Sunday, March 04, 2018

பேரரசன் அசோகர்: பகுதி - 2 (அசோக சக்கரம்)

அசோக சக்கரமிருக்கிறது. இந்திய பாடப் பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் அசோகரின் வரலாறு எங்கே...?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைத்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் மீதங்களிலிருந்து புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல மிக்க சிரமமேற்று அந்த காலத்திய காலனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நமக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து சுத்தமாக அழிக்கப்பட்ட விடயங்களை நம்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் அது போன்ற ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை காணும் போது ஏன் அதற்கு பிறகான ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக எதுவுமே கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட வில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது.
ஆனால் கச்சிதமாக நம்மிடம் கொட்டிக் கிடந்த தரவுகளையும், துணுக்குகளையும் பிற நாட்டவர் போரிட்டு அழித்தொழித்தது போதாதென இங்கு வாழ்ந்த பண்டிதர்களும் நிறையவே துடைத்தழித்திருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய எஞ்சிய கல்வெட்டுகளில் இருந்து அசோக சக்கரம் அந்த கால கட்டத்தில் ஆண்ட அசோகன் தொடங்கி அவன் வாரிசுகள் வரையிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இருப்பினும் பின் வந்த காலங்களில் வேத விற்பன்னர்கள் அடிப்படையான அசோகனின் சக்கரத்தை...
//...சக்கரம் ஒன்றைச் சுழற்றும் நிகழ்வு பழைய வேதகாலத்து புராணங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. வேத இலக்கியங்களில் தலைவன் காலத்தையே படைக்கிறார். அவனிடமிருந்தே அறவழி பிறக்கிறது. மகிழ்ச்சி பிரவாகமெடுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பரிணமிக்கிறது. பிராமண வேதங்களில் இந்தத் தலைவன் தன் கையில் ஒரு சக்கரம் கொண்டுள்ளான். அது அழிவுக் கருவியாக பகைவர்களைக் கொன்று குவிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. இதுவே இந்து மதப்பரிமாணத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணு என்னும் கடவுளாக உருவெடுக்கிறது ...//
என்பதாக திரித்து நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் இந்த வேத விற்பன்னர்கள். சக்கரம் என்னவோ புத்த காலத்தில் அசோக பேரரசால் ஓர் அறம் சார்ந்த அரசின் குறியீடாக பயன்பாட்டிற்கு வந்தது பின்னாலில் விஷ்ணு வின் அழிவுக் கருவியாக திரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் plagiarism என்று கூறுவார்கள் அறிவுசார் திருட்டு என்பதாக தமிழ் படுத்திக் கொள்ளலாம். பார்க்கும் அளவில் தோண்டித் துருவி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை ஒன்றிணைத்து பார்த்தால் நமக்கு இன்றைக்கு மத நூல்களாகவும், பெரிய பெரிய விஷ்ணு, பெருமாள் (அந்த சிலைகள் கூட புத்த சிலைகளாக இருக்க அனேக வாய்ப்புகள் உண்டு போல...) கோவிலாகவும் எழுந்து நிற்கும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்த சமயத்திற்கென எழுதப் பட்டதும், எழுப்பப்பட்டதுமாக தோன்றுகிறது. அதனிலிருந்து அறிவுசார் திருட்டின் மூலமாக உருவியவையே இன்று நாம் கண்ணுரும் சில விடயங்கள்.
இந்த இடத்தில் ஓர் விடயம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. அசோகர் காலத்திய புத்த மதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பின்பு வந்த வேத விற்பன்னர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், பிற தேசங்களுக்கு சென்றடைந்த புத்த மதம் சார்ந்த குறிப்புகள் பெருமளவில் இலங்கையிலும் இருப்பதாக இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இனப் படுகொலையாளன் ராசபக்‌ஷேவிற்கு தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே விடாமல் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.
நான் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்திலாவது அசோகர் மரம் நட்டார் என்று அளவிலும், ஆரிய, திராவிடர் வரலாறு பற்றியும் படித்தாக நினைவு. இந்த முப்பது வருட இடைவெளியில் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எது போன்ற திரித்தல், இடைச் செருகல்கள் அதிலும் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவணித்து கொண்டிருப்பவர்களுக்கே வெளிச்சம்.

2 comments:

Senthilkumaran said...

திருப்பதி பௌத்த கோயிலா என்பது எனக்கு தெரியாதது
ஆனால் சிங்களவர் கலாச்சாரம் எனக்கு தெரியும்
சிங்களவர் புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவையும் , பிள்ளையாரையும் வணங்குவார்கள்
பௌத்த விகாரைகளில் பிரசங்கம் பண்ணும் போது விஷ்ணுவையும் , பிள்ளையாரையும் தனி தனி கடவுள்களாக சொல்லி பாடம் எடுப்பார்கள்
( நான் சென்றிருக்கின்றேன்...)
சிங்கள பகுதியான மாத்தறை யில் பழைய பிரபல விஷ்ணு ஆலயம் உண்டு
விதி விலக்காக கதிர்காம கந்தனையும் வாங்குவார்கள்

Ashraf, NVK said...

கிட்டத்தட்ட எல்லா சிங்கள புத்தர் கோயில்களில் இந்துமதக் கடவுள்களுக்கு ஒரு 25% இடஒதுக்கீட்டைக் காணலாம். அங்கு முருகன், சிவன், விஷ்னு எல்லாம் இருக்கும். முதலில் புத்தரை வணங்கிவிட்டுப் பிறகு இந்துமதக் கடவுள்களை வரம் கேட்டு மன்றாடுவது வழக்கம். This is what Swami Vivekananda calls it 'shop keeping workship'

Related Posts with Thumbnails