நண்பர் நவன், எப்பொழுதோ நான் கவிதை என்று நினைத்து எழுதியிருந்த ஒரு பக்கத்தை படித்து விட்டு மண்டையை பிய்த்துக் கொண்டு எனக்கு என்ன பொருள் என்று பிடிபடவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா என்று வினவியிருந்தார்...
அந்த கவுஜா இங்கே இருக்கிறது... சென்று பார்த்து படித்து விட்டு நீங்களும் மண்டைய ஸ்கரட்ச் செய்து கொண்டே வந்து மீண்டும் இங்கே வந்து இந்த விளக்க கட்டுரையை படியுங்கள். அப்படியும் பிரியவில்லை என்றால் அந்த கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் ;-)
அன்பு நவன்,
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எனது பழைய கூடையை கிளரி நீங்கள் எடுத்துப் படிக்கிறீர்கள் என்பதனை எண்ணும் பொழுது. அதற்கு எனது வந்தனங்கள்.!
இந்த கவிதை போன்ற எழுத்தில் நான் நினைத்து சொல்ல வந்தது: மனித வாழ்வு என்பது நெடு நீண்ட தூரப் பயணம் என்பது போல நமக்குப் புலப் பட்டாலும், அது ஒரு சிறிய முடிவுறும் பயணமே... கோவையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு முறையும் நான் ஒரு மயானத்தின் வழியாக பயணிப்பதுண்டு, அவ்வாரு செல்லும் பொழுது இது போன்று மனித உடல் ஏதேனும் வேகும் பொழுது எனக்கு வாழ்வின் பொருள் மீண்டும் கண்களின் முன்னால் ஒரு முறை கேள்விக் குறியாக நிலை பெறுவது உண்டு.
மனித வாழ்வு நாம் வாழும் ஒவ்வொரு கனமும் எப்படி வாழ்கிறோம் என்பதனைப் பொருத்து தான் பொருள்ளதாக அமைகிறது என்றால், அதனை எப்படி அனுபவித்து நம் கூடவே வாழ்ந்து வரும் இந்த அப்பா, அம்மா, மற்ற சொந்த பந்தங்களுடன் அனுபவித்து வாழ்வின் சுவையை அதன் நிலையற்ற தன்மையை(மரணம்) கருத்தில் நிறுத்தி... அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால் அதுவே NOWNESS என்பதின் பொருளன்றோ, என்று நினைத்து அப்படி சொல்லி வைத்தேன்...
இன்னும் சில பதிவுகள் இதே லைனில் வெளியிட உள்ளேன். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு இத் தருனத்தில் ஆருதலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்...
நவன், மீண்டும் இங்கு உங்களின் கேள்வியாக என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Wednesday, December 06, 2006
நவனும், நானும் என் மயானக் கவுஜாவும்...!
Posted by Thekkikattan|தெகா at 1:43 PM 13 comments
Labels: கைகலப்பு
Sunday, December 03, 2006
The Superintendent of Police மாசிலாமணி சாரின் திடீர் மறைவு...
சனிக் கிழமையைப் போல் (21st) "ஆராதனா" அவர்கள் அஞ்சலி என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் மாசிலாமணி என்ற நல்ல காவல் துறை அதிகாரி மரணமுற்றார் எனவும், திருச்சி மாநகரம் கடைசி ஊர்வலத்தை ஒட்டி ஸ்தம்பித்துப் போனதாகவும் எழுதியிருந்தார்.
அதனைப் படிக்கும் பொழுது உண்மையிலேயே அவர் யார் என்பதில் எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது, இன்று மயிலின் மூலமாக அதிகாரப் பூர்வமாக அறிந்து கொண்டேன், அது வேறு யாருமல்ல நம் எல்லோருக்கும் தெரிந்த, ப்ளாக் செய்யும் நண்பர் தான் அவர் என்பது.
அவரின் ப்ளாக் பக்கங்கள் :
தமிழ் : லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
ஆங்கிலம் : Safety On Roads
திரு. மாசிலாமணி அவர்கள் ஒரு சிறந்த காவல் துறை அதிகாரியும், ஒரு சிறந்த மனிதர் என்பதும் அவரின் படைப்புகளை காணும் யாவரும் அறியக் கூடும். அவர் இங்கு தமிழ் மணத்திலும் கொஞ்ச நாட்கள் எழுதியிருக்கிறார்.
அவரின் இழப்பு தமிழக சட்ட ஒழுங்கு காவல் துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு... அதிலும் குறிப்பாக மக்களுக்கு. அவ்வளவு நேர்மையும், தொலை நோக்கு பார்வையும் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்தவர்.
இத் தருணத்தில் அவரின் துணைவியார் டாக்டர். டெல்ஃபின் விக்டோரியா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, மாசிலாமணி சாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
Posted by Thekkikattan|தெகா at 10:41 PM 16 comments