Friday, November 27, 2009

ஈஷா வித்யாவும் சில எண்ணங்களும் - படங்களுடன் : Isha Vidhya

இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று கூறி, கூறி தோழி ராஜியை முதல் ஒரு வாரமும் அதனையொட்டி கோயமுத்தூரிலிருந்து கொண்டே என்னுடைய பைத்தியக்காரத்தனமான எந்தவொரு திட்டமுமில்லாமல் சுற்றித் திரியும் பழக்கமும், மேலும் மேலும் அவரைக் கூப்பிட்டு இன்று மாலை, நாளைக் காலை என்று கூறிக்கொண்டே கோவையிலிருந்தவன் சிறுவாணி சாடிவயல் வரைக்குமான பயணம் என்று கிளம்பி, அது சிறுவாணி பாதுகாக்கப்பட்ட வனத்தின் வழியாக, சிறுவாணி மேல் அணை வரைக்குமென நீண்டு, காட்டுக்குள்ளாகவே பாலக்காடு செல்லுவோம் என்று கிளம்பி அது மழம்புலா அணைக்கட்டு வரையிலும் நீண்டு அன்று இரவுதான் கோவை மீண்டும் வந்தடைய முடிந்தது. ஒரு புறம் ராஜீயை காக்க வைக்கிறோமே என்ற குற்றவுணர்வு இடித்துக் கொண்டே இருந்தாலும், அந்தப் பயணம் எல்லா வற்றையும் மறக்கடித்துக் நீண்டு கொண்டே சென்றது இனிமையிலும் இனிமையாக அமைந்து போனது.

ஒரு வழியாக ஆலந்துரையருகே அமைந்திருக்கும் ஈஷா வித்யாவை தருசிக்கும் வாய்ப்பை அந்த சிறுவாணி பயணத்திற்கு மறுநாள் காலையில் நிகழ்த்திக் கொள்ள முடிந்தது. இந்த முறை என்னுடைய கோவை பயணிப்பு முழுதுமாக வெளியிலும், உள்ளுமாக மிகவும் ஈரம் நிரம்பியதாகவே அமைந்திருந்தது. எங்கு திரும்பினும் மேகம் படுத்து உருளும் மலை முகடுகளாகவே காட்சியளித்தன. தென் மேற்கு பருவ மழை அப்பொழுதுதான் உள்ளே காலடி எடுத்து வைத்திருந்தததால் மரங்களும், செடிகளும், ரோடுகளும் ஒரே மகிழ்வுடன் தொப்பலாக நனைந்திருந்தது மென் மேலும் பயணத்தை பொருளுள்ளதாக அமைத்துக் காட்டியது.

ஈஷா வித்யாவிற்கு இருட்டுப் பள்ளம் பாலத்தின் மீதான பயணிப்பின் போது ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு ஒற்றைக் கல்லறை ஒன்றும் இடது புறமாக நின்று இயற்கையின் ஜாலங்களில் நானும் அடக்கம் என்று சான்று கூறி நின்றது. ஈஷா அறக்கட்டளை, வழியெங்கும் மரக் கன்றுகளை நட்டு அதற்கு கூண்டும் கட்டி அதன் மீதாக "நமது மரம்" என்று எழுதியிருந்தது, என்னுடன் வந்திருந்த ஒருவருக்கு மிக்க மகிழ்சியை அளித்தது. எப்படி அந்த கிராமத்து மக்களின் ஆதரவை பெறுவதற்கென "நாம்" என்ற வார்த்தை பயனளிக்கும் என்று சொல்லிச் சொல்லி அதிசயித்துப் போனார்.


ம்ம்ம் வழியெங்கும் அவ்வளவு அழகு தென்னைத் தோப்புகளும், வாழையும் பச்சை பசேலென ஏனைய தாவரங்களும் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டே வந்தது. திடும்மென அவ்வெளியில் காவி நிறத்தில் மிகவும் எளிமையான முறையில் இரண்டே கட்டடங்கள் ஆரவாரமில்லாமல் அந்த மலைகளின் பின்னணியில் உறுத்தலே இல்லாமல் கரைந்து போய் நின்றது.

கட்டடத்தின் ஒரு பகுதியில் நுழையும் பொழுதே என்னால் நமது வலைப்பதிவு தோழி ராஜியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். என்னுடன் மேலும் மூன்று நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அது பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறதோ என்ற கவலையுடனேயே எல்லாரையும் அறிமுகப் படுத்தி வைத்தேன். ராஜீயும் உடனே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களை அழைத்து எங்களை அறிமுகப் படுத்தியதோடு, பள்ளியை சுற்றிப் பார்க்க சிறப்பு அனுமதியும் வாங்கிக் கொண்டார்.

பள்ளியின் பல விசயங்கள் என்னுடைய மனத்தினுள் ஓடும் எதிர்பார்ப்புகளை மிக நேர்த்தியாக எதிர் கொண்டதாகவே முதல் அவதானிப்பு வழங்கியது. பள்ளிக் குழந்தைகளின் மிதியடிகளை ஒழுங்கு படுத்தி வைத்திருந்த பாங்கு, டிசிப்ளின் வீட்டிலும் எவ்வளவு அவசியம் என்பதனை தினப்படி பழக்கமாக கத்துக் கொடுப்பதற்கான ஒரு வழி முறையாக புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு வகுப்பு அறைகளின் ஆராவாரமற்ற, இறுக்கமற்ற, நல்ல விஸ்தாலமான உயர்ந்த கூரைகளுடன், செயற்கை வெளிச்சமே தேவையற்ற முறையில் நல்ல வெளிச்சம் படறக் கூடிய வகையில் நிறைய ஜன்னல்களுடன் [குழந்தைகள் நண்பக முறையில் - Children-friendly] அறைகளாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் மனநிலையில் என்னை வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு அந்த அமைப்பு மிகவும் பிடித்துப் போனது. வகுப்பு அறைகளின் அமைப்பின் நேர்த்தி மிரட்டலே அற்ற முதல் படியாக அமைந்து போனது.

எனக்கு அந்தப் பள்ளியின் நோக்கமும், அங்கு படிக்க வரும் குழந்தைகளின் பின்புலம் ஆகியவற்றை கேட்கும் பொழுது, பல ஆச்சர்யங்களுடன் என்னை சற்றே பேச்சற்ற நிலைக்கு இட்டுச் சென்றது. அதனால், ராஜீயைப் பார்த்து அதிசயத்துக் கொண்டே வந்ததில் சரியாகக் கூட பேச முடியாத ஒரு நிலையை உணர்ந்தேன். என்னுடைய மலைப்பு அந்தளவிற்கு ஆழமாக நங்கூரமிட்டிருந்தது. அவர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக, ஒரு தனி மனித சிந்தனை இத்தனை ஆக்கப் பூர்வமான செயலாக எழுந்து நின்றதனைக் காணும் பொழுது எனக்கு அவ்வாறாக நேர்ந்து போனதில் வியப்பொன்றும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஈஷா வித்யாவில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள பொருளாதார வசதியற்ற, பின் தங்கிய மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் என கூறினார்கள். ஆனால், அந்தக் குழுந்தைகளுடன் பேசும் பொழுது அவைகளின் உடல், மன ஆரோக்கியம் மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்தது. கண்களில் தான் என்னவொரு அறிவின் ஒளி மற்றும் தன்னம்பிக்கை, அந்த கண்களின் ஊடாகவே அந்தக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் காண முடிந்தது.

நாங்கள் அங்கிருந்த நேரம் மதியத்தையும் கடந்து சென்றதால் எங்களுக்கு அந்தக் குழந்தைகளின் மதிய உணவு இடைவேளையையும் காணும் வாய்ப்பு கிட்டியது. ஈஷா வித்யா தங்கிப் படிக்கும் வசதியற்றதாலும், சுற்று கிராமத்தவர்களின் பயன்பாட்டிற்கென அமைந்ததாலும் தினமும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள் (அதுவே எனக்கும் பிடித்ததாகப் படுகிறது). எனவே விரும்பிய பெற்றோர்கள் மதிய உணவையும் கையோடு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் போலும், ஒரு ஆழ்ந்த மதிய உணவு குழு ப்ரேயர் பாடலுக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள். அதே கட்டடத்தின் மறு முனையில் மதிய உணவு கொண்டு வராத குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த உணவினை காணும் பொழுது அது ஒரு சரி விகித உணவாகப் பட்டது, சப்பாத்தி, கொண்டக் கடலை, ஏதோ ஒரு கீரை வகையென அமைந்திருந்தது.

அதனை காணும் பொழுது எனக்கு மீண்டும் பிரமிப்புத் தட்டியது. எப்படி அத்தனைக்கும் நிதி திரட்டி இதனை தினமும் செய்து வர முடியுமென்று. இதற்கு எத்தனை பேரின் பெரிய உழைப்பு தேவைப் படும் என்று நினைக்கும் பொழுதே, மீண்டும் பூமியில் எனது பாரம் அதிகரித்துப் போனது. இந்த நோக்கத்தினை செயலாக்க, எல்லாவற்றையும் பின் தள்ளி இந்த நோக்கத்திற்காக தன்னை முன் நிறுத்திக் கொண்ட ராஜீயை நினைக்கும் பொழுது மிக்க பெருமையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பள்ளி உருவாவதற்கு காரண கர்த்தாவான சுவாமி ஜக்கி வாசுதேவிற்கும் எனது வந்தனங்கள்.

இப்பொழுது புரிகிறது ஏன் அவர் கடுமையாக பறந்து கொண்டே இருக்கிறார் என :-) . ஈஷா வித்யாவை முடித்துக் கொண்டு, தியானலிங்க கோவிலுக்கும் சென்று விட்டு மீண்டும் ராஜீயின் பங்களிப்பால் அதே வளாகத்திற்குள் அமைந்திருக்கும் சர்வதேச ஹோம் ஸ்கூலையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும்கிட்டியது. இருப்பினும் எனக்கு என்னவோ ஈஷா வித்யாவே மனதை விட்டு நீக்கமற நிறைந்திருந்தது.

அந்தப் பள்ளிக்கு இன்னும் நிறைய பொருளுதவியும், பள்ளிக்கும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுமாக வழங்குவதற்கு உண்டான அத்தனை வாய்ப்புகளையும் கண்ணுற முடிந்தது. பள்ளி நூலகம் ரொம்பப் பெரிதாக நிறைய அடுக்குகளுடன் உள்ளது இன்னும் புத்தகங்கள்தான் வந்து குமிய வேண்டியுள்ளது. ராஜீ அறுபதாயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக காண்பித்த புத்தகங்களின் தொகுப்பு ஒன்னரை அடுக்குகளை அடைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது...

23 comments:

Raji said...

I am honoured to post the first comment ...in fact I have a very bad habbit of reading the blog posts and not leaving any comments. Well I will compensate it by leaving a long comment here :)
1.The goal of Isha Vidhya is ambitious. This project is an effort of the Isha foundation (where all the efforts come out of one single mind and they immediately infect the minds with similar interests and passions) to provide the best education or even a better education for the rural children of Tamil Nadu in par with the urban children.
2. We have totally six schools located in six different areas of rural Tamil Nadu (Kovai, Erode, Tuticorin, Nagercoil, Cuddalore (in the Psunami affected area) and Villupuram.....the number of schools we are planning to build is....206, covering every single rural Taluk of TN....Yes the path is so long and the destination is far away but we will reach there ASAP.

தருமி said...

முதல் கட்டுரையே அழகு. தொடருங்கள் ...

Raji said...

What would be the consequence of Isha Vidhya?
Our dream is, in another 10 years Isha Vidhya schools should produce young women and men with hearts full of love and compassion for the world around them, minds/brains as focused as arrows and their energies moving towards uplifting rural India. These young boys and girls will be no way inferior to the urban kids. In fact they will so beautiful and powerful that the urban parents will be longing for such schools in their cities.

One important thing is, these schools attract people from all social and religious backgrounds. We are so particular and careful about it. We are very cautious not to be branded as Hindu missionary schools. Almost 50% of the children in Tuticorin School are Roman Catholics and in all our schools we have Christian and Muslim staff working for us.
After a long debate and discussion on how and when to do it, we have introduced yoga in the curriculum this year.

குடுகுடுப்பை said...

நல்ல கட்டுரை, கண்டிப்பாக கரம்பக்குடி தாலுக்காவுக்கு இது போன்ற ஒரு பள்ளி தேவை.

Raji said...

What is my role in Isha Vidhya?
The project head Venkat is my very good friend now for 6 years. 2007 when I visited the ashram, I met him and got surprised that he is leading the project with the guidance of Sadhguru. 2008, when I visited Mount Kailash along with Sadhguru and other Isha meditators I felt this strong urge to come back to India. After returning Canada, one midnight I woke up and wrote this long email to Venkat and asked him if he would take me as a part of the team. He said YES, COME BACK.
We are just 5 to 6 members taking the whole project forward along with the school principals and staff.
Because of my strong academic background, I play a very important role in academics along with Diane from United States. We both visit the schools once a month and help the teachers deliver the curriculum we have specially designed for the school properly. Venkat is our project head, roaming as worse as Sadhguru, in search of funding for our schools. Vishwananth, who is a well known educationist, is out academic head. Gopi and Kumar, takes care of construction of all our schools. Sahnti Murali in Chennai co-ordinate our scholarships.

மங்களூர் சிவா said...

அருமை.

உங்கள் எண்ணங்களும் முயற்சிகளும் வெற்றியடையட்டும் ராஜி.

Thekkikattan|தெகா said...

உங்களைப் போன்றவர்களின் முயற்சியும் உன்னதமும், முழு நேர அர்ப்பணிப்புமே இப்படியாக ஒரு கட்டுரையை எழுதத் தூண்டியது.

தங்களின் நோக்கமும் எதிர்கால திட்டங்களும் மென்மேலும் வெற்றிகளை கொணர்ந்து பல குழந்தைகள் பயனடைய வாழ்த்துக்கள்...

மேலும் பின்னூட்டங்களின் மூலமாக பல விசயங்களை தெளிவு படுத்தியமைக்கும் ஒரு சிறப்பு நன்றி.

Thekkikattan|தெகா said...

//தருமி said...

முதல் கட்டுரையே அழகு. தொடருங்கள் ...//

நன்றி தருமி. இதுக்கு முன்னாடி பதிந்த வடுவூர் பறவைகள் சரணாலயம் பற்றிய கட்டுரை காணக் கிடைத்ததா?

Thekkikattan|தெகா said...

//குடுகுடுப்பை said...

நல்ல கட்டுரை, கண்டிப்பாக கரம்பக்குடி தாலுக்காவுக்கு இது போன்ற ஒரு பள்ளி தேவை//

நன்றி குடுகுடுப்பை. கரம்பக்குடி போன்ற ஊருக்கு அவசியம் இது போன்ற ஒரு பள்ளி தேவைதான். எனக்கும் ஆசைதான் :-). I believe, it can be done, if we also aggressively involve in fund raising and raised significant amount of money :) ...

Thekkikattan|தெகா said...

குடுகுடுப்பை, தனியாக ஒரு பதிவாக போட்டு இணைப்பு கொடுத்திருக்கீங்க அதுக்கும் நன்றிங்கோவ்...

Thekkikattan|தெகா said...

//மங்களூர் சிவா said...

அருமை.

உங்கள் எண்ணங்களும் முயற்சிகளும் வெற்றியடையட்டும் ராஜி//

ம. சிவா வாங்க,

என்னுடைய வாழ்த்துக்களும் :-) ...

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி தல!

Anna said...

Wow! really cool stuff.

"Our dream is, in another 10 years Isha Vidhya schools should produce young women and men with hearts full of love and compassion for the world around them, minds/brains as focused as arrows and their energies moving towards uplifting rural India. These young boys and girls will be no way inferior to the urban kids. In fact they will so beautiful and powerful that the urban parents will be longing for such schools in their cities."

You're doing an amazing job. All the very best to you.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இருட்டுப் பள்ளத்தில் அங்க அங்க தனியாக நடமாடாதீர்கள் யானைகள் நடமாடும் பகுதி என்னும் போர்டு வைத்திருப்பார்களே, அதைப் பத்தி எதுவும் குறிப்பிடவில்லையா? சிறுவானி அணையின் படங்கள் எதுவும் இல்லாதது வருத்தமே. நல்ல பதிவு. இன்னமும் இயற்கையும் அதன் படங்களுடன் தொடருங்கள். நன்றி.

Thekkikattan|தெகா said...

//வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி தல//

வாங்க வால், உங்களுக்கு இல்லாததா :-). அப்பப்போ இங்கிட்டும் எட்டிப்பாருங்க...

Thekkikattan|தெகா said...

//பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இருட்டுப் பள்ளத்தில் அங்க அங்க தனியாக நடமாடாதீர்கள் யானைகள் நடமாடும் பகுதி என்னும் போர்டு வைத்திருப்பார்களே, அதைப் பத்தி எதுவும் குறிப்பிடவில்லையா? சிறுவானி அணையின் படங்கள் எதுவும் இல்லாதது வருத்தமே. நல்ல பதிவு. இன்னமும் இயற்கையும் அதன் படங்களுடன் தொடருங்கள். நன்றி.//

நல்ல பேரா இருக்கே பித்தன். வணக்கம்.

ஓ! யானைகளா அவைகளை நேரா எங்க வைத்துப் பார்க்கணுமோ அங்கயே வைத்துப் பார்த்துவிடுவோமென்று நாங்களும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கெல்லாம் சென்றோம், அவைகளோட நல்ல நேரம் போல எங்கள நேரா சந்திக்க விரும்பவில்லை :).

சிறுவாணி வனங்களின் படங்களும், அணைப் படங்களும் மிக விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் தனி பயணக் கட்டுரையின் மூலமாக வெகு விரைவில். அவசியம் கலந்துக்கங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

good post ! theka...
ipapthan dayandhar speech kettutu avanga ithe mathiri www.aimforseva.org . nnu nadatharanga athu pathi kelvipaten..

ella muyarchiyum vetri peratum..

தருமி said...

ராஜி, அவரோடு வேலை செய்யும் மற்ற அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும், பாராட்டுக்களும்.

Thekkikattan|தெகா said...

hey Analyst,

//Wow! really cool stuff.//

yup, it is very cool stuff. you got to experience it by yourself when you go to India next time...

//You're doing an amazing job. All the very best to you.//

what have i done to deserve such a 'paarattu' so I will give it to Raji :))

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

good post ! theka...//

நன்றி, சிறு முயற்சி.

//ipapthan dayandhar speech kettutu avanga ithe mathiri www.aimforseva.org . nnu nadatharanga athu pathi kelvipaten.. //

அப்படியா கேள்விப்பட்டதில்லை. தளம் சென்று பார்க்கிறேன். நிறைய நடக்க வேண்டிதான் இருக்கு, நடக்கட்டும், நடக்கட்டும்.

//ella muyarchiyum vetri peratum..//

என்னுடைய வாழ்த்துக்களும்...

//தருமி said...

ராஜி, அவரோடு வேலை செய்யும் மற்ற அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும், பாராட்டுக்களும்//

என்னுடையதையும் சேர்த்தே அனுப்பி வைச்சுடுறேன்...

shyla said...

Congrats,
Great job by isha vidhya team .This team is not only helping to mould students into super human being but it has personally moulded me also into a great human being.The methodologies followed by Isha is unique and the positive approach followed in these schools will create bold and smart citizens True students from the urban part would want to be a part of this group I AM PROUD TO BE A PART OF ISHA Thanks to sadh guru for giving me this great opertunity

Pushpa said...

Pushpa(Isha vidhya cuddalore)

Dear Raji akka, what! a Amazing work you have been doing? we are always with you. We are very lucky to work with you.

Unknown said...

Nice article, did you take lunch with the children? Nice of you. I am very much impressed with the photographs in the article, good ones.

Thank you for visiting the school.

Shanthi Murali

Related Posts with Thumbnails