கடைசியாக எல்லா புத்தகப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததிற்குப் பிறகாக இணையத்தின் உதவியால் என்னுடைய கடைக்கோடி உலகத்திற்கு எட்டக் கிடைக்க நானும் பேராசிரியர் எழுதிய மாதொருபாகன் எனும் புதினத்தை வாசித்து முடித்து விட்டேன்.
ஓரளவிற்கு புத்தகம் கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே மொத்தக் கதையின் மையக் கருவும் மனதில் பதியுமளவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக பல பக்கங்களை கூடவே வாசித்தவருடன் பயணிக்க, வாசிக்கக் கிடைத்தது.
அந்த கதையின் நாயகர்களான பொன்னா மற்றும் காளி இன்னமும் நமது சொந்தங்களில்/தெருக்களில் வாழும் ஒரு குழந்தை பேறற்ற தம்பதிகளாக இருக்கக் கூடும். அவர்கள் முகங்களற்ற வேறு வேற்று கிரகத்து மனிதர்களல்ல. நம்மை போன்றே உணர்வுகளால் செதுக்கப்பட்ட வெறும் மனிதர்கள்தாம்.
இருப்பினும் மனித உணர்வுகளை மதிக்கத் தெரியா தடித்த நாக்கையும், தோலையும் போர்த்தியுள்ள இந்த சமூகம் அவர்களை வாழத் தகுதியற்றவர்களாக்கி, ஒடுக்கிக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளி வைத்து விடுகிறது. காரணம் - குழந்தை பேறின்மை!
பல வருடங்களாகவே நம் சமூகத்தில் புழங்கி வருகி்றது இந்த நாகரீகமற்ற வேலை. ஏதோ பேச வெண்டுமென்பதற்காக புதிதாக திருமணமான மூன்றாவது வாரத்திலிருந்து போகிற போக்கில் எழுப்பப்படும் கேள்வி “ஏதாவது விசேசம் உண்டாவும்,” ”இன்னும் குழந்தை இல்லையா.” என்னமோ குழந்தை பெற்றுக் கொள்வது ஹிமாலயத்தில் ஏறி கொடி நட்டு இறங்கி வந்து விட்டதைப் போல, விபத்தாகப் பெற்றவர்கள் கேட்கும் அவலக் கொடுமை.
இந்தப் புத்தகத்தை ஒரு சாதாரண புதினமாக வாசித்து கடந்து சென்று விட முடியாது. அக்கறையுடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பல அதிர்வுகளை தன்னுள் கடத்திச் செல்லக் கூடிய வலிமை கொண்டது. கூடவே அது போன்ற சூழலில் வாழும் மனிதர்களை அவர்களாக இருக்க வைக்க நமக்கு வாழ்க்கை கல்வியும், அடிப்படை நாகரீகமும் கற்றுக் கொடுக்குமொரு கையேடும் கூட.
என்னளவில் ஒரு புதினத்தை எப்பொழுதும் நேரத்தை கடத்த வைக்கும் வெறும் எழுத்துகளின் கோர்வை என்றளவில் வாசித்துக் கடக்க முடிவதே இல்லை. இதுனாலேயே கண்டமேணிக்கு எழுத்து என்று ஏதோ பக்கம் நிரப்பும் ஆசாமிகளின் புத்தக குவியல்களை வாசிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.
இந்தப் புத்தகம் தோண்டி எடுக்க ஆழத்தில் புதைப்பட்டுப் போன ஒரு தமிழக கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கதை நகர வைப்பதாக எழுதப்பட்டுள்ளது.
ஆசிரியரின் கூரிய அவதானிப்பும் கிராமத்து சொந்த வாழ்க்கை அனுபவமும் பல இடங்களில் பிரகாசிக்கிறது.
உதாரணமாக என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு அவதானிப்பு என்றால் கதையின் நாயகன் ஊரைத் தாண்டி அமையப்பட்ட தோட்டத்தில் வசிப்பான். கால் நடைகளையும், கோழிகளையும், மரம் சொடி கொடிகளுடனான இயற்கையொன்றிய வாழ்வமைவுடனான ஒரு வாழ்வு. கோழி அடைகாப்பில் இருபது முட்டைகளுக்கு குறையாமல் பொரிக்க வைத்து அத்தனை குஞ்சுகளையும் வெற்றிகரமாக மற்ற பருந்து, கழுகு இனங்களுக்கு பறி கொடுக்காமல் வளர்தெடுப்பதனையொட்டி ஒரு சம்பாஷனை உண்டு.
நாயகன் எப்படி தோட்டத்தில் இருக்கும் பனை மரத்திலுள்ள கருக்குகளை அடர்த்தியாக வளரவிட்டு, அதில் கரிச்சான் குருவி வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தையொட்டியே, தனது கோழியை அடை காக்க வைத்து பொரிக்க வைப்பதின் மூலம், கரிச்சான் குருவி தனது குஞ்சுகளுக்கென காப்பாத்த போராடும் போரட்டத்தின் பேரில் தனது கோழிக் குஞ்சுகளை மற்ற வேட்டையாடும் பறவை இனங்களிடமிருந்து குஞ்சுகள் தப்பிப் பிழைக்க வைக்க வழியறிந்தாக கூறுவான். இயற்கையுடனான ஒத்திசைவு வாழ்க்கை எந்தளவிற்கு ஒரு தனிமனித கற்றறிதலின் மூலமாக கடத்தப்பட்டு வந்திருக்கிறதென அறிந்து கொள்ள கிடைத்த விதம், ஆசிரியரின் மீதான பிரமிப்பை சில படிகள் உயர்த்தியது.
சிக்கனமான எழுத்து. ஆழமான கதைக்களன். ஒரு சமூக அறிவியல் மாணவனுக்கான நூலாகவும், யாரும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய கொங்கு வட்டார பேச்சுத் தமிழில் எழுதப்பட்டு அவர்களின் மொழியும், நிலமும் அதனையொட்டிய பழக்க வழக்கங்களும் சொலவடைகளாகவும், மொழியின் செழுமையும் சேகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த புதினத்தின் மையக் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்ட ‘குழந்தை பேறின்மை’ எப்படி சமூகத்தின் சாடல்களுக்கு உட்பட்டு போகும் பட்சத்தில், கதையின் நாயகி அந்த காலக் கட்டத்தின் சூழ்நிலைக்கென பொழங்கி வந்த ’சாமிக் குழந்தை ஏற்பு’ செய்வதை சுட்டிக் காட்டப் போக இன்றைய மத/சாதீய அரசியலுக்கு உள்ளாகி புத்தக விற்பனைக்கு தடை என்றளவில் சென்று முடிந்திருக்கிறது.
கதையின் அடிநாதமாக ஓடுவது சமூக நிர்பந்ததிற்கெனவே நாயகி கோவில் திருவிழாவில் அப்படி ஒரு பாலியல் தொடர்பால் பிள்ளை பெற்றுக் கொள்ளவும், தனது கணவனுக்கு வீராதி வீரர் பட்டமும், தான் மலடியல்ல என்று நிரூபணம் செய்யக் கூடிய சூழலாலயே அப்படி ஒரு திருவிழாவும், சாமீ பிள்ளை கொடுக்கும் ஆண்களும்,பெண்களும் அவதரிக்கிறார்கள். இதனை சுட்டிக்காட்டிய ஆசிரியர் ஒரு மாபெரும் பாவியாய்யா? உண்மை எப்பவும் கசக்கவே செய்கிறது!
இதுவும் அருந்ததி ராயின் ‘சின்ன விசயங்களின் கடவுள்’ (god of small things) வரிசையில் உலகப் பார்வையை திரும்ப வைக்கக் கூடிய கதைக் கருவை கொண்டது.
எழுத்து என்பது ஈவு இரக்கமற்று ஒரு சமூகத்தை பீடித்திருக்கும் நோயை தாக்க வல்லதாக இருக்க வேண்டும். அது ஒரு சமூகத்தையே உலுக்கி தனது குரூர புத்தியை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தி மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன் நகர வைப்பதாக அமைய வேண்டும். அந்தளவில் இந்த புத்தகம் நமது சமூகத்தின் மேல் அடர்ந்து படிந்திருக்கும் கருமையின் மீதாக ஒரு அதிர்ச்சி விளக்கொளியை பாய்ச்சி இருக்கிறது.
பி.கு; விரைவில் அத்தனை தடைகளையும் தகர்த்து பேராசிரியர் தனது ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணியை தொடர்வாரென நம்புவோம்

15 comments:
****எழுத்து என்பது ஈவு இரக்கமற்று ஒரு சமூகத்தை பீடித்திருக்கும் நோயை தாக்க வல்லதாக இருக்க வேண்டும்.***
பரத்தைக் கூத்துக்கு வக்காலத்து வாங்கினீர் இப்போ இதுக்காக்கும்..
ஆமா, நீரும், பெ முருகனும் ஏன் அழிந்துபோன கிருமிகளால் வரும் ப்ளேக், காலரா போன்ற நோய்களுக்கு
இந்தக் காலத்தில் மருந்துகண்டுபிடிச்சுக்கிட்டு அலைகிறீர்????
இன்னைகு அவ, அவ யாரு விந்தையோ பெற்று, ஆர்டிஃபிசியல் இண்செமினேஷன் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு இருக்கிறாள்கள். இன்றைய இந்த ஒரு சூழலில் என்ன மயிறுக்கு இந்தக் கதை???
அந்தக்காலத்தில் எல்லாரும் அம்மனமாக திரிச்சாங்களாம், அடுத்து அதைப்பத்தி எழுதிக்கிழிக்கப் போறீறார்க்கும்??
வந்துட்டாரு, அம்மைக்கும், காலராவுக்கு நாட்டு வைத்திய மருந்தோட நம்ம வைத்தியர் பெ முருகனோட சேர்ந்து அவர் கைதடி ஒருத்தரு!
are you still alive man :)? you are the primodial soup to form a single cell organism. though, it is frozen in time from evolving. i am not surprised!
வணக்கம்.. நலமா..
நாவலை இன்னும் வாசிக்கவில்லை.. :)
do you want the pdf? i have it... let me know if you do... i am good and yourself. mann, such a long time :)
**** Thekkikattan|தெகா said...
are you still alive man :)? ***
Well, you must have thought moron Varun is dead! Otherwise you would have thought 10 times before you published this article. Right?
***you are the primodial soup to form a single cell organism. though, it is frozen in time from evolving.****
NOPE! I am the one who has been waiting for an answer from your "brainy friend". You must have forgotten as you have a long-term memory loss! Remember, I asked "brainy your friend" to tell me how nature syntheized first L-amino acid?? I asked that "genius" to get the answer and I have been waiting for years to get the answer from him. Is "your friend" alive or dead?? :)))
If he is dead you should take over that question and answer it now as you are covering his behind all the time!
***i am not surprised! ****
Varun will live as long as truth lives, I guess!
Take it easy thega!
சமூகத்தில் உள்ள ஒரு நிகழ்வை புனைவாக தருவதில் தவறு இல்லை அதற்கு பெருமாள் முருகன் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அவர் ஒரு உண்மையான ஊரையும், அவ்வூரின் கோவில் மற்றும் அங்கு உள்ள குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மக்களையும் புனைவின் உள்ளே கொண்டு வரும் பொழுது அது ஒரு ஆவணம் அல்லது சரித்திரம் ஆக மாறுகிறது.
பெருமாள் முருகன் எழுதியது அந்த ஊரிலோ அல்லது நம் இந்திய நாட்டிலோ நடை பெறாத ஒரு நிகழ்வில்லை. அக்காலத்தில் கணவன் மலடாக உள்ளதால் குழந்தை பேரு இல்லாதவர்கள் ஒரு குழந்தையை பெற பின்பற்றியதில் இதுவம் ஒரு முறை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஏன் இக்காலத்திலும் இது நடை பெற்றுக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் இது குழந்தை இல்லாத எல்லா தம்பதியர்க்கும் ஒரு பொதுவான நிகழ்வாக எக்காலத்திலும் நாம் பொதுமைப்படுத்த முடியாது.
ஏன் “மனு” என்ற நூலை எரிக்க வேண்டும் என்று பெரியார் வழி வந்த தோழர்கள் சொல்கிறார்கள்? ஏன் மனுவிற்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது ? ஏனென்றால் அதில் உள்ள செய்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவை. சூத்திரன் என்ற சொல்லை பெரியார் ஏன் எதிர்க்க வேண்டும்? புரட்சி பேசும் படித்தவர்கள் இப்பொழுது மஹாபாரதம் மற்றும் வேதங்களை தங்கள் துணைக்கு அழைப்பது நகைமுரண்.
ஆனால் பெருமாள் முருகனோ இன்றும் ஒரு சமூகமாக வாழும் மக்கள் மற்றும் அவர்கள் நடத்தும் விழாவை பற்றி ஒரு தவறான தகவலை பதிவு செய்துவிட்டு புனைவு என்று நியாயப்படுத்த முயல்கிறார். அவர் தன் நாவலின் முன்னுரையில் தான் பல ஆய்வுகள் செய்து “திருச்செங்கோடு” பற்றி தெரிந்து கொண்டதை அடிப்படை ஆக வைத்து எழுதியதாக சொல்கிறார்.
“சாமி கொடுத்த குழந்தை” என்று நம் மக்கள் சொல்வதே இப்படி தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என்று தன் கதாபாத்திரங்கள் மூலம் நிறுவிகிறார். மேலும் திருவிழா வரும் அனைத்து பெண்களும் தேவிடியா என்றும் எழுதுகிறார். இது வருடந்தோறும் அக்கோவில் திருவிழா செல்லும் பெண்களை காயப்படுத்ததாதா? மேலும் பல கோவில்கள் சென்று தன் கணவனின் மூலம் காலம் தாழ்த்தி குழந்தை பெற்ற மனைவி மற்றும் கணவனை புண்படுத்தாதா?(குறிப்பாக திருச்செங்கோட்டில் வசிப்பவர்களுக்கு)
அப்பொழுது கருத்து சுதந்திரம் என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்த அளிக்கப்பட்ட ஒரு உரிமமா?
சரி இதற்கு அவர் வரலாற்று ஆதாரங்களை ஏதும் தருகிறாரா ? திருச்செங்கோடு என்பது அழிந்து போன ஒரு ஊர் அல்லவே, ஊகங்களாக ஒரு கருத்தை சொல்வதற்கு. வாய்மொழியாக கேட்ட தகவல்களை அல்லது வதந்திகளை ஒரு அருமையான கதையாக தரும் உரிமை உள்ளதே தவிர அதற்கு உண்மை சாயம் பூசி தம் மேதாவித்தனத்தை நிரூபிக்க பெருமாள் முருகனுக்கு உரிமை இல்லை.
அடுத்து பெருமாள் முருகன் தான் ஊரின் பெயரை நீக்க சம்மதித்து விட்டாரே, அப்புறம் என்ன பிரச்சினை ?
சர்ச்சை எழுந்தவுடன் பெருமாள் முருகன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது தான் எழுதியது அனைத்தும் கற்பனை என்று சொன்னாரா, இல்லை . இது தான் பல அறிஞர் பெருமக்களிடம் கேட்டும் மற்றும் கள ஆய்வு செய்தும், பல ஆவணங்கள் மூலமாகவும் கண்டறிந்த உண்மை என்றே பேசினார். மேலும் இந்நூல் ரத்தன் டாடா அறக்கட்டளை மூலம் உதவி பெற்று கள ஆய்வு செய்து எழுதியது என்று அவரே முன்னுரையில் சொல்கிறார். எனவே ஒரு தவறான அல்லது ஆதாரமற்ற ஒரு தகவலை தரும் நூலை தடை செய்ய சொல்வது நியாயமே.
போராட்டம் வலுவடைந்த பின்பு பெருமாள் முருகன் மக்கள் முன் தான் சேகரித்த ஆவணங்களை கொடுத்து தன் கருத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தாரா? இல்லை. எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்தை மதவாத மற்றும் சாதிய சக்திகளும் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார் . பெருமாள் முருகனுக்கு ஆதரவு தந்த பெரும்பாலான மக்கள் இது ஒரு புனைவு என்ற விதத்திலயே ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் முன்னுரையிலயே “Its Based On True Story” என்று சொல்வதை போல நான் ஆய்வு செய்து காலத்தில் பின்னால் சென்று அம்மக்களுடன் பயணித்தேன் என்று சொல்கிறார். ஆக உங்கள் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆவணத்தை கொடுங்கள் அல்லது புத்தகத்தை திரும்பப்பெறுங்கள் என்பது தவறான வாதம் அல்லவே.
அடுத்து ஒரு பெரும் குற்றசாட்டு, இது மதவாத மற்றும் சாதிய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட போரட்டம். போரட்டம் மதவாத கட்சிகளாலும் சாதிய கட்சிகளாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் நாம் கண்ணை மூடிக்கொண்டு பெருமாள் முருகனை ஆதரிக்க தேவயில்லை. போராட்ட வழி முறைகள் தவறு என்பதற்காக அவர்கள் தரப்பு நியாயத்தை நிராகரிக்க தேவை இல்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மிரட்டல்களோ வேறு வகையான அடக்குமுறையோ கையாளப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது அல்ல தண்டிக்கத்தக்கது.
எனவே கருத்து சுதந்திரம், மதவாதம், சாதி, திராவிடம், பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி நீங்கள் அந்த மக்களின் உணர்வுகளையும் வலியையும் கொச்சைப்படுத்த முயலாதீர்கள்.
அனானி உங்களுடன் உரையாடுவதின் மூலம் பலருக்கும் இந்த கருத்து சென்று சேரும் என்பதால் இந்த பின்னூட்டம்...
*********
உலகத்தின் வரலாறு இரண்டு வழிகளில் ஆவணப் படுத்தப் படுகிறது. ஒன்று சமகாலத்தில் வாழ்ந்தவர்களால் எழுதப்பட்டு சேமிக்கப்படுவது (பின்பு சேர்க்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இன்றைய விக்கிபீடியாவில் நடப்பதனைப் போன்று). மற்றொரு வகை வாய் வழி, வாழ்வு முறையைக் கொண்டு சேகரிக்கப்படுவது. நம்முடைய கலாச்சார பிண்ணனியில் பெரும்பாலான செய்தி சேகரிப்பு இப்படி வாய் வழி சேகரிப்பாகவே அமைந்திருக்கிறது. இது கலாச்சார மானுடவியல் (cultural anthropology) துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணப்படுத்தல் முறையும் கூட.
அதுவும் இது போன்ற திரை மறைவு காரியங்கள் எப்பொழுதுமே அந்த கால கட்டத்தில் எழுதி வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே. இன்றே இப்படி இருக்கும் பொழுது! கதை நடைபெறுவது எழுபது வருடங்களுக்கு முன்பாக எனும் பட்சத்தில், நம்முடைய எழுத்துச் சுதந்திரமும், தாகமும் எந்த அளவிற்கு அந்த பிராந்தியத்தில் பரவலாக இருந்தது என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஒரு வாழ்வுச் சூழலுடன் பிண்ணிப் பிணைந்திருக்கும் தருணத்தில் ஆவணப் படுத்தல் என்பது அலுவல ரீதியில் நடக்க வாய்ப்பே இல்லை.
நம்பத் தகுந்த வாய் மொழி வட்டார வழக்கு சொல்லாடல்களும், அந்த காலத்தினூடாக பயணித்து வாழ்ந்த தாத்தா பாட்டிகளுமே சாட்சியாக அமர வைக்க முடியும்.
இன்றைக்கு நமக்கு கிடைக்கும் மனிதனுக்கு முன்பாக வாழ்ந்த மனிதனையொத்த இனங்களின் மண்டையோடுகளையும், பற்களின் எச்சங்கங்களையும் கொண்டே அந்த பரிணாம கால கட்டத்தில் வாழ்ந்த நம்மூடைய மூதாதையர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து, தினப்படி வாழ்வு முறை வரை கட்டி அமைக்கப் படுகிறது என்பதனை இங்கே நாம் மறந்து விடக் கூடாது.
***Thekkikattan|தெகா said...
அனானி உங்களுடன் உரையாடுவதின் மூலம் பலருக்கும் இந்த கருத்து சென்று சேரும் என்பதால் இந்த பின்னூட்டம்...
*********
உலகத்தின் வரலாறு இரண்டு வழிகளில் ஆவணப் படுத்தப் படுகிறது. ஒன்று சமகாலத்தில் வாழ்ந்தவர்களால் எழுதப்பட்டு சேமிக்கப்படுவது (பின்பு சேர்க்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இன்றைய விக்கிபீடியாவில் நடப்பதனைப் போன்று). மற்றொரு வகை வாய் வழி, வாழ்வு முறையைக் கொண்டு சேகரிக்கப்படுவது. நம்முடைய கலாச்சார பிண்ணனியில் பெரும்பாலான செய்தி சேகரிப்பு இப்படி வாய் வழி சேகரிப்பாகவே அமைந்திருக்கிறது. இது கலாச்சார மானுடவியல் (cultural anthropology) துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணப்படுத்தல் முறையும் கூட.
அதுவும் இது போன்ற திரை மறைவு காரியங்கள் எப்பொழுதுமே அந்த கால கட்டத்தில் எழுதி வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே. இன்றே இப்படி இருக்கும் பொழுது! கதை நடைபெறுவது எழுபது வருடங்களுக்கு முன்பாக எனும் பட்சத்தில், நம்முடைய எழுத்துச் சுதந்திரமும், தாகமும் எந்த அளவிற்கு அந்த பிராந்தியத்தில் பரவலாக இருந்தது என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஒரு வாழ்வுச் சூழலுடன் பிண்ணிப் பிணைந்திருக்கும் தருணத்தில் ஆவணப் படுத்தல் என்பது அலுவல ரீதியில் நடக்க வாய்ப்பே இல்லை.
நம்பத் தகுந்த வாய் மொழி வட்டார வழக்கு சொல்லாடல்களும், அந்த காலத்தினூடாக பயணித்து வாழ்ந்த தாத்தா பாட்டிகளுமே சாட்சியாக அமர வைக்க முடியும்.
இன்றைக்கு நமக்கு கிடைக்கும் மனிதனுக்கு முன்பாக வாழ்ந்த மனிதனையொத்த இனங்களின் மண்டையோடுகளையும், பற்களின் எச்சங்கங்களையும் கொண்டே அந்த பரிணாம கால கட்டத்தில் வாழ்ந்த நம்மூடைய மூதாதையர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து, தினப்படி வாழ்வு முறை வரை கட்டி அமைக்கப் படுகிறது என்பதனை இங்கே நாம் மறந்து விடக் கூடாது.***
I call this BULLSHIT!
What YOU DO NOT understand is, if you want to dig the "history", there must have been a "SLUT" or "sexually promiscuous wpman" in everyone's Great great grandma. NO ONE is an exception to that including pe- murugan, You or Varun!
Also there must have been a "impotent" or "infertile" guy in everybody's ancestors.
Do you want to talk about your "great grand father" who believed in "cuck-old"?? And "grandma" who slept around to get a child in detail??
You wont when it comes to YOU!!
But you will talk about some else grandma in the name of "literature" and "history".
Why??
Because all you guys are SELFISH BASTARDS! YOu have two different balances or scales. One for you and one for the world.
//Do you want to talk about your "great grand father" who believed in "cuck-old"?? And "grandma" who slept around to get a child in detail??
You wont when it comes to YOU!!
But you will talk about some else grandma in the name of "literature" and "history".
Why??
Because all you guys are SELFISH BASTARDS! YOu have two different balances or scales. One for you and one for the world.//
Mann, this is where you and I are deviating. I won't mind if it is happened so asking about it to learn about the complexity related with my existence!
If i am bastard i would call so! are you happy, you don't know me that is why you put me in your bottle and shake it, and draw me too.
Well Moron is proving himself.. you need not answer Prabha
***Anonymous said...
Well Moron is proving himself.. you need not answer Prabha***
Dickless anonymous BASTARDS are everywhere in the web-world. No wonder, we found one HERE!!
HI!! Anonymous BASTARD with a tiny little dick!
Varun, please stop this profanity! place your comment and try to constraint with controlled anger. so that we can learn from you.
First get rid of the "anonymous guy's" comment and ADVISE ME!
Otherwise, I would think it is YOU or YOUR GOOD FRIEND who comes a anonymous to protect you(rself).
I am an equal opportunity freedom of expression giver... however, if the comments sound and go beyond the tolerance of course i would delete them.
plus, Varun, what makes you to think I should come around and place an anony comment when I can answer you straight.
***Thekkikattan|தெகா said...
I am an equal opportunity freedom of expression giver... however, if the comments sound and go beyond the tolerance of course i would delete them.***
Equal opportunity for anonymous bloggers who come and post "hit and run" comments here???!!!!
You are IRRITATING ME as usual!
Then you need to discuss with your "anonymous friends" here. Dont worry he/she will come with another "original" identity soon!
Bye for now!
Post a Comment