Thursday, December 20, 2007

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - I

ஓவ்வொரு முறையும் தருமி ஏதாவது புதிதாக கண்டுபிடித்து அதனை நம்மிடத்தே கொண்டு வந்து சேர்க்கும் கணம் தோறும், எனக்கு அவர் பொருட்டு உள்ள மரியாதை பண் மடங்கு உயர்கிறது. இந்த வயதிலும் அவருக்குள்ள நம்பிக்கை, அளவிற்கரிய!

அவர் இந்த தலைப்பில் "உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்" என்றதொரு நம்பிக்கையூட்டு பதிவிட்டிருக்கிறார். எல்லோரும் இதனை பயன் படுத்திப் பாருங்கள். எந்த அளவிற்கு நமது அரசாங்க இயந்திரம் செயல் படுகிறது என்பதனை கண் கூடாக காணலாம்.

அவர் அங்கு ஒரு சிறு குழந்தைக்கே உரிய மகிழ்ச்சியுடன், நம்பிக்கையூட்டுமிதத்தில் அப்பதிவை இயற்றிருந்தார். ஆனால், என்னுடைய பதிவு சற்றே அவ் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி அதிலிருந்து நழுவிச் செல்வதாக இருக்கலாம். அவர் பதிவிலேயே என்னூடைய பின்னூக்கியாக இப்படிச் சொல்லியிருந்தேன்...

...Thekkikattanதெகா said...

//அடிமேல் அடி வைத்துப் பார்ப்போமே என்ற நம்பிக்கைதான்; ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஆதங்கம்தான்.//

இந்த நம்பிக்கைங்கிற ஒரு விசயத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் செய்யணும். ஆனா பாருங்க தருமி, டெல்லியில இருக்கிற Ministry of External Affairs-அலுவலகத்துக்குள்ள நுழைய இன்னமும் நுழைவாயிலிள் நிற்கும் காவலாளிக்கு ரூ 200 அழுதாத்தான் உள்ளே விடுவேன்னு அடம் பிடிக்கிறது இன்னமும் நடக்குதே... இது ஒரு ஆறு மாசத்திற்கு முன்பு நடந்தது.இப்படி இருக்கும் பொழுது வெளிப்பகட்டிற்கென்று திட்டங்களை இயற்றிவிட்டு ஒன்றும் நடைபெறாமல் இருப்பதில் என்ன இருக்கிறது.

Wednesday, December 19, 2007 10:00:00 AM ...

அதற்கு மறுமொழியாக - நம்ம வவ்வால் நிசர்தனத்தை ஒப்புக் கொண்டு இப்படியும்...

வவ்வால் said...

தெகா,நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, இங்கே லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்பிளெய்ண்ட் கொடுத்து முதல் தகவல் அறிக்கை வாங்க முடியாது காந்தி நோட்டு இல்லாம? அவன் குற்றவாளியைப்பிடித்து நமக்கு நிவாரணம் தருவது அடுத்த விஷயம்...


ஆனா, நம்ம டாக்டர் ...

delphine said...

தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?.. no hard feelings thekaa... but thats the truth!
Wednesday, December 19, 2007 10:21:00 AM ... இப்படியும்,

சர்வேயர் வந்து அடிச்சி இப்படியும் ...

SurveySan said...

எல்லாரும் எடுத்து எடுத்து கொடுத்துத்தான பழக்கப் படுத்தியிருக்கோம்? ஒரு ரெண்டு பேர் கொடுக்காம, உள்ள போய் புகார் கொடுத்துப் பாத்தா ப்ரச்சனை சரியாகியிருக்கும் ;)...
Wednesday, December 19, 2007 9:03:00 PM .

பாருங்க, தருமி அவரோட தரப்பு ஒரு விசயத்தை சொல்லிட்டு, இப்படியும் சொல்லியிருந்தார் ... தெக்ஸ் சொல்வது போல் எப்போதும் எங்கும் அப்படி நிமிர்ந்து நிற்க ஆசையாயிருந்தும் அது முடியுமான்னு தெரியாதுதான்... ஒரு அனுபவஸ்தர்ங்கிற முறையில.

அவைகளை எல்லாம் படிச்சிட்டு நான் சொல்லணுமின்னு நினைச்சு தள்ளி தள்ளிப் போட்டு வந்த விசயம் எப்பொழுதும் போலவே தருமியால் இன்னிக்கு இங்கே வந்து சொல்ல வேண்டியாதாப் போச்சுங்க. எல்லா, அடிக்கும் பதில் சொல்றமாதிரி அவர் பதிவுக்கே ஒரு பதில் எழுதினேன், ஆனா, சொல்றதுக்கு அம்பூட்டு இருக்கும் பொழுது ஒரு abstractஆக எழுதினா என்ன அதில இருந்து கிடைக்குமின்னு சொல்ல முடியாம அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் பொழுதே, சரி தருமி நான் தனிப் பதிவா போட்டு விடுகிறேன்னு சொல்லிட்டு இப்ப இங்க கொண்டாந்து இருக்கேன்.

அந்த பின்னூட்டம் இதுதான்... Thekkikattanதெகா said...
//நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, //


வவ்ஸ், நான் டெல்லியில இருந்து தொடங்கினத்துக்கு ஒரு காரணம் உண்டு. தலை அங்கேதானே இருக்கு. ஒரு திட்டம் உருவமெடுத்து, அதனை சர்வ தேச தரத்திற்கு இயக்கணுமின்னு நினைச்சு தொடங்கிற திட்டங்கள் அங்கேதானே தொடங்கி பிறகு மெல்ல, மெல்ல நிறமிழந்து, ஓடித்தேய்ந்து நமது வட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் வந்தடைகிறது.இது இப்படியாக இருக்க, புல்லூருவிகள் அங்கேயே தலை விரித்தாட, இன்னும் கீழே வர, வர அடிப்படை அரசியல் நாகரீகமே தெரியாதவர்கள் எப்படி அதனை கையாளுவார்கள்?

//தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?//

டாக், நான் அங்கே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறவேயில்லையே. அப்படி நடந்ததை கண்ணால் பார்த்ததின் விளைவே இது.இந்த மினிஸ்ட்ரி விஷயமே, ஒன்றும் பெரிதாக அவர்களிடமிருந்து எதிர் பார்த்து சென்றதல்லவே, டாக், என்னூடைய இந்தியக் கடவுச்சீட்டை அவர்களிடம் ஒப்படைக்கத்தான் அங்கே சென்றேன்:-)).

கையூட்டுக்கு எதிர்ப்பாக புதுக்கோட்டை திருமண சர்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தன்று பட்டு வேஷ்டியும், கழுத்து மாலையுமாக நின்று தகராறு செய்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க நான் தயார் என்று நின்ற காலம் என் கண் முன்னால் இன்று வந்து போகிறது... சரி விடுங்க என்னோட அனுபவத்தை தனிப் பதிவ போட்டுடுறேன் ;)...
Thursday, December 20, 2007 8:27:00 AM .

அடடே, நான் இன்னமும் சொல்ல வந்ததை சொல்ல வருவதற்கு முன்னால் இப்படி நீண்ண்டு கிட்டு போகுதே இந்தத் தொடர்... சரி, நான் எதனைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதற்கு முன்னால், நம்மூரில் எந்த அளவிற்கு பணமும், செல்வாக்கும் கொடி கட்டி பறக்கிறது எல்லா நிலைகளிலும் என்ற உண்மையிருக்க, ஆனால், நாம் இன்னமும் இந்த இணையத்தின் மூலமாக ஒரு அரசாங்கத்தையே நடத்த ஆசைப்படுகிறோம் என்ற முரண்பாட்டுடன் நாம் எவ்வளவு தொலைவு போக வேண்டி உள்ளது என்பதனை இந்தப் "பெண்ணாகப் பிறந்தால் by இரா. முருகப்பன்" கட்டுரையைப் படித்தால் வெளிச்சம் போட்டு காமிக்கும், படிச்சிட்டு அப்படியே எல்லோரும் முடிந்தால் தருமி கொடுத்த தளத்தில் ஒரு கம்ளெயிண்ட் கடிதமும் அனுப்பி வையுங்க... கண்டிப்பாக நிறைய பேர் அந்த கட்டுரையை தவற விட்டுருப்பீங்க, அவசியம் படிங்க.

ஏன்னா, நான் பேசப் போற சின்ன சின்ன விசயங்களும் பெரிதாக மாறி பிறகு இதற்கு தொடர்புடையதாக மாறிப்போய் விடுகிறது... பாகம் இரண்டில நான் சந்தித்தவைகளை பகிர்ந்து கொள்கிறேன்...

16 comments:

தருமி said...

//பெண்ணாகப் பிறந்தால் by இரா. முருகப்பன் கட்டுரையைப் ..// படித்தேன். வேதனையான நடப்புகள். இவைகளையெல்லாம் பார்த்து எனக்கு எப்போதுமே நம்பிக்கை மிகவும் குறைவு. நீங்கள் சொல்வதுபோல் நான் ஒரு optimist இல்லையென்பதே உண்மை.

வவ்வால் said...

தெகா,

மீண்டும் , சமூக இன்னல்களின் பின்னனியோடு பதிவிட வருக,...வருக.

இரா.முருகப்பன்.. பல சமூக பிரச்சினைகளைப்பதிவிட்டு இருக்கிறார். இன்று தான் அவரது ஒரு பதிவு படித்தேன், தாழ்த்தப்பட்டவருக்கு கோயில் மண்டபம் வாடகைக்கு தர மறுத்ததாக அதில் சொல்லி இருந்தார். என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை.

இங்கே பார்த்தால் நீங்களும் அவர் பதிவைப்பற்றி சொல்லி இருக்கிங்க.

நிறைய பேர் இது போன்றப்பதிவுகளை கவனிப்பதே இல்லை. உங்கள் மூலம் மேலும் கவனம் ஏற்படும்.

//நாம் எவ்வளவு தொலைவு போக வேண்டி உள்ளது//

கண்டிப்பாக நாம் அதிக தொலைவுப்போக வேண்டும். எல்லாவற்றிர்க்கும் அயல் நாட்டில் இருக்கும் வசதிகளை சொல்வோம், ஆனால் உலகமே சுற்றிவந்தாலும் , நம்மாளுங்க மட்டும், தனி மனித நாகரீகம் அல்லது "civic sense" வளர்த்துக்கொள்வதே இல்லை.

தனிமனித ஒழுக்கம், தேவைகளை குறைப்பது, அதிகார துஷ்பிரயோகம், சார்புத்தன்மை குறைத்தாலே தானாகவே எல்லாம் சரி ஆகிவிடும். அரசு திருந்த வேண்டிய அவசியமே இல்லை, தானாகவே திருந்தும்.

ஆடுமாடு said...

ஐயா, இரா. முருகப்பன் கட்டுரையை படித்தேன். கஷ்டமாக இருந்தது.

இன்னொரு விஷயம். உங்களோடு பகிர:

சென்னை அருகே தம்மாதுண்டு வயலை வாங்கி, பட்டா வாங்க நான்கு மாதமாக அலைந்து கொண்டிருக்கிறேன் செங்கல்பட்டு தாலுகா ஆபிசுக்கு. சர்வேயர் ஒவ்வொரு முறை போகும்போதும், 'எனக்கு நிறைய வேலை. ஒரு கார் அமர்த்துங்க; இடத்தை பாத்துட்டு வந்துடலாம்' என்கிறார்.

குறைந்தபட்சம் கார் வாடகை 1,500 ஐ தாண்டும் என்பதால், என்னால் கார் அமர்த்த முடியாது என்றேன். சரி, அப்ப சேத்துக்கொடுங்க என்றார். எவ்வளவு என்றேன். அதெல்லாம் நாங்க சொல்லணுமா? விசாரிதச்சுத் தெரிஞ்சுக்கிட்டு வாங்க என்றார். விசாரித்தால் அஞ்சாயிரம் வரை என்கிறார்கள். இடத்தை அளந்து எழுத இவ்வளவு என்றால், பட்டாவாக தரும்போது எவ்வளவு கேட்பார்களோ என்ற பயத்தில், நீங்களா தந்தா தாங்க; இல்லைனா ஒரு மசிரும் வேண்டாம்' என்று கத்தி தொலைத்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்த பிறகு மனைவி தொல்லை. கடனை வாங்கியாவது கொடுத்துத் தொலைங்களேன் என்று. அப்படி வாங்க வேண்டாம் என்று இன்னும் உட்கார்ந்திருக்கிறேன். கிடைக்குமோ கிடைக்காதோ.

ஒரு அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவது அபிஸியலாகவே நடக்கிறது. மேற்படி சர்வேயர் கேட்கும் போது, அருகிலேயே இரண்டு மூன்று லேடி ஆபிசர்கள் ஒரு மண்ணும் கேட்காத மாதிரி பைலில் மூழ்கியிருப்பதாக ஆக்ஷன் காண்பிக்கிறார்கள்.

என்ன செய்ய? எங்கு போய் இதை சொல்ல?

இதாவது பரவாயில்லை. வயதான அம்மா ஒருவர். முதியோர் பென்ஷன் வாங்குவதற்காக ஏழு மாதம் அலைவதாகச் சொன்னார். அவரின் முகத்தையும் முதுமையையும் பார்த்தாலே நமக்கு கண்ணீர் வருகிறது. இவர்களுக்கு கருணையே கிடையாதா?

மங்கை said...

தெகா..எனக்கும் இது மாதிரி அனுபவம் இருக்கு... வியாபாரத்துல ஏற்பட்ட பிரச்சனையின் போது கோர்ட்ல சென்னை கோர்ட்ல ஒரு முறை நான் பட்ட அவஸ்தை..ஹ்ம்ம் நினச்சு பார்த்தா...

சுரேகா.. said...

கொதிக்குதுண்ணா..

நம்ம மனசுக்குள்ள ஒரு சுயநீதிமன்றம் இல்லைன்னா..

நாமும் இந்த சாக்கடைக்கு அசுத்தக்கொடையாளிகளாயிடுவோம்
என்பதுதான் உண்மை.

திருந்தும் காலத்தை நாம் உருவாக்குவோம்.

Thekkikattan|தெகா said...

என்னங்க தருமி, இன்னமும் நான் என் பொலம்பல ஆரம்பிக்கவே இல்லை, ஒரு முகவுரைக்கே வந்து இப்படி ""நீங்கள் சொல்வதுபோல் நான் ஒரு optimist இல்லையென்பதே உண்மை."" என்று கூறிவிட்டீர்களே...

எப்படியிருந்தாலும், நான் சொல்ல வந்ததை அனைத்தையும் சொல்லி விட்டுத்தான் அமர்வேன், ஆமாம் :-).

Unknown said...

திரு. தருமி அவர்கள் சுட்டிய இணையம் மூலம் நிறையப் பேர் பயனடைந்து இருப்பதாக ஒரு குழுமத்தின் மூலம் (மக்கள் சக்தி இயக்கம்) அறிந்தேன்!

தகவல் அறியும் சட்டமும் (http://righttoinformation.gov.in) இப்போது நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இது பற்றி எத்தனை பேருக்கு விழிப்புணர்வு இருக்கிறது என்பதில் வருத்தம்தான். இப்போது, தகவல் அறியும் சட்டத்தை, வெளினாட்டில் இருந்தும் பயன்படுத்தலாம்! நான் சந்திக்கும் அனைத்து நண்பர்களிடமும், இதைப் பற்றி ஒரு பிரசாரமே செய்து வருகிறேன். சினிமா பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள் அறிந்திருக்கும் நமது சகோதரர்கள், இந்த சட்டத்தைப் பற்றிக் கேட்டால் முழிப்பது வேதனையாக இருக்கிறது :(

SurveySan said...

1000ல 95 பேரு, எதப் பத்தியும் கவலையில்லாம இருக்கான்.

1000ல 5 பேரு கவலப் படறான்

1000ல ரெண்டு பேரு ஏதாவது செய்யணும்னு நெனைக்கறான்

1000ல ஒருத்தன் தான் ஏதாவது செய்யறான்..

1000ல 990 பேர் அந்த ஒருத்தன செய்யவிடாம செய்யறான்.

அந்த ரெண்டு பேர்ல ஒருத்தரா, கொஞ்சம் பேரு இருக்காங்க. அவங்கள ஆயிரத்தில் ஒருத்தனா ஆக்குவோம் ;)

FixMyIndia.org

:)

Thekkikattan|தெகா said...

சர்வேசா,

எங்கேயிருந்துங்க உங்களுக்கு இந்த மாதிரி புள்ளி விபரமெல்லாம் கிடைக்குது. ச்சும்மா, விசயகாந்த் கணக்கா எடுத்து விடுறீங்களே...

நம்புவோமிங்க, விழிச்சிக்குவாங்க... இல்லைன்னா விழிக்க வைப்போம் ;)

Thekkikattan|தெகா said...

மீண்டும் , சமூக இன்னல்களின் பின்னனியோடு பதிவிட வருக,...வருக.//

வவ்ஸ், அப்பப்ப அங்கொன்னு இங்கொன்னுன்னு சொல்லிட்டுத்தான் இருக்கேன்.

//தாழ்த்தப்பட்டவருக்கு கோயில் மண்டபம் வாடகைக்கு தர மறுத்ததாக அதில் சொல்லி இருந்தார். என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை. //

நிறைய முறை இப்படித்தான் நிஜம் முகத்தில் வந்து சாத்தும் படியாக இருக்கும் பொழுது என்ன சொல்வதன்ரே விளங்குவது கிடையாது.

//தனிமனித ஒழுக்கம், தேவைகளை குறைப்பது, அதிகார துஷ்பிரயோகம், சார்புத்தன்மை குறைத்தாலே தானாகவே எல்லாம் சரி ஆகிவிடும். அரசு திருந்த வேண்டிய அவசியமே இல்லை, தானாகவே திருந்தும்.//

இதுவே மிக்க உண்மை. எனது அடுத்தடுத்தப் பதிவுகள் இது போன்ற "சீர்கேடுகள்" குறித்தே அமையும்.

இதற்கெலாம் அடிப்படை காரணமாக அமைவதும் எதுவென்று, கொஞ்சம் ஆராய்ந்துதான் பார்ப்போமே...

நன்றி, வவ்ஸ்.

Thekkikattan|தெகா said...

ஆடு மாடு,

மீண்டும் நன்றி! இங்கு வந்து மிகவும் விரிவாக நிசர்சனத்தை தைரியமாக பகிர்ந்து கொண்டமைக்கு.

அப்படி இது போன்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்வதின் பொருட்டு ஒன்றும் நாம் வெளிச்சத்தின் மறு பக்கமான இருட்டையே பார்த்திருப்பதாக பொருள் கிடையாதுதானே :-).

நீங்க கூறிய படியே இது போன்ற தொற்று வியாதி பட்டி தொட்டியில் தொடங்கி, நமது நாட்டின் தலை நகரம் வரை இதே கதைதான் என்பதனை சில என்னுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டும் நானும் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன், வந்து படித்துப் போங்க.

இரா.முருகப்பன் said...

நன்றி நண்பரே!

உங்களைப் போன்றோரின் ஆதரவுடன் தொடர்ந்து முயற்சித்ததன் விளைவு போலீசார் இப்போதுதான் இவ்வழக்கை கொலைமுயற்சி வழக்காக மாற்றியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் போலீசார் தூதனுப்பி வருகிறார்கள் நம்மிடம்.

இதைதவிர வேறு ஏதேனும் பேசுங்கள் என வந்தவரை திருப்பி அனுப்பினோம்.

உங்களைப் போன்றோரின் ஆதரவுடன் கலாவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்

Thekkikattan|தெகா said...

வியாபாரத்துல ஏற்பட்ட பிரச்சனையின் போது கோர்ட்ல சென்னை கோர்ட்ல ஒரு முறை நான் பட்ட அவஸ்தை..ஹ்ம்ம் நினச்சு பார்த்தா...//

ஓ! அதுவா, ஒரு பிரச்சினையில இருந்து தப்பிக்கப் போய் இன்னொரு பிரச்சினையில மாட்டிக்கிட்டதைத் தானே சொல்ல வாரீங்க :)...

VAV said...

hmmmmmmmm

VAV said...

hmmmmmmm

VAV said...

ok

Related Posts with Thumbnails