Tuesday, December 28, 2010

மன் மதன் அம்பு ஒரு மீள்பார்வை - A Re-View

என்னுடைய முந்தைய இடுகையில் ஒரு மூன்று படங்களுடன் சேர்த்து கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திற்கும் ஒரு பத்தி விமர்சனம் ஒன்று வைத்திருந்தேன். பெரிய அளவிளான பதிவு இதற்கு தேவையில்லை என்றே கருதி அவ்வாறாக சுருக்கியிருந்தேன்.

ஆனால், அண்மையில் சிலரின் விமர்சனப் பதிவுகளை படிக்கும் பொழுது கண்டிப்பாக ஒரு தனி பதிவிடுவதின் அவசியம் விளங்கியது. களத்தில் இறங்கி விட்டேன். இந்தப் படத்திற்கு எங்க பக்கமிருந்து நான்கு பேர் சென்றிருந்தோம். தசவதாரம் பார்த்துவிட்டு திரும்ப வரும் பொழுது எனக்கு என்னவோ மனது நெருடலாகவே இருப்பதாக உணர முடிந்தது. அந்த மனநிலையை என்னுடைய அந்தப் பதிவினை வாசித்தவர்களுக்கே புரிந்திருக்கும்.

மாறாக மன்மதன் அம்பு படத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது அப்படியான ஓர் இறுக்கமில்லை. மனது குதூகலமாக, காருக்குள் நிறைய மகிழ்ச்சி இருந்ததாக உணர முடிந்தது. ஏன் பதிவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனது என்று பெரிய அளவில் ஒன்றும் ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. படம் வருவதற்கு முன்பே மெஜாரிடிகளின் மனதில் பேரிடியை இறக்குவது போன்ற அந்த கமல் கவிதை அமைந்து போனது, அதனைத் தொடர்ந்து இந்து சபை அமைப்பு நடத்திய சீன் பொது ஜனம் மத்தியிலும் என்னவோ ஏதோ என்ற பிரம்மையை ஏற்படுத்தி படம் பார்க்கும் மூளைப் பகுதியை தற்காலிகமாக மற்றுமொரு ’ஆட்டுக்கார அலமேலு’ வரும் வரைக்கும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கலாம். ;-)

சரி இந்தப் படம் எந்த விதத்தில் என்னுடைய மூன்று மணி நேரத்தை சுணக்கமில்லாமல் கொலை செய்தது என்று பார்ப்போம். எதிர்பார்த்த மாதிரியே கமலின் வசனங்கள் நிறைய பஞ்ச்களை சுமந்தே வலம் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக மாதவன் கதாபாத்திரத்தின் மூலமாக நமது சமூக ஆண்களின் டிஃபெண்டென்சி அம்மாவை மையமாக வைத்து வளர்க்கப்பட்டதின் கூறுகளை செம கிண்டலாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். உச்சமாக ஒரு சீனில் கழிவறைக்குள் இருக்கும் பொழுது மாதவனின் அம்மா உள்ளே வரலாமா என்று கதவைத் தட்டி கேட்கும் பொழுது அப்பொழுதே டயபர் ஸ்டேஜ்லிருந்து வெளி வந்தவனாக, "அம்மா இப்பொழுதெல்லாம் நான் பெரிய பையனாகிவிட்டேன்" என்ற வாக்கில் அடிக்கும் வசனம் இருப்பதிலேயே அல்டிமேட் கிண்டல் எனக் கொள்ளலாம்.

பல சீன்களில் மாதவனே அம்மாவை இழுத்து, இழுத்து முன் நிறுத்தும் வசனங்களின் மூலமாக எந்த அளவிற்கு நம் இளைஞர்களின் மன முதிர்வின்மை இருப்பதாக காட்டுவதற்கெனவே அது போன்ற காட்சியமைவுகள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையிலேயே விவகாரத்தாகி, இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் சங்கீதாவை மாதவன் போன்ற இன்னும் அம்மாவை துணைக்கு அழைக்கும் ஆடவனுக்கு அம்மாவையே வாழ்க்கை துணையாக பெறுவதே பொருத்தமாக இருக்கும் என்கிற அந்த முடிவுக் காட்சி பஞ்ச் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் அரவிந்த் ஒரு கேன்சர் நோயாளியாக வருகிறார். அடையாளமே தெரியவில்லை! அந்த கதாபாத்திரத்தின் மூலமாக புற்று நோயின் ஆளுமையும், வதையும் நன்றாகவே புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். புற்று நோயாளியின் மனைவியாக ஊர்வசி. பணம் கேட்டு நொய்யென்று அழுது கொண்டே இருக்கிறார். கணவர் பிழைத்துக் கொள்வார் என்றவுடன், தமிழ் சினிமாவின் தாலி செண்டிமெண்டிற்கு அடி கொடுக்கும் விதமாக கைபேசியில் மாங்கல்யத்தை தட்டி, கமலிடம் ”அண்ணா சத்தம் கேக்கிறதா, என் தாலி கெட்டி” என்கிற வாக்கில் வசனம் பரவலாக படம் பார்த்தவர்களால் எதிர்த்த சீட்டின் முனையில் இடித்துக் கொள்ளும் அளவிற்கு தாவிக் குதித்து சிரிப்பலையை உண்டு பண்ணியது.

அடுத்து த்ரிஷா ஒரு நடிகையாகவே வந்து போகிறார். அவர் பாரிசில் இருக்கும் பொழுது கார் ஓட்டியாக ஓர் ஈழத்து தமிழர் அமைந்து போகிறார். அவரும் த்ரிஷாவுடைய பரம விசிரியாகிப் போகிறார். சொல்லவும் வேணுமோ! நம்முடைய மக்களின் தனிமனித துதி பாடல், கடல்கள், மலைகள், தேச எல்லைகளை தாண்டியதில்லையா? நாக்கை வெட்டிக் கொள்ளுபவர்களும், சாலையில் சோறு போட்டு வேண்டுதெலுக்கென மண் சோறு தின்பவர்களும், முட்டிக்காலலேயே மலைப் படிகள் ஏறிச் செல்பவர்களையும், தீ மிதிப்பவர்களையும் உள்ளடக்கியதல்லவா இந்த ரசிக அர்ப்பணிப்பு. அதனை சாடும் வாக்கில், சரியான தேர்ந்தெடுப்பாக இந்த கால கட்டத்தில் ஈழத் தமிழரை வைத்து சொன்ன விதமும் மிகவும் நன்றே!

இவர்களில் பெரும்பாலோனோர் மிக்க உடல் உழைப்பால், பொருளீட்டி சம்பந்தமே இல்லாத சீதோஷ்ண நிலைகளுக்கு முகம் கொடுத்து சொந்த நாட்டிலிருந்து விருப்பமில்லாமலேயே விலகி வாழக் கூடிய நிலையிலிருப்பவர்கள். இருப்பினும், இது போன்ற ஒன்றுக்கும் உருப்பிடாத நடிகை/நடிகர்களுக்கென செலவழிக்கும் தொகையும், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் சற்றே யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இவர்களாலேயே வெளி நாடுகளில் குப்பை படங்களும் வசுலில் கொடி கட்டிப் பறக்கிறது. நேர் மாறாக அந்தப் பணத்தில் திளைப்பவர்களோ பணத்தை வாரி வழங்கிய மனிதர்களுக்கு ஒன்றென்றால் எதிர் திசைகளில் இயங்குகிறார்கள். நம் போன்ற அப்பாவிகளுக்கு எது போன்ற கருத்தைச் சொல்லி விளங்க வைக்க முடியும், அதே நடிகை செருப்பெடுத்து காமித்தாலாவது அறிவு வருமா என்று கொஞ்சம் சுருக், நறுக்கென்றே சுடச் சுட ஒரு காட்சியையும் அமைத்துக் கொடுத்து விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல் (இங்கே நடிகை அசின் ஞாபகத்துக்கு வரணுமே!).

சரி, க்ரூய்ஸ் கப்பலில் ஒரு நடிகை விடுப்பில் ஊர் சுற்ற செல்லும் பொழுது அவள் கூடவே மேக் அப் மேனையும் பெட்டி பெட்டியாக துணிமணிகளையும், இழுத்துக் கொண்டுச் செல்வாளா, இல்லை வெறும் காப்ரீஸ் பாண்ட்ஸும், ப்ளைன் டி-ஷர்ட்டிலும், தனக்கு மிகவும் பிடித்த சாண்டலிலும் இருக்க பிரியப்படுவாளா? ஒலகப் படம் பார்த்து ரசிக்கும் ஆராய்ச்சியாளர்களே இதில் எது பொருத்தமான உடை, சிகை அலங்காரங்கள் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு படத்திற்கு பொருத்தமாக அமையும். வருஷ வருஷம் க்ரூய்ஸ் சுத்துவரய்ங்க கணக்கா அட அட முகத்தில பரு, போட்ட அழுக்குச் சட்டை, முகத்தில சவர வித்தியாசம்னு மைனூட்டா கவனிக்கிறாங்கப்பா. இனிமே தமிழ் சினிமா பொழச்சிக்கும்டோய், ரேஞ்சுதான்.

இந்த படத்தில் எனக்கு பிடிச்ச விசயங்கள் நிறைய. எத்தனை பேர் க்ரூய்ஸ் கப்பலில் பிரயாணம் செய்திருக்கோம். செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வித்தியாசமான முயற்சியாக படத்தின் பெரும் பகுதியை அப்படியாக அமைத்து பழைய ரோமானிய நகரங்களை அவரகளுனூடேயே மிக்க பொறுமையாக நடந்து திரியும் அளவிற்கு கூட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஒளிப்பதிவு சான்சே இல்லை என்ற ரேஞ்சிற்கு பளிச், பச்சை, வெண்மை எது எப்படி இருக்கணுமோ அதற்கும் ஒரு படி மேலே சென்று கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிலான கேமரா - ஒளிப்பதிவு.

படத்தின் ஒரே தொய்வு கொடுக்கும் விசயமென்றால் கடைசி ஒரு 20 நிமிடங்களைச் சொல்லலாம். நீன்ன்ன்ண்டு கொண்டே சென்றதனைப் போன்ற பிரமையைக் கொடுத்தது எனக்கு. அந்த கமல் கவிதையை அட்லாண்டாவிலும் கழட்டி விட்டார்கள். இங்கும் சாமியைக் காப்பாற்றும் பிரகஸ்தபதிகள் அதிகமாக இருப்பார்களோ என்று எண்ணச் செய்கிறது. காட்டுமிராண்டித் தனத்தின் உச்சம். ஒரு கலைஞன், தான் அமைக்கும் காட்சிக்கு எது உகந்தது என்று நினைக்கிறானோ அதனை வைப்பதற்கான உரிமை கூட இல்லையென்றால் என்ன பெரிய ஊடக உரிமை, படைப்பாளிச் சுதந்திரம் என்று விளங்கவில்லை. தலீபானியம் தலை தூக்குகிறதோ என்று எண்ணச் செய்கிறது.

அந்தக் கவிதையில் நல்ல பழக்க வழக்கம் வர வேண்டுவதனைப் போன்றுதானே பாடல் வரிகள் இருக்கிறது. கலவி முடிந்தவுடன் சுத்தம் பண்ணிக் கொள்ள கூட மாட நின்று உதவு, தொப்பையை, தூக்கத்தை குறை என்ற வாக்கிலும் கூடுதலாக பல நல்ல கருத்துக்களை சொல்லி நிற்பதாகவே அந்தக் கவிதை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனில் எங்கிருந்து வந்தது இத்தனை கடவுள் காப்பாற்றும் மனவோட்டம். என்னமோ நடத்துங்கப்பா!

48 comments:

Charu(கைத்தடி) said...

எங்க தலைக்கு எதிர் பதிவா

கோவி.கண்ணன் said...

//ரமேஷ் அரவிந்த் ஒரு கேன்சர் நோயாளியாக வருகிறார். அடையாளமே தெரியவில்லை! அந்த கதாபாத்திரத்தின் மூலமாக புற்று நோயின் ஆளுமையும், வதையும் நன்றாகவே புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்//

:)நல்ல நகைச்சுவை, புற்றுநோயின் தீவிரத்தில் இருப்பவர் படுக்கையில் இருந்தே வீடியோ சாட் செய்கிறார்.

Thekkikattan|தெகா said...

:)நல்ல நகைச்சுவை, புற்றுநோயின் தீவிரத்தில் இருப்பவர் படுக்கையில் இருந்தே வீடியோ சாட் செய்கிறார்.//

கோவியாரே! இதிலென்ன நகைச்சுவை இருக்கிறது. அப்போ அப்பெல்லோ மருத்துவமனையிலிருந்து ஸ்கைப் விடியோ சாட் நடக்கவில்லை என்கிறீர்களா? நோயின் வதைக்கும் தாண்டியது பகிர்தல், பகிர்தல் வலியை மறக்க-

Bibiliobibuli said...

அடா, அடா, அடா, தெகா ஈழத்தமிழர்களின் இந்த சினிமா பக்தியை, ரசிக மனோபாவத்தைப் பற்றி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுத்தில் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.

இங்கே தமிழ்வானொலிகளை கேட்கும்போது பெரும்பாலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் யாராவது ஏதாவது நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களிடம் மறக்காமல் கேட்பார்கள், "அப்ப, "மன்மதன் அம்பு" (இது ஒரு உதாரணம் மட்டுமே) பாத்திட்டீங்களோ" என்பது தான். இவர்களே பிறகு கொஞ்சம் உசுப்பேத்தியும் விடுவார்கள். இது என்ன விதமான Promotion என்று எனக்கு புரிவதில்லை.

எப்படியும் இன்னும் ஒரு ஒன்று, ஒன்றரை வருடம் கழித்து தமிழ் தொலைக்காட்சியில் "மன்மதன் அம்பு" காட்டப்படும்போது நானும் பார்த்துவிடுவேன். :)

சேக்காளி said...

இதை விட ஒரு நல்ல விமர்சனத்தை எதிர்பார்த்து உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.பரவாயில்லை மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதியதற்கு பாராட்டுக்கள்.பெரிய மனிதர்[மாதவனின் அப்பா]மாதவனிடம் கூறும் விசயம் நம் ஒவ்வொருவருக்காகவும் சொல்லப்படுவது.காதலின் அஸ்திவாரமே ஒருவரை ஒருவர் நம்புவது,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது தான்.அது எத்தனை காதலர்களுக்கு வாய்க்கிறது?.மேலும் வீரத்தின் உச்சம் அகிம்சை என்பது வீரமென்றால் என்னவென்றே தெரியாத நமக்கு அந்நியமானதுதானே.பள்ளியில் ஒன்றாய் படித்த தோழிகள் பின் நாளில் அதே [சுதந்திரமான]சூழ்நிலையில் சந்தித்து கொள்ளுவது நம் பெண்களில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?. அப்படியானதொரு சூழ்நிலை நிலவும் போது சங்கீதாவும்,திரிஷாவும் பேசிக்கொள்ளுவது அந்நியமானதுதானே?.மேலும் கமல் எந்த ஆங்கில[அல்லது வேறு மொழி]படத்திலிருந்து காப்பியடித்தார்? என்று தேடிக்கொண்டே பதிவர் மனநிலையிலிருந்து படத்தினை பார்த்தால் படத்தினை ரசிகனின் மனநிலையில் எப்படி ரசிக்க முடியும்.நீண்டு கொண்டே சென்ற அந்த கடைசி இருபது நிமிடங்களை குறைத்திருந்தால்[தொலைக்காட்சி ஒளிபரப்பில் நேரம் குறையுமோ]நிச்சயமாய் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை படம் தொய்வில்லாமலே இருந்திருக்கும்.படம் எனக்கு பிடித்திருக்கிறது

December 29, 2010 3:04 AM

Anonymous said...

நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!"// ஹா...ஹா....ஹா..

bogan said...

பக்கத்து தியேட்டர்லதான் ஓடுது...அப்ப பார்க்கலாம்னு சொல்றீங்களா...வலையில பிரிச்சு மேயராங்களே...கிரேசி நாடகம் பார்க்கணும்னு ஆசைனா அவர் நாடகமே பார்த்திடலாமே எதுக்கு கமல் படமுன்னு கேட்டாங்க ஒரு ஆள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏங்கய்யா.. கமல் படைப்பாளி
அவருகூட நடிச்ச பொண்ணுங்கன்னா.. உருப்படாத நடிகைங்க..அவங்கள பாராட்டர ரசிகர்.. முட்டாளா.. என்னகொடுமை இது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படித்தான் எந்த படத்தையும் எந்த கட்டுரையையும் நாம நம்ம நோக்குல வாசிச்சு பாத்து பிடிச்சுது பிடிக்கலைன்னு கருத்து வைக்கிறோம்.. :)

Thekkikattan|தெகா said...

பக்கத்து தியேட்டர்லதான் ஓடுது...அப்ப பார்க்கலாம்னு சொல்றீங்களா...//

போகரே! கண்டிப்பா போயி பாருங்க! பெரிய திரையில பார்த்தாத்தான் அந்த கேமராவின் முழு வீச்சமும் தெரியவரும். உங்களுக்கு பிடிச்சிருக்கும், ஐ ம் ஷுயுர்!


//வலையில பிரிச்சு மேயராங்களே...கிரேசி நாடகம் பார்க்கணும்னு ஆசைனா அவர் நாடகமே பார்த்திடலாமே எதுக்கு கமல் படமுன்னு கேட்டாங்க ஒரு ஆள்...//

வலையில இப்போ ஒரு விதமான போட்டி நிலை நிலவுது, அது என்னான்னா உலகப் படம் பார்த்திட்டு அந்த அறிவை, இன்ஃபெர் பண்ணுறது. நான் எந்த விமர்சனமும் படிக்கல... அப்படியே போயி உட்கார்ந்து அனுபவிச்சிட்டு ஓடியாந்திட்டேன் ;-)

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏங்கய்யா.. கமல் படைப்பாளி
அவருகூட நடிச்ச பொண்ணுங்கன்னா.. உருப்படாத நடிகைங்க..அவங்கள பாராட்டர ரசிகர்.. முட்டாளா.. என்னகொடுமை இது//

முத்து, நீங்க ஒரு அளுதான் மிகச் சரியா பேச வேண்டிய விசயத்தை பிடிச்சு எடுத்துக் கொடுப்பீங்க.

பாருங்க, படத்தை ஓட வைக்க பல ஜகதால வித்தைகள் எல்லாம் உள்ள வைச்சிக் கொடுத்திட்டா கண்டிப்பா கூடுதலா இன்னும் நாலு பேரை உள்ளர கூட்டியாந்து உட்கார வைக்க முடியும்தான். இருந்தாலும், சமூகத்தின் மீது தனக்கு அக்கறையிருக்கின்னு சொல்லிக்கிறவர் இந்த தைரியமான விசயத்தைக் கூட எடுத்து முன் வைக்கலன்னா எப்படி?

படம் பிடிச்சிருக்கா, பாருங்க. அதில நடிச்சிருக்கும் கலைஞர்கள் நல்லா செஞ்சிருக்காங்கன்னு நினைக்கிறீங்களா பாராட்டிட்டு நகர்ந்து போயிட்டே இருங்கன்னு சொல்லுறதுக்கும் ஒரு நேர்மை வேணும்ல. நம்மூரு சூழ்நிலை என்ன, என்னய கோவில் கட்டி கொண்டாடு மனநிலைதானே... அது இங்கே மிஸ்ஸிங். நாம என்ன மிட்டாய் கொடுத்து ஏமாத்தும் சின்னப் பசங்களாவே வாழ்ந்து முடிச்சிர முடியுமா? உண்மை கசக்கத்தான் செய்யும்...

புரிஞ்சிக்கிறவங்க புரிஞ்சிப்பாங்க. உருப்பிடாத அப்படின்னு சொன்னது ரெண்டு பேத்தையும்தான் :)

Jayadev Das said...

Save the Planet, plant a tree. Good slogan. Thanks.

Thekkikattan|தெகா said...

Charu(கைத்தடி) said...

எங்க தலைக்கு எதிர் பதிவா//

அவருக்கின்னு எல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சா நம்ம கம்பெனிக்கு கட்டுபடியாகுமா?

செல்வ கருப்பையா said...

கமலைத் திட்டுவது இங்கு எழுதும் பெரும்பாலோர்க்கு முன்முடிவு செய்யப் பட்ட விஷயம்போலத் தெரிகிறது - அதற்கானக் காரணங்களை நுணுக்கமாகத் திரைப்படங்களில் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடன் இந்தப் படம் பார்த்த அனைவரும் படத்தை enjoy பண்ணி பார்த்தார்கள் - உங்களுடையது மட்டும் தான் என் மனநிலைக்குச் சற்று ஒத்துப் போகும் review. திட்டி எழுதிய ஒருத்தரால் கூட நீல வானம் பாடலின் சிறப்பைப் பற்றி ஒரு வரி கூட எழுத முடியவில்லை.

அரசூரான் said...

தெகா, படம் பார்த்தாச்சா? உங்கள் பார்வை ஒரு தனி பார்வைதான். நான் கமல் & கே.எஸ்.ரவிகுமார் கூட்டணி நன்றாக இருக்கும் என் எதிர்பார்த்தேன். இதுவரை எந்த விமர்சனத்தையும் படிக்க வில்லை - தெகாவைத் தவிர. சினிமா வாரமா? அசத்துங்க. உங்கள் பாணியில் தெளிவா எழுதியிருக்கீங்க. கேமரா கோணம்/காட்சி முதல், பல காட்சிகளை பெரிய திரையில் பார்த்தால்தால் அவர்களது உழைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பது உண்மை.

ஜோதிஜி said...

எப்படியும் இன்னும் ஒரு ஒன்று, ஒன்றரை வருடம் கழித்து தமிழ் தொலைக்காட்சியில் "மன்மதன் அம்பு" காட்டப்படும்போது நானும் பார்த்துவிடுவேன். :)

ரதி என்கொரு பங்காளி கிடைத்த கதை உங்களுக்குத் தெரியுமா? அந்த பங்கு நெஞ்சுக்குள்ள புகுந்து ஒரு பஞ்சாயத்த நிப்பாட்ட இந்த மன்மதன் அம்பாக பயன்படுத்தி ஆலமரம் சொம்பு தேவைப்படாத நாட்டாமையாக வெற்றிக் கொடி நாட்டியே கதை தான் தெரியுமா?

அய்யோ அடிக்க வராதீக? இது எங்களுக்குள்ள இருக்ற சொந்தக்கதை சோகத்ததை.

ராசப்பா பேசும் போது பட்டாசு மாதிரி வார்த்தைகள் வருது. இந்த பதிவுல கொஞ்சம் அடக்கி வாசிச்ச மாதிரி இருக்கு?

Thekkikattan|தெகா said...

வாங்க ரதி,

//ரசிக மனோபாவத்தைப் பற்றி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுத்தில் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். //

எல்லாம் பார்த்து பார்த்து கடியாகிப் போயித்தானே இருக்கோம். எனக்கு இந்தப் படத்தில் கமல் அப்படியான ஒரு சீனை வைத்திருந்தது கொஞ்சம் அதீதமாகவே பட்டது படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே. இருப்பினும், எவ்வளவு கடுமையாக முன் வைத்தாலும் அதன் பொருள் சென்றடைவது என்னவோ வீரியமிழந்துதானோ என்றும் தோணச் செய்கிறது.

நாம் அவரை பாராட்டியே ஆக வேண்டும், கணிசமான அளவில் தவறாக புரிந்து கொண்டு பணத்தையும்/ரசிகர்களையும் இழப்போம் என்று தெரிந்திருந்தாலும் சொல்ல வேண்டிய விசயத்தை ஆணித்தரமாக எடுத்து முன் வைத்து விடுவதற்கேனும்.

//இவர்களே பிறகு கொஞ்சம் உசுப்பேத்தியும் விடுவார்கள். இது என்ன விதமான Promotion என்று எனக்கு புரிவதில்லை. //

நம் மண்ணின் மணம் சார்ந்து வேற்று நாடுகளிலிருக்கும் பொழுது பொழுதை கழிப்பதற்கு வேறு ஒன்றுமில்லையே என்ற நிலையே இப்படியாக ஒரு திருவிழாவாக சில படங்களை கொண்டாட வைக்கிறதோ என்னவோ!

//ஒன்றரை வருடம் கழித்து தமிழ் தொலைக்காட்சியில் "மன்மதன் அம்பு" காட்டப்படும்போது நானும் பார்த்துவிடுவேன். :)//

பெரும்பாலான சூழல்களில் நானும் அப்படித்தான். ஆனால், இந்தப் படம் சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்ததால் நான் க்யூரியஸ் ஆகி திரையரங்கத்திற்கே சென்று பார்த்துவிட்டேன். ஆனால், புலம் பெயர் ஈழத் தமிழர்களின் மூலமாக நாம் அனைவருக்கும் தேவையான இடியை இறக்கி இருக்கிறார். பணத்தை வேறு இடத்தில் போடச் சொல்லி... :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடிக்கறேன்.. படம் பாத்த பின்னாடி வந்து படிச்சுக்கறேன்.. :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

follow-up

ஜோதிஜி said...

இப்ப கருத்துக்கு வர்றேன்.


என்னுடைய பார்வையில் கமல் படம் என்பது ரசிக்க ருசிக்க வெறுக்க என்று எல்லாமே இருக்கும்.

நாம் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பதும் நம் ரசனையின் தகுதியின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் வைத்து தான் இந்த மூன்றின் அளவீடுகளை உணர்ந்து கொள்ள முடியும்?

ராசப்பா எங்குரு பையன் இரவு வானம் சுரேஷ் இதே படத்தின் விமர்சனத்தை எப்படி எழுதியிருக்காருன்னு பாருப்பா?

நாம அடிச்சு விளையாட வேண்டிய களம் இதுவல்ல. இதற்கென்று நம்ம உண்மைத்தமிழன் இருக்கிறார்.

தருமி said...

//உங்களுக்கு பிடிச்சிருக்கும், ஐ ம் ஷுயுர்!//

இன்று என் நண்பன் ஒருவனும் இதையே என்னிடம் சொன்னான்....

பார்க்கணும்.

Thekkikattan|தெகா said...

வாங்க சேக்காளி,

நீங்க சொல்றபடி கதாபாத்திரம் பை கதாபாத்திரமா சொல்ல ஆரம்பித்தால் பதிவின் நீளம் என்னாவவது :). நீங்க இணைத்த பகுதிகளோட கூடுதலாக மாதவன் அப்பாவின் கேரெக்டர் மூலமாக இந்த காதல் விசயத்தில் உன் அம்மாவின் அறிவுரைப்படி நடக்கிறாயா என்று கேக்கும் தொனியிலேயே நிறைய விசயத்தை உள்ளடக்கி இருப்பாங்களே.

மற்றபடி நீங்க சொன்ன பழைய தோழிகள் ஒன்று சேர்வதெல்லாம் அந்த எண்ண அலைகளில் இருப்பவர்களுக்கு அதன் முழு வீச்சம் உள்வாங்கப்படலாம். பெரும்பாலும், நம் ஆட்களுக்கு சினிமா என்றால் ஒரு ஃபார்மிலா இருக்கிறது அதனைத் தாண்டி விசயங்கள் முன் வைத்து நகர்த்தப்படும் பொழுது ஜீரனமாவதில் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது.

எப்படியோ மாற்றம் என்பதே எதிர் நீச்சலில்தான் தொடங்குகிறது.

//இதை விட ஒரு நல்ல விமர்சனத்தை எதிர்பார்த்து உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.//

அப்படியா! அந்த அளவிற்கு ஆழமா போகணுமான்னுதான் மேலோட்டமா அடிச்சி விட்டுட்டேன். ஆனா, அந்த கமலின் கவிதையை ஒரு வளர்ந்த நாட்டில் இருந்து கொண்டு இங்கும் கத்தரிக்க வைத்ததில் எனக்கு சிறிதும் உடன்பாடே இல்லை, எனவே அப்படி என்னதான் அந்தக் கவிதை பேசுகிறது என்பதனை தனிப் பதிவில் பீராயப் போகிறேன். நிதர்சனம் பேசி! அப்பொழுது பார்க்கலாம், வாங்க சேக்காளி :)

Anonymous said...

Movie was good. I like your review.

Thekkikattan|தெகா said...

Anonymous said...

நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!"// ஹா...ஹா....ஹா.//

Anony - very funny! இதே கமெண்டை சுரேஷ் கண்ணன் பதிவிலும் பார்த்தேனே. ஓர் அர்ப்பணிப்போடு செய்வீங்களோ ;-)...
*****************************

முத்து,

//இப்படித்தான் எந்த படத்தையும் எந்த கட்டுரையையும் நாம நம்ம நோக்குல வாசிச்சு பாத்து பிடிச்சுது பிடிக்கலைன்னு கருத்து வைக்கிறோம்.. :)//

பின்னே அவங்கவங்களுக்கு புரிஞ்சதைத்தானே முன் வைக்க முடியும். இருந்தாலும் நான் சொல்ல வந்த விசயத்தை மாத்தி சொல்லிப் போட்டியள் :)

கையேடு said...

அட உங்களுக்கும் ஒரு வாரம் ஓய்வா.. இங்க ரெண்டு வாரம் படுத்தி எடுத்திடுச்சு. இப்போதான் கொஞ்சம் இடைவெளி அதிகம் விட்டு இறுமுறேன்.. :)

மன்மதன் அம்பு இன்னும் பார்க்கலை.. பார்ப்போம்..

Thekkikattan|தெகா said...

Jayadev Das said...

Save the Planet, plant a tree. Good slogan. Thanks//

வணக்கமய்யா! இந்தப் பதிவிற்கும் அந்த கமெண்டிற்கும் என்ன தொடர்பு - கமல் வசனம் மாதிரியே இருக்கே :)

Thekkikattan|தெகா said...

வாங்க செல்வகருப்பையா,

படம் பார்க்கும் பொழுதே இப்படித்தான் விமர்சனம் எழுத உட்காருவேன் என்ற முன்முடிவோட எழுதுறவங்கள என்ன செய்ய முடியும்...

//என்னுடன் இந்தப் படம் பார்த்த அனைவரும் படத்தை enjoy பண்ணி பார்த்தார்கள்//

அவ்வளவுதான். அதே மாதிரிதான் நான் பார்த்த திரையரங்கிலும். கொடுத்த காசிற்கு தண்டமில்லை.

Thekkikattan|தெகா said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடிக்கறேன்.. படம் பாத்த பின்னாடி வந்து படிச்சுக்கறேன்.. :)//

எல் போர்ட், இன்னிக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போனேன் ரோட் டெஸ்ட் எடுக்க புட்டுக்கிச்சு :)... அப்படியும் ஸ்டீரியரிங், டாஷ் போர்ட் எல்லாம் தொட்டுக் கும்பிட்டுத்தான் வண்டிய ஸ்டார்ட்டு பண்ணாப்ல :))

சரி, படம் பார்த்துட்டீங்களா இந்த பின்னூட்டம் விட்ட... நான் பதில் கொடுக்கிற க்கேப்ல :) அப்பன்னா வாங்க படத்தை பத்தி பேசுவோம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பாத்துகிட்டு இருக்கேன் :) ரன்னிங் ஆ டிஸ்கஸ் பண்ணனுமா? :)

தொட்டு கும்பிட்டதுக்கெல்லாம் பாஸ் பண்ணி விட்டுட முடியுமா? :)

Thekkikattan|தெகா said...

@ எல்போர்ட்...

//பாத்துகிட்டு இருக்கேன் :) ரன்னிங் ஆ டிஸ்கஸ் பண்ணனுமா? :)//

யோவ் என்னங்கய்யாது! அதுக்குள்ளும் ஆன்லைன்ல ஏத்திட்டாய்ங்களா? பின்னே எப்படி படம் பார்த்திட்டே டிஸ்கஸ் பண்ணுவீங்க... :)

//தொட்டு கும்பிட்டதுக்கெல்லாம் பாஸ் பண்ணி விட்டுட முடியுமா? :)//

அப்படியும் இருக்கலாமோ! ஆனா, நம்மூரு மாதிரி 1500 ரூவா கொடுத்தனுப்பிட்டா லைசென்ஸ் வீட்டிற்கு வந்துருமாம அதுமாதிரி இங்க இரக்கப்பட்டு லைசென்ஸ் கொடுத்து எவன் லைஃப் ஃப்ரண்ட்லைன்ல போடுறது அதுக்கு ஃபெயிலாவுறதே பெட்டர் :)

suneel krishnan said...

முதல் பாதி கொஞ்சம் நன்றாக இருந்தது ,லைவ் ரெகார்டிங் என்பதால் வசனங்கள் நெறைய இடத்தில் புரியவில்லை என்பது உண்மை ,எங்கூரு கொட்டகைல பிரச்ச்சனயானு தெரில ,கான்செர் நண்பன் -பெயர் ராஜன் -அது கமலின் இளமை கால நண்பரின் பெயர் அவரும் கான்சரில் இறந்தவர் -ஆயினும் அந்த சித்தரிப்புகள் எல்லாம் மெகா சீரியல் போல் இருந்தது ,இரண்டாம் பாதி உண்மையிலயே கொஞ்சம் மொக்கை தான் .

Anna said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். நானும் பார்த்துவிட்டேன். படத்தின் concepts எல்லாம் நன்றாகப் பிடித்திருந்தது. ஆனாலும் இரண்டாவது பாதியை விட முதற்பாதி நன்றாக இருந்தது.

"பல சீன்களில் மாதவனே அம்மாவை இழுத்து, இழுத்து முன் நிறுத்தும் வசனங்களின் மூலமாக எந்த அளவிற்கு நம் இளைஞர்களின் மன முதிர்வின்மை இருப்பதாக காட்டுவதற்கெனவே அது போன்ற காட்சியமைவுகள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தது."
இந்த view வில் நான் யோசித்துப் பார்க்கவில்லை. But so true.

"அந்த கமல் கவிதையை அட்லாண்டாவிலும் கழட்டி விட்டார்கள். "
இங்கு NZ ல் போட்ட version ல் கவிதையும் இருந்தது. Loved it.

எனக்கு த்ரிஷா மாதவனிடம் "This is my profession. I love you. But I love my work too." எனக் கூறுவதும் பின், நீ என்னை திருமணத்தின் பின் வேலையை விடச்சொல்வதைப் போல் நான் உன்னை விடச்சொன்னால் உனக்கு எப்படி இருக்கும் எனக் கேட்பதும் மிகப் பிடித்திருந்தது. அத்தோடு I loved that உலகத்திற்கே இந்த relationship ஜப்பற்றித்தெரிந்திருந்தும் she had the guts to say "this is me, if you can't handle it, you are welcome to leave". Character ஒரு நடிகையாக இருப்பினும் அநேகமான தமிழ்ப்படங்களில் இவ்வாறு காட்டியிருக்க மாட்டார்கள்.

http://thavaru.blogspot.com/ said...

அப்பாடி ..படம் பாத்தாச்சு...

Thekkikattan|தெகா said...

வாங்க அரசூரான்,

அப்போ நீங்களும் பார்த்திட்டீங்களா? எங்கே அல்ஃபெரட்டாவிலா அங்கும் திரையிட்டுருந்தார்களா? இல்ல இங்க வந்திங்களா :)

//நான் கமல் & கே.எஸ்.ரவிகுமார் கூட்டணி நன்றாக இருக்கும் என் எதிர்பார்த்தேன்.//

கே. எஸ். ஆர் இருந்தாருங்கிற அடையாளத்திற்குதான் ஷுட்டிங் ஸ்பாட்ல காமிச்சாங்கள்ல ;) பொறகென்னா. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் தொய்வு விழுந்திருச்சு.

//கேமரா கோணம்/காட்சி முதல், பல காட்சிகளை பெரிய திரையில் பார்த்தால்தால் அவர்களது உழைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பது உண்மை//

எப்படி அந்த டைட்டானிக் ஸ்டைல் சீன் கப்பலின் மூக்கில் நின்று கொண்டு குழந்தையுடன் கையை விரித்து காத்து வாங்குவது ;). அப்படியே ஹெலியில் பறந்து சுத்தி காமிச்சிருப்பாய்ங்களே உருத்தலை இல்லாம. அழகு! அந்தக் காட்சிகலெல்லாம்...

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி,

//எப்படியும் இன்னும் ஒரு ஒன்று, ஒன்றரை வருடம் கழித்து தமிழ் தொலைக்காட்சியில் "மன்மதன் அம்பு" காட்டப்படும்போது நானும் பார்த்துவிடுவேன். :)//

வீடு/வேலையும் விட்டு வெளியில கிளம்ப முடியாதுங்கிறதை எப்படி புத்திசாலித்தனமா மூளைக்குச் சொல்லி அடங்கிக்கிறீங்க, ஹா!

இதென்னது ரதி கிட்ட பஞ்சாயத்து, சொம்பு, துண்டுன்னு சொல்லி குளப்பிகிட்டு இருக்கீங்க. கொன்னு போடப் போறோம்...

//இந்த பதிவுல கொஞ்சம் அடக்கி வாசிச்ச மாதிரி இருக்கு?//

ம.ம.அ ஒரு ஜாலியான திரைப்படமா எடுத்தது அதுக்குப் போயி நம்மை மண்டை அறிவெல்லாம் காமிச்சா பயந்து இரண்டு பேரு திரையரங்கிற்கு சென்று பார்ப்பவங்களும் போகாம குந்திரப் போறாய்ங்கன்னு விட்டுட்டேன் லூசில ;) ...

Thekkikattan|தெகா said...

என்னுடைய பார்வையில் கமல் படம் என்பது ரசிக்க ருசிக்க வெறுக்க என்று எல்லாமே இருக்கும்.

நாம் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பதும் நம் ரசனையின் தகுதியின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் வைத்து தான் இந்த மூன்றின் அளவீடுகளை உணர்ந்து கொள்ள முடியும்?//

மிக்க உண்மை. உங்க அளவீடுகள் லிட்மஸ்தாள் போன்றே காட்டிக் கொடுத்து விடும் ஒரு மனிதரின் வளர்ச்சிப் படி நிலைகளை கொண்டு எங்கெங்கு நிற்கிறோமென.

//ராசப்பா எங்குரு பையன் இரவு வானம் சுரேஷ் இதே படத்தின் விமர்சனத்தை எப்படி எழுதியிருக்காருன்னு பாருப்பா?//

படிச்சேன். நீங்க அந்தப் பதிவில ஹைலைட் செஞ்சிருந்த இடம் நல்லாருந்துச்சு!

//நாம அடிச்சு விளையாட வேண்டிய களம் இதுவல்ல. இதற்கென்று நம்ம உண்மைத்தமிழன் இருக்கிறார். /.

உ.த படிச்சேன். ரொம்ப ஒரு பக்கச் சாய்வில எழுதியிருந்தார். த்ரிஷாவின் உதடு தப்பிச்சது என்றளவிலும் கூட(!!?). 70ம்ம் ஸ்கீரின்ல கமலும் செஞ்சிக் காட்டி காட்டி டயர்ட் ஆயிருப்பார் ;-) ... இருந்தாலும், என்ன வேண்டுதலா பூரா படத்திலும் அந்த சர்கஸை செஞ்சிக் காமிக்கணும்னு :)) ...

ஆமாமா... நமக்கான தளம் சினிமா விமர்சனமல்ல. ஆனா, இரத்தம், சதை, நரம்புன்னு பின்னப்பட்டிருப்பதால் எப்போ தேவையோ அப்போ கரெக்க்டா நிப்போம் என்ன சொல்லுதீய...

Bibiliobibuli said...

ஜோதிஜி,

குழப்புறதுதான் குழப்புறீங்க கொஞ்சம் தெளிவா குழப்பக்கூடாதா?

//இதென்னது ரதி கிட்ட பஞ்சாயத்து, சொம்பு, துண்டுன்னு சொல்லி குளப்பிகிட்டு இருக்கீங்க. கொன்னு போடப் போறோம்...//

புதுசா பதிவுலகில் ஏதாவது குரூப் ஆரம்பிச்சிருக்கீங்களா?

Thekkikattan|தெகா said...

தருமி said...
//உங்களுக்கு பிடிச்சிருக்கும், ஐ ம் ஷுயுர்!//

இன்று என் நண்பன் ஒருவனும் இதையே என்னிடம் சொன்னான்....

பார்க்கணும்.//

ஒஹோ! அப்போ நானும் அதையே உங்ககிட்டயும் சொல்லிக்கிறேன்... பாருங்க, பிடிச்சிருக்கும் உங்களுக்கும் :)

Thekkikattan|தெகா said...

தவறு said...

அப்பாடி ..படம் பாத்தாச்சு.//

சரி பார்த்திட்டீங்க... எப்படி இருந்திச்சுன்னு சொல்லிப் போடலாம்ல கையோட ;-)

Thekkikattan|தெகா said...

//கையேடு said...

அட உங்களுக்கும் ஒரு வாரம் ஓய்வா.. இங்க ரெண்டு வாரம் படுத்தி எடுத்திடுச்சு. இப்போதான் கொஞ்சம் இடைவெளி அதிகம் விட்டு இறுமுறேன்.. :)

மன்மதன் அம்பு இன்னும் பார்க்கலை.. பார்ப்போம்.//

ஓ! உங்களுக்கும் இந்த வாரம் இறுமல் வாரமா :)... ஒரு வழியா நான் வெளியில வந்திட்டேன். இடைவெளி விட்டு இறுமுவது இன்னும் கூடுதலா இடைவெளியாகட்டும்...

மன்மதன் அம்பு பாருங்க, தங்க்ஸ்வோட போயி... ;)
****************

//Anonymous said...

Movie was good. I like your review//

Enjoyed, huh! Good to know...

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர் சுனில்,

லைவ் ரெகார்டிங் என்பதால் வசனங்கள் நெறைய இடத்தில் புரியவில்லை என்பது உண்மை ,எங்கூரு கொட்டகைல பிரச்ச்சனயானு தெரில//

இங்க ஆடியோவில் ஒன்றும் பிரச்சினை இருந்த மாதிரி தெரியல. ஆனா, அந்த 20 நிமிட வசனங்கள் வெகு வேகமாக நகர்ந்ததால் பின் தொடருவதில் சுணக்கம் ஏற்படுத்தி எல்லாரையும் அயர்ச்சி பண்ணி இருக்க வாய்ப்புண்டு.

//கான்செர் நண்பன் -பெயர் ராஜன் -அது கமலின் இளமை கால நண்பரின் பெயர் அவரும் கான்சரில் இறந்தவர்//

ஒஹோ! இது எனக்கு புதுச் செய்தி. இரண்டாம் பகுதி எனக்கு நான் குறிப்பிட்ட அந்த 20 நிமிடம் அப்படியாக ஃபீல் ஆனிச்சு. நன்றி டாக்டர்!

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட், பார்த்திட்டீங்களா... //ஆனாலும் இரண்டாவது பாதியை விட முதற்பாதி நன்றாக இருந்தது. // சோ, நாம எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் சொல்லுறோம் :)

//இங்கு NZ ல் போட்ட version ல் கவிதையும் இருந்தது. Loved it.//

எனக்கு எரிச்சலோ எரிச்சல், மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர்ல எல்லாம் இருந்திச்சுங்கிறதாலே இங்க கண்டிப்பா இருக்குமின்னு நினைச்சேன். ஆனா, இங்கயும் கூடுதல் காட்டுமிராண்டிகள் போல, என்னோட அஞ்சு டொலர் திரும்பக் கொடுக்கணும் இவிங்க :))...

//அத்தோடு I loved that உலகத்திற்கே இந்த relationship ஜப்பற்றித்தெரிந்திருந்தும் she had the guts to say "this is me, if you can't handle it, you are welcome to leave". Character ஒரு நடிகையாக இருப்பினும் அநேகமான தமிழ்ப்படங்களில் இவ்வாறு காட்டியிருக்க மாட்டார்கள்.//

இது போன்ற வசனங்களோட உங்கள ரிலேட் பண்ணிக்க முடிஞ்சா படம் போற வேகமே தெரியாது. இதிலதான் பிரச்சினை ரசனையில் இருக்கிற இடைவெளி, வளர்ச்சி, முதிர்ச்சி, வாழ்க்கையை எடுத்துக்கிற பக்குவம் எல்லாம் உள்ளர வருது. இந்த வசனத்தை ....she had the guts to say "this is me, if you can't handle it, you are welcome to leave"... ஏத்துக்கிற பக்குவம் அவ்வளவு சாதாரணமா கையகப் பெற முடிஞ்சிருமா. எனக்கெல்லாம் பெரிய பெரிய உதையெல்லாம் வாங்கி அனுபவிச்சதிற்கு பிறகில்ல புரிஞ்சிச்சு; அதப் புரிஞ்சிகிறதின் அவசியம். :-)

அது மாதிரி நிறைய அழுத்தமான வசனங்கள்... ஆங்கங்கே தூவி படம் முழுக்கவுமே இருந்திச்சே. எனிவே, வி எஞ்சாய்ட் த ஹவர்ஸ். டன்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

http://karuthoor.blogspot.com/2010/12/blog-post_30.html

தெகா.. இது என்னோட இன்டிபென்டன்ட் ரெவ்யூ.. உங்களோடத இனிமே தான் படிக்கணும்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

என்ன சொல்றதுன்னு தெரியல.. சுமாரான என்டர்டேயினர் என்பதைத் தாண்டி நான் படத்துல இருந்து எதையும் வாங்கல.. நீங்க நிறைய யோசிச்சிருக்கீங்க.. கமலே இந்தளவுக்கு யோசிச்சிருப்பாரான்னு தெரியல.. :)

Thekkikattan|தெகா said...

கமலே இந்தளவுக்கு யோசிச்சிருப்பாரான்னு தெரியல.. :)//

அந்த அளவிற்கு யோசிக்காமலேதான் இத்தனை வச்சனம் எழுது இருப்பாருங்கிறீங்ளா... எல்லாம், அந்தாளு மேலே உள்ள நம்பிக்கையில ரோசிக்கிறதுதான். :))

இன்னும் யோசிக்கச் சொல்லி யாராவது நமக்கு செக் கொடுத்தா இன்னும் யோசிக்கலாங்கிறேன் ...

CorTexT (Old) said...

நல்ல விமர்சனம் தெகா! கமல் கவிதையை அழகாக படமாக்கியுள்ளார்கள்! பார்க்க முடியாதவர்களுக்கு என்னுடைய வருத்தங்கள். குத்து பாட்டுக்களை கேட்கும் நாட்டில், இதற்கு இடமில்லாமல் போனது ஆச்சர்யம் தான்! _____ கெட்ட ஜென்மங்கள்! (அதுதான் இல்லையே, அதை எழுதி என்ன புண்ணியம்)

Unknown said...

"தொட்டு கும்பிட்டதுக்கெல்லாம் பாஸ் பண்ணி விட்டுட முடியுமா? :)"

என்ன பண்றது. தெகாவ நம்பி ஸ்டீரிங் புடிச்சிட்டாபல. தெகாவோட ட்ரிவிங் lesson அப்பிடி. (just for fun. Don't take it seriously).

Valar (வளர்மதி) said...

I like your review. good.. ellam namma parkkara vithathtil irukku. YEATERDAY i READ ONE REVIEW about this was fully negative way. I am sure kamal will not do that. Bcoz he is a real Tamilan... Chumma tamil tamil nu solravan ellam Tamilan ayeta midiyathu...

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12154:2011-01-02-07-28-15&catid=1:articles&Itemid=264

Related Posts with Thumbnails