தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?
அவ்வாறு இல்லாமல் அந்த அரசாங்கத்திடமிருந்தே இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக பதவி விலகி இப்படி "#பண_ஊழலே" இந்த #சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்குமான #பிணி என்று வெற்று கோசம், கமலைப் போல செய்யப் போவது ஏன்?
மதத்தை அரசியலோடு கலக்கிறார்களே அது ஊழல் கணக்கில் வராதா?
கல்விக்கு செல்லக் கூடிய நிதியை, அனைவரும் கல்வி கற்கும் சூழலை கண்ணிற்கு புலப்படாத இடங்களிலெல்லாம் வைத்து கதவை அடைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
தன் மாநிலத்திற்குள் இயங்கும் மக்கள் சேவை நிறுவனங்களிலெல்லாம் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களை வைத்து நிரைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
மாநில மொழியை தவிர்த்து ஹிந்தி மொழியை உங்க துறைக்குள்ளாகவே திணிக்கிறார்களே அது ஊழலில் வராதா...
மக்களாட்சியின் மாண்பையே குலைக்கும் விதமாக வெற்றிப்பெற்ற பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
இவற்றையெல்லாம் யார் பேசுவது. இதெல்லாம் யாருடைய பிரச்சினைகள்?
சகயம், இதெல்லாம் எங்க பேசி ஆரம்பிங்க பார்ப்போம். நீங்க அரசியல் கட்சி தொடங்கிறீங்களா இல்லை டிட்டேரியல் கல்லூரி தொடங்கிறீங்களான்னு தெரிஞ்சிடும்.
ஏன்யா! கொடுத்த உத்தியோகத்தில நேர்மையா இருக்கிறது ஒரு தகுதியாய்யா இப்படி ஊரை ஏமாத்த? மனசாட்சின்னு ஒரு விசயம் இருந்தா இந்த நேரத்தில நீங்க இதை செய்ய மாட்டீர்?
0 comments:
Post a Comment