வீசியெறிந்த வானச் சமுக்காளத்தில்
ஒட்டிவைத்த
வெண் மேகங்கள்
டைனோசார்களாக
தாவித் திரியும் குரங்குகளாக
தவழும் குழந்தைகளாகவும்
விசம் கக்கிச்
செல்லும் பாம்பாகவும்
அவதாரம்பூண்டு
நிமிடத்திற்கொருமுறை
அழித்தெழுதி நிலையாமை
உணர்த்தும்
என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...
Tuesday, August 25, 2009
9 comments:
ஆமாங்ணா வானம் ஒரு போதி மரம்தான்!
ஆமாங்ணா வானம் ஒரு போதி மரம்தான்!//
:) நன்றி!
ஆமா அண்ணா .. சின்ன வயசில வீட்ல இருந்து பருத்தி வாங்கிட்டு போவாங்க.. அப்போ இந்த வானத்த பாத்தா எல்லாமே பருத்தி மாதிரி தெரியும் .. அவ்ளோவும் நம்ம வீட்ல இருந்த எப்படி இருக்கும்னு யோசிப்பேன் ,
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
வேடிக்கையா பாக்கற விசயத்துல கூட தத்துவத்தப்பாக்கறீங்க..
@ செந்தில் .. \\அவ்ளோவும் நம்ம வீட்ல இருந்த எப்படி இருக்கும்னு யோசிப்பேன் ,//
நல்லா இருக்கே இது :))
செந்தில்,
நீல நிற வானப் பிண்ணனியில் மிதந்து திரியும் மேகங்களை எப்படியாக கற்பனை செய்து பார்க்கிறோமோ அப்படியாகவே காட்சியும் கிட்டும். அது நிஜமாவே ஒரு ஃபன்!
//அவ்ளோவும் நம்ம வீட்ல இருந்த எப்படி இருக்கும்னு யோசிப்பேன் ,//
உன்னோட அந்த சிறு வயசு ஆசை நிறைய விசயங்களை விட்டுச் செல்கிறது, நகைப்புடனே ரசித்தேன்.
நன்றி!
இந்த மேகக்கூட்டங்கள் பண்ணுற செல்ல அட்டகாசம் தாங்க முடியலப்பா. தினம் தினம் பார்க்கும் போது மழலையில் செழிப்பாய் நிழல்படத்தில். கைது செய்த மிதப்பில் நான் இங்கு இருக்கையிலே, ஆங்கொன்று இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவன்னு கிண்டலடித்து கபடி ஆடும். மழலை நடத்தும் ஆன்மீகப் பாடம்... நடத்துவதில் மேகத்தை மிஞ்சியவர் யாரோ.
//வேடிக்கையா பாக்கற விசயத்துல கூட தத்துவத்தப்பாக்கறீங்க..//
பார்க்கும் பார்வையே அப்படியில்ல :))
//@ செந்தில் .. \\அவ்ளோவும் நம்ம வீட்ல இருந்த எப்படி இருக்கும்னு யோசிப்பேன் ,//
நல்லா இருக்கே இது :))//
செந்தில் சூப்பர்ல :)
//தினம் தினம் பார்க்கும் போது மழலையில் செழிப்பாய் நிழல்படத்தில்.//
...//மழலை நடத்தும் ஆன்மீகப் பாடம்... நடத்துவதில் மேகத்தை மிஞ்சியவர் யாரோ//...
மழலையையும், மேகத்தையும் ஒன்னாச் சேர்த்து கவிதை நடையிலயே ஒரு மறுமொழி... இதப் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் வேணும் போலவே :) ...
நன்று!
nala observation
arumaiyana varigal
Post a Comment