அண்மைய காலங்களில் பார்த்து ரசித்த சுப்பிரமணியபுரம், பசங்க, மைனா, அங்காடித் தெரு, வாகை சூடவா போன்ற படங்களுக்குப் பிறகே தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.
அதற்கு முற்றும் முழுக் காரணம் எந்த ஒரு படைப்பும் மக்களின் தன் மண் மணம் மாறாமல் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழுந்த பதிந்து கொடுக்கும் பொழுது அது பல நிலைகளில் மக்களின் மனதில் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கிறது. தினப்படி வாழ்வில் எத்தனையோ விசயங்கள் தன்னியல்பிலேயே பல அற்புதங்களை உள்ளடக்கி எழுவதும் வீழ்வதுமாக நகர்ந்து வருகிறது. நாம் அதனை கவனிக்கத் தவறி எந்த ஒரு முயற்சியுமற்ற நிலையிலேயே மீண்டும் மீண்டும் மரத்துப் போன ஒரு மனநிலையில் செக்குமாட்டுத் தனத்துடன் அந்த நிகழ்வின் முழு வீச்சத்தினையும் காணத் தவறி வாழ்ந்தும் முடித்திருப்போம்.
உதாரணமாக நாம் தினசரி வாழ்க்கையில் கண்ணுற்று, புழங்கி வரும் காட்சிகளான மாட்டு வண்டியில் - ஆடுகளும், கோழிகளும் மனிதர்களுமாக பகிர்ந்து கொண்டு சந்தைக்கு சென்று வரும் ஒரு வண்டியை அனிச்சையாக பார்த்தவாரே கடந்து போயிருப்போம். ஆனால், அந்த பிராந்தியத்தில் வாழ நேர்ந்திருக்காத ஒரு அயலருக்கு அந்தக் காட்சி முதன் முதலாக காணக் கிடைக்கும் பொழுது மலைத்துப் போய் நின்று, பல கோணங்களில் அதே காட்சியினை அழகு, அழகான லாங்/குலோசப் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்பார். அது போன்ற புகைப்படங்களும் உலக காட்சியகங்களில் காட்சிக்கு பரப்பப் பெற்று பல பரிசுகளையும் அள்ளி இருக்கும்.
மாறாக நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கும் ஒருவருக்கு, தன் ஊரில் நிற்கும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்தை போன்றே தான் வந்திருக்கிற இடத்திலும் அதே போன்ற வானுயர்ந்த கட்டிடத்தை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து போவதிலோ, அல்லது அங்கயே தேக்கமுற்று போயி நின்று விடவோ விரும்ப மாட்டார். அவர் பார்க்க நினைக்கும், அவரை கவரும் விசயங்களே வேறாக இருக்கும்.
அப்படியே அவர் பார்க்கும் அத்தனை விடயங்களும் புதிய கதைகளையும், கோணங்களையும் வழங்கி நிற்கும். அது போலவே, நாம் இங்கிருந்து அங்கு போனால் நமக்கு நிகழ்வதாக இருக்கும். அது நமக்குள் மறைந்திருக்கும் ரசனைத் தன்மையையும், படைப்புத் திறனையும் பொறுத்து பார்க்கும் விடயங்கள் ஆர்வத்தை ஊட்டுவதாக அமையப் பெறலாம்.
இயல்பிலேயே, படைப்பாளிகள் நமக்கும் எட்டாத பல நுண்ணிய இழையில் இழைந்தோடும் அந்த அற்புதங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொணர்ந்து அதனை பெரிய திரையில் ஒரு காவியச் சித்திரமாக வரைந்து காண்பிக்கும் பொழுதே அதற்கு பின்னான அதன் அழகியலை, கோரத்தை, சமூக அநீதிகளை, அரசியலை புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி வைக்கிறார்கள்.
இது போன்ற காரியங்களை அதனூடாகவே வாழ்ந்து தோய்ந்து போனவர்கள் சொல்ல முற்படும் பொழுது அதனில் ஒரு ஜீவனூட்டம் இருப்பதாகி நம்மை யாவரையும் கட்டிப் போட்டு விடும். உதாரணமாக, அங்காடித் தெருவில் வரும் ஒவ்வொரு பசங்களும் நம் பக்கத்திலேயே வாழ்ந்து, நம்முடனே பயணித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னான வலிச் சமுத்திரம் நம் பார்வையிலிருந்து பல அக/புற காரணிகளால் மரத்து போகச் செய்யப்பட்டிருக்கிறது. அதனை மிக நுட்பமாக, உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஒருவரால் மீண்டும் அதே பசங்களின் வாழ்வு அடிக் கோடிட்டு காட்டப் பெறும் பொழுது அவர்களுக்கான வசந்த காலமும், பூட்டப்பட்டிருக்கிற கதவுகளும் திறக்கப் பெறுவதாக அமைகிறது.
அந்த திறப்பினை நிகழ்த்த கமல்ஹாசன்களையும், அரவிந்த சாமிகளையும், அஜித்களையும் குணாதிசியங்களாக கொண்டு செய்ய முடியுமா? தன் மண்ணில் ஒரே மாதிரியான வாழ்வுச் சூழலையும், கிடைக்கும் புறச் சூழலையும் கொண்டு ஒருவன் வயக்காட்டிலும், புழுதிச் சாலையிலும் வறுபட்டு கன்னம் வற்றி, உள்ளிழுக்கப் பெற்று, தோல் கறுத்து, முடி சுருண்டு இருந்த நிலையில் வறுமையின் கோரப் பிடியிலிருக்கும் அந்தக் கூட்டத்தினை முன் நிறுத்தும் உடல் மொழியையும், இயல்பிலேயே அப்படியாக உருவ ஒற்றுமையும் கொண்டவரே நிகழ்வின் விபரீதத்தை/அபத்தத்தை நம்முள் இன்னும் ஆழமாக இறக்க முடியும். மாறாக, வயதிற்கு சிறிதும் பொருத்தமற்ற அஜித்திற்கோ, கமலுக்கோ உடலை வருத்தி, கன்னம் டொக் விழ ஆறு மாதம் சாப்பிடாமல் போட்டு, நிறத்திற்கு கருமையேற்றி தன் நடிப்பிற்கு பொலிவூட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
அந்த நிலத்திலிருந்தே ஒரு கதாநாயகனை நல்ல ஒரு படைப்பாளி வெளிக் கொணர முடியும். இப்பொழுது, எந்த திசையில் இந்த கட்டுரை நகர்கிறது என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமே! கதாநாயகியாகவே நடிப்பிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு பணி ஓய்வு பெற்ற திருமதி. சுஹாசினி மணிரத்னம் இரண்டு முறை பொது இடங்களில் ஓர் அபத்தமான வேண்டுகோளை படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்.
ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும், இப்பொழுது உலக திரைப்பட விழாவிலும் இதே கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். கோரிக்கை இதுதான்: எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!. இவரின் கோரிக்கையை நாம் வேறு யாரோ ஒரு குடும்பத் தலைவியாக இருந்து சொல்லியிருந்தால் எளிதாக அவரின் அறியாமையை கவனத்தில் நிறுத்தி கடந்து வந்து விடலாம். ஆனால், இவர் உலகச் சினிமாக்களையும், நமது படங்களை பல உலக சினிமா விழக்காளுக்கு அறிமுகப் படுத்தும் பணியிலிருப்பதாக தன்னை முன் நிறுத்தி கொள்பவர்.
இவரிடமிருந்து இப்படி ஓர் அபத்தமான, மேட்டிமைத் தன மேலோட்ட எண்ணப்பாடு கொண்ட இந்த கருத்தாக்கத்தை எப்படியாக எடுத்துக் கொள்வது. இந்த எண்ணம் எத்தனை பெரிய இழப்பை நமது படைப்பாளிகளுக்கும், போராடி வர விருக்கிற மண்ணின் மைந்தர்களான இளம் நடிக, நடிகைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறியாமலேயே இன்னமும் சிவப்புத் தோலு கதாநாயர்களை சிவப்பூத் தோலு கதாநாயகிகளுக்கு அறிமுகப் படுத்தச் சொல்லுகிறார்.
எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் இது போன்ற ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் எது போன்ற பட ரசனையை கொண்டவராக இருப்பார்? அதுவும் நம் ஊரிலிருந்து வெளி வரும் நல்ல படங்களை அறிமுகப் படுத்த எண்ணும் பொழுது, இது போன்ற சிந்தனை சில நல்ல படங்களையும் வடிகட்டி விட பாதகமாக அமைந்து விடாதா?
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதே இவரின் அபத்த நகைச்சுவையுணர்வு தாங்கும் படியாக இல்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தார் ”இப்பொழுது வரும் கதாநாயகர்கள் எண்ணை வழிந்து கொண்டும், திரையில் எங்கு நிற்கிறார்கள் என்று தடவி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,” சொல்லி நகைத்தார். அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்? இன்னமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு அங்காடித் தெரு கதாநாயகனை ரசிக்க, தரிசிக்க வைக்க. நகைமுரணாக இல்லை! உலகப் படங்களில் இவர் எதனை சிறப்பாக இருப்பதாக எண்ணி, பார்த்து சிலாகிக்கிறார்?
இந்த சிந்தனை எப்படியாக இருக்கிறது என்றால் ராகுல் காந்தி அவர் அப்பனைப் போலவே நல்ல அழகாக சிரிக்கிறார், சிவப்புத் தோலை போர்த்தியிருக்கிறார். ஆதலால், இந்தியாவின் சார்பில் உலக மனமகிழ் மன்றமாகிய ஐ.நா போன்ற இடங்களில் அமர வைத்தால் இந்தியாவிற்கு கெளரதை என்ற கிரமாத்து தவக்களை சிந்தனையாக இருக்கிறது. :))
சுஹாசினி பேசாமல் குழந்தை வளர்ப்பிலும், வாசிப்பிலும் தன் சொச்ச மிச்ச காலத்தை கடத்தலாம். எனக்கு கவலையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் தனது இருக்கையை முக்கியமான இடங்களிலெல்லாம் எப்படியோ கிடைப்பதாக ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு இது போன்ற அபத்தமான விஷமத்தனமான சிந்தனைகளை அதுவும் எந்தத் துறைக்காக தான் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு தனது உழைப்பை போடுகிறாரோ அதுவே நலிந்து எப்பொழுதும் போல அர்விந்த சாமிகளுக்குள்ளும், கமலஹாசனுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க வழி கோலுகிறார்கள். எப்படி இவர்களாகவே இதனை புரிந்து கொண்டு தகுந்தவர்களை அங்கே அமர விட விலகி நின்று வழி விடுவார்கள்?
இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

60 comments:
Good Article.
ஹாலிவுட் படத்துலேர்ந்து கதைய சுட்டு படம் பண்ணறவங்க அதே மாதிரி வெள்ளையா இருக்கறவங்கள நடிக்கவைக்கறதுதானே பொரொபசனல் எதிக்ஸு??
ஸோ
வெள்ளையா இருக்கறவுங்க பொய் சொல்லமாட்டாங்க! :))
ஷங்கர் :)))
//ஸோ
வெள்ளையா இருக்கறவுங்க பொய் சொல்லமாட்டாங்க! :)//
ஹாஹாஹா.. திரும்பவும் கலக்கல் கமெண்ட் ..அதே ! அதே!
//வெள்ளையா இருக்கறவுங்க பொய் சொல்லமாட்டாங்க! :)//
அண்டப்புழுகு புழுகுவாங்க :)
Actually she Criticized the cine fields about introducing actresses who is fair and not introducing gals who are wheatish.
What abt the actresses you mentioned in your list? Are they represents the land they belongs?
English Anony,
I have watched her Vijay TV speech too... there she was very clear about how dirty, blakish the modern day heroes are upon saying that she had this disgusting look expression...
//What abt the actresses you mentioned in your list? Are they represents the land they belongs?//
well, the change is slowly happening and it is imperative to turn the dream(tinsel) factory into a realism speaking industry...
The point is if she is colour blind, can not see spade is as spade. She is not fit to be in that chair better give away the place to some unbiased person who can make better movies off to screen in the world stage. dot
arumai nanbare
http://www.ambuli3d.blogspot.com/
http://ambuli3d.blogspot.com/2012/01/ambuli-new-year-celebrations.html
தெகா,
அந்த அம்மாவும் எண்ணைச்சட்டில தலைய விட்டாப்போல வழிஞ்சுக்கிட்டு,கருப்பா இருந்துக்கிட்டே இப்படிப்பேசுவது தான் செம காமெடி! சினிமா குடும்ப பின்னணி இல்லைனா இத எல்லாம் ரிஜெக்டட் கேஸ் தான்.
பார்ப்பண கண்ணோட்டத்தில் எல்லாம் வெள்ளையாக இருக்கணும்னு எதிர்ப்பார்க்குது. அதோட இந்திரா படத்திலும் அந்த கருத்து பிரதிப்பலிச்சு இருக்கும்.
கொஞ்ச காலம் சினிமாவில யார்க்கிட்டேயாவது குப்பைக்கொட்டிட்டு சினிமானா அது உணர்வுகளையும், வாழ்கையின் வலியையும் பிரதிப்பலிப்பது என்று புரியாமல் வைட், டாப், குளோசப் ,பி,ஜிஎம், ரிரிக்கார்டிங் ,எடிட்டிங், இப்படியான சிலது என நினைத்துக்கொண்டு படம் எடுப்பவர்கள் தான் அதிகம் இங்கே (அதுவும் காபி அடிச்சு), எனவே,மண்னு,மணம், குணம் எல்லாம் எந்த கழுதைக்கு தெரியப்போகுது :-))
ஐயோ!
இந்த சினிமாப் பாட்டியின் உளறல்களை கணக்கிலா எடுக்கிறீர்கள்.???
முதல் இந்த ரிட்டயட் சினிமாப் பாட்டிமாரை தொலைக்காட்சி நிகழ்சிகள் நடத்துபவர்களாக ஆக்குபவர்களை
நாடுகடத்த வேண்டும்.
ஓய்!தெகா!ஓடிட்டீங்களோன்னு நினச்சேன்:)பின்னூட்டங்கள் பார்த்தப்போ சூடா இப்ப போட்டதுன்னு உறுதியாயிடுச்சு.
இப்போதைக்கு விமர்சனம்,யே படம் நல்லாயிருக்குதப்பா ன்னு யாராவசு சிபாரிசு வார்த்தை சொன்னால் மட்டுமே தேர்ந்தெடுத்து பார்க்கறதால தமிழ்ப்படங்கள் புதிய முயற்சிகளை உருவாக்குவது மாதிரிதான் தெரிகிறது.ஆனால் பொருளாதார வியாபார நோக்கில் காதலைக் கடக்க மாட்டேன்கிறார்களே என்ற ஆதங்கமும் கூடவே வருகிறது.
சுகாசியக்கா பற்றி ஏற்கனவே என்னமோ புலம்பி விட்டேன்.இப்போதைக்கு அவருக்கான கருத்துரிமை என்பதோடு எஸ்கேப்.
அஜித்,கமல்ன்னு வேற யாரோ மூணாவதாக யாரையோ குறிப்பிட்டிங்களே யாரது?அரவிந்தா?
அரவிந்தையும்,அஜித்தையும் கூட ஒண்ணாப் போட்டு தாளிச்சிடலாம்.ஆனால் கமல் தமிழ்த்திரையுலகில் சில எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.எனவே Too bad comparision.
வவ்வால்!என்னமோ கூடச்சேர்ந்து டூயட்டு பாடின மாதிரியில்ல எண்ணைச்சட்டியில தலைய விட்ட மாதிரின்னு உடுறீங்களே(உங்களையெல்லாம் தேடறது வேற பொழப்பா போச்சு:)
She would have spoken on other content of her subject.I think I have to verify her words.
வாங்க வவ்ஸ்,
எனக்கு அடிப்படையா என்ன புரியலன்னா... இது மாதிரியான ஒரு நிலைப்பாட்டை வைச்சிகிட்டு எப்படி தான் எடுக்கும் standகளில் skewedவாக இல்லாமல் பாரபட்சமின்றி படங்களை சிபாரிசு செய்ய முடியும் என்பதே.
இத்தனை பெரிய இடத்தில் அமர்ந்து கொண்டு இதனைக் கூட உணர முடியவில்லை அல்லது எடுத்து காட்டுவதற்கு யாருக்கும் துணிச்சல் வரவில்லையென்றால், அப்படியாக அறிந்து கொள்ளும் நாளில் நேர்மையாக இருந்தால் ஒத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது தானே நியாயம். அது ஏன் நடக்க மாட்டீங்கிது? வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
//...தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.//
நிச்சயமாக .. பதிவெழுத ஆரம்பித்த காலத்திலிருந்த நிலைமை இப்போதில்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி.
ராஜ நட,
//ஓடிட்டீங்களோன்னு நினச்சேன்:)பின்னூட்டங்கள் பார்த்தப்போ சூடா இப்ப போட்டதுன்னு உறுதியாயிடுச்சு.//
எங்க ஓடிடப் போறேன் நட. இங்கதான் உறங்கிட்டு இருப்பேன். ரொம்ப தேவையானதிற்கு மட்டுமே கண்ணை திறந்து பார்த்துகிட்டு. நம்ம படைப்பு சார்ந்து எதுவும் யோசிக்க விடமாட்டீங்கிறாய்ங்களே இந்த மாதிரி பதிலுரைப்பதனைத் தாண்டி :)) என்ன செய்யே...
//யாராவசு சிபாரிசு வார்த்தை சொன்னால் மட்டுமே தேர்ந்தெடுத்து பார்க்கறதால தமிழ்ப்படங்கள் புதிய முயற்சிகளை உருவாக்குவது மாதிரிதான் தெரிகிறது//
அதேதான் இங்கயும் நடக்குது. ஆனா, கண்டிப்பா தொலைகாட்சியில இது மாதிரி பொரபலங்கள் சொல்லுவதனைக் கேட்டு படம் பார்க்க உட்காருவதில்லை. தமிழ்ப்படங்கள் புதிய முயற்சிகளை எட்ட ஆரம்பித்து சுகாதாரமான பாதையில் பயணிக்கவே ஆரம்பிச்சிருங்கிறதில எந்த சந்தேகமுமில்ல. என்ன ஒன்னு இந்த ஷங்கர், ரஜினி வகையாறா செத்த ஒதுங்கி ஓரங்கட்டிக்கிச்சின்னா இன்னும் பல மைல்களை எட்டும், எட்டுமின்னு உங்க தலை மேல கையை வைச்சு சொல்லுதேன் ஓய். ;)
//இப்போதைக்கு அவருக்கான கருத்துரிமை என்பதோடு எஸ்கேப்.//
ஆமாமா, பேசட்டும் பேசட்டும். பேசினாத்தானே மனசிக்குள்ளர என்ன நினைச்சிட்டு இருக்கோம்னு தெரிய வரும். சட்டி - அகப்பை - தியரிதானே :) ...சோ, நல்லா சத்தமா பேசட்டும்.
தெகா,
இந்த அக்கா அழகு என்றால் "வெள்ளை" என்று நினைத்துக்கொண்டுள்ளார்.
இந்த சுட்டிப்படி...
http://tamil.oneindia.in/movies/news/2012/01/suhasini-wants-colour-heroes-aid0091.html
//நான் ஒரு நடிகையாகவோ, சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதாரண பெண் ரசிகை என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன்...//
அவர் சாதரண பெண் இரசிகையாக தன்னை வரித்துக்கொள்கிறார். ரசினி, விஜய், முரளி போன்றவர்களும் சாதரணப் பெண்களின் இரசனை பட்டியலில் உண்டு. இந்த அக்காவிற்கு அது எல்லாம் தெரியாது.
//"ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.//
ஹேண்ட்சம் என்றால் என்ன என்று இவரது பார்வையில் என்ன இலக்கணமோ யாருக்குத் தெரியும்?
ஆனால் அக்காள் கொடுத்துள்ள மூன்று உதாரணத்தில் இருந்து உடனே தெரிவது "வெள்ளைத்தோல்" மட்டுமே.
//நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே, ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்" //
இவருக்கு அழகு என்றால் என்னவென்று தெரியவில்லை. அதையும் "வெள்ளைத்தோல்" ஆக்குகிறார்.
****
இதுபோன்றவர்களிடம் , மண் சார்ந்த அடையாளம் ஏதும் இல்லை. இவர்களின் கனவில்கூட அது வராது. புறக்கணிப்படவேண்டியவர்கள். ஆனால் எப்படியோ சினிமாவை ஆக்ரமித்துள்ள குடும்பம் இது.
ஏழை சொல் அம்பலம் ஏறாது. கழுத கிடக்குது விடுங்கள்.
ராஜ்,
//வவ்வால்!என்னமோ கூடச்சேர்ந்து டூயட்டு பாடின மாதிரியில்ல எண்ணைச்சட்டியில தலைய விட்ட மாதிரின்னு உடுறீங்களே(உங்களையெல்லாம் தேடறது வேற பொழப்பா போச்சு:)//
அசின் ,அனுஷ்கா கூட டூயட் பாட வேண்டிய என்னை ஓரு பாட்டிக்க்கூட சேர்த்து கற்பனை செய்ய எப்படி ஓய் மனம் வந்தது , வொய் திஸ் கொல.. கொல வெறி!
நான் எங்கேப்போனேன், வேதாளம் பிடிக்கப்போன விக்ரமாதித்தனா விடாம இங்கே தம் கட்டி சுத்திக்கிட்டுத்தானெ இருக்கேன் சாமி! நீர் தான் கடந்த ஒரு மாதமா பதிவே போடாம ஓ.பி அடிச்சிங்க :-))
தெகா,
//இத்தனை பெரிய இடத்தில் அமர்ந்து கொண்டு இதனைக் கூட உணர முடியவில்லை அல்லது எடுத்து காட்டுவதற்கு யாருக்கும் துணிச்சல் வரவில்லையென்றால், அப்படியாக அறிந்து கொள்ளும் நாளில் நேர்மையாக இருந்தால் ஒத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது தானே நியாயம். அது ஏன் நடக்க மாட்டீங்கிது? //
அந்த பெரிய இடம் தகுதியினால் வாய்த்து இருந்தால் நேர்மையாக இருப்பார்கள், எல்லாம் குடும்ப சொத்துப்போல குலவழி வாய்ப்புத்தானே பின்னர் எப்படி நேர்மை இருக்கும்.
தெ.கா பெரிய வித்தைக்காரர் தான் நீங்க தூங்கிட்டு இருந்த கல்வெட்ட கூட எழுப்பீகூப்பிட்டு வந்துட்டிங்களே :-))
ஹ்ஹ்..ஹி ...கல்வெட்டுஜி அம்புஜம்ம், பங்கஜம்னு ப்பேரு போட்டா தான் தூக்கம் கெடுதா :-))
//She would have spoken on other content of her subject.I think I have to verify her words.//
ராஜ நட, எங்கும் தேட வேண்டாம். யூட்யூப்ல ஏதோ இயக்குனர்கள் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி ஒன்று இருக்கும். அதைத் தேடி புடிங்க. பளிச்சின்னு ஞானம் பிறக்கும் ;)...
இதில கமல் ரேஞ்சிற்கெல்லாம் நேரத்திற்கு நேரம் பொருள் கொடுக்கும் ஸ்படிக வித்தை எல்லாம் இல்லை. சுவாசினியோட கருத்து நெத்தி பொட்டில் அடிச்ச மாதிரி சொல்லி இருக்கும்.
//இந்த சினிமாப் பாட்டியின் உளறல்களை கணக்கிலா எடுக்கிறீர்கள்.???
முதல் இந்த ரிட்டயட் சினிமாப் பாட்டிமாரை தொலைக்காட்சி நிகழ்சிகள் நடத்துபவர்களாக ஆக்குபவர்களை
நாடுகடத்த வேண்டும்.//
யோகன் :))) ...நீங்க லொட லொடாவை பாட்டின்னே பேரு வைச்சிட்டீங்களா. நல்லாருக்கு!
சீனியர் சிட்டிசன்னா அனுபவத்தால ஏதாவது சொல்லுறதுக்கு இருக்கின்னு நம்பி உட்கார வைக்கிறதுதான். ஆனா, என்னடான்னா வயசாக வயசாகத்தான் உலகத்தில இருக்கிற ஈவில்னெஸ் பூராவும் கைவரப் பெற்று நம்ம தாத்தா மாதிரி ஆயிப்புடுறாங்க ;) ....
//நிச்சயமாக .. பதிவெழுத ஆரம்பித்த காலத்திலிருந்த நிலைமை இப்போதில்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி//
தருமி, எத்தனை பதிவுகள்ல நீங்க பொலம்பித் தள்ளியிருப்பீங்க. உங்க ஆரம்பக் கால பதிவுகள் அனைத்தும் அப்படியாகத்தானே பேசியிருக்கும். நானும் கவனிச்சேன் உங்களோட ஒரு அண்மைய பதிவுகளில் சுட்டிக்காட்டிக்கிட்டே வர்றதை. ஆரோக்கியமான ஓட்டம்தான். நிறைய நல்ல இளம் கலைஞர்களை அடையாளப்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. சந்தோஷமாத்தான் இருக்கு. இப்படியே பரிணமிக்கட்டும்னு வாழ்த்தி வரவேற்போம் :) .
தெகா,
சினிமாவை வைத்து, டிவியை வைத்து, மண்ணின் பிரதிபலிப்புகளை எதிர்பார்ப்பது தேவையற்றது. சினிமா என்றுமே மண்ணின் நிஜ வாசனையை தெளிக்க முடியாது. ரொம்ப எதிர் பார்க்க வேண்டாம். அவர் அவர்களது பிழைப்பு. சொல்லிக் கொண்டு போகட்டுமே.
சமீபத்தில் எனது ஊர் பக்கம் விஜயம் செய்தேன். வழியில் நம்மூரு சந்தையைப் பார்த்து வண்டிய நிறுத்தி நிதனாமாக ஒவ்வொரு கடையேறி வந்தேன். ஒரு பெரிய பை நிறைய காய்கறி வாங்கின போதும் செலவழிந்தது வெறும் 120 ரூபாய். அந்த காய்கறியின் செழிப்பு அப்பிடியே கண்ணில் நிற்கிறது. மூணு படி சின்ன வெங்காயம் இருபது ரூபாய்ன்னு சொல்லி அந்த பெரியவர் பையில் அள்ளிக் கொட்டியது ஒரு சுகானுபவம்.
இதையெல்லாம் நாம் வெள்ளித் திரையில் எதிர்பார்க்க முடியுமா. எதார்த்ததிற்கும், சினிமா, சினிமா மைந்தருக்கும் தொலை தூரம்.
//மண்ணின் பிரதிபலிப்புகளை எதிர்பார்ப்பது தேவையற்றது. சினிமா என்றுமே மண்ணின் நிஜ வாசனையை தெளிக்க முடியாது. //
வாங்க, ஓலை. இது போன்ற புரிதல் பரவலாக இருந்து விட்டால் பிரச்சினையே கிடையாதே. நம் கூட்டம் இன்னமும் தலைவர்களை சினிமாக்களில் தானே தேடிக் கொண்டு இருக்கிறது.
இந்த ஃபேர் அண்ட் லவ்லி பைத்தியக் காரத் தனம் கூட சினிமாவின் மூலமாக ஆழமாக, மேலோட்டமாக வாழும் மக்களின் மனதில் விதைக்கப்படுகிறது.
அரவிந்த சுவாமி நிறத்தில் இருந்துவிட்டால் மாப்பிள்ளை பொய்/கிராக்குத் தனம் செய்ய மாட்டார், சமூகத்தில் ஒரு அந்தஸ்து என்று சினிமா நச்சூட்டியாக மெல்ல மெல்ல பரப்ப முடியாதா என்ன. இன்னமும் மெஜாரிடி நம்மூர் ஜனங்களுக்கு சினிமாதான் பொது அறிவு ஊட்டும் ஊடகம் :((
//மூணு படி சின்ன வெங்காயம் இருபது ரூபாய்ன்னு சொல்லி அந்த பெரியவர் பையில் அள்ளிக் கொட்டியது ஒரு சுகானுபவம்.//
ரசித்தேன். அப்படியே ரெண்டு வெங்காயம் சேர்த்து அள்ளிப் போட்ருக்குமே பெரிசு. அந்த மனங்கள் மாறாம இருக்கணும்னா சில விசயங்கள் பேசப்படணும். உண்மைதான் எதார்த்தம் வேறு சுஹாசினி போன்றவர்கள் வேண்டி நிற்பது வேறு!
////மூணு படி சின்ன வெங்காயம் இருபது ரூபாய்ன்னு சொல்லி அந்த பெரியவர் பையில் அள்ளிக் கொட்டியது ஒரு சுகானுபவம்.//
மறுபடியும் வந்தப்போ மூணு படி சின்ன வெங்காயம் இருபது ரூபா கண்ணக்கட்டுதேன்னு சொல்லவந்தேன்.நீங்க முந்திகிட்டிங்க தெகா!ஒரே அலைவரிசையோ:)
தெகா,
முடியலை..நீங்களும், ராஜும் செய்யுற கூத்து
3 படி சின்ன வெங்காயம் 20 ரூ வாங்கினேன் சொன்னதும் கண் கலங்கினேன் சொல்றிங்க,கூட ராஜ் வேற நானும் இருக்கேன்ல :-))
யோவ் சாமிகளா வெங்காயத்த எல்லாம் படி கணக்கில விக்க மாட்டாங்கபா... 20 ஆண்டுக்கு முன்னர் கூட வீசம், பலம்னு எடை கணக்கு தான்.(நான் சின்ன வயசில இதான் பார்த்தேன் என்னோட சின்ன வயசிலேயே படி இல்லைனு சொல்லிக்கிறேன்)
இப்படித்தான் நீங்க எல்லாம் இந்தியாவ புரிஞ்சு வச்சு இருக்கிங்களா? உங்களை சொல்லி குத்தமில்லை எல்லாம் இணையம் செய்த வேலை! உங்களைபோல தான் வெளிநாட்டுல இருந்துக்கிட்டே இந்தியாவ நல்லா புரிஞ்சுக்கிட்டு??!! எல்லாரும் நல்லாப்பதிவு எழுதுறாங்க :-))
நன்றாக எழுதியுள்ளீர்கள். Agree with you completely.
அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்?
- Correct. so full karuppa oru heroine nadicha tamil naat la padam ooduma? appdi karuppa ethana lead heroines irukkanga?
ungalukellam sivappa ponnu venum. aana, ponnunga sivappa hero kekka koodatha? ithula enna thappu irukku?
Tamilnadu fullave vella tholukku thaana mathippu. illanu solla mudiyuma?
that too, cinema is a glamour media. Ithula Suhasini white hero kettathu avlo periya thappa? namma oorla ovvoruthanum, entha oorla irunthu vanthaalum vella thol ponna paathu jollu vidureenga.....ithukku enna arththam?
உண்மையிலேயே தாரமங்கலம் சந்தையில் படி கணக்குல கொடுப்பதை பார்த்து சின்ன வயசு நினைவு பத்திக் கிச்சு. மூணு படி சின்ன வெங்காயம் விலை கேட்ட வுடனே, எனக்கு மனசுல தோன்றியது விளைச்சவருக்கு கையில என்ன மிஞ்சும். தெகா சொன்ன மாதிரி கொசுறு கேட்காம இரு கையும் சேர்த்து அள்ளிப் போட்டது வாழ்த்தி கொடுத்த மாதிரி இருந்தது.
இதற்கு மறுநாள் 350/400 km மேல் பயணம் செய்து தென்தமிழ்நாடு போனேன். பாணதீர்த்தம் போகும் வழியில் பாபநாசம் கோவிலுக்கு அரை km தொலைவில் ஒரு புது அரசினர் விடுதிக்கு எதிராக உள்ள டீ கடையில் சுட சுட (ஆவி பறக்க) கண்முன் செய்து கொடுக்கும் பஞ்சு போல இட்லி, சூடா வடை, பூரி எல்லாம் 5 பேர் சாப்பிட்டோம். மொத்த பில் 72 ரூபாய். ஒரு இட்லி இரண்டு ரூபாய் கணக்கில கொடுக்கிறார் கடைக்காரர். கேட்க கேட்க சட்னி சாம்பார் குறைவில்லாம. பெரிய சந்தேகம் அவிங்களுக்கு கையில என்ன மிஞ்சும்னு. அவ்வளவு நல்ல மனிதர்கள் வாழும் பூமியாக இருக்கு.
அந்த மண்ணின் சுவை சுகம் எதுவும் சுலபமா மனச விட்டுப் போவாது. மிகைப் படுத்துல. உண்மையைச் சொல்றேன்.
தெகா!
அனானி சார்/மேடம் க்கு நீங்க பதில் சொல்லிக்குங்க.
நான் ராஜ நடையார் வவ்வால் சார் பதில் பார்த்த வுடன் மேலும் எழுதத் தோன்றியதால் எழுதியது. திசை திருப்பல் அல்ல.
I watched that programme .she said like the present day heroes look like they have not taken bath for last one year or so.this is higly condemn speech..even purely racist comment..
Saritha , Smitha Patil , dark colored heroines :-)
ஆங்கில அனானி ரெண்டு,
சரியான வாதத்தைத்தான் முன் வைச்சிருக்கீங்க. ஆனா, இதுக்குப் பின்னான அரசியலை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி வைச்சிட்டு. வீட்டுக்குள்ளர கிடைக்காததை வெளியில தேடுறது மனதின் இயல்பு. :)
ஆனா, அந்த மனது பக்குவப்படாத நிலையில அப்படி நிதர்சனத்தில இருந்து ஃபாண்டசி உலகத்தில சஞ்சரிக்கிறதுக்கு இது போன்ற அலைச்சல், பாச்சல் உண்டுதான் ஒத்துக்கிறேன். ஆனால், நிதர்சனத்தை மட்டுமே பார்க்க, கற்றுக் கொடுக்கிற பொறுப்பு சமூகத்திற்கு உண்டு. இல்லன்னா, மயக்க நிலையிலேயே வைத்தும் வளர்த்தெடுக்கலாம்.
என்ன நடந்திருக்கின்னா, சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்த சிவப்புத் தோலு எண்ணம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னான தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தோம்னா, போதுமான லைட்டிங் கிடைக்காதப்பவும் கேமராவில பளிச்சின்னு மூஞ்சி தெரிய கொஞ்சம் படுவர் போட்டாலும் எடுப்பா தெரியற மூஞ்சிகள் தேவைப்பட்டிருக்கலாம் 1940களில். ஆனா, இன்றைய கேமராக்களுக்கு அது தேவையில்ல, அப்படியான ஒரு வாதத்திற்கே வைச்சிக்கிட்டாலும்.
சினிமான்னாவே கனவுத் தொழிற்சாலை என்ற அளவிலேயே ஃபாண்டசி மனிதர்களை மட்டுமே விதைப்போம் என்றால் நீங்க சொன்ன மாதிரி ...Tamilnadu fullave vella tholukku thaana mathippu. illanu solla mudiyuma? ... கிறுக்குக் கோழி மனிதர்களைத்தான் உருவாக்கி விடுவோம். மூளைச் சலவை செஞ்சு விட்டமாதிரிதானே, வெளியிலும் பாச்சல் இருக்கும் ;).
மாப்பிள்ளை/பெண்ணை பற்றி பார்த்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கூற அசித் மாதிரியோ, அரவிந்த சாமி மாதிரியோ இருப்பதாகத்தான் வளர்த்து விடுவோம். விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்?
ஆனா, ஆண் நடிகர்கள் மண்ணின் மைந்தர்களின் நிறத்திலும் பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைத் தோல் நடிகைகளுக்குப் பின்னான தேர்ந்தெடுப்பில் ஆதி கால அரசியல் இருக்கிறது. எப்படியோ, அனைத்தையும் அழித்து எழுதும் ஒரு கால கட்ட சந்திப்பில் நிற்கிறது தமிழ் சினிமா சந்தை. அந்த வளர்ச்சிக்கு ஒதுங்கி வழி விட்டு நிற்கலாம் சுவாசினி போன்றவர்கள். இன்னும் பேசலாம்.
வெள்ளைத்தோல் நடிகைங்களை மட்டுமே நடிக்கவைக்காதீங்கன்னு நீங்க போஸ்ட் போட்டீங்களா..?
சரி, ஒரு பொதுவான கேள்வி இது போன்ற முன்னால் வெள்ளை/கருப்புத் தோல் கதாநாயகிகள் இன்னமும் நடிக்க விருப்பமிருந்து, நடிக்கணும்னு நினைச்சா ஏன் முன்னால் வெள்ளை/கருப்பு தோல் கதாநாயகர்களுக்கு அக்கா/அம்மா/மாமியாராக மட்டுமே நடிக்கும் அவலத்தில் முடித்துக் கொள்கிறார்கள்.
ஏன் அவர்கள் அதே நடிகர்களுடன் நடுத்தர வயதுடைய அல்லது அந்தந்த பருவத்திற்கு ஏற்றார் போன்ற கதை ஸ்கிரிப்டை உருவாக்கும் ஒரு ஆரோக்கியமான சினிமா உலகம் உருவாக பொதுவான கோரிக்கையை வைப்பதில்லை??
வவ்ஸ்,
//இப்படித்தான் நீங்க எல்லாம் இந்தியாவ புரிஞ்சு வச்சு இருக்கிங்களா? உங்களை சொல்லி குத்தமில்லை எல்லாம் இணையம் செய்த வேலை! உங்களைபோல தான் வெளிநாட்டுல இருந்துக்கிட்டே இந்தியாவ நல்லா புரிஞ்சுக்கிட்டு??!! எல்லாரும் நல்லாப்பதிவு எழுதுறாங்க :-))//
நல்லவிதமான மனசை எடுத்துச் சொல்ல விட மாட்டீங்களே. உடனே ப்ரூஃப் கொடுன்னு கேட்டு இம்சை. நாங்க சொல்ல வந்தது அந்த கடைசியா அள்ளி கொசுருன்னு போடுற வெள்ளை மனசைய்யா மனசை.
இன்னமும் நாட்டுப் பக்கம் ஓலை சொன்ன மாதிரி மக்கா இருக்காய்ங்க. ஆனா, இந்த மாதிரி அரசியல் நடத்துரவய்ங்க அவிங்க மனசிலும் நஞ்சை விதைச்சிருவாய்ங்களோன்னு தவிச்சு போயி தடுக்க வேண்டியதா இருக்குவோய். பின்ன என்னாத்துக்கு மெனக்கெட்டு நொட்டு, நொட்டுன்னு இங்கின உட்கார்ந்து டைப்படிக்கிறது. பதிவு எழுதி கை தட்டு வாங்கவா?
bramins are bramins.Even after another 2000 years they will not leave their superiority complex.And they will always make other caste people feel as if they are earthworms.And you must see this lady giving analysis about films.Praising some films highly and mocking some films as worthless.And her accent, ha, as if she is born and brought up in the U.S.A ,she will pronounce Tamil words in an anglicized way.We need 10000 Periyaars to subdue them.
Anony, the one above me... listen, your observation can be true. However, not everyone that I know of are same like a few. It is all go with in whose hand they are growing up; still I believe, every individual is different and unique.
Hope alone can keep us going... so, let us hope for the better change into the future
இதற்கு பதில் தனியா தான் பதிவு போடணும் போல. நேரமிருக்கும் போது செய்யிறன் அதை.
அனானி,
சரி, எப்போ இந்த கறுப்பு நாயகி வேண்டாம், வெள்ளை நாயகி தான் வேணுமின்னு தமிழ் ரசிகன் கேட்டான்
ஒண்ணு ஸ்ரீ தேவி ஹிந்திக்கு போனதில இருந்து.
ஸ்ரீதேவிக்கு பிறகு அவங்க இங்க படையெடுக்க ஆரம்பிச்சாங்க
யூகி சாவ்லா தான் எனக்கு முதல்ல ரஜனியோட தமிழ்ல நடிச்சதா ஞாபகம்.
அவங்க வந்ததும் ஒரு தற்செயலா நிகழ்ந்தது போல.
தமிழ் ரசிகனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்கனவே. இப்படி வெள்ளைத்தோல் நடிகைகள் தமிழ் நாடு தேடி வர நிலவரம் தெரியாத இன்பக்கலவரம் மனசுக்குள்ளார :)
வெள்ளைத்தோல் நாயகிகளின் படையெடுப்பு குஷ்புவோட இன்னும் ஜோரா நடந்திச்சு.
இயக்குனர்கள், பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என்று இவங்களை தங்களோட பலகீன ரசனையையும்,ஆசையையும் ரசிகனையும் பாத்து ஜொள்ளுவிடுன்னு பழக்கப்படுத்தி விட்டாச்சு.
கலாச்சாரம் தழுவிய வளர்ப்பு. நியாயமான ஆசைகள் உட்பட எல்லாத்தையும் அடக்கி வைச்சே பழக்கப்படுத்தி வளர்க்கப்பட்டவங்க
அவங்க வந்து தாராளமயம் காட்ட, தமிழ் நடிகைகள் பயந்தே ஒதுங்கிட்டாங்க. ஏன்னா அவங்க ஆடைக்குறைப்பு, முத்தக்காட்சிகளில் நடிக்க தயாரில்லை.
அங்கேயும் தமிழ் ரசிகன் சைக்காலஜி என்னான்னா தமிழ் கதா நாயகியை பாத்துட்டே அல்லது நினைச்சிட்டே கைமுட்டுப்பழக்கம் நடந்தேறினா எப்படி கலாச்சாரம் ஒத்துக்கும்!
ரசிகனை சொல்லி திரையுலகமும், அவங்க காட்டுறாங்க நாங்க பாக்கிறோமின்னு ரசிகனும் என்று இப்பிடியே தொடருது.
இது இன்னும் கொஞ்சம் விரிவா எழுத வேண்டியது. நேரம் கிடைக்கும் போது நானும் எழுதி வைக்கிறன் என் பங்கிற்கு.
//வெள்ளைத்தோல் நடிகைங்களை மட்டுமே நடிக்கவைக்காதீங்கன்னு நீங்க போஸ்ட் போட்டீங்களா..//
முத்து - ஏன் சாவித்திரி, சரிதா, ரோகிணி, அர்ச்சனா, ரேகா, ரஞ்சிதா, பானுப்ரியா, மாளவிகா இவுகளையும் பாக்க மாட்டேன்னா இந்த கண்ணு மறுத்துச்சு அது எப்படி ட்ரைன் பண்ணப்படுறோமோ அதைப் பொறுத்தது இல்லீங்களா... :)
(Anony2)
Ithellam over. 'ஏன் சாவித்திரி, சரிதா, ரோகிணி, அர்ச்சனா, ரேகா, ரஞ்சிதா, பானுப்ரியா, மாளவிகா' ivanga ellam karuppa?
I meant about really dark girls. Vijayakanth, Thanush, Rajini colour la. Make up potta kooda padam oodathu. (You imagine yourself a proper tamil dark girl doing a duet song with a hero, mudiyala la?).
Cinema history la, karuppa ponnu venum na kooda, oru sivappu heroine ku dark make up pottu thaan nadikka vaippaanga.
Reason is very simple, all of our guys want fair (and obviously beautiful) girls. It is not possible for ev1 in real life to get a fair skinned girl. Atleast cinema la yaachum paathu santhosha pattukiraanga.
Problem ennana, ponnunga appdi paaka koodathu. suhasini yo, or vera entha ponno, sivappa oru paiyana ketta, namma society la ava kettava, thimir pidichava.
Autograph padam eduthukonga. Oru chinna twist, Oru ponnu athey maathiri 3 lovers irukuratha sonna, entha paiyan kattikuvaan? Cheran-e itha othukka maataar!
Ok sir, avlo vendaam...ungalukku oru daughter or cousin , sivappa ponnu irunthu, alukkaa, dark aa oru paiyan kooda nadikka sonna, eppdi irukkum?
- Anony2
ஏங்க அனானி நல்லாத்தானே பேசிட்டிருந்தீங்க அந்த கடைசி வரி எதுக்கு..:)
(Anony2)
Correct Muthulakshmi.
Theka sir, Please accept my apology. If you can edit, the last line please remove it.
I didnt mean you. I meant as in every tamil guy.
- Anony2
அட அப்பாலஜி எதுக்குங்க.. நான் சொல்லவந்தது ..அதுல அர்த்தமே இல்ல.. உண்மையில் சொல்லப்போனா அப்படி கலரா பொண்ணு இருந்தாலும் கருப்பான மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுப்பதிலேயே நம்ம ஊருல ப்ரச்சனை இல்லங்கறப்ப நடிக்கறதுல என்னா ஆகிடப்போது..:) சொல்லவரத சரியாத்தான் சொல்றேனா..
Anony 2,
ஏன் கருமை நிற பெண்கள் எல்லாத்துக்கும் கொம்பும், கோரைப் பல் துருத்திக்கிட்டுமா இருக்கு? ஏன் அவங்களை படத்தில நடிக்க வைச்சு பார்க்க வைச்சா தூக்கம் கெட்டுப் போயிடுமா? அட கொண்டு வரச் சொல்லுங்க பார்ப்பாங்க. எல்லாம் நாம பழக்கப் படுத்தி விடுறதிலதான் இருக்கின்னு மேலே உங்களுக்கு எழுதின பின்னூட்டத்தில சொல்லிட்டேன்.
...Atleast cinema la yaachum paathu santhosha pattukiraanga. நீங்க சொன்ன சந்தோஷம் உண்மையா? கையிலிருக்கிறது ஒண்ணு அசித்தை நினைச்சிக்கிட்டு கோவாலோட குடும்பம் நடத்துறதா, அப்போ. என்ன ஒரு குயந்தைத்தனமான அடல்ட் ஒலகமிது! சரி விடுங்க.
//ponnunga appdi paaka koodathu. suhasini, sivappa oru paiyana ketta, namma society la ava kettava, thimir pidichava. // அப்போ சுவாசினி புர்ச்சி பண்ணுறாருங்கிறீங்களா? அவரை சினிமா உலகத்தில புர்ச்சி பண்ணணும்னா அவரு வயசோட நடிச்ச சினிமா நடிகர்களை அதே வயசு கதையையொட்டி இருக்கிற ஸ்கிரிப்டுகளோட அந்த வயசிற்கான பிரச்சினைகளை பேசி படம் கொடுக்கிற ஒரு ட்ரெண்டை உருவாக்கச் சொல்லுங்க :) அதுதான் புர்ச்சியோ புர்ச்சி. மற்றபடி நான் கெட்டவருன்னு எல்லாம் எங்கும் சொல்லல. அவரு எட்ட முடியாத உசரத்தில கடவுளா உட்கார்ந்து அவர் துறையில அப்போதே முளை விடும் கலைஞர்களை கிள்ளியும்/தட்டியும் வளர்த்து விடுற பெரியவுங்க. நம்ம மாதிரி முதல் படியில இருக்கிறவரில்லை. There is a difference!
Autograph padam eduthukonga. Oru chinna twist, Oru ponnu athey maathiri 3 lovers irukuratha sonna, entha paiyan kattikuvaan? Cheran-e itha othukka maataar
:)) இது பாயிண்ட். அதை சேரன்கிட்டத்தான் நாம கேக்கணும். எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல. நானும் அப்படியே இருந்தா, எனக்கு என்ன இந்த இயற்கை வழங்குதோ அப்படியே ஏத்துப்பேன். ஏன்னா, நானும் அதே குட்டை மட்டைதானேங்கிற புரிதல் இருக்கு. I am not some special என்னைப் போல் ஒருத்தி/ஒருவன்னு ஏத்துக்கிடறதில என்ன பிரச்சினை. ஆனா, நீங்க சொன்னதில ரொம்ப பொருளிருக்கு. கீப் அப் த ஸ்பிரிட்!
ஒரு ரெக்வெஸ்ட், ஆமா நீங்க சொன்ன கருத்தெல்லாம் நல்ல கருத்துத்தானே ஏன் இப்படி பேரு இல்லாம போடுறீங்க. சும்மா, தைரியமா பேரோட போடுங்க பின்னூட்டங்களை.
ஓலை,
மன்னிக்கவும், எங்க ஊருப்பக்கம் இருக்கும் வார சந்தை அடிப்படையில் சொல்லிவிட்டேன். இப்பவும் ஊரில் சந்தையில் தான் காய் வாங்குகிறோம்.இன்னும் தென்மாவட்டங்களில் வெங்காயத்தை படி கணக்கில் விற்பது ஆச்சர்யம் தான்.
விற்பது கூட பரவாயில்லை , வாங்குபவர்கள் சண்டைப்பிடிக்காமல் வாங்குவது தான் இதில் பெரும் ஆச்சர்யம். ஏன் எனில் வெங்காயம் போன்றவை படியில் அதிகம் பிடிக்காது, கொஞ்சமே ஒரு படிக்கு நிற்கும். எங்க பக்கம் மல்லாட்டையைப்படியில் விற்ப்பார்கள் கிராமத்து மக்கள் ஏகத்துக்கும் புலம்பி ,சண்டைப்பிடித்து விலைக்குறைப்பார்கள்.காரணம் படியில் கொஞ்சமா நிக்கும் அதுக்கு ஏன் இந்த விலை என்பதே.
இன்னும் சொல்லப்போனால் கடுகு,மிளகு, ஏலக்காய் எல்லாம் கூட படிக்கணக்கில் இங்கு விற்கும், அதுக்கும் இதே பஞ்சாயத்து நடக்கும்.
//நல்லவிதமான மனசை எடுத்துச் சொல்ல விட மாட்டீங்களே. உடனே ப்ரூஃப் கொடுன்னு கேட்டு இம்சை. நாங்க சொல்ல வந்தது அந்த கடைசியா அள்ளி கொசுருன்னு போடுற வெள்ளை மனசைய்யா மனசை.//
தெகா,
ரைட்டூ... தானா கொசுறு கொடுக்க மனசும் வேணும், கொடுக்கலைனா மக்களும் விட மாட்டாங்க எங்க ஊரூல :-))
வவ்ஸ், அனானி2 கேட்ட சில நியாயமான கேள்விக்கு எல்லாம் பதிலூஊ என்ன கொடுக்கிறது.
அவருக்கு நீங்க சொல்ல ஒண்ணுமில்லையா? இல்ல என்கிட்ட ஒப்படைச்சிட்டு ஒதுங்கி நின்னு பார்க்கிறீங்களா :))
ஓலை,
//இதற்கு மறுநாள் 350/400 km மேல் பயணம் செய்து தென்தமிழ்நாடு போனேன். பாணதீர்த்தம் போகும் வழியில் பாபநாசம் கோவிலுக்கு அரை km தொலைவில் ஒரு புது அரசினர் விடுதிக்கு எதிராக உள்ள டீ கடையில் சுட சுட (ஆவி பறக்க) கண்முன் செய்து கொடுக்கும் பஞ்சு போல இட்லி, சூடா வடை, பூரி எல்லாம் 5 பேர் சாப்பிட்டோம். மொத்த பில் 72 ரூபாய். ஒரு இட்லி இரண்டு ரூபாய் கணக்கில கொடுக்கிறார் கடைக்காரர். கேட்க கேட்க சட்னி சாம்பார் குறைவில்லாம. பெரிய சந்தேகம் அவிங்களுக்கு கையில என்ன மிஞ்சும்னு. அவ்வளவு நல்ல மனிதர்கள் வாழும் பூமியாக இருக்கு.//
நல்லா சுவையாக வேறு இருக்கும் இது போல கடைகளில். 2 ரூபா இட்லி சென்னையிலும் கையேந்தி பவன்களில் கிடைக்குது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய் தான். பரோட்டா 5 ரூ.ஹி ஹி அடிக்கடி நமக்கு அங்கே தான் சரக்கும் சாப்பாடும் சேர்ந்தே ஓடும்!
வவ்வால் சார்! பெரிய வார்த்தைகள் எதற்கு. ஒவ்வொருத்தர் அனுபவங்களை பகிர்வதர்க்குத் தானே தெகாவின் இந்த தோட்டம்.
//பரோட்டா 5 ரூ.ஹி ஹி அடிக்கடி நமக்கு அங்கே தான் சரக்கும் சாப்பாடும் சேர்ந்தே ஓடும்!//
நீரு ரொம்ப நல்லவெரு... எப்போ பக்கத்தில ஒரு ச்சேர் போடுவிய... ;)
@ ஓலை - நன்றி, நம்ம வீட்டை ஒரு தோட்டம்னு அழைச்சதிற்கு :) ரொம்ப அழகியலோட இருக்குங்க!
தெகா,
அனானி-2 ஏதோ இங்கிலிபீச்சுல போட்டு இருந்தார் அதான் படிக்காம தாண்டிட்டேன். இப்போ பார்த்திடுறேன்.
அது என்ன ரியல் கருப்பு, போலி கருப்பு. டார்க் கலர்னு சொன்னா போதும். கதாநாயகிகளும் ஏகப்பட்டபேர் கருமை தான். ஆனால் அவங்களுக்கு ஒரு இஞ்ச் தூக்கலாக மேக்கப் போடுவாங்க. ஹீரோ என்ன தான் கருப்பாக இருந்தாலும் அந்த அளவு ஹெவி மேக்கப் போட மாட்டாங்க.
அங்காடித்தெரு படம் வந்தப்போது கருப்பான ஹீரோயின எங்கே இருந்தோ புடிச்சுக்கிட்டு வந்து நடிக்க வைக்கிறாங்க ஏன் நான் எல்லாம் நடிக்க மாட்டேனானு திரிஷா பேட்டிக்கொடுத்ததையும் நினைச்சுப்பாருங்க.
வெள்ளைத்தோல் மோகம் நம் நாட்டில் அதிகம் இருக்க காரணம் பெரும்பாலான மக்கள், கருப்பு அ மாநிறம். எனவே இல்லாத ஒன்றை எண்ணி ஆசைப்படுறாங்க.
சுஹாசினி வெள்ளை ஹீரோக்கள் பார்த்து மகிழட்டும் அவருக்கும் உரிமை இருக்கு. ஆனால் ஏன் கருப்பு நிற நடிகர்களை நடிக்க வைக்கீறிங்கனு கேட்க என்ன உரிமை இருக்கு.
மேலும் சினிமா என்பது ஹீரோவோட மார்க்கெட்டுக்கு தான். வெள்ளையோ ,கருப்போ, ஹீரோவுக்கு படம் ஓடினா தான் ஃபீல்ட்ல இருக்க முடியும். கதையும் ஹீரோவ சுத்தி தான் இருக்கும். இவங்க எல்லாப்படத்தையும் ஹீரோயின் சுத்தி நடக்கிறாப்போல மாத்த முடியுமா?
மேலும் ஆரியர்கள் ஊடுருவியப்போது இந்திய பூர்வ குடிகளான திராவிடர்களை நிறம் வைத்து மட்டப்ப்டுத்தி, வர்ணாசிரம விலங்குப்பூட்டி கீழ்ப்படிதலுக்கு ஆளாக்கினான்.
காரணம் ஆரியர்கள் , திராவிடர்கள் அளவுக்கு உடல் வலிமையானவர்களோ, உழைப்பாளிகளோ இல்லை..எனவே பூர்வகுடிகளை தந்திரமாக ஒடுக்க ,நிறம், கடவுள்,வர்ணாசிரமம் எல்லாம் கையாண்டார்கள்.இதுக்கே ஆர்யன் என்றால் வலிமையானவன் என பொருள்.எல்லாம் ஏட்டளவில் தான்.
இதன் விளைவு பெரும்பாலான மக்களுக்கு வெள்ளைத்தோல் இருந்தால் மட்டுமே உயர்ந்த இடம் கிடைக்கும் , சமூக மரியாதை கிடைக்கும் என்ற எண்ணம் ஆயீரமாயிரம் ஆண்டுகளாக உருவேறிவிட்டது.விளைவு இன்னமும் மக்கள் சிவப்பழகு பசையை வாங்கிப்பூசிக்கொன்டு இருக்கிறார்கள்.
இப்போது சுஹாசினிப்பேசியதும் அந்த பழைய வருணாசிரம எச்சத்தின் சிறு சிதறலே.
தெகா,
//நீரு ரொம்ப நல்லவெரு... எப்போ பக்கத்தில ஒரு ச்சேர் போடுவிய... ;)//
வாரும் ஓய் உமக்கு இல்லாத சேரா , சிம்மாசனமே போட்டிரலாம், கையேந்தி பவன் வருவதா இருந்தா :-))(நட்சத்திரம் எல்லாம் வானத்தில தெரியும்)
அப்புறம் என்ன பதில் எல்லாம் வேகமா அம்பாட்டம் பாயுது, பதிவிலே டேரா போட்டிங்களா? :-))
-----------------
ஓலை,
நீங்க தான் பெரிய வார்த்தை எல்லாம் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிங்க அது என்ன சார் மோர் எல்லாம், :-))
:)) டோரா போட்டுட்டேன் ஆமா. முக்கியமான பதிவில்ல இது, அதான்.
நட்சத்திரத்தோட சாப்பிட முடியற ஒரே இடம் கையேந்தி பவன்லதான். பின்னே எங்க நட்சத்திர ஹோட்டல்லயா முடியும். வெவரம் புரியாதவிங்க செய்ற வேல அதெல்லாம். இருட்டுக்குள்ளர சுடும் பழ ரசத்தை உடைச்சி பிடிச்சிக்கிட்டு நடந்திட்டு பருகிட்டு போறதில உள்ள சொகம் வேற எதிலவோய் கிடைக்கும். ;-)
ஆமா, அனானி 2 சொன்ன, சேரன் பத்திய விசயம் பத்தி ஒண்ணும் சொல்லலையே நீங்க ?? முக்கியமான கேள்வியது...
தெகா,
அப்படிப்போடுங்க அருவாள!
சேரன் படத்தில காட்டினது ஒன்றும் ரொம்ப புதுமை இல்லை. அதுவே பெண் என்று காட்டுவார்களானு கேட்பதும் சொத்தையான வாதம். 3 காதலிகள் ஆட்டோகிராப்ல இல்லையே, பள்ளிப்பருவ பாலின ஈர்ப்பு ஒன்று.ஒன்று மட்டும் காதல். சினேகாவுடன் நட்பு.
3 காதலன் இருப்பது போல பெண்ணிய கதை வேண்டுமா, 5 கணவன் இருக்க பெண்ணிய கதை தான் மஹாபாரதம் :-))
மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ன?
மின்னலே, கண்டேன் காதலை படம் எல்லாம் ஒரு பெண்ணுக்கு வேறு ஒரு காதல் இருப்பது தெரிந்தே நாயகன் காதலிப்பது போல தானே இருக்கும்.
சுஜாதா அனிதாவின் காதலர்கள் னு பெண்ணிய ஆட்டோ கிராப் அப்பவே எழுதிட்டார் , வேண்டுமானால் இவர் ஆசைக்கு அதை சேரனை விட்டு படம் எடுக்க சொல்லலாம்.
இன்றைய காலத்தில் பெண்களுக்கும் பல ஆண் சினேகிதம்/காதல் இருக்கு. அவற்றை தெரிந்தோ அ தெரியாமலோ ஆண்களும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள்.
அந்த அம்மா , கொஞ்சம் ஒதுங்கினால் தேவலை. வர வர, அவங்க பேசுவதோ , விமரிசிப்பதோ, நடுநிலமையாக இருப்பதில்லை.
ந.ப.ந.தெ.(நல்ல பதிவு,நன்றி தெகா)
பின்னூட்டத்திலயும் எல்லாரும் பிரிச்சு மேஞ்சுட்டாங்க..
எனக்கு முணுக்குன்னு வந்த நினைவ,வவ்ஸ் முதல் பின்னூட்டத்திலயே போட்டுட்டாரு..
|| அந்த அம்மாவும் எண்ணைச்சட்டில தலைய விட்டாப்போல வழிஞ்சுக்கிட்டு,கருப்பா இருந்துக்கிட்டே இப்படிப்பேசுவது தான் செம காமெடி! ||
தான் முதுகு எப்படி இருக்குன்னு தனக்கு எப்பவும் தெரியாதுன்னு சொல்வாங்க..அதுதான நினைவுக்கு வருது..
"சொரை" என்றால் அது என்ன செடி. இணையத்தில் படத்தோடு விளக்கத்தை யாராவது தந்தால் நன்று.
"விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்?" எனும் பழமொழியிலிருந்து இக்கேள்வியை அறியாமையாலே கேட்கிறேன்.
paxi
சுரைக்காய் என்பதை தெரிந்துகொண்டேன். நன்றி
paxi
சுரைக்காயைத்தான் பேச்சு வழக்கில் சொரைக்காய் என்று எழுதப்பட்டிருக்கிறது. அறிந்து கொண்டமைக்கு நன்றி! :)
ஓலை, //இதற்கு மறுநாள் 350/400 km மேல் பயணம் செய்து தென்தமிழ்நாடு போனேன். பாணதீர்த்தம் போகும் வழியில் பாபநாசம் கோவிலுக்கு அரை km தொலைவில் ஒரு புது அரசினர் விடுதிக்கு எதிராக உள்ள டீ கடையில் சுட சுட (ஆவி பறக்க) கண்முன் செய்து கொடுக்கும் பஞ்சு போல இட்லி, சூடா வடை, பூரி எல்லாம் 5 பேர் சாப்பிட்டோம். மொத்த பில் 72 ரூபாய். ஒரு இட்லி இரண்டு ரூபாய் கணக்கில கொடுக்கிறார் கடைக்காரர். கேட்க கேட்க சட்னி சாம்பார் குறைவில்லாம. பெரிய சந்தேகம் அவிங்களுக்கு கையில என்ன மிஞ்சும்னு. அவ்வளவு நல்ல மனிதர்கள் வாழும் பூமியாக இருக்கு.// நல்லா சுவையாக வேறு இருக்கும் இது போல கடைகளில். 2 ரூபா இட்லி சென்னையிலும் கையேந்தி பவன்களில் கிடைக்குது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய் தான். பரோட்டா 5 ரூ.ஹி ஹி அடிக்கடி நமக்கு அங்கே தான் சரக்கும் சாப்பாடும் சேர்ந்தே ஓடும்!
Post a Comment