Tuesday, October 06, 2009

புவனேஸ்வரிகள் பேசா (*தேவைப்*) பொருட்களா?

இனிமே பார்த்தீங்கன்னா, கொஞ்ச நாட்களுக்கு வேறு எங்குமே "அது மாதியான" பத்திரிக்கைகள் அல்லது கதைகள் தேடிப் படிக்க வேண்டாத குறைக்கு எங்கு திரும்பினும் நம்மூரு புவனேஸ்வரியைப் பற்றி, பத்தி பத்தியா விலாவாரியா எல்லா வெகு ஜன பத்திரிக்கைகளும் எழுதி சமூகச் சேவை பண்ணிக் கொண்டு இருப்பதனைப் பார்க்க முடியும்.

இதனை நன்றாக உற்றுப் பார்த்தால் என்னமோ கன்னாபின்னான்னு இடிக்கிற மாதிரி ஒரு பக்கச் சார்பு நிலை கொண்டு நம் சமூகம் புவனேஸ்வரிகளை கையாள்வதாகப் படுகிறது. எழுதுற பத்திரிக்கைகளில் ஒவ்வொரு கட்டுரையும் சுமார் இரண்டு அடிகளுக்கு குறைச்சலில்லாமல் ஓடுகிறது. முழுமையா மூளை வளர்ச்சியுற்ற எவனுக்கும் தெரியும் எது போன்ற "சமூக நிர்பந்தங்கள்" இது போன்ற புவனேஸ்வரிகளை உருவாக்கவும் செய்து, அது போன்ற நிலையிலிருந்து அவர்கள் நழுவி விடாமல் இருக்க இறுக்கியும் கட்டுறச் செய்கிறது என்பதனை.

இந்தப் பின்னணியில் கோவி கண்ணன் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களை படிக்கும் பொழுது, அட எப்படிய்யா நம்ம மக்கள் முழு பூசணிக்காய சோத்துக்குள்ளர வைச்சு மறைக்க வைக்கப் பார்க்கிறாங்கன்னு தோன்றியதின் விளைவா வந்ததுதான் இந்தப் பதிவு.

ஆமா, அது போன்ற பெண்கள் எங்கு வானத்திலிருந்தா குதிக்கிறார்கள்? இல்லை மூளையில் எழுதப்பட்ட ஒரு சமிக்கை வார்த்தையைக் கொண்டு தன் தொழிலை தொடங்குகிறார்களா? பெண் குழந்தைகளையே அதிகமாக பெற்றெடுத்த பெற்றோர்கள் அந்தக் குழந்தைகள் வளரும் காலம் தோறும் அதிகமாக பயந்தே வாழ்வது இந்தச் சமூகம் அந்த அப்பா என்கிற ஒரு 'சூப்பர் மேன்' அருகிலிருந்து பார்க்க முடியாத ஏதோ ஒரு சூழல் அது துர்ச் சம்பவமாக நிகழும் மரணம், அல்லது விபத்தின் மூலமாக இயங்க முடியா ஒரு நிலை, அல்லது திருமணமாகிய ஒரு பெண்ணே அது போன்ற கணவன் அற்ற நிலையில் எப்படியாக இந்தச் சமூகம் அவர்களை மெல்லமே இந்தச் சமூக ஆற்றுக்குள் இழுத்துச் சென்று விடும் என்று அஞ்சியே வாழும் சூழலைத்தானே நம் 'புனித' மஹாத்மாக்களும், கழுதைப் புலிகளும் பக்கம் பக்கமாக வாழும் ஒரு சமூகத்தில் நடைபெறுகிறது என்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

அது போன்ற சூப்பர் மேன்கள் (தகப்பன்/அண்ணன்/கணவன்) இல்லாத ஒரு வாழ்வுச் சூழ்நிலையில் அங்கே பெண்களும் கொஞ்சம் இளமையாகவோ அல்லது அழகாகவோ இருந்து போனால் அவர்களுக்கு எந்தந்த ரீதியில் எல்லாம் 'அதுவாக'ஆகிப் போக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கக் கூடும். அப்படியே தாக்குப் பிடித்து நேர் வழியில் அவர்கள் இயங்கிச் சென்றாலும், அக்கம் பக்கம், புனை கதைகளை ஊட்டுவதின் பேரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, கடைசியில் அங்கே கொண்டு போய் சேர்ப்பதிலும் நம் பங்குதானே முன்னணியில் இருக்கக் காண்கிறோம்.

நாம் பேசிக் கொண்டிருப்பது இரண்டாவது இந்தியாவைப் பற்றியோ? ஏனெனில் முதன்மை இந்தியாவில் இது வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். இப்பொழுது, நாம் இரண்டாவது இந்தியாவைப் பற்றியே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த இந்தியாவில்தான் நிறைய குழப்பங்களும், நடிப்பும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதும் மிஞ்சிக் கிடக்கின்றன. அங்கிருந்துதான் இது போன்ற தீண்டத் தாகாத; அப்போ யார்தான் தீண்டி அவ்ளோ பெரிய தொகை எல்லாம் கொடுக்கிறாங்க? பேசா பொருட்களும்(பெண்) உருவாக்கப் படுகிறார்கள்.

அது போன்ற பேசாப் பொருட்கள் நமக்கு அவசியமாக தேவைப்படும் தேவையற்ற ஓர் ஒளி பொருள். அவ்வாறாக உருவாக்கப் பட்டவர்களுடன் நமது இயக்கம் வெளியில் ஏதோ பல சில உள் காரணங்களால் எப்பொழுதாவது வெளி வர நேர்ந்து போனால், அப்பொழுதும் அங்கு தீண்டப் பட்ட பாத்திரமே குற்றவாளி கூண்டினுள் வைத்து உருட்டப் படுகிறது. அதனை எடுத்து கையாள்பவரோ கூட்டத்தில் ஒருவனாக நின்று தண்டனை வாங்கிக் கொடுக்க குரல் கொடுக்கும் நிலைக்கு நகர்ந்து விடுகிறான். இது எது போன்ற நியாயத்தில் சேர்த்தி?

சரி பிரிதொரு நாளில் அந்தப் பாத்திரம் தான் பிடித்து தள்ளப்பட்ட நிலையை நிலை நிறுத்தி வெளி வந்து, இனிமேல் இது போன்ற ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை என்று கருதி 'சோ கால்ட்' நேர் வழியில் சென்று வாழலாமென்று சிரத்தையுடன் வாழ எத்தனிக்கும் நாளில் கூட அது போன்ற 'கழுதைப் புலிகளும்' - புனித மஹாத்மாக்களும் சுலபமாக அவர்களை அவ்வாறு நல் வழி சமூக ஆற்றில் கலந்து விட விட்டுவிடுகிறார்களா என்ன? அது, அதுபோன்ற வாழ்ந்து கொண்டிருக்கும் 'பேசா பொருட்களின்' வாழ்வுச் சூழலில் இருந்து பார்த்தால்தான அதற்கான விடை காண முடியும் என்று நினைக்கத் தோன்றவில்லை.

முன்னமேயே அவர்களுடன் தொடர்புடைய "பெரியவர்கள்" துரத்தித் துரத்தி ஏதேதோ காரணங்களுக்காக மேலும் மேலும் பரிவாகப் பேசி, மசியாத பட்சத்தில் மிரட்டி, உருட்டி அது திருமணமே கட்டி நிம்மதியாக வாழலாமென்று புத்துணர்வுடன் வாழ்க்கையை தொடரும் முன்னால் 'பேசாப் பொருளாக' இருந்தாலும் கூட மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன ? இப்படியான ஒரு சமூகச் சூழலை நம்மைச் சுற்றியும் வைத்துக் கொண்டு, வெறுமனே இந்தப் பத்திரிக்கைகளும் ஏதோ அன்றைய வியாபாரத்தை அவசர அவசரமாக கூட்டிக் கொள்ள, அந்தப் பேசாப் பொருட்கள் நிர்பந்திக்கப்படுவதால் செய்வதனையே இவர்களும் எழுத்தின் மூலமாக மேம்போக்காக பேசிக் கொண்டே செல்வதனை எந்த தர்மத்தில் எடுத்துக் கொள்வது அல்லது சேர்ப்பது?

கொஞ்ச காலங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தமிழகத்தை சார்ந்த இது போன்ற 'பேசாப் பொருட்கள்' பெருமளவில் மீட்டெடுக்கப் பட்டு தமிழகத்தில் வைத்து மறு மலர்ச்சி வாழ்வளிக்கப் போகிறோமென்ற திட்டத்தின் பேரில் கொண்டு வந்தவர்களின் இறுதிக் கதை என்னவாக அமைந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களை அவ்வாறு வாழ விட்டு வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு ஐயமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு நேர்ந்த கதையை தெரிந்தவர்கள் யாராவது இங்கு வந்து பகிர்ந்து கொண்டால்தான் உண்டு.

சரி, இந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன்னால் அது போன்ற பெண்களில் எத்தனை சதவீதம் பேர் எனக்குப் பிடித்தே இந்தத் தொழிலில் இறங்கினேன் என்ற வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கக் கூடும்? அப்படியே பிடித்தே இறங்கினேன் என்று சொல்லும் பட்சத்தில் இதனை ஏன் மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல அவர்களின் தொழிலின் இன்றியமையாமைக் கருதி அங்கீகரிக்கக் கூடாது? அப்படியாக ஆகும் பட்சத்தில் அதனையொட்டிய குற்றங்கள் குறைவதற்கான ஒரு வடிகாலாக அமைய முடியுமல்லவா?

சங்க காலத்திலிருந்து, சிலப்பதிகாரம் தொட்டு நேற்றைய தமிழ்ச் சினிமா வரைக்கும், வெறும் இயக்கப்படுபவர்களை மட்டுமே விமர்சித்து விமர்சனங்கள் வருகிறதே ஒழிய, இயங்குபவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் போலவும், சுய சிந்தனையே மழுங்கடிக்கும் அளவிற்கு வசியம் செய்து அவர்களின் வீட்டு வாசலை அடைய வைத்ததாகவே பேசி வருகிறது. அப்படியெனில் 'நாடுபவர்கள்' அனைவரும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா? புரியாமல் தான் கேட்கிறேன்.

சரி நம் வீட்டிலும் சரிசமமாக பெண் பிள்ளைகளுடன் (பல தளங்களில் - அம்மா/அக்கா/தங்கை/மனைவி/மகள் என்று) புழங்கிக் கொண்டு எப்படி ஊர் விவகாரம் என்றால் மிக எளிதாக இப்படி உண்மைகளை மறைத்து உதாசீனப் படுத்தி பேசி விட முடிகிறது? அதனைப் பற்றி பேச வருபவர்களையும் ஒரு தீண்டத் தாகாத ஆளாகக் கருதி மனதிற்குள் குறு குறுப்பை வைத்துக் கொண்டு நடித்தே வாழ்ந்து விட முடிகிறது?

என்னமோ போங்க, எத்தனை காலங்கள் வந்தாலும் சில விசயங்களில் தெரிந்தே செய்யும் அநீதிகளுக்கு எந்த விதமான மாற்று நீதிகளும் கிடைத்து விடுவதாக தெரியவில்லை. அது, அந்த நிலையில் பிறந்த அல்லது நிர்பந்திக்கப் பட்டவர்களின் போதாத காலம் என்ற அனேகத்தன்மையில் உஷ்ஷ்ஷ் யப்பாடா அது எனக்கு நடந்து விடவில்லை என்று மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டிக் கழித்து விட வேண்டியதுதான் போல.


32 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல சாடல் பதிவு தெக்ஸ்!

தொழிலை விட்டுட்டு திருந்தி வாழ நினைச்சாக் கூட விட்டு விடாத "மனங்கொத்தி மனிதர்களை"க் கொண்டதுதானே இந்தச் சமூகம்!

விபச்சாரம் தப்பு என்று கூவுகிறவர்கள் அது இருகை ஓசை என்பதை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்!

காசு படைத்தவனின் திமிருக்கு வடிகாலாக அமைகிற அந்தப் பாவப்பட்ட ஜென்மங்கள் மட்டுமே குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள்!

Anonymous said...

//'நாடுபவர்கள்' அனைவரும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா? புரியாமல் தான் கேட்கிறேன்.//

நல்லா கேட்டிருக்கீங்க. அவங்க எல்லாம் ஆட்டக்காரங்க,கூத்துக்காரங்க அப்படி இப்படி உடுத்தியிருந்தாங்கன்னு சப்பைக்கட்டு கட்ட ஆளிருக்காங்க. நாடுபவர்கள் எல்லாம் குடும்பஸ்தர்கள். ரொம்ப நல்லவர்கள். :(

நாடோடி இலக்கியன் said...

ஆழமான பார்வை.போலியான வாழ்க்கையில் இப்படியான உண்மைகளை பேசுபவர்கள் போலிகளாக(பொய்யர்களாக) பார்க்கப்படும் அவலம் இங்கே விஸ்தாரமாய் விரவிக்கிடக்கிறது.

- யெஸ்.பாலபாரதி said...

// கொஞ்ச காலங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தமிழகத்தை சார்ந்த இது போன்ற 'பேசாப் பொருட்கள்' பெருமளவில் மீட்டெடுக்கப் பட்டு தமிழகத்தில் வைத்து மறு மலர்ச்சி வாழ்வளிக்கப் போகிறோமென்ற திட்டத்தின் பேரில் கொண்டு வந்தவர்களின் இறுதிக் கதை என்னவாக அமைந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களை அவ்வாறு வாழ விட்டு வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு ஐயமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு நேர்ந்த கதையை தெரிந்தவர்கள் யாராவது இங்கு வந்து பகிர்ந்து கொண்டால்தான் உண்டு//

தொக, நானும் கொஞ்ச காலந்துக்கு முந்தி சாந்தியக்கா.. என்றொரு பதிவு எழுதி இருக்கிறேன். அதில் 1990ல் மீட்கப்பட்ட பெண்களின் நிலை என்னவாகிப் போனது என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். பார்த்துக்கொள்ளவும்.

மற்றபடி, இது நல்லது பதிவு.

தோழன்
பாலா

Anonymous said...

nalla pathivu, yosipparkala

anu

மங்களூர் சிவா said...

/
அனேகத்தன்மையில் உஷ்ஷ்ஷ் யப்பாடா அது எனக்கு நடந்து விடவில்லை என்று மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டிக் கழித்து விட வேண்டியதுதான் போல.
/

வேற என்னத்த பண்றது. அதிகபட்சம் ஒரு பதிவெழுதலாம்
:(

rapp said...

excellent post

ராஜ நடராஜன் said...

வீட்டுக்கு வெள்ளை அடிச்சிட்டீங்க போல இருக்குதே.வீட்டை ஒரு ரவுண்டு விட்டுட்டு வாரேன்.

ராஜ நடராஜன் said...

விவாதங்களை உள்ளடக்கிய பாலியலை சமூகம்,சட்டம்,காவல்துறை போன்ற பலகோணங்களிலும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.மதில் மேல் பூனையாக ஏதாவது ஒரு பக்கம் தாவியே தீரவேண்டும் என்றில்லாமல் வித்தை காட்டும் கயிற்றில் பேலன்ஸ் செய்து நடந்து போகவேண்டிய விவாதம் இது.

இந்த விவாதம் ஓய்ந்து போகுமென எனக்குப் படவில்லை.முன்பு சிலோன் லைலா கைது என்று தினத்தந்தி குத்துடான்ஸ் ரெக்கார்ட் டான்ஸாக பரிணாம வளர்ச்சியடையாத காலத்தில் செய்தி.இப்ப புவனேஷ்வரி.முந்தா நாள் வரைக்கும் பாய்ஸ் படத்தில் நடித்த பெண்தான் இந்த புவனேஷ்வரி என்பது கூட தெரியாத என்னைப் போன்ற பலருக்கும் நல்லா அறிவூட்டல் தருகிறது ஊடகங்கள்:)

பாலியலை தொழிலாக ஆகிப் போவதில் நீங்கள் குறிப்பிட்டபடி சமூகத்தின் அவலங்களால் ஒரு வழிப்பாதையாக வாழ்க்கை மாறிப் போகிற பெண்கள் ஒரு புறமும்,சமூக அழுத்தங்களோடு அதிகரிக்கும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எளிதான வழி என்று விற்பனைப் பொருளாக மாறிப் போகிற கலைச்சேவை பெண்கள் மறுபுறமும் என இரு நிலைகளிலும் இன்வால்வ் ஆகும் நுகர்வோன்,தரகன் ஆண் வர்க்கத்திற்கும் அப்பால் இன்னொரு அதிகார வர்க்கமாய் காவல்துறையும் இதில் நுழைகிறது.சட்டம் எல்லோருக்கும் சமம் என்கிற நிலையில் விபச்சார தடுப்புச் சட்டங்கள் ஓரளவுக்கு உடலியல் அழுத்தங்களை கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.ஆனால் நடைமுறையில் நிகழ்வதை உங்கள் பக்கம் விட்டு விடுகிறேன். புவனேஷ்வரி குறி வைக்கப்பட்டதற்கு மறைபொருள் காரணங்கள் மட்டுமா அல்லது சட்ட சீர்திருத்தத்தின் துவக்க படியாக இது தொடக்கமா என்பது வருங்காலம் சொல்லும்.சீர்திருத்த துவக்கம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதோடு நமது சமூக சூழலுக்கு பாலியலை சட்டரீதியாக்க மாற்றுவதும் கடினம் என்பது பதிவர்.பாலபாரதி தந்த பின்னூட்டம் மூலமும் அறிய முடிகிறது.

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க!அப்படியே இதையும் ஒரு லுக் விடுங்க.நன்றி.


http://parvaiyil.blogspot.com/2008/08/blog-post_12.html

பதி said...

நன்றாக சாட்டையை சொடுக்கியுள்ளீர்கள் தெகா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நதி அவர்களும் இதே கருத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

உங்களது பார்வைக்கு

http://tamilnathy.blogspot.com/2007/10/blog-post_14.html

இது போன்ற அழகன்களை என்று கண்டுகொள்ள ஆரம்பிக்கப் போகின்றனர்.??

Thekkikattan|தெகா said...

சிபி,

விட்டுப்போனவைகளை சேர்த்து வைத்ததற்கு ஒரு சிறப்பு நன்றி...

//விபச்சாரம் தப்பு என்று கூவுகிறவர்கள் அது இருகை ஓசை என்பதை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்!//

அதானே கேக்கிறேன்... கேக்க யார் இருக்கிறா?

Thekkikattan|தெகா said...

//நல்லா கேட்டிருக்கீங்க. அவங்க எல்லாம் ஆட்டக்காரங்க,கூத்துக்காரங்க அப்படி இப்படி உடுத்தியிருந்தாங்கன்னு சப்பைக்கட்டு கட்ட ஆளிருக்காங்க. நாடுபவர்கள் எல்லாம் குடும்பஸ்தர்கள். ரொம்ப நல்லவர்கள். :(//

வாங்க சின்ன அம்மிணி,

நான் இப்படியும் கூட நினைச்சேன் எங்கே தூக்கத்தில நடக்கிற வியாதியாலே தெரியாம நடந்துக்கிறாங்களோன்னு :-), ரொம்பபபப நல்லவர்கள்ள்ள்ள் ... ஆனா, """இதில இந்தப் பூனையும்...."" - அப்படின்னு உடன்ஸ் விட்டு பேசுறதுதான் இதில ஹைலைட் :D

ஜோ/Joe said...

சபாஷ்! இன்னும் சொல்ல இருக்கு.

//விபச்சாரம் தப்பு என்று கூவுகிறவர்கள் அது இருகை ஓசை என்பதை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்!//

நாமக்கல் சிபி சொன்னது முற்றிலும் உண்மை .. இவர்கள் போன்ற நடிகைகளிடம் செல்வாக்கையும் ,நிர்பந்தத்தையும் பயன்படுத்தி சிகம் அனுபவித்த ஆண்கள் மட்டும் யோக்கிய சிகாமணிகளோ?

Thekkikattan|தெகா said...

// நாடோடி இலக்கியன் said...

ஆழமான பார்வை.போலியான வாழ்க்கையில் இப்படியான உண்மைகளை பேசுபவர்கள் போலிகளாக(பொய்யர்களாக) பார்க்கப்படும் அவலம் இங்கே விஸ்தாரமாய் விரவிக்கிடக்கிறது.//

இதில பாருங்க இலக்கியன், அதுதான் விலையும் போகுது ஜெக ஜோதியா என்ன பண்றது வேடிக்கை மட்டும் பார்த்திட்டு மனசிக்குள்ளற சிரிச்சிட்டே போயிட்டு இருக்க வேண்டியதுதான் :-(

Santhosh said...

தெகா,
விடைசொல்ல முடியாத நல்ல கேள்விகளை கேட்டு இருக்கீங்க :(.. நீங்க சொல்லியிருக்குற மாதிரி பாலியல் தொழிலையும் ஒழுங்குப்படுத்தலாம் ஆனா இவனுங்களுக்கு மாமூல் வாழ்க்கை போயிடுமே :(..

Santhosh said...

இப்படி ஒழுங்கான பதிவுங்களை எழுதுறதை வுட்டுபோட்டு கதை எழுதுறேன் கவிதை எழுதுறேன்னு திரும்பவும் கிளம்பிப்பாரும் இருக்கு உமக்கு கச்சேரி..

Thekkikattan|தெகா said...

//தொக, நானும் கொஞ்ச காலந்துக்கு முந்தி சாந்தியக்கா.. என்றொரு பதிவு எழுதி இருக்கிறேன். அதில் 1990ல் மீட்கப்பட்ட பெண்களின் நிலை என்னவாகிப் போனது என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். பார்த்துக்கொள்ளவும்.

மற்றபடி, இது நல்லது பதிவு.//

வாங்க பாலா, நீங்க கொடுத்த சுட்டிக்கான பதிவை எப்பொழுதோ படித்த ஞாபகம் எனக்கிருக்கிறது. அது மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கட்டுரை. உணர்வுகளை அழுத்தமாக இரு பக்கமிருந்தும் கிடைப்பதாக அமைந்திருந்தது.

வாழ்த்துக்களுக்கு நன்றி, பாலா!

Thekkikattan|தெகா said...

வேற என்னத்த பண்றது. அதிகபட்சம் ஒரு பதிவெழுதலாம்
:(//

மங்களூர் சிவா, நம்ம நிலமை இப்படியாகிப் போச்சே ...

அனானி,

ஊக்கத்திற்கு நன்றிங்கோ...

//rapp said...

excellent post//

நன்றி, ராப்!

Thekkikattan|தெகா said...

வாங்க ர.நா,

//சமூக அழுத்தங்களோடு அதிகரிக்கும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எளிதான வழி என்று விற்பனைப் பொருளாக மாறிப் போகிற கலைச்சேவை பெண்கள் மறுபுறமும் என இரு //

அது போன்றதொரு வழி சிறந்ததென self-choiceல் முடிவு எடுக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு நம் சமூக அமைப்பில் அமைந்திருக்கிறது. அதுவும் சிறு பருவம் தொட்டு பெண்களின்பால் அதிக சிரமமேற்று பொத்தி, பொத்தி கலாச்சாரத்தின் ஒட்டு மொத்த சுமையையும் தாங்கும் தூண்களாக வைத்து பயிற்சியளித்து வளர்க்கும் சூழலில், நம்மூர் சமூகச் சூழலில், முதலில் கிடைக்கும் ஓரளவிற்கான நேர் வழியில் வாழத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள் என்று என்னால் அவதானிக்க முடிகிறது.

முழுமையாக வருமைக்கென இந்த ஒரு பாதையை அவ்வளவு சீக்கிரமா தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். முழுதுமாக தன்னைச் சுற்றிலும் உள்ள ஏனைய ஆளுமைகளின் அழுத்தமே முக்கிய பங்காற்ற முடியும்.

//புவனேஷ்வரி குறி வைக்கப்பட்டதற்கு மறைபொருள் காரணங்கள் மட்டுமா அல்லது சட்ட சீர்திருத்தத்தின் துவக்க படியாக இது தொடக்கமா என்பது வருங்காலம் சொல்லும்.//

இப்படியும் நம்புவீர்களா? :-)) இந்த சட்டரீதியாக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையே அது தொடர்புடைய அரசாங்க மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க காரணமாக இருப்பது, அதனால் வரும் வரும்படி வற்றிவிடுமோ என்ற ஆதங்கமாகத்தான் எதிரொலிக்க முடியும். உங்களுக்குத் தெரியுமா ஒரு படத்தில் பிரகாஷ்ராஜ் இப்படியா புது காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அந்த ஊர் ரவுடிகளை அழைத்து எவ்வளவுடா நீ மாதம் கொடுக்கிற என்ற ரேஞ்சில் விசாரித்துக் கொண்டே வந்துவிட்டு கடைசியில், ச்சீ இவ்வளவு தானா மொத்தமே, என்னமோ இத்தனை 'லட்சங்கள்' தேரும் நல்ல செண்டர் என்று சொல்லி அனுப்பினாங்கன்னு அலுத்துக் கொள்வார், அது போல நிதர்சனத்தில் இல்லையென்றா நம்புகீறீர்கள் ....??

Thekkikattan|தெகா said...

//பதி said...

நன்றாக சாட்டையை சொடுக்கியுள்ளீர்கள் தெகா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நதி அவர்களும் இதே கருத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

உங்களது பார்வைக்கு

http://tamilnathy.blogspot.com/2007/10/blog-post_14.html//

நன்றி, பதி! தமிழ்நதியின் சுட்டிக்கும் ஒரு சிறப்பு நன்றி. அதெப்படி 2007லே எழுதினதை ஞாபகம் வைச்சு இப்போ கொண்டு வந்து கொடுக்கிறீங்களே... back reference செஞ்சு நீங்க ஒரு scholar அப்படிங்கிறதை நிரூபிச்சிட்டீங்களே :).

//இது போன்ற அழகன்களை என்று கண்டுகொள்ள ஆரம்பிக்கப் போகின்றனர்.?//

இந்தப் கட்டுரையின் மூலமா கேக்காம கேட்ட கேள்வி அதுதான்... ஆமா, எப்போ??

கோவி.கண்ணன் said...

:)

விபச்சாரம் அல்லது பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் என்றால் ஆணுறைகள் வாங்குப்போது திருமண சான்றிதழ் இருந்தால் தான் வாங்க முடியும் என்று அரசுகள் சட்டம் இயற்றுமா ?

SurveySan said...

ஞாயம் புரீது.

ஆனா, இப்படி 'பேசாப் பொருளாக' இருப்பதில் சிலர், 'காற்றுள்ள போதே' வகையராக்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

கொழுப்பெடுத்தூ, மீட்டர் வைத்து, ஸைட் தொழிலாய், வசூல் செய்யும் வகையராக்களை எந்த கணக்கில் சேர்ப்பது?

பதி said...

தெகா,

அந்த கட்டுரை எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று...

//back reference செஞ்சு நீங்க ஒரு scholar அப்படிங்கிறதை நிரூபிச்சிட்டீங்களே :).//

அவ்வ்வ்வ்வ்வ்..

இப்படி எல்லாம் தான் நாங்க ஒரு research scholar னு நிறுபிக்க வேண்டியதா இருக்கு....

//விபச்சாரம் அல்லது பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் என்றால் ஆணுறைகள் வாங்குப்போது திருமண சான்றிதழ் இருந்தால் தான் வாங்க முடியும் என்று அரசுகள் சட்டம் இயற்றுமா ?//

இது கேள்வி..... :-)))

Thekkikattan|தெகா said...

//லஞ்சம் said...

லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் பதிவு.

http://ulalmannargal.blogspot.com///

லஞ்சம், பேரைப் பாருங்கய்யா ;-)

சரி லஞ்சத்திற்கும் இது போன்ற விசயங்களும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ... :)

Thekkikattan|தெகா said...

//நாமக்கல் சிபி சொன்னது முற்றிலும் உண்மை .. இவர்கள் போன்ற நடிகைகளிடம் செல்வாக்கையும் ,நிர்பந்தத்தையும் பயன்படுத்தி சிகம் அனுபவித்த ஆண்கள் மட்டும் யோக்கிய சிகாமணிகளோ?//

ஜோ, அதுக்குத்தான் நாங்க அந்தப்பக்கமா போயி நின்னுக்கிட்டு சத்தம் கொடுக்கிறோம்ல :))

Thekkikattan|தெகா said...

சந்தோஷம்,

//பாலியல் தொழிலையும் ஒழுங்குப்படுத்தலாம் ஆனா இவனுங்களுக்கு மாமூல் வாழ்க்கை போயிடுமே :(..//

சொன்னாலும் சொன்னே நூத்தில ஒரு வார்த்தை ப்போ... :)

//இப்படி ஒழுங்கான பதிவுங்களை எழுதுறதை வுட்டுபோட்டு கதை எழுதுறேன் கவிதை எழுதுறேன்னு திரும்பவும் கிளம்பிப்பாரும் இருக்கு உமக்கு கச்சேரி.//

இப்படி மிரட்டி மிரட்டியே அநியாத்திற்கு ஒரு கவிஜரை கொன்னுபுட்டே ப்போ... உன்னய இந்த தமிழ் வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது :D

Thekkikattan|தெகா said...

கோவி.கண்ணன் said...
:)

விபச்சாரம் அல்லது பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் என்றால் ஆணுறைகள் வாங்குப்போது திருமண சான்றிதழ் இருந்தால் தான் வாங்க முடியும் என்று அரசுகள் சட்டம் இயற்றுமா ?//

எப்படிங்க இப்படியெல்லாம் எடக்கு மொடக்க கேள்விய கேட்டு வைக்கிறீங்க :)

// SurveySan said...

ஞாயம் புரீது.

ஆனா, இப்படி 'பேசாப் பொருளாக' இருப்பதில் சிலர், 'காற்றுள்ள போதே' வகையராக்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.//

நாம இங்கே பேசுவது 'சாய்ஸ்' இல்லாத சமூகம் உருவாக்கும் 'பேசா பொருட்களை' மட்டுமே... மற்ற கேசுகள் எப்படி இந்த சமூகத்தை கையாள்வதுங்கிறதில ரொம்பத் தெளிவா இருக்கும்...

மங்கை said...

சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்ததிலுருந்து நடந்து வரும் விஷ்யங்கள் மிகுந்த மன வருத்தத்தை கொடுக்கிறது...அது அச்சு ஊடகத்திலாகட்டும், பதிவுலகத்திலாகட்டும், நடிகர் சங்க போராட்டத்திலாகட்டும்...

இதில் எல்லாவற்றிலுமே பெண்களை granted ஆக எடுத்து தான் பேசியிருக்கிறார்கள்.. எந்த உரிமையில் இபப்டி பேசியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை... பேச அருகதை அற்றவர்கள் என்பதை நிருப்பித்து இருக்கிறார்கள்..

:(

அரசூரான் said...

தெகா நல்ல பகிர்வு. எல்லோருக்கும் (சினிமா, பத்திரிக்கை & பொதுசனம்) எல்லாம் தெரியும், இந்த நிகழ்வை வைத்து அவன் அவன் அடுத்தவர் மீதுள்ள காழ்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மற்றபடி இப்போது எங்கே இருக்கிறது தொழில்/பத்திரிக்கை தர்மம்?

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க தெகா... இப்டி லின்க் எல்லாம் தாராளமா அப்ப அப்ப கொடுங்க... படிக்கிறப்போ கொஞ்சம் மனுஷங்க இருக்காங்கப்பான்னாவது தோணட்டும்..

சேர்ந்து வாழ்றவங்கள ஆதரிச்சாலே... .......யா..ன்னு சொல்ற .......... இருக்கிற இடத்தில... மனுஷங்க இல்லையோன்னு சில நேரம் கவலை வந்துடுது..

||அப்படியே பிடித்தே இறங்கினேன் என்று சொல்லும் பட்சத்தில் இதனை ஏன் மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல அவர்களின் தொழிலின் இன்றியமையாமைக் கருதி அங்கீகரிக்கக் கூடாது? ||

ம்ம்.. யூ ட்யூப்ல.. ரொம்ப நாள் முன்னாடி.. இப்படிக்கு ரோஸ் பார்த்தேன்.. அதில ஒரு விலைமாது... நளினின்னு வந்திருந்தாங்க... ஒரு புக் கூட எழுதி இருக்காங்களாம்.. அவங்களும் இதே கருத்தத்தான் சொன்னாங்க...

நிறைய அக்கிரமம் குறையும்ன்னு... ம்ம்..

ஜோதிஜி said...

இதற்கான விமர்சனம் உங்களைத் தேடி வரும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சரி நம் வீட்டிலும் சரிசமமாக பெண் பிள்ளைகளுடன் (பல தளங்களில் - அம்மா/அக்கா/தங்கை/மனைவி/மகள் என்று) புழங்கிக் கொண்டு எப்படி ஊர் விவகாரம் என்றால் மிக எளிதாக இப்படி உண்மைகளை மறைத்து உதாசீனப் படுத்தி பேசி விட முடிகிறது? அதனைப் பற்றி பேச வருபவர்களையும் ஒரு தீண்டத் தாகாத ஆளாகக் கருதி மனதிற்குள் குறு குறுப்பை வைத்துக் கொண்டு நடித்தே வாழ்ந்து விட முடிகிறது?//

இன்றுதான் பார்த்தேன் இந்த பதிவை.

இந்த லிங் மூலம்..http://hafehaseem00.blogspot.com/2010/08/blog-post_26.html?showComment=1301725282159#c1768850337295631944

இன்றுதான் நான் இதுகுறித்து எழுதினேன்..

http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post.html

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..

மகிழ்ச்சியாக இருக்கு . சிலராவது சிந்திக்கிறார்களே என..

Related Posts with Thumbnails