Sunday, October 30, 2011

மேட்டிமைத்தனம் + போலி அறிவியல் = ஏழரை அறிவு!

அது என்னப்பா ஏழாம் அறிவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி படமா வருதேன்னும், ஹாரீஸ் ஜெயராஜ்வோட இசையும் கொஞ்சம் கவனிக்க வைச்சிருந்ததாலும் ஏதோ ஓர் உந்துதல் இந்த படத்தை பார்க்கணும்னு. பார்த்தேன். இரண்டும் கெட்டான் அப்படிங்கிறதுக்கு மிகச் சரியா பொருளைக் கொடுத்த படமிது!

பிறகு எதுக்கு இதைப் பத்தி எழுதி நேரத்தை வீணடிக்கிறன்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா பேசப்படணும். ஏன்? ஓரளவிற்கு உயிரியலையே மேஜரா எடுத்து படிச்ச என்னயே பாதி வழியே படம் பார்த்திட்டு இருக்கும் போதே ஒரு தற்குறியா உணர வைச்ச படமாச்சே அதுனாலே மத்தவிங்களுக்கும் மணி அடிச்சு அப்படி ஃபீல் செஞ்சிராதீங்க இதுவும் ஒரு சாதாரண தமிளு படமின்னு சொல்லவாவது உதவட்டுமேன்னு இதை எழுத உட்கார்ந்திருக்கேன்.

இந்த அளவிற்கு பணத்தை கொட்டி எடுக்குறீங்கன்னா, ஒண்ணு முற்று முழுதுமாக உண்மையான வரலாற்று உண்மைகளை (அப்படின்னு ஒண்ணு இருந்தா) உள்ளடக்கி அதை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கும் முயற்சியில் படத்தை கொடுங்க, அதே மாதிரி அறிவியல் பேசுறீங்களா அடிப்படை விசயங்களை புரிஞ்சிட்டு அதுக்கு மேலே அதில நிகழ்த்தக் கூடிய விசயங்களா கற்பனையை கலந்து கொடுங்க. இரண்டுமே இல்லாம மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி ஏற்கெனவே அடிப்படை அறிவியல் அறிவு இல்லாத ஒரு சமூகத்திற்கு எது போன்ற எண்ண விதைகளை விதைப்பீர்கள்?

இந்த படத்தையெல்லாம் இத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது என்பது கண்ணில்லாத குருடன் யானையைத் தடவின மாதிரிதான் இருந்தாலும், பேசப்படுவதின் மூலமாக அடுத்து இதே வழியில் இறங்கி பணம், புகழ் சம்பாரிக்க எண்ணுபவர்களுக்கு ஒரு இரண்டாவது யோசைனையாக இருக்கட்டும் என்றளவிலாவது பேசப்படுவது அவசியமாகி விடுகிறது.

இந்தப் படத்தில 1600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்த போதி தர்மர் என்ற தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு துறவியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியவில்லை என்ற அவமான உணர்வுடன், குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் பீடிகையுடன் தொடங்கும் படம் மலை, காடுகள், ஆறுகள் வழியாக பயணித்து பின்பு மரபணு பாடம் எடுக்க எத்தனிக்கிறது.

எனக்கு அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படியே ரெகுலர் சினிமா மசாலாத்தனமாக ஓட்டி முடித்திருந்தால் என்னிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வந்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை பரம்பரையாக.

அதே நேரத்தில் எனது தாத்தன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தண்ணீர் அடிக்கும் பம்ப் செட்டில் 1000 குடங்களை அடித்து நிறப்பும் திறன் கொண்டவர், எனது அப்பா பெரிய கால்பந்து வீரர், மஹாத்தமா, அறிவியல் விஞ்ஞானி, பேராசிரியர் போன்ற புற பண்புகள் அதாவது முயன்று பெற்ற திறமைகள் கடத்தப் பெறுவது கிடையாது என்பது கண் கூறு, அனுபவ வழி உண்மை. இதுக்கு பெரிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூட தேவை இல்லை. வீட்டிற்குள் நிகழும் விசயங்களை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.

இந்த படத்தில் போதி தர்மா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முயன்று பெற்ற பண்பான கம்பு சுத்துறது, தொடர்ந்து பல மணி நேரங்கள் சுவற்றை உற்று நோக்குவது, வியாதிகளுக்கு மருத்துவ மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்துவது போன்ற விசயங்களை இருபது தலைமுறைகளை தாண்டி வந்த படத்தின் கதாநாயகனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதாக கூறி ஜல்லி அடிப்பதனை தாங்க முடியவில்லை. இது போன்ற பண்புகள் கடத்தப்படக் கூடியதுதான் என்று புதிதாக எதுவும் ஆராய்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்களோ என்று ஒரு நிமிடம் என்னயே அதிர்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை.

அதனை சப்பை கட்டும் விதமாக கதாநாயகி, இது போன்ற பரம்பரை குணங்கள் தலைமுறையாக கடத்தப்பெறுகிறது என்று வேறு அழுத்தம் திருத்தமாக கூறுவார். அடக் கொடுமையே! ஏற்கெனவே ஊர்க் காடுகளில் டேய் என் முப்பாட்டான், தாத்தா யார் தெரியுமாடா என்று மூடத்தனமாக ஒட்டு பீடிக்கு அருவா தூக்கும் இன்றைய இளைஞர்கள் வாழும் ஒரு சமூகத்திற்கு நவீன அறிவியல் பேசும் ஒரு படத்தில் அதே போன்ற மொண்ணை பேசும் வச்சனம் தேவையா? அது உண்மையா?

இந்த லட்சனத்தில் சமூகத்திற்கு ஏன் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏதோ பெரிய பெருமை சேர்க்கும் விசயத்தை உள்ளடக்கி வந்திருக்கிறது என்று கூவிக் கொண்டு டிக்கெட் வித்து தீத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை அறிவையும் உள்ளடக்கிய பல ஞானிகளை பெற்றெடுத்த பூமியில் தான் இன்னமும் ஜாதி என்ற பெயரில் நடந்தேறும் அத்தனை வெட்டுக் குத்துகளும், அநீதிகளும் அதே ஞானிகளின் காலத்திலிருந்து இன்றைய அப்துல் கலாம்கள் வாழும் நாள் வரையிலும் நீட்டித்து நிற்கிறது. அதே அடிப்படை வாத பிரிவினைகளைக் கொண்டே இதோ நேற்று ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கான அநீதியும் அடக்கம். இவைகளே உண்மையாக பேசப்பட வேண்டிய பாடங்கள், படங்கள்?

இது போன்ற பிரச்சினைகளை முகத்திற்கு முகமாக பேசக் கூடிய படங்கள் ஒன்றையும் காணோம். உயிரியல் தொழி நுட்பத்தை பயன்படுத்தி வரப் போகும் நவீன போர் உத்திகளை பற்றி பேசியமையும், எப்படியாக அது போன்ற நோய்கள் மிக விரைவில் பரவி மக்களை சென்றடையும் என்று இந்த படம் காட்டிய வரைக்கும் சரி, அது போலவே தாய் மொழியில் பயின்று, பேசி அறிவியல் ஞானத்தை எட்டுவது என்பதுமாக இரண்டு நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்ப்பது இந்த படத்தில் கவணிக்க வேண்டி விசயங்கள் என்றால் - நேர் எதிராக பல விசயங்கள் மூட/மேட்டிமை மயக்கத்தை தூவி, நிரூவி நிற்கிறது.

1600 வருடங்களுக்கு மேலாக நம் கூடவே நடந்து வரும் ஒரு மாபெரும் விசயம் நமது சமூகத்திற்குள்ளாகவே மக்களை பிளவு படுத்தி, அடிமை சாசனத்தில் வைத்திருக்கும் மக்களுக்கான விடியலான தீர்வு இட ஒதுக்கீட்டு விசயம். அதனை இந்தப் படம் போகும் போக்கில் இந்தியா இழிவான நிலைக்கு போவதற்கான அடிப்படை பிரச்சினைகளான ஊழல், சிபாரிசு மற்றும் இட ஒதுக்கீடு என்ற கேடுகெட்டவைகளில் ஒன்றுடன் இணைத்துச் செல்கிறது. என்னவோ, இந்த இட ஒதுக்கீட்டிற்கு முன்பாக பாலாறும், தேனாறும் இந்த சமூதாயத்தில் ஓடிக் கொண்டிருந்த மாதிரியும் அந்த மக்கள் அனைவரும் அப்பொழுது வேற்று கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் விசயத்தை மிகவும் எளிமை படுத்திச் செல்கிறது.

அதற்கு பின்னான அவசியமும், ஒரு நாடாக, ஒரு இனமாக மேலேழும்ப வேண்டுமாயின் சமதளம் எப்படியாக பரப்பபப் பட வேண்டுமென்ற அடிப்படை தேடல் கூட இல்லாது அப்படி ஒரு மேட்டிமைத் தன எள்ளலுடன் இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை புறம் தள்ளி பேசி நகர்த்திச் செல்கிறார்கள். இது போன்ற மேம்போக்கான எண்ண வெளிப்பாடுகளை கொண்ட விசயம் பேச எதற்கு அறிவியல் துணை தேவைப்படுகிறது? பரம்பரை குணம் இரத்தத்தில் பாய்ந்தோடுகிறது என்பதாகவும் அதனை மீள் பிரதியெடுக்க படத்தில் கதாநாயகனுக்கு ஏற்றிய பச்சை நிற சர்பத்தை தண்டுவடத்தில் ஏற்றி ராஜ ராஜ சோழனையும், போதி தர்மாக்களையும் இன்றைய பரமக்குடி பிரஜைகளாக உருவாக்கவா? நிகழ்கால பிரச்சினைகளை பேசி அதன் பொருட்டான விழிப்புணர்வை பரப்புவதே உண்மையாக ஒரு சமூகமாக பிழைத்து தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான வழி முறையாக இருக்க முடியும்.

மாறாக அறிவியலின் துணைகொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் பேசப்படும் விசயங்களுக்கு உயிர் ஊட்டி மென்மேலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக வழியமைப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகத்தான் அமையும். Thanks for no thanks!


பி.கு: இங்கே ஒரு விஞ்ஞானி இப்படியாக பாஞ்சிருக்கார் (அழுத்தி படிங்க )... அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.

59 comments:

ஜோதிஜி said...

குழந்தைகளிடமிருந்து கைப்பற்றி தந்தமைக்கு முதலில் நன்றி. கமலஹாசன் கடைசியாக வந்த படத்திற்குப் பிறகு இந்த படத்தை நேற்று திரை அரங்கில் சென்று பார்த்தேன்.

ஜோதிஜி said...

எனக்கு முருகதாஸ் மேல் ஏராளமான ஆச்சரியங்கள் உண்டு. அவர் மேல் இருந்த நம்பிக்கையின் காரணமாக படாவதி திரை அரங்க வசதிகளை கொடுமைகளை பொறுத்துக் கொண்டு கட்டணம் நூறு ரூபாய் வண்டிக்கு பத்து ரூபாய் பார்த்து விட்டு வந்த போது நான் எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அழைப்புக்கு நன்றி.

ஜோதிஜி said...

முகுந்த் அம்மா கட்டுரையை படித்தேன். பொதுவா நீயும் நானும் இந்த டிஎன்ஏ பற்றி கல்லூரி பாடங்களில் படித்த காரணத்தால் இதற்கு பின்னால் உள்ள வணிக சமாச்சாரங்களில் இருந்து தாண்டி வந்துள்ள முருகதாஸ் வேலையை உணர்ந்திருந்த போதிலும் சில விசயங்களைப் பற்றிப் பேசலாம்.

ஜோதிஜி said...

தமிழ் திரைப்படங்களில் அரைத்த மாவை அரைத்த விதம் என்கிற ரீதியில் இதை ஒரு வரவேற்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் விமர்சனம் என்கிற ரீதியில் பார்க்கும் போது வேறொருவர் சொன்ன வாசகம் படம் பார்த்த போதும் இந்த விமர்சனத்தை படித்து முடித்த போதும் என் நினைவுக்கு வந்து போகின்றது.

ஜோதிஜி said...

வெயில் படத்தை பார்த்தபிறகு மம்முட்டி சொன்ன வாசகம்.

சற்று பிசகியிருந்தாலும் ஒரு டாக்குமெண்டரி படமாக மாறியிருக்கக்கூடியது. கவனமாக கையாண்டு எடுத்து இருக்கீங்க என்று இயக்குநரை பாராட்டினாராம்.

அது தான் என் நினைவுக்கும் வந்து போனது.

ஜோதிஜி said...

இதே போலத்தான் தசவாதாரமும். ஆனால் ஆஃபாயில் ஆம்லேட் போல சரியான கலவையில் ரசிக்க வைத்து பார்த்தவர்கள் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் திருப்தியாக அனுப்பி விட்டார்கள் ரவிக்குமார். அதை ஒப்பிடும் போது முருகதாஸ் சற்று பிரயாசைப்பட்டு இருக்கிறார். காரணம் களம் அப்பேற்பட்டது.

ஜோதிஜி said...

நன்றாக உழைத்து இருக்கிறார் சூர்யா.
ரவி கே சந்திரன் சிறப்பான கோணத்தை குறிப்பாக கடற்கரை காட்சிகளில் ஒரு சிலிர்ப்பை உருவாக்கியிருக்கிறார்.
எடிட்டர் முடிந்தவரைக்கும் உழைத்து இருக்கிறார்.

நவீன தொழில் நுட்பத்தை திரை அரங்கில் பார்ப்பவர்களுக்கென்று சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.

பாடல் காட்சிகளை இளைஞர்களை குறிவைத்து எடுத்து இருக்கிறார்கள். படத்திற்கு ஒட்டாமல் இருந்த போதிலும்.

ஜோதிஜி said...

அபத்தங்கள் ஆயிரம் உண்டு. ஆனாலும் இது போன்ற படங்களில் உள்ள டிஎன்ஏ சமாச்சாரங்கள் விலங்கியல் தாவரவியல் மற்றும் மரபியல் படித்தவர்களுக்கே எந்த அளவுக்கு புரியும் என்பதே கேள்விக்குறி.

குறிப்பாக 1600 ஆண்டுகள் என்கிறார்கள். ஏறக்குறைய ஒரு தலைமுறை உத்தேசமாக 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் இத்தனை தலைமுறைகள் கடந்து இந்த டிஎன்ஏ மூலக்கூறுகள் கடந்து வருமா என்பதே முக்கிய கேள்விக்குறி. காரணம் ஒவ்வொரு தலைமுறையிலும் எந்த கலப்பும் இல்லாமல் இந்த தலைமுறைகள் கடந்து வந்து இருக்க வேண்டுமே?

ஜோதிஜி said...

ஒரு இடத்தில் இந்த வசனம் வருகின்றது.

இனமாற்றம்‘
மொழிமாற்றம்
மத மாற்றம் என்று தான் நாம் கடந்து வந்துள்ளோம்.

நானே ஒரு பதிவில் எழுதியுள்ளேன். என் தலைமுறையில் ஆறு தலைமுறைகளை ஆராய்ந்து பார்த்தேன். ஆனால் அதற்கு முன்னால் எப்படி வாழ்ந்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? உண்மையிலே என் ஜாதி என்கிற மூலக்கூறில் என் சொந்தம் என்ற பந்தத்தில் தான் இருந்தார்களா? என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி.

ஜோதிஜி said...

மன்னர் பரம்பரை கடைசியில் ஒரு சர்க்கஸ் கூடாரம் என்று வந்து நிற்கின்றது.

இது போன்ற ஆயிரமாயிரம் அபத்தமான ஆபத்தான கேள்விகள் என்னுள் எழுந்தது. ஆனாலும் முருகதாஸ் ஹிப்னாடிசம் என்கிற ரீதியில் உருவாக்கிய சண்டைக்காட்சிகளை எந்திரன் படத்தில் ஷங்கர் உருவாக்கியது போல அந்நியன் படத்தில் அந்த கராத்தே சண்டை போல ரொம்பவே ரசிக்க வைத்தது.

உதயநிதி போட்ட பணம் யாரு வீட்டு பணமோ? எங்கிருந்து வந்ததோ?

ஜோதிஜி said...

நிச்சயம் ஏ சென்டர் முழுக்க இந்த படம் ஜெயிக்கும். நான் சென்ற போது வந்திருந்த அத்தனை பேர்களும் இது போன்ற நபர்கள் தான். விடலைங்க ஒன்று கூட இல்லை. எல்லோருமே அருகே இருந்த வேலாயுதம் பார்க்க போயிட்டாங்க.

சிவகுமார் மகன் என்பதால் அம்மையார் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இந்நேரம் ஊத்தி மூடியிருப்பார் என்று நினைக்கின்றேன்.

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

ஜோதிஜி said...

போதுமா?

பொஞ்சாதி காய்கறி வாங்கி வர விரட்டிக் கொண்டிருக்கிறார். அப்பறம் டிஎன்ஏ ஆர்என்ஏ பற்றி பேசுவோம். முதலில் வயிற்றில் சுரக்கப்போகும் அமிலத்தை நிறுத்த வேண்டுமென்றால் பொஞ்சாதி சொல்வதை கேட்பது தானே எனது 6வது அறிவு சொல்லும் தத்துவம்.

நன்றி வணக்கம்.

Thekkikattan|தெகா said...

//ஏறக்குறைய ஒரு தலைமுறை உத்தேசமாக 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் இத்தனை தலைமுறைகள் கடந்து இந்த டிஎன்ஏ மூலக்கூறுகள் கடந்து வருமா என்பதே முக்கிய கேள்விக்குறி.//

முண்டாசு, என்ன பேசுகிறீர் மனிதன் தோன்றிய ஆஃப்ரிக்கா சமவெளிகளிருந்து அவன் பொடி நடையாக நடந்து தென்னிந்தியா வழியாக இந்திய பெருங்களிடலில் பயணித்து சுமத்தரா தீவுகளின் வழியாக பசிபிக் தீவுகளில் குடி கொண்டிருந்த பழங்குடிகளுக்கும் நமது ஊர்க்காடுகளில் அவர்களின் மரபணுக்கள் மிச்சமிருகிறதா என்று தேடி மதுரைக்கு பக்கத்தில ஒரு அண்ணாச்சிகிட்ட இருந்ததை கண்டுபிடிச்சிருக்காய்ங்க, இவரு இத்தனை அழகா மரபியல் படிச்சிருக்காரு.

இருங்க வாரேன், முண்டாசை கழட்டி பிரிமணை கட்டுறேன் :)

ஜோதிஜி said...

என்னப்பா தூங்கப் போயிட்ட?

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே
/அதே நேரத்தில் எனது தாத்தன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தண்ணீர் அடிக்கும் பம்ப் செட்டில் 1000 குடங்களை அடித்து நிறப்பும் திறன் கொண்டவர், எனது அப்பா பெரிய கால்பந்து வீரர், மஹாத்தமா, அறிவியல் விஞ்ஞானி, பேராசிரியர் போன்ற புற பண்புகள் அதாவது முயன்று பெற்ற திறமைகள் கடத்தப் பெறுவது கிடையாது என்பது கண் கூறு/

வாழ்த்துகள் .நீங்களாவது உண்மையை புட்டு வைத்ததற்கு.இது மறுக்கப் பட்டே ஆகவேண்டும் இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு குறிப்பிட்ட திற்மை,குணம் இருப்பதாக் அர்த்தம் கொள்ளும் அபாயம் உண்டு.இது 100% நடைமுறை சாத்தியமற்ற போலி அறிவியலே(pseudo science)!!!!!!!!!!
நன்றி

அயன் உலகம் said...

See Murugadas padathai patri pesave vendam.. avaru padathula the famous comedy of the century "It is a ten digit no. it should be a mobile no."nu investigating officers discuss pannanga. This is far from science. athulaiye ippadina.. science patri ketkave vendam... :)

Anonymous said...

//ஏறக்குறைய ஒரு தலைமுறை உத்தேசமாக 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும்//

ஒரு தலைமுறை = 33 ஆண்டுகள்

சந்துரு said...

”மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம்”
என்ற உங்கள் கூற்றை மறு பரிசீலனை செய்யுங்கள். அறிவு சார்ந்த விஷயங்களும் எடுத்துச் செல்லப் படுகிறது.முட்டையை விட்டு வெளிவரும் ஆமைக் குஞ்சு கடலை நோக்கிச் செல்வதும்,கங்காரு குட்டி பிறக்கும் இடத்தை விட்டு பையை நோக்கி ஓடுவதும், கருவிலிருக்கும் போதே சன்டையில் ஈடுபட்டு பங்காளியைக் கொல்லும் சுறா, தாயார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடன்பிறப்பைக் கூட்டை விட்டு தள்ளிவிட்டு கொல்லும் குஞ்சுப் பறவையின் அறிவு இவற்றைப் போல் ஏராளமாக சொல்லமுடியும் அவற்றை ஒரு வேளை நீங்கள் வேறு பெயர்(Traits) வைத்து அழைத்தாலும் அறிவுதானே.மேலும் இது பற்றி விவரமாக எழுதியுள்ள எனது பதிவையும் பாருங்கள்

வவ்வால் said...

தெ.கா,

வணக்கம்,நலமா, பிரிச்சு மேஞ்சுட்டிங்க! நானும் இது சும்மா கப்சானு சொன்னா படத்த படமா பாக்கணும் ஆராயக்கூடாதுனு சொல்றாங்க,அப்புறம் என்னா **** தமிழன் ...தமிழ் உணர்வுனு சொல்றாங்க படத்த படமா எடுக்க வேண்டியது தானே.

டிஎன் ஏ மூலமா அறிவு எல்லாம் கடத்தப்படாதுனு சொன்னேன் ,இதுக்கு ஒரு பிராபல்ய பதிவர் என் கமெண்ட் வெளியிடாம தவிர்த்துவிட்டார். அவர் பதிவு என்னத்த சொல்ல.

பேசில்லஸ் துரிஞ்சனிஸ் வச்சு கத்திரிக்கா, பருத்தில எல்லாம் எப்படி மரபணு மாற்றம் செய்றாங்கனு கூட தெரியாம மனித மரபணு மாற்றம் பற்றி படம் எடுக்கீறாங்க,ஸ்டெம் செல்ல இருந்து டி என் ஏ எடுத்தா மட்டுமே மரபணு மாற்றத்திற்கு பயன்படும்.அதனால தானே இப்போ தொப்புள்கொடி எல்லாம் பாதுகாக்க வங்கி வந்திருக்கு. இல்லைனா முது தண்டு வடத்தில இருந்து எடுக்கணும் .

அப்படியே மரபணு மாற்றம் செய்தாலும் அதன் விளைவு ஆப் ஸ்ப்ரிங் ல தான் வெளிப்படும். சாதாரண கிராஸ் பிரிடிங்க்லவே அதான் கதை. F1,F2,F3 ... விரும்பும் குணாம்சம் உள்ள வகை கிடைக்கும் வரை செக்ரிகேஷன் செய்து தனி வகையா அறிவிப்பார்கள்.

ஆனா ஸ்பைடர் மேன் பார்த்தா இது மனுசன் டி என் ஏ னு சந்தோஷப்பட்டுக்கணும். ஸ்பைடர் மேன்ல சிலந்தியோட அறிவு வரதாக் காட்டலை. எனக்கு என்னமோ முருகதாசு ஸ்பைடார்மேன் பார்த்து இன்ஸ்பயர் ஆகி இருப்பாரோனு தோனுது. பேசாமா போதி தர்மர் ஆவி சூர்யாவ கடிச்சு அபூர்வ சக்தி வருவதாக காட்டி இருந்திருக்கலாம் :-))

வவ்வால் said...

தெ.கா,

//அதனை சப்பை கட்டும் விதமாக கதாநாயகி, இது போன்ற பரம்பரை குணங்கள் தலைமுறையாக கடத்தப்பெறுகிறது என்று வேறு அழுத்தம் திருத்தமாக கூறுவார். //

இப்படி பேசுவது பிராம்மணியம் அல்லது மேட்டுக்குடித்தனம் என்றும் சொல்லலாம். யாராவது மாற்று சமூகத்தினர் புதுசா சங்கீதம் கத்துக்கபோனா இதெல்லாம் ரத்தத்திலயே ஊரி இருக்கணும் சொல்வாங்க சிலர்.யாராவது பெரிய வித்தவான் வாரிசு நல்லாப்பாடினா இதெல்லாம் அவா பரம்பரை ரத்ததுல சங்கீதம் ஓடுதுன்னா என்பார்கள். கொலஸ்ட்ரால் வேணா அதிகமா ஒடும் !

பழமைவாதம் பேசும் படத்திற்கு பேரு அறிவியல் படம் , தமிழன் பார்க்கலைனா கண்ணு அவிஞ்சு பூடுமாம் :-))

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!படம் பார்த்தா பதிவு போடனும்.இங்கே வந்து பின்னூட்டத்துல உட்கார்ந்துகிட்டா நாங்களும் ஏதாவது சொல்லனுமில்ல:)நேற்றுத்தான் மேட்னி பார்த்தேன்.போதி தர்மர் சீனாவுக்குப் போய் மருந்து குடிச்ச மயக்கத்துல நானும் தூங்கிப் போனேன்.திடீர்ன்னு எழுந்து பார்த்தா சூரியாவும்,ஸ்ருதியும் யானை மேல உட்கார்ந்துட்டுருக்காங்க.தெகா உங்கள் துறை சார்ந்திருப்பதால் நிறை,குறைகளை விமர்சிக்கும் தகுதி உங்களுக்குண்டு.ஆனால் உங்களை மாதிரியோ,என்னை மாதிரியோ சிந்திப்பவர்களுக்காக படம் செய்ய முடியாது.ரெட் ஜெயண்ட்ன்னு பேனர் போடற போதும் தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின் பார்க்க்ற சிலருக்கு திக்ன்னு யோசிப்பவர்களும் இருக்க கூடும்.ஒரு நூலிழை தொட்டு அதைத் தொடர்ந்து கதை சொன்னதெல்லாம் சிலருக்கு மனசுல அப்படியே பதிந்து போகும்.ஆனால் வியாப்ர்ர ரீதியாக படம் படுத்துக்கும்.உதாரணம் அன்பே சிவம்.இந்திப்படத்துறையெல்லாம் இப்பொழுது கார்பரேட் ஆகி விட்டது.படங்களும் வித்தியாசமாக நிறைய செலவழிக்கிறாங்க.இந்தி தவிர நிமிர்ந்து பார்க்க வைக்கும் இன்னுமொரு திரைப்பட கலைஞர்கள் இந்தியாவில் தமிழர்களே.சத்யசித்ரே கால வங்காளமெல்லாம் மலையேறிப்போச்சு:)

ராஜ நடராஜன் said...

ஒரு பின்னூட்டம்தான் போடனுமின்னு நினைச்சேன்.முடியல:)வெளி நாட்டு திரைப்பட உரிமையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.தமிழகத்தில் படம் போணியாகனும்.அதற்கான முன் விளம்பரங்களில் ஆறாம் அறிவு முந்திக்கொண்டதெனலாம். அப்புறம்,தீபாவளி ரிலிஸ்,சூர்யா படமா,விஜய் படமா என்ற ரசிகர்களின் போட்டி,தயாரிப்பாளருக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை தருமா என்ற முக்கிய காரணிகளும்,இயக்குநர் மற்றும் ஒட்டு மொத்தக் குழுவின் திறமைகள் போன்றவையே படத்தை நிர்ணயம் செய்கின்றன.இறுதியாக நீங்க சொல்லும் சூழல் சார்ந்து படம் வந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.பதிவு போடற அளவுக்கு படம் இருப்பதே முருகதாஸ்க்கு வெற்றிதான்.அடுத்த வாரம் வேலாயுதம் பார்த்துட்டு யாராவது பதிவுக்கு பதில் சொல்றேன்:)

சந்துருவின் பால் விதி said...

"மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம்" என்று தெகா எழுதியிருந்தார். அவருக்கு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன் அவர் ஏனோ அதைப் போட வில்லை.
அறிவு சார்ந்த விஷயங்கள் மரபணு மூலம் கடத்தப் படுவதை குறிக்க ஆங்கிலத்தில் (Traits) என்றொரு வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இயற்கையின் பல வினோதங்களை உற்றுப் பார்த்து அறியலாம். முட்டையை விட்டு வெளிவந்த ஆமைக்குஞ்சு சரியாக கடல் இருக்கும் திசையை நோக்கி செல்வதேன்? பிறப்புறுப்பிலிருந்து வெளி வரும் கங்காரு குட்டி தனக்கான பையை நோக்கி சென்று பைக்குள் ஏறி ஓளிந்து கொள்வது படித்து அறிந்த அறிவா? , குஞ்சுப் பறவை தாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட்டைவிட்டு தனது உடன்பிறப்புகளை தள்ளிவிட்டு கொல்வது உடல் சார்ந்த விஷயமா? இதைவிடக் கொடுமை கருவிலேயே பங்காளிகளை கொல்லும் சுறா வின் அறிவு எங்கிருந்து பெறப் பட்டது, புழுவாகப் பிறந்தாலும் அந்தக் கூட்டுப் புழு பருவத்தை கடக்க, பாதுகாப்பான கூடு தயாரிக்க முசுக்கொட்டை செடியின் இலையை தின்று உன்னதமான நூலைத் தயார் செய்வது அறிவா?

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

//ஆனால் உங்களை மாதிரியோ,என்னை மாதிரியோ சிந்திப்பவர்களுக்காக படம் செய்ய முடியாது.//

நமக்காக எடுக்கச் சொல்லல ராஜ நட. ஏற்கெனவே அறிவியல் சார் உண்மைகள் குறைந்தளவே சென்றடைத்திருக்கிற ஒரு சமூகத்திற்கு நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளவற்றையே மீண்டும் குழைத்து அறிவியல் என்ற போர்வையில் வழங்குவது தவறான வழியில் மக்களை வழி நடத்தக் கூடும். இது போன்ற சிறு சிறு விசயங்களே பரமக்குடி போன்ற நிகழ்வுகளை தூக்கி நிறுத்தும் சோர்ஸ்களாக பாருங்கள், அபத்தம் புரியும்.

மேலோட்டமாக கடந்து சென்று விட முடியாது.

//ரெட் ஜெயண்ட்ன்னு பேனர் போடற போதும் தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின் பார்க்க்ற சிலருக்கு திக்ன்னு யோசிப்பவர்களும் இருக்க கூடும்.//

படத்தில் வரும் மிஷன் ரெட்டிற்கும், சினிமா துறையில் ரெட் ஜெயண்ட் செய்வதும் ஒரே வேலையத்தான். பரவாயில்ல அதை குறியீடாக படத்தின் இயக்குனர் சரியாக செஞ்சிருக்கார் :))

சுரேகா.. said...

அண்ணாத்த! :))

பிரிச்சு மேஞ்சுருக்கீங்க!

உங்களுக்கு மின்னஞ்சலுகிறேன்.

சுரேகா.. said...

சந்துருவின் பால்விதி சொல்றதில் ஏதோ விஷயம் இருக்குற மாதிரி இருக்கே!

(ஏதோ என்னால முடிஞ்சது! ).

Radhakrishnan said...

அருமை தெகா. யதார்த்தமான எழுத்து.

Radhakrishnan said...

'சந்துருவின் பால் விதி' 'அறிவு சார்ந்த விஷயங்கள் மரபணு மூலம் கடத்தப் படுவதை குறிக்க ஆங்கிலத்தில் (Traits) என்றொரு வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.'

சில விசயங்கள் அறிவுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியதில்லை. உலகில் எல்லா விசயங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. பல விசயங்களை இதுதான் என சுருக்கி கொள்ளவும் முடியாது. பரிணாமத்தில் சில விசயங்கள் நமக்கு புரிபடுவதே இல்லை. நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் எல்லாம் லமார்க் கொள்கைக்கு உட்பட்டது, டார்வின் கொள்கைக்கு அல்ல என்பது நான் அறிந்த அறிவிற்கு எட்டியது. மேலும் விளக்கம் சொன்னால் விளங்கி கொள்கிறேன். நன்றி.

Thekkikattan|தெகா said...

சந்துருவின் பால் வீதி...

நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஒரு உயிரினமாக ஒரு species தலைத்தோங்க அது சார்ந்து வாழும் சுற்றுப்புறத் தேவைகளுக்கென தகவமைவாக பெற்றுக் கொண்டது. அது போன்ற behavioral traits are called innate, instinctual சமவெளிகளில் வாழும் கால்நடையையொத்த விலங்கினங்களின் குட்டிகள் பிறந்து விழுந்த சில நாழிகையிலே எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்க வில்லையெனில் அந்த இனத்தின் சர்வைவலே கேள்விக் குறிதான்.

அது போலவே நீருக்குள் வாழும் மீன்கள், பறவைகளுக்கான தகவமைவுகள். அது போல பறவைகள் வலசை போதல், தேனீக்களில் திசையறியும் திறன் பின்பு நீங்க ஒரு மித்தாக சுட்டிக்காட்டிய அனைத்து விசயங்களும் மேலே குறிப்பிட்ட behavioral traitsல் dnaக்குள் பொதிக்கப்பட்டு நிகழும் சமாச்சாரம்.

நமது மனித குழந்தைக்க்கு பால் ஊட்ட சொல்லிக் கொடுக்க வேண்டியதில்ல இம்பல்சிவ் உணர்வு நாலேயே தொடங்கி விடுகிறது... இதனை ட்ரை செஞ்சு பாருங்க பால் குடி ஆரம்பிக்காத அப்பொழுதே பிறந்த குழந்தையின் கண்ணத்தில் மென்மையாக ஒரு விரலாம் சிறு தொடல் செய்து பாருங்கள் விரல் உள்ள பக்கமாக வாயைத் திருப்பிக் கொண்டு வரும். இதெல்லாம் adaptive attributes... மரபணுக்குள் நேற்று நான் அதி சிறந்த ஒரு புத்தகத்தை வாசித்தேன், அல்லது சிறந்த எழுத்தாளன் போன்ற விசயங்கள் பொதிக்கப்படுவது கிடையாது அது எனது குழந்தைக்கு கடத்தப் பெறுவதற்கு...

வவ்வால் said...

தெ.கா,

//வாழும் கால்நடையையொத்த விலங்கினங்களின் குட்டிகள் பிறந்து விழுந்த சில நாழிகையிலே எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்க வில்லையெனில் அந்த இனத்தின் சர்வைவலே கேள்விக் குறிதான்.//

இதற்கு நல்ல உதாரணம் ஒட்டகசிவிங்கி, குட்டிப்போட்டதும் எழுந்து நடக்கவில்லை எனில் ஒரு உதைக்கொடுக்கும், அப்பவும் எழவில்லை எனில் அடுத்த உதை அப்போதும் நடக்கவில்லை எனில் அப்படியே விட்டு விட்டு போய்விடும், ஏன் எனில் நடக்காத குட்டி காட்டில் வாழாது, அதை காக்கவும் தாய்க்கு நேரம் இருக்காது.

அதே போல வலசைப்போகும் (ஆர்டிக் டெர்ன்) பறவைகள் புவி மின்காந்த வீச்சை வைத்தே திசை அறிகின்றன, அது வாழ்வியல் தேவையினால் உருவானது. ஆர்டிக்ல வலசைப்போகும் எல்லாப்பறவைக்கும் அது இயல்பா வரும்.அதுக்கு ஒரு ஜிபிஎஸ் வாங்கி வைக்க அறிவு கற்றுக்கொடுக்கவில்லை.:-))

-------------------------------------------------------------

சந்துரு,

//அறிவு சார்ந்த விஷயங்கள் மரபணு மூலம் கடத்தப் படுவதை குறிக்க ஆங்கிலத்தில் (Traits) என்றொரு வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இயற்கையின் பல வினோதங்களை உற்றுப் பார்த்து அறியலாம். முட்டையை விட்டு வெளிவந்த ஆமைக்குஞ்சு சரியாக கடல் இருக்கும் திசையை நோக்கி செல்வதேன்? பிறப்புறுப்பிலிருந்து வெளி வரும் கங்காரு குட்டி தனக்கான பையை நோக்கி சென்று பைக்குள் ஏறி ஓளிந்து கொள்வது படித்து அறிந்த அறிவா? , குஞ்சுப் பறவை தாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட்டைவிட்டு தனது உடன்பிறப்புகளை தள்ளிவிட்டு கொல்வது உடல் சார்ந்த விஷயமா? இதைவிடக் கொடுமை கருவிலேயே பங்காளிகளை கொல்லும் சுறா வின் அறிவு எங்கிருந்து பெறப் பட்டது, புழுவாகப் பிறந்தாலும் அந்தக் கூட்டுப் புழு பருவத்தை கடக்க, பாதுகாப்பான கூடு தயாரிக்க முசுக்கொட்டை செடியின் இலையை தின்று உன்னதமான நூலைத் தயார் செய்வது அறிவா?//

நீங்க சொல்ற டிரய்ட் என்பது அறிவல்ல குணம், யாராவது வீட்டுக்கு வந்தா வாங்க,சாப்பிட்டிங்களா, எனக்கேட்பது அறிவு என்று சொல்வதில்லை ,குணம் என்றே சொல்வார்கள்.

சில இயல்பான குணங்கள் அதுவும் வாழ்வியலுக்கு தேவையானவை மட்டுமே சந்ததியினருக்கு கடத்தப்படும்.

சட்டம் என் கையில் னு ஒரு பழையப்படம், தேங்காசீனி,கமல் இரட்டை வேடம்,,அசோகன்,சிரிபிரியா எல்லாம் நடித்தது.தேங்கா நான் வக்கீல் என் மகனும் வக்கீல் ஆவான், அசோகன் திருடன் அதனால உன் மகன் திருடன் ஆவான்னு சொல்வார். அசோகன் தேங்கா மகன் கமலை எடுத்துப்போய் திருடன் ஆக்குவார், அதே சமயம் அசோகன் மகன் சிரிகாந்த் படித்து வக்கீல் ஆவார்.அதுல சொர்க்கம் மதுவிலேனு சோக்கா ஒரு பாட்டு வேற இருக்கு!

அதாவது பரம்பரையா கல்வி அறிவெல்லாம் கடத்தப்படாதுனு ஒரு சினிமா அப்போவே சொல்லி இருக்கு எனவே இப்போ ஒத்துப்பீங்க தானே :-))

ஒரு விதையா நேரா ,தலைகீழா எப்படி நட்டாலும் வேர் கீழ் நோக்கியும், தண்டு மேல் நோக்கியே வரும் உடனே அது அறிவுனு சொல்லிடுவிங்களா? ஜியோட்ரோபிசம், போட்டோட்ரோபிசம்னு ரெண்டும் தான் காரணம், இதற்கான ஜீன் விதைல இருக்கு.அவ்வளவு தான்.

ஆனா இந்த ஜீன் விண்வெளில வேலை செய்யலை ,ஏன் எனில் அங்கே ஈர்ப்பு சக்தியோ, ஒளியோ ஒரு திசைல இல்லை எனவே விதை முளைப்பதே இல்லை.இதெல்லாம் நாசா ஆய்வு செய்யுது. ஏன் எனில் மனிதன் விண்ணில் குடியேறினால் உணவு உற்பத்தி செய்ய முடியுமானு பார்க்கதான்.இன்னொன்னு இருக்கு நம்ம விந்தணு கூட விண்ணில் செயல் படலையாம், நார்மலா நீந்திப்போகும், இப்போ விண்வெளில ஏன் இதெல்லாம் வேளை செய்யலை? இதெல்லாம் நான்ப்படிக்கிற காலத்தில எங்க கல்லூரி வாத்தியார் சொன்னது.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நன்றிங்கோவ்... இத்தனை நாட்கள் தலைகீழா தொங்கி பார்க்கிற கோணங்களை முன் வைக்காமல் we missed you bat.

பின்னூட்டங்கள் மேலும் பதிவின் கருத்தை செழுமை படுத்துகிறது. நன்றி!

Anna said...

என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள் தெகா. பக்கத்தில் இருந்த துணைவனிடம், சொல்லறது எல்லாமே பிழை, எல்லாமே பிழை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தது தான் மிச்சம்.
ஆனால் முடிவில் ஒரு இனத்தை 9 நாடுகள் சேர்ந்து அழித்ததற்குப் பெயர் வீரமல்ல துரோகம் என்ற பின் திரையங்கு முழுதும் கைதட்டலும் விசிலும் தான். ஏதோ உலக மகா ரகசியம், ஒருத்தனுக்கும் தெரியாது சின்னப் பிள்ளைகள், இப்பத்தான் இவர்கள் உண்மையைப் போட்டுடைத்தார்கள் என்ற மாதிரி நினைப்பு. இப்படித்தான் எமக்கு நாமே சொல்லி முதுகில் தட்டிக் கொண்டிருந்து என்ன பயன் என்று விளங்கியதேயில்லை. புலம் பெயர் தமிழரின் காசுக்காகவே வசனம் புகுத்தப்பட்டது போன்றிருந்தது. அதன் பின் எல்லோரும் அறிவியலைப் பற்றிச் சொன்னதை உன்னைத் தவிர யாரும் புரிந்திருக்கமாட்டார்கள், அதனால் பரவாயில்லை. மற்றப்படி படம் super தானே என்ற போது தலையை எங்கே கொண்டுபோய் அடிக்கலாம் என்றிருந்தது.

கிட்டத்தட்ட மதவாதிகளின் வாதம் போலிருக்கிறது. எங்களை விட்டால் புத்திசாலிகள் யாருமே இல்லை, நாங்கள் எல்லாம் எப்போதோ கண்டுபிடித்துவிட்டோம். எல்லாமே பிழையாகச் சொல்லொவிட்டு, இப்ப கஸ்டப்பட்டு செய்யும் ஆராய்ச்சியெல்லாம் ஒரு தூசுக்கும் பெறாது என்ற ரேஞ்சில் கதை விடும் போது கொஞ்சம் கூட மூளையில் உறைப்பதில்லையோ?

பழமைபேசி said...

போதிதர்மரைத் தெரிஞ்சுகிட்டேன்...

வணிகம் வெற்றி பெறுவதற்குத்தான் படம்.

அப்புறம் ஏன் நீங்க தமிழருக்கான படம்னு சொல்லிச் சொல்றீங்க??

அப்படிச் சொன்னாத்தான் வணிகம் வெல்லும். அதான் சொல்லுறாய்ங்க.

வணிகத்துக்காக தமிழை அடமானம் வெக்கலாமா??

நீங்க எந்த மாமங்கத்துல இருக்கீங்க தெ.கா??

Thekkikattan|தெகா said...

அன்னா, எப்படி இருக்கீங்க?

//புலம் பெயர் தமிழரின் காசுக்காகவே வசனம் புகுத்தப்பட்டது போன்றிருந்தது.//

இப்படியாக இருப்பார்கள் என்றறிந்தேதான் அப்படியான ஒரு செருகள் வலிந்து திணிக்கப்படுகிறது.

//கிட்டத்தட்ட மதவாதிகளின் வாதம் போலிருக்கிறது. எங்களை விட்டால் புத்திசாலிகள் யாருமே இல்லை, நாங்கள் எல்லாம் எப்போதோ கண்டுபிடித்துவிட்டோம்.//

மிகச் சரியாக இந்தப் படம் எந்த அடி நாதத்தில் தொடப்பட்டு திரையில் விரிந்திருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டிட்டீங்க. அதேதான்! ஒரு காலத்தில மின்னஞ்சல்களின் மூலமாக இது போன்று பழம் பெருமை பேசியபடி ஒரு பெரிய லாண்ட்ரி லிஸ்ட் போலான சாதனைகள் நிகழ்த்திக் கொண்டு சுத்தி வந்தது, அந்த எண்ணவோட்டத்தின் அடிப்படையே இந்த படம்.

//கிட்டத்தட்ட மதவாதிகளின் வாதம் போலிருக்கிறது//

:))) இந்த பதிவில் இணைத்திருக்கும் அந்த புகைப்படம் அதனைத்தான் சுட்டி நிற்கிறது... தலையில ஆண்டென்னா பார்த்தீங்களா, எல்லாமே யாம் அறிவோம்! :P

முகுந்த்; Amma said...

சீக்கிரம் வரமுடியாததுக்கு மன்னிக்கவும்.

வீட்டுக்கு நேற்று சில விருந்தாளிகள் வந்திருந்தனர், எதோதோ பேசிக்கொண்டிருந்த பின்னர், சினிமா பக்கம் பேச்சு திரும்பியதும், அவர்கள் சொன்னது இது,

”உங்க ஃபீல்டு பத்தி நிறைய 7ஆம் அறிவு படத்துல சொல்லுறாங்க இல்ல..டி.என்.ஏவை எப்படி மாற்றியமைக்காலாம்னு எல்லாம் சொல்லுறாங்க..அப்பாடி எவ்வளவு சயின்ஸ் முன்னேறிடுச்சு இல்ல”

இப்படி சொன்னவர்கள் எல்லாம் நன்றாக படித்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்கள். இவர்களே டி.என்.ஏ பற்றி படத்தில் சொல்வதை நம்புகிறார்கள் என்றால் ஊரில இருக்கிற சாதாரன மக்களை யோசிங்க.

எப்படி எல்லாம் அறிவியலை திரிச்சி படம் எடுக்கிறாங்க.

தாங்கள் சொல்லும் அனைத்தும் அருமை.

என்னுடைய பதிவிற்கு இனைப்பு கொடுத்ததற்கு நன்றி பல.

Bibiliobibuli said...

Analyst, தமிழ் சினிமா பொறுத்தவரை அவங்களோட இந்த அபத்தம் தவிர (ஏழாம் அறிவு), புலம் பெயர் தமிழர்களிடமும் சில பிழைகள் இருக்கவே செய்கிறது.

என்ன வழங்கப்படுகிறதோ அதை திருப்பி போட்டு யோசிக்க கற்றுக்கொள்ளும் மாற்றுச் சிந்தனை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே என்றும் தோன்றுகிறது.

ஈழத்து இனப்படுகொலை பற்றி ஒரு படம் எடுக்காது தமிழ் நாட்டு கோலிவுட்!!

ஆனால், எங்கட ஆட்கள் ஒரு வசனத்துக்கே கைதட்டும் அளவு சொன்னாலே புலம் பெயர் நாட்டில் அதுக்குரிய விலை கிடைத்துவிடும் என்கிற மலினமான யுக்தி அறியும், கோலிவுட்.

ஏழாம் அறிவு படத்தை விட வேலாயுதம் நல்லாருக்காம். அவர்களுக்கு மாற்று கிடைத்தால் போதும் போல :((

உங்கள் கருத்து யோசிக்க வைத்தது. நன்றி.

chnadru's rule of gender determination said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஆனாலும் பலரின் விமர்சனங்களில் உள்ள குறையை விமர்சிக்கலாம் அல்லவா. ”குங்க்பூ, தியானம் ஆகியவற்றை உலகுக்கு போதித்தவன் போதிதர்மன் என்ற தமிழன் தான்”. என்ற ஒரு வரியை உலகுக்கு சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?. மைக் வைத்து சொல்லமுடியாது, இண்டெர் நெட்டில் ஏற்கனவே உள்ளது. முதலில் கடைக் கோடி தமிழனுக்கு சொல்லனும். இன்றைய தமிழனுக்கு என்சைக்ளோபீடியா என்றால் திரைப் படம்தான் என்பதை தலைகீழாகத் தொங்கினாலும் மறுக்கமுடியாது. ஆனால் ஒரு வரியைச் சொல்ல ஒரு படம் எடுக்கமுடியாது. மசால் தடவ வேண்டிய அவசியம். மசால் உங்கள் டேஸ்ட்டுக்கு இல்லை. அதற்காக ஊரே கூடி கும்முவது, தமிழன் மீதுள்ள தமிழனின் பொறாமையாகத்தான் கருத வேண்டியதாக இருக்கிறது.
கிழக்கே சூரியன் உதிக்கிறான் என்று எளிய நிகழ்வை சொல்லிக் கொடுப்பதும் அறிவியல்தான். ஆனால் அதற்காக கிழக்கு என்பது பூமியைப் பொறுத்துதான் ஆகவே தவறு, மற்றும் உத்ராயணம் தட்சினாயனம் காலத்தில் கிழக்கு 50 டிகிரி மாற்றம் அடைகிறது ஆகவே கிழக்கு என்பது அடிப்படையிலே தப்பு என்று மூன்றாம் வகுப்பு குழந்தையிடம் சொல்லி படிப்பை கெடுத்தவிதமாக்கி விடக் கூடாது.

Chandru's rule of gender determination said...

behavioral traits, behavioral traits are called innate, instinctual ,adaptive attributes. .நான்தான் முதலில் சொல்லிவிட்டேன் ஆங்கில வார்த்தைகளைப் போட்டால் விவரித்ததாகாது. "எல்லாப் பறவைக்கும் அது இயல்பா வரும்”.

கடவுள் செய்யும் போது மூளையில் அந்த சமாச்சாரத்தை வைத்துப் படைத்தாரா?

அதுக்கு ஒரு ஜிபிஎஸ் வாங்கி வைக்க அறிவு கற்றுக்கொடுக்கவில்லை.
நீங்க சொல்ற டிரய்ட் என்பது அறிவல்ல குணம்,

எதைத்தான் அறிவு என்கிறீர்கள்?

யாராவது வீட்டுக்கு வந்தா வாங்க,சாப்பிட்டிங்களா, எனக்கேட்பது அறிவு என்று சொல்வதில்லை ,குணம் என்றே சொல்வார்கள்.

இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா?

புழுவை தேடி எடுத்து அதனுள் தனது ஹார்மோனை செலுத்தி கெட்டுப் போகாதவாறு கொன்று அதனுள் தனது முட்டையை இட்டு அதை எடுத்து ஒரு பொந்துக்குள் வைத்து சுற்றி களி மண்ணால் மூடி வைத்து விட்டு தனது வாரிசு வந்துவிடும் நம்பிக்கையுடன் சென்றுவிடுகிறது. இது பிறந்தவுடன் செய்யும் காரியம் இல்லை, பருவம் எய்தபின் செய்யும் வேலை இதற்காக அது பயிற்சி எடுப்பதில்லை.தனது இனப் பெருக்கத்திற்கான பாதுகாப்பான வழியாக இதைத் தேர்ந்தெடுத்து செய்து வருகிறது. இது ஓரிரவுக்குள் செய்த ஏற்பாடன்று. பல்லாயிரக் கணக்கான வருடங்களாக செய்த சோதனைத் தோல்விகளுக்குப் பின் அவ்வப்பொழுது மெருகூட்டப் பட்டு பூர்த்தியான விந்தையான வித்தை இது. இன்றும் வாழ்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது. வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம். ஆமாம் அந்த ஒவியங்கள் எல்லாம் ஒன்றை குறிப்பிடுவதை காணலாம். அவைகள் இரண்டு கண்கள் பெரிதாக உள்ள ஒரு கோரமூஞ்சியையும், பூக்களையும், சருகுகளையும் நினைவு படுத்துவதைக் காணலாம். பெரும்பாலும் கோரமூஞ்சிகள் அவைகளின் தீவிர எதிரியான பறவைகளில், கழுகு அல்லது ஆந்தை முகத்தை நினைவுபடுத்தும். ஏனென்றால் அப்பறவைகளின் வாயிலிருக்கும் போது அவைகளின் கண்களைக் கண்டு பயந்து, அதிர்ஷ்டவசமாக தப்பித்ததால், சாவின் விளிம்பில், கண்ணுக்கு தெரிந்த குளோசப் காட்சி, நெஞ்சில் நின்று கருவிலும் பதிந்து விட்டதோ.அதையே தனது இறகுகளில் வரைந்து கொண்டு பிற ஊணுன்னிகளிடமிருந்து தப்பிக்கிறது.கண்ணால் கண்டதை நினைவில் வைத்து சாயக் கலவை, தூரிகை, இல்லாமல் தனது இறக்கையில் ஓவியம் வரைவது அதிசயம் தானே.
Wiki Says, 'Lamarckism proposes that individual efforts during the lifetime of the organisms were the main mechanism driving species to adaptation, as they supposedly would acquire adaptive changes and pass them on to offspring. interest in Lamarckism has recently increased, as several studies in the field of epigenetics have highlighted the possible inheritance of behavioral traits acquired by the previous generation. In a wider context, soft inheritance is of use when examining the evolution of cultures and ideas, and is related to the theory of memetics."

ராஜ நடராஜன் said...

//ஈழத்து இனப்படுகொலை பற்றி ஒரு படம் எடுக்காது தமிழ் நாட்டு கோலிவுட்!!
//

ரதி!சினிமாவும் அரசியல் சார்ந்ததே!நியாயமாக எழும் தமிழ் மக்கள் குரலையே மத்திய அரசாங்கம் கண்டு கொள்வதில்லை.இதில் ஈழத்து இனப்படுகொலை பற்றியெல்லாம் திரைப்படமா?காசு போட்டு காசு பார்க்கும் தொழில் சினிமா.தற்போதைய சூழலில் குறும்படமாகவோ,புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே ஈழம் குறித்து முழு திரைப்படம் செய்ய இயலும்.தமிழ் நாட்டுக்கு வாய்ச்சது இடைச்செறுகல் வசனங்கள் மட்டுமே.

ராஜ நடராஜன் said...

தெகா!சினிமாங்கிறதால இன்னுமொரு பின்னூட்டம் போட்டுட வேண்டியதுதான்.அதென்ன Netflix,Hulu எல்லாம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே என ஓர வஞ்சனை!இப்ப நானும் Netflix பார்க்கிறேனாக்கும்:)

ஜோதிஜி said...

தெகா

சந்துரு வெளுத்து வாங்குறாரு?

கூடவே நடா

நடக்கட்டும் நடக்கட்டும்.

Thekkikattan|தெகா said...

//
சந்துரு வெளுத்து வாங்குறாரு?//

முண்டாசு, உங்களுக்கு விளங்கிருச்சில்ல பின்ன என்ன ஒரு ஊருக்கே விளங்கின மாதிரி. பள்ளி கூடத்து பொஸ்தவத்திலயே லாமார்க் பரிணாமத்தை சாய்ஸ்ல விட்டே கொஸ்டின் பேப்பர்ல பார்த்திருக்கியளா? எப்பயாவது 15 மார்க்கு கேள்வியிலோ அல்லது 25 மார்க் கொடுக்கிறேன்னோ கேள்வி பார்த்திருக்கீங்களா?

அவ்வளவுதான் அதுக்கு இன்றைய அறிவியல்ல இடம்... ;-)

வவ்வால் said...

சந்துரு,

//புழுவை தேடி எடுத்து அதனுள் தனது ஹார்மோனை செலுத்தி கெட்டுப் போகாதவாறு கொன்று அதனுள் தனது முட்டையை இட்டு அதை எடுத்து ஒரு பொந்துக்குள் வைத்து சுற்றி களி மண்ணால் மூடி வைத்து விட்டு தனது வாரிசு வந்துவிடும் நம்பிக்கையுடன் சென்றுவிடுகிறது. இது பிறந்தவுடன் செய்யும் காரியம் இல்லை, பருவம் எய்தபின் செய்யும் வேலை இதற்காக அது பயிற்சி எடுப்பதில்லை.தனது இனப் பெருக்கத்திற்கான பாதுகாப்பான வழியாக இதைத் தேர்ந்தெடுத்து செய்து வருகிறது.//

உங்க உதாரணமெல்லாம் சோக்கா தான் கீது, ஆனா வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குது கணக்கா கீது! :-))

7 ஆம் அறிவு பத்தி பேச வந்துட்டு 5 அறிவுக்கு மேல உதாரணம் காட்டிப்பேச மாட்டேன்கிறிங்க,

இவ்வளவு செய்ற அந்த குளவிய ஏன் ஆறு அறிவு படைத்த ஜீவனா சொல்ல மாட்டேன்கிறாங்க?
பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,தொடுதல்,வாசனை, ஆகிய ஐந்தும் எல்லாருக்கும் இயல்பாக வருபவை அதனை யாருக்கும் சொல்லி தர வேண்டியதில்லை, இந்த ஐந்தும் அனைத்து உயிருக்கும் அடிப்படைத் தேவை. இது சார்ந்து செயல்படக்கூடியவை மட்டும் மனிதன் செய்வதில்லை.அவன் என்னவெல்லாம் செய்வான் என்பதற்கு எல்லையே இல்லை, அணுவைப்பிளக்கும் வேலையை நமது முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்கவில்லை இப்போது எப்படி செய்கிறோம்.

அந்த வண்டு புழுவின் உடலில் செலுத்துவது ஹார்மோன் அல்ல நரம்புகளை செயல் இழக்க செய்யும் ஒரு எளிய விஷம். புழு சாகாது அதே சமயம் அசைய முடியாது, லார்வே வரும் வரை சிறுக சிறுக சாகும்.இது அற்புதம் என்றால் , என்ன சொல்வது, காரணம் குளவி இனம் தோன்றிய காலத்தில் இருந்து எல்லாமே இதையே செய்கின்றன எந்த தலை முறையிலும் முன்னேற்றமே செய்யவில்லை. அதற்கு என்ன விஷம் நாம் செலுத்துகிறோம் , என்பது கூட தெரியாது. ஏன் ,காரணம் அது எதனையும் கற்றுக்கொள்ளவில்லை, அப்படி கற்றுக்கொண்டு மாற்றம் செய்வது தான் பரிணாம வளர்ச்சி. அப்படி மாற்றம் கண்டிருந்தால் அந்த குளவி இப்போ சினிமாவில் ஹீரோவாக டூயட் பாடிக்கொண்டிக்கலாம்!

learning by doing

experince is knowledge

information is knowledge

நான்கு காலில் நடந்தவன் இரண்டு காலில் நிமிர்ந்தது பரிணாம வளர்ச்சி. இது மற்றவற்றிற்கு நடக்காமல் போனதால் இன்னும் விலங்காகவே இருக்கின்றன. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே இப்போது இருப்பதாக படுகிறது. மெந்தோ பிளஸ் விளம்பரம் பாருங்க இந்த பரிணாம மாற்றத்தை காமெடியா சொல்லி இருப்பாங்க.
நெருப்பை பார்த்து மற்ற விலங்குகள் போல பயந்தான் பின்னர் அதனை சேமித்து வைத்து பயன்ப்படுத்த கற்றுக்கொண்டான், பின்னர் தேவைக்கு சிக்கி முக்கி கல்லை உரசி உருவாக்க தெரிந்து கொண்டான். பரிணாமம் இங்கே இருந்து தான் அறிவியல் பாதையில் சென்றது.

எனக்கு ஒரு சந்தேகம், பரம்பரையா ஜீன் வழியா அறிவு கடத்தப்படுகிறது என்றால், சூர்யாவோட ஜீனுக்குள்ளும் தானாவே அறிவு இருந்து சூர்யாவும் ஒரு சித்த மருத்துவராக/குங்குபூ மாஸ்டராக தானே படத்தில் வந்திருக்க வேண்டும். ஏன் சர்கஸ் கலைஞர் ஆனார்.

இப்போ நீங்க மருத்துவர் , ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்றிங்க , அப்படினா உங்க பையன் மெடிகல் காலேஜ்ல படிக்காமலே மருத்துவர் ஆகி ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்வாராக்கும்! :-)) ஒரே மருத்துவர் பட்டம் அப்புறம் பரம்பரையே ஓஹோனு வாழும்!

ஆனால் இது தெரியாம பல மருத்துவர்கள் அவங்க பசங்களுக்கு மெடிக்கல் காலேஜ்ல சேர்க லட்சக்கணக்கில செலவு பன்றாங்க!

கையேடு said...

செல்லாது செல்லாது... எல்லாம் சித்தர் பாடல்களில் எப்பவோ சொல்லியாச்சு. திருவள்ளுவர் கூட இதைப் பற்றி சொல்லியாச்சு.. ( அவர் எதை விட்டார்ங்கிற தைரியத்துல சொன்னேன்..)

தமிழ் இலக்கியத்தையும் மதப் புத்தகமா மாத்தாம ஓயமாட்டாங்க போல எக்ஸ்ட்ரா அறிவு கொண்டவங்க.. இதோட நிறுத்திகிட்டு எஸ் ஆயிகிறேன்.. :)

உயிரும் உயிரின் பிரிவும் said...

வெள்ளக்காக்கா மல்லாக்கா பறப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை ஆனால் மந்திரிச்சு விடப் பட்ட கோழி மாதிரி திரியக் கூடாது. முதலில் பரிணாமத்தை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் அதில் நம்பிக்கை உள்ளவரா என்பதும் தெரியவில்லை. இயல்பு இயல்பு என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் என்ன? அல்லது ட்ரெய்ட் ட்ரெய்ட் என்கிறீர்களே அப்படி என்றால் என்ன அது என்ன கடவுள் கொடுத்ததா அதனால் அதைக் கேள்வி ஏதுமின்றி மனதுக்குள் ஏற்றுக் கொண்டீர்களா? எனது கேள்விகளை நன்றாகப் புரிந்து கொண்டு பதிலிடுங்கள்.
//பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,தொடுதல்,வாசனை, ஆகிய ஐந்தும் எல்லாருக்கும் இயல்பாக வருபவை அதனை யாருக்கும் சொல்லி தர வேண்டியதில்லை, இந்த ஐந்தும் அனைத்து உயிருக்கும் அடிப்படைத் தேவை. இது சார்ந்து செயல்படக்கூடியவை மட்டும் மனிதன் செய்வதில்லை.அவன் என்னவெல்லாம் செய்வான் என்பதற்கு எல்லையே இல்லை, //
கருவியின் துணையின்றி ஆப்டரால் ஒரு வெவ்வால் செய்யும் வேலையாகிய இருட்டில் பார்த்துப், பறக்கும் வேலை ஏன் செய்ய முடியவில்லை. பரிணாமத்தையும், கூட்டாகச் செய்யப்படும் தொழில் முன்னேற்றத்தையும் ஒன்றாக இணைத்துப் பேசாதீர்கள். கீழே விக்கிப் பீடியாவில் உள்ளதை கொடுத்துள்ளேன் கல்லூரியில் படித்ததாகச் சொல்கிறீர்கள் ஆதலால் மொழி பெயர்க்க வில்லை. புரியவில்லை என்றால் எனது பதிவில் ”உயிரும் உயிரின் பிரிவும்” என்று 18 பாகங்களில் எழுதியுள்ளதைப் http://chandroosblog.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
படித்துப் பாருங்கள்.விவாதிப்போம்.
Despite this abandonment of Lamarckism in olden days, interest in Lamarckism has recently increased, as several studies in the field of epigenetics have highlighted the possible inheritance of behavioral traits acquired by the previous generation. In a wider context, soft inheritance is of use when examining the evolution of cultures and ideas, and is related to the theory of memetics.
Memetics is a theory of mental content based on an analogy with Darwinian evolution, originating from Richard Dawkins' 1976 book The Selfish Gene. It purports to be an approach to evolutionary models of cultural information transfer. A meme, analogous to a gene, is essentially a "unit of culture"—an idea, belief, pattern of behaviour, etc. which is "hosted" in one or more individual minds, and which can reproduce itself from mind to mind. Thus what would otherwise be regarded as one individual influencing another to adopt a belief is seen memetically as a meme reproducing itself. As with genetics, particularly under Dawkins's interpretation, a meme's success may be due to its contribution to the effectiveness of its host. Memetics is notable for sidestepping the traditional concern with the truth of ideas and beliefs.

வவ்வால் said...

தெ.கா,

//படித்துப் பாருங்கள்.விவாதிப்போம்.//

சும்மாவே நான் காட்டுவேன்...இவர் வேற காட்டு ..காட்டுனு தானா கூப்பிடுறார்,(பிஞ்ச டயலாக்)நான் காட்டினா அப்புறம் ஏன் பதிவை சந்தைக்கடை ஆக்கிட்டிங்கனு சண்டைக்கு வர மாட்டிங்களே! பின்னூட்டங்கள் 100-150னு போய்கிடே இருக்கும்

------------------------------------------------------------------

சந்துரு,

ஜெனிடிக்ஸ் போய் எபிஜெனிடிக்ஸ் அப்புறம் இப்போ மைண்ட் என்று மெட்டா பிசிக்ஸ் குள்ள புகுந்து, மெமெடிக்ஸ் னு சொல்லி கல்சுரல் ட்ரெய்ட் பத்திக்கிறிங்க. தெளிவா ஒரே இடத்தில நின்று ஒரே சப்ஜெட்க்ல பேசுங்களேன். நீங்க ஆன்மீகம், சித்தாந்தம், வேதாந்தம், அறிவியல், ஜோதிடம்னு எல்லாத்துலயும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு ஜல்லி அடிப்பதாகவே படுகிறது.ஜோதிடம் தெரிந்தவர்கள் அஸ்ட்ரோனமிய ரிலேட் செய்து ஜோதிடமும் அறிவியல்னு சொல்றாப்போல நீங்க பேசுறிங்க

வவ்வால்னு மறுபடியும் 5 அறிவு ஜீவனின் திறன் மீதே வந்து நிக்குறிங்க, எனக்கே வவ்வால் பத்தி பாடம் எடுக்கிறிங்க :-))

வவ்வால் அல்ட்ராசானிக், பறவைகள் வலசைப்போதல் எல்லாமே அதன் வாழ்வியல் சார்ந்த தகவமைவு எனவே பரம்பரையாக கடத்தப்படுகின்றன, வவ்வாலுக்கு எப்படி டாப்ளர் விளைவு செயல்ப்படுதுனு கூட தெரியாது அது தன்னிச்சையாக செய்வது.autonomus,cognitve செயல்பாடுகள்னு இருக்கு. மனிதன் ஏன்,எதற்கு,எப்படினு ஆராய்வான், வவ்வால் டாப்ளர் விளைவெல்லாம் கண்டுக்காது, அப்படி செய்திருந்தால் அதுக்கும் ஒரு நோபெல் பரிசு கொடுத்திருப்பாங்க.

இப்போ முதன் முதலில் அணுவை பிளக்கும் அறிவு மனிதனுக்கு எப்படி யாரோட ஜீனின் இருந்து வந்திருக்க முடியும், அது ஒண்ணும் பரம்பரை தொழில் கிடையாதே!

உங்களுக்கு இப்போ என்னப்பேசுறோம்னு குழப்பம் வந்திருக்கு , தெளிவா சொல்கிறேன்,

ஜீன் குள்ள ஒருத்தர் படிச்ச படிப்பு போய் தங்கி இருக்குமா, அதுக்கு தான் மருத்துவர் ,ஒப்பன் ஹார்ட் சர்ஜரி உதாரணம் சொன்னேன் அதெல்லாம் படிக்காதிங்க.

படிச்ச படிப்பு பரம்பரை தாண்டி கடத்தப்படுமா? கேள்வி இதான். நீங்க சொன்ன எல்லாதுக்கும் என்னால பதில் சொல்ல முடியும் ஆனா அது எல்லை தாண்டிய கேல்வி வாதமா இருக்கு.
சட்டம் என் கையில் படத்த உதாரணம் சொன்னேன் பார்க்கவேயில்லை.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே" நானும் ஆரோரோக்குல்லாம் விளக்கம் சொல்ல நீங்களும் தீராம குழப்பம் பண்ண!

தெக்கி said...

:)) ஹாஹாஹா... வவ்ஸ், உங்களைத்தான் மலைபோல நம்பி இருக்கேன். என்னய கை விட்டுறாதீங்க. வவ்வால் மட்டும் அல்ட்ரா சோனிக், டோப்ளர் எஃபெக்டிற்கு மொத மொதல்ல ஆராய்ச்சி பண்ணியிருந்துச்சு அதுக்குத்தேய்ன் நோபல் பரிசு 6த் சென்ஸ் :))... ரசித்தேன் , சிரித்தேன்.

வவ்வால் said...

தெகா,

ரொம்ப நன்றி சாமியோவ்!

//:)) ஹாஹாஹா... வவ்ஸ், உங்களைத்தான் மலைபோல நம்பி இருக்கேன். என்னய கை விட்டுறாதீங்க. வவ்வால் மட்டும் அல்ட்ரா சோனிக், டோப்ளர் எஃபெக்டிற்கு மொத மொதல்ல ஆராய்ச்சி பண்ணியிருந்துச்சு அதுக்குத்தேய்ன் நோபல் பரிசு 6த் சென்ஸ் :))... ரசித்தேன் , சிரித்தேன்.//

இது போதும், எங்கே ஏன்டா என் பதிவில வந்து வம்பளக்குறனு சொல்லிடுவிங்களோனு(சொல்லமாட்டிங்கனு தெரியும் என்னப்போல மாடரேஷன் இல்லாதவர்) ஒரு சந்தேகம் அதான் கேட்டுக்கிட்டேன், இனிமே 100 அல்லது 150 ல தான் போய் நிக்கும்..பார்ப்போம் அது வரைக்கும் சந்துரு தாங்குறாரானு :-))

Anonymous said...

ஒரு சந்தேகம் தெகா மற்றும் வவ்வால். நீங்கள் பேசுவதுதான் இறுதியான அறிவியலா? - மாற்று கருத்துகளே இருக்கக் கூடாதா? விமர்சனம் செய்வதிலும் வெட்டி ஒட்டி பேசுவதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு காரணத்துக்காகவே படத்தை புறந்தள்ளுவது மாதிரி உள்ளது. மற்றபடி, நீங்கள் மேலும் வாதம் புரிய விழைகிறேன் - எங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றது.
இன்னொரு விமர்சனம், இந்த படம் தமிழ் உணர்வுகளை மலினப் படுத்தி சம்பாதிக்கப் பார்க்கிறது - இது ரொம்ப டெம்ப்ளேட் பின்னூட்டமாக மாறி வருகிறது. முருகதாசுக்கும் நம்மைப் போலவே (அல்லது கூடவோ குறையவோ) தமிழ் உணர்வு இருந்திருக்கக் கூடாதா? சமீப நிகழ்வுகளில் கோபம் வந்திருக்கக் கூடாதா? அவருக்குத் தெரிந்த மொழியில் அவர் பேசுகிறார் (பிளாக் எழுதிய பதிவர்களைப் போலவே).

Thekkikattan|தெகா said...

//ஒரு சந்தேகம் தெகா மற்றும் வவ்வால். நீங்கள் பேசுவதுதான் இறுதியான அறிவியலா? - மாற்று கருத்துகளே இருக்கக் கூடாதா//

அனானி, இங்கு யாரும் மாற்றுக் கருத்து வைக்கக் கூடாது என்ற நினைப்பில் மட்டுறுத்தல் கூட இல்லாது இந்த வலைத் தளத்தை திறந்து வைத்திருக்கவில்லை.

அவசியம் கருத்துக்களை முன் வையுங்கள். ஆனால், அந்த கருத்துக்கள் ஓரளவிற்கு பேசப்படும் கட்டுரையின் செறிவு சார்ந்து இருத்தல் நலம். தவிர்த்து mythology பேசுவது எந்த விதத்திலும் இங்கு வாசிப்பவர்களுக்கு உபயோகப்படப் போவது கிடையாது.

மேலும் இங்கு யாரும் தான் மட்டுமே புத்திசாலி, அறிவாளி என்று நிரூபிக்க போட்டி போடவில்லை, அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்கிறோம்.

//தமிழ் உணர்வு இருந்திருக்கக் கூடாதா? சமீப நிகழ்வுகளில் கோபம் வந்திருக்கக் கூடாதா? அவருக்குத் தெரிந்த மொழியில் அவர் பேசுகிறார் (பிளாக் எழுதிய பதிவர்களைப் போலவே).//

பாருங்க அனானி, நிச்சயமாக கலைத் துறையில் இயங்குபவர்களுக்கு எத்தனை சீற்றம் சமூக அநீதிகள் சார்ந்து இருக்கிறதோ அதே அளவிற்கு கிஞ்சித்தும் குறைவில்லாமல் அதே சமூகத்தின் பை ப்ராடெக்டுகளான இந்த தளத்திற்கு வந்து போகிற அறிவியல் சார் துறை நண்பர்களுக்கும் அக்கறை இருக்கிறது. அவர்களுக்கும் நமது சமூக மக்களுக்கு உண்மையான அறிவியல் அறிவூட்டப்படலின் அவசியம் பொறுத்து, முற்று முழு அக்கறை இருக்கிறது பிழையான புரிதலை இது போன்ற பரந்த ஊடகத்தின் மூலமாக பரப்புரை செய்யும் பொழுது அதனை தடுத்து உண்மையை எடுத்து முன் வைப்பதற்கு.

இதன் மூலமாக அறிவுக் குவிப்பே பல திசைகளிலிருந்து நமக்கு எட்டுகிறது என்று புரிந்து கொள்வோம். நன்றி!

வவ்வால் said...

அனானி,
அன்பின்,பண்பின் அப்படிலாம் போடலைனா கோச்சுப்பிங்களா?

////ஒரு சந்தேகம் தெகா மற்றும் வவ்வால். நீங்கள் பேசுவதுதான் இறுதியான அறிவியலா? - மாற்று கருத்துகளே இருக்கக் கூடாதா//

இதுக்கு தெகா நல்ல விளக்கம் கொடுத்திருக்கார் புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்.சிலரைப்போல "இது என்ப்பதிவு, எனக்கு பிடிச்சா தான் பின்னூட்டம் வெளியிடுவேன், பாஸ்போர்ட் காட்டணும், ஓட்டர் ஐடி காட்டணும்னு" அலப்பரைக்கொடுக்காம அனைத்துக்கருத்துகளையும் தெகா வெளியிடும் போதே இங்கே மாற்றுக்கருத்துகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்பது தெரிய வேண்டாமா.

அந்த வகையில தெகாவுக்கு பெரிய சல்யூட்!

நாங்கள்/நான் பேசுவது அறிவியலின் தொடக்கமே, இறுதி அறிவியல் என்று என்றும் எண்ணியதில்லை. எனக்கு அந்த அளவு ஞானமும் லேது! உண்மையில் சொல்லப்போனால் மாற்றுக்கருத்துகளை முன் வைப்பது நாமே!மற்றவர்கள் தான் ஊரோடு ஒத்து வாழ் என்று கும்பலில் கோவிந்தா போடுகிறார்கள்.

ஏதோ எனக்கு தெரிந்ததை வைத்து அறிவியல் ஜல்லி அடிக்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்களேன், அது என்ன கொலைக்குத்தமா? மொக்கை போடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை சுவாமி!

-------------------------------------------------

தெகா,

எங்க தோழர் சந்துருவை காணோம், டக் ஒர்த் விதிப்படி டிக்ளேர் செய்ய வேண்டி வருமோ?

Chandru said...

உங்களது மொழி எனக்கு புரியாதது ஒரு தடையாக இருக்கிறது இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

Thekkikattan|தெகா said...

கற்பதற்கான கதவுகள் எங்கும் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது!

ஜோதிஜி said...

கற்பதற்கான கதவுகள் எங்கும் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது!

ஆனால் முக்கிய கேள்வியே கற்பதற்கு எத்தனை பேர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

வவ்வால் said...

தெகா,
//கற்பதற்கான கதவுகள் எங்கும் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது!//

ஆனால் கதவு தொறந்து கிடக்க விலாசம் தான் தெரிய மாட்டேன்குது பலருக்கு :-)) அய்யா வீடு திறந்து தான் கிடக்கு உள்ளே வந்து பந்தி போடு...முத்து கடலு மூடியா இருக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு.... லால் ல லா லாலா ...ஹி..ஹி..ஏதோ நமக்கு தெரிஞ்சது!

--------------------------------------------
சந்துரு,
//உங்களது மொழி எனக்கு புரியாதது ஒரு தடையாக இருக்கிறது இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.//

கடைசில மொழிப்பிரச்சினையாக்கிட்டீங்களே அவ்வ்வ்வ்!

நான் என்ன ஸ்வாகலி/தேவபாஷைலவா பேசினேன் :-))

நீங்க நிறைய படிச்சி இருக்கிங்கணு தெரியுது, ஆனால் புரிஞ்சுக்கலையோனு தோணுது! 7 ஆம் அறிவுக்கும், 5 ஆம் அறிவுக்கும் நடுவில 6 ஆம் அறிவு இருக்குனு புரிஞ்சா சரிதான் , உங்கள் ஒத்துழைப்பிற்கு ,நன்றி மீண்டும் சந்திப்போம்,சிந்திப்போம்!

---------------------------------------------

நாட்டாண்மை said...

தெக்கிகாட்டானுக்கு
பெரிய படிப்பெல்லாம் படித்தவர்கள், அதிலும் சைண்டிஸ்ட் எல்லாம் வருகிறார்கள் . விவாதம் சூடுபறக்கப் போகிறது. தமிழனுக்கு தமிழில் விளக்கம் கிடைக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தேன். ராதாகிருஷனனும் சரியான ஒரு பதிவிட்டார். சந்துரு அவருக்கும் சரியான விளக்கமளித்திருந்தார்.சினிமா விமர்சனமாகிவிடக்கூடாது என சந்துரு கருதினார் போலும் அதனால் ஒரு கட்டத்தில் அதற்கு தனியாக ஒரு பதிவிட்டு முடித்துவிட்டு, அறிவியலை முன் வைத்து தனியாக பதிவிட்டார். ஆனால் அதற்கு பின் வந்த பதிவுகளில் உண்மையிலே மொழியின் தரம் குறைவாக இருந்தது. இருந்த போதிலும் அவரும் சளைக்காமல் காக்கா என்றால் கோழி, வவ்வால் க்கு-தலைகீழாகத்தொங்கினாலும், திரைப் படம் - என்சைக்ளோ பீடியா, ஐந்தறிவுப்பற்றி பேசுகிறிர்களே என்றபோது வவ்ஸைப் பற்றி எழுதி நையாண்டி இழையோட , வக்கிரமில்லாமல் ஒரே கேள்வியை கடைசி வரை கேட்டார் . ஆனால் எந்த விளக்கமும் அளிக்காமல் அவருக்கு எதுவும் தெரியாது என்பது போல் அவர் சொன்ன விஷயங்களை விட சின்ன பிள்ளத்தனமான விஷயங்களை மீண்டும் மீண்டும் அவருக்கே சொல்லிக் கொண்டு பதிலளித்தார்கள். இதெல்லாம் வேடிக்கை பார்த்தவர்களுக்குப் புரியும். மெத்தப் படித்தவர்களின் பதிவுகளில் சில சாம்பிள்கள்
///அதுக்கு ஒரு ஜிபிஎஸ் வாங்கி வைக்க அறிவு கற்றுக்கொடுக்கவில்லை.:-))உங்க உதாரணமெல்லாம் சோக்கா தான் கீது, ஆனா வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குது கணக்கா கீது! :-)சும்மாவே நான் காட்டுவேன்...இவர் வேற காட்டு ..காட்டுனு தானா கூப்பிடுறார்,(பிஞ்ச டயலாக்)நான் காட்டினா அப்புறம் ஏன் பதிவை சந்தைக்கடை ஆக்கிட்டிங்கனு சண்டைக்கு வர மாட்டிங்களே! பின்னூட்டங்கள் 100-150னு போய்கிடே இருக்கும் இது போதும், எங்கே ஏன்டா என் பதிவில வந்து வம்பளக்குறனு சொல்லிடுவிங்களோனு(சொல்லமாட்டிங்கனு தெரியும் என்னப்போல மாடரேஷன் இல்லாதவர்) ஒரு சந்தேகம் அதான் கேட்டுக்கிட்டேன், இனிமே 100 அல்லது 150 ல தான் போய் நிக்கும்..பார்ப்போம் அது வரைக்கும் சந்துரு தாங்குறாரானு :-))///
நீராம்பல் காட்டும் நீரின் அளவைப் போல் உங்கள் மொழி. உங்களுக்கே தெரியுது வம்பளக்கத்தான் போகிறோம் என்று. உங்களிடம் உள்ளது சந்தைக் கடை சரக்கு என்று வேறு சொல்கிறீர்கள். பன்றிதான் கூட்டமாக போகும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது தெரியாது போலும். இந்த மொழியில் 150 பதிவுகளின் கூட்டமா போட்டால் விளங்கீரும். ஒரு பதிவாக இருந்தாலும் உருப்படியாக இருக்க வேண்டும். உங்களின் அறிவியல் ”தகவமைப்பை” தான்டி செல்லவே மாட்டேன் என்கிறது அவர் அதற்கப்பால் சென்று தகவமைப்பையும் பற்றி விவாதிப்போம் என்கிறார் உங்களுக்குப் புரியவில்லை.
அவர் ”ஆழம்” தெரியாமல் காலை விட்டு விட்டார். இவர்கள் தங்கள் ஆழத்தை " காட்டி" விட்டார்கள். இவர்களுக்கு Aids (வவ்ஸ் போன்ற உதவியாளர்கள்,) உள்ளது தெரிந்தும் அவர் மேற்கொண்டு ”கலந்து” கொள்வது நல்லதல்ல என முடிவு கட்டிவிட்டார் போலும்..
தெகா, வாழும் வீட்டில் வவ்வால்களை அடைய விடாதீர்கள் பாழடைந்து போய்விடும்.
வவ்ஸ்க்கு ஒரு அட்வைஸ் :ஒரு நல்ல விவாதத்தை கெடுத்து விட்டீர்கள் .உங்கள் டையலாக் பூராவுமே பிஞ்ச டையலாக்தான். ”காட்டுவேன்” என்பது பெண்மையின் டயலாக் அதை ஆண்கள் உபயோகிக்க மாட்டார்கள்.உங்கள் பானியில் சொன்னால் ஒரு திரைப் படத்தில் வடிவேல் ஆட்டை திருடிவிட்டு பஞ்சாயத்தில் நல்லவனாகிய மாதிரி இருக்கிறது.
இப்பொழுது முருகதாஸ் மிகவும் நல்லவராக தெரிகிறார் அவருடைய திமிர்க்கு காரணம் இருக்கிறது.

வவ்வால் said...

நாட்டாமை,

வாங்கோ, வாங்கோ சொம்பெல்லாம் எடுத்து வந்திங்களா?

//வவ்ஸ்க்கு ஒரு அட்வைஸ் :ஒரு நல்ல விவாதத்தை கெடுத்து விட்டீர்கள் //

இந்த அட்டுவைஸ முன்னமே வந்து குடுத்துட்டு, நீங்களே ஆரோக்கியமா ஆக்கி இருக்கலாமே உரையாடலை! :-)) எனக்கும் நேரம் மிச்சம் ஆகி இருக்கும்,ஆனாலும் நீங்க ரொம்ப்ப்ப்ப நல்ல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

//”தகவமைப்பை” தான்டி செல்லவே மாட்டேன் என்கிறது அவர் அதற்கப்பால் சென்று தகவமைப்பையும் பற்றி விவாதிப்போம் என்கிறார் உங்களுக்குப் புரியவில்லை.//

ஆமாம் எங்களுக்கு கடைசி வரைக்கும் புரியவே இல்லை, அவர் தகவமைப்பை தாண்டி போனது :-)) தாண்டி வந்திருந்தா ஏன் இப்படி ஆகப்போகுது.

நீங்க எல்லாம் பெரிய ...பெரிய சயிண்டுஸ்டு எனக்கு என்ன தெரியும் :-((

//அவர் மேற்கொண்டு ”கலந்து” கொள்வது நல்லதல்ல என முடிவு கட்டிவிட்டார் போலும்..//

வெளிநாட்டுல சரியா ஆடத்தெரியலைனா பிட்ச் சரியில்லை என்று இந்திய பேட்ஸ்மேன்கள் சொல்வாங்களாமே கேள்விப்பட்டு இருக்கிங்களா?(அநேகமா டக் அவுட் ஆகிட்டு இப்படி சொல்வாங்க)

துளசி கோபால் said...

போன வாரம்தான் இந்தப் படம் பார்த்தேன் தெகா.

ஒரு வரியில் சொல்வதென்றால்...இந்தப் படம் போதி தர்மருக்கு (இயக்குனர்) செஞ்ச அதர்மம்:(

Related Posts with Thumbnails