மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.
இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.
ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.
உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:
1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.
2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.
3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.
4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.
அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.
அன்புடன்,
தெகா.
17 comments:
//கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது;
all are good well planned photos..
தெக்கிக்காட்டான், மேற்கு காடு மற்றும் மத்திய காட்டில் சுற்றியிருக்கிறீர்கள்.
waiting for the posts.
சொல்லவே இல்லை?!
Krishna,
//all are good well planned photos..//
hope so too, let us see how I am going to make use of it...
//குடுகுடுப்பை said...
தெக்கிக்காட்டான், மேற்கு காடு மற்றும் மத்திய காட்டில் சுற்றியிருக்கிறீர்கள்...//
வாங்க குடுகுடு, கிடைச்ச கொஞ்ச நாட்களிலிலேயே மூச்சு முட்ட சுத்தியாச்சில்ல ;-) ...
//செல்வநாயகி said...
waiting for the posts.//
வாங்க நாயகி... coming soon.
ம்..
எல்லாம் கேக்கணும். அதிலும் முதலில் ஈஷாவா ... வாங்க.....
படங்கள் எல்லாம் அருமை .. இன்னும் நிறைய படங்களை எதிர்பார்க்கிறேன் குறிப்பாக வால்பாறை மற்றும் மலம்புழா படங்களை
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
//பழமைபேசி said...
சொல்லவே இல்லை?!//
சொல்லிட்டு செய்ய முடியாம போன சரியா வாரதுன்னுட்டு, அப்படி அப்படியே இருக்கிற எடத்தில இருந்து திட்டங்களை உடைச்சு, முறிச்சு செஞ்சிக்கிடறது... அதேய்ன் பழம :)
eagerஆக வெயிட்டிங்.
பதிவை ஆரம்பிங்க.
ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது//
வாழ்த்துக்கள்!
இந்த விசயம் ரொம்பவே சிரம்படுத்துகிறது என்னை :((
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ம்...//
இந்த ஒத்தை 'ம்' லேயே தெரிகிறது, உங்க கோபம், விட்டுத் தள்ளுங்க :)) ... தருமியெல்லாம் பாருங்க மன்னிச்சு விட்டுட்டாரு ...
//Meenthulliyaan said...
படங்கள் எல்லாம் அருமை .. இன்னும் நிறைய படங்களை எதிர்பார்க்கிறேன் குறிப்பாக வால்பாறை மற்றும் மலம்புழா படங்களை
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்//
வா செந்தில், சில படங்களில் எல்லாம் 'வாட்டர் மார்க்' பண்ணி கொஞ்ச கொஞ்சமா இணைத்து விடுகிறேன். இன்னொரு விசயம் இந்த முறை வால்பாறை செல்லவில்லை, டாப்ஸ்லிப்தான் மாத்தி படிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.
//தருமி said...
எல்லாம் கேக்கணும். அதிலும் முதலில் ஈஷாவா ... வாங்க....//
எல்லாம் சொல்லுறேன், ஆனா படிக்கணும் :)
ஈஷா, அதில கொஞ்சம் கூடுதல் விசயம் இருக்கிறதாலே அதான் மொதல்ல...
//SurveySan said...
eagerஆக வெயிட்டிங்.
பதிவை ஆரம்பிங்க//
வாங்க சர்வேயரே, அவசியம் வாங்க இங்கும் *இயற்கை நேசி"யிலும் கலந்து போடுவேன்னு நினைக்கிறேன்... don't miss it!!
வணக்கம் ஆயில்யன்,
//வாழ்த்துக்கள்!//
நன்றி!
//இந்த விசயம் ரொம்பவே சிரம்படுத்துகிறது என்னை :((//
பழகப் பழக அது தானா உதிர்ந்திடும்... அது நம்ம மக்களை நினைச்சு நாமா மனசுக்குள்ளர எழுப்பிக்கிற ஒரு தயக்கம்மின்னு நினைக்கிறேன்.
கவிதை படைக்கும் பொழுது எப்படி அதனில் மூழ்கி வெளிப்புறம் மறப்போமோ அதுபோல செய்வதில் லயித்து விட்டால் இந்த "வெளி அழுத்தம்" குறைஞ்சிடும்...
///நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன்.///
இங்க வந்தப்போ என்னமோ சொன்ன மாதிரி நியாபகமுங்க....செத்த ரோசனை பண்ணி பாருங்க..
//மங்கை said...
///நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன்.///
இங்க வந்தப்போ என்னமோ சொன்ன மாதிரி நியாபகமுங்க....செத்த ரோசனை பண்ணி பாருங்க.//
அட வாங்கம்மணீ, நானும் சாதா மனுசந்தாங்களே மனசு லொங்கி இருக்கும் பொழுது பொலம்பித் தள்ளுரது இயற்கைதானுங்களே... சோ, லூசில விடுங்க :))
நான் நேசிக்கிற பகுதியை பார்த்தீங்களா படங்களில் காடும், காடு சார்ந்த இடங்களும் ...
ஆமா, அப்படி நான் என்னதான் சொன்னேன் :-P
Post a Comment