Sunday, January 08, 2006

பட்டறிவு, படிப்பறிவு பார்த்து தெரிந்தறிவு

ரொம்ப சீரியசான தலைப்பா இருக்கேன்னு தலை தெறிக்க ஒடிப்போயிடதீங்க படிச்சுப் பாருங்க பிடிக்கலாம் அதனைபற்றியதுதான் இப்பதிவு:

பட்டறிவு, படிப்பறிவு, பார்த்து தெரிந்தறிவு இம் மூன்றில் எது ஒருவனுக்கு வாழ்வியல் சார்ந்தறிவை ஆழமாக உணர்த்தி தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது என்பதனை பற்றிய எனது கண்ணோட்டம் நான் பட்டு தெரிந்து கொண்டிருப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு.

நானும் வயதிற்கு வந்த நாளிலிருந்து என் மனம்மெனும் குரங்கை ஒரு நிலை படுத்தி வாழ்வெனும் படகில் எந்தவொரு ஒட்டையும் விழுந்துவிடா வண்ணம் கரை சேர்த்துவிட எத்தனித்து ஆன்மீகமெனும் துருப்புச் சீட்டை படிப்பறிவின் [Universe in a Nutshell and Parallel Universe ;) போன்ற] மூலம் பெற்று அதனை எனது சொந்த வாழ்க்கையில் பாதி தெரிந்தும் பாதி தெளியாமலும் நடைமுறை படுத்தப்போக எனக்கு இன்று கிடைத்துக் கொண்டிருப்பது பட்டறிவு.

இந்த பட்டறிவு எனும் பொக்கிசம் கிடைக்க தன்னையும் தன்னை சார்ந்த சமூக நடைமுறை கருத்துக் களையும் கூட சில நேரங்களில் தொலைத்து நானும் காணாமல் போகி கொண்டிருக்கின்றேனோ என்று கூட நினைக்க வைக்க தோன்றுகிறது. எனினும் இந்த அகன்று விரிந்த(கொண்டிருக்கிற) பிரபஞ்சத்தில் வளரும் ஒவ்வொன்றும் இறுதியில் திரும்பவும் தனது சுய நிலைக்கு (சுருங்கி) வந்துதான் ஆக வேண்டும்மென்ற கூற்று உண்மையெனில் தேடும் ஒவ்வொரு வினாவுக்கும் விடை கிடைத்துத்தானே ஆக வேண்டும்? நான் இங்கு பேசப் போகும் வினாக்கள் வாழ்வியல் சார்ந்தவையே அன்றி ஐன்ஸ்டைன்னிய அல்லது ஹாக்கின்ச வினாக்களோ அல்ல.

நாம் எல்லோருமே எதோ ஒரு மண்ணியல் சார்ந்த விடயமன்றி அதனைவிட உயர்ந்த விடயத்திற்காக பிறக்கிறோம் என்று வைத்துக்கொண்டால் எங்கிருந்து வருகிறது இந்த மனித ஏற்ற தாழ்வுகள்? அவ் ஏற்ற தாழ்வுகள்தான் மனிதனின் தனி மனித சுயமுன்னேற்றதிர்க்கு அடிகோலாக அமைகிறதோ என்று எண்ணுகின்றேன். இருவர் பார்க்கும் ஒரே விடயமும் அவ்விருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணவோட்டத்தை ஏற்படுத்துவதில்லையே ஏன்?

எந்த தளத்திலிருந்து நாம் அவ்வாறு வேறு படுகிறோம் அவ்வாறு இறு வேறு தளங்களிலிருந்து விடயங்களை அணுகுவதற்கு ஏது அடிப்படையாக அமைகிறது? மதமா? அல்லது நம் வளர்ப்பு முறையின் மூலம் நமக்கு ஊட்டப் பட்ட கருத்தோட்டங்களா? அல்லது வேறுபிற காரண காரணிகளா (கல்வி, தொழில் அல்லது குடும்ப அங்கீகாரம் அன்றி)?

நான் என்னையே பல சூழ்நிலைகளில் கேட்டுக் கொண்ட கேள்விகளில் சிலவை அவை. எனக்குக் கிடைத்த வாழ்வும் வளர்ப்பு முறையும் எல்லோருக்கும் அமைந்தது போலத்தான் அமைந்திருக்கிறது. இருப்பினும் எல்லோரும் நடக்கும் அந்த முள்ளற்ற, கரடு முரடற்ற பாதையிலிருந்து விலகி சற்றே வலியேற்றமிக்க பாதையை தேர்ந்ததெடுக்க உந்துதலாக இருந்தது எது (உதராணமாக நானகவே தேடிப் போய் இந்தியாவிலிருந்து சிறுமியாக சிறு வயதில் அமெரிக்க கொண்டுவரப்பட்டு அதற்கு முன்னரே நமது தாயகத்தில் படக் கூடாத கொடுமைகளையெல்லாம் அனுபவித்து அந்த வலியே இன்றும் தனது சொந்த வாழ்வை அமைத்துக் கொள்ளும் நிலையிலிருந்தும் ஒரு நம்பிக்கையற்ற தன்மையை கொண்டு தன்னையும் வருத்திக் கொண்டு தனக்கு உதவ வந்தவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அந்த பாதிப்பு அவளை தாக்கியிருக்கிறது இது அவளின் ஆழ் மனத்தில் பதிந்த ஒரு உண்மை, இது இப்படியாக இருக்க, அதன் ஈர்ப்பின் விகாரம் தெரியாமல் அவளுக்கு ஒரு வாழ்வு கிடைக்கவேண்டும் என்ற மிக்க சிரத்தையான விடா முயற்சியை கையில் கொண்டு இறங்கி இன்றும் அவளின் கேள்விகளுக்கு பதில்மட்டுமே அளித்துக் கொண்டு இருக்கிறேன்...).

இருப்பினும் இம் முயற்சியின் மூலம் நானும் தினமும் ஏதோ ஒரு இலக்கை அடைந்து கொண்டுதான் இருக்கிறேன் என்பது அவ்வப்பொழுது உணர்கிறேன், அதிலும் இந்த கதை சுபமாக முடிந்தாலும் முடியாவிட்டாலும்.

ஒருவனுக்கு வாழ்வை பற்றிய பிரக்ஞை அதாவது வாழ்ந்து மடிகிறோம் என்றும் இடைப்பட்ட காலத்தில் எதனை தேடித் தேய்கிறோம் என்ற உணர்வும் எந்த சூழ்நிலையில் எண்ணவைக்கிறது? வாழ்வில் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாகும் போதோ, பேரிழப்பொன்றோ அல்லது பேரிடிவொன்றொ நம்மை தாக்கும் பொழுதானே பொதுவாகவே அவ்வாறு எண்ண வைக்கிறது.

மாறாக மிக்க சந்தோசமான சூழலிலா? நிறைய சிந்தனா வாதிகள் கூறியதை பேன்றே வெற்றியை காட்டிலும் தோல்வியில் தான் நிறைய கற்றுகொள்ள கிடைக்கிறது, தொடர் வெற்றி ஒருவருக்கு தான் அவ் முயற்சியில் தன்னிரைவு அடைந்துவிட்டதாகவும் எல்லாமும் அறியப்பட்டதாகவும் எண்ணத் தோன்றி வளர்ச்சியினூடே தொய்வு ஏற்படுத்தி விடுவதாக எனக்குப் படுகிறது.

இது வாழ்வியல் சார்ந்த எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும். எல்லா விடயங்களும் மிகச் சரியாக கணக்கீடப் பட்ட ரீதியில் சொல்லும் பொழுதோ தனது மன உலகம் அதிலேயே உழன்று ஏனைய பிற விடயங்களுக்கு மனம் திருப்பப்படும் பொழுது நாம் வாழ்வின் எல்லைக் கோட்டை தொட்டிருப்பதை உணர்வோம்.

இதற்கிடையில் எல்லா உயிரினங்களும் செய்திருக்கக் கூடிய அடிப்படை வேலைகளான தனக்கே வாழ்ந்திருப்பதை காணலாம் (பிறத்தல், உண்ணுதல், உறங்குதல், வளர்தல், இனப் பெருக்கம் இறுதியாக மடிதல்). இந்த அவசர கதியில் தன்னைத் தானே தொலைத்துக் கொள்ளும் சமயத்தில் இதில் எங்கிருந்து வருகிறது பொது நலம், மத நல்லிணக்கம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், சாகோதரத்துவம்.

நம்மில் பெரும்பாலோருக்கு தன்னிடத்தே உள்ள "தற்பெருமை" மற்றும் "ஈகோ" என்ற சிறிய வட்டத்தை விட்டு வெளியில் வருவதற்கே வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்து மடிந்து விடுகிறோம். இச் சூழலில் தன்னை மிஞ்சிய ஏனைய பிற விடயங்களும் தன் வீட்டுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது தனக்கு வாழ்வியல் பொருத்த சூத்திரங்களை கற்றுக் கொடுக்க என்று எப்பொழுது உணர்வது, அதனை நாடிச் சென்று ஆராய்ந்து தெளியும்வரை.

இதனால் தான் நான் நினைக்கின்றேன், இன்னும் ஐம்பது வருடங்களாக சலிக்காமல் திரையரங்கங்களுக்குச் சென்று எல்லா விடயங்களையுமே கதநாயக/கிகளை நடிக்க வைத்து நாம் நம் அவாவை சொரிந்து தீர்த்துக் கொள்கிறொம் என்று எனக்கு கருதத் தோன்றுகிறது.

அவ்வாறு பார்க்கும்பொழுது நீலிக் கண்ணீரும் வடித்து தொலைத்துவிட்டு, தனது அண்டை வீட்டில் தப்பித்தவறி யாரவது ஒருவர் காதல் திருமணமோ அல்லது வேறு மாதிரியான வாழ்வோ வாழ்வில் நலிவடைந்தோருக்கு அளிக்க முன் வந்து வாழ நேரிட்டால் அந்த பக்கமாக தனது குழந்தையை கூட அனுப்பப் பயப்படும் கண் இருந்தும் குருடர்களான இவர்களை எந்த வாழ்வு சார்ந்த பிரக்ஞை தட்டி எழுப்பப் போகிறது?

என்னை பொருத்தமட்டில் ஆற்றின் கரையில் நின்று கொண்டு தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக இருக்குமோ என்று அங்கலாய்ப்பவனை விட, if someone says, been there and done it, it would not work for me என்று கூறுபவன் பட்டறிந்துவிட்டவன் என்று கூருவேன். இது போன்ற அனுபவம் மற்றவர் பட்ட அனுபவங்களை கூர்ந்து கவனிப்பதின் மூலமோ அல்லது நிறைய்ய்ய்ய்ய புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவோ கிடைக்காது.

மற்றுமொரு இடத்தில் படித்ததில் பிடித்த வரிகள்:

'Adventure without risk is Disnelyland.'

'Do what you will, this life is a fiction/And is made up of contradiction.'

6 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு தெக்கிக்காட்டான்,

//1.நாம் எல்லோருமே எதோ ஒரு மண்ணியல் சார்ந்த விடயமன்றி அதனைவிட உயர்ந்த விடயத்திற்காக பிறக்கிறோம்என்று வைத்துக்கொண்டால் எங்கிருந்து வருகிறது இந்த மனித ஏற்ற தாழ்வுகள், அவ் ஏற்ற தாழ்வுகள்தான் மனிதனின் தனி மனித சுயமுன்னேற்றதிர்க்கு அடிகோலாக அமைகிறதோ என்று எண்ணுகின்றேன்.

2.ஒருவனுக்கு வாழ்வை பற்றிய பிரக்ஞை அதாவது வாழ்ந்து மடிகிறோம் என்றும் இடைப்பட்ட காலத்தில் எதனை தேடித் தேய்கிறோம் என்ற உணர்வும் எந்த சூழ்நிலையில் எண்ணவைக்கிறது.//

"உலகம் அறிவால் முன்னேறுகிறது. அறிவின் விளக்கமே இந்த உலகில் காணப்படும் சிறப்புகள். உலகம் எதை நோக்கி முன்னேறுகிறது? உலத்திற்கு என்ன வேண்டும்? ஊன்றிக் கவனிக்க மனுக் குலம் அனைத்துமே சுகத்தை அடையவே பாடுபடுகின்றனர் என்பது தெரியவரும். எறும்பு முதல் அரசாள்பவன்வரை அனைவருமே உழைக்கின்றனர். எதற்காக? சுகத்துக்காகவேதான்." - பகவான் இரமணர்

// இருவர் பார்க்கும் ஒரே விடயமும் அவ்விருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணோட்டத்தை ஏற்படுத்துவதில்லையே ஏன்? எந்த தளத்திலிருந்து நாம் அவ்வாறு வேறு படுகிறோம் அவ்வாறு இறு வேறு தளங்களிலிருந்து விடயங்களை அணுகுவதற்க்கு ஏது அடிப்படையாக அமைகிறது?//

அவரவரின் சிந்தனைத் தளத்தின் வேறுபாடு. ஒவ்வொறுவரும் பட்டுத்திருந்திய பின் கிட்டும் அநுபவமே(பட்டறிவு). இச்சிந்தனைத் தளங்களின் வேறுபாடு, பட்டறிவைப் பொறுத்தே வேறுபடும்.

//அடிப்படை வேலைகளான தனக்கே வாழ்ந்திருப்பதை காணலாம் (பிறத்தல், உண்ணுதல், உறங்குதல், வளர்தல், இனப் பெருக்கம் இறுதியாக மடிதல்).//

அதாவது, தாங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்; இதற்குமேலும் ஒன்றிருக்கிறது என்று. அது என்ன? தெரியவில்லை.

//இந்த அவசர கதியில் தன்னை தானே தொலைத்துக் கொள்லும் சமயத்தில் இதில் எங்கிருந்து வருகிறது பொது நலம், மத நல்லிணக்கம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், சாகோதரத்துவம்.//

பொது நலம், மத நல்லிணக்கம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், சாகோதரத்துவம், ஆகிவை தேவை. இயன்றவரை உதவுங்கள். அப்பொழுது உங்களின் நிலைமையும் தாமரை இலைத் தண்ணீர் போல்தான் இருத்தல் வேண்டும். உணர்ச்சிவயப்படுபவன் எப்பொழுதும் தவறு செய்வதில் முதல் ஆள்.

//என்னை பொருத்தமட்டில் ஆற்றின் கரையில் நின்றுக்கொண்டு தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக இருக்குமோ என்று அங்கலாய்ப்பவனை விட, if someone says, been there and done it, it would not work for me என்று கூறுபவன் பட்டறிந்துவிட்டவன் என்று கூருவேன்.//

என்னை பொருத்தமட்டில் ஆற்றின் கரையில் நின்றுக்கொண்டு தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக இருக்குமோ என்று அங்கலாய்ப்பவனை விட, எனக்குத் தகம். தண்ணீர் இருக்கிறது. குடி எனக் குடிப்பவன் புத்திசாலி. எனக்குத் தாம் தணிந்துவிட்டது. என் வேலையை நான் பர்க்கப் போகிறேன் என போய்விடவேண்டும்.அப்பொழுது உங்களுக்கும் கிட்டு பட்டறிவு.

if someone says, been there and done it, it would not work for me என்று கூறுபவன் வார்த்தையை நம்பினால் உங்களுக்கு சுய புத்தி இல்லையென்பேன் நான். அவன் சிந்தனைத் தளம் அப்படி. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் நமக்கு ஏன் பிடிக்கமல் போகவேண்டும்.

ஏதோ என் கருத்துக்களை உளறி இருக்கிறேன். வாதிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. கால விரயம்தான் மிஞ்சும். காலன் வந்துவிடுவான். அவனுக்குப் பதில்சொல்ல என்னைத் தயார்படுத்திக்கொள்ளப் பொழுது வேண்டும்.

Thekkikattan said...

ஐயா, தாங்களின் விளக்கங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. சிறிது நாட்களாக இந்த பக்கம் வர முடியாமல் போனது, தாங்களின் பின்னூட்டத்தை பார்க்க முடியாமல் போனதற்க்கு காரணம். எனக்கும் பட்டறிவின் மூலமாகத்தான் ஒருவருனுக்கு இருக்கும் தாகத்தை அருந்தி தெளிவடைய முடியும் என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

இருப்பினும் அந்த தாக வேள்வி ஏன் எல்லோருக்கும் பொதுவாக அமைந்திருக்க காண்பதில்லை. அந்த தாகம் வர கர்மா வினை ஏதாவது அடிப்படை தூண்டுகோளாக அமைகிறதா? இல்லை துள்ளுகிற மாடுதான் பொதி சுமக்குமா?

//தாமரை இலைத் தண்ணீர் போல்தான் இருத்தல் வேண்டும்.// அது போல இருப்பதற்க்கு தானே ஐயா அத்தனை ஆன்மீகா சிரத்தைகளும், அது அவ்வளவு எளிதாக என்னைப் போன்ற சிருவர்களுக்கு இப்பொழுது எட்டும் தூரத்தில் இருப்பதாக தெரியவில்லையே. வலிக்கு காரணமே அந்த "தாமரை இலை" நிலையில் இல்லாது இருப்பதால் தானோ எனப் படுகிறது.

மகேவர்மன் said...

இங்கே தேடல் இருக்கும் மனிதன் மட்டுமே எதையும் அடைகிறான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு அது நல்லதோ இல்லை கெட்டதோ தேடல் அவசியம். இத் தேடல் யாருக்கும் சுலபத்தில் கிடைப்பதில்லை. எதை தேட வேண்டும் என்றே கண்டுகொள்ள மிகப்பெரிய தேடல் அவசியம் ஆகிறது அப்போது தேவை அதில் சேருகிரது.

தேவைகள் இதுதான் எனக் கண்டு கொண்ட பின்னர் அத் தேடலுக்கு வழிகள் என்னவாக இருக்கும், இருக்க வேண்டும் என நான் மட்டுமே முடிவு செய்ய முடியும் இது போல் நீ முயல்க என்றோ அல்லது நான் மட்டுமே யுனிக்க்யூ என்றோ கருத முடியாது.

இத் தேடல் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் எதை தேடுகிறோம் என்பதில் மட்டும்தான் வேறுபாடு, உம்: பணம், பொருள், புகழ், ஆன்மீகம், தன்னைத் தேடுதல்
காதல் இப்படி எல்லாம் ,,, பணம் அல்லது பொருள் தேடும் போது அதை அடையாவிட்டால் கூட நான் எதையும் இழந்து போனதாக என்னுவதில்லை ஆனால் தன்னை தேடும் முயற்சியில் நான் என்னை தோல்விக்கு ஆட்படுத்திக் கொண்டதாக எண்ணினால் அது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கக்கூடும்.

காரணம், அங்கே தோல்வியடைவது உங்கள் முயற்ச்சி மட்டும் அல்ல நாம் முற்றிலும் தோற்றுப் போனதாக வே உணர்கிறோம்.

தனக்குள் இருக்கும் ஒன்றை தன்னை அல்லது சுய பரிசோதனைக்கு உட்படும் எல்லாமே எந்த வேடமும் இன்றி இருக்கும் போது மட்டுமே முடியும்.

அது கிட்டத்தட்ட கலக்கும் நிலை
கலக்கும் நிலையில் இருக்கும் போது அடையும் வெற்றிகள் தோல்விகள் எல்லாமே கொண்டாட்டம் கொள்ள தலைப்படுகின்றன அது வெற்றி எனும் போது விடுபட்ட நிலையில் கொண்டாட்டம் ஆனால் தோல்வி எனும் ம்போது அது தன் பரிசோதனை மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு.

மகேவர்மா said...

இவ்வாறாக இருக்கும் ஒரு நிலையில் இவற்றை தள்ளிப் போடுவதை விட ஒதுக்கி வைக்கலாம் தனது வழிகளை மாற்றிக் கொண்டு சில கால விடுப்புக் பின்னர்(சிந்தனைக்கு தேடலுக்கு) மீண்டும் வேறு பாதையில் பயனிக்கலாம் இது நம் மீதான ஒரு நம்பிக்கையிம்மையை அழிப்பதோடு, மீண்டும் உங்களின் தேடலுக்கு பயனத்துக்கு ஒரு சக்த்தியை தரும் அப்போது எல்லாம் சரியாக இருக்கலாம்?. அதாவது ஓசோ சொல்வது போல சும்மா இருக்கலாம்... தேடல் இல்லாமல் இருந்த்தால் நிச்சயம் மனம் ஒருனிலைப்படும் புதிதாய் பிறந்த்ததாய் உணரமுடியும் அல்லவா?

Q: in that case, just pass the time to let go.

அந்த சும்மா இருக்கும் நினைப்பே இல்லாமல் சும்மா இருக்கும் போது மட்டுமே அது சாத்தியமாகும், உங்கள் சக்திக்கும், புதிய உணர்வுகளுக்கும் அது வழிகோல முடியும், அல்லவா?

ஆம், காலத்தை காலமற்ற நிலையில் கடத்த வேணும்.

Q: confusion, restlessness and frustration - out of expectation, define on this...

நா(மனிதன்) உறவுகளால் கட்டப் பட்டவர்கள் உறவுகள் எப்போது எதிர்பார்ப்புகள் கண்ணோட்டத்தில் இருக்கின்றன அப்போது குழப்பமும் கவலையும் ஆரம்பிக்கின்றன, தேவைகள் இருக்கையில் அங்கே கவலை, குழப்பம், சந்தேகம் எல்லாம் வருகிரது அதற்கு முதலில் உறவுகளில் இருந்த விடுதலை முக்கியம்

Q: expectation brings disappointments - if that is so, when there is no expectation there is nothing to lose, is that so?

ஆம் இழக்க எதுவுமில்லாதவனுக்கு எல்லாம் ஒன்று.

Anonymous said...

Thanks for your advice and link to this post. You know who I am. To be honest...this post seems to be a little too much for my knowledge...half understood...half confusing. Anyway, thanks for your kind words.

Thekkikattan|தெகா said...

Thanks for your advice and link to this post. //

You are most welcome!

//this post seems to be a little too much for my knowledge...half understood...half confusing. Anyway, thanks for your kind words.//

I was writing that piece heavily right after I got hit by that incident... so, read and re-read it might give you different dimension with every new readings...

Please take care of yourself...

Related Posts with Thumbnails