இந்தப் போஸ்டை படிச்சவுடன், அந்தப் பதிவுவோட நோக்கத்தை என்னால சரியா புரிஞ்சுக்க முடியல. இதுவரையிலும் நான் இவ்வளவு வேகமா ஒரு பதிவை எழுதி பதிஞ்சாத எனக்கும் நினைவில்லை. இருந்தாலும், அந்தப் பதிவ படிச்சிட்டு சும்மா இருக்கவும் முடியல.
தமிழகத்தில ஈழப் பிரச்சனைக்காக நீண்டதொரு கடிதத்தை எழுதி வைச்சிட்டு தீக்குளிச்சு செத்துப் போன முத்துக்குமரன் செய்தி கேட்டவுடன் மனசில ஈரமிருக்கிற எந்த ஒரு மனுசப் பயலும் பதறித்தான் போயிருப்பானுங்க.
ஆனா, இன்றைய தமிழகம், இந்தியா போன்ற அரசியல் சூழலில், சாதா மக்களுக்குள்ளும் அதனைப் பார்த்து, பார்த்து மனிதம் செத்தவய்ங்களா ஆகிப்போறதில எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லைதானோன்னு நினைக்கத் தோணுது.
சரி, அன்னிய நிகழ்வுல அந்தப் பாதிப்பு ஓரளவிற்கு மனுசத் தன்மையோட, சமூக கரிசனத்தோட வாழ்வறவன் எவனுக்கும்... அந்தக் கடிதம், ஒரு வாழ வேண்டியவனின் மரணத்தின் மூலமா சொல்ல வந்த பொது சமூக விசயம் அப்படின்னு வைச்சிப் பார்த்திருந்தா நாம இது போன்ற ஒரு அரசியல் வாதிகளின் தலைமையின் கீழ் வாழ்றோமேன்னு நினைச்சு ஒவ்வொருத்தனும் வெக்கித் தலை குனிஞ்சிருப்போம்.
செத்தும் போயாச்சு ஒரு ஆள், பார்த்துகிட்டு இருக்க முடியாம. அத பாத்துக்கிட்டு அதே மாதிரியே கையறு நிலையில இருக்கிற மத்தவங்க அய்யோ! இப்படி ஒரு உசிரு அநியாயமா போயிருச்சேன்னு, உண்மையான வருத்தத்துடன் அன்னிக்கு பதிவு அல்லது இரங்கல் தெரிச்சவிங்கெல்லாம் ஏண்டா இன்னும் சாகாம இருக்குறீங்கன்னு கேட்டு ஒரு பதிவு! அப்போ, இது கூட பண்ணி ஒருவரின் தனிப்பட்ட ஆற்றாமையை தீர்த்துக்கொள்ள உரிமையில்லைன்னா, வேற என்னவெல்லாம் இது போன்ற அரசியல் நிலையில் மக்களாகிய நாம் செய்ய முடியும்?
முத்துக்குமரன் தீக்குளித்ததே இன்றைய அரசியல் நிலையில் அதுவும் மனிதம் மறித்துப் போன நாளில் நடந்தேறியது ஒரு தேவையற்ற இழப்புதான். சாவுதான்! செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! மானமற்று வாழ பழகிக்கொண்ட நிலையில்! தானும் பார்த்து, பழகி அதில் திளைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
எதனையும் எப்படியும் வைத்து அரசியல் பண்ணும் நிலையில் ஒவ்வொருவரும் மாறிப் போன நிலையில் இதெல்லாம் தேவையில்லை. சரி, ஒரு ஜனநாயக நாட்டில் எழுதியேனும் தனது மனக் குமுறலை தீர்த்துக் கொள்வதும் தவறா? தனிப்பட்ட முறையில் என்னதான் நாமும் நம் சார்ந்து வாழும் சமூகத்திற்கு, இப்பொழுது நடைபெறும் இந்த அரசியல் போக்குத் தனங்களை மற்றவர்களுக்கு ஊட்ட செய்து வருகிறோம்?
சும்மா அவர் எழுதியதற்கு இவர் எதிர் பதிவு? அவர் கூறிய கருத்துக்கு இவரின் கிண்டல் பதிவு என்று சும்மா டைம் பாஸ் மச்சிதானா? ஏன், புதிதாக வருபவர்களுக்கு இப்படியானதொரு மனச் சோர்வை வழங்க வேண்டும்? வலைப்பதிவுகளின் மூலமாக எதுவுமே போய்ச் சேரப் போவதில்லை என்ற கருத்தை உடையவர்கள் ஏன் அவர்களின் பதிவுகளை பொது இடத்தில் வைக்கிறார்கள்?
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Thursday, April 09, 2009
ப்ளாக்கர்ஸ் ப்ளீஸ் தீக்குளிச்சிருங்க...
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
உங்க பேச்சைக்கேட்டு, இப்பத் தீயைக் குளிக்கவச்சேன். கரியாக் கிடக்கு!!!!
(ஆமாம். இது என்ன பதிவு? எதாவது எதிர்வினையா?)
மிக நியாயமான கேள்விகள்....
//தமிழகத்தில ஈழப் பிரச்சனைக்காக நீண்டதொரு கடித்தத்தை எழுதி வைச்சிட்டு தீக்குளிச்சு செத்துப் போன முத்துக்குமரன் செய்தி கேட்டவுடன் மனசில ஈரமிருக்கிற எந்த ஒரு மனுசப் பயலும் பதறித்தான் போயிருப்பானுங்க.//
உண்மை. அப்படி பதறாமலும் உணர்ச்சிவசப்படாமலும் இருந்தால் நம் உணர்வுகளைத் தான் சந்தேகிக்க வேண்டும்.
//சரி, ஒரு ஜனநாயக நாட்டில் எழுதியேனும் தனது மனக் குமுறலை தீர்த்துக் கொள்வதும் தவறா? தனிப்பட்ட முறையில் என்னதான் நாமும் நம் சார்ந்து வாழும் சமூகத்திற்கு, இப்பொழுது நடைபெறும் இந்த அரசியல் போக்குத் தனங்களை மற்றவர்களுக்கு ஊட்ட செய்து வருகிறோம்?//
பலருக்கும் எழுத்து மட்டுமே வடிகால். அந்த எழுத்தின் மூலம் மாற்றம் வருகின்றதோ இல்லையோ நமது கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதன் நிறைகுறைகளை அலசவும் தான் அந்த எழுத்தை இப்படி பதிவுகளின் மூலம் பொதுவில் வைப்பது.
//வலைப்பதிவுகளின் மூலமாக எதுவுமே போய்ச் சேரப் போவதில்லை என்ற கருத்தை உடையவர்கள் ஏன் அவர்களின் பதிவுகளை பொது இடத்தில் வைக்கிறார்கள்?//
மிக மிக நியாயமான கேள்வி...
//ஒரு சமூகம் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது உணர்வாளன் என்கிற போர்வையில் விளம்பரம் தேடிய...தேடிக்கொண்டிருக்கின்ற பதிவர்களை பற்றியதே.....இந்த பதிவின் தலைப்பும் அத்தகைய மகா நடிகர்களை நோக்கியதே !//
இது எனது பதிவின் வாசகம்....ஆனால் உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது....
//அன்னிக்கு பதிவு அல்லது இரங்கல் தெரிச்சவிங்கெல்லாம் ஏண்டா இன்னும் சாகாம இருக்குறீங்கன்னு கேட்டு ஒரு பதிவு!//
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...என்னுடைய வாசகத்திற்கும் உங்களின் மேற்கோளுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா...உங்களின் வரிகள் விஷமத்தனமானது.....
எனது பதிவின் நோக்கம் ஈழத்தமிழர்களையோ, அவர்களின் பிரச்சினைகளையோ எள்ளி நகையாடுவதில்லை....
கையறு நிலையை பறைசாற்றும் எவர் உரிமையிலும் நான் தலையிடவில்லை....மாறாக அதை கொச்சைப்படுத்திய வேதனையையே பதிந்திருக்கிறேன்.
யட்சன்,
எனது பதிவின் நோக்கமும் உங்களை தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்த அல்ல. உங்களின் தலைப்பு எல்லா ப்ளாக்கர்களையும்(பதிவிட்டு தனது ஆற்றாமையை, அன்றைய தினத்தில் தெரிவித்துக் கொண்ட) தீகுளிக்க அழைத்ததனைப் போல இருந்தது. அதில் நானும் ஒருவன் என்பதால் கொஞ்சம் விபரம் தேவைப்பட்டது.
அன்றைய மன நிலையில் நான் இருந்த ஒரு நிமிடம் என் முன்னால் வந்து சென்றதால் என்னதான் குறிப்பாக சொல்ல வருகிறீர்கள் என்பதனை அறிந்து கொள்ளவே இந்தப் பதிவு.
மற்றபடி அதனை வைத்து அரசியல் செய்வது மஹா கேவத்திலும் கேவலம்! வலைப்பதிவிலும் எனக்கு இது போன்ற அரசியல் நடந்ததா என்றும் தெரியாது.
இப்பொழுது உங்க பின்னூட்டத்தின் மூலம் ஓரளவு விபரமறிந்தேன். நன்றி!
எனது வருத்தத்தினை பதிந்து வைக்கவே முந்தைய பின்னூட்டம்...No Hard feelings :)
நான் எனதுபதிவில் குறிப்பிட்ட கூறுகளுக்கு ஒரு உதாரணம் தற்போது தமிழ்மண முகப்பில் இருக்கும் ஒரு பதிவு...
http://tamilpadai.blogspot.com/2009/04/blog-post_2416.html
பதிவின் தலைப்பு : வைகோ கைது: தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. பதிவினை படித்துப் பாருங்கள்....
இத்தகைய போக்கினைத்தான் எனதுபதிவில் பதிந்திருந்தேன்.
வாங்க துள்சிம்மோய்...
//உங்க பேச்சைக்கேட்டு, இப்பத் தீயைக் குளிக்கவச்சேன். கரியாக் கிடக்கு!!!!//
:-))) என்னங்க இப்படி தண்ணீய ஊத்தி அனைச்சுப்போட்டீங்களே உங்களுக்கே நியாயமா இது... நீங்க வந்த யோகம் கோவமெல்லாம் கீவமாப் போச்சு.
ஒரு லிங்க் கொடுத்திருந்தேனே நீங்க அத சுட்டிப் பார்க்கலையா அப்போ :-P...
சாந்தமாகுங்கள் தெ.க.,
தலைப்பை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளே வந்தேன். நேற்றய யட்சனின் பதிவில் எல்லாம் சரியென பின்னூட்டம் போட்டவன். இங்கே வந்தால் ஒரே கலவரம். பின்னூட்டத்தால் உண்மை புரிந்தது.
தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html
பதி,
//பலருக்கும் எழுத்து மட்டுமே வடிகால். அந்த எழுத்தின் மூலம் மாற்றம் வருகின்றதோ இல்லையோ நமது கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதன் நிறைகுறைகளை அலசவும் தான் அந்த எழுத்தை இப்படி பதிவுகளின் மூலம் பொதுவில் வைப்பது. //
மிகச் சரி. அதனைத் தவிர்த்து 'செயல்'தான் முதலில் என்றால் இன்றைய அரசியல் சூழலில் என்ன பெரிதாக ஒரு தனி நபரின் மரணம் நிகழ்த்த முடிந்தது? அதற்கு ஒரு பொருளுமே இல்லாமல் போனது போலத்தானே இருக்கிறது.
மனித மன மாற்றத்தை ஒவ்வொரு தனி நபரிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு மனித வலம் (சக்தி) அவசியம் இல்லையா? குறைந்தபட்சம் விசயங்கள் நீர்த்துப் போகாமல் பேசப்பட்டு அவ் விசயங்களின் கனத்தை விளங்க வைக்கவாவது... எழுத வேண்டும் அவ்வாறு பகிர்ந்து கொள்ள முன் வருபவர்கள்... அதற்கும், it is not fair injecting pessimistic attitude into the mass even for that, to put off of the spark. That is it.
//வலைப்பதிவுகளின் மூலமாக எதுவுமே போய்ச் சேரப் போவதில்லை என்ற கருத்தை உடையவர்கள் ஏன் அவர்களின் பதிவுகளை பொது இடத்தில் வைக்கிறார்கள்?//
இதையே நானும் ரொம்ப நாளா கேட்கிறேன்...
//தலைப்பை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளே வந்தேன். நேற்றய யட்சனின் பதிவில் எல்லாம் சரியென பின்னூட்டம் போட்டவன். இங்கே வந்தால் ஒரே கலவரம். பின்னூட்டத்தால் உண்மை புரிந்தது.//
முரு,
அதிர்ச்சியா எனக்குந்தான் இருந்துச்சு. இல்லன்னா இந்த போஸ்டே இல்ல :-). ஹ்ம் பார்த்தேன் உங்க பின்னூட்டத்தையும் அங்கே. எப்படியோ விபரமறிந்து கொள்வது நல்லதுதானே?
சுரேஷ்,
சுட்டிக்கு நன்றி விரைவில் படித்து விடுகிறேன்.
தூயா,
முதல் வருகை, வணக்கம்!
//இதையே நானும் ரொம்ப நாளா கேட்கிறேன்...//
கேக்குறீங்க சரி, ஏதாவது அதில முன்னேற்றம் தெரியுதா? தெரியாதே! சொல்லிக்கிட்டே செஞ்சுகிட்டும் இருப்பாங்க. கடுப்பாகி யப்பா இனிமே இந்த ப்ளாக் பக்கமே வரலைன்னு போவாங்க, விரதத்தை மூணு மாசத்தில முடிச்சுட்டு வந்துடுவாங்க.
எழுதிகிட்டே மற்றவைங்களையும் சோர்வடைய வைக்கிற மாதிரி செத்துப் போன வார்த்தைகளையும், கொட்டி வைக்கிறது. என்னாத்த சொல்லுறது, போங்க. நன்றி, தூயா!
//சும்மா அவர் எழுதியதற்கு இவர் எதிர் பதிவு? அவர் கூறிய கருத்துக்கு இவரின் கிண்டல் பதிவு என்று சும்மா டைம் பாஸ் மச்சிதானா? ஏன், புதிதாக வருபவர்களுக்கு இப்படியானதொரு மனச் சோர்வை வழங்க வேண்டும்? வலைப்பதிவுகளின் மூலமாக எதுவுமே போய்ச் சேரப் போவதில்லை என்ற கருத்தை உடையவர்கள் ஏன் அவர்களின் பதிவுகளை பொது இடத்தில் வைக்கிறார்கள்? //
சும்மா நச் ச்ச்னு இருக்கு,
நாம எதுவும் செய்கிறோமோ இல்லையோ, பொதுவானக் கருத்துக்கள் இதுதான் என்று பல விசயங்கள் விவாதத்தின் போது தெரியவருகிறது.
தன் சமூகம் பாதிக்கப்படுவதாக நம்பும் ஒனாய்களின் ஆடு நனையும் கவலைத்தான் 'எழுதி ஒண்ணும் ஆகப்போறதில்லை' என்கிற டயலாக்
கோவியாரே,
//நாம எதுவும் செய்கிறோமோ இல்லையோ, பொதுவானக் கருத்துக்கள் இதுதான் என்று பல விசயங்கள் விவாதத்தின் போது தெரியவருகிறது..//
மாற்று கருத்துகளை முகம் கொடுக்கிற ஒரு பண்பையாவது வளர்க்குதே காலப் போக்கில, அதுக்காகவாவது ப்ளாக்ஸ் பயன்பட்டுட்டு போகட்டுமே...
Thekkikattan,
//மனித மன மாற்றத்தை ஒவ்வொரு தனி நபரிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு மனித வலம் (சக்தி) அவசியம் இல்லையா? குறைந்தபட்சம் விசயங்கள் நீர்த்துப் போகாமல் பேசப்பட்டு அவ் விசயங்களின் கனத்தை விளங்க வைக்கவாவது... எழுத வேண்டும் அவ்வாறு பகிர்ந்து கொள்ள முன் வருபவர்கள்...//
நிச்சயமாக, அதனை மனதில் கொண்டு தான், //எழுத்தின் மூலம் மாற்றம் வருகின்றதோ இல்லையோ நமது கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதன் நிறைகுறைகளை அலசவும் தான் அந்த எழுத்தை இப்படி பதிவுகளின் மூலம் பொதுவில் வைப்பது.// என்று குறிப்பிட்டேன்... ஏனெனில், மதம், மொழி, ஈழம், தேசியம், இடஒதுக்கீடு, பெரியார் என எண்ணுடை பல கருத்தியல்களை தலைகீழாக புரட்டியதில் பதிவுலகத்தின் பங்கே முதன்மையானது.
//it is not fair injecting pessimistic attitude into the mass even for that, to put off of the spark.
எழுதிகிட்டே மற்றவைங்களையும் சோர்வடைய வைக்கிற மாதிரி செத்துப் போன வார்த்தைகளையும், கொட்டி வைக்கிறது.//
இவைகளையும் கடந்து சென்றேயாக வேண்டும்... :)
//கோவி said...
நாம எதுவும் செய்கிறோமோ இல்லையோ, பொதுவானக் கருத்துக்கள் இதுதான் என்று பல விசயங்கள் விவாதத்தின் போது தெரியவருகிறது.//
உண்மை. அதே சமயம் நாம் திறந்த மனதுடனும் முன்முடிவுகள் ஏதும் இல்லாமல் விவாதிக்கும் பொழுது நமது எண்ணங்களையும் அலசமுடியும்....
You are correct.Most of the Tamil bloggers are dividing tamils by their by writing.So no co-ordination between Tamils and lose support from other side.
தலைப்பு சுர்ருன்னு படாம தெகாங்கிற பேர்னால உள்ளே வந்தேன்.வந்தால் உள்ளே விவாதக் களம்.நான் பதிவுகள் அதிகம் பகிரவில்லையென்றாலும் அமைதிப் பார்வையாளனாகவே அதிக நாட்கள் இருக்கிறேன்.பல சூறாவளிகள் பதிவுலகில் வந்தும் போயுமிருக்குது.அதே மாதிரி இதுவும் கடக்கட்டும்.
நம்பிக்கையூட்டும் எழுத்துக்களை தாருங்கள் என்பது பாசிட்டிவாக பிடிச்சிருக்கு.ஆனாலும் ஈழ நிகழ்வுகள் சமயங்களில் மனதை பேதலிக்க வைக்கிறது என்பதும் நிதர்சனமே.
ஈழம் சார்ந்த பதிவுகளை பொறுத்தவரையில் தெள்ள்த்தெளிவாய் காணக்கிடைப்பது இரண்டு விதயங்களே...
ஒன்று இயலாமையும் அது தரும் உணர்வுகளின் வெளிப்பாடும்.
மற்றது இதன் பரிதாப இடுக்குகளில் புகுந்து தங்களை தாங்களே வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளும் அற்பத்தனம்.
இந்த இரண்டாவது வகை ஆசாமிகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையே எனது பதிவுகளில் சுட்டியிருந்தேன். மேலே பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட ஒரு உதாரண பதிவை பார்ப்பீர்களேயானால் இதன் அவசியம் புரியும்.
மற்றபடி பதிவுகளாளோ அல்லது பதிவர்களாளோ எதையும் கிழித்துவிட முடியாது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது....ஒரு பதிவனாக சில உயரங்களை எட்டிய அனுபவம் எனக்கு உண்டு.
அடையாளங்களின் மீதோ அது தரும் புகழ் வெளிச்சங்களின் மீதோ எனக்கு பெரிதாய் ஆர்வம் எதுவும் இருந்ததில்லை....
ஒரு வேளை அதனால் கூட இவர்களின் விளம்பர கும்மிகளுக்கு உடன் பட முடியாமல் போயிருக்கலாம்.
யட்சன்,
மீண்டும், மீண்டு'ம் வந்து தங்களின் நிலையை விளக்கியமைக்கு மிக்க நன்றி! :-)
இந்தப்பதிவுல குளிச்சாலே போதுமே!
அவ்வளவு சுடுது!
கடைசி வரிகள் உண்மை!
அவரவர்க்கு இயன்ற நிலையில் எதிர்ப்போ, உணர்வோ தெரிவிக்கிறதுதான் - மனிதத்தன்மை ! அதனால்...மொத்தமா பதிவர்களைத்திட்டி அவர் வேற்று ஊடகத்தில் பதியலையே!
அவரும் நம்மவரே!
லூசுல விடுங்க!
:))))
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
தீ குளிச்சா அதப்பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு??????
//தீ குளிச்சா அதப்பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு??????//
அனுபவம்,
முதல் முறை நம்ம வீட்டுப் பக்கம், வாங்க!
நீங்க கேட்ட ஒத்தைக் கேள்வி எந்த கோணத்தில் கேட்டிருக்கீங்கன்னு தெரியாமலே தெரிஞ்ச வரையில் எந்தந்த சூழலில் நம்மை விசயங்கள் பேச வைக்கிறது என்பதற்கான சில வரிகள்.
சூழ்நிலைகள்...
அ) நம் சகோதரி ஒருத்தி நன்றாகத்தான் பள்ளிக்கு எந்த தடங்களும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தால் திடீரென்று ஒரு நாள் தன் உயிரை எடுத்துக் கொள்ள எத்தனித்தால், ஏன், எதற்கு என்று அறிந்து கொள்ள அக் குடும்பத்தில் உள்ளவர்கள் விழைவதில்லையா?
ஆ) ஒரு உயர் பொறுப்பிலிருக்கும் அதிகாரி திடீரென மாயமாக மறைந்துவிட்டார் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ள சம்பந்தப் பட்ட துறையும், குடும்பமும் விழைவதில்லையா...?
இ) இங்கு முத்துக்குமார் ஒரு நெடிய கடிதத்தின் மூலமாக தன் மொழி பேசும் ஒரு இனம் கேட்பாரற்று ஏதேதோ காரணங்களுக்காக சிறுகச் சிறுக வேரறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதனைக் கண்டும், நம் சமூகத்தின் பாரமுகம் கண்டும் பொறுக்க முடியாமல் ஒட்டு மொத்த ஒரு இனத்தின் கவனம் - நீங்கள் கேட்ட கேள்வியினை கேக்க வேண்டுமென்ற ஒற்றை ஆசையில் தன் உயிரை எடுத்துக் கொண்டதால், நம்மை போன்றவர்கள் அதன் பின்னணியில் அவரின் நோக்கத்தை சரியான படி வெளிக் கொணரவேணும், ஏன் முத்துக்குமரன் தீக் குளித்தான் என்பதனைப் பேச வேண்டும்.
ஏனெனில் அது ஒரு சமூகத்தின் அவலக் குரல், அடையாளம் கண்டு பதிலுரைக்கும் நிலையில் நாம்; அதற்காகவேணும் பேசப்படணும்.
Post a Comment