றாகவே நடந்து முடிந்தது. வாங்க நேரா அசத்திப் புடுவோம் பேத்தியோட...

Thekkikattan|தெகா said...

என்னடா தெக்ஸ் சத்தமே காணோமேன்னு நினச்சேன். விஷயம் இதுதானா?

உங்களிருவருக்கும் வாழ்த்துக்களும், பேத்திக்கு ஆசிகளும்.//

வாங்க தருமி! வேற என்னான்னு நினைச்சீங்க, இதான் மேட்டரு, கொக்கு மாதிரி காத்துக்கிட்டு இருந்தோமில்ல உங்க பேத்தியை 'கபக்'கின்னு கேட்ச் பிடிக்கிறதுக்கு...

ஆமாமா, இதெல்லாம் biologically speaking, placing spermatozoans only our responsibility the rest is an accident by itself ;-))

சுந்தரவடிவேல் said...

மூவருக்கும் வாழ்த்துக்கள். இரண்டு நினைவுகளை மலர்த்திவிட்டீர்கள். மூவருக்கும் வாழ்த்துக்கள். இரண்டு நினைவுகளை மலர்த்திவிட்டீர்கள்.

Thekkikattan|தெகா said...

வாங்க முத்துலெட்சுமி,

மிக அழகாக சொல்ல வந்ததை சொல்லியிருக்கீங்க... நன்றி!

//அதேபோல அக்கறையான கணவன் என்று மனைவிக்கும் ஒரு ஆறுதலும் அன்பும் தோன்றூம்.//

அதே, அதே... இல்லையென்றால் இரு பக்கமும் புரிந்துணர்வு அற்ற நிலையில் மோதலாகவே வாழ்வும் நகரக் கூடுமோ...

பத்மா அர்விந்த் said...

Congratulations to you and your wife. I go down memory lane each time I read a blog on pregnancy and childbirth.

Anonymous said...

வாழ்த்துக்கள்! தொப்புள் கொடியை அப்பாவை விட்டு வெட்ட சொல்வார்களே, செய்தீர்களா?

ரவி

தஞ்சாவூரான் said...

தெகா,

வாழ்த்துக்கள், போரில் ஈடுபட்டு வெற்றிபெற்ற இரு தரப்புக்கும் :)

உண்மைதான், பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தால் அது ஒரு பெரிய பலம்தான். என் முதல் குழந்தைக்கு, திருச்சியில் என்னை அந்தப் பக்கமே விடவில்லை! இரண்டாவது குழந்தைக்கு, அரை மயக்கத்துடன் ஸ்கிரீன் பின் (சிசேரியன் என்பதால்) நின்றபோது, இனி 'இந்த மாதிரியான' போர் வேண்டாம் என்று, இருவரும் சமாதானமாகிவிட்டோம்!!

Thekkikattan|தெகா said...

நன்றி ஹரிஹரன்...

வாங்க மகி,

//பின்ன இல்லியா தெகா அதனாலதான் நான் ஒன்றே நன்றுன்னு முடிவு பன்னிட்டேன் :P//

ஒரு பொறுப்புள்ள இந்திய மற்றும் உலக குடிமகனாக நடந்து கொண்டீர்கள்னு சொல்லுங்க, வாழ்த்துக்கள்!!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

பார்த்து ரொம்ப நாட்களாச்சு. எப்படி இருக்கீங்க?

//கஷ்டமான நிலை என்று சொல்ல மாட்டேன், சவாலான நிலையையும் கடந்து விட்டீர்கள், வாழ்த்துகள்!//

மிகச் சரியாக சொன்னீர்கள். இப்பொழுது நினைச்சுப் பார்த்தால் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நானே முழுமையடைந்து வருவதாக உணர முடிகிறது. இந்த உழைப்பிற்குப் பிறகு.

//நம்ம ஊரில் எல்லாமே ஒரு புனித தத்துவத்தின் பெயரில் அணுகுவார்கள், எனவே தான் அப்படி, அறிவியல் ரீதியாகப்பார்த்தால் அப்படி இருக்க முடியாது,//

ஆமாம், பிள்ளையும் பெற்றுக் கொடுத்து விட்டு தீட்டு அது இது வென்று அவளின் மன அழுத்தத்திற்கு தூபம் போடுவதையும் என்னவென்பது. சுத்தமாக இருங்கப்பா அதுக்காக "cave man" காலத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை தானே...

//இன்னும் சொல்லப்போனால் கைனகாலஜி படிக்கவே ஆண்களுக்கு இந்திய மருத்துவக்கல்லூரிகளில் அனுமதி இல்லை.//

அப்படியா? இது எனக்கு புதுச் செய்தி... எங்களுக்கு ப்ரசவம் பார்த்த மருத்துவரே ஒரு ஆண் தான். ஹும்...

micromagician said...

அருமை தெகா..

உங்களால் இவ்வுலகம் கண்ட
அந்த குட்டி பாப்பாவுக்கு
(காவ்யாவுக்கு)
அற்புதங்கள் நுகரும் வாய்ப்பு
அப்பா மூலம் கிடைக்கட்டும்.

அழகிய மொழி வளமை
அம்மா தந்து மகிழட்டும்

(அவராவது ) அன்பு மட்டும்
திறனாய் கொண்டு
அகில முகமூடி கிழிக்கட்டும்...

கலக்குங்க...

micromagician said...

அருமை தெகா..

அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள்..

காவ்யா கொடுத்துவைத்தவர்..

முகமூடி இல்லாத அப்பாவை அடைந்ததற்கு..

நாமக்கல் சிபி said...

//நன்றி... நன்றி... நன்றி!! தங்களின் ஏகோபித்த ஆராவாரங்களுக்கிடையே ஒரு மாபெரும் போரில் வெற்றி கொண்டோம்.//

வாழ்த்துக்கள் தெக்ஸ்!

நாமக்கல் சிபி said...

புது வருகைக்கு சிபி மாமாவின் (தாத்தா!?) வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

கிண்டர்கார்டன்லே இப்பவே ஒரு இடம் போட்டு வைக்கிறேன்!

Thekkikattan|தெகா said...

Deiva,

Thanks for passing by!!

வாங்க சந்தோஷ்,

வேற வழி என்ன சொல்லுங்க... ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்களே அது இப்படித்தான் உருவாகிக்கும் போல ;))

cheena (சீனா) said...

தெகா, அருமைப் பேத்தி காவ்யாவுக்கு வாழ்த்துகள். இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவனிப்பு எப்போதுமே காவ்யாவுக்கு வாய்க்க நல் வாழ்த்துகள்.

இங்கு இந்திய நிலைமையே வேறு. நமது கலாச்சாரம் (??) நம்மை இது மாதிரி எல்லாம் அனுமதிப்பதில்லை. அது சரியா தவறா என்ற வாதத்தினுள் நுழைய விரும்ப வில்லை.

அங்கெல்லாம், கணவனின் அரவணைப்பும் கவனிப்பும், பிரசவ நேரத்தில் தேவை எனக்கருதி கணவனை பிரசவத்தின் போது உடனிருக்க அனுமதிக்கின்றனர். ஒளிப்பதிவும் செய்கின்றனர். நம்மில் எத்தனை பேருக்கு அந் நேரத்தில் கூட இருக்கும் மனத் தைரியம் உள்ளது. சுகப் பிரசவம் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையிலும், ஆண்டவனின் சித்தம் வேறு மாதிரி இருந்தால், நம்மால் அதைத் தாங்கி கொள்ள முடியுமா?

அயல்கத்தில் இருக்கும் எத்தனைஇ ஆண்கள் இதற்கு தயாராக இருக்கிறார்கள்.

நல்ல செயல் எனினும் இன்னும் பலகால்லம் பிடிக்கும் நம் நாட்டில் நடை முறைப் படுத்த.

தங்களின் போராட்டக் குணத்திற்கு பாராட்டுகள்.

Thekkikattan|தெகா said...

சுந்தரா,

எங்கே ஆளயே காணல? எல்லாம் சுகமாக நடந்தேறியது.

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!

Thekkikattan|தெகா said...

வாங்க பத்மா அர்விந்த்...

அழைத்துச் சென்றேனா... நன்று! வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

Thekkikattan|தெகா said...

வாங்க தஞ்சாவூராரே...

அட இரண்டு தேவதைகளுக்கு அப்பாவா... அசத்துங்கப்பா :))

//இனி 'இந்த மாதிரியான' போர் வேண்டாம் என்று, இருவரும் சமாதானமாகிவிட்டோம்!!//

:-)) அது சரி. போர் நிறுத்தம் நல்ல முறையிலே நடந்தேறியதற்கு வாழ்த்துக்கள்...

ஜாலிஜம்பர் said...

வாழ்த்துகள் தெகா.

பிரசவ வேதனையை ஆண்களும் பார்த்தால் , விபத்தைப்போல நடக்கும் பிள்ளைப்பேறு குறையலாம்.ஆனால் வலிக்குப் பயந்து குழந்தை பெற்றுக்கொள்ள எந்தப்பெண்ணும் அஞ்சியதாகத் தெரியவில்லையே!!:-))

நல்லதொரு அனுபவத்தை பதிவு செய்துள்ளீர்கள்.நன்று.

புதுகைத் தென்றல் said...

தாமதமா பின்னூட்டம். காரணம் இன்னமும் தேடித்தேடி படிகிறேன். (பிளாக்கிற்கு புதுசு)

அருமையா எழுதி இருக்கீங்க.


வாழ்த்துக்கள். பதிவுக்கும், தகப்பன் ஆனதற்கும்

Suka said...

அருமை..வாழ்த்துக்கள் தெகா...

Thekkikattan|தெகா said...

சிபி,

தங்களின் வாழ்த்துக்களுக்கும், அட்வான்ஸ் பள்ளி துண்டு போடுதலுக்கும் நன்றிகள் பல!

நலம் தானே?

Thekkikattan|தெகா said...

சீனா அய்யா,

தாமதமான எனது பதிலுக்கு மன்னிப்பு.

தங்களின் ஆசிகளுக்கு நன்றிகள்.

//அயலகத்தில் இருக்கும் எத்தனை ஆண்கள் இதற்கு தயாராக இருக்கிறார்கள். //

அதே, சரியான கேள்விதான். :-)

//தங்களின் போராட்டக் குணத்திற்கு பாராட்டுகள்.//

மிக்க நன்றி! நெடு நாட்களாக கனவுடன் இருந்து பெற்றுக் கொண்ட வாய்ப்பல்லவா இது, விடுவேனா ;)...

Thekkikattan|தெகா said...

கவிதை மூலமாக வாழ்த்துச் சொன்ன மைக்ரோ மாஜிசியனுக்கும்,

மற்றும் ஜாலிஜம்பர், புதுகை தென்றல் & நண்பர் சுகாவிற்கும் எனது நன்றி...

அறிவன் /#11802717200764379909/ said...

முதலில் வாழ்த்துக்கள்,
போருக்குப் பின்னான அமைதிக்கும்,மகிழ்வுக்கும்.
இரண்டாவது மிக அழகாக எழுதி இருந்தீர்கள்..

////////நாம் தனிமையில் ஒரு உயிரை உருவாக்க எத்தனித்து இரண்டு பேர் மட்டுமே போரிட்டமோ //

இது ஏன் இப்படி?

உருவாகும் குழந்தைகள் ஒவ்வொண்ணும் ஆக்ஸிடெண்டுன்னு இல்லையா?

:-))))////////
/////////உருவாகும் குழந்தைகள் ஒவ்வொண்ணும் ஆக்ஸிடெண்டுன்னு இல்லையா? //
துளசி.
mostly these are all biological accidentsதான். இல்ல?////////

அவ்வாறு இருக்கக்கூடாதென ஓஷோ ஒரு புத்தகத்தில் அழகாக விளக்குவார்..

For readers with interest -"From Sex to super-consciousness' by Osho.

வவ்வால் said...

தெகா,
சொந்த அனுபவத்தை வைத்தே எழுதிட்டிங்களா, ரொம்ப துணிச்சல் தான்! வாழ்த்துகள்!
(குழந்தையைப்பார்த்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோனு தத்துவமாக பாடிறாதிங்க :-)))

இந்தப்பதிவு எப்போ போட்டிங்க நான் பார்க்க தவறிட்டேன், இப்போ பார்த்தால் 40 தாண்டி ஓடி இருக்கு , அப்போ ரொம்ப முன்னமே போட்டிங்க போல.சில சமயம் அப்படித்தான் கண்ணைத்திறந்துக்கொண்டே ஒரு குருட்டுத்தனமாக ஓட வேண்டி இருக்கு! :-))

காட்டாறு said...

வாழ்த்துக்கள் தெகா!

உங்க பதிவிலே உள்ள மாதிரி நம்மூர்ல பில்டப் கொடுக்குறாங்கன்னு இங்கே இல்லைன்னு ஒட்டு மொத்தமா ஒத்துக்க முடியல. எல்லாமே நாமிருக்குமிடத்திலுள்ள சூழ்நிலை பொறுத்தே அமைகிறது. இந்தியால பரவலா இருக்குது சொல்லுற நீங்க...இதே நீங்க... இந்தியால இருந்துட்டு குழந்தை பெற்றிருந்தால்... என்ன செய்திருப்பீங்க? யோசிச்சி சொல்லுங்க.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

//இந்தப்பதிவு எப்போ போட்டிங்க நான் பார்க்க தவறிட்டேன், இப்போ பார்த்தால் 40 தாண்டி ஓடி இருக்கு , அப்போ ரொம்ப முன்னமே போட்டிங்க போல.சில சமயம் அப்படித்தான் கண்ணைத்திறந்துக்கொண்டே ஒரு குருட்டுத்தனமாக ஓட வேண்டி இருக்கு! :-))//

நான் நினைக்கிறேன் நீங்க கண்ணைத் திறந்துக் கொண்டே சில இடங்களில் ஓடுவிங்க போல... ஆனா, என் வீட்டுக்குள்ள நடந்தது, ஒரு வவ்வால் diurnalஆ இருந்திருக்கும் போல அதுக்கு nocturnalஆ வந்திட்டு இங்க முன்னமே வந்தது தெரியலை போலிருக்கு :-)).

முன்னமே அந்த வவ்வால் வந்திருக்கு கொஞ்சம் மேலேலேலே போய் பாருங்க, அப்படியே...

எனக்கெப்படியோ பின்னூட்டக் கல்லா கட்டினா சரித்தான்...

வவ்வால் said...

//நான் நினைக்கிறேன் நீங்க கண்ணைத் திறந்துக் கொண்டே சில இடங்களில் ஓடுவிங்க போல... ஆனா, என் வீட்டுக்குள்ள நடந்தது, ஒரு வவ்வால் diurnalஆ இருந்திருக்கும் போல அதுக்கு nocturnalஆ வந்திட்டு இங்க முன்னமே வந்தது தெரியலை போலிருக்கு :-)).//

தெகா,
ஹி..ஹி ஹி கண்டுக்காதிங்க, அதுவும் நான் தான,எனக்கு தலைப்பு மறந்து போச்சு அது எப்படி நம்ம தெகா போட்ட ஒரு பதிவைப்படிக்காம போனோம்னு ஆர்வத்தில அப்படி இரண்டவதாக சொல்லிட்டேன், முன்னமே படிச்சாலும் உங்கள் பதிவு படிக்கும் போதெல்லாம் புதுசாவே தெரியுதே அது எப்படி?(சூப்பர் சமாளிப்புனு சொல்லப்படாது)

இனிமே எல்லாப்பதிவையும் கடைசியாப்படிக்கிறதுனு முடிவுப்பண்ணிட்டேன்!

கலகலப்ரியா said...

படிச்சிட்டேன்.. =)).. பிடிச்சிருக்கு... நல்லாருக்கு.. :)

Related Posts with Thumbnails