Tuesday, August 21, 2007

துரியன்(Durian) பழம் சாப்பிட்டால் கர்ப்பமடையலாமாம்...!?

இன்னைக்கு ஒரு வேடிக்கை செய்தி நம்ம தினகரன் பத்திரிக்கையில படிக்க முடிஞ்சிச்சி. அத என்னான்னு சொல்றது, எப்படின்னு சொல்றது. நம்ம மக்கள் நம்பிக்கைக்கு இந்த வானமே எல்லை! துரியன் (Durian) அப்படின்னு ஒரு பழமிங்க நம்ம பலாப் பழம் மாதிரியே ஒரு கூட்டுக்கனி வகை. சுமாருக்கு தெற்காசிய நாடுகளில் மட்டும் ஒரு 30 வகை இனம் இருக்காம், அதில 9 வகைகள்தான் சாப்பிடற மாதிரியாம்.

இந்த பழ மரங்கள் ஒரு 35கிட்ட நம்ம ஊட்டி தோட்டக் கலை நிபுணர்களால் வளர்க்கப்படுகிறதாம். நம்மூர்ல எல்லா இடங்களிலும் பொதுவாக காண முடிவதில்லை. ஆனால், சிங்கையிலும், மலேசியாவிலும் நம்மூர் பலாப் பழங்கள் விற்கப்படுவதுபோலவே விற்கப்படுவதனை பார்த்திருக்கிறேன். வாசம், பலாப் பழத்தைவிட இன்னும் ஸ்ட்ராங்.

சரி விசயம் என்னான்னா, தினகரன்ல இதான் செய்தி:

...துரியன் பழம் சாப்பிட்டால் கருத்தரிக்கும் என்ற நம்பிக்கையால், பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் இந்தப் பழத்திற்கு முன்பதிவு செய்வோர் அதிகரித்துள்ளனர்.

இங்கு 35 துரியன் பழ மரங்கள் உள்ளன. இந்தாண்டு 2,000 கிலோவுக்குக் குறைவில்லாமல் துரியன் பழம் விளையும் என தோட்டக்கலைத்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், உரிய காலநிலை நிலவாததால், துரியன் பழ விளைச்சல் ஏற்படவில்லை.

இது குறித்து குன்னூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரகாசம் கூறியதாவது:மரத்தில் இருந்து பறிக்கப்படாமல் தானாக விழும் துரியன் பழங்களை சாப்பிட்டால்தான் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்தப் பண்ணையில் அப்படித்தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதால் கிராக்கி அதிகமாக உள்ளது....

மேலே உள்ள பாராக்களை அப்படியே நொட்டு, நொட்டுன்னு கைவலிக்க டைப் பண்ணியிருக்கேன், அங்கேயும், இங்கேயும் தாவி... முழுசா படிக்கணுமா அது இங்க இருக்கு - கருத்தரிக்கும் நம்பிக்கையில் துரியன் பழத்துக்கு கிராக்கி; 880 பேர் முன் பதிவு.

இந்தாண்டு சொன்ன மாதிரி விளைச்சல் இல்லாததால் 880 கிலோ தான் சப்ளை செய்ய முடியுமாம். ஆனா, சுமார் 880 பேர் முன்பதிவு செய்திருக்காங்களாம் . என்ன செய்றதின்னு தெரியாம நம்ம துணை இயக்குநர் பிரகாசம் திண்டாடி தோட்டத்தில நிக்கிறாராம்.

ஏனுங்க தெரியாமத்தான் கேக்கிறேன், இந்த மக்களுக்குத்தான் கொஞ்சம் மறை கழண்டுப்போச்சுதுன்னா இந்த விவசாய ஆராய்ச்சியில இருக்கிற இந்த ஆட்களுக்குக் கூடவா கழண்டு போயிடும்.

கொஞ்சம் எடுத்துச் சொல்லலாமில்லை பொது மக்களுக்கு, இது போன்ற நாளிதழ்கள், சம்பந்தப் பட்ட ஆட்களை பேட்டி எடுத்து போடும் பொழுதாவது. இந்த மாதிரி இது ஒரு நம்பிக்கைதான் ஆனா, மருத்துவ ரீதியா அதில எவ்வளவு உண்மை இருக்குன்னு தெரியலை. நீங்க உங்க வீட்டுல இரண்டு பேருமா சேர்ந்து போயி அதுக்கான டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெருவது நல்லதுன்னு. அப்படிச் சொல்ல எம்பூட்டு நேரம் ஆகும்.

நாளிதழ் காரர்களை விட்டுத்தள்ளுங்க, பாவம் அப்பாவிங்க, அவங்க கிளிப் பிள்ளை மாதிரி யாரு என்ன சொல்றாங்களோ அப்படியே மக்கள் கிட்ட வந்து வரி தவறாம சொல்லிடுவாங்க. கேள்வி எல்லாம் கேக்க மாட்டாங்க. கேட்டா அடுத்த மாசம் வேலை இருக்காது.

அப்படியில்லாம இங்கயும் துரியன் விக்கிறதுதான் நம்ம இயக்குநருக்கு முக்கியமான வியாபார உத்தியா? என்னங்கய்யா இது அரசியலில் தொடங்கி, விஞ்ஞானம் வரைக்கும் எல்லாமே வியாபாரம்தானா, நம்மூர்ல?


பி.கு: ஒரு முறை இந்தப் பழத்தை நிறைய சாப்பிட்டுவிட்டு ஒருத்தரு பொட்டாசியம் அதிகமாகிப் போய் முடியாமப் போயிட்டாராம். பார்த்துங்க. :-)). விக்கியில படிச்சப்ப சொல்றாங்க, இரத்தக் கொதிப்பு இருக்கிறவங்களும், கர்ப்பம்தரிச்சு இருக்கிறவங்களும் இந்தப் பழத்தை சாப்பிட வேண்டாமின்னு.

35 comments:

சிவபாலன் said...

தெகா

எங்கீங்க இது மாதிரி செய்தி எல்லாம் தேடிப் பிடிக்கிறீங்க.. எங்க கண்ணுல எல்லாம் படமாட்டீங்கிது..Ha Ha Ha..

இதுவாவது பரவாயில்லை.. பழம்..தின்னு தொலையாறங்கன்னு விட்டுப் போயிடலாம்..!

இந்த சாமியாருங்க மேட்டரை எடுத்துட்டா..Ha Ha Ha..

என்னமோ, தெகா.. இப்படியும் ஒரு கூட்டம் அலையத்தான் செய்யுது.

இலவசக்கொத்தனார் said...

ஒரு வேளை அந்த பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கத் தேவையான ஹார்மோன்கள் அதிகம் சுரக்குமோ என்னவோ.

நீங்க சொன்ன விக்கி குறிப்பில் இதுவும் தானே சொல்லி இருக்கு - "The Javanese believe durian to have aphrodisiac qualities, and impose a strict set of rules on what may or may not be consumed with the durian or shortly after.[18] The warnings against the supposed lecherous quality of this fruit soon spread to the West, as the Swedenborgian philosopher Herman Vetterling commented on so-called "erotic properties" of the durian in the early 20th century.[41]".

அப்புறம் அது Durian. Durion இல்லை.

Thekkikattan|தெகா said...

சிவா,

இந்த சாமியாருங்க மேட்டரை எடுத்துட்டா..Ha Ha Ha..

என்னமோ, தெகா.. இப்படியும் ஒரு கூட்டம் அலையத்தான் செய்யுது.//

இருங்க, இருங்க சாமியாரை தேடிப்போனால் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகமிருக்கின்னு நாம் நம்புறேப்பா ;-))) நீங்க எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனா, எனக்கு சாமியார்கள் மேலே நிரரரரம்ம்ம்பா நம்பிக்கை இருக்கு :-D

Thekkikattan|தெகா said...

வாங்க இலவசம்,

வேலை எல்லாம் முடிஞ்சிச்சா? நன்றி, நன்றி அந்த பிழை திருத்தத்திற்கு, மாத்திட்டேன். நீங்க சொன்ன அந்த ஜாவானிஸ் ஆட்கள் கூட "நம்புறாங்கதானே" அது ஒண்ணும் நிறுபிக்கப் பட்ட விசயமில்லையே இ.கொ.

என் பாயிண்ட் இங்கே என்னான்னா, ஏன் இப்படி தொடர்ந்து இல்லாத ஒன்றை அதற்கு தொடர்புடையவர்களே அங்கீகரிப்பது போல் வெளியே உலவ விடவேண்டுமென்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

பராவயில்லை. கொஞ்சம் நாளிதழ்களில் செய்தியாக தருபவர்களும் செய்தி தருவதற்கு முன்பு தானும் இது தொடர்பாக கொஞ்சம் அறிவூட்டிக் கொள்வது எல்லோருக்கும் நலன் பயக்குமென தெரிந்து கொள்ளட்டுமே...

"erotic properties" இது போல நம்புவது எதனில் தான் இல்லை... தேவாங்குவில் ஆரம்பித்து, கருங்குரங்கு, புலி நகத்திலிருந்து, எலும்பு வரை இந்த நம்பிக்கை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் மருத்துவப் பயனாக பிறகு கிலு கிலுப்பூட்டும் aphrodisiac என்ற பெயரிலேயே கூட...

வவ்வால் said...

தெ.கா,

இப்படிபட்ட மூட நம்பிக்கை இல்லாத இடம் உண்டா, அது வேளான் துறை ஆட்களுக்கும் இல்லாமலா போகும். ஒரு வேளை பழத்த விற்க அவங்களே கூட புரளிய கிளப்பி இருக்கலாம்!

புலியின் உறுப்புகள் அதன் எலும்பு இவற்றை சாம்பல் செய்து உட்கொண்டால் ஆண்மை விருத்தியாகும் என சீனர்கள் நம்புவதால் இந்தியாவில் புலி வேட்டை நடைக்கிறது. அவனுக்கு மூட் வர நம்ம ஊரு புலி பலி ஆகுது! :-))

இதை விட காண்டாமிருக கொம்பை பஸ்மம் செய்து பாலில் கறைத்து குடித்தால் எழுச்சி ஏற்படும் என ஒரு கூட்டம் அலையுது. இன்னும் சிலர் குதிரை வாலை வெட்டி லேகியம் செய்கிறார்கள்.

ஏதோ நம்ம ஊருல துரியன் பழத்தோட நின்னாங்களே!

ஆனா அந்த சாமியார் மேட்டர் , கை மேல் பலன் என்பது உண்மை என்ன அப்பா பேரா அந்த சாமியார் பேர போட்டுக்க தான் முடியாது! :-))

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

//ஒரு வேளை பழத்த விற்க அவங்களே கூட புரளிய கிளப்பி இருக்கலாம்!//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். அதான் கடைசியா அப்படி ஒரு கேள்விய கேட்டு வைச்சேன்.

//புலியின் உறுப்புகள் அதன் எலும்பு இவற்றை சாம்பல் செய்து உட்கொண்டால் ஆண்மை விருத்தியாகும் என சீனர்கள் நம்புவதால் இந்தியாவில் புலி வேட்டை நடைக்கிறது. அவனுக்கு மூட் வர நம்ம ஊரு புலி பலி ஆகுது! :-))//

இது கொடுமையிலும் கொடுமை... இதனை ஒரு சீரிஸ் ஆக, பி.பி.சியில் இந்தியாவிலிருந்து எப்படி வேட்டையாடப் பட்டு அது எந்த வழியாக சீனா சந்தையை அடைந்து யார், எதுக்கு வாங்கி சாபிடுகிறார்கள்னு ஒரு டாகுமெண்டரி வந்ததாக நம்ம குருஜீ சொன்னார்.

//ஏதோ நம்ம ஊருல துரியன் பழத்தோட நின்னாங்களே!//

அப்படி இருந்தாத்தான் பராவயில்லையே. தேவாங்கும், கருங்குரங்கும் இந்த மாதிரி கிலு கிலுப்பு ஊட்டுமின்னு கேட்டு வாங்கி சாப்பிடுறீங்களாமே...

//ஆனா அந்த சாமியார் மேட்டர் , கை மேல் பலன் என்பது உண்மை என்ன அப்பா பேரா அந்த சாமியார் பேர போட்டுக்க தான் முடியாது! :-))//

ஹா... ஹா...ஹா நான் அரச புரசலா சொல்ல வந்த ஜோக்கை நேரடியாக போட்டுத் தாக்கிட்டீங்க...

Osai Chella said...

ஏஞ்சாமி இப்படி நீங்களும் கொழப்புறீங்க. அதெப்படீங்க பழம் சாப்பிட்டா கொழந்தை உருவாகும்? பழம் சாப்பிட்டுவிட்டு ஆணும் பெண்ணும் சேரோனும் நும் தெளிவா சொல்லவேண்டாமா? நான் கேட்டு விசாரிச்சவரைக்கும் நல்ல மூட் வருவதற்கு இது சூப்பர் பழம் என்கிறர்கள். மற்றபடி மருத்துவரை அவசியம் அணுகவேண்டும்!

கோவி.கண்ணன் said...

முருங்கைகாய் விற்பனையை தடுக்க துரியன் பழத்தை முன்னிலைபடுத்த முயலும் ஒரு வெளிநாட்டு சதியாக இருக்குமா ?
:)

மங்கை said...

தெகா..

இப்படியெல்லாம் செய்தி போடறதுக்கு முன்னாடி என்ன மாதிட்ரி ஆளுகளை கேட்டுட்டு போட்டோனும் சொல்லிட்டேன்..

தஞ்வாவூர்ல ஒருத்தர் கேட்டுட்டார்னுட்டு, நேரு ஸ்டேடியம் பழமுதிருக்கு போய்.. அங்கே இல்லைனு ஆர் எஸ் புரம் பழமுதிர் போய்..அங்கேயும் இல்லாம எங்க ஊட்டுக்காரர சாய்பாபா காலனி அனுப்பி...அங்கேயும் இல்லாம... குன்னூர்ல வயோலா கிட்ட சொல்லி வரவைச்சு வாங்கி குடுத்தேன்..

அவ்வளோ சுலுவா கேட்டுட்டீங்க மக்களுக்கெல்லாம் மண்டையில மசாலா இல்லையானு...எங்களுக்கு தான தெரியும் அந்த கஷ்டம்..:-)))))

காட்டாறு said...

சிவாவின் கேள்வி தான் என் கேள்வியும். எங்கே போய் இப்பிடி குடைந்து எடுக்குறீங்க செய்திகளை?
உங்களுக்குன்னு செய்தி போடுவான்க போல. ;-)

மத்தபடி சாப்பிட பழம் சூப்பரா தான் இருக்கும். நீங்க சாப்பிட்டு பார்த்திருக்கீங்களா?

Thekkikattan|தெகா said...

ஓசை,

அதெப்படீங்க பழம் சாப்பிட்டா கொழந்தை உருவாகும்? பழம் சாப்பிட்டுவிட்டு ஆணும் பெண்ணும் சேரோனும் நும் தெளிவா சொல்லவேண்டாமா? //

அதுக்குதானேங்க பின்னூட்ட வசதி, பதிவுல விட்டுப் போனத நம்ம மக்கள் வந்து நிறப்புவதற்கு. இந்தா, வந்திங்க "நச்"சுன்னு சொல்லிட்டு போயீட்டீங்க ;-).

நன்றி! இப்படி வந்து நச், நச்சுன்னு உள்ளதை உள்ளபடி சொல்லிட்டு போங்க...:))

பித்தானந்தா said...

//எனக்கு சாமியார்கள் மேலே நிரரரரம்ம்ம்பா நம்பிக்கை இருக்கு//

Nammalai Vechi Ethum Comedy keemedy Pannalaiye!

:(

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

//முருங்கைகாய் விற்பனையை தடுக்க துரியன் பழத்தை முன்னிலைபடுத்த முயலும் ஒரு வெளிநாட்டு சதியாக இருக்குமா? //

ஆமாங்க, நீங்க வித்தியாசமான கோணத்தில் யோசிச்சுறீக்கிறிங்க, இது நமக்கு எட்டலையே பாருங்க :-)))

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் சதியா இருக்குமோ ;)

Thekkikattan|தெகா said...

மங்கை,

//அவ்வளோ சுலுவா கேட்டுட்டீங்க மக்களுக்கெல்லாம் மண்டையில மசாலா இல்லையானு...எங்களுக்கு தான தெரியும் அந்த கஷ்டம்..:-)))))//

இதுக்கு பின்னாடி இம்பூட்டு கதை இருக்கா. விட்டா விமானமேறி சிங்கப்பூர் போயிட்டு வாங்கிட்டு வந்து கொடுத்துறிப்பீங்க போல இருக்கு. தஞ்சாவூர்ல இருந்து எங்கெல்லாம் போயி... சரியாப் போச்சு உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையம்மா...

நல்லவேளை இந்த சாமீயர்கள் பற்றி ஏதும் சொல்லாம விட்டீங்களே, அதச் சொல்லுங்க... அது வரைக்கும் நீங்க இண்டலிஜெண்டேதான் :-))

Thekkikattan|தெகா said...

பித்தானந்தாஜீ,

Nammalai Vechi Ethum Comedy keemedy Pannalaiye!//

நம்ம குருஜீய, அவரு சிஷ்யப் பிள்ளையே போட்டுக் கொடுக்குமா... ரகசியமெல்லாம் நம்ம வூட்டாண்டையே அரெஸ்டட்... சோ, நோ ஒர்ரிஸ் ;)

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

உங்களுக்குன்னு செய்தி போடுவான்க போல. ;-)//

பிறகு ச்சும்மாவா, இந்த மாதிரி நாளிதழ்கலெல்லாம் எப்படா சுடச், சுட இரவு பண்ணிரண்டு மணிக்கு வலை ஏத்துவாங்கன்னு கண்ணில எண்ணெய் விட்டுட்டு காத்திட்டு இருந்து காட்ச் இட் னு பிடிச்சிர்ரது :-))

//மத்தபடி சாப்பிட பழம் சூப்பரா தான் இருக்கும். நீங்க சாப்பிட்டு பார்த்திருக்கீங்களா?//

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்விய. சாப்பிட்டுருக்கேன், இல்ல நீங்க வேற ஏதாவது கேட்டீங்களா... :-)))

காட்டாறு said...

//Thekkikattan|தெகா said...
பிறகு ச்சும்மாவா, இந்த மாதிரி நாளிதழ்கலெல்லாம் எப்படா சுடச், சுட இரவு பண்ணிரண்டு மணிக்கு வலை ஏத்துவாங்கன்னு கண்ணில எண்ணெய் விட்டுட்டு காத்திட்டு இருந்து காட்ச் இட் னு பிடிச்சிர்ரது :-))
//

ஏனுங்க, வீட்ல அம்மணி இல்லீங்களாக்கும்? ;-)

//நல்லா கேட்டீங்களே ஒரு கேள்விய. சாப்பிட்டுருக்கேன், இல்ல நீங்க வேற ஏதாவது கேட்டீங்களா... :-)))
//

அப்படின்னா? அப்புராணியான எங்கிட்ட என்ன கேக்குறீங்க? புரியலையே

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

தெகா,
துரியன்/டுரியன் சிங்கையிலும்,மலேசியாவிலும் மிக அதிகமாக விற்பனையாகும் பழவகையில் ஓன்று, இங்கே இரண்டு தகவல்களை சேர்க்க விரும்புகிறேன்..

இந்தபழம் மிக மேசமாக வாசம் வீசம். அதனால் சிங்கையில் பொதுபோக்குவரத்தில்(public transport) இப்பழத்தை எடுத்துவர தடை உள்ளது.

இரண்டாவது இது உடலுக்கு வெப்பத்தை தரக்கூடிய பழவகை, அதனால் நான் ஓரு ஊகம் வைத்திருக்கிறேன் இந்த 'மூட்' விசயத்தில்... வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் குருதியோட்டம் அதிகரிக்கும் அதனால் உடலறவுக்குவான எண்ணம் மேலோங்கலாம்(இந்த வயாகரா மாதிரி). மற்றபடி இதுவொரு ஊகம் யாராவது முயற்சித்து பார்த்து சொன்னால்தான் உண்டு:-)).

// இரத்தக் கொதிப்பு இருக்கிறவங்களும், கர்ப்பம்தரிச்சு இருக்கிறவங்களும் இந்தப் பழத்தை சாப்பிட வேண்டாமின்னு//

இதுவும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என்கிற காரணமாகவேயிருக்கலாம்.

நல்லாயிருக்கும் என்று அப்படியே நாக்கில் எச்சில் ஊறும் மக்கா... இது கெட்டவாடை வீசும்(பூண்டு மாதிரி) பார்த்துக்கோங்கோ :-))

மங்கை said...

//அப்படின்னா? அப்புராணியான எங்கிட்ட என்ன கேக்குறீங்க? புரியலையே //

யாருங் அது அப்பிராணி...கண்ண கட்டுது..சரியா தெரியலை...

துளசி கோபால் said...

இதுமாத்திரம் உண்மைன்னு வையுங்க, இந்தப் பழத்தின் வாசனையைக்கூட இந்திய எல்லைக்குள்ளே
வரவிடக்கூடாது. போதும்ப்பா போதும். நிறுத்துங்கப்பா.................
இருக்குறவங்களுக்கு மூச்சு விட இடம் வேணாமா?

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

துரியன் சாப்பிட சுவையான பழம்... அதை பற்றி ஒரு பதிவு:( //

அதுக்கு ஏங்க நீங்க இவ்வளவு சோகப்படுறீங்க... பிடிச்சிருந்தா சாப்பிடுங்க, அதுக்காக :-))

மங்கை said...

//அப்படின்னா? அப்புராணியான எங்கிட்ட என்ன கேக்குறீங்க? புரியலையே //

யாருங் அது அப்பிராணி...கண்ண கட்டுது..சரியா தெரியலை... //

அதானே நீங்களே கேளுங்க மங்கை, காட்டாறுகிட்ட ... எனக்கும் தான் கண்ணை கட்டுது :-)))

Thekkikattan|தெகா said...

பாரி,

வாங்காணும், ரொம்ப நாளா நம்ம வீட்டாண்டை பார்க்க முடியுறதில்லை. இப்படி இருக்கீக?

//இரண்டாவது இது உடலுக்கு வெப்பத்தை தரக்கூடிய பழவகை, அதனால் நான் ஓரு ஊகம் வைத்திருக்கிறேன் இந்த 'மூட்' விசயத்தில்... வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் குருதியோட்டம் அதிகரிக்கும் அதனால் உடலறவுக்குவான எண்ணம் மேலோங்கலாம்(இந்த வயாகரா மாதிரி). மற்றபடி இதுவொரு ஊகம் யாராவது முயற்சித்து பார்த்து சொன்னால்தான் உண்டு:-)). //

நீங்க சொல்ற இந்த உடல் சூடேற்றம் கொஞ்சம் உண்மையாக இருக்காலாம்ங்கிற மாதிரிதான் இருக்கு.

அது என்ன யாராவது முயற்சித்துப் பார்த்துட்டு சொன்னால்தான் உண்டு டுரியன் விளையிற ஊர்ல இருந்துட்டு இப்படி ஜகா வாங்கிறது சரியிலை, மேலும் இந்த புராஜக்ட்க்கு உங்களைத்தான் பிரின்சிபில் சயிண்டிஸ்ட்_ஆ போட்டுருக்கு. அதானலே ஒழுங்க நீங்களே பைலட் ஸ்டடி பண்ணி சொல்லிடுங்க :-)))

மங்கை said...

//இப்படி ஜகா வாங்கிறது சரியிலை, மேலும் இந்த புராஜக்ட்க்கு உங்களைத்தான் பிரின்சிபில் சயிண்டிஸ்ட்_ஆ போட்டுருக்கு. அதானலே ஒழுங்க நீங்களே பைலட் ஸ்டடி பண்ணி சொல்லிடுங்க :-))) ///

வாவ் தெகா..சூப்பர்...நான் வேனா ஃபன்ட் வாங்கித்தாரேன்

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

இதுமாத்திரம் உண்மைன்னு வையுங்க, இந்தப் பழத்தின் வாசனையைக்கூட இந்திய எல்லைக்குள்ளே
வரவிடக்கூடாது. போதும்ப்பா போதும். நிறுத்துங்கப்பா.................
இருக்குறவங்களுக்கு மூச்சு விட இடம் வேணாமா? //


இந்தப் பதிவு ஒரு மார்க்கமான பதிவுன்னாலும், எல்லாரும் அடிச்சி விளையாண்டு இருக்கீங்க... ஹா .. ஹா.. ஹா நீங்க சொல்றத ஒரு மாதிரி ஏற்ற இறக்கம் வைச்சு படிச்சிப் பார்த்தா சிரிப்பு தாங்கலை... :-)))

TBCD said...

பாரி,
இதுக்கு தான்..பேச்சிலர் பாயா அமைதியா இல்லாமா, பெரியவங்க பேச்ச்சில எல்லாம் தலய குடுக்கக் கூடாது..

ஏங்க திருமணம் ஆகாத சின்ன பையன இப்படி எல்லாம் சொல்லிக் கெடுக்குறீங்க...
ஏங்க திருமணம் ஆகாத சின்ன பையன இப்படி எல்லாம் சொல்லிக் கெடுக்குறீங்க...

சிங்கபூர் ஒரு விவகாரமான ஊர்..அதுல..இவர சிக்க வச்சி வேடிக்கை பாத்துடாதீங்கப்பூ.

நீங்க வேணா..வாங்க..துரியன் புல் ஸ்பான்ஸர் (துரியான் மட்டுமே)பண்ணிறலாம்..


//*அது என்ன யாராவது முயற்சித்துப் பார்த்துட்டு சொன்னால்தான் உண்டு டுரியன் விளையிற ஊர்ல இருந்துட்டு இப்படி ஜகா வாங்கிறது சரியிலை, மேலும் இந்த புராஜக்ட்க்கு உங்களைத்தான் பிரின்சிபில் சயிண்டிஸ்ட்_ஆ போட்டுருக்கு. அதானலே ஒழுங்க நீங்களே பைலட் ஸ்டடி பண்ணி சொல்லிடுங்க :-)))*//

PPattian said...

டுரியன் சாப்பிட்டதும் உடனே பால் குடித்தல் அவசியம் என கேள்வி.. அதுதான் டுரியனின் சூட்டை சமநிலைப்படுத்தும்.

அப்புறம் மழைக்கு கூட டுரியன் மரத்தின் கீழ் ஒதுங்க கூடாது.. (வேற ஒண்ணும் இல்ல, அந்த முள்ளு பழம் எக்குத்தப்பா நம்ம தலையில விழுந்தா??)

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

இதெல்லாம் அடுக்குமா தெகா!
நான் ஏதோ தெரிந்ததை, அறிந்ததை சொன்னா :) இந்த சின்னபுள்ளைய, அப்பாவிய இப்படி ஆளாளுக்கு கும்மின்னா நான் என்ன பண்ணுவேன்.

ஏதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்... இதோட விட்டுருங்க...

இருங்க, இருங்க ஏதோ ஃபண்ட் அப்படின்னு மங்கை சொன்னாங்க அத மட்டும் என்னோட வங்கி கணக்குக்கு மாத்திவிட சொல்லிடுங்க :))

Thekkikattan|தெகா said...

TBCD,

//இதுக்கு தான்..பேச்சிலர் பாயா அமைதியா இல்லாமா, பெரியவங்க பேச்ச்சில எல்லாம் தலய குடுக்கக் கூடாது...//

அடடா, ஒரு சின்னப் பையன்கிட்ட பேசிட்டு இருக்கோமின்னு தெரியாமப் போச்சே... அதுவும் சிங்கப்பூர்ல இருக்கிறவர்கிட்ட :-P

எதுக்கும் நம்ம தம்பிக்கிட்ட சொல்லி வையுங்க குளிர்ச்சியா இருக்கச் சொல்லி ;))

//நீங்க வேணா..வாங்க..துரியன் புல் ஸ்பான்ஸர் (துரியான் மட்டுமே)பண்ணிறலாம்.. //

நிறைய சாப்பிட்டாச்சுங்க அதுவும் சிங்கப்பூருக்கே வந்து ;)))) ரொம்ப நன்றி என்னைய ஸ்பான்ஸர் பண்ணி ப்ளைட் டிக்கெட்டும் எடுத்துத் தாரேன்னு சொல்லாம சொன்னதுக்கு...

Thekkikattan|தெகா said...

TBCD,

//இதுக்கு தான்..பேச்சிலர் பாயா அமைதியா இல்லாமா, பெரியவங்க பேச்ச்சில எல்லாம் தலய குடுக்கக் கூடாது...//

அடடா, ஒரு சின்னப் பையன்கிட்ட பேசிட்டு இருக்கோமின்னு தெரியாமப் போச்சே... அதுவும் சிங்கப்பூர்ல இருக்கிறவர்கிட்ட :-P

எதுக்கும் நம்ம தம்பிக்கிட்ட சொல்லி வையுங்க குளிர்ச்சியா இருக்கச் சொல்லி ;))

//நீங்க வேணா..வாங்க..துரியன் புல் ஸ்பான்ஸர் (துரியான் மட்டுமே)பண்ணிறலாம்.. //

நிறைய சாப்பிட்டாச்சுங்க அதுவும் சிங்கப்பூருக்கே வந்து ;)))) ரொம்ப நன்றி என்னைய ஸ்பான்ஸர் பண்ணி ப்ளைட் டிக்கெட்டும் எடுத்துத் தாரேன்னு சொல்லாம சொன்னதுக்கு...

Thekkikattan|தெகா said...

PPattian said...

டுரியன் சாப்பிட்டதும் உடனே பால் குடித்தல் அவசியம் என கேள்வி.. அதுதான் டுரியனின் சூட்டை சமநிலைப்படுத்தும். //

பராவயில்லை, ஒருத்தர் சாப்பிட்டா சூடுன்னார், நீங்க வந்திங்க அதுக்கு என்ன தீர்வுன்னு சொல்லிட்டீங்க... :)

//அப்புறம் மழைக்கு கூட டுரியன் மரத்தின் கீழ் ஒதுங்க கூடாது.. (வேற ஒண்ணும் இல்ல, அந்த முள்ளு பழம் எக்குத்தப்பா நம்ம தலையில விழுந்தா??) //

அடடா, எப்படியெல்லாம் யோசிச்சிருக்கீங்க... அவ்வளவு கடினமானதா அதன் முட்கள்... அடி தாங்காம வேணா செத்துப் போலாம் நாம்...

Thekkikattan|தெகா said...

பாரி,

இந்த சின்னபுள்ளைய, அப்பாவிய இப்படி ஆளாளுக்கு கும்மின்னா நான் என்ன பண்ணுவேன்.

ஏதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்... இதோட விட்டுருங்க...//

:-))) பாவம் மாட்டீனீங்களா நீங்க... கும்மு கும்முன்னு கும்மிபுட்டாங்களா, சரி, சரி விடுங்க... ஆமா, உங்க வங்கி எண் எல்லாம் கொடுக்கலயே, என்கிட்ட கொடுங்க நான் பத்திரமா ஒப்படைச்சிடுறேன்...

TBCD said...

தெளிவா இருக்கீங்களே....
பழம் சாப்பிட்டுட்டீங்கன்னா அந்த அனுபவத்த சொல்லுங்க..

இரத்தம் கொதிச்சிச்சா...என்ன ஆச்சி.. சொல்லுங்க.. :-)))))

//*Thekkikattan|தெகா said...

அடடா, ஒரு சின்னப் பையன்கிட்ட பேசிட்டு இருக்கோமின்னு தெரியாமப் போச்சே... அதுவும் சிங்கப்பூர்ல இருக்கிறவர்கிட்ட :-P

எதுக்கும் நம்ம தம்பிக்கிட்ட சொல்லி வையுங்க குளிர்ச்சியா இருக்கச் சொல்லி ;))

நிறைய சாப்பிட்டாச்சுங்க அதுவும் சிங்கப்பூருக்கே வந்து ;)))) ரொம்ப நன்றி என்னைய ஸ்பான்ஸர் பண்ணி ப்ளைட் டிக்கெட்டும் எடுத்துத் தாரேன்னு சொல்லாம சொன்னதுக்கு...*//

இதயும் கொஞ்சம் பாருங்க...
பீரங்கி தரும் குழந்தை வரம்..!!!

வவ்வால் said...

பதிவு வந்த நாள் முதலா இந்த கேள்வி மனசுல ஓடுது, யாராவது கேட்பாங்களானு பார்த்துட்டே இருக்கேன், யாருமே கேட்க மாட்டேன்கிறாங்க , நம்ம தெ.கா பதிவில இப்படிலாம் கேட்க கூடாதுனு என் மனசாட்சி சொன்னாலும் கேட்காம இருக்க முடியல

சரி நானே கேட்டு வைக்கிறேன்,
"துரியன் பழம் சாப்பீட்டால் கர்ப்பமடையலாம்" இதான் தலைப்பு அப்போ ஆண்கள் சாப்பிட்டால் அவங்களும் கர்ப்பம் ஆகிடுவாங்களா?

ஹெ இது எப்படி இருக்கு....

Suka said...

தெகா,
பதிவுக்கு சம்பந்தமில்லாதது. மன்னிக்கவும்.

இந்தியாவின் விவசாய நீர்ப்பாசனத்தை முன்னேறிய நாடுகளினிடதோடு ஒப்பிட்டு ஏதேனும் கட்டுரையை அறிவீர்களா. இருந்தால் தெரிவிக்கவும். இளா, வவ்வால் பதிவிலும் தேடினேன்.. கிடைக்கவில்லை.

நன்றி
சுகா

jhon3447 said...

ada karmam vaadai thanka mudiyala
itha 350 rs kku vangi waste

Related Posts with Thumbnails