Saturday, August 11, 2007

*செல்வனின்* - பணப்பயிர், வியாதிகள் ஓர் அலசல்!!!

அன்பர் செல்வன் அருமையான முறையில் ஏன் நாம் வால்மார்ட் போன்ற சங்கிலிக் கடைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற தன்னுடைய புரிதல்களை இந்தப் பதிவில் வைத்து வருகிறார்... இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?

அங்கு நிறைய அருமையான பின்னூக்கிகளின் மூலமாக மிகவும் தரமான முறையில் விவாதம் நடந்து வருகிறது. இந் நிலையில் செல்வன் அவர்கள் கேட்ட ஒரு கேள்வி மிகவும் முக்கியம் என நான் கருதியதால் அந்த பின்னூட்டத்தை மட்டும் ஒரு சிறு தனிப் பதிவாக இங்கு பதிகிறேன்.

நண்பர்களே இந்த வால்மார்ட் விசயத்தை நீங்கள் எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதனைப் பற்றி எனக்கு தெரியவில்லை இங்கு. ஆனால், இது ஒரு மாபெரும் மாற்றத்தினை கொண்டு வரக் கூடிய ஆசுர சக்தி வாய்ந்தது என்பது மட்டும் திண்ணம். எனவே சிறிது கவனத்தை இங்கும் போட்டு வையுங்கள்.

இதோ அந்த பின்னூட்டம்.

செல்வன்,

//குறைந்த காலத்தில், அதிக மகசூல் தரும் நெல்வகைகள் நின்றன.மற்றவை மறைந்துவிட்டன.//

சரி நீங்கள் கூற வருவது, செலக்டிவ் ப்ரீடிங், இதன் பொருட்டு எது 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடைக்கு ரெடியாகிறதோ அதனையே ஸ்டாம்ப் அடிப்பது போல் அந்த புவிப் பரப்பு முழுதுமே பயிரிடப் பட்டு ஜனத்தொகையை பரப்புவோம் என்ற புரிதலின் கோட்பாட்டின் படி சரியா.

இப்பொழுது இந்தக் காட்சியை சிறிது வனத்தினுள் நகர்த்துவோம். அங்கு என்னாகிறது இப்படியே இயற்கை(நம்மைப் போலவே-புத்திச்சாலித்தனமாக) "செலக்டிவ் ப்ரீடிங்" பண்ண ஆரம்பித்தால் ஒரே ஒரு உயிரினத்தை மட்டும் அவ் இயற்கையே காதலிக்கும் பொருட்டு (உதாரணமாக புலி அழகாக இருக்கிறது என). இப்பொழுது ஒரு வனத்தில் புலியையும் படைத்து அவைகளுக்கு நன்கு கேட்டு உணரக்கூடிய புலன்களையும், கால் பாதங்களில் மிருதுவான பஞ்சடைத்ததைப் போன்ற padயையும் கொடுத்து, ஒளிந்து, மறைந்து அதற்கு இரையாகும் ஒரு மானையும் கொடுத்து இருந்துகொண்டிருக்கிறது அவ்வனம்.

இப்பொழுது அந்த மானோ அதனை விட விரைவாக ஓடவும், நன்கு கவனித்து பிறகு இரை உட்கொள்ளும் பழக்கத்தையும் கொடுத்து தப்பிப் பிழைப்பதற்கென ஒரு தகவமைப்யையும் கொடுத்திருக்கிறது. இந்த பின்புலத்தில் அங்கு என்ன நடக்கிறது? அங்கு இயற்கை என்ன விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது? இதுவே அவ் இயற்கை அந்தப் புலியை அதீதமாக காதலிக்கும் பொருட்டு சுலபமாக மான்களின் இனபெருக்கத்தை முடிக்கியும், சும்மா மான்கள் எல்லாம் லபக், லபக்கென்று படுத்துக் கிடப்பதை பிடித்து உண்பதனைப் போலவும் படைக்கவில்லையே ஏன்? அப்படி "செலக்டிவ் சாய்ஸ்" இயற்கை நிகழ்த்தியிருந்தால் என்னவாகும்? கொஞ்சம் யோசித்தால் அங்கே இயற்கையின் Prey-Predator relationship and Carrying Capacity at play என்பது விளங்க வரும். அது எதற்காக என்பதுவும் விளங்க வரும்.

இப் பொழுது நாம் முரட்டுத் தனமாக அந்த இயற்கையே விரும்பாத ஒரு செயலில் இறங்கி அந்த carrying capacity என்ற அமைப்பை எல்லாம் உடைத்து செய்வதெல்லாம் இன்னும் நிறைய வியாதிகளை தருவித்துக் கொண்டதுடன், பரிணாம சமச் சீரற்ற நிலையும் தான். இது எங்கு எடுத்துச் செல்லும் என தெரியாமலேயே கால்குலேட்டாரும், பென்சிலுமாக அமர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

//மட்டை அரிசியை சாப்பிட மக்கள் விரும்புவதில்லை.அதனால் அதை விவசாயிகள் அதிகம் பயிரிடுவதில்லை.நஷ்டம் வரும் பயிரை யார் தான் பயிரிட விரும்புவார்கள்?//

நான் பேசுவது மட்டை அரிசி (முரட்டுக் காளை) ரகத்தை மட்டுமல்ல.

அதனால், ஒரு சில மாதங்கள் சேர்த்து எடுத்துக் கொள்கிறது அந்த நெல் பயிரின் பயனை அனுபவிக்க என்று, அதன் மருத்துவப் பயனைக் கூட கருத்தில் கொள்ளாமல் உரங்களைப் போட்டு 60 நாட்களில் மண்ணில் கொஞ்சம், நம் உடம்பில் கொஞ்சம் என்று அந்த உரங்கலை உணவின் ஊடாக தின்று வாழ்ந்து விட்டால் வரக்கூடாத இடத்தில், வளரக் கூடாத விகிதத்தில் கட்டி வளரும் பொழுது அடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது.

இதில் எது சமயோசிதப் புத்தி? ஒன்று சொல்லுங்கள் எனக்கு விளங்கவில்லை, ஏன் இன்று மேற்கத்திய நாடுகளில் ஆர்கானிக் காயகறிகளும், உணவு வகைகளும் மிகவும் பிரபலமடைகிறது, அதிக விலை கொடுத்தேனும் வாங்கிச் சாப்பிட வேண்டுமென, பெரிய பணக்காரர்களும், ஹாலிவுட் நடிகர்களும் முன் வருகிறார்கள்? அதே ஆர்கானிக் உணவு வகைகள்தானே ஒரு காலத்தில் ஒரு சராசரி இந்தியா குடும்பம் சாப்பிட்டு வந்தது. ஆனால், இன்று நிலைமை இப்படி ஆகி இருக்கிறதெ அது ஏன், செல்வன்.

41 comments:

வவ்வால் said...

தெ.கா,

இப்படி திடீர்னு அடுத்த எபிசோடுக்கு போய்டிங்களே , இப்போ நான் எங்கே எனது பின்னுட்டத்தை தொடர்வதாம்?

அருமையாக , உயிர் சூழல் , பல்லுயிர் பெருக்கம் ,இயற்கை தகவமைவு ,என சொல்லியுள்ளீர்கள் இதையே தான் நானும் யோசித்தேன் ஆனால் அது பதிவை வேறு திசைக்கு அழைத்து செல்லுமோ என ஒரு தயக்கம்.

வலைப்பதிவுகளில் இது ஒரு பெரிய பிரச்சனை ஏதாவது ஒன்றை சொல்லி மற்றதை விளக்கப்பார்த்தால் திசை திருப்பல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு மொக்கை போட போய்விடுவார்கள்.

இயற்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு, அது அழியாமல் இருந்தால் தான் மனிதன் உருவாக்கிய மற்ற பொருளாதார மண்டலங்களின் செயல்பாடு நிற்கும்.

விரிவாக இங்கேயோ அல்லது முந்தைய பதிவிலோ சொல்கிறேன்!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

திசை திருப்பல் அது இதுவென்றல்லாம் ஒன்றும் கருத வேண்டாம், வவ்ஸ். நாம் நமது எண்ணங்களை பதிந்து வைப்போம். நேரம் வரும் பொழுது எங்கே எப்படி பயன் பட வேண்டுமோ அப்படி அதன் பயன் பாடு அமையும்.

கவலை வேண்டாம். நீங்கள் நினைத்ததை அப்படியே இவ்விரு இடங்களில் எங்கே வேண்டுமானாலும் பதிந்து வையுங்கள்.

எங்கே உங்களின் ஈமெயில் இன்னும் வரவில்லை?

நன்றி வவ்வால்!!

சிவபாலன் said...

தெகா

பதிவை பல முறை படித்தால் தான் புரியும் போல..

இந்த Techinical Terms க்கு எல்லாம் கொஞ்சம் சிறு விளக்கம் தேவை.. மேற்கொண்டு புரிந்துகொள்ள..

//Prey-Predator relationship and Carrying Capacity at play // Like this..

முயற்சிக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

மன்னிச்சுக்கோங்க சிவா,

இந்த Techinical Terms க்கு எல்லாம் கொஞ்சம் சிறு விளக்கம் தேவை.. மேற்கொண்டு புரிந்துகொள்ள..

//Prey-Predator relationship //

மேலே குறிப்பிட்டுள்ள புலி-மான் வகை உறவைப் பற்றி பேசுவோம், புரியும் படியாக இப்பொழுது புலிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஒரு வனத்தினுள் அமைந்து அது சாப்பிடும் இறைச்சியின் அளவீட்டைக் காட்டிலும், மான்களின் எண்ணிக்கை கன்னா பின்னாவென்று அதிகரித்திருந்தால், அது உணவுச் சங்கிலியை மான்களின் கூட்டத்தைக் கொண்டு அந்த லோக்கல் வனத்தில் வாழும் மற்ற விலங்கினங்களையே பாதிக்கலாம்.

எப்படியெனில் மான்களின் எண்ணிக்கை கட்டற்று பெருகி கிடைக்கும் தாவர உணவுகளை எல்லாமும் அவைகளே சாப்பிட்டால் மற்ற தாவர உண்ணிகளுக்கு உணவு எங்கே போவது??? என்ற நிலை வரும் அல்லவா?

அது போலவே, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துப் போய் அது உணவாக உட் கொள்ளும் மானின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஆபத்துதான்.

எனவே, இயற்கையே ஒன்றுக்கு மற்றொன்று ஒரு சமச்சீறாற்றும் வண்ணம் இந்த டிசைனை அமைத்திருப்பதைக் காணலாம்.

//and Carrying Capacity at play //...

இப்பொழுது மேலே உள்ளதற்கு கொஞ்சம் தொடர்புடையதுதான் இந்த "ஏற்றுச் செல்லும் நிலையும்" இப்பொழுது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துப் போய் அதனை வைத்துக் கொண்டு அந்த வனம் என்ன செய்யப் போகிறது, உணவுத் தட்டுப்பாடு என்று வரும் பொழுது அந்த வனம் தாங்கிக் கொள்ளும் முழுத் திரனையுக் காட்டி விட்ட நிலையில் அது தொட்டு விட்டது அதன் Carrying Capacity என்பதனை...

Unknown said...

தெகா,

அதிக விளைச்சல் தரும் அரிசியை பயிரிடுவதை வனத்துக்கு நகர்த்தி புலி-மான் உதாரணம் காட்டி விட்டீர்கள்.

இந்த உதாரணத்தில் நீங்கள் சொல்லவரும் மைய கருத்து "இப் பொழுது நாம் முரட்டுத் தனமாக அந்த இயற்கையே விரும்பாத ஒரு செயலில் இறங்கி அந்த cஅர்ர்யிங் cஅபcஇட்ய் என்ற அமைப்பை எல்லாம் உடைத்து செய்வதெல்லாம் இன்னும் நிறைய வியாதிகளை தருவித்துக் கொண்டதுடன், பரிணாம சமச் சீரற்ற நிலையும் தான்"

பரிணாம் சமச்சீரற்ற நிலை உருவாக காரணம் மனிதன் அந்த சங்கிலியை உடைத்ததுதான்.இயற்கை விதிப்படி நாம் ஆட்டை உண்ண வேண்டும், நம்மை சிங்கமும், புலியும் உண்ண வேண்டும்.இந்த சங்கிலியை மனிதன் என்று உடைத்து, காட்டை விட்டு வெளியே வந்து நாகரிகத்தை படைத்தானோ அப்போதே இந்த பரினாம சமசீரற்ற நிலை உருவாகிவிட்டது.இயற்கை விதிப்படி மனித இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடிய எந்த உயிரினமும் இப்போது கிடையாது.

பாரதியார் காலத்தில் 30 கோடி முகமுடையாள் என்று பாடினார்.அந்த பாடலை பாடி 70 ஆண்டுகளுக்குள் 110 கோடி முகமுடையாளாக நமது நாடு மாறிவிட்டது.இத்தனை பேருக்கு உணவிட வேண்டும்.அதுவும் குறைந்த விலையில் உணவிட வேண்டும்.இதற்கு வழி என்ன?

இயற்கை விவசாயத்தை உடைப்பதுதான்.2000 வகை அரிசியில் எது குறைந்த காலத்தில், குறைந்த விலையில் அதிக மகசூல் தருகிறதோ அதை பயிரிட வேண்டியதுதான்.பரினாம சமசீரற்ற சூழலை நாகரிகம் மூலம் நாம் உடைத்தோம்.இன்று அதை கட்டிகாக்க நாம் மேலும் மேலும் செயற்கையை நாட வேண்டியிருக்கிறோம்.

இதற்கு ஒரே மாற்று ஜனத்தொகையை குறைப்பது..அது நடக்காது..அல்லது மீண்டும் பழங்கால வாழ்க்கை முறைக்கு திரும்பி கார்களும், ரோடுகளும், கணிணீகளும் இல்லாத உலகுக்கு திரும்புவது.இதுவும் நடக்காது..அப்புறம் நமக்கு வேறு மாற்று வழியென்ன இருக்கிறது சொல்லுங்கள்.

//அதனால், ஒரு சில மாதங்கள் சேர்த்து எடுத்துக் கொள்கிறது அந்த நெல் பயிரின் பயனை அனுபவிக்க என்று, அதன் மருத்துவப் பயனைக் கூட கருத்தில் கொள்ளாமல் உரங்களைப் போட்டு 60 நாட்களில் மண்ணில் கொஞ்சம், நம் உடம்பில் கொஞ்சம் என்று அந்த உரங்கலை உணவின் ஊடாக தின்று வாழ்ந்து விட்டால் வரக்கூடாத இடத்தில், வளரக் கூடாத விகிதத்தில் கட்டி வளரும் பொழுது அடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது.//

வேறு வழியில்லை.நீங்கள் இன்னொரு இடத்தில் சொல்லும் ஆர்கானிக் விவசாயம் ஏன் இத்தனை விலை அதிகம் என்று யோசித்து பார்த்தீர்களா?ஆர்கானிக் முறையில் அனைவரும் விவசாயம் செய்ய துவங்கினால் மாமிசம், தானியம், பழங்கள் என அனைத்தின் விலையும் எகிறும்.ஆர்கானிக் முறையில் மாமிசம் உற்பத்தி செய்ய கோழியை சுதந்திரமாக பண்னையில் உலவ விடவேண்டும்.இய்ரகையான மண்புழுவை போட்டு வளர்க்க வேண்டும்.அப்படி செய்தால் அதிக முதலீடு தேவைப்படும்.மாமிசம் விலை உயரும்(25 to 50%).அதை வாங்கி உண்ண ஏழைகளுக்கு வசதி இருக்காது.அப்புறம் அவர்கள் உனவுசத்து குறைவு, பசி, வறுமை என்று தவிக்க வேண்டியதுதான்.

பாரம்பரிய முறையில் நாம் விவசாயம் செய்துவந்த காலத்தில் பசி, பட்டினி, பஞ்சம் என இருந்தது.பல்லாயிரம் பேர் மடிந்தனர்.பசுமைப்புரட்சிக்கு திரும்பினோம்.பசியும் பட்டினியும் மறைந்து டயபடிஸும், கொழுப்பு சத்தும் சேர்ந்துவிட்டன.

Thekkikattan|தெகா said...

பாரதியார் காலத்தில் 30 கோடி முகமுடையாள் என்று பாடினார்.அந்த பாடலை பாடி 70 ஆண்டுகளுக்குள் 110 கோடி முகமுடையாளாக நமது நாடு மாறிவிட்டது.இத்தனை பேருக்கு உணவிட வேண்டும்.அதுவும் குறைந்த விலையில் உணவிட வேண்டும்.இதற்கு வழி என்ன?//

உணவளித்து, உணவளித்து மனிதர்களை பன்றிகளைப் போல் வளர்த்து விட்டு மாமிச மலைகளாக ஆக்கிவிட்டால், இந்த பூமியின் நிலைதான் என்ன? அதற்கும் ஒரு Carrying Capacity இருக்கத்தானே செய்யும் இல்லை அதனையும் வென்று விட்டோமா, செல்வன்? அப்படியே பெருக்கிக் கொண்டுப் போனால் உடல் சுகாதாரமும், சுவாசிக்கும் காற்றுமே நமக்கு விசமாகிப் போன பின்னர் எதற்கு இன்னமும் இந்த கட்டற்ற இயற்கையையே வென்றதாக நினைத்துக் கொள்ளும் இனப் பெருக்கம்?

பிறக்கும் பிள்ளைக்கு மூளையில் கட்டி. பிறக்கும் பொழுதே இடமாறிப் போன உறுப்புகள் இப்படியாக தினம் ஒரு செய்தி படிக்கவா?

//இன்று அதை கட்டிகாக்க நாம் மேலும் மேலும் செயற்கையை நாட வேண்டியிருக்கிறோம்.//

அப்ப நாம் இயற்கையிலிருந்து தனித்த ஆளாக ஆகிவிட்டோம் அப்படித்தானே பொருளாக நான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குத்தான் என்ன முடிவு. எப்படி நாம் இயற்கையிலிருந்து தனித்து வாழ்கின்ற ஒரு ஸ்பீசிசிஸ் ஆவோம்.

//இதற்கு ஒரே மாற்று ஜனத்தொகையை குறைப்பது..அது நடக்காது...//

இங்கு ஒரு சிறு உதாரணம் ஒரு விவசாயி தனக்கு ஒரு ஏக்கர் விளை நிலத்தை வைத்துக் கொண்டுள்ளார், அவர் அங்கு கிடைக்கும் மழையளவு, கிடைக்கும் தரை நீர், மற்ற விசயங்களை கவனத்தில் கொண்டு இவ்வளவுதான் தன் குடும்பத்திற்கு விளைவித்தது போக மீதம் உள்ளதனை பண்டமாற்றுக்கு பயன் படுத்திக் கொள்கிறார் என்ற ஒரு சிறு பொருளாதாரக் கணக்கை தன் தகப்பன் வழி பெற்று வாழ்வை, பெற்றுக் கொள்ளும் பிள்ளைகள் முதற் கொண்டு, தனக்கு வேண்டிய உடனடி தேவைகளை விரித்தோ அல்லது சுருக்கியோ கொள்கிறார். There you see the act of balancing well in place, invisibly.

இந்த சிறு வாழ்வியல் கணக்கின் படி அவர் இயற்கை சமச் சீரைக் கவனத்தில் கொண்டு வாழ்கிறார் என்றுதானே பொருள் கொள்ள முடியும். பாரதியார் என்ன 200 வருடங்களுக்கு முன்பா வாழ்ந்தார்? இந்த சமச்சீரை உடைத்து எப்படி நாங்கள் இயற்கையை வென்று விட்டோமென்று மார்தட்டி கொள்வதற்கு. நினைத்து வேனால் கொஞ்சம் வருத்தமுறலாம், எப்படி இன்னும் வருங்காலம் ஆகுமோ என்று.

நிற்கக் கூட இடமில்லாத அளவிற்கு இன்னமும் நீங்கள் கூறிய..//அந்த பாடலை பாடி 70 ஆண்டுகளுக்குள் 110 கோடி முகமுடையாளாக நமது நாடு மாறிவிட்டது.இத்தனை பேருக்கு உணவிட வேண்டும்.அதுவும் குறைந்த விலையில் உணவிட வேண்டும்.// இப்படி குறைந்த விலையில், குறுக்கு வழியில் அழகினை சிதைத்து உடனடி சிகிச்சையாக, பொருளாதார வள்ளுனர்களை மருத்துவர்களைப் போன்று முடிவுகள் எடுத்து இயற்கையை கையாகப் படுத்து வதை நினைத்து - வருத்தப் பட வேண்டிய விசயம்.

கேட்கப்படும் கேள்வி, இதனை இன்னமும் தட்டிக் கொடுத்து அதே குறுக்கு வழிப் பாதையில் போனால் ஒன்றை நம்பித்தான் மற்றொன்று என்ற இயற்கை சித்தாந்தத்தின் படி இதன் முடிவுதான் என்ன? ஒரு தட்டு பணத்தை வைத்து எல்லாமும் நம்மை சுற்றிலும் வேண்டிய அளவிற்கு பொருட்கள் இருக்கும் பொழுது இயற்கை நசிவுற்று முனகும் பொழுது அந்த சாப்பாட்டை விழுங்கு என்றால் விழுங்க முடியுமா?

//ஆர்கானிக் முறையில் அனைவரும் விவசாயம் செய்ய துவங்கினால் மாமிசம், தானியம், பழங்கள் என அனைத்தின் விலையும் எகிறும்.//

அதன் விலை ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அந்த காலத்தில் அதிகமில்லை. கொடுத்த விலை பொறுமை மட்டுமே. ஏனெனில் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இங்கு மேற்கத்திய நாடுகளில் ஆர்கானிக் உணவுகளுக்கு கொடுக்கும் விலையும் அந்த பொறுமைக்குத்தான். அதன் சாகுபடி காலம் கொஞ்சம் அதிகம், அது நமது ஃபாஸ்ட் உணவு கலாச்சாரத்திற்கு ஒத்து வரவில்லை என்று கூறுங்கள்.

மற்றபடி இயற்கை உரங்கள், இந்த மண்புழு விசயங்கள் எல்லாம் ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கம்ப சூத்திரமல்ல, இந்த செயற்கை உரங்களை ஒப்பீடும் பொருட்டு.

//பசியும் பட்டினியும் மறைந்து டயபடிஸும், கொழுப்பு சத்தும் சேர்ந்துவிட்டன.//

இது இப்பொழுது. அன்று வைரம் பய்ந்த கட்டையாக வாழ்ந்தாக எனது தாத்தா கூறுவார், என்றென்றால் இந்த அவசர பயிர்களை தவிர்த்து தனது குடும்ப சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கவனத்தில் கொண்டு விவசாயித்ததின்படி.

வவ்வால் said...

தெ.கா

உங்களுக்கு மெயில் விரைவில் அனுப்புகிறேன்!

//வேறு வழியில்லை.நீங்கள் இன்னொரு இடத்தில் சொல்லும் ஆர்கானிக் விவசாயம் ஏன் இத்தனை விலை அதிகம் என்று யோசித்து பார்த்தீர்களா?ஆர்கானிக் முறையில் அனைவரும் விவசாயம் செய்ய துவங்கினால் மாமிசம், தானியம், பழங்கள் என அனைத்தின் விலையும் எகிறும்.//

செல்வன்,
மக்கள் தொகை பெருகி வருகிறது என்பது உண்மை தான், அதே சமயத்தில் நாம் அதி தீவிரமாக செயற்கையான உரங்களை கொட்டி உற்பத்தியை பெருக்கி அதன் மூலம் இயற்Kஐ சமச்சீரை குலைத்து அழிவின் வேகத்தை துரிதப்படுத்துகிறோம்.

பசுமை புரட்சிக்கு முன்னர் உணவுத்தட்டுப்பாடு இருந்து அதை குறைத்தோம், ஆனால் அப்போது இருந்த சில உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளையும் பார்க்க வேண்டும்.

1) விவசாய நிலப்பரப்பு குறைவு
2) பாசன வசதி குறைவு
3)தொழில் நுட்பம் குறைவு
4) உணவு தானியம் சேமிப்பு மற்றும் பதப்படுத்துதல் வளர்ந்து இருக்கவில்லை

எனவே நம்மால் நினைத்த அளவுக்கு உற்பத்தி செய்து அனைவருக்கும் அளிக்க இயலவில்லை.

ஆனால் தற்போது,

நிறைய தரிசு ,நிலம் , மேலும் இது வரை விவசாயம் செய்யாத நிலங்களும் பண்படுத்தப்பட்டு உற்பதியில் பங்கு வகிக்கிறது.

மேலும் பல அணைக்கட்டுகள் , பாசன வசதிகள் , மின்சாரம் என மேம்படுத்தபட்டு நீர் ஆதாரம் பெருகியுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது,

தேசிய உணவு கழகம் ,மற்றும் பல மானில உணவு வழங்கள் துறைகளும் சேமிப்பு ,பதப்படுத்துதல் என சிறப்பாக செயல்பட துவங்கிவிட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு உணவு உற்பத்தி இல்லாமலே உணவு வழங்கும் அளவுக்கு நாம் தானியங்களை சேமித்து வைத்துள்ளோம்.

எனவே நாம் இயற்கை விவசாய முறைக்கு மாறுவதால் ஏற்படும் தற்காலிக பின்னடைவுகளையும் எதிர்கொள்ள முடியும்.

சில இயற்கை விவசாயிகள் நவீன வேளண்மையை விட அதிக மகசூல் ஈட்டுவதாக தெரிவிதுள்ளார்கள்.

அது எப்படி சாத்தியம் எனக்கேள்வி எழலாம், திரும்ப திரும்ப செயற்கை உரங்களைப்போட்டு ஒரு கட்டதிற்கு மேல் மண் ஆனது தனது செயல் திறனை இழந்து விட்டது. அதனை மறுபடியும் செயல் திறன் மிக்க மண் ஆக மாற்ற மாற்று விவசாயம் என்கிற இயற்கை முறையால் தான் முடியும்.

சாதாரணமாக ஒரு கிராம் மண்ணில் இத்தனை எண்ணிக்கையில் நுண்ணுயிர்கள் என இருக்கும் , அதன் அளவு சமிபகாலமாக மிக குறைவாக உள்ளது , அதாவது மண்ணின் உயிர்ப்பு குறைந்து வருகிறது. அதனை மீட்டு எடுக்காமல் இனிமேல் எத்தனை மூட்டை உரம் போட்டாலும் விளைச்சல் உயராது.

மேலும் ஒரு குறிப்பிட்ட வகைக்கு என நோய்களும் , பூச்சிகளும் இருக்கும், அவை ஒரு கட்டத்திற்கு மேல் எத்தனை பூச்சி மருந்து அடித்தாலும் அழியாது எதிர்ப்பு தன்மை வளர்த்துகொள்ளும்.
அது போன்ற சமயங்களில் அதனை கட்டுப்படுத்த வேறுவகையினை பயிரிட வேண்டும். தானே அழிந்து விடும் பூச்சிகளும் , நோய்களும்.

ஒரு குறிப்பிட்ட வகை பயிர் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் ஊட்டசத்தினை எடுத்துகொள்ளும், இதனால் ஒரே வகையில் பயிரிட்டால் நிலத்தில் ஒரு சில நுண்ணூட்டமட்டும் குறைவு ஏற்பட்டு, பின்னர் அதனை சரிய செய்ய இயலாத சேதம் எற்படும்!

எனவே உற்பத்தியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பலவகை பயிர்களும் சுழற்சியில் பயிரிட வேண்டும்!

Unknown said...

உணவளித்து, உணவளித்து மனிதர்களை பன்றிகளைப் போல் வளர்த்து விட்டு மாமிச மலைகளாக ஆக்கிவிட்டால், இந்த பூமியின் நிலைதான் என்ன? அதற்கும் ஒரு Carrying Capacity இருக்கத்தானே செய்யும் இல்லை அதனையும் வென்று விட்டோமா, செல்வன்? //

மனிதர்களில் எத்தனை மாமிச மலைகள் இருக்கிறார்கள் தெகா?ஒட்டிய வயிறும், சூம்பிய காலுமாய் இருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் இருக்க உனவு உற்பத்தி பெருக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டாமா?பசியில் சாகிறவன் ஐ ஆர் 20 என்று பார்ப்பானா இல்லை பொன்னி அரிசி என்று பார்ப்பான?கிடைப்பதை தின்று உயிர் வாழ அல்லவா முயல்வான்?

//அப்படியே பெருக்கிக் கொண்டுப் போனால் உடல் சுகாதாரமும், சுவாசிக்கும் காற்றுமே நமக்கு விசமாகிப் போன பின்னர் எதற்கு இன்னமும் இந்த கட்டற்ற இயற்கையையே வென்றதாக நினைத்துக் கொள்ளும் இனப் பெருக்கம்?//

இனப்பெருக்கத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும் தெகா?சீன அரசு கொடுங்கோல் முறையை கையாண்டு பார்த்தும் அங்கே மக்கள் தொகை குறையவில்லை. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த விளம்பரம் வேண்டுமானால் செய்யலாம், காண்டம் விற்கலாம்- அதை செய்துகொண்டுதான் இருக்கிறோம்.புதிதாக என்ன செய்ய முடியும்?எப்படி ஜனத்தொகை பெருக்கத்தை நிறுத்த முடியும்?

//கேட்கப்படும் கேள்வி, இதனை இன்னமும் தட்டிக் கொடுத்து அதே குறுக்கு வழிப் பாதையில் போனால் ஒன்றை நம்பித்தான் மற்றொன்று என்ற இயற்கை சித்தாந்தத்தின் படி இதன் முடிவுதான் என்ன? ஒரு தட்டு பணத்தை வைத்து எல்லாமும் நம்மை சுற்றிலும் வேண்டிய அளவிற்கு பொருட்கள் இருக்கும் பொழுது இயற்கை நசிவுற்று முனகும் பொழுது அந்த சாப்பாட்டை விழுங்கு என்றால் விழுங்க முடியுமா?//

பசியில் சாகும் ஒருவனின் கோணத்தில் யோசித்து பாருங்கள்.அவனிடம் இயற்கையை நசித்து கிடைக்கும் உனவு வேண்டுமா அல்லது பட்டினி கிடக்கிராயா என்றால் என்ன சொல்லுவான்?

மனிதர் அனைவரின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வது முக்கியம். வரம்பு மீறி ஜனத்தொகை போனபின் இயற்கை,செயற்கை என்று எதையும் யோசிக்க முடியாது.இயற்கையை தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம்.இனி திரும்ப நினைத்தால் ஜனத்தொகையில் பெரும்பங்கை அழித்துத்தான் இயற்கை சாம்ராஜ்ஜியம் அமைக்க முடியும்.

//அதன் விலை ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அந்த காலத்தில் அதிகமில்லை. கொடுத்த விலை பொறுமை மட்டுமே. ஏனெனில் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இங்கு மேற்கத்திய நாடுகளில் ஆர்கானிக் உணவுகளுக்கு கொடுக்கும் விலையும் அந்த பொறுமைக்குத்தான். அதன் சாகுபடி காலம் கொஞ்சம் அதிகம், அது நமது ஃபாஸ்ட் உணவு கலாச்சாரத்திற்கு ஒத்து வரவில்லை என்று கூறுங்கள். //

பாஸ்ட் புட்டுக்கு மட்டும் ஒத்துவரவில்லை என்று சொல்லமுடியாது.வீட்டில் மளிகை பட்ஜெட் எகிறினால் சம்சாரிகள் சமாளிப்பதெப்படி? ஏற்கனவே குடும்பத்தை நடத்த முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். விலைவாசி விஷம் போல் தினம் ஏறுகிறது.

ஆர்கானிக் முறையில் தயாராகும் உனவுகள் சராசரியாக 25% - 50% விலை அதிகமாக உள்ளது.ஒரு எல்லைக்கு மேல் அதில் உற்பத்தியை பெருக்க முடியாது.

//மற்றபடி இயற்கை உரங்கள், இந்த மண்புழு விசயங்கள் எல்லாம் ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கம்ப சூத்திரமல்ல, இந்த செயற்கை உரங்களை ஒப்பீடும் பொருட்டு.//

தினம், தினம் பல வைரஸ்கள் பாக்டீரியாக்கள் வியாதிகள் உருவாகின்றன.பல தொற்றுநோய்கள் பயிர்களுக்கு வருகின்றன.இயற்கை முறையால் இவற்றுக்கு மருந்தடிப்பது காரிய சாத்தியமா என தெரியவில்லை.

ஆயுர்வேதம் பழங்கால முறை.நன்கு வேலை செய்தது.இப்போதும் இருக்கிறது. ஆனால் எதாவது ஒன்று என்றால் ஏன் ஆங்கில மருத்துவரிடம் ஓடுகிறோம்?

விவசாயத்துக்கும் அதே லாஜிக்தான்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

உங்களின் பேக் அப் மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது. தொடர்ந்து சொல்லி வாருங்கள்.

அவசியம் மின்னஞ்சல் அனுப்புங்கள். விரிவாக பிறகு எழுதுகிறேன்.

Unknown said...

//ஆனால் தற்போது,

நிறைய தரிசு ,நிலம் , மேலும் இது வரை விவசாயம் செய்யாத நிலங்களும் பண்படுத்தப்பட்டு உற்பதியில் பங்கு வகிக்கிறது.

மேலும் பல அணைக்கட்டுகள் , பாசன வசதிகள் , மின்சாரம் என மேம்படுத்தபட்டு நீர் ஆதாரம் பெருகியுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது,//

வவ்வால்

முன்பை விட நீர் ஆதாரங்கள் மிகவும் குறைந்துள்ளன.விவசாய நிலங்கள் நகரங்களகி வருகின்றன.விவசாயிகள் தொழில்துறைக்கு திரும்புகின்ரனர்.நீங்கள் சொல்லும் நிலை உருவாகவே இல்லை.முன்பை விட விவசாயம் இன்று லாபமற்ற தொழிலாக தான் மாறியுள்ளது.

//சில இயற்கை விவசாயிகள் நவீன வேளண்மையை விட அதிக மகசூல் ஈட்டுவதாக தெரிவிதுள்ளார்கள்.//

அது போன்ற பல செய்திகளை நானும் படித்துள்ளேன்.அது எந்த அளவுக்கு பரவலாக்கப்டும் என்று தெரியவில்லை.எத்தனை பயிர்களுக்கு அதை விரிவுபடுத்த முடியும் என்றும் தெரியவில்லை. அதுபோன்ற முயற்சிகளை நாம் ஊக்கபடுத்த வேண்டும்.அம்முயர்சிகள் பரவலாகும்வரை இருப்பதை வைத்து உனவு பஞ்சத்தையும் பசியையும் போக்க முயல வேண்டும்.

வவ்வால் said...

செல்வன் ,

இப்படி கூட பத்தாம் பசலித்தனமாக பேச இயலுமா தங்களால், நகர மயமாக்களால் விளை நிலங்கள் இழப்பது ஒரு புறம் நடந்தாலும் இது வரை விவசாயமே நடந்திராத கன்னி நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

அதன் விளைவாக 1950 இல் இருந்து பயிரிடும் பரப்பளவு அதிகரித்தே வந்துள்ளது , மேலும் ஒரு ஆண்டில் பயிரிடும் பயிர்களின் எண்ணிக்கையை வைத்து அதன் பரப்பளவு இன்னும் அதிகம் ,உதாரணமாக ஒரு ஆண்டில் ஒரு ஏக்கரில் மூண்டு போகம் விளைவித்தால் அது 3 ஏக்கருக்கு சமம்.

எப்படி 3 போகம் என்றால் அதிக நீர்பாசனம் , கிணறு, ஆழ்குழாய், ஏரி என மேம்படுத்தப்பட்டுள்ளது , அதாவது 1950 இல் இருந்ததை விட! ஆதாரமாக இந்திய அரசின் விவசாயத்துறை வெளியிட்ட புள்ளிவிவரம்.

Area
(Million Hectares) Gross

Net area sown Cropped
area
1950-51 - 118.8 131.9
1960-61 - 133.2 152.8
1970-71 - 140.3 165.8
1980-81 - 140.0 172.6
1990-91- 143.0 185.7
1995-96- 142.2 186.6

(area under food grain cultivation)

Unknown said...

வவ்வால்

1950ல் 118 மில்லியன் ஹெக்டேராக இருந்த விளைச்சல் நிலம் இன்று 142 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.அதாவது சுமார் 25% அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் ஜனத்தொகை சுமார் 40 கோடியில் இருந்து 110 கோடியாக அதிகரித்துள்ளது.அதாவது சுமார் 100%.

விளைச்சல் நிலத்தின் பரப்பளவுக்கு ஒரு எல்லை உண்டு.அதாவது ஒரு அளவுக்கு மேல் விளைநிலத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கவே முடியாது.ஆனால் ஜனத்தொகை அதிகரிப்புக்கு எல்லையே இல்லை.

ஒரு ஆண்டில் விளையும் போகத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பது நான் சொன்ன நவீன பயிர் வகை மாற்றம், நவீன உரம் ஆகியவற்றின் விளைவுதான்

வவ்வால் said...

செல்வன் ,

எல்லாவற்றுக்கும் மறுத்தே பேசவேண்டும் என்ற போக்கில் இல்லாமல் உங்கள் அகக்கண் திறந்து பாருங்கள். சற்று முன் விவசாய நிலப்பரப்பு அதிகரிக்கவில்லை என்றீர்கள், ஆனால் இப்போது புள்ளி விவரம் அளித்ததும் ஆமாம், ஆனால் அது பத்துமா என்கிறீர்கள்.

நான் மேலும் மொத்த தானிய உற்பத்தி, தனி நபர் உணவு நுகர்வு, ஒரு ஏக்கர் நிலத்தின் உற்பத்தி திறன் என எல்லாவற்றுக்கும் புள்ளி விவரங்களை அள்ளி விடவா?

நிலத்தின் அளவினை ஓறளவு தான் அதிகரிக்க முடியும் என்பது அறியாமலா பேசிக்கொண்டு இருக்கிறேன். தற்போதைய தேவையை விட உற்பத்தி அதிகமே , இந்நிலையிலே நாம் செயற்கை விவசாயம் விட்டு மாற வேண்டும். this ia the right time to shift , now or never situation.

இயற்கை முறையில் உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்,முன்னரே சொன்னவாறு மண்ணின் உயிர்ப்பு போன பிறகு எத்தனை மூட்டை உரம் கொட்டினாலும் விளையாது , நிலம் மலடு ஆகிவிடும்.

பின்னர் தேவை இன்னும் 50 ஆண்டு காலம் கழித்து கூடலாம் அப்போது போய் மாற்ற முடியுமா? மால்தூஸ் சொன்ன மக்கள் தொகை வெடிப்பு ஏற்படவே இல்லை, ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் அச்சுறுத்துவதாக தான் உள்ளது. அது எல்லை மீறும் முன் விழித்து கொண்டு தீங்கிலா முறையில் உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும்.

மிக குறைந்த உரம் , அல்லது உரமே இல்லாமல் கூட இயற்கையாவும் இதனை சாதிக்கலாம். அதற்கு ஒரு உதாரணம் கிழே!

" They did not use any pesticide and added very little quantity of fertilizer to the crop. After 140 days, the crop recorded a yield of over 80 bags of paddy (each bag containing 75 kg) an acre with superior quality rice. The farmers were able to earn a profit of Rs. 15,000 to Rs. 17,000 for each acre against an expenditure of about Rs. 8,000 an acre."

source: the hindu.

Thekkikattan|தெகா said...

இந்த பின்னூட்டம் கூட செல்வனுக்குத்தான் என்று நினைக்கிறேன். இதிலிருந்து எனக்கு இந்த ஹார்லிக்ஸ் விசயம் புதிதாக தெரியவந்தது.

சிவபாலன் said...

செல்வன், தெகா, வவ்வால் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் என்னுடைய கருத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

வால்மார்ட்க்கு முன் வால்மார்ட்க்கு பின்.

வா.மு: அதாவது இங்கே HORLICKS நிறுவனம் நம்து சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களில் தனக்கு தேவையான மூலப்பொருள்களை விளைவித்துகொள்ள்கிறது. இது அனைவரும் அறிவர். இது சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடந்துகொண்டிருக்கிறது. சரி, தற்பொழுது அந்த விவாசாயிகளின் நிலை மற்றும் அவர்களின் நிலங்களின் வளங்கள் எவ்வாறு உள்ளது. அப்படி ஒன்றும் ஓகோ ஆகா என்று இல்லை.

நிலங்களின் வளங்கள் குறைந்து உள்ளது. HORLICKS நிறுவனம் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் இலாபத்தை நோக்கிமட்டும்.

சரி, இதற்கும் வால்மார்ட்டுக்கும் என்ன சம்பந்தம். HORLICKS போன்ற நிறுவனங்கள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனும் போது வால்மார்ட் சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த விவசாயிகளால் இப்போதும் வேறு எதும் செய்ய முடியவில்லை. புத்திசாலித்தனமாக பல பேர் இதில் போய் விழவில்லை. அதனால் பல நிலங்கள் காப்பட்டப் பட்டிருக்கிறது.

வால்மார்ட் ஒன்றும் இந்திய விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்று சொல்லி இந்தியா வரவில்லை. லாபம் மட்டுமே நோக்கம்! அதனால் நல்ல வளங்கள் உள்ள நிலங்கள் மட்டுமே அவர்கள் எடுத்து கையாளுவார்கள். அப்படிப் பட்ட நிலங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணவாகும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சரி, வா.பின்: செல்வன் அவர்கள் சொல்லுவது போல், சில விவாசாயிகளின் நலங்கள் வளரும் எனும் போது சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணத் தோன்றும் ஆனால், அதுவே முழு ஆளுமை எனும் போது இது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சிதான்.

தற்பொழுது கரும்பு, நெல் போன்றவற்றிக்கு அந்த காலத்திற்கேற்ப அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறது. இதெல்லாம் வால்மார்டிட்டம் வேலை செய்யாது. அவனுடைய ஆளுமைக்கு கிழே உள்ள நிலங்கள் எல்லாம் அவன் வைத்ததுதான் சட்டம்.

சரி, குளிர்சாதன வசதி எப்படி சாத்தியப்படும். அரசாங்கம் பண உதவியுடன் விவாசாயிகளே கையாளும் பல விசயங்கள் பெரிதள்வு இந்தியாவில் வெற்றி அடைந்துதான் இருக்கிறது. சரி, குளிர்சாதன வசதிக்கு பணம் பெருமளவு தேவை. என்ன செய்யலாம்.

நிச்சயம் பல வழிகள் உண்டு. புது வரிகள் அல்லது உலக வங்கி கடன் போன்றவைதான். ஏனென்றால், இன்று இந்தியா முழுவதும் சாலை வசதி பெருமளவு மேம்பட்டிருக்கிறது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகள். இவைகளை செய்ய நாம் எந்த தனியாரையும் நம்பவில்லை. அது போல் தான் இதுவும்.

தனியார் கூடாது என்பதல்ல வாதம், நம் உயிர் நாடியில் கை வைப்பது தற்கொலைக்கு சமம் என்பதுதான் வாதம்.

WALMART - SLOW POISON அவ்வளவே!


நன்றி

Saturday, August 11, 2007

வவ்வால் said...

//செல்வன், தெகா, வவ்வால் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் என்னுடைய கருத்தை பதிவு செய்து கொள்கிறேன்.//

சிவபாலன் இதைத்தான் கோயம்புத்தூர் குசும்பு என்பதா!! நான் எல்லாம் சராசரி இந்தியன் அவ்வளவே! தினசரிகளை கொஞ்சம் படிச்சு அப்படி இப்படி ஜல்லி அடிப்பேன்!

நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹார்லிக்ஸ் சமாச்சாரம் புதிய தகவல். இதே போன்ற ஒன்று தான் பெப்சி சிப்ஸ் தயாரிப்பிற்காக உருளை கிழங்கை ஒப்பந்த அடிப்படையில் விளைவிப்பது அதன் பின் விளைவுகள் என்பது பற்றி.அதனையும் ஒரு முறை செல்வனோட நடந்த விவாதத்தில் தான் நான் மேற்கோள் காட்டினேன் என நினைக்கிறேன்.

நீங்கள் என்னை விட நல்லா அருமையாக சொல்கிறீர்கள் சிவபாலன்.

வவ்வால் said...

வால்மார்ட் போன்ற வகையறக்களின் படை எடுப்பு மீண்டும் ஒரு காலனி ஆதிக்க சூழலுக்கு தான் இந்தியாவை கொண்டு செல்லும்.

கிழக்கிந்திய கம்பெனி வியாபரத்திற்கு வந்தபோது அவர்களின் துணி வியாபாரம் படுத்து விட்டது காரணம் இந்தியர்கள் மேல் சட்டை அணியும் பழக்கம் இல்லாதவர்கள், அவர்களின் துணி சட்டைக்கும் , பேன்ட் தைக்கவும் தான் பயண்படும். வேட்டிக்கு ஆகாது. எனவே நம்மை வாங்க வைக்க நம் பழக்கத்தையே மாற்றிவிட்டு போய்விட்டார்கள்.

அது போன்ற நிலைத்தான் வால்மார்ட்காரர்களால் ஏற்படும்.ஓட்ஸ் கஞ்சி, மக்கா சோள பாரிட்ஜ் என நார்சத்து இல்லாத உணவுகளை திண்ண பழக்கி நம்மையும் மாற்றி பாரம்பரிய உணவு முறைஅயை மாற்றி விடுவார்கள். இப்பொழுதே பிட்சா ,பர்கர் என்று சாப்பிட்டு வீனாக போகிறார்கள் மக்கள்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

//சிவபாலன் இதைத்தான் கோயம்புத்தூர் குசும்பு என்பதா!! //

சிவான்னா ச்சும்மாவா? அது ஒரு அறிவுச் சுரங்கம் தட்டத் தட்ட வந்திட்டே இருக்கும் :-P

//நான் எல்லாம் சராசரி இந்தியன் அவ்வளவே! தினசரிகளை கொஞ்சம் படிச்சு அப்படி இப்படி ஜல்லி அடிப்பேன்! //

இருங்க, இருங்க நீங்க எல்லாம் இங்கே சொல்றது ஜல்லின்னா, அப்ப நான் அடிக்கிறது. எந்த புள்ளி விபரமுமே நானா சமைச்சு கெடுக்கிறதே இல்லையே :D என்னைய எந்த கணக்கில எடுத்துக்கிறது.

வவ்ஸ், நீங்க வந்து இங்க கொடுக்கிற புள்ளி விபரங்கள்தான் இந்தப் பதிவுக்கே ஒரு எடையை கொடுக்குது, செல்வம் கொடுக்கிற புள்ளி விபரங்களுக்கு. நீங்கள் கொடுக்க, கொடுக்க செல்வம் அதனை சதவீதமாக மாற்றி தான் ஒரு non-parametric statistician என்பதனை நிறுபிக்கிறார்.

அருமையா போயிட்டு இருக்கு நண்பர்களே, தொடருங்கள!!. ஆனாலும், செல்வன் கொஞ்சம் மற்றவர்கள் சொல்வதிலும் ஏதாவது சென்சிபில் ஆகா இருந்தால் கொஞ்சம் கவனத்தில் நிறுத்துங்க ;-). ப்ளீஸ்.

சுரங்கம்

வடுவூர் குமார் said...

பதிவு என்றால் இப்படி இருக்கவேண்டும்.அருமையாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது.
தெகா
வவ்வால்
செல்வன் மற்றும்
சிவபாலம் அனைவருக்கும் நன்றி.
நல்ல பதிவை படித்த திருப்தி.

பெத்தராயுடு said...

கருத்து சொல்ல நம்மகிட்ட என்ன இருக்கு?
பெரியாளுங்க பேசுறத கேட்டுகிட்டு இருக்கேன்.

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி,

//ஓட்ஸ் கஞ்சி, மக்கா சோள பாரிட்ஜ் என நார்சத்து இல்லாத உணவுகளை திண்ண பழக்கி நம்மையும் மாற்றி பாரம்பரிய உணவு முறைஅயை மாற்றி விடுவார்கள்.//

பொதுவா ஓட்ஸ் உடம்புக்கு நல்லது அப்படின்னு ஒரு கருத்து இருக்கே? நான் புதரகத்தில் இருந்தப்போ, உடல் நலம் பேணும் அமெரிக்கர்கள் ஓட்ஸ் பாரிட்ஜ் உண்பதைக் கண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவும்.

- பெத்தராயுடு

Anonymous said...

பதிவுல டவுட் கேட்டு..தெளிவடைஞ்சு
பின்னூட்டம் போடற நல்ல உள்ளத்தை பார்த்து இருக்கீங்களாய்யா..

எங்க ஊர் தம்பிக்கு ஒரு ''ஓ'' போட வந்தேனுங்கண்ணா..

எனக்கும் ஒரு அனானி பின்னூட்டம் போடனும்னு ஆசை....

ஒரு தடவை போடாமையே நான் தான் போட்டேன்னு சொன்ன மவராசா
இன்னைக்கு அனானி பின்னூட்டம் போட்டுட்டேன்...

ச்சும்ம்மா..ஜாலிக்கு..

Thekkikattan|தெகா said...

வடுவூராரே,

உங்களுக்கும் ஏதாவது இது சம்பந்தமாக கொஞ்சம் சொல்லத் தோனினால் சொல்லியிருக்கலாமே.

எவ்வளவு விமர்சனங்கள் வருகிறதோ அவ்வளவு நன்றாக இருக்கும் இந்தப் பதிவின் நிறைவு.

நன்றி வடுவூரார் தங்களின் பாராட்டுதலுக்கு!!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நீங்கதான் வந்து ஓட்ஸ், சோளம் இவைகளின் உணவு கலோரித் திறனையும், ஏன் நீங்க அதில் நார்ச் சத்து, புரோதச் சத்து இல்லையென்று கூறியதனைப் போன்று கூறினீர்கள் என்பதனையும் விளக்க வேண்டும்.

இதில் ஏதாவது உள் காரணம் இருக்கிறதா? நன்றி!

வவ்வால் said...

ஓட்ஸ் கஞ்சி செய்யப்படுவது நேரடி தானியம் அல்ல , அதனை நம்ம ஊரு அவல் போல பிளேக்ஸ் ஆக மாற்றித்தான் தருகிறார்கள். மக்கா சோளத்தையும் வேகவைத்து அதனை நார் நீக்கி பிளேக்ஸ் ஆக தான் தருகிறார்கள் அதனால் அவை கலோரி , சர்க்கரை அளவை பற்றி கவலைப்படுவோருக்கு தான் அது ஏற்ற உணவு , வளரும் பிராயத்தவருக்கு அல்ல!

உணவுக்கட்டுப்பட்டில் இருப்போர் உண்ணலாம் , இளைஞர்களுக்கு அதிகம் சதுள்ள உணவு தேவை இல்லையா?

மேலும் முந்தையப்பதிவில் ஒரு கேள்விகேட்டு இருந்தேன் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட தானியங்களை வால்மார்ட் போன்றவர்கள் இது போன்றவற்றுக்கு பயன்படுத்துவதாக ,அப்படி இல்லை என சொல்ல முடியுமா என செல்வனை கேட்டேன். ம்ரபியல் மாற்றம் செய்யப்பட்ட உணவுபொருட்களை உலகளவில் ஏற்றுக்கொள்ளவில்லை அவற்றை எல்லாம் 3 ஆம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே உற்பத்தி செய்கிறார்கள்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ், அருமையான விளக்கம். இது போன்ற வியபார உத்திகள் மிகவும் நுண்மையான முறையில் கையாளப் படுவதால் விசயங்கள் வெளிச்சத்திற்கு வருவது கிடையாது.

உங்களின் பின்னூட்டத்தின் மூலமாக நிறைய பெரிய விசயங்கள் வெளி வருகின்றன.

இல்லாத குறைக்கு இருக்கவே இருக்கு அகோரப் பசியில் எதனைக் கொடுத்தாலும் தின்பதற்கு இந்த வளரும் நாட்டு மக்கள்... அது மரபணு மாற்றமுற்றதாக இருந்தால் என்ன இல்லாட்டி என்ன எல்லாமே ஒன்றுதான் நம் கண்களுக்கு. அப்படின்னு செல்வன் சொல்லி இருக்கிறார். பசியில் இருக்கும் பொழுது எதனை சாப்பிடுகிறோம் என்று கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டு சாப்பிட முடியுமாவென்று.

அதனால் செல்வனே வந்து உங்களுக்கு பதிலுரைப்பார் என்று எதிர்பார்ப்போம்.

Unknown said...

வவ்வால்,

பாரம்பரிய விவசாயத்தால் உணவு உற்பத்தி பெருக்கம் நடக்கவில்லை.பசுமைப் புரட்சியால் தான் நடந்தது.உணவு இறக்குமதி செய்யும் நிலையிலிருந்த இந்தியா உணவு ஏற்றுமதி செய்யும் அளவு உயரகாரணம் பசுமைப் புரட்சிதான்.

இன்று உணவு பற்றாகுறை எனும் நிலை இல்லை.ஆனால் பட்டினியால் சாகும் மனிதர்கள் பலகோடி பேர் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உடனடி தேவை குறைந்த விலையில் சத்து மிகுந்த தானியம்.அது இயற்கை உரம் போட்டு வந்ததா, செயற்கை உரம் போட்டு வந்ததா என்பது முக்கியமில்லை.

செயற்கை முறையில் செய்யப்படும் விவசாயத்தால் நிலத்தின் திறன் வீழ்ந்துவிடும் என்கிறீர்கள்.அதை நான் மறுக்கவில்லை.இயற்கை விவசாய ஆய்வுகள் ஒருபுறம் நடக்கின்றன.செயற்கை விவசாய ஆய்வுகள் மற்றொருபுறம் நடக்கின்றன.இரண்டுக்கும் அரசு ஊக்கம் அளிக்கட்டும்.தற்போதைய பட்டினி சாவுகளை தவிர்ப்பதும் முக்கியம்.விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம். அதேசமயம் புவிவெப்பம், இயற்கை விஞ்ஞானம் ஆகியவையும் நீண்டகால அளவில் முக்கியம்.

மற்றபடி ஃப்ளேக்ஸ் பற்றி நீங்கள் கூறியவை சரியான தகவல் அல்ல.ஃப்ளேக்ஸில் ஃபைபர் சத்து நிறைய இருக்கிறது.எந்த பிராயத்தினருக்கும் ஏற்ற சத்து நிறைந்த உணவு ஃப்ளேக்ஸ்.

வால்மார்ட் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியத்தை பயன்படுத்துவதாக கூறியிருந்தீர்கள்.அது தவறான தகவல் என கருதுகிறேன்.வால்மார்ட் எதையும் உற்பத்தி செய்வதில்லை.வாங்கி விற்கும் ஒரு வியாபாரி மட்டுமே.கெல்லாக்ஸ் கம்பனி தயாரிக்கும் சீரியலை கடையில் வாங்கி விற்கிறது.கெல்லாக்ஸ் என்ன தானியத்தை பயன்படுத்தி உணவுபொருட்கள் தயாரிக்க வேண்டும் என வால்மார்ட் உத்தரவிட முடியாது.வால்மார்ட்டில் விற்கும் அதே பொருட்கள் மற்ற கடைகளிலும் கிடைக்கும்.ஆக இதில் வால்மார்ட்டை குற்றம் சொல்ல எதுவும் இல்லை.வால்மார்ட் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் அதிக அளவில் கொள்முதல் செய்கிறது.

Unknown said...

சிபா

யார் ஜாம்பவான்?வவ்வால் சொன்னமாதிரி குறும்புதானே இது:)))

ஹார்லிக்ஸ் பற்றி சில தகவல்கள் சொல்லியிருந்தீர்கள்.இதில் சில விஷயங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஹார்லிக்ஸிடம் செய்யும் ஒப்பந்த விவசாயம் விவசாயிகளுக்கு லாபமளிக்கவில்லை என்றால் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் கான்சல் செய்துவிட்டு தமக்கு விருப்பமான பயிரை பயிரிட்டு லாபம் ஈட்டி கொள்ளலாமே? ஏன் அந்த விவசாயிகள் அப்படி செய்யவில்லை? வருடா வருடம் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்?

ஒரு பெரிய வணிக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது அந்த ஒப்பந்த ஷரத்துகள் தமக்கு பிடித்த மாதிரி இருக்கிறதா என்பதை பார்த்து கையெழுத்திடவேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தம் வேண்டாம் என்று போய்விடலாம்.யாரும் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் தீர வேண்டும் என்று அவர்களை கட்டயப்படுத்தவில்லையே?

லாபம் இல்லாமல் யாரும் ஒரு ஒப்பந்தத்தில் தொடரமாட்டார்கள்.

வால்மார்ட் வந்தாலும் அதுதான் நிலைமை.ஒப்பந்தம் வேண்டும் என நினைக்கும் விவசாயிகள் அதை ஏற்றுகொள்ளட்டும்.ஒப்பந்தம் லாபம் தரவில்லை என்றால் கான்சல் செய்துகொள்ளட்டும்.யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

ஒப்பந்த வணிகத்தால் தமக்கு லாபம் இருக்கும் என நினைக்கும் விவசாயிகளை நாம் ஏன் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கேள்வி.வணிகத்தில் ஒப்பந்தம் இருக்கிறது.வங்கியில் ஒப்பந்த முறை இருக்கிறது(லோன் வாங்குவது) .வீடு வாங்குவதில் ஒப்பந்தம் இருக்கிறது.கல்யானத்தில் கூட ஒப்பந்தம் இருக்கிரது.அப்படி இருக்க விவசாயத்தில் மட்டும் ஒப்பந்தம் இருக்க கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

Unknown said...

//இல்லாத குறைக்கு இருக்கவே இருக்கு அகோரப் பசியில் எதனைக் கொடுத்தாலும் தின்பதற்கு இந்த வளரும் நாட்டு மக்கள்... அது மரபணு மாற்றமுற்றதாக இருந்தால் என்ன இல்லாட்டி என்ன எல்லாமே ஒன்றுதான் நம் கண்களுக்கு. அப்படின்னு செல்வன் சொல்லி இருக்கிறார். பசியில் இருக்கும் பொழுது எதனை சாப்பிடுகிறோம் என்று கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டு சாப்பிட முடியுமாவென்று.//

தெகா

நான் கூறியது "மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அல்ல".
உரம், பூச்சிகொல்லி மருந்து, நவீனரக பயிர்கள், நவீன வேளாண்மை முறைகள் ஆகியவற்றையே.

Thekkikattan|தெகா said...

நான் கூறியது "மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அல்ல".
உரம், பூச்சிகொல்லி மருந்து, நவீனரக பயிர்கள், நவீன வேளாண்மை முறைகள் ஆகியவற்றையே. //

அப்ப உங்களுக்கும் இதில் பொறுப்பு இருக்குன்னு சொல்ல வராதை கேக்க சந்தோஷமாக இருக்கிறது, செல்வம். அப்படியெனில் நாம் இன்னும் இதன் பொருட்டு ஆராய்ந்து எது போன்ற சோளங்களையும், நெல் மணிகளையும், மற்ற காய்கறி, பழங்கள் போன்ற வற்றை விளைவிக்கக் கூறி டிமாண்டை இந்த வால்மார்ட்டுகள் செய்கின்றன என்று வாங்கி படித்துப் பார்த்து ஆவன செய்ய வேண்டுமல்லவா.

நீங்கள் அதிக் கொஞ்சம் கலெக்டிவ் கான்சியஸ்னெஸ்வுடன் இருக்கிறீர்கள் என்பதனை, மீண்டும் சொல்கிறேன் இருப்பதனைப் போன்று செல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Anonymous said...

சுதந்திர வர்த்தக உரிமையையும், வர்த்தகத்தின் இரு புற அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களையையும் அரசு நிர்வகித்தால் போதுமானது.

நாம் அஞ்சி வர்த்தகத்தையை அரசிடம் கொடுத்து நடத்த சொல்ல வேண்டியதில்லை. வர்த்தகம் நடத்த தெரிந்த அரசுக்கு வர்த்தகம் பிறர் நடத்தும் போது சட்டம் மற்றும் நிர்வாகம் கொண்டு மேலாண்மை செய்ய தெரியாது போகுமா?

செல்வம் வைத்திருப்பது, செல்வம் பெருக்குவது இரண்டும் தவறில்லை. காசில்லாதவன் எல்லாம் உத்தமரில்லை. பணம் வைத்திருப்பதனால் ஒருவன் கெட்டவன் ஆவதில்லை. ஆனால் அக்தகைய மனநிலை எல்லோருக்கும் உண்டு. ஏனேன தெரியவில்லை.

பெருவணிகர் ஆதரிக்கும் யாரும் இயற்கை விவசாயம் எதிர்ப்பார்கள் என்னும் வடிவம் உருவாக்க படுவதாக தோன்றுகின்றது. அது உண்மையல்ல. முதலீட்டுக்கு பங்கம் இன்றி வாடிக்கையாளர்களை அச்சமூட்டும் வகையில் விலை நிர்ணயம் செய்ய தேவையில்லாத வரையில் எந்த வகை விவசாயமும் சரியே.

இந்தியாவின் கிராம வடிவங்கள் சாதீய புற்றுநோயின் வலுவான காரணங்கள். விவசாயம் அன்றாட வாழ்க்கையாக இல்லாமல் தொழிலாக மாற்றம் கொள்ளுதல் மிக முக்கியமே

வவ்வால் said...

செல்வன்,

பசுமை புரட்சியினால் தான் உணவு உற்பத்தி பெருகியது , ஆனால் அது ஒரு அவசர கால தேவையாக குறுகிய காலத்தோடு பயன்படுத்தி விட்டு பின்னர் தீங்கு இல்லாத விவசாய முறைக்கு மாறிகொள்ளவேண்டும். அப்படி தான் இயற்கை ஆர்வலர்களும் சொல்கிறார்கள். அதாவது இனிமேல் பசுமை புரட்சிகாலத்திய விவசாய அனுகு முறை தேவை இல்லை என!

ஏன் எனில் ,

அப்போது நாம் அதிக விளைச்சல் விதைகளை கூட வெளி நாட்டில்(பிலிபைன்ஸ் சர்வேதெச அரிசி ஆராய்ச்சி மையம்) இருந்து தான் இறக்குமதி செய்தோம். அப்போது அவர்கள் கொடுத்த அறிவுறைகள் பின்பற்றப்பட்டது.

தற்போது நம் நாட்டிலேயே ஆராய்ச்சிகள் செய்து நமக்கு ஏற்ற நெல் வகைகள் மேலும் அதிக கலப்பினம் இந்திய சூழல் விவசாயத்திற்கு ஏற்றார்போல கண்டு பிடித்து விட்டார்கள்.

இப்போது இருக்கும் வேளான் ஆராய்ச்சிமையங்களில் கூட இயற்கையாக நோய் எதிர்ப்பு தன்மை, அதிக உற்பத்தி , இயற்கையான முறையில் பெற என தான் நடந்து வருகிறது. இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு அரசே கூட அறிவிக்கும் , அதற்கு முன்னரே பல இயற்கை ஆர்வலர்களும் சொல்லிவருகிறார்கள் ,அதைப்பற்றி ஓரளவு அறிந்த வரையில் நானும் சொல்கிறேன்.

இதன் காரணமாக தான் மேலை நாடுகளிலும் தற்போது அதிகமாக இயற்கை உணவு குறித்து பலத்த பேச்சு கேட்கிறது! எதிர்கால விவசாயம் என்பது இனி இயற்கை விவசாயம் சார்ந்து தான்!

தற்போது நாட்டில் பட்டினி கிடக்கிறார்கள் ஒரு பகுதியினர் காரணம் உணவு தட்டுபாடால் அல்ல , வறுமையினால்.அபரிமிதமான உற்பத்தியை கடலில் கொட்டும் வலர்ந்த நாடுகளிலும் மக்கள் பசி பட்டியோடு இருக்கிறார்கள். காரணம் சமுதாய ஏற்றதாழ்வுகளே!

//கெல்லாக்ஸ் என்ன தானியத்தை பயன்படுத்தி உணவுபொருட்கள் தயாரிக்க வேண்டும் என வால்மார்ட் உத்தரவிட முடியாது//

நான் இது போன்ற பிராண்டட் பொருட்களை மட்டும் சொல்லவில்லை, சில தானியங்கள், மாவுகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு எவ்வித பிராண்டும் இல்லாமல் விற்கப்படும் அவை எல்லாம் வால்மார்ட் தயாரிப்பு தானே.

பிளேக்ஸ் வடிவங்கள் "pre cooked" அதில் சில சுவையூட்டுதல், இன்னும் பல பதப்படுத்துதலும் நடக்கிறது. முழு தானியங்கள் போல் அல்ல அவை!

Thekkikattan|தெகா said...

அனானி,

//செல்வம் வைத்திருப்பது, செல்வம் பெருக்குவது இரண்டும் தவறில்லை. //

அதுவே உலகம் தழுவிய பேராசையாக உருவெடுக்கும் பொழுதுதான் பிரச்சினையே எழுகிறது.

பெருவணிகர் ஆதரிக்கும் யாரும் இயற்கை விவசாயம் எதிர்ப்பார்கள் என்னும் வடிவம் உருவாக்க படுவதாக தோன்றுகின்றது. //

பெருவணிகர் ஒரு சந்தையில் ஓர் பொருளை முன்னிறுத்தி, மற்ற சிறு விவசாயிகளின் அதே பொருளின் விலையை விட பல மடங்கு விலையை குறைத்துக் கொடுக்கும் பொழுது எப்படி சிறு வணிகர் அங்கே பல்முக விற்பனைக் கூடத்திற்கு வழிகேடிட முடியும். நாளாக நாளாக அவர்கள் சுத்தமாக மறைத்தொழிக்கப்படுவர். பிறகு இந்த பெருவணிகர் வைச்சதுதான் சட்டம், சந்தையில்.

பிறகு நீங்கள் அச்சம் தெரிவித்திருக்கிற இதுவும் ....//முதலீட்டுக்கு பங்கம் இன்றி வாடிக்கையாளர்களை அச்சமூட்டும் வகையில் விலை நிர்ணயம் செய்ய தேவையில்லாத வரையில் எந்த வகை விவசாயமும் சரியே.// அடங்கும் பின்பொரு சமயத்தில். எந்தவொரு விவசாயமும் பண்ணுவார்கள் மற்ற சங்கிலிக் கடைகளுடன் போட்டி போட்டு விலையை குறைப்பதற்கு, நம் உடம்பு ஒன்றும் நெல் குதிர்கள் அல்ல எதனையும் வாங்கி கொட்டிக் கொண்டு அப்படி இருப்பதற்கு.

//இந்தியாவின் கிராம வடிவங்கள் சாதீய புற்றுநோயின் வலுவான காரணங்கள். விவசாயம் அன்றாட வாழ்க்கையாக இல்லாமல் தொழிலாக மாற்றம் கொள்ளுதல் மிக முக்கியமே//

எப்படி, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டையே எரித்துக் கொள்வது மாதிரியா?

Anonymous said...

முதல் அனானியை உதாசீனப் படுத்திய இந்த பதிவாளரை...நான் வண்ண்ண்மையாக கண்டிக்குறேன்....

பெத்தராயுடு said...

//ஒரு பெரிய வணிக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது அந்த ஒப்பந்த ஷரத்துகள் தமக்கு பிடித்த மாதிரி இருக்கிறதா என்பதை பார்த்து கையெழுத்திடவேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தம் வேண்டாம் என்று போய்விடலாம்.யாரும் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் தீர வேண்டும் என்று அவர்களை கட்டயப்படுத்தவில்லையே?//

ஒரு முன்னாள் விவசாயியின் மகன் என்ற முறையில் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் அந்த அளவிற்கு விழிப்புணர்ச்சியைப் பெறவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

-------------------
ஹார்லிக்ஸ் பற்றியும், பெரு வணிக நிறுவனங்களின் பேராசை பற்றியும் பேச்சு வந்தது.

இங்கு ஹார்லிக்ஸ் பற்றி ஒன்றைக் குறிப்பிட விறும்புகிறேன். அடுத்த முறை இந்திய ஸ்டோருக்குச் சென்றால் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துப் பாருங்கள். Ingredients பகுதியின் மேல் புதிதாக ஒரு லேபிலை ஒட்டி அந்த பானத்தில் உள்ள உண்மையான சத்துக்கள் பற்றி அறிவித்திருப்பார்கள். இந்த ஹார்லிக்ஸ் எல்லாம் நம்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அமெரிக்காவில் 27 ஊட்டச்சத்துகள் மிக்க பானம் என்று சொன்னால் FDA நோண்டி நொங்கெடுத்துவிடுவான் என்று உண்மையான தகவலைத் தருகிறார்கள்.

நம்மூரில்தான் 27 ஊட்டசத்துகள் மிக்க பானம் என்று விளம்பரபடுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள். ஏனேனில் இங்கு யாரும் வழக்குத் தொடரமாட்டார்கள் அல்லவா?

Thekkikattan|தெகா said...

அனானி,

பதிவுல டவுட் கேட்டு..தெளிவடைஞ்சு
பின்னூட்டம் போடற நல்ல உள்ளத்தை பார்த்து இருக்கீங்களாய்யா...//

யாரப்பத்தி பேசிட்டு இருக்காங்க இந்த அனானி. தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்கப்ப.

இதுக்காக இந்த அனானி கோபிச்சுக்கிட்டு கண்டனம் அது இதுவென்றால்லாம் சொல்லிக்கிட்டு இருக்கார்.

Thekkikattan|தெகா said...

சிவா,

ஹார்லிக்ஸ் ஒரு உள் நாட்டு கம்பெனிதான் என்றாலும் அதுவே நன்கு எல்லா தரப்பு மக்களிடமும் அறிமுகப் படுத்தப் பட்டு பின்னாலில் அதன் விலையை மட்டுப் படுத்தி வைப்பதற்கும், கோதுமையின் உற்பத்தியை பெருக்குவதற்கும் குறுக்கு வழிகளை விவசாயிகளின் மீது வைத்து திணித்திருக்கலாம், அதன் பொருட்டு நாளடைவில் நிலங்களும் தன்னுடைய வீரிய சக்தியை இழந்து நின்றுருக்கலாம்.

இதுவேதான் கதையும் இந்த சங்கிலிக் கடைகளின் வியபார உத்தியுமென்பதே.

//தனியார் கூடாது என்பதல்ல வாதம், நம் உயிர் நாடியில் கை வைப்பது தற்கொலைக்கு சமம் என்பதுதான் வாதம்.

WALMART - SLOW POISON அவ்வளவே! //

மிகவும் சரி.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

அற்புதமான விவாதம், நிறைய தெரிந்துக்கொள்ள முடிந்தது... வாழ்த்துகள் தெகா

Thekkikattan|தெகா said...

பாரி,

மிக்க நன்றி! இது தொடர்பான "இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா" மற்றும் "பரிணாமச் சீர்கேடு ஓர் அறிமுகம்" - படித்தீர்களா?

இந்த கட்டுரை பிடித்திருந்தால் அவைகளும் பிடித்திருக்கக் கூடும். அங்கும் நிறைய பின்னூக்கிகளின் மூலமாக விவாதிக்கப் பட்டுள்ளது.

ஓகை said...

அருமையாக அலசிக் கொண்டிருக்கும் தெக்கா, வவ்வால், செல்வன் மூவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததை ஒரு கதையாக வடித்திருக்கிறேன்.
கிருஷ்னமூர்த்திக்கு ஜே!

படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

Suka said...

தெகா.. அருமையான பதிவு.. ஆரோக்கியமான விவாதங்கள்.. இதுபோன்ற பதிவுகளைக் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது.

வாழ்த்துக்கள்
சுகா

Thekkikattan|தெகா said...

ஓகை,

தங்களின் கவனிப்புக்கும், வாழ்த்துக்களும் எனது நன்றிகள்! தங்களின் பதிவை படித்தேன், பதில் அங்கே.

சுகா,

//தெகா.. அருமையான பதிவு.. ஆரோக்கியமான விவாதங்கள்.. இதுபோன்ற பதிவுகளைக் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. //

என்ன ரொம்ப நாட்களாக உங்களின் படைப்புகளை காணவில்லை. நான் ஒரு தீவிர வாசிப்பாளனாச்சேங்கிற முறையில கேக்கிறேன்.

இப்பத்தான் உங்களுக்கு இந்தப் பதிவை பார்க்க வாய்ப்பு கிட்டியதா? என்ன செய்றது சுகா, அதுவும் அது போன்ற ஒத்த அலைவரிசியில் உள்ளவர்கள், தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

நன்றி, சுகா!

Suka said...

உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி தெகா.. இதோ நீங்கள் சொன்னதால் ஒரு பதிவும் எழுதிவிட்டேன் :)... ஒரு சில சஞ்சலங்களால் வலைபதிவுகளிலிலிருந்து கொஞ்சநாள் தள்ளியிருக்க வேண்டியிருந்தது.

வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails