Thursday, January 19, 2006

யார் புத்திசாலி...?

எதார்த்த வாழ்வில் பல நிலைகளில் பல விதமான மனிதர்களை சந்திக்க வாய்ப்புகள் அதுவாக அமையும். உதாரணமாக தன்னுடன் வேலை பார்க்கும் இடத்திலோ, ரயில் மற்றும் பேருந்து பயணங்களிலோ. அப்படி சந்திக்க நேர்ந்து சில அதிசியத்தக்க விடையங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு இடமாறக் கூடும். அண்மையில் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த "காதல்" திரைப் பட கதைக் கரு கூட அப்படி ஒரு சந்திப்பில் கிடைத்ததாக அப்படத்தின் இயக்குனர் கூறக் கேட்டோம்.

நாம் கதைக் கேட்கும் நிலையிலிருப்பதால் அவ் நிகழ்வின் ஆழத்தை நம்மால் கிரகித்திக் கொள்ள முடியுமே தவிர அவ் உணர்வை நம்மால் பெற முடியுமா? அவ்வாறு கேட்டுணர்ந்த உண்மைச் சம்பவம் ஒன்றை நம் வாழ்வில் (சந்திக்க நேர்ந்து) கொணர்ந்து அதன் உச்சத்தை அடைந்து அதன் உண்மை நிலையை உணர நம்மில் பல பேர் அஞ்சி விலகியே இருக்கிறோமே, ஏன் இப்படி.

அவ்வாறு ஈடுபடும் பொழுது அதனால் ஏற்படும் சிக்கல்களை மனதில் கொண்டு தவிர்ப்பதால் நமக்கு கிடைப்பது வாழ்வியல் சார்ந்த பட்டுணர்விழப்பா அல்லது அது போன்ற துர்ச் சம்பவங்களிலிருந்து விலகி தன்னை தக்க வைத்துக் கொள்வதால் எதிர் கால சுய முன்னேற்றம் (ஆன்மீக மற்றும் சமூதாய) கருதியா என்பது எனது அண்டைய காலத்திய விழிப்புணர்வு கேள்விகளில் ஒன்று.

இவைகளுக்கு மிக அண்மையில் மிக்க தெளிவாக ஐயா ஞானவெட்டியானிடமிருந்து தெளிவுரை பெறும் பாக்கியமும் பெற்றேன், அது என்னை புத்தக அறிவூட்டத்துடன் தடை பட்டுப் போன சிந்தனை ஒட்டத்தை கலைந்து பட்டறிவூட்டதினுள் உள்ள நீரோடையில் இணைத்து தெளிவு படவைத்ததுடன் நிறைய என்னுடைய வினாக்களுக்கு விடை கிடைத்ததாகவும் தோணச் செய்கிறது.

இப்பொழுது புத்தகங்கள் படிப்பது சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளேன். மேலும் வள்ளுவம் கூறிய இந்த குறளின் மகத்துவமும் அதன் இன்றியமையாமையும் உணரப்பட்டது. அக் குறள் இதுதான்...

"அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்."

4 comments:

துபாய்வாசி said...

I can't put my comments on the TV news blog.

Can you please check?

சந்தோஷ் aka Santhosh said...

என்னங்க பண்ணிங்க உங்களுடைய தொலைக்காட்சி பதிவுல பின்னுட்டம் போட முடியலை. நிறையமுறை முயற்ச்சி செய்து விட்டேன்.சீக்கரமா சரி செய்யுங்க.

Sam said...

உங்க டேனா ரீவ் பதிவில பின்னூட்டம் இட முடியல. நல்ல பதிவு. எனக்கும் பிடித்த ஒருவர். அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.
அன்புடன்
சாம்

Sivabalan said...

நல்ல பதிவு!!

Related Posts with Thumbnails