Sunday, April 08, 2012

வசந்த கால ஒளிச் சிதறல்கள்: Lake Photography - 1

ஓர் ஐந்து நிமிட நடை என் வீட்டருகே எனக்கு இத்தனை புதிதான கண்ணாடி படிகங்களலான ஒளிச் சித்திரங்களை நிரந்தரமாக சுருட்டிக் கொள்ள உதவிச் சென்றது.

கற்றதை, பெற்றதை அதன் மூலமாக அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவே இந்த மொழியும், அதற்கான எழுத்து குறியீடுகளும் தோன்றி இருக்கக் கூடுமென்ற அடிப்படையிலேயே இங்கே நான் கண்ட ஒளிக் காட்சிகளை பதிந்து வருகிறேன்.

இப்பொழுது இங்கே வசந்த காலம். சூரியனாரின் காத்திரமான ஒளியும் கூட புதுப் பெண்ணாக பளிச்சிட்டு நிற்கும் மரங்களின் பசுமையின் மீது படும்பொழுது அந்த வெளிச்சம் வெட்கி மேலும் அழகூட்டி நிற்கிறது.


மரங்களுக்கும் கண்ணாடி காமிக்கும் முயற்சியில்...


பெரியவன் ஒருவன் அப்படியே நெடுக விழுந்து அழகிற்கு அழகு சேர்த்து, நீந்திச் செல்லும் பறவைகளுக்கு ஒய்வெடுக்கும் சுமைதாங்கியாகிப்போனான் ...



தூரத்தில் தெரியும் மரங்களுக்கு டார்ச் அடிச்சுப் பார்க்கும் சூரியனார். அப்படியே ஆயில் பெயிண்டிங்காக தூரிகை இல்லாமல் வரைந்து காட்டும் வேளையில்...

#1


#2


மேகத்திற்கு பட்டுடுத்தி, தரையிறக்கி கண்ணாடியிலும் பொதித்து...

a)


b)


பளிங்கித் தரையில் சிறிதே தண்ணீர் தெளித்து வெளிச்சத்தின் ஊடாக காணும் பொழுதாக...

c)


d)


e)


இந்த காட்சிகளை மிக அருகிலேயே ஏகாந்தத்தின் உச்சத்தில் அமர்ந்து பருக காத்திருக்கும் ஓர் அமைதிக் குடில்...


9 comments:

தருமி said...

பக்கத்து வீடு எம்புட்டு தூரத்தில இருக்கு?

காட்டுவாசியா வாழ்ந்துகிட்டு இருக்கீங்களோ? நல்லா இருங்க.

வவ்வால் said...

தெ.கா,

என்ன ரொம்ப நாளா காணோம்னு பார்த்தா ,இப்படி ஒளியை சிறைப்பிடிக்கும் வேலையில் மூழ்கிட்டிங்களா?

படங்கள் அருமை.காடு,காவாய்னு எல்லாம் பக்கத்திலே இருக்கா, கொடுத்து வைத்தவர் தான்.

நம்ம ஊருனா காவாய்க்கு சொம்போட காலைக்கடன் கழிக்க போய் இருக்கும் மக்கள் :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அழகு..
அந்த மரம் விழுந்துகிடக்கிறதுக்கு எழுதியது ரொம்ப நல்லா இருக்கு..:)

vasu balaji said...

ஓவியத்துள் வாழ்க்கை

Thekkikattan|தெகா said...

அனைவருக்கும் நன்றி-

தருமி - அந்த வீடு அந்தப்பக்க கரையிலிருந்து ஒரு ஐம்பது மீட்டர் தொலைவில் இருக்கலாம். அம்புட்டுத்தேய்ன்!

வவ்ஸ் - :))) சொம்புக் கதை, ஞாபகம் வருதே ...ஞாபகம் வருதே~~

ஓலை said...

அழகு படத்துக்குள்ள அடைக்கலமாயிடுச்சு. அழகு.

மாதேவி said...

சொல்ல வார்த்தைகள் இல்லை. சூப்பர்.

Viji said...

Alagana padangal.Uyarthara SLR udan nala kalairasanayum sernthu ullathu.

ஜோதிஜி said...

ரசனைக்காரன் அல்லது மச்சக்காரன். முதல் படம் வெகு அற்புதம்.

Related Posts with Thumbnails