Friday, January 06, 2006

மினசோட்டா பய(ண)ம்

அண்மையில் மினசோட்டா மாநிலத்திற்கு சென்றிருந்தேன் Christmas நிமித்தமாக, கண்டிப்பாக அந்தப் பயணத்தைப் பற்றி இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஏதாவது அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்புடன் இதனை இங்கு கிறுக்கிவைக்கிறேன். முதலில் எனது விமான பயணத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். ஏழு வாரங்களே இருக்கும் பட்சத்தில் பயண சீட்டு வாங்க நேர்ந்த்ததால் அமெரிக்க ஏர்லைன்ஸ் இணைப்பு விமானம் மூலம் அட்லாண்டாவிலிருந்து சிகாகோ வழியாக செயிண்ட் பால் செல்ல வேண்டும், குறைந்தது நேரடி விமானமாக இருந்தால் ஒரு இரண்டரை மணி நேரமே ஆகக்கூடும்.

இதில் என்ன இருக்கிறது தெக்கிக்காட்டான் பிளேடூ போட்றனே அப்படின்னு நினைக்காதீங்க வந்திட்டேன் விசயத்திற்கு. இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு மெதுவா உருட்டி ஒடு தளத்திற்கு வந்து வேகத்தை அதீதப் படுத்தி ஒரு நான்கு அடி உயரத்தில் தாவ ஆரம்பித்த அடுத்த விநாடி விமான ஒட்டி தடமுடன்னு திரும்பவும் வலது பக்கமாக விமானம் சாய பலத்த சப்தத்துடன் தரையிறக்கினார். உள்ளே பயணிகளிடத்தே ஒரே கலோபரம் கூச்சல் குழப்பம். விமானம் வேகம் குறைந்து மட்டுக்கு வந்ததும் விமான ஓட்டி வலது பக்கமாக உள்ள இஞ்சின் பழுதடைந்தாகவும் இப்பொழுது விமானம் தன்வசப்படுத்தப்பட்டதாகவும், தாம் அனைவரும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பித்துவிட்டதாகவும் கூறினார்.

மீண்டும் எல்லோரையும் வேறு விமானம் மாற்றி ஒரு ஆறு மணி நேர இடைவேளைக்குப் பிறகு வங்கொலையா கிடந்த எங்களுக்கு ஒரு பெப்சியை இரண்டு பேருக்கு நிரந்து ஒரு காகிததுண்டை கடிச்சிக்க சொல்லி கொடுத்துப் போட்டு அம்மணிகள் இரண்டும் எஸ்கேப்பு அதுவும் இரண்டாவது விமானத்தில.

சரி விட்டுத்தள்ளு அப்படின்னு மறந்திட்டு ஒரு ஐந்து நாளை குளிரக் குளிர கொண்டடிப்புட்டு திரும்ப கொண்டுவந்து விமான நிலையத்தில தள்ளிப்புட்டு போயிட்டாங்க. மொத்தம் பதினோரு மணி நேரம் வீடு வந்து சேர, இடையில என்னன்ன நடந்திச்சுன்னு சொல்ல ஆரம்பிச்சன்ன திரும்ப பேசாம சிவா ஒணான் பிடிக்கிற கதையில வர கதாநாயர்களில் ஒருவராக நானும் திரும்ப போயிடலாம தெக்கிக்காட்டுக்கு அப்படின்னு தோணுது. உடுவன ஒங்கள மிச்சத்தையும் கேட்டுப்புட்டு போயிருங்க, நீங்க தப்பித்தவறி அமெரிக்கன் ஏர்லைன்ஸ்_ல பறக்கப் போறீங்களா இல்லையான்னு முடுவு பண்ணற பகுதி இப்ப சொல்ல போர விடயம்.

அடங் கொப்புறனா, மினசோட்டாவில் ஏத்தி உட்கார வைச்சுப்புட்டு திரும்பவும் ஒரு இரண்டு மணி நேரம் தாமத்திருக்கு பிறகு, ஏதொ வலது இறக்கை பக்கம் போட்ட ஃபியோல் அளவு தெரியலயாம் ஏன்னா அத அளக்குற மீட்டர் வேலை செய்யலயாம் அதனால மெக்கானிக் வந்துக்கிட்டு இருக்கான் செத்த பொறுமையா இருங்கான்னு சொல்லிபுட்டு ஒரு காப்பிதண்ணி கூட கொடுக்கம உட்காரவைச்சு கொன்னுபுட்டாய்ங்க.

அப்புறம் அந்த பக்கம் உள்ள மீட்டரை இந்த பக்கம் மாத்தி ஃபியோல் திரும்ப வடிச்சி திரும்ப ஏத்தி, ஒரு வழி பண்ணி 40 நிமிட மிதவைக்கு பிறகு எல்லாம் உசிர கையில புடிச்சுக்கிட்டு மாரியாதைக்காக வைச்சிருக்க ரெடிமேடு சிரிப்ப வேற சிரிச்சி வைச்சு, இத விட என்ன கூத்துன்னா கொஞ்சம் பேர் உணர்ச்சி பெருக்கில தரையிரங்கின பிறகு கைவேற தட்டி என்ன கண்ணீர் வர வைச்சுப்புட்டாய்ங்க பொறுமையின் சிகரங்கள் கணக்கா, அப்புறம் ஏன் சைக்கோதெரபி போகமாட்டாய்ங்க.

இத ஏன் சொல்றேன்னா இப்ப நான் இருக்கிற நாடு வளர்ந்த நாட அல்லது வளர்ந்து சுருங்கிற நாடான்னு கொழப்பமா இருக்கு. எல்லாத்திலயும் கணக்கு பாக்கிறாய்ங்க கொடுக்கிறதில மட்டும், ஆனா விலைவாசியெல்லாம் சத்தமில்லாமல் ஏறிக்கிட்டு கிடக்குது.

சரி பஞ்சம் பொழைக்க போன இடத்தில என்ன வேண்டிகிடக்கு வீராப்புன்னு பாத்துகிட்டும் இருக்க வேண்டி கிடக்கு இந்த கன்றாவியெல்லாம், ஏன்னா என் சட்டை பையில ஒரு பெரிய ஒட்டையை போட்டு பண்ற ஒவ்வொரு பைசாவையும் ஏதாவது ஒரு வழியில மத்திய, மாநில மற்றும் தாலூக வாரிய அடிச்சு புடிங்கி புட்ராய்ங்க.

என்ன நடக்கிதுன்னே தெரியல, டாலர் மயக்கத்தில விட்டில் பூச்சியா மாட்டிக்கிட்டு என்னமோ அமெரிக்கன் கனவாமில்ல கடங்காரன் கனவ தொரத்திகிட்டு, என்னத்த சொல்றது, போங்க. பசங்களா நல்ல யோசித்து ஒரு முடிவு எடுத்துப் புடுங்க, ஆமா.

20 comments:

Santhosh said...

ஆகா,
நீங்களும் நம்மளோட கிளம்பி வந்துடுவிங்க போல. வாங்க அமெரிக்கன் ஏர்லைன் விமானத்துல ஒரு டிக்கேட் போட்டுடலாம்.

Thekkikattan|தெகா said...

சந்தோஷ் எம்புட்டு நாள் கழிச்சு உங்க பின்னூட்டத்தை பார்த்து, தட்டி எழுப்பி இந்த வுட்றுக்கேன் பாருங்க.

சரி, நீங்க துட்டுப் போட்டு என்னையும் கூட்டிட்டு போங்க, ஆனா ஒரு கன்டிஷன் இருக்கு என்கிட்ட, நான் டெல்டா ஏர்லைன்ஸ்லயும் வரமாட்டேன் :-)))

Sivabalan said...

தெகா

நானும் சிகாகோவில் இருந்து ஒர்லான்டோ (Orlando) செல்லும் போது Ohare International Airportல் கேட் 20 என்று அறிவித்து இருந்தார்கள். நானும் அங்கே சென்று அமர்ந்திருந்தேன். என்னுடன் சேர்த்து ஒர் 15 பேர் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தோம்.

விமானம் செல்ல 20 நிமிடம்தான் ஐ மணி நேரம் தான் இருந்தது. ஆனால் விமான ஊழியர்கள் யாரையும் கானவில்லை.

எனக்கு சந்தேகம் வந்து Monitorஐ சென்று பார்த்தால் கேட் 18 என்று மாற்றியிருந்தார்கள். நான் உடனே கேட் 18க்கு சென்றேன்.

அங்கே விசாரித்ததில் வெரும் மன்னிப்பு மட்டுமே கொடுத்தார்கள். நான், கேட் 20ல் இன்னும் பயனிகள் இருகிறார்கள் என்றவுடன் அவர்கள் அங்கே சென்று அழைத்து வர ஆட்களை அனுப்பினாரகள். உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தில் இந்த நிலைமை...

ம்ம்ம்.. என்னதத் சொல்ல

//என்ன நடக்கிதுன்னே தெரியல, டாலர் மயக்கத்தில விட்டில் பூச்சிய மாட்டிக்கிட்டு //

நல்லா அருமையா சொன்னீங்க...

ரங்கா - Ranga said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க. இப்பத்தான் பார்த்தேன் உங்க பக்கத்தை. இதைவிட காமெடியா எனக்கு ஒரு தடவை நடந்திருக்கு. கேட்டிலிருந்து எங்க விமானம் கிளம்பி ஒரு ஐந்து அடி பின்னால் போயிருக்கும். வேற ஒரு விமானம் நாங்க போற பாதையில் பிரேக் டவுன் - முன் வீல் சுளுக்கிடுச்சாம். எங்க கேட்ட மூடிட்டு எல்லாம் கிளம்பி போயிடாங்க போலிருக்கு. எங்கேர்ந்தோ ஒரு பெரிய வண்டியக் கூட்டி வந்து, பிரேக் டவுனான விமானத்தை ஒரு மாதிரி தூக்கி பிடிச்சு கிளப்பி போறதுக்கு இரண்டேகால் மணி நேரம். அது வரைக்கும் விதியை நொந்துகிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். இதுல வெறுப்பு என்னன்னா, மொத்தமா விமானம் ஆகாயத்துல இருந்த நேரம் ஒரு மணி பத்து நிமிஷம்.

ரங்கா.

Thekkikattan|தெகா said...

சிவா,

நல்ல வேளை நீங்க ஃப்ளைட்-ஆ தவற விட்டுவிட வில்லையே அது வரைக்கும் லக்கிதான்... கொஞ்சம் அசந்துப் போன ஆளா இருந்த நினைச்சுப் பாருங்க...

இதில இன்னொரு கூத்து என்னன்னா, ஃப்ளைட் லேட் ஆகிப்பூச்சுன்னா, சாரி கேக்கிறத விட அங்கிருக்கும் குழந்தைகள், முதியவர்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுக்கலாம், இல்ல ஏதாவது எமர்ஜென்சிய இருக்குதான்னு விசாரிக்கலாம், ஒண்ணுமே இல்லாம மொட்டையா மூணு மணி நேரமெல்லாம் உள்ள உட்கார வைச்ச என்னாங்கய்யா ஞாயம்.

கொஞ்ச கொஞ்சம எல்லா இடத்திலும் மண்டை மற கழண்டுகிட்டு இருக்கு போல சிவா, எப்படித்தான் வாரத்திற்கு ரெண்டு தபா பறக்கிற ஆட்கள் எல்லாம் தாக்கு பிடிக்கிறாங்கலோ. நமக்கு தாங்கதாப்ப...

பெரிசென்ன சிறுசென்ன, எனக்கென்னன்னு வேலை பார்க்க ஆரம்பிச்சுட்ட அப்புறம் நேரத்தை ஓட்டி சம்பளம் வாங்கிறது மட்டும்தான் முன்னாலே நிக்கும்.

பயணிகளின் சவுகரியம் அசெளகரியம் எல்லாம் இரண்டாம் பட்சமே...

குமரன் (Kumaran) said...

மினசோட்டா வந்தீங்களா? சொல்லவே இல்லை....

'சொல்லியிருந்தா மட்டும் என்ன; ஐ'ம் தி எஸ்கேப்னு மொதோ ஆளா ஓடிப்போயிருப்பீங்க'ன்னு யாருப்பா அது குரல் கொடுக்கிறது? ஓ கொத்ஸா...ஹிஹி...ஆமாம் கொத்ஸ். சொல்லிட்டு வந்தா இப்படித் தான். நம்ம விருந்தோம்பல் அப்படி. :-)

இலவசக்கொத்தனார் said...

யோவ். ஜனவரி பதிவுக்கு இப்போ உயிரா? ஆனாலும் அக்கிரமம் பண்ணறீங்க்களேய்யா....

இலவசக்கொத்தனார் said...

எனக்கு இந்த மாதிரி அனுபவம் நிறையா. ஆனா அத இங்க சொல்ல மாட்டேனே.

அப்புறம் நான் பதிவு கவுண்ட் எப்படி ஏத்தறது? :)

Thekkikattan|தெகா said...

//யோவ். ஜனவரி பதிவுக்கு இப்போ உயிரா? ஆனாலும் அக்கிரமம் பண்ணறீங்க்களேய்யா....//

நாலு பேருக்கு பிரயோசனப் படுமின்னா, தப்பே செஞ்சாலும் கடவுள் மன்னிச்சுடுவான் (நாயகன் கமலைக் கொண்டு அந்த டயலாக்கை படித்துக் கொள்ளவும்).

என்னவோய், இப்படி சுவராசியம ஏதாவது வுமக்கு நடந்துருந்த இங்கன சொல்லிவைப்பீகன்னா... படிக்கலாமேன்னு, ஹி...ஹி...

ஆமா, நான் என்ன நக்கீரன் ரிப்போர்டரா சுடச் சுடச் செய்திகள் கொடுக்கிறதுக்கு, எல்லாம் வாழ்க்கை பிரட்சினையம்பி... எப்ப வேணா படிக்கலாம்...

Thekkikattan|தெகா said...

ரங்கா,

பாரட்டுகளுக்கு நன்றி!

ரங்கா மூச்சிழைக்க ஓடி வந்திங்கள, இப்படி கடகடன்னு எல்லாத்தையும் சொல்லிவைச்சுட்டீங்க.

இப்படி சின்ன சின்ன பிரட்சினைக்கு மூச்சு முட்டும் பொழுது நீங்க என்னாடன்னா, ராத்திரியிலே போருந்துகளெ செட்லெ போட்டு பராமறிக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறீங்க. ஏங்கா, லாண்டிங் பண்ணும் போது, வீல் மாட்டிக்கிட்டு வெளியே வல்லைன்னா என்னாங்க பண்றது...

முன்னமே நான் உங்க பதிவுல சொன்ன மாதிரி நீங்க ஒரு கம்பெனி "மன்னார்குடி ஏர்லைன்ஸ்ன்னு" ஆரம்பிச்சு நடத்தினா... கண்டிப்ப உங்களுக்கே அது தெரியும் ;-)))

பொன்ஸ்~~Poorna said...

குமரன்,
தல இப்போ ரீஜன்ட்டாக் கூட மின்னசோட்டா வந்துகீறாரு.. என்னா ஏதுன்னு கேளுங்க.. "யாதும் சுவடுபடாமல்" வந்துட்டு போகிறதே வேலையா பூட்சு.. ;)

தெகா, காலைல பார்த்தப்போ அதைப் பத்தி தான் எழுதி இருக்கீங்கன்னு நினைச்சேன்.. அதோட கிறித்துமஸ்னு சொன்னதும் என்னடா, குழப்புறாரேன்னு யோசிச்சேன்.. ம்ம்ம்.. இன்னோரு பதிவு வருமா?

குமரன் (Kumaran) said...

//தல இப்போ ரீஜன்ட்டாக் கூட மின்னசோட்டா வந்துகீறாரு.. //

பொன்ஸ். எந்தத் தல? கொத்ஸா? தெகாவா?

Thekkikattan|தெகா said...

குமரா,

//மினசோட்டா வந்தீங்களா? சொல்லவே இல்லை....//

வந்தேங்க, வந்தேன்... ஆனா அது ஒரு தனிக் கதை (ட்டி. ராஜேந்தர் ஸ்டையிலி படித்துவிடவும்)

//'சொல்லியிருந்தா மட்டும் என்ன; ஐ'ம் தி எஸ்கேப்னு மொதோ ஆளா ஓடிப்போயிருப்பீங்க'ன்னு யாருப்பா அது குரல் கொடுக்கிறது? ஓ கொத்ஸா...ஹிஹி...ஆமாம் கொத்ஸ். சொல்லிட்டு வந்தா இப்படித் தான். நம்ம விருந்தோம்பல் அப்படி. :-) //

அவரு தாங்க அப்பிடிச் சொன்னாரு :-)) என் கனவில வந்து, அவரு எஸ்கேப்ப்ப்ப்ப்ப் ஆய்பூடுவார்னு...

ஆமா நீங்க எங்க மினியாபாலிஸா, நானும் அங்கதான் வந்தேன் ஆனா, ஷோர் வியூவில இருந்தேன்... அருமையான ஊருங்க... பொறமையா இருந்துச்சு ஜியார்ஜியாவில இருந்து அங்க வந்து பார்த்தப்ப...

பொன்ஸ்~~Poorna said...

//எந்தத் தல? கொத்ஸா? தெகாவா//
தெகா தான்

குமரன் (Kumaran) said...

//அருமையான ஊருங்க... பொறமையா இருந்துச்சு //

அருமையான ஊரு தான். மக்களும் ரொம்ப அருமையா இருப்பாங்க. மினசோட்டா நைஸ்னு மத்த ஊருல சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

குளிர்காலத்துல மட்டும் எங்க ஊருக்கு வந்துறாதீங்க. அப்புறம் உங்க பொறாமையெல்லாம் இருந்த இடம் தெரியாம பறந்து போயிடும். :-)

குமரன் (Kumaran) said...

ஆகா. நீங்க டிசம்பர்ல தானே வந்தீங்க. அப்படியுமா பொறாமையா இருக்குன்னு சொல்றீங்க. நம்ப முடியலையே. எனக்கு இந்த மினசோட்டாவுல பிடிக்காத ஒன்னு இந்த கடுங்கடுங்கடுங்குளிர் தான்.

மினியாபொலிஸ் செயின்ட் பால் பக்கமா ஒரு ஊருல தான் இருக்கேன். அடுத்த தடவை வர்றப்ப சொல்லிட்டு வாங்க. எதுக்குன்னு கேக்கறீங்களா. எஸ்கேப் ஆறதுக்குத் தான். :-)

Thekkikattan|தெகா said...

இ.கொ,

//எனக்கு இந்த மாதிரி அனுபவம் நிறையா. ஆனா அத இங்க சொல்ல மாட்டேனே.
அப்புறம் நான் பதிவு கவுண்ட் எப்படி ஏத்தறது? :) //

வெவரமய்ய நீர். அப்ப எனக்கு ஒரு தாங்ஸ் உண்டுன்னு சொல்லுங்க. அப்பவும் என்னப் பத்தி மென்ஷன் பண்ணுவீங்க இல்லையா, இன்ஸ்பிரஷன் தெகாவிடமிருந்து வந்ததுன்னு ;-))

Thekkikattan|தெகா said...

பொன்ஸு,

//தல இப்போ ரீஜன்ட்டாக் கூட மின்னசோட்டா வந்துகீறாரு.. என்னா ஏதுன்னு கேளுங்க.. "யாதும் சுவடுபடாமல்" வந்துட்டு போகிறதே வேலையா பூட்சு.. ;) //

எனக்கு அப்பவே தெரியும், நீங்க போட்டு கொடுக்கப் போறீங்க, பண்ணிப்புட்டீங்க... :-))

//இன்னோரு பதிவு வருமா?//

எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு நவம்பருக்கு.... :-)

Thekkikattan|தெகா said...

குமரா,

//அருமையான ஊரு தான். மக்களும் ரொம்ப அருமையா இருப்பாங்க. மினசோட்டா நைஸ்னு மத்த ஊருல சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன். //

ஆமாங்க, ரொம்ப அருமைய இருந்தது. ரொம்பவே விச்தியாசம், ஓடும் கார்களையும் ட்ரெக்குகளையும் நீக்கிப்புட்ட. மக்கள் அப்புறம் இயற்கை சூழல் எல்லாமே ரொம்ப அமைதி.

//குளிர்காலத்துல மட்டும் எங்க ஊருக்கு வந்துறாதீங்க. //

வந்தனே, நமக்கு பழகிப் பூச்சுங்க், ஆனா என்ன ஒன்னு வீட்டை விட்டு எந்த பக்கமும் அசையிறதிலை அந்த நேரத்தில மட்டும். நாங்க என்னன்ன லூட்டி அடிச்சோமின்னு தனிப்பதிவ போட்டுறுக்கேன் சின்னதா இங்கே...

http://orani-sittingby.blogspot.com/2006/07/washed-ashore-frog-and-us.html

ஜோதிஜி said...

தெகா இந்த தளத்தில் விமர்சனத்தில் வந்துள்ள பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் எவருமே இப்போது பதிவுலகில் இல்லையோ அல்லது வெளிக்காட்டிக் கொள்வதில்லையோ?

பல இடங்களில் எழுத்துப் பிழைகள் அதிகம். மனம் போன போக்கில் தோன்றியவற்றை அப்படியே தொகுத்து இருக்கீங்க.

Related Posts with Thumbnails