Sunday, October 17, 2010

இசையமைப்பாளர் சந்திரபோஸ் ரீ-மிக்ஸ்...

இசையமைப்பாளர் சந்திரபோஸ் 1980களில் பல பாடல்களை திரையுலகத்திற்கு வழங்கியவர். மறக்க முடியாத பல பாடல்களையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் அவர் மரணமடைந்ததாக அறிந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் அவரின் மரணத்தையொட்டி.


சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சில ரீ-மிக்ஸ் பாடல்களை யுட்யூப் தளத்தில் பார்க்க முடிந்தது. மனிதர் நன்றாக ரசித்து வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது அந்தப் பாடல்களின் மூலமாக. மீண்டும் இந்த நிகழ்வையொட்டி அந்த தளத்திற்குச் சென்று தேடிப்பார்த்தேன் பார்க்காதவர்கள் யாரேனும் இருப்பின் கண்டு/கேட்டு மகிழுங்கள். I loved his voice and mannerism... seemed to be very loving, funful person to be around with ...

பூஞ்சிட்டுக் குருவிகளா...


ஏண்டி முத்தம்மா...

இந்தப் பாடலை படமாக்கும் பொழுது சந்திரபோஸ் அவர்கள் செமயாக அனுபவிச்சு செய்ததைப் போன்று இருக்கிறது. நீங்களே பாருங்களேன்... ரகளை பண்ணியிருக்கார்! - having heard a couple times this song, his voice is becoming addictive...

8 comments:

Fan of Bose said...

Great music very nice Love you mr.bose

Techshankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

kutipaiya said...

முன்னாடி எல்லாம் தூர்தர்ஷனில் ’பூஞ்சிட்டு குருவிகளா!”னு அவ்வப்போது அவர் பாடுவதை ஒளிபரப்புவார்கள்..அவர் விரல்களை சொடுக்கி பாடும் மேனரிசமே நன்றாக இருக்கும்... ஆனா அப்ப அவர் யாருன்னே தெரியாம தான் பர்த்திருக்கேன்!

என்.ஆர்.சிபி said...

அருமை! பகிர்விற்கு நன்றி!

"பூக்களைத்தான் பறிக்காதீங்க! காதலத்தான் முறிக்காதீங்க!" கேட்டிருக்கீங்களா? தெக்ஸ்!

ஈரோடு தங்கதுரை said...

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ..நல்ல பாடல்கள்..
அவரு கொஞ்ச நாள் முன்ன மெட்டி ஒலியில் நடிச்சாரே அவருக்காகவே மிஸ் செய்யாம
பாப்பம் அந்த எபிசோட் எல்லாம்.அவரு பாட்டை
அவரே மாத்தி பாடுவார்

நான் முட்டாள் said...

சந்திரபோஸ்... அவரின் இசையில் பல பாடல்கள் கேட்டாலும் என்னால் மறக்க முடியா பாடல் பூஞ்சிட்டுக்குருவிகளா.. பாடல்.. எனக்கு தெரிந்து எனக்கு பிடித்த முதல் பாடல் இதுவாகத் தான் இருக்கும்... தூர்தர்சனில்... சந்திரபோஸ் அவர்கள் பாடும் இந்த பாடல் ஒலிபரப்பாகியது.. அப்போது நான் 4 ம் வகுப்பு படிக்கிறேன்... இவரின் இந்த பாடல் வரிகள் மனதில் நிலைத்தது.. அன்று அவர் உடுத்தியிருந்த உடை கூட நினைவில்... அதன் பின்னர் இந்த பாடலை கேட்கும் வாய்ப்பே அமையவில்லை.. அவரின் மரணத்தின் நினைவாக இதே பாடலை ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பினார்கள்.. அப்போது கேட்டேன்.. இப்போ உங்கள் வலைபூவில்... மறக்கமுடியா சந்திரபோஸ் அவர்களின் இசையில் ... இந்த பூஞ்சிட்டுக் குருவிகளா... பாடல் வரிகள் இன்னும் என் வாயில் முனுமுனுப்பாய்

Related Posts with Thumbnails