Sunday, December 26, 2010

இந்த வாரம் சினிமா வரம்!

இந்த வாரம் எனக்கு சினிமா வரமாகிப் போனது. மூன்று நாட்கள் இடைவெளியில் நான்கு தமிழ் சினிமாக்கள். இது வரையிலும் செய்யவே துணியாத ஒரு தன் கொலை முயற்சி என்றுதான் சொல்லுவேன். அதிலும் துரதிருஷ்ட வசமாக ஈரம், ஈசன் மற்றும் மைனா இணையத்திலும் (வேற வழியே இல்ல பார்க்க நான் இருக்கிற இடத்தில), கமல்ஹாசனின் மன்மத அம்பு இங்கு ஓடிக் கொண்டிருப்பதால் திரையரங்களிலும் சென்று பார்த்தேன்.

இது அனைத்தும் எனக்கு சாத்தியமாகிப் போனதற்குக் காரணம் மூன்று நாட்களும் எனது உடம்பு கெஞ்சி அடித்து தேவையான உடல் ஓய்வை பெற எண்ணி தலை, மூக்கு மற்றும் உடல் வலி எனவும், காய்ச்சல் எனவும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாக செய்து விட்டதாலேயே எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈரம் படத்தை சரியாக வெளியான ஒரு வருட இடைவெளியில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படத்தை வித்தியாசமான முறையில் நகர்த்தியிருந்தார்கள். இரண்டாவது பகுதியில் கொலையுற்ற கதாநாயகியின் ஆவி சுத்தி சுத்தி வந்து தனது கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்வது சப்பென்று ஆக்கிவிட்டது எனது எதிர்பார்ப்பை. சொல்லப் போனால் நான் இது போன்ற ஒரு கதையையே எதிர்பார்க்கவில்லை; கதையை நகர்த்த ஆரம்பித்த விதமும், படமாக்கப்பட்ட நேர்த்தியும் நான்றாக இருந்ததால். இரண்டாவதாக, செகண்ட் ஹாண்ட் காருக்கும், வாழ்க்கைத் துணைக்குமாக ஒப்பீடு செய்து கொண்டு படத்தின் பாதிக்கும் மேல் கதையை நகர்த்தியிருப்பது ஒரு சமூக சிக்னெஸின் உச்சத்தை காட்டியது.

*********************************

ஈசன் - இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரத்தை போன்றே மீண்டும் மென்மையான ஒரு கதைத் தேர்வுடன் நம்மையும் ஒட்டவைத்து, நமக்கும் சினமேற்றி கடைசியில் கதாநாயகன் எதிரிகளை கரகரவென்று கழுத்தறுபட்டு கொல்லப்படும் பொழுது நம்மையும் சேர்த்து கலந்து கொள்ள வைப்பதில் ஜெயித்து காட்டுவாரே அது போன்றே ஈசனிலும் ஜெயித்திருக்கிறார். ஈசனில் ஓர் உண்மையான போலீஸ் அதிகாரி எது போன்ற சூழ்நிலைகளில் நிதர்சனத்தை எதிர் கொண்டு கையறு நிலையில் தனது சீனியர் அலுவலர்களால் கூர் மழுங்கடிக்கப்படலாம் என்பதனை அழகாக காட்சியகப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும், இந்தப் படத்தில கொலை செய்யும் கதாபாத்திரமாக வரும் டீனேஜித்திய பருவம் கொஞ்சம் உருத்தலாக இருந்தது.
**********************************

மைனா - ரொம்ப பிடித்திருந்தது! லாஜிக்கலாக நிறைய துளைகள் இருந்தாலும், கதையுடனும் படமாக்கப்பட்ட மலையும் மலை சார்ந்த இடங்களும் கதாபாத்திரங்களின் பங்களிப்பும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிட்டு இதர விசயங்களை எக்ஸ்க்யூஸ் செய்ய வைத்து அத்துடனே நம்மையும் காட்சிகள் நகர்த்திச் செல்கிறது. போலீஸ் அதிகாரியின் மனைவி பக்கம் வரும் உறவுகளும், அவரின் மனைவியும் பல உண்மைகளைச் சொல்லி நிற்கிறது. அந்த உறவில் அந்த அதிகாரி மனிதனுக்கு அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலையை இயக்குனர் அழகாக செதுக்கி தனித்து நிற்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் பொழுது தமிழில் சமீபமாக நல்ல படங்களை கொடுக்க நிறைய புதிய இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை பிறக்கிறது. அதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே அவர் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முடிவு மக்கள் எதனையும் எடுத்துக் கொள்ளும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டதாக சொல்லி நிற்கிறது.
*******************************

மன்மதன் அம்பு:

என்ன சொல்ல, நல்லா சிரி சிரின்னு வேற எதையும் யோசிக்காம சிரிச்சு படத்தை உள்வாங்கி பார்த்தேன். என் மூணு வயது பொண்ணுக்கு மொதப் படம் இது. கொஞ்சம் டான்ஸ் ஆடினோம். என்னதான் இருந்தாலும் மாதவன் கதாபாத்திரம் மூலமாக சிரிப்பு, சிரிப்பா பல ஆழமான விசயங்களை போற போக்கில எடுத்து கடாசிவிட்டார் நம்ம கோடம்பாக்கத்து ஒலக நாயகன்.

அவர் சந்தேகப் புத்திக்காரர் என்பதால் த்ரிஷா போன்ற இளமையான பெண் சரிபட்டு வரதென்றும், தொட்டத்திற்கெல்லாம் மாதவன், தான், அம்மாவின் பிள்ளை என்பதனை எடுத்து இயம்புவதாலும் கமல், மாதவனுக்கு தனது காதலியான த்ரிஷாவின் விவாகரத்தான நண்பியை இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒருவரை, மாதவனுக்கு தேவை அது போன்ற ஓர் அம்மாதான் என்று க்ரேசி மோகன் ஸ்டைல் ஸ்கிரிப்புடன் பலத்த சிரிப்புகளுக்குகிடையே அவருடன் கோத்து விடுவது யோசிக்க வேண்டிய விசயம். ஏனெனில் மாதவன் அங்கு சந்தேகப் பட வேலையே இல்லை! நம்ம பசங்களும் என் அம்மா மாதிரியேதான் தனக்கும் ஒரு பொண்ணு வேணும்னு தேடுறாய்ங்க, அதுனாலே ஒரு அம்மாவையே கமல் தள்ளிவிட்டுட்டார் :)). படமாக்கப்பட்ட விதம் ரிச்! ஹே! எங்க ஊர்லயும் அந்த கமல் கவிதையை கட் பண்ணிப்போட்டங்கப்பா... கடைசியா சில வரிகளே ஒலிக்கிறது. படு அநியாயம் இதெல்லாம்... அப்படி என்னதான் அந்தப் பாட்டில இருந்திச்சு!!

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மூன்று வரம் கிடைச்சதா கிருஸ்மஸுக்கு..:)

vasu balaji said...

ஏ யப்பா! நாலுக்கு மூனு பழுதில்லையா:))

சக்தி கல்வி மையம் said...

என்னோட BLOG பாருங்க http://sakthistudycentre.blogspot.com/
தான் நடித்த, “மன்மதன் அம்பு’ என்ற படத்தின் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், “கவிதை’ இப்படி போகிறது.

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மூன்று வரம் கிடைச்சதா கிருஸ்மஸுக்கு..:)//

அதெப்படி மிகச் சரியா கண்டுபிடிச்சிங்க. ப்ளஸ் இன்னொன்னும், மிகவும் தேவைப்பட்ட ஓய்வு :)...

மன்மதன் அம்பு தனியா எழுதி இருக்கலாமோ! இப்போதான் சில விமர்சனங்களை படிச்சேன், முடியல்ல ரகமா இருக்கே...

ஜோதிஜி said...

மைனாவின் தொடக்க காட்சிகளை ரசித்துக் கொண்டுருந்தேன். நிச்சயம் என்னை (நம்மை) கவரும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது.

நான் எங்கே படம் பாக்குறது? விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்றால் தான் எங்களுக்கெல்லாம் விமோசனம்?

கையேடு said...

அட உங்களுக்கும் ஒரு வாரம் ஓய்வா.. இங்க ரெண்டு வாரம் படுத்தி எடுத்திடுச்சு. இப்போதான் கொஞ்சம் இடைவெளி அதிகம் விட்டு இறுமுறேன்.. :)

மன்மதன் அம்பு இன்னும் பார்க்கலை.. பார்ப்போம்..

Related Posts with Thumbnails