Mr. Misunderstandingனு ஒரு படம். இது ஒரு குறும்பட பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் நீண்ட படம். அதில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமே இதுவே முதல் படமாக இருந்திருக்க வேண்டும். அந்தக் குறைகளை பொறுத்துக் கொண்டு இந்தப் படம் பேசும் அரசியலுக்காக பார்க்க வேண்டும் என்பவர்கள், குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்காமல் பார்க்கலாம்.
இந்தப் படம் பேசும் அரசியல்-
■ வெளிநாட்டு அதிலும் குறிப்பாக வெள்ளையினத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தியாவின் ஜிகு ஜிகு பட்டு சமாச்சாரம் சார்ந்த கலாச்சாரத்தின் வழியாக சமூகத்தை படிக்க, பார்க்க நேர்ந்த சில பேருக்கு அந்த ஊர் ஆண்/பெண்களை திருமணம் முடிக்க ஆசை வரும். அப்படி முழுப் பக்கமும் தெரியாமல் விழுபவர்களுக்கு விசயம் தெரிய வரும் போது என்னவாகுகிறது என்பதே ரோஸ் கேரக்டர். ரோஸிற்கு இந்தியாவின் சுப்ரீம் ஜாதி ப்ராமின் பையன் ஒருவனால் ஞான ப்ராப்தம் கிடைத்து இந்திய மயக்கம் தீர்கிறது.😆
■ புராணக் கதையில் நாம் படித்த ராமன், சீதையின் பொருட்டு சந்தேகம் கொண்டு அவளை தீபுகுந்து வெளிவரச் செய்து கற்பை நிரூபிக்கச் சொல்லுவான். இந்தப் படத்தில் நவீன முறையில் தன் கட்டிக் கொண்ட மனைவியின் பொருட்டு சந்தேகம் கொண்ட நவீன ராம், தனது நண்பனைக் கொண்டு ரோஸை தீக்குள் இறக்கி கற்பு நிலையை சுவாசித்து ஆனந்தமடைய எத்தனிக்கிறான். 🙄
■ மேண்மையான சுப்ரீம் என்பவைகள், எத்தனை போலியான நிலைகள் என்பதை செக்ஸ் ஒர்க்கர்ஸ் இல்லங்களுக்கு செல்லும் காட்சிகளும், சந்தேகத்தின் பேரில் படு கேவலமான நிலையை எடுத்து அதனை செயல் படுத்திப் பார்க்க, அதனூடான சூழ்ச்சி, துரோகம் என நீள்வதின் மூலம் புராணத்திற்கும், நிகழ்காலத்திற்குமான வலைபின்னலை கட்சிதமாக நிரப்பிச் செல்கிறது இப்படம். 🤷♂️
A snap Shot of a conversation between Ram and his wife Rose:
She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.
He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.
She : நாங்கள்?. புரியவில்லை.
He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.
She : எவ்வளவு பேர்?.
மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?
He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.
She: எனக்கு புரியவில்லை.
இந்தியாவில் நிறைய ஜாதிகள் உள்ளது. அதில் எங்கள் ஜாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த ஜாதி.
இந்தியாவில் நிறைய ஜாதிகள் உள்ளது. அதில் எங்கள் ஜாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த ஜாதி.
She: உங்கள் உயர்ந்த ஜாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணிணி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா?
He : இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள்.
She : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்த பதவியை உங்களுக்குக் கொடுத்தது?.
He : எந்தப் பதவி?.
She : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?.
He : இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது.
She : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?.
He : நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள்.
She : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா?
He : ஆம்.
She : யார் சொன்னது?
He : எங்கள் புனித நூல் மனுதர்மா.
She : உங்களுடைய புனித புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது.
என்ன வகையான பீ(shit) அது?.
என்ன வகையான பீ(shit) அது?.