நான் உனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்
முதலில் யார் கண் சிமிட்டுவதென
தூரத்தில் நின்றபடியே நீ வியர்த்து அடிபெருக்கும்
பொழுதெல்லாம்
நான் உயரத்தில் குறைந்திருந்தேன்
கருமையை நீ உண்டு கொண்டிருக்கும் வேளையில்
உனதிருப்பை நான் அழகாக்கிக் கொண்டிருந்தேன்
உனையுருக்கி உன் வாதையின் உக்கிரக் குழி பறிக்கையில்
அப்பொழுதும் அசையாமல் உன் அகம் காட்டியிருந்தேன்
தரை துடைத்து ஊண் திரட்டி பலமாக பெருமூச்செறிந்தாய்
கரும்புகை நாசிதொட புறவுலகம் முகம்சுழிக்க
போதுமென
புன்னகைத்தே இருள்துழாவி எனதுடலாக்கினேன்!
P.S: Discussion in Buzz ...ULLoLi...
4 comments:
ஓய்!எங்கே ஓடிட்டேள்!
அய்யா .. நல்லா இருக்கீயளா ..?
nice one thekki
ராஜ நட - எங்கே ஓடுறேன். இங்கனதான் இருக்கேன். தற்காலிகமா சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது :)) ... எப்படி இருக்கீங்க?
**************
தருமி அய்யா - நான் நல்லாவேஏஏஏஏ இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ப்ரோஃபைல் படத்தில மென் இன் ப்ளாக்ல வர்ற ஆளுங்க மாதிரியே இருக்கீங்க போங்க ;-)
*************
பாலா சாரே - நீங்க எற்கெனவே படிச்சு பீராஞ்ச பீஸுதான் இது :)
Post a Comment