Friday, November 11, 2011

நிறங்களணிவகுப்பு : Fall Color's Photography

இயற்கைதான் எத்தனை நிறங்களைத் தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் படைத்து, அழித்து செய்து கொண்டே இருக்கிறது. அதன் கற்பனை எப்பொழுதும் வற்றா ஜீவநதி. தொடர்ந்து ஆச்சர்யங்களை உள்ளடக்கி பூமி முழுதுக்குமே பரப்பி வைத்திருக்கிறது. கண்ணுற்று கண்களை அகல விரிப்பத்தற்குத்தான் அதே இயற்கை படைத்த ஜீவராசிகளுக்கு கற்பனை வறட்சி போலும்...

ஒரு மாலை வேளையில் என்னை கிறங்கடித்த ஒளி வெள்ளத்தில் எனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த நிறங்களை எனது புகைப்பட லென்ஸின் வழியாக சுருட்டிக் கொள்ள முனைந்ததின் விளைவு நீங்கள் இங்கே கண்ணுருவது.

# 1 - டெலிடப்பீஸ்கள் வாழும் வீட்டைச் சுற்றிலும் - இயற்கையின் அழகு பெரிதா நான் தயாரித்த வீட்டின் நிறத்தின் அழகா...!!# 2 - மிக மெதுவாக இரவு பகலென்று மிதமான குளிரும், சரேலென்று ஒரு நாள் காயும் வெயிலும் இலைகளின் நிறங்களை மெருகூட்டிக் கொண்டே வருகிறது...# 3 - அவைகளின் அணிவகுப்பு..
# 4 ... பச்சையத்தை எரித்துக் கொண்டே...# 5 - எத்தனைதான் ஜொலிக்கும் சிவப்புக் கம்பளங்களை தரைப்படுகைளாக நாம் விரித்தாலும் இந்த நிறங்களுக்கு இணையாகுமா...
# 6 ... அணிலொன்று தனது வீட்டை விட்டுவிட்டு தற்காலிக நகர்வு செய்திருப்பதும் ஏதோ நீண்ட நூழிழையில் முடிச்சொன்றை இட்டு சென்றிப்பதாக படுகிறது...
# 7 - வண்ணங்களை நான் என் தலையில் கொட்டிக் கொள்வதற்கு சற்று முன்பாக :-) ...
# 8 - இன்னும் கீழே இறங்கி ...கே. ஜே. ஏசுதாசின் இந்த பாடலைக் கேளுங்க... பூமிக்கு எத்தனை நிறமூட்டி பாடி பார்த்திருக்கிறார்னு. அழகான பாடல்...

பூமியென்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக் கொண்டு
பச்சையாடை கட்டிப்பார்த்தாள்...
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்...

9 comments:

வவ்வால் said...

தெகா,

ஒளீ ஓவியம் தீட்ட ஆராம்பிச்சிடிங்க? படம் எல்லாம் நல்லா இருக்கு, ஃபிளெம் ஆப் பாரெஸ்ட் மரம் போல தெரிஞ்சாலும் இது வேற தானே, டெலி டப்பீஸதென்பது மரத்தோட பேரா? ஓக் மரமா? (எனக்கு வெளிநாட்டு மரம்னா ஓக் தான் நியாபகம் வரும் )

Thekkikattan|தெகா said...

வவ்ஸ், அப்பப்போ நாங்க புகைப்படமும் போடுவோம்ல ;). இங்கயே நிறைய இருக்குமே பாருங்க அந்த கேட்டகிரியில.

இங்க இலையுதிர் காலம் ஆரம்பிச்சா கிடைக்கும் வெப்பம்/குளிரின் அடர்த்திக்கு தகுந்த மாதிரி நிறங்களின் விளையாட்டு நிகழ்த்தி காமிக்கப்படுது அதுவும் மரங்களின் இனங்களை பொறுத்து.

அதி வண்ணங்களை இலையுதிர் காலங்களில் கொடுக்கும் மர வகையில் சில maple,mulberry, walnut, dogwood, cherry, crabapple...

டெலிடப்பீஸா இங்கே பாருங்க ஒரு ஐடியா கிடைக்கும் :P

http://www.youtube.com/watch?v=In3ajQ__ohA

ஆமா, இன்னும் வவ்வாலு கல்யாணம் கட்டிக்கிடலையா :) ... கட்டியிருந்தா வாண்டூஸ்கள் தெரிஞ்சிக்க வைச்சிருக்குமேன்னு கேக்குறேன்...

வவ்வால் said...

தெகா,

ஹி..ஹி.. நமக்கு அந்த அளவு மழலை பாஷை தெரியாது(தனிக்காட்டு ராஜா தான்)

டாக்வுட், செர்ரி,மல்பெர்ரி கேள்விப்பட்டு இருக்கேன். டாக்வுட் தவிர ரெண்டு தான் பார்ர்த்த மரம், ஆனால் இங்கே புதர் போல தான் இருக்கும்.

உங்க படங்கள் முன்னர் பார்த்து இருக்கேன், நடுவிலே காணோம் மீண்டும் ஒளி ஓவியம் தீட்ட ஆரம்பிச்சுடிங்களானு தான் கேட்டு இருக்கணும்.ரீ எண்ரி ஆனதும் உங்க சரணாலய தொகுப்பு படிச்சேன் , கமெண்ட் கூட போட்டேன் பார்க்கலையா?.அதுல பிளெமிங்கோ , அப்புறம் வடுவூர் படம்லாம் நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அழகு.

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

5 வது படமும் அதற்கான கமெண்ட்டும் ரொம்ப நல்லா இருக்கு :)

gardenerat60 said...

சார், நீங்கள் சொர்க்காபுரியில் குடி இருக்கிறார் போல தெரிகிறது.
கொள்ளை அழகு!

தவறு said...

தெகா....எப்படி இருக்கீங்க..

படங்கள் அருமை...

மாதேவி said...

வாவ்! அருமையான படங்கள்.

Related Posts with Thumbnails