இது கடந்த நேர்காணல் பதிவின் தொடர்ச்சி. நிறைவுப்பகுதி!
கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...
தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா, அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது; அப்பாம்மா, துணைவி, பிடித்த நண்ப/பிகள் கூடன்னு. நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும், என்னோட சொந்த கிறுக்கல்களையும் அவங்கள வம்படியா பிடிச்சு உட்கார வைச்சி, அவங்க நான் வாசிக்கிறதை கேக்கும் பொழுது கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பது.
மேலும் பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது. பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.
கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.
தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க. புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.
நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்தி மரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள். இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல. என்னோட அப்பாம்மாவை தவிர்த்து சொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு.
வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது. அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.
கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.
தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).
இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை. ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை. அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்பதேயது! என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது, எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு . அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...
ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு. ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :). இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.
கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?
தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.
கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்...
தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?
கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)
தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.
கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்.
தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.
நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.
அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).
கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?
தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.
மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.
கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?
தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.
ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :
1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்
1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.
2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்
அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.
3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.
கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).
4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை
இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.
5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?
குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.
6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?
நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.
7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?
அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.
8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?
அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??
தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!

14 comments:
இது கூட நல்லாயிருக்கே
முண்டாசு, அப்போ “எது கூட” நல்லா இல்ல ;)
அப்போ அவங்க தரத்துர வரைக்கும் நகர்ரதா இல்ல?... அதுவும் அவங்க துரத்துனதுக்கு அப்புரம் சந்தோஷமா வருவாராம்..
கவிதா புள்ள!! அப்பவே நீ அந்த கேள்வி கேட்டுருக்கனும்...இன்னொரு கேப்பக்கஞ்சிக்கு ரெடி பண்ணு... நான் கேள்வி எழுதி தரேன்...
.தமிழ்நாட்டின் சிறப்புகள்
1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)
26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் சாம்பல்காடு கந்தர்வ கோட்டை.
27.பண்றிகளே இல்லாத ஊர் புதுக்கோட்டை.
28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதானாலே திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.
29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் சேலத்தைச் சேர்ந்தவர்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.
* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.என்னையில் பொறித்து சாப்பிடலாம்.
* கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும்.
*கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.
*கோபி மஞ்சூரியன் சாப்பிட்டால் கையை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும், இல்லாவிட்டால் கையில் படிந்திருக்கும் சிவப்புக் கலர் உங்கள் சட்டைகளை பாழாக்கும்
* மொச்சை, கொண்டைக்கடலை, முருங்கை, முள்ளங்கி இவைகளால் வாயுத் தொல்லை உண்டாகும்.
* மூலநோய் உள்ளவர்கள் மிளகாயை அறவே நீக்குவது நல்லது.
*உடும்புக் கறி தின்றுவிட்டு உவ்வே சொல்லக் கூடாது.
* கேப்பைக்கஞ்சி குடித்தால் நிறைய மோர் குடிக்கனும் இல்லாவிட்டால் மாதக் கணக்கில் மலச் சிக்கல் தான்.
* இரவு கோச்சைக் கறி சாப்பிட்ட உடன் குப்புற படுக்கக் கூடாது.
*ஒரு கோப்பை வினிகருடன் மூன்று கோப்பை தண்ணீரை கலந்து ஜன்னல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
*கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
*வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க, உறிப்பதற்கு முன் 5 நிமிடங்களுக்கு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். கண்ணீர் மிச்சமாகும்.
*கோழிக்கறி தின்றுவிட்டு ஆற்றில் குளித்தால் ஆப்பு ரெடி என்று அர்த்தம்.
தேனெடுக்க ஆசையாய் என்னை
தேடிவரும் சிறுப் பறவையே !
நான் வணங்கும் மன்னவன்
நாளை வேண்டும் வேளையில்
தான் குடிக்க வேண்டியதை
தாகம் தீர்த்து சென்றவரை
ஏன் தடுக்க முடியவில்லையென
என்மீது கோபபட்டால் என்செய்வேன் ?
என்னை விட்டு விலகிவிடு
விரைந்து தூர பறந்துவிடு
பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால்
கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு
Kavithai Nallarukka
அவனா இப்படி மாறினான்
அதையும் எப்படி நம்பினான்
குணமே போற்றும் நல்லவன்-குறுகிக்
குறைத்தப் பண்பே பொறாமையா
ஆண்டுகள் பலநாள் பழகியதை
அன்பாய் இருந்து மகிழ்ந்ததை
தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம்
தவறாய் நினைப்பது இதுவன்றோ
கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும்
கொள்கை மாறிப் போனவரும்
தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே
தானே வந்தது பொறாமையே
அண்ணன் தம்பி உறவுகளும்
அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும்
எண்ணம் அதையே மாற்றியே-உறவில்
ஏற்றத் தாழ்வை வளர்திடுமே
தாத்தாப் பாட்டி உறவுகளை
தள்ளி வைக்கும் நிலைமைக்கும்
உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை
எள்ளி நகைக்கும் நிலையாகும்
பணியில் சிறந்தோர் பரிதவிக்க
பாடாய் படுத்தும் இச்செயலால்
தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு
தூய்மை மனதையும் நசித்திடுவர்
எளிதில் யாரையும் வசப்படுத்தும்
எல்லா வயதினர் துணையாகும்
பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி
பொறாமை என்பதே வேண்டாமே
நட்பில் நானும் மிதந்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசிய பின்பு தவித்தேன்
சொற்களைக் கண்டு மலைத்தேன்
சொல்ல முடியாது திகைத்தேன்
இன்னும் சொல்ல நினைத்தேன்
இன்முகம் தேடி அலைந்தேன்
அகத்துள் நினைவில் வைத்தே(ன்)
அன்றே காண விழைந்தேன்
வரவைக் கண்டு மகிழ்ந்தேன்
வாய்ப்புத் தேடித் துடித்தேன்
சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்ல முறுவல் முகிழ்த்தேன்
மீண்டும் மனத்தில் நினைத்தேன்
வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
நேரில் காண இருந்தேன்
நேரம் இன்றித் தவித்தேன்
தொலைவில் இருப்பை அறிந்தேன்
தூய நட்பால் நெகிழ்ந்தேன்
தமிழைத் தாயாய் துதித்தேன்
தாகம் தணியப் படித்தேன்
முள்ளு முள்ளாய் இருக்குமாம்
முக்கனியுள் பெருத்து வளருமாம்
வேலிபோட்ட காவல் தாண்டி
வேண்டியது இனிப்பாய் மணக்குமாம்
வண்ணம் ஒன்றே மஞ்சளாம்
வாசனை எப்போதும் கெஞ்சலாம்
வண்ணப் போர்வைப் போர்த்தியே
வாழும் நாளோ சேர்த்தியாம்
எல்லா நாளும் கிடைக்குமாம்
எல்லோர் மனதும் விரும்புமாம்
இல்லா மக்கள் மனதுமே
இதனை சுவைக்க விரும்புமாம்
தின்னத் தின்ன திகட்டுமாம்
தேனாய் சுவையாய் இனிக்குமாம்
திரும்பத் திரும்பக் கேட்குமாம்
தேனில் ஊறியே சாப்பிட்டால்
தேனமுதாய் மனதும் மகிழுமாம்
எல்லை யில்லா மகிழ்ச்சியே
எல்லோர் மனதில் இருக்குமாம்
பிள்ளைமுதல் கிழவர்வரை
கொள்ளைப் பிரியம் விரும்புமாம்
---பெயரென்ன???
ஒத்தைப் பிள்ளை வேண்டாமே
ஒத்தைப் பிள்ளை போதுமின்னு
ஒய்யாரம் செய்யும் நண்பா
சத்தியமா தப்பு தான்னு
இப்போதே சொல்லி விட்டேன்
சொத்து பத்து இல்லாட்டி
சொந்தம் மட்டும் இருந்தாலே
பத்துத் துயர் போக்கிடவே
பக்கத் துணை இருப்பாரே
மிச்சம்மீதி அன்பை எங்கே
மீண்டும் தேடித் போவதெங்கே
சொத்தப் புள்ளை ஒத்தையாக
சோகமாக இருக்கு நண்பா
உத்தரவும் போட வில்லை
உருப்படியா சொல்ல வில்லை
ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி
ஓய்வே இல்லாமப் போச்சி
சத்தியமா சொல்லி விட்டேன்
ஒத்தப் புள்ள வேண்டாங்க
மிச்ச உயிரும் போகுமுன்னே
சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க
சார் கவிதைகள் அத்தனையும் சூப்பர் சார்.... ஏன் பதிவா போடாமல் பின்னூவில் வருகிறதுன்னு புரியலே!
கலர்க்கலராய் ஆடைப் பார்த்து
மேனியெல்லாம் நகையைப் பூட்டி
மேல்சாதி என்று சொல்லுவான்
மீதுமுள்ள உடல் இடங்களுக்கு
மேலும் சாந்தும் பூசுவான்
கீழ்த்தட்டில் வாழும் மக்களையே
கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான்
கீழிருந்து மேல்வரைப் உற்றுக்
கெட்ட வார்த்தைக் கூறுவான்
கலர்க்கலராய் ஆடைப் பார்த்து
கண் சிவந்து கொள்ளுவான்
கண்டபடி மனதில் எண்ணி
கஷ்டகாலமென்று சொல்லுவான்
நாட்டுக்கு உழைக்கச் சொல்லி
நடித்தும் நாடக மாடுவான்
நாறிப் போன மானத்துக்கு
நன்கொடைகள் பல செய்யுவான்
கோடிகோடிப் பணத்தை சேர்த்து
காவல் காத்து நில்லுவான்
கஷ்டப்படும் ஏழைக்கு காசை
வட்டிபோட்டு வாங்குவான்
கண்டபடி மாத்திரையை
மூன்று வேலை தின்னுவான்
கடைசியிலும் உடலை வருத்தி
கஷ்டமாக உயிரை நீக்குவான்
தெகா,
பதிவு எழுத விட்டாலும் கூட பின்னூவில் கவிதை எழுதி வந்தீர்கள். இப்போது அதை நிறுத்திட்டீங்களா... ஏன் சார் ?
அய்யா கடைசி அனானி, இங்க ஒட்டுர கவிதையெல்லாம் என்னுடையது அல்ல. வேறு ஒரு தளத்திலிருந்து இதனை எழுதியவரோ அல்லது இன்னமும் என்னை தரையில் வைத்துக் கொள்ள எண்ணி ஏதோ ஒரு நலம் விரும்பி இங்கு கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.
அதனால் உய்த்து நலம் பெறுவோம்! :)
Post a Comment