Sunday, August 20, 2006

Spiritual Masters Are Schizophrenic? : எனது பார்வையில்...

புதுமை விரும்பி அவர்கள் இங்கு ஒரு பதிவை "ராம கிருஷ்ண பரமகம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic?" என்ற தலைப்பில் எழுதி ஒரு வினா எழுப்பியிருந்தார். அங்கு சென்று முழுதும் படித்துவிட்டு பின்னூட்ட மிட ஆரம்பித்தேன், தெகா பாணியில் சொல்வதானால் ஒட்டகச் சிவிங்கி கணக்க நீநீண்ண்ண்டு போச்சுங்க, அதனால அந்த பின்னூட்டத்தை இங்கு உங்களின் பார்வைக்கு கொணர்கிறேன்.

எனது பின்னூட்டத்தினை படிப்பதற்கு முன்பு அவரது பதிவினை இங்கு சென்று படித்து விட்டு வந்து தொடருங்கள். நன்றி!


புதுமை விரும்பி,

நல்ல ஹூம்... என்ன சொல்றது, நமக்கே 'தெரிந்த' அல்லது 'எட்டிய' ஒரு பரிமாணப் (Dimension) புரிதலை இங்கு கொணர்ந்தமைக்கு, நன்றி!

//என்னை இது ஓசோவின் ஆரோக்கியமான மன நிலையைச் சந்தேகப்படவைத்தது. //

சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். பரமஹம்சருக்கும், ஒஷோவிற்கும் schizophrenia என்று அழைக்க முற்படுபவர் எந்த அளவுகோலின் படி, அதனை நிறுபிக்க அல்லது புரிந்து கொள்ள எத்தனிக்கிறார் என்று முதலில் பார்க்கலாம்.

யார் யாரை மன நலம் குன்றியவர் என்று நிர்ணயிப்பது? உதாரணத்திற்கு ஒரு 100 பேர் இருக்கும் இடத்தில் 99 பேர் தினமும் காலையில் எழுந்து, என்ன மத்த 99 பேர் செய்கிறார்களோ அதனை தினமும் செய்து வீட்டிற்கு வந்து, கதவை சாத்தியற்கு பிறகு என்ன வேண்டுமானலும் அடுத்தவர்களின் பார்வைக்கு அப்பால் செய்யலாம், ஆனால் அடுத்த நாள் அந்த அரிதிப் பெருபாண்மை 99 பேர்களுடன், இணக்முற்றுப் போனால், மன ஆரோக்கியம் உள்ளவன் உலகப் பார்வையில், இல்லையா (என்று நினைத்துக் கொள்கிறோம்) ?

சரி இதனையே இப்படிப் பாருங்கள். அந்த 99 பேரின் மன வளர்ச்சி மற்றுமொரு பரிமாணத்திற்கு (Dimension or Plane of thinking) செல்ல முடியாமல் தேக்க முற்று, மன நலம் குன்றிய நிலையில் ;-) தன்னை யாரும் பைத்தியம் என்று கூப்பிட்டு விடக் கூடாதே என்று சுய சிந்தனைக்கு அணைபோட்டு மூளை மழுங்கி "மன அழுத்தத்தில்" வாழ நேர்ந்து போனால். இப்பொழுது புரிகிறதா என்ன நடக்கிறதுதென்று? அதுதான் நானும் நீங்களும் அந்த 99 பேரில் ஒருவராக இருந்து கொண்டு அந்த 1 நபருக்கு பெயர் கொடுக்க எத்தனிக்கின்றோம். மன அழுத்தத்தில் மூழ்கிப் போய்.

இங்கு யார் destructive ideaவான சிந்தனைகளை அதிகமாக வெளிக்கொணர்கிறோம், இந்த இரு பாலரில்?

நாம் தானே? இந்த அழிவு சிந்தனை மன நலம் பாதிக்கப் பட்டவர்களுக்குரிய அறிகுறி அல்லவா? இப்பொழுது அவ்வாறு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைத்தானே வருத்திக்கொள்ளலாம் (Self-wounding, hurting others physically etc.,), தற்கொலை செய்து கொள்ளலாம், அல்லது வெளிப்புறத்தில் அதன் தாக்கத்தை வேறு சில வழிகளில் கொணரமுடியும் அல்லவா? இப்பொழுது நம்மிடையே நடக்கும் அணைத்து இயற்கை மற்றும் போர்கள் சார்ந்த அழிவுகளும் இம் மன நிலை குன்றியவர்களால் கொணரப்பட்டதே... அதாவது இந்த 99 பேர்களால்.

இருப்பினும் அது போன்ற மற்றொரு பரிமாணத்திற்கு பயணித்தவர்களால் அல்லவே. எனவே, நாம்தான் முதலில் மன நல மருத்துவரை அணுக வேண்டும் (அப்படின்னு ஒருத்தர் இருக்கிறாரா?), அப்படியெனில் யார் அந்த மன நல மருத்துவராக இருக்க முடியும்? மீண்டும் அந்த பரமஹம்சரும், ஒஷொவையும் தவிற வேறு யார்... அன்பையும் உலக அமைதியையும் போதிக்கும் "மனித பரிணமிகள்."

Therefore, I consider these evolved human beings are our next evolutionary proto-types. We are far behind them to understand, why the way they are. That is the truth!

பி.கு: இந்த பின்னூட்டத்தை தனிப்பதிவாக என்னுடைய பக்கத்தில் உங்களுடைய சுட்டியின் இணைப்புடன் இடலமென நினைத்துள்ளேன். நன்றி!!

Friday, August 04, 2006

ஏன் கோயம்புத்தூர் மாவட்டம் வெற்றியடைந்தது...?

இது போன்ற ஒரு கட்டுரையை என்னை எழுத தூண்டிய விசயம் நண்பர் *செல்வம்* கோக் ஃபாக்டரிகளை தனது சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள் நாங்கள் எப்பொழுதும் போல புத்திசாலிகளாக பிழைத்துப் போகிறோம் என்று கிண்டல் அடிக்கும் தொனியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

அதனை படித்ததும் எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் துளைத்தெடுத்தன. பிறகு அதுவே ஒரு நேரத்தில் இந்தப் பதிவினை இடுமளவிற்கு என்னை கொணர்ந்தது.

ஏன் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அவ்ளவாக தொழில் புரட்சி வெற்றியடையவில்லை என்பது, வெறுமனே மக்களின் அணுகுமுறையும், இயற்கை எல்லா நல்ல மூளை உள்ள மக்களையும் கொங்கு நாட்டில் இருக்குமாறும், ஏனையோரை மற்ற மாவட்டங்களில் தூக்கி அடித்ததாலும் இது நிகழ்ந்து விட்டது போல எனக்கு அந்தக் கட்டுரை ஒரு பரிமாணத்தை வழங்கியது.

சற்றே நான் அதனை உள் வாங்கிகொண்டு சிந்திக்கும் பொழுது, உண்மை அதுவல்லவே என்பது விளங்கியது. கோவைக்கு இயற்கையாகவே பல ப்ளஸ்கள் அமைந்திருக்கின்றன. இயற்கை, அம் மாவட்டத்தை தனது மடியில் கிடத்தி தாலாட்டும் அன்னையினை போல ஊட்டி வளர்க்கத் தக்கவாக அமைந்த மழைக்காடுகள், அதனையொட்டி கோவை மாநிலத்தில் கிடைக்கும் மழையளவு, வெப்ப நிலை மற்றும் ஏனைய பிறவற்றை கொடுத்து சீராட்டி வைத்திருக்கிறது.

இது போன்ற ஒரு இயற்கைச் சூழல் தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் ஒருமித்து அமைந்தாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே திருநெல்வேலியை ஒட்டி அமைந்திருந்தாலும், புவியல் அமைப்பில் கோவைக்கு மேலும் கிடைத்திருப்பது பல நன்மைகளே... மற்ற பெரும் நகரங்களுக்கான சமீபம், போக்குவரத்து வசதி etc.,

மனித சக்தி மூலமாக உற்பத்தி திறன் பெருக வேண்டுமாயின் அந்த இடத்தின் சீதோஷ்ண நிலையிம் பெருமளவிற்கு உதவ வேண்டும். அப்பொழுதுதான், உடல் சோர்வு அடையும் பாங்கு அங்கு சற்றே ஒத்தி வைக்கப்படுவதால் உற்பத்தி திறனும், வேலை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

அது கோவைக்கு இயற்கையாகவே அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தானே? இதில் எங்கிருந்து வருகிறது, எவர் புத்திசாலி மக்கள் எவர் இழிச்சவாயர்களென்று? பாலைவனத்தில் வசிப்பவன் இழிச்சவாயன், மலையும் மழையும் சார்ந்த இடங்களில் வசிப்பவர்கள் புத்திசாலிகளா?

சரி அப்படியே பார்த்தாலும் அவ் புத்திசாலி பூமியும் இயற்கை சார்ந்து தானே தொழில் நடத்தி வருகிறது?

சரி ஏன் கோயம்புத்தூர் எந்த கோக் மாதிரி தண்ணீர் அருந்தும் கம்பெனிகளையும் தனது மாவட்டத்தில் இணைத்துக்கொள்ள வில்லை? கண்டிப்பாக மற்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்னால் தொழில் புரட்சியில் முன்னேற்றத்தில் உள்ள மாவட்டத்தை அணுகியே இருப்பார்கள், இல்லையா?

எவ்விடத்தில் சொன்று எது போன்ற தொழிலமைத்தாலும் அங்கு நிகழும் இயற்கை சார்ந்த குறிப்புகளை கருத்தில் கொள்ளாமலா தொழில் தொடங்குவார்கள்.

அது அப்படி இருப்பின் இயற்கையை மொட்டையடித்து மொட்டையடித்து, சுரண்டிச் சுரண்டி பணம் சேர்க்கும் இவ் அணுகு முறை எத்துனை நாட்களுக்கு நகரும்? சுரண்டுவதற்கு ஒன்றுமற்ற நிலையில் இயற்கை வளங்களை உருகி ஒன்றுமே அற்ற நாள்தானே? அதுவும் வெகு தூரத்தில் இல்லை என்பது நமக்கும் தெரியும் தானே?

Wednesday, August 02, 2006

*அசுரனின்* கோக் பதிவும் தெகாவின் பார்வையும்...

அசுரனின் கோக் பதிவை படித்ததும் என் மனதில் பட்டதை அவருக்கு பின்னூட்டமாக வழங்கியதை இங்கு உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

அவர் தனது பதிவில் கோக் குளிர்பான கம்பெனி எப்படி தாமிரபரணி போன்ற ஜீவ நதிகளைச் சுருங்கச் செய்துகிறது என்பது பற்றியும், இந்தியாவிலும் நிலத்தடிநீர் மிக விரையில் காணாமல் போய் கொண்டிருப்பதைப் பற்றியும் ஏனைய கோக் சார்ந்த விஷம வியாபார உக்திகளையும் படம் பிடித்து தனது பதிவில் இட்டுள்ளார்.

தயவு செய்து எல்லோரும் ஒருமுறை அந்தப் பதிவினை இங்கு சொடுக்கி சென்று படித்துப் பாருங்கள்.

இந்தியாவின் நிலத்தடிநீர் எங்கே? ஏன் இவ்வளவு விரைவில் பாலைவனவாக்கம் நடந்தேறுகிறது? தென்னிந்தியாவிலும் மற்றும் பல இந்திய மாநிலங்களிலும் இதே நிலையே... !

இதோ என்னுடைய பின்னூட்டம் அவருடைய பதிவிற்கு;

அசுரா,

மற்றொரு சிந்தனையூட்டு, அபாயமணி அடிக்கும் கட்டுரை உங்களிடமிருந்து.

எத்துனை பேர் இதனை படிக்கிறார்கள்? சிந்திக்கிறார்கள். நிலத்தடி நீரை மாசுபடுத்தி, அதனை நச்சாக்கி, அந்த நீருக்கு ஒரு நிறத்தையூட்டி மக்களை புத்தியிழக்கச் செய்து, இயற்கையை சுரண்டும் இந்த மறுகாலனியாதிக்கம் மிக விரைவாக உலகத்தை சுருட்டி விடும் போலிருக்கிறது.

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. படித்து சிந்திப்பதற்குத்தான் ஆட்களை காணோம்!

நீங்கள் கொடுத்த சுட்டிகளின்றி, மற்றொரு விசயமும் விஷமாக பரவிக்கொண்டுள்ளது bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபத்தை முன்னெறுத்தியே அன்றி வேறன்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்களின் கை, விதை தானியாங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா?

பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்ற வகை மீன் மரபணு-மாற்று தொழில் உக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை அவ்வகை மீனின் மரபணுவில் சொருகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி, அந்த மலட்டு மீன்களை இயற்கையினுல் திணிப்பதனால் ஒரிஜினல் மீன் வகைகள் அவற்றுடன் போட்டியிட முடியாது காணாமலே இவ்வுலகத்தை விட்டு அகற்றப் படுகிறது... உங்களுக்கு புரிகிறதா இந்த வியாபார யுக்தி?

இந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் அதன் குறிக்கோளாக முன் நிக்கிறது. மற்றபடி இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.

இது ஒரு இருட்டடிப்பு உண்மை. நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!

Related Posts with Thumbnails