Thursday, August 09, 2007

அனானிக்கு ஓர் உருக்கமான பதில்!!!

யாருங்க இந்த அனானி? இப்படி அருமையான கேள்வியை எல்லாம் கேட்டுப்புட்டு இப்படி முக்காடுப் போட்டுக்கிட்டு ஒளிஞ்சுக்கிறீங்களே.

இந்த கேள்வி உண்மையிலேயே ஒரு சிறந்த பரிசை தட்டிக் கொண்டு செல்வது மாதிரி, ஏன் தவற விடுறீங்க சொல்லுங்க. நான் இப்படி கேட்டுப் புட்டீங்களேன்னு ஒண்ணும் உங்களை தவறாக சொல்லப் போவதில்லை. ஏன்னா, நீங்க கேட்டது ரொம்ப நியாயமான கேள்விங்க...ஆங்ங்ங்ங் உங்க பேரென்னா... சரி பெயரில்லாதவரே. வாங்க உங்க சந்தேகத்தை தீர்த்து வைச்சுடறேன்.

இப்படி கேட்டுருந்தார், பொத்தாம் பொதுவா. ஆனா, இதனை என்னையை மட்டும் கேட்டதாக நான் எடுத்துக் கொண்டு எழுதியிருக்கேன் அவருக்கு.

.....inge blog-la vanthu karuthu sollara pala per - USA-la kuppai kottitikkity irukkanga...

yen avangala ellam india-la velai seithu siru samabalam vaanga vendiyathu thane? :-) summa film kaataatheengapppa!!!! // ....

நான் வெக்கத்தை விட்டு ஒப்புத்துக்கிறேங்க. உண்மையிலேயே நான் பஞ்சம் பொழக்க வந்த ஆண்டிதாங்க. அதனையும் மீறி எனக்கு இங்க ரத்த பந்தம் வேற ஆகிப்போச்சுங்க. இதற்கெல்லாம் மீறி நான் ஒண்ணும் இந்தியாவில அப்படி கையைத் தட்டினால் ஓர் கார் ஓடி வந்து என்னைய ஏத்திட்டுப் போற வீட்டில பிறக்கலைங்க. அது என் தப்புமில்லைங்க.

அதுக்காக என் பெற்றொர்களை திட்டவுமில்லைங்க. ஆனா, கண் கொண்டு என் தகப்பனார் ஒரு பொறுப்பான ஆளா தன் குழந்தைகளை வளர்க்கப் பட்ட கஷ்டத்த என் ஒன்றரை கண்கள் கொண்டு பார்த்திருக்கேங்க. அந்த கஷ்டமெல்லாம் சில பேருக்கு சொன்னாக் கூட புரியாதுங்க. ஏன்னா, உங்க மாதிரி புளிச்ச ஏப்பக் காரர்களா இருந்தா புரியுமா? பசிச்சவன் எப்படி சாப்பாட்டை பார்க்கிறான் அப்படின்னா, சொல்லுங்க.

சரிங்க, இந்தியாவை எனக்கு நெஞ்சுக்குள்ள உசிரு இருக்கிற வரைக்கும் காதலிப்பேங்க. ஏன்னா, எனக்கு அந்த ஊரு ரொம்ப புடிக்குமுங்க. ஐ ஜஸ்ட் லவ் தட் கண்ரிங்க. இருந்தாலும், காலத்தின் கோலமாக இப்ப என் வாழ்க்கை இந்த அமெரிக்காவையும் ஏத்துக்க வைச்சுருக்குங்க. அதுதான் உண்மை. ஆனா, எந்த காரணங்களால் நான் இந்தியாவை காதலிக்கிறேனோ அந்த காரணங்களே அங்கிருந்து களையப்படும் பொழுது என்னால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியலங்க. ஏன்னா, எதனை இங்கிருந்து எடுத்துச் சென்று சிறந்ததென அங்கே நிறுவ முயல்கிறார்களோ அது இங்கே விட்டுப் போன தழும்புகளை கண் கொண்டு இரு பக்க தட்டுகளிலும் வாழ்ந்ததினால் என்னால் இந்தியாவில் இருக்கும் சிறப்பு என்னான்னு தெளிவாக பார்க்க முடியுதுங்க. அதுக்காக எல்லாமே இந்தியாவில் சரியாக இருக்கிறது என்று சொல்ல வரலைங்க.

நிறைய நான் பணத்தை மூடைக் கட்டிக் கொண்டு இந்தியாவிற்கு அள்ளிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கு வாழ்ந்து வரலைங்க. இங்கயும், நான் வாழ்க்கையை முழுதுமாக வாழ்கிறேங்க. அதிலுள்ள நல்லது கெட்டது எல்லாமே உடல் கொண்டும், சுவாசிச்சும் பார்க்கிறேன், நிறை, குறைகள் எல்லாம் பிடிபடுதுங்க. அவ்வாறு பட்டுணர்ந்ததை, அது போன்ற சில அழிவுப் பாதைகளில் சென்றுதான் ஒரு சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயத்தில் இல்லாத நம்மூர் மக்களுக்கு சிறிதேனும் ஏதாவது இங்கிருந்து பார்த்த விசயங்களை இரு பக்க விசயங்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டிய ஆளாக இங்கேயே சிக்குண்டுதால் அதனை அங்கு சொல்லி கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்ற முடியுமா என்ற ஒரு ஆசையில்தானுங்க அப்படி மக்கள் வந்து இங்கு வாழ்ந்தாலும் நாலு பேரு கூடுற இடத்தில வந்து சொல்லலாங்க, தனது கருத்துக்களை. அதில ஏதாவது தப்பிருக்காங்க.

ரொம்ப நேரம் ஆகாதுங்க நானும் ஒரு Mr. Wolfவாகவோ, Mr. Woodஆகவோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டு பேசித் திரிவதற்கு. நான் நானாக இருக்க ஆசைப் படுவதால்தான் இங்கே வந்து இப்படி எழுதித்(புலம்பித்) தள்ளுறேங்க. எனக்கும் ஒரு சில்வர் ஸ்பூன் நான் வளர்ந்த சூழ்நிலையில் வாயில் கிடைத்திருந்தால் அங்கேயே கிடந்துருப்பேன். இருப்பினும் இது போன்ற ஒரு பரந்த பார்வை கிட்டியிருக்காதே, அதுவும் ஒன்று இருக்கிறதல்லவா?

அதனால் மற்றவர்கள் எப்படியோ, நான் அவனில்லை :-)). அதனால், அங்கிருக்க, அதாவது இந்தியாவில் மனம் வெதும்பி நடை பிணங்களாக ஏண்டா இங்க பொறந்து சாகுகிறோமின்னு சான்ஸ் கிடைக்கலயேன்னு இருக்கவங்கெல்லாம் ஏதோ நாட்டுப் பற்றினால் கிடைத்த வாய்ப்புகளை நழுவிட்டுவிட்டு இருப்பது போலவும், இங்கு வந்து இருப்பவர்கள் எல்லாம் பணத் திமிரு எடுத்து இங்கு புலம் பெயர்ந்து வந்திருப்பது போலவும் எண்ண வேண்டாம் பெயரில்லாதவரே. ஒவ்வொருத்தர் வாழ்வும் வித்தியாசம் வித்தியாசமாய் அமைந்து விடுகிறது. என்ன செய்வது சொல்லுங்கள். அதற்காக பிறந்த ஊரை துடைத்துதெறிந்து விட முடியுமா, சொல்லுங்க?

எல்லாம் காலத்தின் கோலங்கள். என் இடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் நான் அங்கு வந்து விடுகிறேன். இது எப்படி இருக்கு.

இந்த வாய்ப்பை வழங்கிய பெயரில்லாதவற்கு நம்ஸ்காரங்கள், பல!!



பி.கு: அனானி உங்க வால்மார்ட் தரமான பொருட்களுக்கு இங்கே இருக்கு பதில்... பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

19 comments:

நாமக்கல் சிபி said...

நல்லா நச்னு பதில் சொல்லி இருக்கீங்க தெக்ஸ்!

நிழலோட அருமை வெயிலில் இருப்பவனுக்குத்தானே தெரியும்!

மங்கை said...

மிஷ்டர்.தெகா...

அமைதி அமைதி...

சொன்ன மாதிரி அருமையான கேள்வி.. பதிலும்....

ஒரே மூச்சுல எழுதிட்டீங்க போல இருக்கு...

கிரிக்கெட்டுல ஜெல்லி பீன்ஸ் பிரச்சனைல நம்ம டிராவிட் சூப்பரா ஒரு கருத்த சொன்னார்..அது மாதிரி இருக்கு... உங்க பதில்...

மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பாப்போம்....

சிவபாலன் said...

மங்கை

டிராவிட் இது போல் கருத்து சொல்லத்தான் லயாக்கு.. வேற ஒன்றுக்கும் உதவுவதில்லை.. நீங்க நிறைய அவந்திகா பதிவை படிக்கறீங்கன்னு நினைக்கிறேன்.. Ha Ha Ha..

சரி, இப்ப தெகாவிற்கு வருவோம்..

தெகா,

இந்தப் பதிவை நான் வரவேற்கிறேன். நீங்க சொல்வது சரியே!

நன்றி!

Anonymous said...

முழுக்க முழுக்க உண்மை தெக்கி. இந்த கேள்வியை கேட்டவர் நீங்க இந்தியாவில ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், இதை விட சின்ன கம்பெனியில வேலை செஞ்சு அந்த கம்பெனிய காப்பாத்த சொல்லுவஆர். பிரச்சனை என்னன்ன அடுத்தவன் நல்லா இருக்கறத பார்த்து வர்ர பொச்செரிச்சல்.

காட்டாறு said...

நண்பரே, எதுக்கு reaction? அருமையான வாதங்கள் நிரம்பிய உங்கள் "வால்மார்ட் தேவையா" பதிவில் செய்ய வேண்டியது ஏராளம் இருக்க, நீங்களோ ஏதோ ஒரு அனானி சொன்னதுக்கு உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டீங்களே. :-(

உங்க பதிவில் ரொம்ப அருமையாக இருந்தது இது தான்
//பி.கு: அனானி உங்க வால்மார்ட் தரமான பொருட்களுக்கு இங்கே இருக்கு பதில்... பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...
//

பின்குறிப்பு:
எனக்கு மனதில் பட்டது உங்களுக்கு சரியில்லை எனத் தோன்றினால், இந்த மறுமொழியை பிரசூரிக்க வேண்டாம். தவறாக எண்ண மாட்டேன்.

Thekkikattan|தெகா said...

நிழலோட அருமை வெயிலில் இருப்பவனுக்குத்தானே தெரியும்!//

சிபி, ஒரே வரியில என் முழு பதிவோட கருத்தையும் சொல்லிட்டீங்க...

Thekkikattan|தெகா said...

அமைதி அமைதி...

சொன்ன மாதிரி அருமையான கேள்வி.. பதிலும்....
ஒரே மூச்சுல எழுதிட்டீங்க போல இருக்கு... //

நான் அமைதியாகத்தான் இருக்கேன்.

எல்லாருக்கும் உதவட்டுமே இந்த பதில் அப்படின்னுதான். இது அடிக்கடி கேக்கிற கேள்விதானே.

கொஞ்சம் கிடு, கிடுன்னு தோனினதை தட்டி விட்டாச்சு.

Thekkikattan|தெகா said...

சிவா,

நீங்க நிறைய அவந்திகா பதிவை படிக்கறீங்கன்னு நினைக்கிறேன்.. Ha Ha Ha..//

ஆணியை பிடுங்க வைச்சு, கோபத்தை எப்படி தடுக்கிறதுன்னு கதை சொன்ன ஆட்களாச்சே... நிறைய குட்டிக் கதைகள் கைவசமிருக்குமின்னு நினைக்கிறேன்... ஆமா, "ஜெல்லி பீன்ஸ்" அது என்னாது?

நன்றி சிவா!

SurveySan said...

ஹ்ம். interesting points.

they not know. forgive them :)

ஆனா, நம்ம இங்க ஒக்காந்துட்டு, அட்வைஸ் கொடுத்தா, அங்க இருக்கரவங்க, கடுப்பு ஆகத்தான் செய்வாங்க. அவங்க மேலயும் தப்பில்லை. உங்க மேலயும் தப்பில்லை. என் மேலயும் தப்பில்லை.

சர்வம் க்ருஷ்ணார்ப்'பணம்' :)

தருமி said...

தெகா,
அறைகிற யதார்த்தங்கள்.......

Anonymous said...

Thekkikaattan and kaataaru, thanx for considering my comment and making a seperate post for that...

i'm not a real anony, but I'm a small blogger :-) (like siru vyabari) couldn't comepete with big bloggers like you (wal-mart) in making posts.

Thekki, kaataaru, madayan neenga ellorum, oru vybari point of view-la irunthu pesareenga... but naan oru consumer point of view-la irunthu pesaran.....


p.s:

1) nan pala varusham US-la kuppai kottittu, muzhu manasoda India thriumbi vanthu koncha naal achu. Inge irukkira siru vyabarigal adikkira kollai-ya vida US wal-mart-oda price is much much cheaper and very better quality...

2) I'm not based in chennai.. In Delhi region

Thekkikattan|தெகா said...

அனானி,

நன்றி மீண்டும் வந்து தங்களின் இன்றைய வியபாரி நிலையை தெரியப் படுத்தியமைக்கு :-), இருந்தாலும் உங்கள் பெயரைச் சொல்லி ஒரு மோதலில் ஒரு அன்பு மலரச் செய்திருக்கலாம். இருப்பினும், நன்று.

//i'm not a real anony, but I'm a small blogger :-) (like siru vyabari) couldn't comepete with big bloggers like you (wal-mart) in making posts.//

ஏங்க, இது போன்ற இவ்வளவு பெரிய கேள்வி, முழு மனதோட வேற தயாகத்துக்கு திரும்பி போற laxuary இதெல்லாம் அமைந்தும், உங்களை நீங்களே இப்படி சொல்லிக் கொள்ளலாமா, சிறியவர்-பெரியவர்? என்னாமோ என்னுடைய பதிவுகள் எல்லாம் ஒன்னொன்னும் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் எடிட்டோரியல் பகுதியில் வருவது போல் அல்லவா சொல்லியிருக்கிறீர்கள். அப்படி எல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும், உண்மையைச் சொல்லி இந்த காலத்தில் பொழப்பு நடத்த முடியுங்களா?

1) nan pala varusham US-la kuppai kottittu, muzhu manasoda India thriumbi vanthu koncha naal achu. Inge irukkira siru vyabarigal adikkira kollai-ya vida US wal-mart-oda price is much much cheaper and very better quality... //

இப்ப நீங்க வருத்தத்தோட சொல்லுறீங்களா இல்லை அமெரிக்காவை மிஸ் பண்ணுறேன் அப்படின்னு துணிகளோட தரத்தை வைச்சு அந்த உணர்வை வெளிப்படுத்துறீங்களா? குழப்பறீங்களே.

நான் கூட கடந்த முறை அங்கு வந்த பொழுது சாரோஜினி மார்க்கெட், கன்னாட் ப்லேஸ் சுத்தியும் தெரு ஒர கடைத் துணிகளே நிறைய எடுத்து வந்தேனே, இன்னமும் என் கூடத்தான் இருக்கு. அதே, துணி மணிகள்தான் நல்லா இன்னமும் கொஞ்சம் நல்ல நூற்களைக் கொண்டு தைக்கும் மிடத்தில் அடித்து இங்கு உங்களுக்கு பிடித்த வால்மார்ட்டினுள் $2.99க்கு கொடுக்க முடிகிறது.

அதாவது, அமெரிக்காவில் பல நிலைகளில் அரசியல் நடத்துவதால், மனித உழைப்பை உலகம் தழுவிய முறையில் சுரண்டி எடுத்துக் கொண்டு வந்து இங்கு தரத்தினை நிறுவ முடியும் தான் (அதற்காகத்தானேங்க இந்தனை போர்களும், அரசியல் சித்து விளையாட்டுக்களும் நாங்க விளையான்டு கொண்டு இருக்கோம்). அதற்காகத்தானே முதலில் சிறு வியபாரிகளையே துடைத்து எறிவது.
நீங்களும் வாங்க, வந்து பெரிய அளவு எழுத்து வியபாறி ஆகுங்க :-). தெரிஞ்சுக்குவோம், நீங்க என்ன படிச்சி வைச்சிறீக்கீங்க, இந்த உலகத்தைப் பொருத்துன்னு.

Thekkikattan|தெகா said...

மடையன் ;-),

என்னங்க பேரு அது!! உங்க சந்தேகங்களுக்கு அதே அனானியே வந்து பதில் சொல்லியிருக்கார் பாருங்க. உங்களுக்கு மீண்டும் ஏதாவது சந்தேகமிருந்தால் திரும்ப கேளுங்க, கண்டிப்பாக அனானி பதில் சொல்லுவார் அப்படின்னு நம்புவோம்... அவரை நம்பி வேற தனிப் பதிவு ஒண்ணு போட்டாச்சு.

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

நண்பரே, எதுக்கு reaction? அருமையான வாதங்கள் நிரம்பிய உங்கள் "வால்மார்ட் தேவையா" பதிவில் செய்ய வேண்டியது ஏராளம் இருக்க, நீங்களோ ஏதோ ஒரு அனானி சொன்னதுக்கு உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டீங்களே. :-( //

கொஞ்சம் யோச்சிசேந்தான் இப்படி தனியாக ஒரு பதிவு போடணுமான்னு. இருந்தாலும், மக்கள் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து, அவங்களின் நிலையில் பேசுவதில் எனக்கு உடன் பாடு கிடையாது.

அதற்காக இங்கு எதுவும் வந்து சொல்லக் கூடாது என்றும் அவர்கள் எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமாக தெரியவில்லை.

சரி, இதன் பொருட்டு ஆற்றலை கொஞ்சம் செலவிட்டால் பின்னால் இது போன்று கேள்வி கேக்கும் அன்பர்களுக்கு ஒரு லிங்கை கொடுத்து விட்டால் அவர்கள் என் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா, அதான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இந்த விசயம் பொருட்டு கூறியிருக்க முடியும். யார் படிப்பது என்று விட்டுவிட்டேன் :-)

உங்க பதிவில் ரொம்ப அருமையாக இருந்தது இது தான்
//பி.கு: அனானி உங்க வால்மார்ட் தரமான பொருட்களுக்கு இங்கே இருக்கு பதில்... பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...
//

ஹா ஹா ஹா... நன்றாகச் சொன்னீர்கள் போங்கள். நல்லவேளை அந்தப் பதிவும் என்னுதாக இருந்துபோனதில் மகிழ்ச்சி :-))

Thekkikattan|தெகா said...

சர்வேயரே,

ஆனா, நம்ம இங்க ஒக்காந்துட்டு, அட்வைஸ் கொடுத்தா, அங்க இருக்கரவங்க, கடுப்பு ஆகத்தான் செய்வாங்க. //

இது போன்ற கருத்துப் பறிமாற்றங்ளை கொண்டு ஊடாடுவதை ஏன் அட்வைஸ்ன்னு ஒரு பெயரை வைத்து பெரிய இடத்துக்கு எடுத்துட்டுப் போகணும். வாசிக்கிறவங்களா, படிச்சவங்களா, நாலு விசயம் தெரிஞ்சவங்களா நீங்களும் நல்லது, கெட்டதை இதன் பொருட்டு என்னான்னு வையுங்க.

எந்த வெகு ஜன பத்திரிக்கயாளனாவது இங்கேயிருந்து சுட்டுட்டுப் போயி தான் எழுதியது மாதிரி உல்டாப் போட்டு எல்லார் எடத்திலும் கொண்டு போயி சேர்க்கட்டும். ஏதோ, நம்மால் ஆனாது அவ்வளவுதான் அப்படின்னு நாம நினைச்சுட்டு மன திருப்தியோட போயிகிட்டு இருப்போம்.

சர்வம் க்ருஷ்ணார்ப்'பணம்' :)//

அப்படியா? எல்லாமேவா??

Thekkikattan|தெகா said...

தருமி,

தெகா,
அறைகிற யதார்த்தங்கள்....... //

இன்னும் என்னவெல்லாமோ சொல்லலாம்தான். பிறகு எப்படி புத்தகம் போட்டு மில்லியன்_அ குவிக்கிறது...:-)) சரியாப் போச்சுங்கிறீங்களா...

நன்றி ஆசிரியரே!!

Agathiyan John Benedict said...

தெ.கா. அவர்களே,

ரொம்ப நல்லா எழுதுறீங்க. நீங்கள் என் ஊர்க்காரன் என்பதால், இரட்டிப் மகிழ்ச்சி அடைகிறேன். தொடருங்கள்...

N Senthil Kumar said...

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

அடிவயிறு சுருண்டது போல ஒரு உணர்வு. உங்கள் நிலையில் என்னை வைத்து யோசித்துப் பார்க்கின்றேன்.

Related Posts with Thumbnails