நான் பாட்டுக்கு செவனேன்னு நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் வழியில போயிட்டு இருந்தா, இந்தத் தருமி திடீரென்று தமிழகத்தின் விடி வெள்ளிப் பத்திரிக்கைகளில் ஒன்றானதும், படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டுமெனவும் நம்பப்படும் ஆ.வியின் ஒரு டிரெண்ட் செட் ஆர்டிகிளை படித்து விட்டு இங்கு நான் ஏதோ அதில் எழுதும் ஒரு "ஞானத்தை" கீழே போட்டு பதிவொன்று எழுதியதாக அவரது இந்தப் பதிவில் என்னை குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
உண்மையில் நடந்தது என்னான்னா, அந்த சமயத்தில் நிறைய தமிழ் மண பதிவர்கள் அந்த "ஞானத்தை" பத்தி நிறைய எழுதிட்டு இருந்தாங்க, அதுகளை படிச்சிட்டு நானும் ஒரு நாள் தருமிகிட்ட கூகுள் சாட்டில் அரட்டை கொண்டேன். ஆனால், அத்தோட அது மறந்தே போச்சு... ஏன்னா, அது போன்ற பத்திரிக்கைகளும், சன் ட்டி.விக்களும் தானே தமிழக மக்களின் அறிவுக் கண்களை திறந்து அடுத்த கட்டத்திற்கு மக்களை நகர்த்துகிறது. அவர்களுக்கு தெரியாதா எந்த நேரத்தில் எதனை சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டுமென்று, இதில் நம்ம பெரிசா எழுதி என்னாத்தை சொல்லிடப் போறோமின்னு அத்தோட விட்டுட்டு நான் வயிற்றுப் பொழப்பு பார்க்கப் போயிட்டேன்.
இன்னிக்கு மீண்டும் தருமி என்னய நிசமாலுக்குமே அதனைப் பத்தி எழுத வைச்சுட்டார். எழுதறேன்.
அன்னைக்கு தருமிகிட்ட என்ன சொன்னேன். அய்யா, இந்த "ஞானம்" நிறைய படிச்சிட்டு அவரே கூட அது சம்பந்தமான தியரி ஆட்கள்கிட்ட பேசி தனது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு இங்கு அதனை தேனில் குழைத்துக் கொடுத்துக் கொண்டு வரலாம். (அன்னைக்கு சொன்னது மாதிரியே, தருமி, இன்னமும் நான் ஆ.வி படிக்கல). இருக்கட்டும். இருந்தாலும், கேள்விப் பட்டேன், மேலேட்டாமாக மனோத்துவமும், செக்ஸ் கல்வியும் கலக்குமிடத்தில் இருக்கக் கூடிய விசயங்களின் பெயர்களை நுனிப்புல் மேய்ந்தது மாதிரி சொல்லிவிட்டு போனால் பின்னால் அதனை படிக்கும் சாமானியனுக்கு புரிதலில் தவறு நேர்ந்து விட்டால் அது குடும்பத்தினுள் உள்ளவர்களுக்கு குழப்பங்களை விட்டுச் செல்லலாமல்லவா என்றுதான் கேட்டிருந்தேன். அதற்கு உதாரணமாக கீழே காணும் ஒரு விசயத்தையும் உங்களிடத்தே கேட்டிருந்தேன்.
அந்த உதாரணம்:
ஈடிபஸ் மற்றும் எலக்ட்ரா கம்ளக்ஸ் (The Oedipus and Electra complex). இதில் குழந்தைகள் தனது பருவ நிலை குறித்து ஆர்வம் மேலேங்கும் பொருட்டு எதிர் எதிர் பாலின பெற்றோர்களின் மீது சற்று அதிகமாக ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களிடத்தே அதிகமான ஒட்டுதல் இருப்பதனை காண நேரிடும். இதில் ஆண் குழந்தைகள் தனது அம்மாவின் மீது காட்டும் அதீத அன்பை ஈடிபஸ் என்றும், பெண் குழந்தைகள் தகப்பனின் மீது காட்டும் அக்கறையை எலக்ட்ரா காம்ளக்ஸ் என்றும் வகை பிரித்திருக்கிறார்கள்.
இதனில் கவனிக்கப் பட வேண்டிய விசயம், இந்த வகை பால் ஈர்ப்பு செக்ஸ் சார்ந்த கல்வியூட்டுலிருந்து விலகி மனோ தத்துவ ரீதியாகவும் பார்க்கப் பட வேண்டிய ஒரு விசயமாக போய் விடுகிறது. இந்த விசயம் அரைகுறையாக எழுதப் பட்டு பொது இடத்தில் வைத்தால், தவறாக புரிந்து கொள்ளும் பொற்றோர்களில் ஒருவர் சற்றே அஷ்ட கோணலாக அந்த சிட்டுவேஷனை எடுத்துக் கொண்டால் அந்த வீட்டில் என்ன நடக்கும் என்ற ஆபத்தை கருத்தில் கொண்டுதான் உங்களிடத்தில் நான் தெளிவு பெறும் பொருட்டே அந்த உரையாடலை மேற்கொண்டேன். ஆனால், கலாச்சார குடி"தாங்கியா இருக்கும் நிலையிலிருந்து இல்லை தருமி அவர்களே!
இனி பதிவுக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாமல் - பிதற்றல்கள்...
இங்கு நிறைய பேர் மிகவும் முற்போக்குத் தனமான சிந்தனைகளுடன் இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். சந்தோஷம்! நம்மில் நிறைய பேர் சிந்தனை ரீதியில் மட்டுமே தேக்கமுற்றிக்கக் கூடும். ஏனெனில் சிந்தனை என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்ற ரசாயன மாற்றம் மட்டுமே - மூளை சார்ந்து. தான் கூறும், நம்பும் கூற்றினை தனது சுய வாழ்க்கையில் நடைமுறை படித்தி காணும் பட்சத்திலேயே அது எந்த அளவிற்கு தனக்கு சாத்தியம் என்பது விளங்க நேரிடலாம் ஒரு தனிப்பட்ட நபருக்கு.
பெரும் பாலும் நம்மில் பலரும் அந் நிலைக்கு தன்னை இட்டுச் செல்ல அனுமதிப்பது கிடையாது என்றே நினைக்கிறேன். ஏனெனில், தனது வாழ்வை தொலைத்துதான் அது போன்ற பட்டறிவுனை பெற வேண்டுமா என்ற "தப்பித்துக் கொள்ளும்" பொது மனப் பான்மையும், சுய பாதுகாப்புத் தன்மையுமே காரணமாக அங்கே அமைகிறது. அல்லது மற்றொரு தத்துவ கோட்பாட்டு எஸ்கேபிசமாக - அவ அவனுக்கு என்ன தாகம் இருக்கிறதோ அதனை அவன் அவன் விதிப் பயனில் சென்று அருந்தி அனுபவிப்பான் என்ற நோக்கில் விட்டு விலகியிருப்பது.
உதாரணத்திற்கு ஓரினச் சேர்க்கையை பற்றி ஆதரித்துப் அல்லது நிராகரித்துப் பேசுபவர்கள், அது போன்ற ஒரு திருமணத்தில் உள்ள தம்பதிகளுடன் தனது குழந்தைகளை அலைத்துக் கொண்டு வெளியில் சென்று ஒரு உணவு விடுதியில் எதிர் எதிரே அமர்ந்து, அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து உதட்டுடன் முத்தமிட்டுக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் தனது குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உட்கொள்ள நேர்ந்ததுண்டா, அது எது போன்ற ரசாயன மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தியது என்று உணர்ந்திருக்கிறோமா அல்லது அதற்கான ஒரு வாய்ப்பைத்தான் நமக்கு நாமே வழங்கி பார்த்திருக்கிறோமா?
அதனைப் போலவே தானும் ஒரு பொற்றோர் என்ற நிலையிலிருந்து, தான் பெற்ற பெண் மகளை இன்று நிலவும் இந்த "ஹாங் அவுட்" கலாச்சாரத்திலிட்டு அதனூடாக நமக்குக் கிடைக்கும் ரசாயன மாற்றத்தை உணர்ந்திருக்கிறோமா? எத்தனை பேருக்கு இது போன்ற வாய்ப்புகள் அமைந்தும் தூரவே விலகி நின்றிருக்கக்கூடும், அப்படியாயின் எது போன்ற உணர்வு அவர்களை தடுத்திருக்கக் கூடும்? அடுத்தவன் வீட்டுத் தீ அவன் வீட்டுக் கூறையை வந்து தீண்டும் வரைக்கும் என்ற மன நிலையிலா? அல்லது நமக்கு இந்தப் பிறப்பிற்கு தப்பித்துக் கொண்டோம், இது நமது தியரி மனதை காட்டும் நேரமென்ற மேபோக்குத் தனத்திலா?
புரட்சி எண்ணங்கள் மனத்தினுள் வந்து வந்து போகலாம் அதில் ஒரு சதவீத எண்ணத்தையாவது நடை முறை படித்தினாலே அதற்கு பதில் சொல்லும் பொருட்டு தன் வாழ் நாளையே செலவழித்து விட்டிருப்பது தெரியவந்திருக்கும் வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுது.
இன்னும் என்னன்னமோ சொல்ல வேண்டுமென தோனச் செய்கிறது, ஆனால், சொல்லி யாருக்கு என்ன சொல்ல விளைகிறோமென்பது தெரியாமலேயே விழி பிதுங்குவதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.
எனவே வெறுமனே பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்து கொஞ்சமேனும் தனது வாழ்வில் "அப்ளை" பண்ணி பார்த்து கொஞ்சம் முட்டாளாகவேணும் வெளித் தோற்றத்திற்கு தெரிந்தாலும் தன் நிலையில் தெளிவுற்று வாழ்வதே சாலச் சிறந்தது என்பது எனது வாழ்வின் அணுகுமுறை.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Thursday, October 11, 2007
தருமி குறிப்பிட்ட இதோ எனது எழுதாத பதிவு...!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இதற்கெல்லாம் ரொம்ப முறுக்கேற வேண்டாம் தெ.கா,
தருமி கால ஒட்டத்தில் கொஞ்சம் பின் தங்கி இருப்பதால் அப்படி இருக்கிறது, மேலும் நடைமுறையை விட கொஞ்சம் மாறு பட்டு(அது பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும்) செய்வதை புதுமை என எடுத்துக்கொள்ளும் பத்தாம் பசலித்தனம் அன்றி வேறு என்ன.
அவரின் மனோபாவத்திற்கும் சினிமாக்கொட்டகையில் ஒரு ஒல்லிப்பிச்சான் கதாநாயகன் 10 பேரை ஒரே அடியில் வீழ்த்துவதைப்பார்த்து ஆர்ப்பரிக்கும் சினிமா ரசிகனுக்கும் பெருத்த வேறுபாடு இல்லை.
இந்த உதாரணம் அடிக்கடி சொன்னது,
ஒரு மெடிக்கல் ஷாப் கடைக்காரர் கூட அனுபவத்தால் எந்த நோய்க்கு எந்த மருந்தென தருவார் அதனால் மக்கள் மருத்துவரிடம் போகாமல் மெடிக்கல் ஷாப் காரரிடம் தனது நோவுகளை சொல்லி மருந்து வாங்கிகொள்வாரா?
தெகா அண்ணே இப்பல்லாம் நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல்ல. முந்தி மாதிரி குழப்பத் தொடங்கிட்டீங்க..
என்னமோ இந்தப் பந்தி மட்டும் புரிந்தும் புரியாமாலும் மண்டையில் தட்டின மாதிரி இருந்துச்சு.
//புரட்சி எண்ணங்கள் மனத்தினுள் வந்து வந்து போகலாம் அதில் ஒரு சதவீத எண்ணத்தையாவது நடை முறை படித்தினாலே அதற்கு பதில் சொல்லும் பொருட்டு தன் வாழ் நாளையே செலவழித்து விட்டிருப்பது தெரியவந்திருக்கும் வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுது //
சரி எனது புதிய வலைப்பதிவை பார்த்தீர்களா?
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
http://navanulagam.blogspot.com/
நெஜமா நிறைய இங்கே பதிவிலும் பின்னூட்டத்திலும் சொல்லப்பட்ட விஷயங்கள் என் அறிவுத்திறனுக்கு அப்பாற்பட்டே இருக்கின்றன.
:(
வவ்ஸ்,
நீங்கள் அந்த ஆ.வி "ஞானத்தைப்" பற்றி கூறுகிறீர்கள் என்று தெரிகிறது. என்ன செய்வது நமக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள "லிஃப்கோ" தமிழ் டூ ஆங்கிலம் டிக்ஸனரி வாங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சென்று படிப்பதற்கு வசதி வாய்த்தவர்கள் அல்லவா. அதனால் எல்லா விசயத்திலும் ஞானம் மேலோங்கி உலகத்தின் விடிவெள்ளியாக இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லைதான்...
என்ன நவன் திரும்பவும் புரியலையா... சரி, சரி இருக்கட்டும் வயசு வந்ததும் புரிய வேண்டியதெல்லாம் தானா புரியும் :-))) அது வரைக்கும் புரியர வரைக்கும் புரியட்டும் ;)
உங்க வீட்டுப் பக்கம் தானே வந்துட்டாப் போச்சு...
தெகா... நான் வலைப்பக்கம் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு... இன்னைக்கு தான் வந்தேன்... இப்படி குழப்பறீங்களே... இன்னும் 2 தடவை படிச்சு பார்க்கிறேன்...!!!!
ஒரு வேளை வவ்வாலார் மாதிரி தலைகீழே தொங்கிட்டே படிச்சா தான் புரியுமா...???
தெகா
நானும் ரெண்டு நாளா..பதிவ திறந்து திறந்து பின்னூட்ட பார்க்குறேன்..
ஆனா..என்ன போடறதுன்னு தெரியாம
பேசாம போயிடறேன்..சரி இன்னைக்கு இதையே போடுடலாம்னு போட்டாச்சு..
என்னமோ போங்க....
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
தெகா,
எப்படி இருக்கீங்க?
'ஞானம்' சொல்றது பத்தி எனக்கு ஒன்னும் புரிபடலே. ஆனா, பாலியல் பத்தி நம்ம பிள்ளைங்களுக்கு கொஞ்சம் சொல்லி கொடுக்குறதுதான் நல்லதுன்னு நெனைக்கிறேன்.
ஏன்னா, இப்போ உள்ள சூழ்நிலைக்கு, ஊடகங்கள் சொல்ற விஷங்களுக்கு நடுவே நாம இல்லேனா, வாத்தியார்கள் கொஞ்சம் விஷயமும் சொல்லி கொடுக்குறது நல்லதுன்னு நினைக்கிறேன்.
அதே சமயம், தவறான விஷயங்கள் பிஞ்சு உள்ளங்களிடையே ஊடுறுவாத அளவுக்கு சொல்லிக் கொடுக்கனும்னு நினைக்கிறேன்.
Post a Comment